மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

24.7.17

இரத்த விருத்தியைப் பெறுவது எப்படி?


இரத்த விருத்தியைப் பெறுவது எப்படி?

Health Tips

*துவர்ப்பு சுவை* 🌸
     
நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச்  சுவையற்றதாகும்.

பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

தமிழ் மருந்துக் கடைகளில் கடுக்காய் பொடியாகவே கிடைக்கும்!! அரைக்கும் வேலையே உங்களுக்கு இல்லை!!!!

🌿 *கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்*

கண் பார்வைக் கோளாறுகள்,
காது கேளாமை, சுவையின்மை,
பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண்,
அக்கி, தேமல், படை, தோல் நோய்கள்,
உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், பாத எரிச்சல்,
மூல எரிச்சல், இரத்தபேதி,
பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய்,
மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன்,
ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

🌿 *இளமை பெற*

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்று கூறுவர்.

காலையில் இஞ்சி சிறிது நீர்விட்டு அரைத்து சாறு எடுத்து தெளிவித்து கீழ்தங்கும் வண்டலை தவிர்த்து 15மிலி எடுத்து சமளவு தேன் சேர்த்துசாப்பிடலாம்.

மதியம் சிறிது சுக்கு தூளை சுடுநீரில் கலந்து   சாப்பாடிற்கு முன் அருந்தலாம் .

இரவு உணவிற்க்கு பின் கடுக்காய் தூளை சுடு நீரில் கலந்து அருந்தலாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Good morning sir, one again very useful information for healthy life, thanks sir vazhga valamudan sir

SELVARAJ said...

காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே. -திருமூலர்

Visvanathan N said...

Respcted sir,

Good morning sir. Good health tips. Everybody should follow this and have long life.

regards,
Visvanathan N

ravichandran said...

Respected Sir,

Happy morning... Thanks for sharing... Useful health tips.

Have a great day.

With regards,
Ravi-avn

adithan said...

வணக்கம் ஐயா,முன்பே கடுக்காய் பற்றி ஒரு பதிவை போட்டிருந்தீர்கள்.அப்போதே கடுக்காய் வாங்கி வைத்தாயிற்று.பொடி பண்ணி இந்த முறையாவது கண்டிப்பாக முயற்ச்சி பண்ண வேண்டும்.நன்றி.

Subbiah Veerappan said...

////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir, one again very useful information for healthy life, thanks sir vazhga valamudan sir////

நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger SELVARAJ said...
காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே. -திருமூலர்/////

உண்மைதான். நன்றி செல்வராஜ்!!!!

Subbiah Veerappan said...

///Blogger Visvanathan N said...
Respcted sir,
Good morning sir. Good health tips. Everybody should follow this and have long life.
regards,
Visvanathan N////

நல்லது. நன்றி நண்பரே!!!

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... Thanks for sharing... Useful health tips.
Have a great day.
With regards,
Ravi-avn/////

நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

Subbiah Veerappan said...

/////Blogger adithan said...
வணக்கம் ஐயா,முன்பே கடுக்காய் பற்றி ஒரு பதிவை போட்டிருந்தீர்கள்.அப்போதே கடுக்காய் வாங்கி வைத்தாயிற்று.பொடி பண்ணி இந்த முறையாவது கண்டிப்பாக முயற்ச்சி பண்ண வேண்டும்.நன்றி.//////

தமிழ் மருந்துக் கடைகளில் பொடியாகவே கிடைக்கும். கேட்டுப்பருங்கள்!