மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.7.17

Astrology: ஜோதிடம்: வர்கோத்தம யோகம்!!!


Astrology: ஜோதிடம்: வர்கோத்தம யோகம்!!!

யோகங்களைப் பற்றிய பாடம்

வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்!

ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்!

ராசி கட்டத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருந்து, அம்சத்திலும் சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் அதற்கு வர்கோத்தம செவ்வாய் என்று பெயர்!

சிம்மத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார்

உங்கள் மொழியில் சொன்னால், சாதாரணப் பேருந்து, மாடிப் பேருந்தாக மாறிவிடும்! An ordinary bus will become a double Decker bus!

பலன்: அப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். கீழே பட்டியல் உள்ளது!

++++++++++++++++++++++++++++++++++++++
லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான்!

மற்ற பலன்கள்:

சூரியன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்குத் தலைமை ஏற்கும் தகுதியைக் கொடுக்கும்.

சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத மன வலிமையைக் கொடுக்கும். எதையும் சட்’டென்று புரிந்து கொள்ளும் தன்மையைக் கொடுக்கும்

செவ்வாய் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஆற்றலை, செயல் திறனைக் கொடுக்கும்

புதன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத பேச்சுத் திறமையைக் கொடுக்கும்.

குரு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும்

சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அழகையும், கவரும் தன்மையையும் கொடுக்கும்

சனி வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதப் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கொடுக்கும்

ராகு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதத் துணிச்சலைக் கொடுக்கும்

கேது வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஞானத்தைக் கொடுக்கும்
---------------------------------------------
இது தவிர, வர்கோத்தமம் பெறும் கிரகம், ஜாதகத்தில் அது எந்த பாவத்திற்கு/வீட்டிற்கு உரியதோ, அந்த வீட்டிற்கான பலன்களை உரிய நேரத்தில் வாரி  வழங்கும்

இவை எல்லாமே பொதுப்பலன்கள்.

தனிப்பட்ட ஜாதகங்களுக்கு இந்தப் பலன்கள், மற்ற கிரகங்களின் பார்வை, சேர்க்கை, வக்கிர நிலைமை, அஸ்தமனம், போன்ற இதர விஷயங்களை வைத்துக் கூடலாம், அல்லது குறையலாம், அல்லது இல்லாமலும் போகலாம்.

அது அவரவர் வாங்கி வந்த வரத்தைப் பொறுத்தது.
------------------------------------------------------------
ஏழாம் வீட்டு அதிபதி, ராசி மற்றும் நவாம்சம் இரண்டிலும் ஒரே இடத்தில் வர்கோத்தமம் பெற்றிருந்தால், ஜாதகனுக்கு, அசத்தலான மனைவி  கிடைப்பாள். ஜாதகியாக இருந்தால் அசத்தலான கணவன் கிடைப்பான்.

இதே பலன், பத்தாம் வீட்டிற்கு எனும் போது, ராசியிலும், தசாம்ச சக்கரத்திலும், பத்தாம் வீட்டு அதிபதி வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். பெற்றிருந்தால், ஜாதகனுக்கு அசத்தலான வேலை கிடைக்கும் அல்லது அசத்தலான தொழில் அமையும்!

இதைப்போலவே மற்ற கிரகங்களுக்கும் பலனை ஊகித்துக் கொள்ளுங்கள். வாத்தியாரை ஊகித்துச் சொல்லும்படி உங்கள் ஜாதகத்தை எடுத்து நீட்டாதீர்கள். பாவம் வாத்தியார். அவருக்கு நேரம் இல்லை!

அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

39 comments:

  1. Good morning sir, I am having this vargottama yoga in my horoscope,,rahu Andrew key vatgotama in tenth and fourth house,ketu vargottama gives me good mother, education and good wisdom,but rahu in tenth house keeping quiet in my carrier? Thank you sir vazhga valamudan sir

    ReplyDelete
  2. வணக்கம் வாத்தியார் ஐயா,

    ஜோதிடத்தினை கற்க எண்ணிய எனக்கு உங்களுடைய வகுப்பறை சிறந்தொரு குருகுலமாக உள்ளது.
    ஒரு பதிவையும் விடாமல் படிக்கும் உறுதியுடன் 2007 பொங்கல் பதிவிலிருந்து படித்துக் கொண்டு வருகின்றேன்.
    சகல பதிவுகளும் எளிமையாகவும் விளக்கமாகவும் இருப்பதே என் தொடர்ச்சியான கற்கைக்கு காரணமாகும்.
    இருப்பினும் தங்களின் சில பதிவுகள் பாதுகாப்பு நோக்கம் கருதி நீக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கிறது. இது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பியும் பதிலெதுவும் பெறப்படவில்லை,
    தங்களின் மின்னஞ்சல், உயர்நிலை பாடங்களை கற்கும் வாய்ப்பு என் ஜாதகத்தில் உள்ளதா என எவ்வாறு அறிவது? வக்கிர புதனின் வேலையோ? பரிகாரம் இருந்தால் கூறவும்.

    நன்றி

    ReplyDelete
  3. எளிமையான தமிழில், இனிமையாகச் சொல்லும் பாணிதான், உங்கள் வலிமை.
    வாழ்க ஆசிரியர் ஐயா.

    ReplyDelete
  4. Dear sir,
    What about second book and when are you going to release the second book ?

    ReplyDelete
  5. பாடத்துடன், படத்தை எங்கிருந்துதான் பிடிக்கின்றிர் தெரியவில்ல. ஒவ்வொரு படமும் பிரமாதம்.

    ReplyDelete
  6. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir, I am having this vargottama yoga in my horoscope,,rahu Andrew key vatgotama in tenth and fourth house,ketu vargottama gives me good mother, education and good wisdom,but rahu in tenth house keeping quiet in my carrier? Thank you sir vazhga valamudan sir/////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  7. ///Blogger kmr.krishnan said...
    Very usefulThank you, Sir////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  8. ////Blogger Stylish Thamizhan said...
    வணக்கம் வாத்தியார் ஐயா,
    ஜோதிடத்தினை கற்க எண்ணிய எனக்கு உங்களுடைய வகுப்பறை சிறந்தொரு குருகுலமாக உள்ளது.
    ஒரு பதிவையும் விடாமல் படிக்கும் உறுதியுடன் 2007 பொங்கல் பதிவிலிருந்து படித்துக் கொண்டு வருகின்றேன்.
    சகல பதிவுகளும் எளிமையாகவும் விளக்கமாகவும் இருப்பதே என் தொடர்ச்சியான கற்கைக்கு காரணமாகும்.
    இருப்பினும் தங்களின் சில பதிவுகள் பாதுகாப்பு நோக்கம் கருதி நீக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கிறது. இது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பியும் பதிலெதுவும் பெறப்படவில்லை,
    தங்களின் மின்னஞ்சல், உயர்நிலை பாடங்களை கற்கும் வாய்ப்பு என் ஜாதகத்தில் உள்ளதா என எவ்வாறு அறிவது? வக்கிர புதனின் வேலையோ? பரிகாரம் இருந்தால் கூறவும்.
    நன்றி/////

    பொறுமைதான் பரிகாரம். விடுபட்ட பாடங்களெல்லாம் புத்தக வடிவில் சேர்ந்து வரும். அப்போது நீங்கள் தொடர்ச்சியாகப் படிக்கலாம்!!!!

    ReplyDelete
  9. /////Blogger mohan said...
    எளிமையான தமிழில், இனிமையாகச் சொல்லும் பாணிதான், உங்கள் வலிமை.
    வாழ்க ஆசிரியர் ஐயா./////

    உங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி மோகனசுந்தரம்!!! எழுதுபவர்களுக்கு பாராட்டுக்கள்தான் ஊக்க மருந்து!!!!

    ReplyDelete
  10. ////Blogger kumbhabhai said...
    Dear sir,
    What about second book and when are you going to release the second book ?/////

    எனது உடல்நிலை காரணமாக புத்தகப் பணியில் தொய்வு விழுந்து விட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் வரவுள்ளன!!!! உங்களின் ஆர்வத்திற்குநன்றி நண்பரே!!!1

    ReplyDelete
  11. ///Blogger SELVARAJ said...
    பாடத்துடன், படத்தை எங்கிருந்துதான் பிடிக்கின்றிர் தெரியவில்ல. ஒவ்வொரு படமும் பிரமாதம்.//////

    படங்கள் உபயம் கூகுள் ஆண்டவர்!!!!!

    ReplyDelete
  12. Sir , Thanks for the lesson.
    I have Vargothama Lagnam (Magaram) and Sukran also Vargothamam at 12th house. Waiting for some Good Turns in my Life. Hope will get soon.

    Thank You Sir.

    ReplyDelete
  13. பாடத்திற்கு மிக்க நன்றி அய்யா,6,8,12க்கு உரியவர்களின் வர்கோத்தமம் நன்மையா அல்லது தீமையா அய்யா?

    ReplyDelete
  14. 1. Isnt vargothamam is told between lagna and planets between raasi and any divisional charts? You emphazied only on D9.

    2. I have seen very less information on vargotama lagna. But an astrologer who follow brighu said lagna the best vargotama among others. I am not sure why.

    3. When debilitates planets gets vargotama, do they get deep debilitation or gets strengthed or neecha banga due to this?

    4. Also if you can say some thoughts on puskara navamsa of planets based on d9 it would be great.

    ReplyDelete
  15. ////Blogger KJ said...
    Sir , Thanks for the lesson.
    I have Vargothama Lagnam (Magaram) and Sukran also Vargothamam at 12th house. Waiting for some Good Turns in my Life. Hope will get soon.
    Thank You Sir.////

    அதெல்லாம் கிடைக்கும் பொறுமையாக அதனன் தசா/புத்திகளில் கிடைக்கும். நன்றி!!!!

    ReplyDelete
  16. ////Blogger saravanan vpn said...
    பாடத்திற்கு மிக்க நன்றி அய்யா,6,8,12க்கு உரியவர்களின் வர்கோத்தமம் நன்மையா அல்லது தீமையா அய்யா?/////

    “இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும்” என்று பதிவில் எழுதியுள்ளேனே சாமி! அதை மீண்டும் படியுங்கள்!!!!

    ReplyDelete
  17. ////Blogger selvaspk said...
    1. Isnt vargothamam is told between lagna and planets between raasi and any divisional charts? You emphazied only on D9./////
    ராசியை மட்டும் வைத்துப் பாருங்கள். டிவிஷனல் கட்டங்களை எல்லாம் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்!!!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    2. I have seen very less information on vargotama lagna. But an astrologer who follow brighu said lagna the best vargotama among others. I am not sure why./////
    பல நூல்களைப் படிக்கும்போது இப்படிக் குழப்பமான சிந்தனைகள் தோன்றும். உங்களுக்கு வேண்டியதை மட்டும் பார்த்துக்கொள்லுங்கள்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    3. When debilitates planets gets vargotama, do they get deep debilitation or gets strengthed or neecha banga due to this?////
    நீசமடைந்தாலும் வர்கோத்தமம் பெறும்போது. அவைகள் வலிமையாகிவிடும்! இல்லையென்றால் வர்கோத்தம விதிக்கு என்ன அர்த்தம்?
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    4. Also if you can say some thoughts on puskara navamsa of planets based on d9 it would be great./////
    புஷ்கர நவாம்சம் பற்றி எல்லாம் நான் அறிந்ததில்லை. ஆகவே எழுதவில்லை!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  18. Respected Sir,

    Happy morning... Thanks for sharing...

    Have great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  19. ஐயா லக்கினம் வர்கோத்தமம் பெற்று இருந்தால் ஏதேனும் நன்மைகள் உண்டா? எனக்கு துலா லக்கினம்(வர்கோத்தமம்), 2 வீட்டில்-விருச்சிகத்தில் ராகு(உச்சம்)(வர்கோத்தமம்), 8 வீட்டில்-ரிஷபத்தில் கேது(நீசம்)(வர்கோத்தமம்)- ராகு,கேது எவ்வாறு பலன் வழங்குவார்?

    ReplyDelete
  20. @Mani Prasath, I also have Vargothama Lagnam, Sir already explained We have Long Live.... But Gud or Bad, that depends on other things in Horo.. If Sir could have told, Vargothama Lagna Gives Native "Wealthy, Healthy Long Live", then its Great.. But He only mentioned, Long Live means Twist is there... ;-)

    ReplyDelete
  21. ///Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Thanks for sharing...
    Have great day.
    With regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  22. ////Blogger Mani Prasath said...
    ஐயா லக்கினம் வர்கோத்தமம் பெற்று இருந்தால் ஏதேனும் நன்மைகள் உண்டா? எனக்கு துலா லக்கினம்(வர்கோத்தமம்), 2 வீட்டில்-விருச்சிகத்தில் ராகு(உச்சம்)(வர்கோத்தமம்), 8 வீட்டில்-ரிஷபத்தில் கேது(நீசம்)(வர்கோத்தமம்)- ராகு,கேது எவ்வாறு பலன் வழங்குவார்? ////

    “ராகு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதத் துணிச்சலைக் கொடுக்கும். கேது வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஞானத்தைக் கொடுக்கும என்று எழுதியுள்ளேனே சாமி. வேறு என்ன வேண்டும்? அதீத துணிச்சலும், அதீத ஞானமும் இருந்தால் போதாதா?

    ReplyDelete
  23. /////Blogger KJ said...
    @Mani Prasath, I also have Vargothama Lagnam, Sir already explained We have Long Live.... But Gud or Bad, that depends on other things in Horo.. If Sir could have told, Vargothama Lagna Gives Native "Wealthy, Healthy Long Live", then its Great.. But He only mentioned, Long Live means Twist is there... ;-)//////

    கதைக்கும், வாழ்க்கைக்கும் Twist இல்லையென்றால் சுவாரசியம் இருக்கதே ராஜா!!!!

    ReplyDelete
  24. இல்லை ஐயா, என்னுடைய அப்பா கூறினார், ஞானமும்,துணிச்சலும் ஒன்றுக்கு ஒன்று எதிர்.அது எவ்வாறு ஒன்றாக இருக்கும் எனக் கேட்டார்?

    ReplyDelete

  25. ஐயா நான் இப்பொழுது உங்கள் ஆசியால் என்னுடைய குடும்பத்தினருக்கு மற்றும் உறவினர்க்கு ஜோதிடம் சொல்கிறேன்.ஆனால் தசாபுத்திகள் வைத்து எப்பொழுது நடக்கும் என்று பலன் சொல்ல தெரியவில்லை. அதை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. பொது பலன்கள் மட்டுமே சொல்ல முடிகிறது. எல்லா தசாபுத்திகளும் நல்லதாகவே தோன்றுகிறது. எவ்வாறு பலன் சொல்வது? நல்ல பலன்கள் எப்பொழுது நடக்கும் என்பதை எப்படி சொல்வது? (உதாரணம்; திருமனம் எப்பொழுது நடக்கும்?, படிப்பு எப்பொழுது முடியும்?, வேலை எப்பொழுது கிடைக்கும்?). அதை சொல்லி தாருங்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. One should (can)not predict future for others with basics on astrology. Learn basics. If you can create a horoscope chart on your own without software, may be you passed prelims.

      Otherwise you endup damaging your image.

      Bagyathai, yogyathai then bukthi and palitham with intuition will make agood astrologer.

      Delete
  26. /////Blogger Mani Prasath said...
    இல்லை ஐயா, என்னுடைய அப்பா கூறினார், ஞானமும்,துணிச்சலும் ஒன்றுக்கு ஒன்று எதிர்.அது எவ்வாறு ஒன்றாக இருக்கும் எனக் கேட்டார்?/////

    ஞானம் இருந்தால் மனம் செம்மைப்பட்டுவிடும். எதையும் தாங்கும் அல்லது எதிர் கொள்ளும் துணிச்சல் வந்து விடும்!!!!! ஒன்றுக்கு ஒன்று எதிரானதல்ல!!

    ReplyDelete
  27. /////Blogger Mani Prasath said...
    ஐயா நான் இப்பொழுது உங்கள் ஆசியால் என்னுடைய குடும்பத்தினருக்கு மற்றும் உறவினர்க்கு ஜோதிடம் சொல்கிறேன்.ஆனால் தசாபுத்திகள் வைத்து எப்பொழுது நடக்கும் என்று பலன் சொல்ல தெரியவில்லை. அதை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. பொது பலன்கள் மட்டுமே சொல்ல முடிகிறது. எல்லா தசாபுத்திகளும் நல்லதாகவே தோன்றுகிறது. எவ்வாறு பலன் சொல்வது? நல்ல பலன்கள் எப்பொழுது நடக்கும் என்பதை எப்படி சொல்வது? (உதாரணம்; திருமனம் எப்பொழுது நடக்கும்?, படிப்பு எப்பொழுது முடியும்?, வேலை எப்பொழுது கிடைக்கும்?). அதை சொல்லி தாருங்கள் ஐயா!/////

    ஜாதக அலசல் பற்றி உதாரண ஜாதகங்களுடன் நிறைய எழுதியிருக்கிறேன். அவற்றை எல்லாம் படியுங்கள். எல்லாம் பிடிபடும்

    ReplyDelete
  28. ////Blogger KJ said...
    True Sir.. I found the Twist Sir../////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  29. ////Blogger Mani Prasath said...
    @KJ
    What twist?//////

    டிவிஸ்ட் என்றால் முடிச்சு, திருப்பங்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  30. //////Blogger selvaspk said...
    One should (can)not predict future for others with basics on astrology. Learn basics. If you can create a horoscope chart on your own without software, may be you passed prelims.
    Otherwise you endup damaging your image.
    Bagyathai, yogyathai then bukthi and palitham with intuition will make agood astrologer./////

    ஆமாம். சரியாகச் சொன்னீர்கள் செல்வா! நன்றி!

    ReplyDelete
  31. @Mani Prasath, Twist means, Long Live can be Gud or Bad..right? Warren Buffet is also Long Live...Person above 80 Age who is working as Labour also Long Live...U got Twist here..? Long Live shld be Like Blessed one..not other one..

    ReplyDelete
  32. Yepporul Yar yar vai ketpinum, apporul Mei porul Kaanbathu Arivu...

    ReplyDelete
  33. /////Blogger KJ said...
    @Mani Prasath, Twist means, Long Live can be Gud or Bad..right? Warren Buffet is also Long Live...Person above 80 Age who is working as Labour also Long Live...U got Twist here..? Long Live shld be Like Blessed one..not other one../////

    வயதான காலத்தில் டிவிஸ்ட் எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்லும் மனப் பக்குவம் இருந்தால் போதும்! சரிதானே!!!!

    ReplyDelete
  34. ////Blogger KJ said...
    Yepporul Yar yar vai ketpinum, apporul Mei porul Kaanbathu Arivu...////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  35. Agreed Sir.. Mana Pakkuvam irunthal ellam saadhiyame... Thanks for your clarification.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com