மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

16.4.14

True Story: உண்மை நிகழ்ச்சி: சோகமும் சுகமானதுதான்!

 
 Beethoven

 True Story: உண்மை நிகழ்ச்சி: சோகமும் சுகமானதுதான்!

தலைப்பைப் பார்த்துவிட்டு, 'சோகம் எப்படி சுகத்தைத் தரும்? என்று கேட்டு எவரும் வாதம் செய்ய வேண்டாம்.

இசைமேதை பீத்தோவனின் கதையைச் சொல்லியிருக்கிறேன்.கடைசி வரி வரை படியுங்கள்.அப்புறம் தெரியும் சோகம் எப்படி சுகப்படுமென்று!

நிழலாகத் தொடர்ந்த சோகத்திலும், அதை வென்று சாதனை படைத்த மனிதர் ஒருவர் இருந்திருக்கிறார். சரித்திரத்தில் இடம் பிடித்து இன்று பலருடைய மனதிலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர்தான் இசை மேதை பீத்தோவன்!

உலக சரித்திரத்தில் இடம் பிடிப்பது என்பது என்ன சாதாரணமான விஷயமா?

சாதித்துக் காட்டினால் அல்லவா சரித்திரம் வசப்படும்!

உலக இசை மேதைகளுக்கான தர வரிசையில் இன்றைக்கும் அவர் இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறார்.(முதல் இடம் மொசார்ட்டிற்கு)

விதி எப்பொழுதும் எதிர் அணியில்தான் ஆடும் எண்பார்கள்.

பீத்தோவனுக்கு விதி எதிர் அணியில் ஆடியதோடு, அவரைப்பல முறை காயப்படுத்தியும், ஒருமுறை ஆட்டத்தை விட்டு வெளியேற்றவும் முயன்றிருக்கிறது.

ஆமாம்! ஒரு முறை தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றவர், இசையின் மேல்தான் கொண்ட தீராத காதலால் மரணத்தின் விளிம்புவரை சென்று விட்டுத் திரும்பி யிருக்கிறார்.

கொடிது, கொடிது இளமையில் வறுமை என்பார் அவ்வையார். பீத்தோவனுக்கு இளம் வயதில் பசியே பாடமாகவும், வறுமையே வாய்ப்பாடாகவும், இருந்திருக்கிறது. ஒருபக்கம், தினமும் குடித்துவிட்டு அகால நேரங்களில் வீட்டுக்குத் திரும்பிவந்து அனைவரையும் அடித்துத் துவைக்கும் தந்தை. மறுபுறம், ஏழு குழந்தைகளைப்பெற்று அதில் மூன்று குழந்தைகளை வறுமைக்குத் தாரைவார்த்துவிட்டு, மிச்சம் இருக்கும் குழந்தைகளுடன் போராடிக்கொண்டிருக்கும் தாய் மரியா. சந்தோஷத்தையே அறியாத வாழ்க்கை!

பீத்தொவனின் தந்தை ஜோஹன் ஜெர்மெனி நாட்டின் பான் (Bonn) நகரில் இருந்த இசை அரங்கம் ஒன்றில்  வாத்தியக்காரராகப் பணியாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அது ஒன்றுதான் சற்று ஆறுதலான விஷயம். தன்
தந்தையிடம், அவர் நல்ல மன நிலையில் இருக்கும்போது பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்ட பீத்தோவன்,

தன்னுடைய எட்டாவது வயதிலேயே தனிக் கச்சேரி செய்யும் அளவிற்கு இசையில் ஒரு மேதைத்தனத்தை எட்டிப்பிடித்திருக்கிறார்

17.12.1770 ஆம் ஆண்டு பிறந்த பீத்தோவன், தனது 20வது வயதில் ஜெர்மெனியை விட்டுக் குடிபெயர்ந்து,

வீயன்னா நகருக்குத் (Vianna, Austria) தன் நண்பன் ஒருவனுடன் போய்ச் சேர்ந்திருக்கிறார். அங்கே பல அரங்கங்களில் வாசித்ததோடு, இசைக்கான 'இசைக் குறிப்பேடுகளை' (Notes) எழுதிக் கொடுத்தும் பிரபலமடைந் திருக்கிறார்.அவர் இசைக்கு மயங்காதவர்களே இல்லை என்னும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

பியானோ இசைக்கலைஞன், இசையமைப்பாளர், இசைப் பயிற்சியாளர் என்று தன்னுடைய பல்முனைத் திறமைகளை வெளிக்காட்டி மக்களை அசரவைத்தவர் அவர். அந்தக் காலத்தில் இருந்த இசைக்கலைஞர்களைப் போல தேவாலயம் (Church) எதிலும் வேலைக்குச் சேர்ந்து பிழைப்பைக்
கவனிக்காமல், கடைசிவரை தன்னிச்சையாகவே இருந்து வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளோடு போராடிய மாமனிதர் அவர். இசைப் புரவலர்களால் (Patrons) அவருடைய பணத்தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவர் பிறந்த தேதி தெரிய வந்ததில் கூட ஒரு சுவாரசியமான தகவல் இருக்கிறது. அவர் மிகவும் பிரபலமானவுடன், அவருடைய பிறந்த நாளைத் தெரிந்து கொள்ள விரும்பிய ரசிகர்களுக்கு, அவர் பிறந்த கிராமத்தையும், வருடத்தையும், மாதத்தையும் மட்டுமே சொல்ல ஆள் இருந்திருக்கிறது. தேதியைச் சொல்ல ஆளில்லை.

விடுவார்களா ரசிகர்கள்? பிறந்த குழந்தைக்கு அது பிறந்து 24 மணி நேரங்களுக்குள் ஞானஸ்தானம் செய்யும் வழக்கம் இருந்ததால், அவர் பிறந்த கிராமத்திலுள்ள தேவாலயத்தின் பதிவேடுகளில் இருந்து, அவருடைய
பெற்றோர்களின் பெயரைச் சொல்லித் தேதியை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஒருவனுக்கு ஒரே நேரத்தில் இரண்டு விபத்து ஏற்பட்டால் எப்படி இருக்கும்?

பனை ஏறி விழுந்தவனை, கடா ஏறி மிதித்தமாதிரி என்பார்கள் - அதாவது பனை மரத்தின் உச்சியில் இருந்து பிடி தவறித் தடால் என்று விழுந்தவனை, அவன் என்ன ஏது என்று நிலைப்படும் முன்பாக, அந்தப் பக்கம்
தெறிகெட்டுப் பாய்ச்சலில் ஓடிவந்த காளை மாடு ஒன்று மிதித்து விட்டுப் போனதாம்.அப்படி ஒரு இரட்டை விபத்து பீத்தோவனின் வாழ்க்கையில் அவருடைய முப்பதாவது வயதில் ஏற்பட்டது.

மிகவும் விரும்பிக் காதலித்த பெண்ணை அவர் மணந்து கொள்ள முடியாமல் போனது முதல் விபத்து. அவள் பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண். அவளுடைய பெற்றோர்கள் காட்டிய சிவப்புக் கொடியில் பித்தோவனின்
காதல் காணாமல் போய்விட்டது. மனமுடைந்த அவர், தனது இறுதி மூச்சுவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.

அதே காலகட்டத்தில் அவருடைய செவிகள் கேட்கும் திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்து, பாதி செவிகள் பழுதாகி விட்டன.

அடுத்தடுத்த ஆண்டுகளில் அது தொடர்ந்து, கடைசியில் செவிகளுள் இரண்டும் முழுவதும் பழுதாகிவிட்டன.

எவ்வளவு கொடுமை பாருங்கள். இசை கேட்கச் செவி வேண்டும். இசைப்பவனுக்கு அது இல்லாமல் கெட்டுக்  குட்டிச்சுவராகப்  போய்விட்டது என்றால் அவன் எப்படி இசைப்பான்?

ஆனாலும் இசைத்தார். அதுதான் பீத்தோவனின் மன வலிமை.காது கேட்ட காலத்தில் அவர் இசைத்தஇரண்டு சிம்பொனிகளை விட, காது பழுதான பிறகு அவர் இசைத்த மூன்று புது சிம்பொனிகள் அற்புதமாக அமைந்தன. அவருக்கு சரித்திரத்தில்இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தன!

கட்டுரையின் நீளம் கருதி அவர் முத்தாய்ப்பாய் தன்னைப் பற்றித் தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்திலிருந்த முக்கியமான வரியைச் சொல்லி நிறைவு செய்கிறேன்.

"இறைவனால் படைக்கப்பெற்ற மனிதர்களில். மகிழ்ச்சி மறுக்கப்பட்ட மனிதன் நானாகத்தான் இருக்க முடியும்"

நிதர்சனமான உண்மை!

மெழுகுவர்த்தி உருகித்தான், தன்னை எரித்துக்கொண்டுதான் ஒளியைக் கொடுக்கிறது. பீத்தோவனும் அப்படித்தான் தன்னுடைய உருக்கத்தில்தான் இந்த உலகிற்கு அற்புதமாக இசையைக் கொடுத்துவிட்டுப் போனார். அவருடைய சோகங்கள்தான் சுகமான இசையாக வெளிப்பட்டன!.

16.3.1827ம் தேதியன்று, தனது இசையரங்கில் சேர்த்துக்கொள்ளக் காலன் அவரைக் கவர்ந்து கொண்டு போய்விட்டான்.

சோகத்திலும் ஒரு சுகம் உண்டு. அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது தெரியும்!

இது மீள்பதிவு. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எனது இன்னொரு வலைத்தளமான பல்சுவைப் பதிவில் (http://devakottai.blogspot.in) வெளிவந்தது. வகுப்பறை அன்பர்களுக்காக அதை இன்று இங்கே வலை ஏற்றியுள்ளேன்.

எப்படி இருக்கிறது? ஒரு வார்த்தை பின்னூட்டத்தில் எழுதுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

-------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26 comments:

உணர்ந்தவை! said...

"இறைவனால் படைக்கப்பெற்ற மனிதர்களில். மகிழ்ச்சி மறுக்கப்பட்ட மனிதன் நானாகத்தான் இருக்க முடியும்"

இதை அங்க இங்க கேட்டிருக்கிறென் ஆனால் ஒரு புகலின் உச்சியை தொட்டவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை!

படித்தது, உங்களுக்காக‌

"உலகம் உங்கள் வெற்றியை நீங்கள் சம்பாதிக்கும் செல்வத்தையும், சேர்க்கும் பொருளையும், அடையும் புகழையும் வைத்து தான் தீர்மானிக்கும். ஆனால் அதுவே எல்லாம் என்று எப்போதுமே முடிவுக்கு வந்து விடாதீர்கள். நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்பது முக்கியம். அது உங்களுக்கு மட்டுமே தெரிந்த முக்கிய விஷயம். உலகத்திற்கு அது பற்றிய கவலை இல்லை. அதை உலகம் கணக்கில் எடுப்பதும் இல்லை. உலகத்தின் பார்வையில் ஜெயித்து விட்டு உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தோற்றுப் போய் விடாதீர்கள். வெளிப்புற வெற்றி, தனிப்பட்ட சந்தோஷமான வாழ்க்கை இரண்டும் முக்கியம். இரண்டிற்கும் முக்கியத்துவம் தந்து இரண்டையும் சரியான கலவையில் வைத்துக் கொள்ளுங்கள்." N. Ganesan

Chandrasekaran Suryanarayana said...

மிகவும் நன்றாக இருந்தது.
சோகம் அவன் வாழ்க்கையை தியாகமாக்கி
இசை மேதையாக்கியது.

என் நண்பர் வேலையை நான் எடுத்துகொண்டதால்
என் நண்பர் என்னை மண்ணிப்பாராக...

உலகமெல்லாம் என் இசை கேட்கும்
நல்ல உள்ளமெல்லாம் அதை வரவேற்கும்.

கை விரலில் பிறந்தது நாதம் என்
குரலில் வளர்ந்தது கீதம்.

கல்லும் இசையால் கனியாகும்
முல்லும் அதனால் மலராகும்
உள்ளம் உருகும் பண் பாடும் அந்த
ஒசையிலே நாதம் நின்று ஆடும்.

சந்திரசேகரன் சூரியநாராயணன்
Dallas Kannan said...

respected SirR
Touched my heart...

raghupathi lakshman said...

மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

அருமையான தகவல்களுடன் அற்புதமான, எளிய,இனிய நடையில் வழங்கிய தங்களின் பதிவிற்க்கு நன்றி.பீத்தோவானின் சோகங்கள் மனதை கனக்க வைத்தது.


நன்றி
ல ரகுபதி

thozhar pandian said...

நல்ல‌ கட்டுரை. ஆசிரியருக்கு நன்றி. பீத்தோவன் அற்புதமான இசைக் கலைஞர் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. மொசார்ட், பீத்தோவன், பாஹ், சாய்கோவ்ஸ்கி, விவால்டி போன்ற மேற்கத்திய சாஸ்திரீய இசை வல்லுனர்கள் வரிசையில் பீத்தோவனுக்கு தனி இடம் உண்டு. நமது இசைஞானி அவர்கள் கூட இவரின் சில இசைக் கோர்வைகளினால் ஈர்க்கப்பட்டு அவற்றை நமது இரசனைக்கு ஏற்ப தந்துள்ளார். மவுன இராகம் திரைப்படத்தில் வரும் ஒரு பிண்ணனி இசை பீத்தோவனின் சிம்பொனி இசையினால் ஈர்க்கப்பட்டது என்று படித்திருக்கிறேன் (இதில் முக்கியமான செய்தி, நமது இசைஞானி ஈர்க்கப்பட்டாரே தவிர அந்த இசையை சிலரைப் போல் அப்படியே உபயோகப்படுத்தவில்லை என்பதே). அந்த மாமேதைகளுக்கு நிகரான நமது இசைஞானி கூட சிறு வயதில் மிகவும் துன்பப்பட்டிருக்கிறார் (கால சர்ப்ப தோஷம்?). இதனால் அறிய வேண்டியது என்னவெனில் சோதனைகளை கொடுத்த இறைவன், அவற்றை வென்று சாதனை படைக்கவும் வழி செய்திருக்கிறார் என்பதே. பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மிகப் பெரிய செல்வந்தர் யார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் பீத்தோவன் போன்ற மாமேதைகளும் அவர்களது படைப்புகளும் உலகம் உள்ள வரையில் இருக்கும். அதே போல் தான் இப்போது உள்ள கேட்ஸுகளும், எலிசன்களும், அம்பானிக்களும். அவர்கள் வாழும் வரை, வேண்டுமானால் இன்னும் ஒரு 20 அல்லது 30 ஆண்டுகள், மக்கள் நினைவில் நிற்பார்கள். ஆனால் அவர்களின் படைப்புகளை வைத்தே அவர்களுக்கு அழியாப் புகழ் கிடைக்க வாய்ப்புண்டு. கேட்ஸ், எலிசன், ஸக்கர்பெர்க் போன்றோர் மென்பொருள் உருவாக்கியிருந்தாலும் அவை அனைத்தும் அழியாப் புகழ் தர வல்லவையா என்பது கேள்விக்குறியே.

வேப்பிலை said...

சொக ராகம்
சோகம் தானே

என்று முதல் மரியாதை படத்தில்
எழுந்து வந்த பாடல்

பூங்காற்று திரும்புமா
ஏம் பாட்டை விரும்புமா

சோகத்தில் சுகம் உண்டு அடுத்தவர்
சோகத்தில் சிலருக்கு

Muthukrishnan Prakash said...

ayya,

beethoven patriya seidhi arumaiyaaga ulladhu. Sani Bagavan kadasivarai ivarukku santhoshathai kodukkavillaiya? pirandha thethiyum 8, koottuthogaiyum 8, beethoven peyarum 8. Kodumaiyaana vishayam thaan.

Nandrigal.

Mu.Prakaash.

R.D.Murali Ramaswamy said...

Heart touching real story.very nice. this story must read to all

ravichandran said...

Respected Sir,

It's great. God is great.

With kind regards,
Ravichandran M.Bala.N said...

எப்பொழுதும் எனக்குள் ஒரு கேள்வி உண்டு அய்யா. ஏன் மக்களை மகிழ்விக்கும் இசை மேதைக்கு சோகமயமனா வாழ்வு.

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்

சங்கீத மேதைகள் குறட்டை விடுவது கூட ஒரு தாள லயமாகவே இருக்கும் .

பீத்தோவானின் பியானோ இசைத்தட்டு சிறு வயதில் கேட்டிருக்கிறேன் ஒன்றும் புரியாது ஆனாலும் கேட்காமல் இருக்க முடியாது...மெல்லிய தாலாட்டு ....

ஒவ்வொரு கலைஞனும் தனது கலை சம்பந்தபடுதியே எல்லாவற்றையும் பார்பான்

தங்களின் சிஷ்யன்.. என் பார்வை உங்களை போல் ஜோதிடம் சம்பந்த படுத்தியே வருகிறது நான் என்ன செயட்டும்.??

இதோ இந்த பீத்தோவன் கலைஞனுக்கு 337 பரல் கொடுத்த இறைவன் 7 மிடதிர்க்கு மட்டும் குறைத்து மற்ற இடங்களில் கூடுதலாக கொடுத்து
குடும்ப வாழ்க்கை இல்லையென் செய்து விட்டான் ..

இவரின் ஜாதகம் கணித்து புதிர் போட்டி வைக்கலாம்.
வாத்தியார் அய்யா கோப பாடாதீர்கள் ..??

thozhar pandian said...

வேப்பிலையார் போகிற போக்கில் நல்லா நச்சுன்னு ஒன்னு சொல்லிட்டார். சிலருக்கு அடுத்தவர் சோகத்தில் சுகம் என்று. இன்றைய பிரச்சனையே இதுதான். அடுத்தவர் சோகத்தில் சுகம் காண்பவர்கள் அதிகரித்து விட்டனரோ என்று எனக்கு தோன்றுவது உண்டு. ஒரு அலுவலக நண்பரை வேலையிலிருந்து நீக்கம் செய்து விட்டனர். என்னுடன் வேலை பார்க்கும் இன்னொருவரிடம் இதை பற்றி கூறினேன். அவர் உடனே கூறியது "நல்லது, அவன் போக வேண்டிய ஆள்தான்" என்று. இதில் வேதனை என்னவென்றால் இவருக்கு பதிலாக அவரை அனுப்பவில்லை, இவர் வேறு குழு, அவர் வேறு குழு. வெளியேற்றப்பட்ட நபர் இருந்தாலும் இவரை அது பாதிக்கப் போவதில்லை. இருந்தும் அவர் நீக்கப்பட்டதற்கு இவர் மகிழ்கிறார். உடனே வேறு வேலை கிடைக்காவிடில், அந்த நபரின் குடும்பம் என்னவாகும் என்பதை பற்றிக் கூட இவர் வருந்தவில்லை. மாறாக, அவரின் நீக்கத்திற்கு மகிழ்கிறார் என்றால் அவர் சோகத்தில் இவர் சுகம் காண்கிறார் என்றுதானே அர்த்தம். இது எவ்வளவு தீய எண்ணம். சோகத்தில் இருப்பவருக்கு ஆறுதல் கூறாவிடினும், மகிழாமலாவது இருக்கலாமே. வாழ்க்கையில் என்ன ஆனாலும், மற்றவர் சோகத்தில் சுகம் காணாமல், முடிந்தால் மற்றவர் இன்பத்தில் மகிழவும், மற்றவர் சோகத்தில் நாமும் வருந்தவும், மற்றவரை பார்த்து பொறாமை கொள்ளாத நல்ல மனம் மட்டும் எப்போதும் வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

"கோச்சடையான்" படத்தில் வரும் "மாற்றம் ஒன்றுதான் மாறாதது" என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் உருவான பாடலில் ஒரு வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது "நண்பா, எல்லாம் கொஞ்ச காலம்":‍‍) இந்த கொஞ்ச காலத்தில்தான் எவ்வளவு போட்டிகள், பொறாமைகள்? எல்லாம் எதற்காக?

Subbiah Veerappan said...

//////Blogger உணர்ந்தவை! said...
"இறைவனால் படைக்கப்பெற்ற மனிதர்களில். மகிழ்ச்சி மறுக்கப்பட்ட மனிதன் நானாகத்தான் இருக்க முடியும்"
இதை அங்க இங்க கேட்டிருக்கிறேன் ஆனால் ஒரு புகழின் உச்சியை தொட்டவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை!
படித்தது, உங்களுக்காக‌
"உலகம் உங்கள் வெற்றியை நீங்கள் சம்பாதிக்கும் செல்வத்தையும், சேர்க்கும் பொருளையும், அடையும் புகழையும் வைத்து தான் தீர்மானிக்கும். ஆனால் அதுவே எல்லாம் என்று எப்போதுமே முடிவுக்கு வந்து விடாதீர்கள். நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்பது முக்கியம். அது உங்களுக்கு மட்டுமே தெரிந்த முக்கிய விஷயம். உலகத்திற்கு அது பற்றிய கவலை இல்லை. அதை உலகம் கணக்கில் எடுப்பதும் இல்லை. உலகத்தின் பார்வையில் ஜெயித்து விட்டு உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தோற்றுப் போய் விடாதீர்கள். வெளிப்புற வெற்றி, தனிப்பட்ட சந்தோஷமான வாழ்க்கை இரண்டும் முக்கியம். இரண்டிற்கும் முக்கியத்துவம் தந்து இரண்டையும் சரியான கலவையில் வைத்துக் கொள்ளுங்கள்." N. Ganesan///////

நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

Subbiah Veerappan said...

//////Blogger Chandrasekaran Suryanarayana said...
மிகவும் நன்றாக இருந்தது.
சோகம் அவன் வாழ்க்கையை தியாகமாக்கி
இசை மேதையாக்கியது.
என் நண்பர் வேலையை நான் எடுத்துகொண்டதால்
என் நண்பர் என்னை மன்னிப்பாராக...
உலகமெல்லாம் என் இசை கேட்கும்
நல்ல உள்ளமெல்லாம் அதை வரவேற்கும்.
கை விரலில் பிறந்தது நாதம் என்
குரலில் வளர்ந்தது கீதம்.
கல்லும் இசையால் கனியாகும்
முல்லும் அதனால் மலராகும்
உள்ளம் உருகும் பண் பாடும் அந்த
ஒசையிலே நாதம் நின்று ஆடும்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்/////

உங்களுடைய மனம் நிறைவான, சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே1!

Subbiah Veerappan said...

/////Blogger Dallas Kannan said...
respected SirR
Touched my heart.../////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger raghupathi lakshman said...
மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்.
அருமையான தகவல்களுடன் அற்புதமான, எளிய,இனிய நடையில் வழங்கிய தங்களின் பதிவிற்கு நன்றி.பீத்தோவானின் சோகங்கள் மனதை கனக்க வைத்தது.
நன்றி
ல ரகுபதி/////

அவருடைய கதையைப் படித்தால் எப்பேர்ப்பட்ட இதயமும் கனக்கத்தான் செய்யும். நன்றி ரகுபதி!

Subbiah Veerappan said...

////Blogger thozhar pandian said...
நல்ல‌ கட்டுரை. ஆசிரியருக்கு நன்றி. பீத்தோவன் அற்புதமான இசைக் கலைஞர் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. மொசார்ட், பீத்தோவன், பாஹ், சாய்கோவ்ஸ்கி, விவால்டி போன்ற மேற்கத்திய சாஸ்திரீய இசை வல்லுனர்கள் வரிசையில் பீத்தோவனுக்கு தனி இடம் உண்டு. நமது இசைஞானி அவர்கள் கூட இவரின் சில இசைக் கோர்வைகளினால் ஈர்க்கப்பட்டு அவற்றை நமது இரசனைக்கு ஏற்ப தந்துள்ளார். மவுன இராகம் திரைப்படத்தில் வரும் ஒரு பிண்ணனி இசை பீத்தோவனின் சிம்பொனி இசையினால் ஈர்க்கப்பட்டது என்று படித்திருக்கிறேன் (இதில் முக்கியமான செய்தி, நமது இசைஞானி ஈர்க்கப்பட்டாரே தவிர அந்த இசையை சிலரைப் போல் அப்படியே உபயோகப்படுத்தவில்லை என்பதே). அந்த மாமேதைகளுக்கு நிகரான நமது இசைஞானி கூட சிறு வயதில் மிகவும் துன்பப்பட்டிருக்கிறார் (கால சர்ப்ப தோஷம்?). இதனால் அறிய வேண்டியது என்னவெனில் சோதனைகளை கொடுத்த இறைவன், அவற்றை வென்று சாதனை படைக்கவும் வழி செய்திருக்கிறார் என்பதே. பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மிகப் பெரிய செல்வந்தர் யார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் பீத்தோவன் போன்ற மாமேதைகளும் அவர்களது படைப்புகளும் உலகம் உள்ள வரையில் இருக்கும். அதே போல் தான் இப்போது உள்ள கேட்ஸுகளும், எலிசன்களும், அம்பானிக்களும். அவர்கள் வாழும் வரை, வேண்டுமானால் இன்னும் ஒரு 20 அல்லது 30 ஆண்டுகள், மக்கள் நினைவில் நிற்பார்கள். ஆனால் அவர்களின் படைப்புகளை வைத்தே அவர்களுக்கு அழியாப் புகழ் கிடைக்க வாய்ப்புண்டு. கேட்ஸ், எலிசன், ஸக்கர்பெர்க் போன்றோர் மென்பொருள் உருவாக்கியிருந்தாலும் அவை அனைத்தும் அழியாப் புகழ் தர வல்லவையா என்பது கேள்விக்குறியே./////

மாமேதைகளுடைய ஆக்கங்கள் காலத்தால் நிற்கும். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி பாண்டியரே!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
சொக ராகம்
சோகம் தானே
என்று முதல் மரியாதை படத்தில்
எழுந்து வந்த பாடல்
பூங்காற்று திரும்புமா
ஏம் பாட்டை விரும்புமா
சோகத்தில் சுகம் உண்டு அடுத்தவர்
சோகத்தில் சிலருக்கு/////

அடுத்தவர் சோகத்தில் சுகம் காணுபவர்களைக் கண்டு கொள்ள வேண்டாம். அவர்கள் எல்லாம் இதயம் இல்லாதவர்கள்.

Subbiah Veerappan said...

////Blogger Muthukrishnan Prakash said...
ayya,
beethoven patriya seidhi arumaiyaaga ulladhu. Sani Bagavan kadasivarai ivarukku santhoshathai kodukkavillaiya? pirandha thethiyum 8, koottuthogaiyum 8, beethoven peyarum 8. Kodumaiyaana vishayam thaan.
Nandrigal.
Mu.Prakaash./////

அப்படியா? உங்களுடைய ஆராய்ச்சிக்கு நன்றி!

Subbiah Veerappan said...

//////Blogger R.D.Murali Ramaswamy said...
Heart touching real story.very nice. this story must read to all////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger ravichandran said...
Respected Sir,
It's great. God is great.
With kind regards,
Ravichandran M.//////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ரவிச்சந்திரன்!

Subbiah Veerappan said...

/////Blogger Bala.N said...
எப்பொழுதும் எனக்குள் ஒரு கேள்வி உண்டு அய்யா. ஏன் மக்களை மகிழ்விக்கும் இசை மேதைக்கு சோகமயமனா வாழ்வு.////

எல்லாம் வாங்கி வந்த வரம். அவர்களுக்கு மட்டும் வாங்கி வந்த வரம் இருக்காதா என்ன?

Subbiah Veerappan said...

/////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்
சங்கீத மேதைகள் குறட்டை விடுவது கூட ஒரு தாள லயமாகவே இருக்கும் .
பீத்தோவானின் பியானோ இசைத்தட்டு சிறு வயதில் கேட்டிருக்கிறேன் ஒன்றும் புரியாது ஆனாலும் கேட்காமல் இருக்க முடியாது...மெல்லிய தாலாட்டு ....
ஒவ்வொரு கலைஞனும் தனது கலை சம்பந்தபடுதியே எல்லாவற்றையும் பார்ப்பான்
தங்களின் சிஷ்யன்.. என் பார்வை உங்களை போல் ஜோதிடம் சம்பந்த படுத்தியே வருகிறது நான் என்ன செயட்டும்.??
இதோ இந்த பீத்தோவன் கலைஞனுக்கு 337 பரல் கொடுத்த இறைவன் 7 மிடதிர்க்கு மட்டும் குறைத்து மற்ற இடங்களில் கூடுதலாக கொடுத்து
குடும்ப வாழ்க்கை இல்லையென் செய்து விட்டான் ..
இவரின் ஜாதகம் கணித்து புதிர் போட்டி வைக்கலாம்.
வாத்தியார் அய்யா கோப பாடாதீர்கள் ..??//////

எனக்குக் கோபம் வராது. கோபப்படுபவனாக இருந்தால், சுமார் 5,000 வந்து செல்லும் வகுப்பறையை எப்படி என்னால் நடத்த முடியும்? பீத்தோவனின் ஜாதக அலசல்தானே. பின்னொரு நாளில் பார்க்கலாம்!

Subbiah Veerappan said...

//////Blogger thozhar pandian said...
வேப்பிலையார் போகிற போக்கில் நல்லா நச்சுன்னு ஒன்னு சொல்லிட்டார். சிலருக்கு அடுத்தவர் சோகத்தில் சுகம் என்று. இன்றைய பிரச்சனையே இதுதான். அடுத்தவர் சோகத்தில் சுகம் காண்பவர்கள் அதிகரித்து விட்டனரோ என்று எனக்கு தோன்றுவது உண்டு. ஒரு அலுவலக நண்பரை வேலையிலிருந்து நீக்கம் செய்து விட்டனர். என்னுடன் வேலை பார்க்கும் இன்னொருவரிடம் இதை பற்றி கூறினேன். அவர் உடனே கூறியது "நல்லது, அவன் போக வேண்டிய ஆள்தான்" என்று. இதில் வேதனை என்னவென்றால் இவருக்கு பதிலாக அவரை அனுப்பவில்லை, இவர் வேறு குழு, அவர் வேறு குழு. வெளியேற்றப்பட்ட நபர் இருந்தாலும் இவரை அது பாதிக்கப் போவதில்லை. இருந்தும் அவர் நீக்கப்பட்டதற்கு இவர் மகிழ்கிறார். உடனே வேறு வேலை கிடைக்காவிடில், அந்த நபரின் குடும்பம் என்னவாகும் என்பதை பற்றிக் கூட இவர் வருந்தவில்லை. மாறாக, அவரின் நீக்கத்திற்கு மகிழ்கிறார் என்றால் அவர் சோகத்தில் இவர் சுகம் காண்கிறார் என்றுதானே அர்த்தம். இது எவ்வளவு தீய எண்ணம். சோகத்தில் இருப்பவருக்கு ஆறுதல் கூறாவிடினும், மகிழாமலாவது இருக்கலாமே. வாழ்க்கையில் என்ன ஆனாலும், மற்றவர் சோகத்தில் சுகம் காணாமல், முடிந்தால் மற்றவர் இன்பத்தில் மகிழவும், மற்றவர் சோகத்தில் நாமும் வருந்தவும், மற்றவரை பார்த்து பொறாமை கொள்ளாத நல்ல மனம் மட்டும் எப்போதும் வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
"கோச்சடையான்" படத்தில் வரும் "மாற்றம் ஒன்றுதான் மாறாதது" என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் உருவான பாடலில் ஒரு வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது "நண்பா, எல்லாம் கொஞ்ச காலம்":‍‍) இந்த கொஞ்ச காலத்தில்தான் எவ்வளவு போட்டிகள், பொறாமைகள்? எல்லாம் எதற்காக?

நல்ல மனமும் ஒரு வரம்தான். ஆனால் அந்த வரம் சிலருக்குக் கிடைப்பதில்லை!

Kirupanandan A said...

சோதனைகளை வென்றால்தான் சாதனை படைக்க முடியும். பட்டை தீட்டினால்தான் அது வைரம். செதுக்கப்பட்டால்தான் வெறும் கல் சிலையாகும். சுழல் காற்று போல் வரும் சோதனையில் அடித்துச் செல்லப் படுபவர்கள்தான் அதிகம். எதிர்த்து நின்று ஜெயிப்பவர்கள் பீத்தோவன் போன்ற வெகு சிலரே. Hats off for him.

Kamala said...

பீத்தோவன் பற்றிய செய்திகள் அருமை. நன்றி. வணக்கம்