மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

25.4.14

Devotional: உங்கள் துன்பங்கள் நீங்க, நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

 

Devotional: உங்கள் துன்பங்கள் நீங்க, நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

பக்தி மலர்   

சிவபுராணம்

மாணிக்க வாசகப் பெருமான் அருளிய திருவாசகத்தின் முதல் பதிகம். மொத்தம் 95 வரிகள். தினமும் ஒரு முறையாவது இதைப் பாராயணம் செய்யுங்கள். உங்கள் துன்பமெல்லாம் நீங்கும். திருவாசகத்திற்கு
உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்னும் பெருமை பெற்ற திருவாசகத்தின் முதல் பதிகம் இது!
----------------------------------------------------
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்

கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே!

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே!

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் ......
....... வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

விலங்கும் மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே!

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே!

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து!

திருச்சிற்றம்பலம் 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==========================================================

19 comments:

kmr.krishnan said...

சிவபுராணம் என்ற இதனை பக்தியோடு பாராயணம் செய்தால் எல்லா பாக்கியங்களையும் சிவபெருமான் அளிப்பார்.

வாசிக்க வசதியாக வெளியிட்டதற்கு நன்றி ஐயா!

வேப்பிலை said...

திருவாசக செந்நாவலர்
திருமிகு சற்குருநாதர் குரலில்

கேட்கனும் அப்படியே
கேட்டதும் சொக்கிவிடலாம்

ஒலிவடிவம் வந்ததா
உங்களிடம்..?

இன்றைய வகுப்பில்
இனிய தோழர் விஜய் அவர்களின்

புகைப்பட(மு)ம் வரும் என
பலமுடன் காத்திருந்தேன்

மலரட்டும் நன்றிகள்
மணக்கட்டும் மாணவ மலர்கள்

வேப்பிலை said...

முகப்பு பட மாற்றமே வருக..
முருகனருள் முன்னிற்கும்

இரண்டு பவுர்ணமி
இந்த சித்திரையில்

பவுர்ணமியில் தொடங்கி
பவுர்ணமியில் முடியும் இந்த

ஜய வருடத்தில் ,இனி
ஜயமே தொடங்கும் .. தொடரும்

பயமேதுமில்லை இனி..
பாது காப்பாய் நடந்தேறலாம்

மன்னுக தில்லை, வளர்க நம் பக்தர்கள் "வஞ்சகர்" போய் அகல
பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்த புவனி எல்லாம் விளங்க
அன்ன நடை மடவாள் உமைகோன் அடியோமுக்கு அருள் புரிந்து
பின்னை பிறவி அறுக்க நெறி தந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே

என திருப்பல்லாண்டு பாடி
வாழ்த்துகிறோம்

Chandrasekaran Suryanarayana said...

வணக்கம்

இன்றய பக்தி பலர் மிகவும் நன்றாக உள்ளது.


எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே!
ஓம் நமசிவாய.

இதை ஒலியுடன் கேட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.


மிக்க நன்றி

சந்திரசேகரன் சூரியநாராயணன்

Gnanam Sekar said...

அய்யா வணக்கம்

காலையில் ஒரு நல்ல தகவல் . நன்றி

துரை செல்வராஜூ said...

கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு நாளும் விடியும் முன் திருப்பள்ளி எழுச்சி, சிவபுராணம் - இவற்றைக் கேட்கின்றேன். சிந்திக்கின்றேன். இனிய பொழுது நலமுடன் விடிகின்றது.
சிவபுராணத்தினை தங்களின் பதிவில் கண்டு மகிழ்ச்சி..

Subramaniam Yogarasa said...

நல்லதோர் பக்திப் பகிர்வு.நமக்கெல்லாம் திருவாசகம் அத்துப்படி.நன்றி!!!

murali krishna g said...

இன்று சனி பிரதோஷம். சிவப்புராணம் ஓதுவதற்கு உகந்த நாள். சிறந்த வலை ஏற்றம். நன்றி , அய்யா !

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
சிவபுராணம் என்ற இதனை பக்தியோடு பாராயணம் செய்தால் எல்லா பாக்கியங்களையும் சிவபெருமான் அளிப்பார்.
வாசிக்க வசதியாக வெளியிட்டதற்கு நன்றி ஐயா!/////

உங்களுடைய தகவலுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
திருவாசக செந்நாவலர்
திருமிகு சற்குருநாதர் குரலில்
கேட்கனும் அப்படியே
கேட்டதும் சொக்கிவிடலாம்
ஒலிவடிவம் வந்ததா
உங்களிடம்..?
இன்றைய வகுப்பில்
இனிய தோழர் விஜய் அவர்களின்
புகைப்பட(மு)ம் வரும் என
பலமுடன் காத்திருந்தேன்
மலரட்டும் நன்றிகள்
மணக்கட்டும் மாணவ மலர்கள்/////

நல்லது. நன்றி வேப்பிலையாரே! அவர் பெங்களூரில் ஒரு நல்ல நிறுவனத்தில் வேலையில் உள்ளார். புகைப்படம் அனுப்பவில்லை.

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
முகப்பு பட மாற்றமே வருக..
முருகனருள் முன்னிற்கும்
இரண்டு பவுர்ணமி
இந்த சித்திரையில்
பவுர்ணமியில் தொடங்கி
பவுர்ணமியில் முடியும் இந்த
ஜய வருடத்தில் ,இனி
ஜயமே தொடங்கும் .. தொடரும்
பயமேதுமில்லை இனி..
பாது காப்பாய் நடந்தேறலாம்
மன்னுக தில்லை, வளர்க நம் பக்தர்கள் "வஞ்சகர்" போய் அகல
பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்த புவனி எல்லாம் விளங்க
அன்ன நடை மடவாள் உமைகோன் அடியோமுக்கு அருள் புரிந்து
பின்னை பிறவி அறுக்க நெறி தந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே
என திருப்பல்லாண்டு பாடி
வாழ்த்துகிறோம்/////

உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி வேப்பிலை சுவாமி!

Subbiah Veerappan said...

Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம்
இன்றய பக்தி பலர் மிகவும் நன்றாக உள்ளது.
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே!
ஓம் நமசிவாய.
இதை ஒலியுடன் கேட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
மிக்க நன்றி
சந்திரசேகரன் சூரியநாராயணன்/////

ஒளி, ஒலி நாடாக்கள் நிறைய உள்ளன! YouTube ல் தேடுங்கள் கிடைக்கும்

Subbiah Veerappan said...

/////Blogger Gnanam Sekar said...
அய்யா வணக்கம்
காலையில் ஒரு நல்ல தகவல் . நன்றி////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger துரை செல்வராஜூ said...
கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு நாளும் விடியும் முன் திருப்பள்ளி எழுச்சி, சிவபுராணம் - இவற்றைக் கேட்கின்றேன். சிந்திக்கின்றேன். இனிய பொழுது நலமுடன் விடிகின்றது.
சிவபுராணத்தினை தங்களின் பதிவில் கண்டு மகிழ்ச்சி../////

தினமும் அதிகாலையில் கேட்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.நன்றி எனக்கு அதற்கு நேரமில்லை. பணிச்சுமைதான் காரணம்!

Subbiah Veerappan said...

////Blogger Subramaniam Yogarasa said...
நல்லதோர் பக்திப் பகிர்வு.நமக்கெல்லாம் திருவாசகம் அத்துபடி.நன்றி!!!/////

பாராட்டுக்கள் நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger murali krishna g said...
இன்று சனி பிரதோஷம். சிவப்புராணம் ஓதுவதற்கு உகந்த நாள். சிறந்த வலை ஏற்றம். நன்றி , அய்யா ! /////

நல்லது. உங்களுடைய தகவலுக்கும், பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

Kirupanandan A said...

//மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி//

எமக்கு மிகவும் பிடித்த வரிகள். மாயவனார் நம்மை மாயையில் ஆழ்த்தி காக்கும் தொழிலை செய்கையில் இவர் அதிலிருந்து நமக்கு விடுதலை அளித்து தமது அழிக்கும் தொழிலை செவ்வனே செய்கிறார்.

elayaraja said...

arumai arumai