மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.6.13

Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்!


Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்!

எதுவுமே நமக்கு உறுதுணையாக இருந்தால்தான், வாழ்க்கை சுவைக்கும், மகிழ்ச்சியாக இருக்கும்!

பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தால்தான் இளம் வயது வாழ்க்கை பயனுள்ளதாக இருக்கும்!
வாத்தியார் உறுதுணையாக இருந்து சொல்லிக்கொடுத்தால்தான் பாடங்கள் மண்டையில் ஏறும்!
மனைவி உறுதுணையாக இருந்தால்தான் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!
வேலைபார்க்கும் இடத்தில், மேலதிரிகாரி உறுதுணையாக இருந்தால்தான் வேலை செய்வது உற்சாகத்தைக் கொடுக்கும்!!
நண்பன் உறுதுணையாக இருந்தால்தான் நட்பு நன்மையைக் கொடுக்கும். அல்லது மேன்மையைக் கொடுக்கும்

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்!

அதுபோல நீங்கள் இருக்கும் அதாவது வசிக்கும் ஊர் உங்களுக்கு உறுதுணையாக இருந்தால்தான் வாழ்க்கை வளம் உடையதாக இருக்கும்,
மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் என்று எண்கணிதம் சொல்கிறது.

வேலை வாய்ப்பின் காரணமாக நீங்கள் எந்த ஊரில் வேண்டுமென்றாலும் வசிக்க நேரலாம். அல்லது தொழில் காரணமாக அந்தத் தொழில் நடக்கக் கூடிய ஊரில் வசிக்க நேரலாம். ஊரை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தால் வயிற்றுப் பாட்டிற்கு என்ன செய்வது? அல்லது வாழ்க்கையில் வளம்  பெறுவதற்கு என்ன செய்வது? வெளிநாட்டில் பணி செய்ய நேர்ந்தால் என்ன செய்வது?

பருத்தி வியாபாரம் செய்பவன் தேனி, ராஜபாளையம், மதுரை அல்லது கோயமுத்தூரில் இருந்தால்தான் அந்த வியாபாரத்தைச் சிறப்பாகச் செய்ய
முடியும். அதை விட்டுவிட்டு அறந்தாங்கி, புதுக்கோட்டை, பேராவூரணி, அல்லது தஞ்சாவூரில் இருந்து கொண்டு அந்தத் தொழிலை எப்படிச்
சிறப்பாகச் செய்ய முடியும்?

கணினி தொழில்நுட்பத்தில் பட்டம் வாங்கியவன், சென்னை, பெங்களூர் அல்லது ஹைதராபாத்தில் வேலை கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லி,
வேலூர், அரக்கோணம், காஞ்சிபுரத்தில் வேலை தாருங்கள் என்று அந்த நிறுவனங்களில் கேட்க முடியுமா?

Microsoft,IBM, Oracle. HP, Symantec போன்ற மிகப் பெரிய நிறுவனங்களில் வேலை கிடைத்தால், இந்த ஊரில் வேலை போட்டுத் தாருங்கள் என்று  கேட்க முடியுமா? ஒரு தட்டுத் தட்டி அனுப்பிவிடமாட்டார்களா? அது  Delhi, Singapore, Washington, New Jersy அல்லது Bostan  என்று எந்த ஊராக இருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும் சென்று, அந்த வேலையில் சேர வேண்டுமல்லவா? நம் விருப்பத்தை எல்லாம் கேட்க அங்கே யார் இருக்கிறார்கள்? நம் மாமா  இருக்கிறாரா அல்லது மாமனார் இருக்கிறாரா?

அதற்கு எண் கணிதம் ஒரு நல்ல பதிலைச் சொல்கிறது. அதைப் பின்னால் பார்ப்போம். முதலில் எந்த ஊர் உங்களுக்குச் சரிப்படும் என்பதை மட்டும்
இப்போது பார்ப்போம்.

முதலில் நீங்கள் பிறந்த ஊர் எப்படி என்று பார்ப்போம்! பிறந்த ஊரே சரிப்பட்டதுதானா என்று பார்ப்போம்.

“பார்த்து என்ன ஆகப் போகிறது?இப்போது அதை மாற்ற முடியுமா?” என்று கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும்!
--------------------------------------------------------------------------------------------
நாம் பிறந்த எண்தான் நமக்கு அதிர்ஷ்ட எண். முதலில் உங்கள் பிறந்த தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள். 1 முதல் 9 வரை அதைச் சுருக்கி
ஒற்றைப் படை எண்ணாக மாற்றிக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு:

1, 10, 19, 28ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 1.
2, 11, 20, 29ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 2
3, 12, 21, 30ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 3
4, 13, 22. 31ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 4.
5, 14, 23ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 5.
6, 15, 24ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 6
7, 16, 25ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 7.
8, 17, 26ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 8
9, 18, 27ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 9.


நீங்கள் பிறந்த ஊர் சேலம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் எண்: SALEM = 3+1+3+5+4 = 16 = 7 அந்த ஊருக்கான எண் 7. அந்த ஊரில் பிறந்த ஒருவருடைய தேதியும் 7 என்று வைத்துக்கொள்ளுங்கள் (ஒரு பேச்சிற்குத்தான் சாமிகளா) அவருக்கு மதுரையும், கோயமுத்தூரும் சரிப்பட்டு வராது.

ஏன்? ஒன்றும், ஒன்பதும் ஏழாம் எண்ணிற்கு உடன்படாத எண்கள்

Madurai = 4+1+4+6+2+1+1= 19 = 1
Coimbatore = 3+7+1+4+2+1+4+7+2+5 = 36 = 9


நமது மாநிலத்தின் தலைநகரம் ஆரம்ப காலத்தில் சென்னப்ப நாயக்கர் என்ற தனிமனிதருக்குச் சொந்தமானதாக இருந்தது. ஆமாம் மொத்த இடமும்
அவருக்குச் சொந்தமானதாக இருந்தது.

The name Chennai is a shortened form of Chennaipattanam, the name of the town that grew around Fort St. George, which was built by the English in 1639. Chennapattanam was named after the Telugu ruler Damarla Chennappa Nayakudu, Nayaka of Kalahasthi and Vandavasi, father ofDamarla Venkatadri Nayakudu, from whom the English acquired the town in 1639. The first official use of the name Chennai is said to be in a sale deed, dated 8 August 1639, to Francis Day of the East India Company.

The city's colonial name, Madras, is believed to have been derived from Madraspattinam, a fishing village north of Fort St. George. However, it is uncertain whether the name 'Madraspattinam' was in use before European influence.

After the British gained possession of the area in the 17th century, the two towns, Madraspattinam and Chennapattinam, were merged, and the British referred to the united town as Madrasapattinam. The state government officially changed the name to Chennai in 1996, at a time when many Indian cities were being renamed. However, the name Madras continues to be occasionally used for the city as well as for places named after the city, such as the University of Madras and The Indian Institute of Technology, Madras.(தகவல்: விக்கி மஹாராஜா)

1996ஆம் ஆண்டு வரை மெட்ராஸ் என்ற பெயர்தான் நிலவியது.

MADRAS = 4+1+4+2+1+3 = 15 = 6
CHENNAI = 3+5+5+5+5+1+1 = 25 = 7


ஆறு என்ன எண் சுக்கிரனின் எண். அந்த ஆறு எண்ணில் பெயர் இருந்தவரை சென்னை கலைத்துறையில் கொடி கட்டிப் பறந்தது. 7 என்று மாறிய பிறகு அதே கொடி பறந்து கொண்டிருக்கிறதா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

இரண்டு பெயர்கள் உள்ளதே? எதை எடுத்துக்கொள்வது? இரண்டு பெண்டாட்டிக்காரன்கதைதான். 1996ஆம் அண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் மூத்த தாரத்தின் பிள்ளைகள். அவர்கள் MADRAS என்பதையே எடுத்துக்கொள்ளலாம்!:-)))
----------------------------------------------------------------------------------------------
எண்ணிற்கு உரிய ஆங்கில எழுத்துக்கள்:

1 = A, I, J, Y, Q
2 = B, K, R
3 =  C, G, L, S
4 = D, M, T
5 = E, H, N, X
6 = U, V, W
7 = O, Z
8 = F, P

----------------------
ஆங்கில எழுத்துக்கு உரிய எண்கள்

A = 1, B = 2, C = 3, D = 4, E = 5
F = 8 G = 3, H = 5, I = 1, J = 1
K = 2, L = 3, M = 4, N = 5,  O = 7
P = 8, Q = 1, R = 2, S = 3 T = 4
U = 6. V = 6, W = 6, X = 5, Y = 1, Z = 7

------------------------------------------------



-----------------------------------------------------------------------------------------------
1. நீங்கள் முதலில் உங்கள் பிறந்த ஊருக்கும் உங்களுக்கும் உள்ள பொருத்தத்தைப் பாருங்கள்.
2. அடுத்து வசிக்கும் ஊருக்குப் பாருங்கள்.
3. அது பொருந்தவில்லை என்றால், எண் கணிதம் மாற்று வழியைச் சொல்லியிருக்கிறது. அதைச் சொல்லித் தருகிறேன்.
4. அடுத்து ஜோதிடம் இதைப் பற்றி என்ன சொல்கிறது? அதையும் எழுதுகிறேன்.
.
பொறுத்திருங்கள்

இது மேல்நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன் படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டிருக்கிறேன்.

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

37 comments:

  1. ஐயா, பிறந்த தேதியும் பிறந்த ஊரின் எண்ணும் பொருந்துகிறது. ஆனால் இருக்கும் ஊரோடு பொருந்தவில்லை:-(

    ReplyDelete
  2. /////Blogger thozhar pandian said...
    ஐயா, பிறந்த தேதியும் பிறந்த ஊரின் எண்ணும் பொருந்துகிறது. ஆனால் இருக்கும் ஊரோடு பொருந்தவில்லை:-(////

    அதிகாலை 3 மணிக்கு எழுந்துவிடும் பழக்கமுள்ள நான், இன்றையப் பதிவை முடித்து 4.15ற்கு வலையில் ஏற்றினால் 4.53ற்குப் பின்னூட்டம் இடுகிறீர்களே? எந்த ஊரில் வசிக்கிறீர்கள் தோழரே? அதைச் சொல்லுங்கள்! மாற்றுவழி இருக்கிறது. உதவிக்கு வருகிறேன். பதிலை மின்னஞ்சலில் அனுப்புங்கள்!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ஐயா, மின்னஞ்சல் அனுப்பி விட்டேன். 3 மணிக்கெல்லாம் எழுந்து விடுவீர்களா? உங்களிடம் கற்க வேண்டியது ஜோதிடமும் எண் கணிதமும் மட்டுமல்ல என்பது மட்டும் புரிகிறது:-) என்னால் நிச்சயமாக 3 மணிக்கெல்லாம் எழ முடியாது. ஆறு மணிக்கு எழுவதே பெரிய சாதனையாக நினைத்து கொண்டிருக்கிறேன்:-)

    ReplyDelete
  5. /////Blogger thozhar pandian said...
    ஐயா, மின்னஞ்சல் அனுப்பி விட்டேன். 3 மணிக்கெல்லாம் எழுந்து விடுவீர்களா? உங்களிடம் கற்க வேண்டியது ஜோதிடமும் எண் கணிதமும் மட்டுமல்ல என்பது மட்டும் புரிகிறது:-) என்னால் நிச்சயமாக 3 மணிக்கெல்லாம் எழ முடியாது. ஆறு மணிக்கு எழுவதே பெரிய சாதனையாக நினைத்து கொண்டிருக்கிறேன்:-)///

    அதில் ஒரு ரகசியம் இருக்கிறது. கிட்டே வாருங்கள் சொல்கிறேன். தூக்கத்தை இரண்டாகப் பிரித்துவைத்திருக்கிறேன். மதிய உணவிற்குப் பிறகு ஒரு மணி நேரம் அல்லது ஒன்றைரை மணி நேரம் (நன்றாக) உறங்கி விடுவேன். நாள் ஒன்றிற்கு 6 அல்லது 7 மணி நேரம்தான் உறக்கம். ஆனால் விழித்திருக்கும் நேரம் எல்லாம் சுறுசுறுப்பாக இருப்பேன். அது தெய்வ அருள்!

    ReplyDelete
  6. ஐயா, ஆங்கில தேதியை எடுக்கவேண்டுமா அல்லது தமிழ் மாத தேதியையா? ஆங்கில தேதி என்றால் 1, பிறந்த ஊர் எண் 5. இது பொருந்துமா?

    ReplyDelete
  7. ஆங்கில தேதியை மட்டும் தான் பயன்படுத்த வேண்டுமா? மேலும் இரண்டு எண்களுக்கிடையே பொருத்தம் பார்ப்பது எப்படி?

    ReplyDelete
  8. அய்யா, எனது பாட்டனாரும் மதிய உணவிற்கு பிறகு ஒன்று இரண்டு மணி நேரம் உறங்குவார். காலையில் நான்கு அல்லது ஐந்து மணிக்கு எழுவார். விழித்திருக்கும் நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். நான் பார்க்கும் வேலையிடத்தில் அந்த கொடுப்பினை இல்லை. இரவு மட்டுமே உறக்கம். இரவில் வேலை இருந்தால் அதுவும் இல்லை. என்ன செய்வது, என் விதி அப்படி. நீங்கள் கூறியது போல் எல்லாம் தெய்வ அருளே.

    ReplyDelete
  9. இரவு தான் எண் கணிதத்தினைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்!. விடிந்தால் தங்களின் பதிவு!.நன்றி ஐயா!.எண்கணிதம் பல சமயங்களில் நமக்கு உறுதுணையாக இருப்பது. ஆனால் அதன் அருமை பெருமைகளைச் சிந்திக்காமல் கண்டபடி விளக்கம் கூறி குழப்பி விட்டார்கள். எண்கணிதத்தின் அடிப்படைகளை மனதில் பதிய வைத்துக் கொண்டால் வேறு எதற்கும் யாரிடமும் போய் நிற்க வேண்டியது இல்லை. பஞ்ச பட்சி சாஸ்திரம் அறிந்தவர்களைப் போல!...

    ReplyDelete
  10. Respected Sir,
    Can you please let us know the matching numbers? My birth number is 8, birth city number id 9 and the the number of city I live in is 6.

    ReplyDelete
  11. //அதில் ஒரு ரகசியம் இருக்கிறது. கிட்டே வாருங்கள் சொல்கிறேன். தூக்கத்தை இரண்டாகப் பிரித்துவைத்திருக்கிறேன். மதிய உணவிற்குப் பிறகு ஒரு மணி நேரம் அல்லது ஒன்றைரை மணி நேரம் (நன்றாக) உறங்கி விடுவேன். நாள் ஒன்றிற்கு 6 அல்லது 7 மணி நேரம்தான் உறக்கம். ஆனால் விழித்திருக்கும் நேரம் எல்லாம் சுறுசுறுப்பாக இருப்பேன். அது தெய்வ அருள்!//

    பதிவும் பிடித்திருக்கிறது... மேற்கண்டதும் பிடித்திருக்கிறது... இந்த தெய்வ அருள் கிடைக்கப் பெற்ற அடியவர்களில் நானும் ஒருவன்...

    ReplyDelete
  12. ஐயா வணக்கம்,
    எண் ஜோதிடம் தானே ஆராய்ச்சி செய்ததக சொல்லி பல ஆண்டுகளுக்குமுன் மந்தைவெளியில் ஒரு பிரபலமான ஜோசியர் ஒருவரிடம் எனது எதிர்காலம் கொழிக்கும் என்ற ஆசையில் 1984 ல் பெயர்மாற்றம் செய்தேன்,கொஞ்சம் கூட தயவு இல்லாமல்5000 ரூபாய் என்னிடம் வாங்கினார். ஆனால் அடுத்தமாதமே நடுத்தெருவுக்கு வந்தேன். எண் எப்படி உதவும் சொல்லுங்கள்

    ReplyDelete
  13. எண்ணை கொடுத்து எங்களை
    எண்ண வைத்து விட்டீர்கள்

    தூக்கத்தை பற்றி ஒரு பதிவிடுங்கள்
    தூக்கத்தை சொந்தம் கொண்டாடும்

    எண்களும் கிரகங்களும்
    என எண்ணிப் பார்த்தால்....?

    சரி

    எண்கணிதமும் சோதிடமும்
    என ஒப்பிட்டு படிப்பது சிறப்பானதே
    (யாரும் கவணிக்காத கைரேகையையும் சேர்த்துக்கோங்க)

    அன்போடு வரவேற்கிறோம்
    அதோடு ஒரு செய்தி ..

    ஒன்பது எண்ணிற்கு எழுத்தில்லை
    ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு குறள் உள்ளது

    எட்டிற்கு மட்டும் ஒரே ஒரு குறள்
    எழுதி மின்னஞ்சலில்அனுப்பியுள்ளது

    ReplyDelete
  14. //பார்த்து என்ன ஆகப் போகிறது?இப்போது அதை மாற்ற முடியுமா//

    முதலில் நானும் இதைதான் நினைத்தேன்.

    ஆமாம் நீங்கள் வசிக்கும் ஊரே கோவை, கோயம்பத்தூர் என்று 2 பெயர்களில் அழைக்கப்படுகிறதே, எதை எடுத்துக் கொள்வீர்கள்.

    ReplyDelete
  15. Thanks sir, Good starting for numerology...

    ReplyDelete
  16. Which no will match with other numbers and which no will give very much luck and prosperty

    ReplyDelete
  17. ///சர்மா said...
    எதிர்காலம் கொழிக்கும் என்ற ஆசையில் 1984 ல் பெயர்மாற்றம் செய்தேன், ஆனால் அடுத்தமாதமே நடுத்தெருவுக்கு வந்தேன். ///

    எண் கணித முறைபடி
    எப்போதும் தன் பெயரையும் மாற்றுபவர்

    கலைஉலக அஷ்டாவதானி
    காதல் உலக மன்னன் T ராஜேந்தர்

    திலிப்பாக இருந்தவர் இசைப்பாளர் என
    திரும்பி பார்க்க வைத்த ARரகுமான்

    இப்படி பல கலைஉலக முகங்களை
    இந்த எண்(கனிதம்) மாற்றி உள்ளது..

    எண்களை மாற்றும் போது
    எண்ணங்கள் மாறும் வாழ்வு சிறக்கும்

    கல்(ராசி) சொல்வதும் இது தான்
    கைரேகை சொல்வதும் இது தான்

    எண்ணங்களின் பதிவே
    எப்போதும் கைகளில் ரேகையாகும்

    கல்லின் ஒளி அதிர்வினால்
    கனியும் நல்ல காலம்

    காலம் ஒரு நாள் மாறும் நம்
    கவலைகள் யாவும் தீரும் என்ற

    கண்ணதாசனின் வரிகளை
    கருத்தில் கொள்க சர்மாஜி அவர்களே

    ReplyDelete
  18. ///Ak Ananth said...
    ஆமாம் நீங்கள் வசிக்கும் ஊரே கோவை, கோயம்பத்தூர் என்று 2 பெயர்களில் அழைக்கப்படுகிறதே,///

    கோயம்பத்தூரா அல்லது
    கோயமுத்தூரா என பல சமயங்களில்

    தடுமாறிய பலரில் அய்யரும் தான்
    தருவது கொங்கு தமிழ் என்பதால் மகிழ்ச்சி

    ReplyDelete
  19. ////Blogger vettiblogger said...
    ஐயா, ஆங்கில தேதியை எடுக்கவேண்டுமா அல்லது தமிழ் மாத தேதியையா? ஆங்கில தேதி என்றால் 1, பிறந்த ஊர் எண் 5. இது பொருந்துமா?////

    ஆங்கிலத் தேதியை வைத்துதான் எண்கணிதம். நீங்கள் ஆங்கிலத்தேதியையே எடுத்துக்கொள்ளுங்கள். பொருத்தம் பார்க்கும் விவரம் எல்லாம் அடுத்த பதிவில் வரும். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  20. ////Blogger thozhar pandian said...
    அய்யா, எனது பாட்டனாரும் மதிய உணவிற்கு பிறகு ஒன்று இரண்டு மணி நேரம் உறங்குவார். காலையில் நான்கு அல்லது ஐந்து மணிக்கு எழுவார். விழித்திருக்கும் நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். நான் பார்க்கும் வேலையிடத்தில் அந்த கொடுப்பினை இல்லை. இரவு மட்டுமே உறக்கம். இரவில் வேலை இருந்தால் அதுவும் இல்லை. என்ன செய்வது, என் விதி அப்படி. நீங்கள் கூறியது போல் எல்லாம் தெய்வ அருளே.////

    நல்லது நன்றி பாண்டியன்!

    ReplyDelete
  21. ////Blogger துரை செல்வராஜூ said...
    இரவு தான் எண் கணிதத்தினைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்!. விடிந்தால் தங்களின் பதிவு!.நன்றி ஐயா!.எண்கணிதம் பல சமயங்களில் நமக்கு உறுதுணையாக இருப்பது. ஆனால் அதன் அருமை பெருமைகளைச் சிந்திக்காமல் கண்டபடி விளக்கம் கூறி குழப்பி விட்டார்கள். எண்கணிதத்தின் அடிப்படைகளை மனதில் பதிய வைத்துக் கொண்டால் வேறு எதற்கும் யாரிடமும் போய் நிற்க வேண்டியது இல்லை. பஞ்ச பட்சி சாஸ்திரம் அறிந்தவர்களைப் போல!...////

    அந்தக் கலை ஓரளவிற்குப் பயன்படும் அவ்வளவுதான். ஜோதிடம்தான் கடல் போன்றது. எல்லாக் கேள்விகளுக்கும் அதில் பதில் கிடைக்கும்!

    ReplyDelete
  22. ///Blogger Dallas Kannan said...
    Respected Sir,
    Can you please let us know the matching numbers? My birth number is 8, birth city number id 9 and the the number of city I live in is 6.////

    பொருத்தம் பார்க்கும் விவரம் எல்லாம் அடுத்த பதிவில் வரும். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  23. /////Blogger Bala subramanian said...
    super////

    நல்லது. நன்றி பாலா!

    ReplyDelete
  24. ////Blogger Advocate P.R.Jayarajan said...
    //அதில் ஒரு ரகசியம் இருக்கிறது. கிட்டே வாருங்கள் சொல்கிறேன். தூக்கத்தை இரண்டாகப் பிரித்துவைத்திருக்கிறேன். மதிய உணவிற்குப் பிறகு ஒரு மணி நேரம் அல்லது ஒன்றைரை மணி நேரம் (நன்றாக) உறங்கி விடுவேன். நாள் ஒன்றிற்கு 6 அல்லது 7 மணி நேரம்தான் உறக்கம். ஆனால் விழித்திருக்கும் நேரம் எல்லாம் சுறுசுறுப்பாக இருப்பேன். அது தெய்வ அருள்!//
    பதிவும் பிடித்திருக்கிறது... மேற்கண்டதும் பிடித்திருக்கிறது... இந்த தெய்வ அருள் கிடைக்கப் பெற்ற அடியவர்களில் நானும் ஒருவன்...////

    அந்த அருள் உங்களுக்கு மேலும் கூடட்டும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. ////Blogger சர்மா said...
    ஐயா வணக்கம்,
    எண் ஜோதிடம் தானே ஆராய்ச்சி செய்ததக சொல்லி பல ஆண்டுகளுக்குமுன் மந்தைவெளியில் ஒரு பிரபலமான ஜோசியர் ஒருவரிடம் எனது எதிர்காலம் கொழிக்கும் என்ற ஆசையில் 1984 ல் பெயர்மாற்றம் செய்தேன்,கொஞ்சம் கூட தயவு இல்லாமல்5000 ரூபாய் என்னிடம் வாங்கினார். ஆனால் அடுத்தமாதமே நடுத்தெருவுக்கு வந்தேன். எண் எப்படி உதவும் சொல்லுங்கள்/////

    ஜாதகப்பலன்தான் முக்கியம். அதுதான் சாப்பாடு! கல், எண்கணிதம் எல்லாம், அப்பளம், ஊறுகாய் போன்றவைகள்! அதை மனதில் கொள்க! நேரம் சரியில்லை என்றால் மற்றது எதுவும் கைக்கொடுக்காது!

    ReplyDelete
  26. ////Blogger வேப்பிலை said...
    எண்ணை கொடுத்து எங்களை
    எண்ண வைத்து விட்டீர்கள்
    தூக்கத்தை பற்றி ஒரு பதிவிடுங்கள்
    தூக்கத்தை சொந்தம் கொண்டாடும்
    எண்களும் கிரகங்களும்
    என எண்ணிப் பார்த்தால்....?
    சரி
    எண்கணிதமும் சோதிடமும்
    என ஒப்பிட்டு படிப்பது சிறப்பானதே
    (யாரும் கவணிக்காத கைரேகையையும் சேர்த்துக்கோங்க)
    அன்போடு வரவேற்கிறோம்
    அதோடு ஒரு செய்தி ..
    ஒன்பது எண்ணிற்கு எழுத்தில்லை
    ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு குறள் உள்ளது
    எட்டிற்கு மட்டும் ஒரே ஒரு குறள்
    எழுதி மின்னஞ்சலில்அனுப்பியுள்ளது////

    நல்லது. நன்றி வேப்பிலை சாமி!

    ReplyDelete
  27. /////Blogger Ak Ananth said...
    //பார்த்து என்ன ஆகப் போகிறது?இப்போது அதை மாற்ற முடியுமா//
    முதலில் நானும் இதைதான் நினைத்தேன்.
    ஆமாம் நீங்கள் வசிக்கும் ஊரே கோவை, கோயம்பத்தூர் என்று 2 பெயர்களில் அழைக்கப்படுகிறதே, எதை எடுத்துக் கொள்வீர்கள்./////

    தமிழில் எழுதும்போது கோவை, கோயமுத்தூர், கோயம்புத்தூர்’ என்று எப்படி எழுதினாலும், ஆங்கிலத்தில் எழுதும்போது COIMBATORE’ என்றுதான் எழுதப்பெறுகிறது. அதனால் குழப்பம் இல்லை! நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  28. ////Blogger manikandan said...
    Thanks sir, Good starting for numerology.../////

    நல்லது. நன்றி மணிகண்டன்!

    ReplyDelete
  29. ////Blogger Ram said...
    Which no will match with other numbers and which no will give very much luck and prosperty/////

    அது எல்லாம் அடுத்த பதிவில் வரும் பொறுத்திருங்கள் ராம்!

    ReplyDelete
  30. logger வேப்பிலை said...
    ///சர்மா said...
    எதிர்காலம் கொழிக்கும் என்ற ஆசையில் 1984 ல் பெயர்மாற்றம் செய்தேன், ஆனால் அடுத்தமாதமே நடுத்தெருவுக்கு வந்தேன். ///
    எண் கணித முறைபடி
    எப்போதும் தன் பெயரையும் மாற்றுபவர்
    கலைஉலக அஷ்டாவதானி
    காதல் உலக மன்னன் T ராஜேந்தர்
    திலிப்பாக இருந்தவர் இசைப்பாளர் என
    திரும்பி பார்க்க வைத்த ARரகுமான்
    இப்படி பல கலைஉலக முகங்களை
    இந்த எண்(கனிதம்) மாற்றி உள்ளது..
    எண்களை மாற்றும் போது
    எண்ணங்கள் மாறும் வாழ்வு சிறக்கும்
    கல்(ராசி) சொல்வதும் இது தான்
    கைரேகை சொல்வதும் இது தான்
    எண்ணங்களின் பதிவே
    எப்போதும் கைகளில் ரேகையாகும்
    கல்லின் ஒளி அதிர்வினால்
    கனியும் நல்ல காலம்
    காலம் ஒரு நாள் மாறும் நம்
    கவலைகள் யாவும் தீரும் என்ற
    கண்ணதாசனின் வரிகளை
    கருத்தில் கொள்க சர்மாஜி அவர்களே//////

    ஜாதகப்பலன்தான் முக்கியம். அதுதான் சாப்பாடு! கல், எண்கணிதம் எல்லாம், அப்பளம், ஊறுகாய் போன்றவைகள்! அதை மனதில் கொள்க! நேரம் சரியில்லை என்றால் மற்றது எதுவும் கைக்கொடுக்காது!

    ReplyDelete
  31. /////Blogger வேப்பிலை said...
    ///Ak Ananth said...
    ஆமாம் நீங்கள் வசிக்கும் ஊரே கோவை, கோயம்பத்தூர் என்று 2 பெயர்களில் அழைக்கப்படுகிறதே,///
    கோயம்பத்தூரா அல்லது
    கோயமுத்தூரா என பல சமயங்களில்
    தடுமாறிய பலரில் அய்யரும் தான்
    தருவது கொங்கு தமிழ் என்பதால் மகிழ்ச்சி/////

    என்ற ஊர்ல குழப்பம் ஒன்னுமில்லீங்க சாமி! தமிழ்ல எழுதும்போது கோவை, கோயமுத்தூர், கோயம்புத்தூர்’ன்னு எப்படி எழுதினாலும், இங்கிலீசுல எழுதும்போது COIMBATORE’னு தானுங்க எழுதுவுவோம்!

    ReplyDelete
  32. thanks for sharing an important post

    ReplyDelete
  33. அய்யா, மின்னஞ்சலில் உங்கள் கேள்விக்கு பதில் அனுப்பி இருக்கிறேன். உங்களுக்கு நேரம் இருக்கும்போது பதில் அனுப்ப வேண்டுகிறேன்.

    ReplyDelete
  34. ////Blogger arul said...
    thanks for sharing an important post/////

    நல்லது. நன்றி அருள்!

    ReplyDelete
  35. /////Blogger thozhar pandian said...
    அய்யா, மின்னஞ்சலில் உங்கள் கேள்விக்கு பதில் அனுப்பி இருக்கிறேன். உங்களுக்கு நேரம் இருக்கும்போது பதில் அனுப்ப வேண்டுகிறேன்.//////

    அப்படியே செய்கிறேன்.நன்றி!

    ReplyDelete
  36. ஆசிரியருக்கு வணக்கம்,
    தங்கள் பதில் மனம் தெளிவாகியது
    அப்பளம் சாப்பிட்டு நாளாயிற்று
    நன்றி
    விசு ஐயரின் ஆதரவுக்கு மிக நன்றி யைத்தெரிவிக்கவும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com