Astrology: எத்தனை வில்லன்களப்பா சாமி?
கல்கி அவர்கள் எழுதிய அற்புதமான பொன்னியின் செல்வன் தொடர்கதையில், அவருடைய மொழியாற்றல், கதை சொல்லும் உத்தி, கதாபாத்திரங்களைச் சுட்டிக் காட்டும் நேர்த்தி என்று படிப்பவர்களை வியக்கவைக்கும் பல விஷயங்கள் உள்ளன.
கதையில் வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், கரிகாலன், சேந்தன்அமுதன், என்று பல நாயகர்கள். குந்தவை, வானதி, பூங்குழலி, நந்தினி என்று பல நாயகிகள். பழு வேட்டரையர்கள், ரவிதாசன் போன்ற வில்லர்கள். அத்தனை பேர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கதையை அனாசயமாகக் கொண்டு செல்வார்.
அதுபோல ஜோதிடத்தில் பல நாயகர்களும் உண்டு. வில்லர்களும் உண்டு.
சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், புதன், செவ்வாய் போன்ற நாயகர்கள் உள்ளார்கள். சனி, ராகு,கேது, மாந்தி, குளிகன் போன்ற வில்லர்களும் உள்ளார்கள்.
வில்லர்களில் முதல் மூவரை அனைவருக்கும் தெரியும். ஆனால் திரை மறைவிற்குப் பின் நின்று போட்டுத் தள்ளும் வில்லன்களான மாந்தி, மற்றும் குளிகனைப் பற்றிப் பலருக்கும் தெரியாது.
இருவருமே கொடியவர்கள்.
சிலர், மாந்தியும் குளிகனும் வெவ்வேறானவர்கள் என்பது தெரியாமல் இருவரும் ஒருவரே என்பார்கள்.
அது உண்மையல்ல!
இருவரும் தனித்தனியானவர்கள். ஜாதகனைப் போட்டுத்தள்ளுவதிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை!
அவர்கள் இருவரும் வெவ்வேறானவர்கள் என்பதற்கான ஆதாரத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.
8.6.2013 அன்றைய கிரக நிலைப் படம் கிழே உள்ளது.
மாந்தியும் , குளிகனும் வெவ்வேறு பாகைகளில் இருப்பதைப் பாருங்கள். ஜகன்னாத ஹோரா மென்பொருளைத் தட்டினால், எந்தத் தேதிக்கு வேண்டுமென்றாலும், அவர்களின் நிலைப்பாடு தெரியவரும் (ஆன்லைனில் அது இலவச மென்பொருள்)
பண்டைய ஜோதிட நூல்கள் குளிகனை சனியினுடைய புத்திரன் என்றும், மாந்தியை எமனுடைய புத்திரன் என்று கூறுகின்றன. இருவரில் மாந்தி மிகவும் மோசமானவன்.பயம் கொள்ளவைப்பவன். இருக்கும் இடத்தின் பலன்களை ஜாதகனுக்குக் கிடைக்கவிடாமல் தட்டிப் பறிப்பவன். அழித்துவிடக்கூடியவன்
ஆகவே மாந்தி அமர்ந்திருக்கும் இடத்தின் பாவபலன் ஜாதகனுக்குக் கிடைக்காமல் போய்விடும். அத்துடன் மாந்தி அமர்ந்திருக்கும் இடத்தின் அதிபதியின் திசைப் பலனும் ஜாதகனுக்குக் கேடுகளையே செய்யும்.
முற்காலத்தில் அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த தமிழர்கள் பலரின் ஜாதகத்தில் மாந்தியைப் பற்றியை ஜாதக அமைப்பே குறிப்பிடப் பெற்றிருக்காது. காரணம் தமிழ் நாட்டில் வாழ்ந்த பல ஜோதிடர்கள் அக்காலத்தில், மாந்தியையும், அஹ்டகவர்க்கத்தையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளாததே காரணம்.
உங்கள் ஜாதகத்தை எடுத்துப்பாருங்கள். அதில் மாந்தி, குளிகன், அஷ்டகவர்க்கம் ஆகிய மூன்றும் இல்லை என்றால் புதிதாக ஒன்றைக் கணித்து வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்!
சரி, மாந்தி & குளிகனால் ஏற்படும் கேடுகள் என்னென்ன? அது பெரிய பாடம். பின் ஒரு நாள் அதை எழுதுகிறேன்.தற்சமயம் நேரம் இல்லை. இங்கே அல்ல! இங்கே எழுதினால் கஷ்டப்பட்டு என் மொழியில் என் நடையில் உதாரணங்களுடன் எழுதுவதை லவட்டிக்கொண்டு போய் தங்கள் வலைத்தளங்களில் தாங்கள் எழுதியதைப்போல போட்டுக்கொண்டு விடுகிறார்கள். அநியாயத்திற்குத் திருட்டுப்போகின்றன! ஜோதிடம் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் அதை எழுத ஆசைப் படுகிறவர்கள், தங்கள் நடையில் எழுதட்டும். கட் & பேஸ்ட் கலாச்சாரம் எதற்கு?
ஆகவே அதை மேல்நிலை வகுப்பில் எழுதுவதாக உள்ளேன். பின்னால் அது புத்தக வடிவில் வரும்போது அனைவரும் படித்துப் பயனுறலாம். மகிழலாம். பொறுத்திருங்கள்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கடந்த வாரம் ஒரு சக மூத்த வழக்குரைஞரின் மகளின் ஜாதகத்தை சோதிடர் ஒருவரிடம் காண்பிக்க சென்றிருந்தோம். அவர் ஜாதக கட்டங்களை பார்த்துவிட்டு, " 'மாந்தியை' ஜாதகக் கட்டங்களில் குறிப்பிட மாட்டர்களே, இதில் போட்டு வைத்திருக்கிறார்களே" என்று முணுமுணுத்துக் கொண்டார். அவர் மிகவும் பிரபலமான ஜோதிடர் என்பதால் அது குறித்து அவரிடம் விளக்கம் ஏதும் அப்போது கேட்க முடியவில்லை. இப்போது தங்கள் கட்டுரை வாயிலாக வில்லர்களின் குணாதிசியம் பற்றிய தெளிவு பெற்றேன். நன்றி.
ReplyDeleteதவிர வில்லர்கள் இருந்தால்தான் சிலர் நாயகர்கள் ஆக முடியும். நாயகர்கள் நம்மைக் காக்கட்டும் ! வாழ்க.... வளர்க...
நமது சனாதன தர்மத்தில் தான், "மாற்றுத்திறனாளிகள் ", என்று தற்காலத்தில் அழைக்கப்படும் பலரையும், சரிசமமாக போற்றி உள்ளனர். அவற்றில் இருவர் தாம் சனி மற்றும் யமன். இவர்கள் இருவருக்குமே ஒரு கால் மற்ற கடவுள்களை போல் ஒழுங்காக இருக்காது. இருவரும் சகோதரர்கள். இருவரும் தர்மத்தை ரட்சிப்பவர்கள். இவர்கள் இருவரது புதல்வர்களுக்கும் அதே போன்ற தொழில்.
ReplyDeleteஅருமையான பதிவு. இது வரை நான் இரண்டும் ஒன்றே என்றே இருந்தேன். Clarification-க்கு நன்றி. குளிகன் மகரத்திலும், மாந்தி கும்பத்திலும் இருந்தால், அந்த ஜாதகரின் சனி தசா எப்படி இருக்கும் ?
ReplyDeletevanakam sir manthikku enna parikaram sevathu..
ReplyDeleteGood Morning Sir
ReplyDeleteமதிப்பிற்குரிய வாத்தியார் அய்யா, நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கேள்வி. ஜோதிடம் பயில்வதும் பார்ப்பதும் நல்லதா? நல்லதா என்பதை விட சரியானதா? ஏன் கேட்கிறேன் என்றால், இறைவனுக்கும் கால தேவனுக்கும் மட்டுமே தெரிந்த செய்திகளை நாம் அறிய நினைப்பது சரியாகுமா? நான் சந்தித்த ஒரு புரோகிதர் அது பார்ப்பது சரியல்ல என்று கூறுகிறார். அதற்கு காரணம் கர்மா சேரும் என்பதாலா? வாழ்க்கையின் சுவாரசியம் குறைந்து விடுமென்பதாலா? அல்லது வேறு காரணங்களாலா? ஜோதிடம் பயில்வது இறை நம்பிக்கைக்கு எதிரானது என்று கூட சிலர் கருத்து கூறுகின்றனர். நான் படித்த ஜோதிட பாடங்களிலேயே இறை நம்பிக்கைக்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பது தாங்கள் தான். எனக்கும் இறை நம்பிக்கை உண்டு. அதே சமயம், எனக்கு ஜோதிடம் பிரமிப்பாகவும் படிக்க தூண்டுவதாகவும் இருக்கிறது. இதை படிப்பதனால் எனது இறை நம்பிக்கை குறைந்து விட்டதாகவும் நான் எண்ணவில்லை. இருந்தாலும் ஒரு உறுத்தல். உங்களின் கருத்து என்ன? ஜோதிடம் பயில்வதால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமா? இறைவன் கருணை மிக்கவர். அவர் கோபப்பட மாட்டார் என்று நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் உங்கள் கருத்தை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
ReplyDeletewhen books will be published?
ReplyDeleteஅருமையான பதிவு அய்யா
ReplyDeleteஅய்யா, தாங்கள் எழுதிய "மாந்தி" என்னும் பதிவில், மாந்தியும் குளிகனும் ஒருவர் தான் என்று எழுதியதாக ஞாபகம், தயவுசெய்து "மாந்தி" என்னும் பதிவை சரிபார்க்க வேண்டுகிறேன். என் மீது தவறு இருந்தால் என்னை மன்னித்துகொள்ளவும்.
ReplyDelete2ல்இருந்தால்..?
ReplyDeleteமாந்தியும் குளிகனும் ஒன்று என்றே நானும் இத்தனை நாள் எண்ணியிருந்தேன். நல்ல பதிவிற்கு நன்றி.
ReplyDeleteஜகன்னாத ஹோராவில் PVRN அவர்கள் மாந்தியையும் குளிகனையும் தனித் தனியே காட்டியிருந்தாலும் அவை இரண்டும் ஒன்றுதான் என்ற கருத்தையே சொல்லியிருக்கிறார்.
ReplyDeleteஇது சம்பந்தமான PVRN அவர்களின் மின்னஞ்சல் (தன் நண்பர் ஒருவருக்கு அனுப்பியது என்று நினைக்கிறேன்) கீழ் காணும் தளத்தில் இருக்கிறது.
http://groups.yahoo.com/group/sohamsa/message/19356
மாந்தியும் குளிகனும் ஒன்று என்றும், வெவ்வேறானவை என்றும் இரு வேறு கருத்துகள் இன்றைய ஜோதிடர்களிடையே இருக்கதான் செய்கிறது.
// Blogger வேப்பிலை said...
ReplyDelete2ல்இருந்தால்..?//
பண சேமிப்பு இருக்காது என்றோ, குடும்பத்தினரிடையே ஒற்றுமை இருக்காது என்றோ அல்லது வாக்கு (பேச்சு) இடக்கு மடக்காக இருக்கும் என்றோ சொல்லலாமோ?
அருமையான விளக்கம்........
ReplyDeleteஅருமையான பதிவு...
ReplyDeleteநல்லதோர் விளக்கம்...... அருமை
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteமாந்திபற்றிய .பதிவு படித்திருக்கிறேன் ,,
ஆனாலும் தங்களின் உதாரண அலசல் பாடஙகளில் அதிக முக்கிய த்துவம் தரப்படுவதில்லை
இனறைய .பதிவு அதன் நிலைப்பாட்டை தெளிவு படுத்தி இருக்கிறது ,,
விரிவான .பதிவை .ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்
ஜஹந்நாத ஹோரா /ஆஸ்ட்ரோவிஷன்
ReplyDeleteஜோதிடமென்பொருள்
ஒரு ஜாதகத்தை வித்தியாசமாக கணிக்கினறன ,
எது சரியான மென்பொருள்
என்று சொல்ல முடியுமா
மா ஐயா்
மாந்தி - கண்டிப்பான வாத்தியார்.
ReplyDeleteகுளிகன் - கனிவான வாத்தியார்.
vanakam sir,
ReplyDeletewhen will the book be published?
Ayya
ReplyDeletevillankalai Patriya nalla pathivu
/////Blogger Advocate P.R.Jayarajan said...
ReplyDeleteகடந்த வாரம் ஒரு சக மூத்த வழக்குரைஞரின் மகளின் ஜாதகத்தை சோதிடர் ஒருவரிடம் காண்பிக்க சென்றிருந்தோம். அவர் ஜாதக கட்டங்களை பார்த்துவிட்டு, " 'மாந்தியை' ஜாதகக் கட்டங்களில் குறிப்பிட மாட்டர்களே, இதில் போட்டு வைத்திருக்கிறார்களே" என்று முணுமுணுத்துக் கொண்டார். அவர் மிகவும் பிரபலமான ஜோதிடர் என்பதால் அது குறித்து அவரிடம் விளக்கம் ஏதும் அப்போது கேட்க முடியவில்லை. இப்போது தங்கள் கட்டுரை வாயிலாக வில்லர்களின் குணாதிசியம் பற்றிய தெளிவு பெற்றேன். நன்றி.
தவிர வில்லர்கள் இருந்தால்தான் சிலர் நாயகர்கள் ஆக முடியும். நாயகர்கள் நம்மைக் காக்கட்டும் ! வாழ்க.... வளர்க.../////
உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
ReplyDelete////Blogger Ravi said...
நமது சனாதன தர்மத்தில் தான், "மாற்றுத்திறனாளிகள் ", என்று தற்காலத்தில் அழைக்கப்படும் பலரையும், சரிசமமாக போற்றி உள்ளனர். அவற்றில் இருவர் தாம் சனி மற்றும் யமன். இவர்கள் இருவருக்குமே ஒரு கால் மற்ற கடவுள்களை போல் ஒழுங்காக இருக்காது. இருவரும் சகோதரர்கள். இருவரும் தர்மத்தை ரட்சிப்பவர்கள். இவர்கள் இருவரது புதல்வர்களுக்கும் அதே போன்ற தொழில்./////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!
////Blogger Sanjai said...
ReplyDeleteஅருமையான பதிவு. இது வரை நான் இரண்டும் ஒன்றே என்றே இருந்தேன். Clarification-க்கு நன்றி. குளிகன் மகரத்திலும், மாந்தி கும்பத்திலும் இருந்தால், அந்த ஜாதகரின் சனி தசா எப்படி இருக்கும் ?/////
மெச்சும்படியாக இருக்காது!
////Blogger eswari sekar said...
ReplyDeletevanakam sir manthikku enna parikaram sevathu../////
பரிகாரம் என்றாலே அது இறைவழிபாடு ஒன்றுதான்!
////Blogger Dallas Kannan said...
ReplyDeleteGood Morning Sir////
உங்களின் வருகைப் பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி!
/////Blogger thozhar pandian said...
ReplyDeleteமதிப்பிற்குரிய வாத்தியார் அய்யா, நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கேள்வி. ஜோதிடம் பயில்வதும் பார்ப்பதும் நல்லதா? நல்லதா என்பதை விட சரியானதா? ஏன் கேட்கிறேன் என்றால், இறைவனுக்கும் கால தேவனுக்கும் மட்டுமே தெரிந்த செய்திகளை நாம் அறிய நினைப்பது சரியாகுமா? நான் சந்தித்த ஒரு புரோகிதர் அது பார்ப்பது சரியல்ல என்று கூறுகிறார். அதற்கு காரணம் கர்மா சேரும் என்பதாலா? வாழ்க்கையின் சுவாரசியம் குறைந்து விடுமென்பதாலா? அல்லது வேறு காரணங்களாலா? ஜோதிடம் பயில்வது இறை நம்பிக்கைக்கு எதிரானது என்று கூட சிலர் கருத்து கூறுகின்றனர். நான் படித்த ஜோதிட பாடங்களிலேயே இறை நம்பிக்கைக்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பது தாங்கள் தான். எனக்கும் இறை நம்பிக்கை உண்டு. அதே சமயம், எனக்கு ஜோதிடம் பிரமிப்பாகவும் படிக்க தூண்டுவதாகவும் இருக்கிறது. இதை படிப்பதனால் எனது இறை நம்பிக்கை குறைந்து விட்டதாகவும் நான் எண்ணவில்லை. இருந்தாலும் ஒரு உறுத்தல். உங்களின் கருத்து என்ன? ஜோதிடம் பயில்வதால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமா? இறைவன் கருணை மிக்கவர். அவர் கோபப்பட மாட்டார் என்று நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் உங்கள் கருத்தை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்./////
களவும் கற்று மற’ என்றார்கள். ஜோதிடம், வான சாஸ்திரம், பிற மொழிகள் என்று எதையும் கற்றுக்கொள்வதில் தவறில்லை! இறைவன் எதற்காக
கோபித்துக்கொள்ளப் போகிறார்? கோபம் கொண்டால் அவர் எப்படி இறைவனாக, சர்வ வல்லமை படைத்தவராக இருக்க முடியும்?
///Blogger arul said...
ReplyDeletewhen books will be published?////
It is big project.4,000 Pages! வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதல் இரண்டு தொகுதிகள் கூடிய விஅரிவில் வெளியாகும். பொறுத்திருங்கள்!
////Blogger manikandan said...
ReplyDeleteஅருமையான பதிவு அய்யா/////
நல்லது. நன்றி!
////Blogger manikandan said...
ReplyDeleteஅய்யா, தாங்கள் எழுதிய "மாந்தி" என்னும் பதிவில், மாந்தியும் குளிகனும் ஒருவர் தான் என்று எழுதியதாக ஞாபகம், தயவுசெய்து "மாந்தி" என்னும் பதிவை சரிபார்க்க வேண்டுகிறேன். என் மீது தவறு இருந்தால் என்னை மன்னித்துகொள்ளவும்./////
ஆமாம் எனக்கும் நினைவில் உள்ளது. புதிதாகப் படித்த ஒன்றினால் இருவரும் வெவ்வேறானவர்கள் என்று தெரிந்து கொண்டேன். அதை உங்களுக்கு இந்தப் பதிவின் மூலம் அறியத்தந்திருக்கிறேன்!
////Blogger வேப்பிலை said...
ReplyDelete2ல்இருந்தால்..?/////
ஜாதகனை சந்நியாசி ஆக்கிவிடும். இல்லையென்றால்..... அதை ஒரு தனிப்பதிவாக வலை ஏற்றுகிறேன். பொறுத்திருங்கள்!
////Blogger thozhar pandian said...
ReplyDeleteமாந்தியும் குளிகனும் ஒன்று என்றே நானும் இத்தனை நாள் எண்ணியிருந்தேன். நல்ல பதிவிற்கு நன்றி.////
நல்லது. நன்றி பாண்டியன்!
////Blogger Ak Ananth said...
ReplyDeleteஜகன்னாத ஹோராவில் PVRN அவர்கள் மாந்தியையும் குளிகனையும் தனித் தனியே காட்டியிருந்தாலும் அவை இரண்டும் ஒன்றுதான் என்ற கருத்தையே சொல்லியிருக்கிறார்.
இது சம்பந்தமான PVRN அவர்களின் மின்னஞ்சல் (தன் நண்பர் ஒருவருக்கு அனுப்பியது என்று நினைக்கிறேன்) கீழ் காணும் தளத்தில் இருக்கிறது.
http://groups.yahoo.com/group/sohamsa/message/19356
மாந்தியும் குளிகனும் ஒன்று என்றும், வெவ்வேறானவை என்றும் இரு வேறு கருத்துகள் இன்றைய ஜோதிடர்களிடையே இருக்கதான் செய்கிறது.////
நாம் இருவரையுமே எடுத்துக்கொள்வோம். என்ன குறைந்துவிடப்போகிறது?
/////Blogger Ak Ananth said...
ReplyDelete// Blogger வேப்பிலை said...
2ல்இருந்தால்..?//
பண சேமிப்பு இருக்காது என்றோ, குடும்பத்தினரிடையே ஒற்றுமை இருக்காது என்றோ அல்லது வாக்கு (பேச்சு) இடக்கு மடக்காக இருக்கும் என்றோ சொல்லலாமோ?/////
இல்லை. இன்னும் விவரமாகச் சொல்லலாம். தனிப்பதிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள் ஆனந்த்!
////Blogger Amile said...
ReplyDeleteஅருமையான விளக்கம்........////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger Remanthi said...
ReplyDeleteஅருமையான பதிவு.../////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger Remanthi said...
ReplyDeleteநல்லதோர் விளக்கம்...... அருமை////
நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
////Blogger சர்மா said...
ReplyDeleteவணக்கம்
மாந்திபற்றிய .பதிவு படித்திருக்கிறேன் ,,
ஆனாலும் தங்களின் உதாரண அலசல் பாடஙகளில் அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை
இனறைய .பதிவு அதன் நிலைப்பாட்டை தெளிவு படுத்தி இருக்கிறது ,,
விரிவான .பதிவை .ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்////
நல்லது. உங்களின் ஆலோசனைக்கு நன்றி!
/////////Blogger சர்மா said...
ReplyDeleteஜஹந்நாத ஹோரா /ஆஸ்ட்ரோவிஷன்
ஜோதிடமென்பொருள்
ஒரு ஜாதகத்தை வித்தியாசமாக கணிக்கினறன ,
எது சரியான மென்பொருள்
என்று சொல்ல முடியுமா
மா ஐயா்//////
Astrovision மென் பொருளைப் பயன் படுத்துங்கள். இணையத்தில் அதன் இலவசப் பதிவு கிடைக்கும்!
////Blogger Ravi said...
ReplyDeleteமாந்தி - கண்டிப்பான வாத்தியார்.
குளிகன் - கனிவான வாத்தியார்.////
வாத்தியார்கள் கண்டிப்பாக இருந்தால்தான் சொல்லித் தரமுடியும்:-)))
/////Blogger saravanan said...
ReplyDeletevanakam sir,
when will the book be published?/////
It is big project.4,000 Pages! வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதல் இரண்டு தொகுதிகள் கூடிய விஅரிவில் வெளியாகும். பொறுத்திருங்கள்!
////Blogger Kalai Rajan said...
ReplyDeleteAyya
villankalai Patriya nalla pathivu/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!