மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.12.11

எதில் சந்தோஷம்?


 மாணவக் கண்மணிகள், வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் மனமுவந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மாணவர் மலர்

இன்றைய மாணவ மலரை 5 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன! படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++
எதில்  சந்தோஷம்?

ஆக்கம்: எஸ்.சந்திரசேகரன், பென்சில்வேனியா, யு.எஸ்.ஏ

எல்லா மனிதர்களும் விரும்புவது சந்தோஷமே .அந்த சந்தோஷத்தை அடைவதற்கு பல வழி முறைகளை முயற்சி செய்து பார்க்கிறான். ஆனால், முழு பலன் தான் கிடைக்க மாட்டேன்கிறது .என்ன செய்வது?. என்று மகள் உமா தன்னுடைய தந்தையை பார்த்து கேட்க,  தந்தை தனக்கே உரிய வழக்கமான புன்னகையுடன் பதில் கூற ஆரம்பித்துவிட்டார்.

"என்  செல்வமே  உமா!~நீ, எதை சந்தோஷம் என்று கூறுகிறாய்?

"அப்பா, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு சந்தோஷம். மனிதனுக்கு மனிதன்  சந்தோஷம் மாறுபடும். எதை என்று கூறுவது ". என்று உமா பதில் கூறினாள்.

"எப்பொழுதும்  போல குழப்பமான பதில் சொல்வது என்று தீர்மானம் பண்ணிவிட்டாய். நேரடியாக என்றைக்கு பதில் கூறியுள்ளாய்? சரி  போகட்டும் . நானே விளக்குகிறேன்", என்று தந்தை முடிவு எடுத்து பதில் கூறுவதற்கு முன் மகளின் முகத்தை பார்த்தார்.

நக்கலான  நமட்டு  சிரிப்பு சிரிக்கும் மகளின் முகத்தை பார்த்ததும் உள்ளுக்குள் பொய் கோபம் வந்தாலும் வெளியில் காட்டிகொள்ளாமல்  அதை அடக்கிகொண்டு மேலும் கூற ஆரம்பித்தார்.

சந்தோஷம், துக்கம் அகிய இரண்டுமே நம் எண்ணத்தில்தான் உள்ளது. அது  கடையில் வாங்க கூடிய பொருள் அல்ல. அது இரண்டுமே நாம் செய்யும் நடவடிக்கைகளின் பலன்.  ஒரு செய்கைக்கு காரணம் நம்முடைய எண்ணம்.  நம் எண்ணத்தில் உருவாவதற்கு காரணம் சுற்றுப்புறமும், சூழ்நிலையும்,நம்முடைய ஐம்புலன்களும் தான்.  இதில் ஐம்புலன்களை மட்டும் தான் நம்மால் கட்டு படுத்தமுடியும். அதுதான் கடினமானது .
ஒரு வேலை செய்யும் பொழுது முழுவதுமாக சிந்திக்காமல், அந்த வேலையை அரைகுறையாக செய்துவிட்டு , பலனை அடையும் பொழுது  நாம்  சிந்திக்கிறோம். மகளே, கீதையில்  கூறியுள்ளபடி  நான் உனக்கு மேலும் விளக்குகிறேன் . "த்ருஷ்ட்டம், அதிருஷ்ட்டம், துர்திருஷ்ட்டம்," என்று மூன்று  வகை உண்டு. த்ருஷ்ட்டம் - (Visible- both actions & results) , அதிருஷ்ட்டம் - ( Invisible - either actions or results will be invisible),  துர்திருஷ்ட்டம் - (Invisible - either bad actions or bad results will be invisible)  த்ருஷ்ட்டம் என்றால் நாம் செய்கின்ற வேலையும் அதன் பலனும் காலதாமதமின்றி கிடைக்கபெறுவது. உதாரணமாக, முப்பது நாட்கள் ஆபீஸ் வேலைக்கு சென்று முதல் தேதி அன்று சம்பளம் வாங்குகிறோமே அதுதான் த்ருஷ்ட்டம். அதிருஷ்டம் என்றால், பலனை எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்காக ஒரு செய்கின்ற வேலை, அதனால் ஏற்படுகின்ற பலன், காலதாமத்தினால் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுக்கும். அந்தப்பலன் கிடைக்கும் காலத்தை தீர்மானம் செய்வது இறைவன் மட்டுமே. இந்தப் பிறவியில் கிடைக்கலாம் அல்லது அடுத்த பிறவியில் கிடைக்கலாம். அதனால், நாம் செய்கின்ற செயல் தான் முக்கியம்.  அன்னதானம் வழங்குவது , அநாதை குழந்தைகளுக்கு அடிப்படைவசதி செய்து கொடுப்பது ,  வயதான முதியோர்களுக்கு உதவுவது போன்ற செயல்களைச் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கவேண்டும். அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் எப்பொழுதும்  தானம், தர்மம்  செய்து கொண்டு இருக்கவேண்டும் என்று கூறினார்கள். அதைத்தான் அன்று  "தர்மம் தலை காக்கும் " என்று கூறினார்கள்.  செய்த தர்மம் ஆபத்தான காலத்தில் வந்து உதவி செய்யும். தக்க சமயத்தில் உயிரையும் காக்கும்.

“அப்பா, " தானம்,  தர்மம்  இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?."  என்று உமா கேட்டாள்.

“சரியாகக் கேள்வி கேட்டாய், மகளே! என்று பதில் சொல்லிவிட்டு மேற்கொண்டு தொடந்தார். தானம் என்பது ஒருவர் கேட்டு நாம் கொடுப்பது.  இல்லை என்று சொல்லாமல் உடனே அந்த நேரத்தில் கொடுப்பது. தர்மம் என்பது  ஒருவருடைய தேவையை உணர்ந்து நாமாக தொடர்ந்து செய்து கொண்டு வருவது. கோவில்களுக்கு தேவையான பொருள்களை கொடுப்பது,  ஏழை குழந்தைகளுக்கு பாட புத்தங்கங்களை வழங்குவது,  அன்னதானம் செய்பவர்களுக்கு தேவையானதை கொடுப்பது போன்ற பல செயல்களைச் செய்வது. இதுதான் உண்மையான சந்தோஷம். தானம், தர்மம் செய்வதும் மனிதனுடைய கடமை என்று  ஸ்முருதி என்ற வடநாட்டு நூல் கூறுகிறது. (ஸ்முருதி - மனிதனுடைய வாழ்க்கை முறையை விவரித்து கூறுவது) முதல் முதலில் கற்காலம் என்று சொல்வார்களே, ஒரு மனிதன் ஒரு மனிதனை சந்தித்த முதல் சந்திப்பில் மனிதன் பயந்தான்.  அந்த பயத்தை போக்குவதற்கு தன்னிடம் உள்ள உணவை கொடுத்து அன்பை பெற்றுகொண்டான் என்று சரித்திர நூல் கூறுகிறது.முதல் தர்மம் எப்பொழுது உருவானது என்று கேள்வி கேட்டால் இதை நாம் உதாரனமாக எடுத்து கொள்ளலாம்.        உண்மை என்ன வென்றால் பேச்சும், மொழியும் உருவாவதற்கு முன்னால் தானம், தர்மம் உருவானது என்று கூறுவார்கள். காலப்போக்கில்,  இந்த தானம், தர்மம் வியாபாரமாக மாறிவிட்டதற்கு நாம் கட்டாயம் வருந்த வேண்டும். இப்பொழுதும் தானம், தர்மம் சிறப்பாகத்தான் நடந்துகொண்டு இருக்கிறது. வாத்தியார் காசிக்கு சென்று அங்கு நெடு நாட்களாக நடந்துகொண்டு இருக்கின்ற தர்மச் செயல்களை போட்டோ முலம் நமக்கு காண்பித்தார். தென்நாட்டில் இருந்து வட நாட்டிற்கு சென்று துவங்கிய தர்மம், வடநாட்டில் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணம் வேறு எதுவாக இருக்கமுடியும்? துர்திருஷ்ட்டம் என்றால் நாம் செய்கின்ற தவறான வேலை, அதனுடைய பலன் நமக்கு காலதாமதமாகி,  நமக்கு  எதிரானதாக அமையும்.  ஜாதகத்தில் ராகுவும் , சனியும், அந்த தசை வரும் பொழுது  பூர்வ கர்மபலன் சரியில்லை என்றால்  ஜாதகனை தொங்கவிட்டு அடிப்பார்கள் என்று வாத்தியார் பாடத்தில் கூறினார்களே , இதற்கு பெயர் தான்  துர்திருஷ்ட்டம்.  இங்கு " தவறான" என்ற சொல்லுக்கு மற்றவர்களுக்கு வேதனை தரக்கூடிய செயல் செய்வது என்று பொருள் கொள்ள வேண்டும்” என்று மகளுக்குத்  தந்தை கூறிமுடித்தார்.
                                                                                    
அப்பா என்றால் அப்பா தான் என்று தந்தைக்கு ஐஸ் வைக்க முயற்சி செய்தாள் உமா.அதற்குள் அம்மாவிடமிருந்து குரல் வந்தது , உமா அப்பாவை அழைத்துக்கொண்டு சாப்பிட வா.

ஆக்கம்: எஸ்.சந்திரசேகரன், பென்சில்வேனியா, யு.எஸ்.ஏ
Csekar2930

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சின்ன வயதில் படித்த கதை!

அறிவுரைகள் நன்மை தருபவை.  தீய செயலுக்குத் தூண்டும் ஆலோசனைகளுக்கு அறிவுரைகள் என்ற தகுதியை நாம் வழங்குவதில்லை.  கூனி, சகுனி ஆகியோர்  கூறியவற்றை, அந்த ஆலோசனைகளை, உலக மக்கள் போற்றபடவேண்டிய நல்ல அறிவுரைகள் என நம் முன்னோர்கள் நமக்கு போதித்ததில்லை.  அறிவுரைகளைப் பலரும் கொடுத்தவண்ணமே இருப்பார்கள்.  அது மிகவும் சுலபம், அறிவுரைகளை கடைபிடிப்பதே சிரமம்.  அறிவுரை கொடுப்பவர்களே அதைக் கடைபிடிக்க மறந்தும் விடுவார்கள்.  “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்”, என்கிறது திருக்குறள்.  அனைத்து அறிவுரைகளுமே மறுக்கமுடியாத (கசப்பான) உண்மைகள்.  அவை மருத்துக்கு சமம்.  அதனால் அறிவுரைகளை மருந்தை தேனில் குழைத்துக் கொடுப்பதுபோல் கொடுக்கவேண்டும்.

- பேசும்பொழுது எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக, எல்லோரையும் திருப்தி படுத்தும் விதமாகப் பேசமுடியாது என்பது ஒரு அடிப்படை விதியினைப் போன்றது.  எந்த ஒரு உள்நோக்கமும் இல்லாமல், பொதுவாக பேசும் சொற்கள் என நாம் நினைப்பவைகூட எதிர்பாராதவிதமாக ஒரு சிலருக்கு மனவருத்தத்தைக் கொடுத்துவிடக்கூடும்.- ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து அவர்களை நல்லவர் என்றோ அல்லது கெட்டவர் என்றோ ஒரு முடிவுக்கு நாம் வரக்கூடாது. - எக்காரணத்தைக் கொண்டும் பெற்றோர்களிடம் உண்மையை மறைக்கக் கூடாது.

இப்படிப் பல அறிவுரைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.  ஆனால் அவை என்றும் நினைவில் நிற்பதுபோல் சொல்வது எப்படி?  ஒரு உதாரணத்துடன் சொன்னால் நினைவில் தங்கும்.  பெரும்பாலும் நன்னெறிகள் நமக்கு கதைகளின் வழியே போதிக்கப்படும் -தேனில் குழைத்துக் கொடுக்கும் மருந்து போல.  அதன் காரணம் அறிவுரைகளைவிட கதைகள் மனதில் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும்.  நம் நாடு கதைகேட்டு கதைகேட்டு வளர்ந்த நாடு.  வளரும்பொழுது  தன் தாய் சொன்ன கதைகளைக் கேட்டவர்கள் மகாத்மாக்களாக, மாவீரர்களாக உருவெடுத்த வரலாற்றை நாமும் சிறுவயதிலேயே படித்திருக்கிறோம்.

பாட்டி வடை சுட்ட கதையில் ஆரம்பித்து நம் அனைவருக்கும் சிறுவயதில் படித்த அல்லது கேட்ட எத்தனையோ கதைகளில் ஒரு சில கதைகள் மற்ற கதைகளைவிடவும் மிகவும் பிடித்துவிடும்.  இன்றுவரை நினைவில் பசுமையாக இருக்கும்.  அதை நம் குழந்தைகளிடம், நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்வதும் வழக்கம்.  அதுபோல நான் படித்த சிறுவயது கதைகளில் எனக்கு பிடித்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விருப்பம்.

சோவியத் ரஷ்யாவின் பதிப்பகம் வெளியிட்ட சிறுவர்களுக்கான புத்தகங்களில் ஒன்றின் தலைப்பு "மறைந்த தந்தி".  தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கதையின் புத்தகம், சாம்பல் வண்ண அட்டையில் பச்சை வண்ணப்  பைன் மரங்களும், பொழியும் வெள்ளைப் பனியும் படமாக சித்தரிக்கப்பட்டு உள்ளேயும் பல சித்திரங்களுடன் இருக்கும்.  மாஸ்கோவில் தன் தாயுடன் வசித்த  "சுக்" "கெக்" என்ற இரு சிறுவர்களைப் பற்றிய கதை இது.  என் பள்ளி நூலகத்தில் இருந்து படிப்பதற்காக நான் கொண்டுவந்த இந்தக் கதைப்புத்தகம் என் தம்பிக்கும் தங்கைக்கும் மிகவும் பிடித்துவிட்டது.  சிலநாட்கள் கழித்து ஊருக்கு வந்த சோவியத் ரஷ்யா புத்தகக் கண்காட்சியில் அந்த புத்தகமும் இருந்ததது.  அம்மாவிடம் கேட்டு வாங்கிகொண்டு வந்துவிட்டேன்.  எத்தனையோ முறை திரும்ப திரும்ப படித்து ஒரு காலத்தில் எனக்கும் என் தம்பி தங்கைக்கும் கதையின் வரிகள்கூட மனப்பாடமாகிவிட்டது.  வீட்டிற்கு சென்றால் புத்தக அலமாரியில் தேடி மீண்டும் படிக்க வேண்டும் என்று நினைத்தாலும் மறந்துவிடுகிறேன்.  கதையின் சாரத்தை என் நினைவிலிருந்து கீழே கொடுத்துள்ளேன்.

------------------------
மறைந்த தந்தி
------------------------

மாஸ்கோவில் வசிக்கும் ஒரு சிறு குடும்பம், அதில் உள்ளவர்கள் சிறுவர்கள் சுக், கெக் மற்றும் இவர்களின் பெற்றோர்கள்.  அப்பா சைபீரியாக் காட்டில், பனிப் பிரதேசத்தில், தொலை தூரத்தில் உள்ள ஊருக்கு ஏதோ ஒரு வேலை காரணமாகப் போய் விடுவார்.  வரும் கிறிஸ்த்மஸ்கு அப்பாவைப் போய் பார்த்து அவருடன் கொண்டாடலாம் என்று திட்டம் போடுவார்கள்.  அம்மா சிறுவர்களை வீட்டில் விட்டுவிட்டு ரயில் பயணச் சீட்டு வாங்க சென்றுவிடுவாள்.  சிறுவர்கள் அம்மாவுக்கு சற்றும் பிடிக்காத சண்டையில் இறங்கி ஒருவரை  ஒருவர் அடித்துக் கொள்வார்கள்.  அப்பொழுது வீட்டிற்கு தபால் வரும்.  அதை வாங்கி கையில் வைத்துக்கொண்டு மீண்டு சண்டையைத் தொடர்வார்கள்.  ஒருவர் பொருளை ஒருவர் ஜன்னல் வழியே வீசியெறிய, வந்த தந்தியும் வெளியே பனிக்குவியலில் விழுந்து காணமல் போய்விடும்.

சிறுவர்கள் எவ்வளவு தேடியும் தந்தி கிடைக்காது.  பயம் பிடித்துக்கொள்ள அம்மாவிடம் என்ன சொல்வது என யோசிப்பார்கள்.  உண்மையைச் சொன்னால் தண்டனை கிடைக்கும் என்பதால் உண்மையைச் சொல்லவேண்டாம் என்று முடிவெடுப்பார்கள்.  அம்மாவிடம் பொய்யும் சொல்லக்கூடாதே. அதனால் அம்மா வீட்டிற்கு வந்ததும் இன்று கடிதம் ஏதும் வந்ததா என்று கேட்டால் சொல்லலாம், கேட்காவிட்டால் பேசாமல் இருந்துவிடலாம் என்று முடிவுக்கு வருவார்கள்.  அப்படி செய்வது பொய் சொல்வதாகாது என்பது அவர்கள் எண்ணம்.  பயணச்சீட்டுடன், மேலே உள்ள சால்வையில் உள்ள பனித்துளிகளை நீக்கியவாறு வீட்டின் உள்ளே வரும் அம்மா, குழந்தைகள் நல்ல பிள்ளைகளாக அமைதியாய் இருப்பதைப் பார்த்தும், கணவருடன் கிறிஸ்த்மஸ் கொண்டாடட்டும் உற்சாகத்திலும் ஏதும் கேட்கமாட்டாள்.

பயணநாளில் புறப்பட்டு, நெடுந்தூரம் ரயிலில் பயணம் செய்து, ஆள் அரவமற்ற, அத்துவானக் காட்டில் எங்கும் பனியைத்தவிர வேறு எதுவும் இல்லாத அப்பாவின் ஊருக்கு வந்து சேருவார்கள்.  அப்பாவின் இருப்பிடத்தில் யாரும் இல்லாமல் அந்த இடத்தின் காவல்காரர் மட்டுமே  இருப்பார்.  இவர்களைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக ஏன் வந்தீர்கள், இங்கு யாரும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா என்பார்.  அந்த ஆள் முரட்டு சுபாவத்துடன், சரியான கோபக்கார முசுடான ஆள்.

அம்மாவோ அவர் சொல்வது ஒன்றும் புரியாமல் விழிப்பாள்.  அங்கு வேலை செய்பவர்களுக்கு வேலையில் ஏதோ திடீர் மாற்றம் வந்து மேலும் தொலைவான ஒரு ஊருக்கு போய்விட நேர்ந்திருக்கும்.  அதனால், திட்டம் மாறிவிட்டது, நீங்கள்  கிறிஸ்த்மஸ்க்கு வரவேண்டாம் என அப்பா கடிதம் எழுதி காவல்காரரிடம் கொடுத்து தபாலில் சேர்க்க சொல்லியிருப்பார்.  காவல்காரர் அம்மாவிடம், நீங்கள் வரத் தேவையில்லை என்று சொல்லப்பட்ட கடிதத்தை நான்தான் தபாலில் சேர்த்தேன் உங்களுக்கு கிடைக்கவில்லை, ஏன் வந்தீர்கள், எதற்காக வந்தீர்கள் என அதட்டுவார்.

அம்மாவிற்கு உண்மை புரிய வெகு நேரம் ஆகாது.  "ஏண்டா, படுபாவிகளா என்னடா செய்தீர்கள் அந்தக் கடிதத்தை?" என்று சிறுவர்களைப் பார்த்து கத்துவாள்.  பையன்கள் வெட்கமிலாமல் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு, கோள் சொல்லி அழுவார்கள்.  யாருக்கும் என்ன செய்வது எனப் புரியாது.  திரும்பிப் போவதும் நடக்கும் காரியமில்லை.  காவல்காரர் அழும் இரு சிறுவர்களையும் நோட்டமிடுவார்.  இந்த புஸு புஸுவென இருக்கும் பையன் அவன் அப்பாவின் சாயலில் இருக்கிறான் என்பார்.  இதைக் கேட்ட இரு சிறுவர்களுமே வருத்தப் படுவார்கள்.  ஒருவன் தன்னை புஸு புஸுவென குண்டாக இருப்பதாக சொன்னதற்கு வருந்துவான், மற்றொருவன் தனக்கு அப்பாவின் சாயல் இல்லை என்று சொன்னதற்காக வருந்துவான்.

காவல்காரர் தன் வீட்டில் அவர்கள் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்துவிட்டு, உங்களால் முடிந்தவரை காலத்தை ஓட்டுங்கள், உங்களுக்குப் பணிவிடை செய்ய எனக்கு நேரமுமில்லை, அதற்கு அவசியமும் இல்லை என்று கடுப்புடன் சொல்லிவிட்டு, குளிரிலும், பனியிலும் அவர்கள் மூவரையும் தனியே தவிக்க விட்டுவிட்டு தன் பனிச்சறுக்கு வண்டியில் கிளம்பிப் போய்விடுவார்.  அம்மாவும் பிள்ளைகளும் தனிமையில் கிறிஸ்த்மஸ் கொண்டாடுவார்கள்.  புத்தாண்டு ஆரம்பிப்பதற்கு முதல்நாள் வெளியில் ஒரே சத்தமாக, கூச்சலும் குழப்பமுமாக இருக்கும்.  அம்மாவும் பிள்ளைகளும் வெளியில் ஓடிப்போய்ப் பார்த்தால் காவல்காரரும், அப்பாவும், அவர் தோழர்களும் பனிச்சறுக்கு வண்டியில் வருவார்கள்.

முசுடான காவல்காரர்தான் அந்தக் கடுமையான பனிப்பொழிவில் அவ்வளவு தூரம் பயணம் செய்து, அப்பாவிடம் போய் நடந்ததைக் கூறி, அவரையும் அவர் குழுவினரையும் கையோடு அழைத்து வந்திருப்பார்.  ஆனால், இப்பொழுது வந்த பிறகோ அவர் இல்லாத நேரத்தில் அவர் வீட்டை அம்மாவும் பிள்ளைகளும் களேபரம் செய்துவிட்டார்கள் எனக் கோபத்துடன் முணுமுணுத்த வண்ணம் இருப்பார்.  அந்தக் கோபக்கார முசுடர் தனக்காக செய்த உதவியை நினைத்து அம்மா கண்களில் நன்றியுடனும், கண்ணீருடனும் அவரை அணைத்துக் கொள்வாள்.

சிறுவர்கள் இருவரும் அப்பாவின் ஆளுக்கொரு காலாக ஏறி, அவர் தோளில் தொங்கியவாறு உற்சாகத்துடன் விளையாடுவார்கள்.  அன்று இரவு புத்தாண்டு ஆரம்பிக்கும் பொழுது மாஸ்கோவின் தேவாலய மணியோசையை வானொலியில் ஒலிபரப்புவதைக் கேட்டவாறு அனைவரும் மகிழ்ச்சியுடன் புத்தாண்டைக் கொண்டாடுவார்கள்.
- ஆக்கம் தேமொழி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏன்  கரைகிறது எனது உயிர்?   

 காதல் வளர்த்த தேவியே!
என்மதி கொஞ்சிய  மதியே!- இன்று
விதிமுடித்து  வந்தாயோ?
விடைபெற வந்தாயோ ?

செந்தாமரை போல் சிரித்த
உன்சிவந்தமுகம்
காய்ந்து  கல்லாய் கருத்திருப்பது ஏன்?

மீன்போல் பவனித்த
உன் கண்கள்
மீனற்ற குளமாய் கலங்குவது  ஏன்?.

யாழ்போல் இசைந்த
உன்குரல்
நரம்பறுந்து உடைந்து போனது ஏன்?.

மது ரசம் பொழிந்த
உன் உதடுகள்
புதுவிஷம் கொட்டி புண்ணாகி போனது  ஏன்?

கைதட்டி   விளையாடிய
உன் வளைகரங்கள்
கைகட்டி விலங்கு பூட்டி நிற்பது ஏன்?

நாட்டியமாய் நடந்து வந்த
உன் கால்கள்
வாதம் கொண்டு வளைந்து நிற்பது ஏன்?

ஒய்யார நளினங்கள் நிறைந்த
உன் மேனி
கூனி  குருகி சருகாய் சாய்ந்திருப்பது ஏன்?

புள்ளி மான்போல்
துள்ளி வந்த நீ
வேடனிடம் வீழ்ந்ததுபோல் மருள்வது ஏன்?.

மனமுவந்து  அணிந்த
என் கொலுசுகளை  விலக்கியே
விருப்பமில்லா  புதுமெட்டிகள்  போட்டதாலா?

உயிர்நீயே  என்றுரைத்த
என்னுயிரே - இன்று
உயிரற்று வந்தாயோ
உயிரின்றி  நிற்கும் எனைப்பார்க்க.
---தனுசுராசிக்காரன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ராஜாஜி என்ற மாமனிதர்!

இன்று கிறிஸ்துமஸ் நன்னாள். சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் நினைவு தினமும் இன்று. இந்தத் தலைமுறையினருக்கு அறிமுகமாகாத ஒரு தலைவர் அவர். அவரை அந்தக் காலத்தில் 'ராஜாஜி' என்று அழைப்பார்கள்.

அவருடைய வாழ்க்கைச் சுருக்கத்தைக் கேட்டால் விக்கிப்பீடியா அளிக்கும். அல்லது நமது தஞ்சைப் பெரியவரின் வலைப்பூவில் வாழ்க்கைச் சுருக்கத்தைக்
காணலாம்.

http://en.wikipedia.org/wiki/C._Rajagopalachari
http://www.bharathipayilagam.blogspot.com

குலக்கல்வித் திட்டத்தைப் புகுத்தி  பிராமணர்களின் மேட்டிமைத் தனத்தை நாட்டில் புகுத்தப் பார்த்தார் என்ற அவப்பெயர் அவர் மீது சுமத்தப்பட்டு
ஓரங்கட்டப் பட்டவர்.

Please read the draft resolution here and find there was no such
attempt to reintroduce Varna System

http://www.education.nic.in/cd50years/g/12/28/12280V01.htm
http://www.education.nic.in/cd50years/g/12/28/12281301.htm
ஆனால் அவர் த‌ன் 94 வயதுவரை அரசியலின் மையத்தில் இருந்து மக்களாட்ச்சிக்குத் தொண்டாற்றி விட்டே போனார்.(1878=1972)

புகழுக்காக, கும்பலின் கைத்தட்டலுக்காகப் பேசாத ஒரே தலைவர். கசப்பு மருந்தை நோயாளியின் வாயை முரட்டுத்தனமாகத் திறந்து ஊற்றும் வைத்தியர் போன்றவர். ஆங்கிலத்தில் 'சாரிஸ்மா' என்று சொல்லப்படும் கவர்ச்சி சற்றும் இல்லாத தலைவர்.

ஒருமுறை இந்தியா டுடேயில் எழுத்தாளர் அசோகமித்திரனின் 1700 பக்கக் கட்டுரைகளின் தொகுப்பு நூலின் விமர்சனக் கட்டுரையில் திரு பி ஏ கிருஷ்ணன் என்பவர் இவ்வாறு கூறியிருந்தார்:

"இவற்றில் எனக்கு மிகப் பிடித்தது ராஜாஜி சினிமாவிற்குப் போனார் (பக்கம் 690-700, தொகுதி 2)  என்ற கட்டுரைதான்.  கட்டுரை ராஜ் மோகன் காந்தி ராஜாஜி பற்றி எழுதிய வாழ்க்கை வரலாறு பற்றிய செய்தியுடன் தொடங்குகிறது. அதில் ராஜாஜியின் டைரிக் குறிப்புகளைப் பற்றிய செய்தி.

ஒரு குறிப்பு 'ஜெமினியின் ஔவையார் படம் பார்த்தேன்'  என்று தொடங்குகிறது. எப்படி முடிகிறது என்பதை அசோக மித்திரன் உடனே நமக்குச் சொல்வதில்லை. கட்டுரை ஜெமினியின் சம்சாரம்  படத்திற்குத் தாவுகிறது. அதன் வெற்றியைப் பற்றி சொல்லி விட்டு அடுத்த ஜெமினி படமான மூன்று பிள்ளைகள் ( ஆர். கே நாராயண் வசனம் எழுதியது!) அடைந்த தோல்வியைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. இந்தத் தோல்வி ஜெமினி அதிபர் வாசனை அவர் ஏழு எட்டு ஆண்டுகள் கிடப்பில் போட்டிருந்த ஔவையார் படத்தை வெளிக் கொணரத் தூண்டியது. ஔவையாருக்கு வசனம் எழுதிய பலரில் புதுமைப் பித்தனும் ஒருவர்.  ஏகப் பட்ட ரீல்கள் ஏற்கனவே எடுத்து முடித்தாகி விட்டது. படம் அப்படியே ஓடினால் ஒரு நாள் முழுவதும் ஓடும். ....  வாசனின் தீவிர முயற்சியால் படம் மனிதர்கள் பார்க்கும் அளவிற்கு சுருக்கப் பட்டது. சில காட்சிகள் சேர்க்கப் பட்டன.  படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு  ராஜாஜி அழைக்கப் பட்டார்.  ராஜாஜிக்கும் சினிமாவிற்கும் உள்ள உறவைப் பற்றி அசோக மித்திரன் சொல்கிறார்: ராஜாஜி போன்ற ஒரு நபரை ..அழைப்பது என்பது ..மொரார்ஜி தேசாயை சிகரட் பிடிக்கும் தம்பதியருக்கான போட்டிக்குத் தலைமை தாங்க வைப்பதைப் போன்றதாகும்.

ராஜாஜி படம் பார்த்தார். மௌனமாகப் பார்த்தார். ஒன்றும் கூறாமலே சென்று விட்டார். மறுபடியும் படம் திரைப்பட அரங்கில் ஓடிய போது டிக்கட் எடுத்துப் பார்த்தார்.  ராஜாஜி ஔவையார் படத்தை இருமுறை பார்த்தார் என்பதே செய்தியாகி விட்டது.  ஆனல் ராஜாஜி படத்தைப் பற்றி என்ன நினைத்தார்? அசோக மித்திரன் அதை கட்டுரையின் கடைசியில் சொல்கிறார்:

"ஔவையார் பார்த்தேன். டி.கே.சண்முகத்தின் நாடகம் இதைவிட நூறுபங்கு மேலானது.  இடி, மின்னல் புயல், வெள்ளம் போன்று ஸ்டாக் சீன்கள். யானைகள்
அணிவகுக்கின்றன. அட்டைக் கோட்டை விழுகிறது. ..படம் ரொம்ப சாதாரணமானது.ஆனால் இவ்வளவு பணம் செலவழித்துத் துணிச்சலாக எடுத்திருக்கும்போது ஒருவரால் எப்படி அதைக் கண்டனம் செய்ய முடியும்?"/ "

இதுதான் ராஜாஜி. எல்லாவற்றையுமே வித்தியாசமாக சிந்தித்த‌வர்.

22 வயது இளைஞனாக என் தந்தை ராஜாஜியின் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் ஊழியராகச் சேர்ந்து தன் 60 வயதுவரை அங்கேயே சேவை செய்தார். அங்கே கிடைத்த சொற்ப வருமானத்தில்தான் எங்களுக்கான உணவையும்,  கல்வியையும் கொடுத்தார்.என‌வே மற்றவர்களைக் காட்டிலும் எங்கள் குடும்பம் ராஜாஜிக்குக் கடன் பட்டது. எங்களுக்கு உப்பிட்டவ‌ர் அல்லவா? உள்ளளவும் நினைக்க வேண்டாமா?

Please read here:  http://gandhiashramkrishnan.blogspot.com/

நான் முதல் முதலில் நினைவு தெரிந்து ராஜாஜியைச் சந்தித்தது என்னுடைய 10 வயதில் நடந்தது.அப்போது அவர் சேலம் சிவசாமிபுரம் விரிவாக்கத்தில் அவர் பெயராலேயே அமைந்துள்ள 'சேர்மன் ராஜகோபாலாச்சாரி சாலை'யில், டாக்டர் சுந்தரம் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்தார்.அந்த வீட்டு மனை ராஜாஜி சேலத்தில் சொந்தமாக‌ வாங்கி வீடு கட்டி வாழ்ந்தது. அதனை டாக்டர் சுந்தரம் ராஜாஜியிடமிருந்து வாங்கி ஒரு பகுதியில் மருத்துவமனையும், ஒரு பகுதியில் தன் குடியிருப்புமாக மாற்றியிருந்தார். எப்போது சேல‌ம் வந்தாலும் தன்னுடந்தான் தங்க வேண்டும் என்று டாக்டர் ராஜாஜியைக் கேட்டுக் கொண்டிருந்ததை நினைவு கூர்ந்து அவருடன் ராஜாஜி தங்கியிருந்தார்.

குடும்பத்துடன் ராஜாஜியைக் காண அப்பாவுடன் சென்றோம்.கதர் சிட்டத்தால் ஆன நூல் மாலை எடுத்துச் சென்று இருந்தோம்.அதனைப் பிரித்தால் அது மீண்டும் மீண்டும் சுருண்டு கொள்ளும்.அதனை நன்கு இழுத்துப் பிடித்துக் கொண்டு கழுத்தில் அணிவிக்க வேண்டும் . சிறுவனான எனக்கு அந்த 'டெக்னிக்' தெரியவில்லை. சுருண்ட மாலையை அவர் தலை மேல் கொண்டு சென்றால் அது தலைக்குள் நுழைய மறுத்தது.தலை மீதே உட்கார்ந்து கொண்டது.

என் கன்னத்தைத் தட்டிய ராஜாஜி," மாலை போடச் சொன்னா கிரீடம் வைப்பது போலத் தலையில் வைத்துவிட்டாயே!"என்றார்.

பார்த்துக் கொண்டு இருந்த டாகடர் சுந்தரம்,"அவன் சரியாகத்தான் செய்துள்ளான். சக்ரவர்த்திக்குக் கிரீடம் சூட்டியுள்ளான்"என்றார்.

எல்லோரும் சிரித்தார்கள்.ராஜாஜி சிரிக்கவில்லை.

"எங்க தோப்பனார் பேரு சக்ரவர்த்தி ஐயங்கார்! அப்படித்தான் நான் சக்ரவர்த்தியானேன்.இப்பதான் ராஜாவெல்லாம் போயாச்சே..." என்றார் ராஜாஜி.

என் தந்தையாரைப் பார்த்து, "இன்னும் காந்தி ஆசிரமத்தில்தானே இருக்கே?" என்றார்.

அப்பா "ஆமாம் ஆமாம்! இப்போ ஆசிரமத்தின் சேலம் மெயின் டெப்பொவில் நிர்வாகியா இருக்கேன்" என்றார்.

பேசிக் கொண்டு இருந்த போதே அவருக்கு வந்து இருந்த நூல் சிட்ட மாலைகள் எல்லாவற்றையும் தன் வலக்கால் கட்டை விரலில் மாட்டிக் கொண்டு மீண்டும்
சிட்டமாக்கினார்.அம்மா தான் முறுக்கித் தருவதாக கூறிய போது 'வேண்டாம்' என்று தடுத்துத் தானே முறைப்படி முறுக்கினார்.

அன்றும் மறு நாளும் அவருக்கு சுமார் 300 சிட்ட மாலைகள் வந்திருக்கும். அவற்றை நூலின் மொத்தததினை வைத்து மெல்லியது, தடிமன் என்று நம்பர்
கணக்குப்படி பிரித்து எதை வேட்டியாக நெய்ய வேண்டும், எதை சட்டைத் துணியாக நெய்ய வேண்டும், எதை அங்கவஸ்திரமாக நெய்ய வேண்டும் என்று
தெளிவான விளக்கத்துடன் அப்பாவிடம் ஒப்படைத்தார் ராஜாஜி. எல்லோரும் வணங்கினோம். "நன்றாக இருங்கள்" என்று வாழ்த்தினார் ராஜாஜி.

குழந்தைகளை 'நன்னாப் படிக்கணும்'என்று கூறி ஆசீர்வதித்தார் பின்னர் நாங்கள் விடை பெற்றோம்.

நாங்கள் வீட்டிற்குத் திரும்பிய பின் தன்னை 'ஆசிரமத்தில்தானே இருக்கிறாய்' என்று ராஜாஜி கேட்டது தனக்கு ஒரு குட்டு என்று அப்பா சொன்னார்.

இள‌ வயதில் ஆசிரமத்தில் சேர்ந்த அப்பா அரசியலில் ராஜாஜியின் நிலைப்பாட்டை எதிர்த்துப் பேசி ஓரிரு முறை முர‌ண்பட்டு வெளியேறியிருக்கிறார். அதனை நினைவில் வைத்து அப்படி ஒரு கேள்வியைக் கேட்டதாக அப்பா விளக்கம் கொடுத்தார்.

மீண்டும் ராஜாஜியை அவர் காந்தி ஆசிரமத்திற்கு வருகை புரிந்த போது சந்தித்து உள்ளேன்.மிகவும் சூடான காப்பியைத் தன் கெட்டியான கதர் அங்க வஸ்திரத்தால் டம்பளரைச் சுற்றிப் பிடித்துக் கொண்டு அருந்துவதைப் பார்த்துள்ளேன்.அவரிடமே போய்,"தாத்தா, கை சூடு தாங்க முடியாமல் அங்க வஸ்திரத்தால் டம்பளரைப் பிடித்திருக்கிறீர்கள்.ஆனால் உங்கள் நாக்கு அந்த சூட்டைத் தாங்கிக் கொள்கிறதே!" என்று வியப்புட்ன் கேட்டுள்ளேன்.

"அதுதான் பயிற்சி என்பது நமக்குச் செய்யும் உபகாரம்" என்றார்

ஏற்கனவே "கிடைக்காமல் போன ஆங்கிலப் பேராசிரியர்" என்ற தலைப்பில் நான் வகுப்பறையில் எழுதிய ஆக்கத்தில் ராஜாஜி பற்றி இப்படி வருகிறது.

 "முத்த‌ண்ணாவின் திரும‌ண‌ நாள் அன்று மாலை மூத‌றிஞ‌ர் ராஜாஜியின் ஆசிக‌ளைப் பெற‌ அப்பா ம‌ண‌ம‌க்க‌ளைக் க‌ல்கி கார்ட‌னுக்கு அழைத்துச்
சென்றார்க‌ள்.வ‌ண‌ங்கி எழுந்த‌ அண்ண‌னைப் பார்த்து ராஜாஜி கேட்டார்:

"என்ன‌ ச‌ம்ப‌ள‌‌ம் வாங்க‌ற‌‌?"

அண்ண‌ன்: "500 ரூபா‌ய்".

ராஜாஜி :"மெட்ராஸ் ஊரில‌ இருக்க‌ற‌ விலை வாசியில‌ எப்ப‌டி குடித்த‌ன‌ம் ந‌ட‌த்துவ‌? வாட‌கைக் கொடுத்து, சாப்பாட்டுக்கு உன் ச‌ம்ப‌ள‌ம் ப‌த்தாது"

என்ன‌டா இப்ப‌டி ப‌ய‌ம் காட்டுகிறாரே என்று அண்ண‌னும் உட‌ன் சென்ற‌வ‌ர்க‌ளும் திகைத்துவிட்டார்க‌ள்.சிறிது நேர‌ மெள‌ன‌த்துக்குக்ப் பின்ன‌ர் ராஜாஜியே பேசினார்:" ந‌டைபாதை‌யில் குடும்ப‌ம் ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ளைப் பார்!அவ‌ர்க‌ளுக்கு ச‌ரியான‌ ஆடை, உணவு,இருப்பிட‌ம்,வ‌ச‌தி இல்லை.ஆனால் அவ‌ர்க‌ள் ஆணும் பெண்ணும் எவ்வ‌ள‌வு காத‌லுட‌ன் ப‌ழ‌குகிறார்க‌ள்! என‌வே உங்க‌ள் இருவ‌ருக்கும் இடையில் அன்பு ம‌ல‌ர‌வும் நிலைக்க‌வும்,ப‌ண‌ம், ச‌ம்ப‌ள‌ம்ஒரு த‌டையாக‌ இருக்காம‌ல் பார்த்துக் கொள்ளுங்க‌ள். காத‌லுக்குப் ப‌ண‌ம் தேவையே இல்லை."

அறிவுரை சொல்வ‌தையும் ஓர் அதிர்ச்சி வைத்திய‌ம் செய்து சொன்னார் பாருங்க‌ள், அதுதான் ராஜாஜி!

1967ல் காங்கிரசை அகில இந்திய அளவில் தோற்கடிக்க வியூகம் அமைத்தார் ராஜாஜி. தமிழகத்தில் அறிஞர் அண்ணாவுடன் கூட்டணி அமைத்து தனது சுதந்திரக் கட்சிக்காகவும், திமுக கூட்டணிக்காகவும் வாக்குக் கேட்டு 89 வயதில் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து ஊர் ஊராகச் சென்றார். அவருக்கு கூட்டம் சேராது என்று நினைத்து சினிமா கவர்ச்சிக்காக நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரனை திமுக அவருடன் அனுப்பியது.அப்போது சேலத்தில் அவர் உரையைக் கேட்டேன். 'காங்கிரஸுக்கு த‌ன்னைவிட்டால் யாரும் ஆள முடியாது என்ற எண்ணம் வந்துவிட்டது. இது ஜனநாயகத்துக்கு ஆபத்து. எனவே காங்கிரசுக்குப் பாடம் புகட்டுங்கள் "என்பது போல ஆணித்தரமாகப் பேசினார்.

1971 என்று நினைக்கிறேன். சென்னையில் தாசப்பிரகாஷ் ஓட்டலில் சுதந்திரக்கட்சியின் சென்னை மாவட்ட மகாநாடு நடந்தது. மினு மசானி, பிலு மோடி, என் ஜி ரங்கா, இறுதியாக ராஜாஜியும் பேசினார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்."என்னை 'ரியாக்ஷனரி' என்று இடதுசாரிகள் அழைக்கிறார்கள். அவர்களுக்கு அது என்ன பொருள் தருகிறதோ எனக்குத் தெரியாது.என்னைப் பொருத்த வரை நான் அவ்வப் போது நடக்கும் சம்பவங்களுக்கு மறு வினை ஆற்றுகிறேன்.எனவே 'ரியாக்ஷனரி' என்ற பெயரை ஏற்கிறேன்.நான் அடிக்கடி மாறிவிடுவதாகவும் கூறுகிறார்கள். கொள்கைகளில் மாற்றம் இல்லாமல் வாழ்க்கையைத் தள்ளிக்கொண்டு போக நான் என்ன கழுதையா? 0nly asses are consitent in this everchanging world" என்று பேசினார்.

அதன்பின்னர்1972 டிசம்பர் 26 ஆம் நாள் அவருடைய பூத உடலை ஊர்வலமாக எடுத்து வநத போது கிருஷ்ணாம்பேட்டை மயானத்தின் வாயிலில்  நின்று அப்பாவுடன் தரிசித்தேன்.

எம்ஜியார் கால்நடையாக ஊர்வலத்தின் முன்னால் நடந்து வந்தார். பெரியார் தன்னுடைய வேனின் மேலே அமர்ந்து எல்லோரும் காண  வந்தார்.மயானத்தில் எரியூட்டப்பட்ட ராஜாஜியின் உடலைப் பார்த்து பெரியார் கதறி அழுதாராம்.

27 டிசம்பர் 1972 அன்று காந்திசிலை அருகில் அவருடைய அஸ்தியை வைத்துக்கொண்டு எதிரில் இருக்கும் அகில இந்திய வானொலி நிலையக்காரார்கள் வருகைக்காகக் காத்திருக்க வேண்டி இருந்தது. எம் எஸ் அம்மா, கல்கி ராஜேந்திரன், ராஜாஜியின் மக‌ன் சி ஆர் நரசிம்மன், பிலு மோடி ஆகியவர்களுடன் நானும் அப்பாவும். ராஜாஜியின் அஸ்திக்கு வெயில் அடிக்கிறது என்று அவருக்கு நிழல் கொடுக்க அப்பாவின் அங்க‌வஸ்திரத்தை விரித்துப் பிடித்தோம். நான் ஒரு பக்கம் பிடிக்க அந்தப் பக்கம்
பிடித்தவர் கோபாலகிருஷ்ண காந்தி. அவர் ராஜாஜி, மஹாத்மாஜி இருவருக்கும் பேரன். சமீபத்தில் மேற்கு வங்க கவர்னராக இருந்தவர்.

ராஜாஜியைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் உங்களுக்கு மற்ற இடங்களில் கிடைக்கலாம். நான் என் அனுபவங்களை மட்டும் எழுதியுள்ளேன்.

வாழ்க வளமுடன்!
ஆக்கம்:கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Why shout?

A theology professor was teaching about proverbs 15:1. He asked his students, *"Why do we shout in anger?* Why do people shout at each other when they are upset?

The students thought for a while. One of them said, because we lose our calm, we shout for that. "But why shout when the other person is just next to you?" asked the professor.

"Isn't it possible to speak to him or her with a soft voice? Why do you shout at a person when you are angry?"

The students gave some other answers but none satisfied the professor. Finally he explained, *"When two people are angry at each other, their hearts psychologically distance themselves.* To cover the distance, they must shout to be able to hear each other. *The angrier they are, the stronger they will shout to hear each other through that great distance.*

Then the professor asked, *"What happens when two people fall in love? *They don't shout at each other but talk softly, why? *Because their hearts are psychologically very close.* The distance between them is very small. The professor continued, "When they love each other even more, what happens? They do not speak, only whisper and they even get even closer to each other in their love. Finally they even need not whisper, they only look at each other and that's all....

*So next time you shout to a loved one, know that you are creating distance between your heart and that person's heart. *

*Proverbs - A gentle answer turns away wrath, but a harsh word stirs up anger.

அனுப்பியவர்: S. சபரி நாராயணன், சென்னை
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

28 comments:

  1. அய்யர் இன்றைய வகுப்பிற்கு விடுமுறை

    ReplyDelete
  2. வகுப்பறை கண்மணிகள் அனைவருக்கும் கிறிஸ்த்துமஸ் நல் வாழ்த்துக்கள்

    தேவனே எங்களின்
    பாவங்களையும் பிழைகளையும்
    பொறுத்து மன்னிப்பாயாக.

    ReplyDelete
  3. KMRK வின் ராஜாஜி பற்றிய அனுபவக் கட்டுரைப் பகிர்வு நினைவுகூறல் நன்று..

    சக்கரவர்த்தி என்ற பெயர்க்காரணம் பற்றி இன்றுதான் தெரிந்து கொண்டேன்..

    ReplyDelete
  4. தேமொழி அவர்களின் மாஸ்கோ கதை, கட்டுரை வடிவிலே அமைந்திருந்தாலும் அவர் சொல்ல வந்த கருத்தை தெளிவாகவே சொல்லிவிட்டார்..கதைக்கரு பாரதிதாசனின் இருண்ட வீடு கதையை ஒத்திருந்தது..முரடன், முசுடனின் உள்மனத்து கனிவான இதயத்தைத் தோலுரித்துக் காண்பித்தார்..அவர்தம் கட்டுரையில் சொல்லியிருப்பது போலவே கதையாகவே எழுதியிருந்தால் இன்னும் ஆழமாக உணர்வுகளில் பதிந்திருக்குமே என்ற ஆதங்கம் பொதிந்த உணர்வு மட்டுமே கடைசியில் மேலிட்டது..முட்பலாவைத் தோலுரித்து பலாச்சுளையை கிறிஸ்துமஸ் விருந்து படைத்த தேமொழிக்கு நன்றி..

    ReplyDelete
  5. தனுசுவின் கவிதையில் தேடிவந்தவளை,நாடிவந்தவளை, காரணத்தைக் கடைசியில் கண்டதும் எனக்கொரு கேள்வி எழுகிறது..

    காலம் கடந்தபின்னும் கட்டியணைக்காமல்
    'விடைபெறவந்தாயோ?'
    என்ற கேள்வி ஏன் எழுந்தது என்பதுதான் அது..

    ReplyDelete
  6. என் ஆக்கத்தைப் பதிவேற்றிய ஆசிரியர் ஐயாவுக்கு நன்றி.

    ஆசிரியருக்கும் சக வாசகர்களுக்கும் பண்டிகைத்திருநாள் வாழ்த்துக்களையும், புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    அனைவரும் வாழ்க வளமுடன், வளர்க நலமுடன்.

    ReplyDelete
  7. அனைவருக்கும் க்ருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. எனது கவிதையை வெளியிட்டமைக்கு நன்றி அய்யா.

    இங்கு நான் பணிஎடுக்கும் கப்பலில் கிருஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நேற்று இரவிலிருந்தே தொடங்கி விட்டது. வகுப்பறைக்கு முழுமையாக வரமுடியவில்லை இடை இடையில் தான் வருகிறேன். சுமார் 200 பேர்கள் இருக்கும் இந்த கப்பலில் ஆங்கிலேயர்கள் சீனர்கள் தாய்லாந்து என்று கலந்து பல்லின மக்களும் பணியில் இருக்கிறார்கள். பொதுவாக இந்த கப்பல்களில் மற்ற பண்டிகை நாட்கள் விசேஷமாக இருக்காது ,கிறிஸ்த்துமஸ் மற்றும் புத்தாண்டு மட்டும் விசேஷமாக கொண்டாடுவோம்.

    இன்னும் யாருடைய ஆக்கங்களையும் படிக்கவில்லை, படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்

    ReplyDelete
  9. திரு ச‌ந்திரசேகர் அவர்களின் முதல் ஆக்கம்(வகுப்பறையில் என்று நினைக்கிறேன்.த்ருஷ்டம், அதிர்ஷ்டம்,துரதிர்ஷ்டம், தானம், தரமம் ஆகியவற்றை அழகுற விளக்கியுள்ளார். சமஸ்க்ருத அறிவு நிரம்பப் பெற்ற அவரிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம். வளர்க உங்கள் ஆக்கங்கள்.

    உமா என்றபெயர் எதேச்சையாக அமைந்ததா? இல்லை டெல்லிக்கார அம்மாவை மனதில் கொண்டு அமைந்ததா?

    தேமொழியின் ரஷ்ய மொழித் தழுவல் ஆக்கம் நல்ல கருத்துள்ளதாக அமிந்துள்ளது.

    கவிஞ‌ர் புருனை மன்னர் அவர்களின் கவிதை நாளுக்குநாள் மெருகேறி வருகிறது.மதுரசம், புதுவிஷம்,கைதட்டி, கைகட்டி என்ற யதுகை,மோனைகள் மிகவும் நன்றாக விழுந்துள்ளன.ஆனால் புதுக் கவிதையில் யதுகை மோனை வரக் கூடாதாமே?அப்படியா? கட்டுரைகள் பக்கம் வரலாமே!

    சபரியின் ஆங்கில ஆக்கமும் நன்று.இதுபோல் பிறருடையதை எடுத்து அனுப்பும் போது காப்புரிமைப் பிரச்சனை இல்லையா என்றும் ஆய்ந்து பின்னர் அனுப்ப வேண்டும்.

    என்னுடைய ஆக்கத்தை வெளியிட்டமைக்கு ஐயாவுக்கு நன்றி.ஐயா எடுத்து அமைத்துள்ள ராஜாஜியின் படத்தின் கீழ் கொடுத்துள்ள ராஜாஜியின் மறைந்த நாள் 25 ஆக்டோபர் 1972 என்று தவறாகக் கொடுத்துள்ளது.அது 25 டிசம்பர் 1972 என்பதே சரி.

    ReplyDelete
  10. திரு ச‌ந்திரசேகர் அவர்களின் முதல் ஆக்கம்(வகுப்பறையில் என்று நினைக்கிறேன்.த்ருஷ்டம், அதிர்ஷ்டம்,துரதிர்ஷ்டம், தானம், தரமம் ஆகியவற்றை அழகுற விளக்கியுள்ளார். சமஸ்க்ருத அறிவு நிரம்பப் பெற்ற அவரிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம். வளர்க உங்கள் ஆக்கங்கள்.

    உமா என்றபெயர் எதேச்சையாக அமைந்ததா? இல்லை டெல்லிக்கார அம்மாவை மனதில் கொண்டு அமைந்ததா?

    தேமொழியின் ரஷ்ய மொழித் தழுவல் ஆக்கம் நல்ல கருத்துள்ளதாக அமிந்துள்ளது.

    கவிஞ‌ர் புருனை மன்னர் அவர்களின் கவிதை நாளுக்குநாள் மெருகேறி வருகிறது.மதுரசம், புதுவிஷம்,கைதட்டி, கைகட்டி என்ற யதுகை,மோனைகள் மிகவும் நன்றாக விழுந்துள்ளன.ஆனால் புதுக் கவிதையில் யதுகை மோனை வரக் கூடாதாமே?அப்படியா? கட்டுரைகள் பக்கம் வரலாமே!

    சபரியின் ஆங்கில ஆக்கமும் நன்று.இதுபோல் பிறருடையதை எடுத்து அனுப்பும் போது காப்புரிமைப் பிரச்சனை இல்லையா என்றும் ஆய்ந்து பின்னர் அனுப்ப வேண்டும்.

    என்னுடைய ஆக்கத்தை வெளியிட்டமைக்கு ஐயாவுக்கு நன்றி.ஐயா எடுத்து அமைத்துள்ள ராஜாஜியின் படத்தின் கீழ் கொடுத்துள்ள ராஜாஜியின் மறைந்த நாள் 25 ஆக்டோபர் 1972 என்று தவறாகக் கொடுத்துள்ளது.அது 25 டிசம்பர் 1972 என்பதே சரி.

    ReplyDelete
  11. //சக்கரவர்த்தி என்ற பெயர்க் காரணம் பற்றி இன்றுதான் தெரிந்து கொண்டேன்..//

    மைனர்ஜி! ஐயங்கார்களில் 'நல்லான் சக்கரவர்த்தி' என்ற ஒரு பிரிவினர்.அந்தப்பிரிவைச் சேர்ந்தவர் ராஜாஜி.

    அவருடைய மூதாதையரில் ஒருவர் பெய‌ர் சக்கரவர்த்தி. அவர் ஒரு நல்ல காரியம் செய்ததால் 'நல்லான் சக்கரவர்த்தி' ஆனார். ஆதலால் அவருடைய வம்சாவளிக்கே 'நல்லான் சக்கரவர்த்தி' என்ற பெயர் வந்துவிட்டது. அப்படி என்ன நல்ல காரியம் செய்தார் அந்த நல்லான் சக்கரவர்த்தி?

    ஊரின் எல்லையில் ஒரு அநாதைப் பிணம் கிடந்தது.யாரோ வெளியூர் காரனுடைய பிணம். குலம் கோத்திரம் தெரிய வழியில்லை. எனவே அந்தப்பிணத்தினை எடுத்து எரிக்கவோ புதைக்கவோ யாரும் முன் வரவில்லை. அப்போது சக்கரவர்த்தி என்ற அந்த ஸ்ரீவைஷ்ணவர்(ஐயங்கார்) துணிந்து அந்தப் பிணத்தினைத் தொட்டு எடுத்து தகனம் செய்துவிட்டார்.இதனை அறிந்த அவர் சாதியினர் அவரை நீசனாகக் கருதி சாதிப் பிரஷ்டம் செய்துவிட்டனர். அவரும் ஊர் எல்லையில் போய் இருந்து கொண்டார்.

    அன்று இரவு அந்த ஊரில் கோவில் கொண்டுள்ள பெருமாள் எல்லா ஸ்ரீ வைஷ்ணவர்கள் கனவிலும் தோன்றி, "சக்கரவர்த்தி ஊருக்குப் பொல்லான்; எமக்கு நல்லான்" என்று திருவாய் மொழிந்து அருளினார்.அது முதல் அந்தக் குடும்பத்திற்கு இறைவன் கொடுத்த நல்லான் என்ற பட்டம் ஒட்டிக்கொண்டது. அந்தப் பட்டப் பெயருடன் அதனைப் பெற்ற தாத்தாவின் பெயரும் சேர்ந்து 'ந‌ல்லான் சக்கரவர்த்திக் குடும்பம்'என்று அறியப் படலானார்கள்.

    ராஜாஜி பொது வாழ்க்கையில் ஈடுபட்டு சாதி வித்தியாசம் பார்க்காமல் பழகுவதைப் பார்த்து கண்டித்த தந்தைக்கு ராஜாஜியே இக்கதையை எடுத்து
    நினைவுபடுத்துகிறார்.

    ReplyDelete
  12. //iyer said...
    அய்யர் இன்றைய வகுப்பிற்கு விடுமுறை//

    உன்களுக்கு மட்டுமா? எல்லோருக்குமா? ஐயாவே ஞாயிறு வகுப்பு உண்டு என்று சொல்லிய பிறகு நீங்கள் விடுமுறை அறிவிக்கலாமா?

    உங்களுக்கு மட்டும் அறிவித்துக் கொள்கிறீர்கள் என்று நான் புரிந்து கொள்கிறேன்.மேலும் சக மாணவர்களின் ஆக்கம் எதுவும் நன்றாக இல்லை; எனவே எந்தப் பாராட்டும் அளிக்கத் தயாராக இல்லை என்றா நிலைப் பாட்டைநீங்கள் எடுப்பதையும் நான் புரிந்துகொக்கிறேன்.

    அதுவும் சந்திரசேகர் புதிதாக வந்து வேறு நீங்கள் அறிந்துள்ள செய்திகளில் ஏதேதோ 'முர‌ண்பாடா'கக் கூறுகிறார்.

    எனவே நீங்கள் விடுமுறை உங்களுக்கு விட்டுக்கொள்கிறீர்கள்.

    என்னைப்போலவே எல்லோரும் புரிந்து கொள்ள முடியுமா?

    'விடுமுறை எல்லாம் இங்கே கேட்க வேண்டியது இல்லை இது ஒரு இணையதள வகுப்பு' என்று ஐயா சொல்லிய பின்னரும், விடுமுறை அறிவிப்புச்செய்ததால் இத்தனை எழுத வேண்டிவந்தது.

    ReplyDelete
  13. //. "த்ருஷ்ட்டம், அதிருஷ்ட்டம், துர்திருஷ்ட்டம்," என்று மூன்று வகை உண்டு.//
    சந்திரசேகர் அவர்களின் ஆக்கத்தின் மூலம் தந்தையிடமிருந்து "கீதை" உபதேசம் பெற்றது மகள் உமா மட்டுமல்ல நாங்களும் தான்...நல்ல அருமையான தத்துவ விளக்க ஆக்கத்தை தந்தமைக்கு நன்றி...

    தேமொழி சகோதரியின் ஆக்கம் மிகவும் அருமையாக இருந்தது...கதை சொல்வதே கலை தான்...நீங்கள் கதையை சுருக்கத்துடன் உங்கள் எழுத்து அழகான நடையால் நல்லதொரு ஆக்கத்தை தந்துள்ளீர்கள்.நன்றி

    ReplyDelete
  14. இந்த வாரம் என்னுடய ஆக்கத்தை பதிவேற்றிய ஆசிரியர் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
    KMRK அவர்களுக்கு மிக்க நன்றி. சரியான நேரத்தில் ராஜாஜியை பற்றி நினைவு கூறினதர்கு.
    எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    சந்திரசேகரன்

    ReplyDelete
  15. தனூர்ராசிக்காரன் அவர்களின் கவிதை சோகத்திலும் இனிமை...

    ஐயாவின் "ராஜாஜி" அவர்களின் பற்றிய ஆக்கம் என்னை போன்று தமிழ் பாடங்களின் மூலம்,அறிந்திடாத பல அருமையான நிகழ்வுகளை அழகாய் சொல்லியுள்ளீர்கள்...நன்றிகள் ஐயா.

    சபரி நாராயணன் அவர்களின் ஆக்கம் நன்றாகயிருந்தது...இப்பொழுது தான் புரிகிறது ஏன் விஞ்ஞானிகள் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்களாக இருக்கிறார்கள் என்று...இன்றைய பதிவுகள் அனைத்தும் "தத்துவ" சிந்தனையை ஒட்டியே சென்றதால் நான் மிகவும் ரசித்துப் படித்தேன்...

    வாத்தியார் ஐயாவுக்கும்,வகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. அய்யா
    உள்ளேன் வகுப்பில். ராஜாஜி பற்றி நல்ல தகவல்கள் . என்னுடைய இளமைக் காலம். திராவிடர் கட்சியும் தமிழும் முன் வரிசைக்கு வரக் காரணமானவர்.
    அருணாசலம்.

    ReplyDelete
  17. சுருக்கமாக சொல்வதானால் அதிருஷ்டம் என்பதை திணை விதைத்து திணை அறுப்பது என்பதாகவும், துர்திருஷ்டம் என்பதை வினை விதைத்து வினை அறுப்பது என்பாதவும் வைத்துக் கொள்ளலாம் அப்படிதானே.

    தேமொழி அவர்களின் கதையும் நன்றாக இருக்கிறது. அசல் கதை கிடைத்தால் படித்துப் பார்க்க வேண்டும்.

    தனுர்ராசிக்காரரின் கவிதையும் நன்று. முதலில் விளங்கவில்லை. ஒன்றுக்கு இரண்டு முறை படித்துப் பார்த்த பிறகுதான் எனக்கு விளங்கியது. கவிதைக்கும் எனக்கும் தூரம் அதிகம். அதனால்தான்.

    பெரியார் திரைப்படத்தில் ராஜாஜியை ஆச்சாரியார் என்றும் அழைப்பதைப் பார்த்தேன். நேரம் இருக்கும் போது அவருடைய வரலாறைப் படித்துப் பார்க்கிறேன். நம் ஆட்கள் சிறு பிரச்சினையைக் கூட அரசியலாக்கி அதில் தங்களுக்கு லாபம் கிடைக்குமா என்று பார்ப்பார்கள். குல கல்வி திட்டத்தை அரசியலாக்கியது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை.

    ReplyDelete
  18. csekar அவர்களின் அதிர்ஷ்டம், தர்மம், நன்றாக இருந்தது. குழந்தைகளிடம் தானம் தர்மம் பற்றி பேசுவது அவர்களின் மனதிலும் ஈகையை வளர்க்கும்.

    தேமொழி அவர்களின் மாஸ்கோ கதை கிறிஸ்துமசுக்கு மிக பொருத்தம்.நேரடி நடையில் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  19. kmrk அவர்களின் ராஜாஜி நினைவுகள் பொருத்தமான பகிர்வு.

    kmr.krishnan said...
    கவிஞ‌ர் புருனை மன்னர் அவர்களின் கவிதை நாளுக்குநாள் மெருகேறி வருகிறது.மதுரசம், புதுவிஷம்,கைதட்டி, கைகட்டி என்ற யதுகை,மோனைகள் மிகவும் நன்றாக விழுந்துள்ளன.ஆனால் புதுக் கவிதையில் யதுகை மோனை வரக் கூடாதாமே?அப்படியா? கட்டுரைகள் பக்கம் வரலாமே!

    நான் கவிதை எழுதவே அறியாதவன் .ஆனால் பள்ளி நாட்களிலிருந்தே அடுக்கு மொழியில் நான்கு ஐந்து வார்த்தைகள் பேசி விடுவேன். நண்பர்கள் கை தட்டுவார்கள்.எதையாவது படிக்கும் போது அல்லது பார்க்கும் போது மனைதை தொடும் அதை பற்றி அப்படியே இரண்டு வரிகள். பேசுவேன் .இவ்வளவுதான் என்னுடைய அறிவு. கணினியில் தட்டச்சு செய்வதால் வல்லின மெல்லின பிழைகள் வரும் அத்துடன் இரண்டு வார்த்தைகளுக்கு இடையில் க், ப் பிழைகள் வரும்.அத்தனை எல்லாம் வாத்தியார் சரி செய்தே வெளியிடுவார்கள்.சமயத்தில் சிலவார்த்தைகளை சேர்த்து குறைத்து நன்கு மெருகு ஏற்றிவிடுவார்.

    மரபு கவிதைக்கு நிறைய தமிழ் அறிவும் இலக்கியங்களும் தெரிந்திருக்கவேண்டும். அது நமக்கு சரி வராது.

    அம்மா எனக்கு பசிக்கிறது என்று சொல்வதை மூன்று வரியில் எழுதினால் அதுதான் புதுக்கவிதை .அதைதான் நான் செய்கிறேன்.

    கட்டுரை பக்கம் என்றால் நிறைய படிக்க வேண்டும்.நிறைய சித்திக்க வேண்டும். தற்போதைக்கு நேரமில்லை.தாங்களின் அழைப்பை ஏற்று முயற்சி செய்கிறேன்.

    சபரிக்கு ஒரு சபாஷ்

    ReplyDelete
  20. minorwall said...

    தனுசுவின் கவிதையில் தேடிவந்தவளை,நாடிவந்தவளை, காரணத்தைக் கடைசியில் கண்டதும் எனக்கொரு கேள்வி எழுகிறது..

    காலம் கடந்தபின்னும் கட்டியணைக்காமல்
    'விடைபெறவந்தாயோ?'
    என்ற கேள்வி ஏன் எழுந்தது என்பதுதான் அது..

    மைனர் சார், காதலி வேறு ஒருவனுடன் திருமணம் முடித்து காதலனிடம் விடை பெற வருகிறாள். விடை பெற வந்த இடத்தில் கட்டிபுடி கட்டிபுடிடா கண்டபடி கட்டிபுடிடா என்றா பாடமுடியும் .

    அணைத்து வரிகளையும் ஒரு மணிநேர யோசனையிலேயே மனதில் இறுத்தி விட்டேன். கல்யாணம் முடிந்து விட்ட சோக செய்தியை படிப்பர்வகளுக்கு தெரிவிக்கவேண்டும். அந்த "மெட்டி போட்டதாலா "? என்ற வரி கிடைக்க ஒரு நாள் முழுக்க ஆனது

    நன்றி மைனர் சார்.

    ReplyDelete
  21. /////thanusu said...
    மைனர் சார், காதலி வேறு ஒருவனுடன் திருமணம் முடித்து காதலனிடம் விடை பெற வருகிறாள். விடை பெற வந்த இடத்தில் கட்டிபுடி கட்டிபுடிடா கண்டபடி கட்டிபுடிடா என்றா பாடமுடியும் .
    ///////

    'உயிர்நீயே என்றுரைத்த
    என்னுயிரே - இன்று
    உயிரற்று வந்தாயோ
    உயிரின்றி நிற்கும் எனைப்பார்க்க.
    ---தனுசுராசிக்காரன்'

    என்றிருந்த இந்த கவிதை வரிகளை உண்மை என்று நான் நம்பிவிட்டதுதான் அந்தக் கேள்வி எழக் காரணம்..
    இருவருமே உயிரற்ற நிலையிலே ஆவியாக ஆத்ம சங்கமத்தின் ஆரம்பமாக சென்ற பிறவியில் சேராமல் பிரிந்துவிட்ட தங்கள் காதல் குறித்துப் பேசிக்கொள்கின்றனரோ என்று கணக்குப் போட்டுவிட்டேன்..
    அதனாலேயே 'விடைபெற வந்தாயோ' என்ற கேள்வி ஏனோ என்று கேட்டிருந்தேன்..
    வேறொருவனைத் திருமணம் செய்தவள் காதலனைத் தேடி வருவது நல்ல மரபல்லவே..அந்த எண்ணத்தால் தன் இன்னுயிரை மாய்த்துத் தன் உயிர்க்காதலனைத் தேடி, நாடி, இணையவேண்டி வந்திருந்ததாக கற்பித்துக் கொண்டேன்..
    அதனால்தான் கடந்த காலம் என்று சென்ற பிறவியைக் குறிப்பிட்டேன்..இந்த நிலையிலாவது ஆலிங்கனத்துக்கு ஆயத்தனம் பண்ணாமல் ஏன் டைம் வேஸ்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்றே கொஞ்சம் ஆதங்கத்துடன் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்..
    கவிஞர்கள் பாதி பொய்யர்கள்(கவிதையில்) என்பதை மறந்துவிட்டேன்..
    இதுக்குத்தான் கவிதை படிக்கிறதே இல்லே..
    நானொன்று நினைக்க கவிஞர் ஒன்றை நினைத்திருப்பார்..
    தமிழ்விரும்பியின் அன்னைத்தமிழ் பக்கமே தலை காட்டாத காரணமும் இதுதான்..

    ReplyDelete
  22. உன்களுக்கு மட்டுமா? எல்லோருக்குமா? ஐயாவே ஞாயிறு வகுப்பு உண்டு என்று சொல்லிய பிறகு நீங்கள் விடுமுறை அறிவிக்கலாமா?

    When it is said
    "அய்யர் இன்றைய வகுப்பிற்கு விடுமுறை"

    It is is very much clear that Iyer is on Leave today. and no need for explanation from any one where no one is asked for.. and

    ///உங்களுக்கு மட்டும் அறிவித்துக் கொள்கிறீர்கள் என்று நான் புரிந்து கொள்கிறேன்.///

    moreover all the other students are well known to understand than as you said (earlier)you are .

    ///மேலும் சக மாணவர்களின் ஆக்கம் எதுவும் நன்றாக இல்லை; எனவே எந்தப் பாராட்டும் அளிக்கத் தயாராக இல்லை என்றா நிலைப் பாட்டைநீங்கள் எடுப்பதையும் நான் புரிந்துகொக்கிறேன்//

    In fact you have suggested Iyer to take leave earlier on Friday and Sunday.

    ///'விடுமுறை எல்லாம் இங்கே கேட்க வேண்டியது இல்லை இது ஒரு இணையதள வகுப்பு' என்று ஐயா சொல்லிய பின்னரும், விடுமுறை அறிவிப்புச்செய்ததால் இத்தனை எழுத வேண்டிவந்தது.//

    When the leave is granted it is permission
    If it is taken then it is information

    and it is been given not only to inform the class; but to inform you particularly, since you have suggested Iyer to take leave on Sunday.

    Let us not boast ourselves..!!
    Every others have better in other way.!!

    It needs to make it in record, and so this explanation and reply..!!

    ReplyDelete
  23. ஐயா வணக்கம்.

    25 ம் தேதி வகுப்பறையில் பாடம்கள் வரும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை ஐயா . தங்களுடைய மனதே தனிதான் நன்றிகள் பல!.

    ReplyDelete
  24. ஆசிரியர் ஐயாவின் முன்யோசனைக்கு நன்றி. மீண்டும் வகுப்பு தொடங்கும் வரை "பல்சுவை" பகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறேன். பல சிறுகதைகளும், நகைச்சுவை, ஆன்மிகம், இலக்கியம், ஜோதிட பக்கங்கள் யாவும் இருக்கின்றன. எனக்கு பிடித்ததது தத்துவப் பதிவுகள், குறிப்பாக "நல்லவையும் கெட்டவையும் எல்லா நாடுகளிலும் உள்ளன" என்பது போன்ற கருத்துக்கள் நிறைந்த பதிவுகள்.

    இந்த மாணவர் மலர் ஆக்கங்கள் அனைத்தும் (ஸ்ரீஷோபனா குறிப்பிட்டதுபோல்) தத்தவ சிந்தனைகளுடன் இருப்பதால் இந்த ஆக்கங்களும் அனைத்தும் எனக்குப் பிடித்திருந்தது (என்னுடையது உட்பட...ஹி..ஹி..ஹீ ஏற்கனவே அது எனக்குப் பிடித்த கதைதானே).

    எஸ்.சந்திரசேகரன், KMRK ஐயா, சபரி ஆகியோரின் ஆக்கங்கள் மூலம் புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன் நன்றி. வழக்கம் போல் தனுசுவின் கவிதை சொல்லழகுடன் இருந்ததது. மனதையும் பாதித்தது. நான் காதலர்கள் இருவருமே இறந்துவிட்டதாக தவறாக எண்ணியதன் விளைவு அது. நல்ல கவிதைக்கு தனுசுவுக்கு நன்றி.

    ReplyDelete
  25. ///minorwall said...
    ..முட்பலாவைத் தோலுரித்து பலாச்சுளையை கிறிஸ்துமஸ் விருந்து படைத்த தேமொழிக்கு நன்றி..///

    ///kmr.krishnan said...
    தேமொழியின் ரஷ்ய மொழித் தழுவல் ஆக்கம் நல்ல கருத்துள்ளதாக அமிந்துள்ளது. ///

    ///R.Srishobana said...
    தேமொழி சகோதரியின் ஆக்கம் மிகவும் அருமையாக இருந்தது...///

    ///ananth said...
    தேமொழி அவர்களின் கதையும் நன்றாக இருக்கிறது. அசல் கதை கிடைத்தால் படித்துப் பார்க்க வேண்டும்.///

    ///thanusu said...
    தேமொழி அவர்களின் மாஸ்கோ கதை கிறிஸ்துமசுக்கு மிக பொருத்தம்.நேரடி நடையில் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.///

    என்னுடைய ஆக்கத்தைப் படித்தவர்களுக்கும், படித்து பின்னோட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.....நன்றி....

    ReplyDelete
  26. ananth said...
    முதலில் விளங்கவில்லை. ஒன்றுக்கு இரண்டு முறை படித்துப் பார்த்த பிறகுதான் எனக்கு விளங்கியது.

    minorwall said...இதுக்குத்தான் கவிதை படிக்கிறதே இல்லே..
    நானொன்று நினைக்க கவிஞர் ஒன்றை நினைத்திருப்பார்..
    தமிழ்விரும்பியின் அன்னைத்தமிழ் பக்கமே தலை காட்டாத காரணமும் இதுதான்..

    தேமொழி said...தனுசுவின் கவிதை சொல்லழகுடன் இருந்ததது. மனதையும் பாதித்தது. நான் காதலர்கள் இருவருமே இறந்துவிட்டதாக...

    என் மனைவி சொன்னது// கடைசி நான்கு வரிகளில் நீங்கள் சொல்லவந்ததை தெளிவாக சொல்லவில்லை.

    ஆக ஒரு குழப்பமான கவிதையை வலையேற்றி உள்ளேன். இப்படி எழுதினால் எப்படி பின்னூட்டங்கள் வரும்?
    அடுத்தமுறை இந்த தவறுகள் வராமல் பார்த்துகொள்கிறேன்.ஆனால் தவறுகளை சுட்டிக் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  27. //but to inform you particularly, since you have suggested Iyer to take leave on Sunday.//

    This is out of context.

    //Let us not boast ourselves..!!
    Every others have better in other way.!!//

    I only want you to share 'the other in you'.I am trying to bring out you from your moorings and make the youngsters to know a new subject in which you may be an expert.

    I also wish your language to be plain and straight forward.

    If these two are done, I am off.

    If you are a critic only, you are welcome to be one.But play that role in a methodical way. That is my request.

    ReplyDelete
  28. ///I only want you to share 'the other in you'.I am trying to bring out you from your moorings and make the youngsters to know a new subject in which you may be an expert.///

    சொல்லித் தருவது வேறு
    படித்துக் கொள்வது வேறு

    எண்ணங்களை பகிர்ந்து கொண்டு
    வருவது பலருக்கும் தெரியும்

    புரியாத சிலபேர்களுக்காக
    பூச்சான்டி என்றால் யார் என்ன செய்ய

    இளையவர் பட்டியலில்
    இன்னமும் யார் எல்லாம்,

    அது சரி
    இளையவர் என்பவர் யார்?
    திறமையானவர் என்பதற்கு என்ன பொருள் ,,?

    குழப்பமில்லாமல்
    தெளிவாக பேசுவோம் நண்பரே...


    ///I also wish your language to be plain and straight forward.///

    தெளிவாகவே நேர்மறையாகவே உள்ளது..
    தாழ்வு மனப்பாண்மை உள்ள சிலருக்கு அது தன்னை சொல்வதாகவே தெரிகிறது..

    மாற்றங்கள் வரும் வரை காத்திருப்போம் நன்மைகள் கிடைத்திட

    ///If these two are done, I am off.///
    இந்த வகுப்பறை ஒருவருக்காக அல்ல..
    ஒருவரை திருப்தி செய்யவும் அல்ல..

    அவரவர் எண்ணப் பதிவுகளை
    அவரவர் அறிவு நிலைக்கு ஏற்ப

    பதிவு செய்யலாம் அதனை அப்படியும்
    புரிந்து கொள்ளலாம்

    மாணவர்கள் நிலையை
    தம்ம பதத்தில் புத்தர் இப்படி

    கிளி,எருமை ,அன்னம் என
    பாகுபடுத்தி சொல்லுவர்.

    ஒரே செய்தியை இருவர் வேறு நிலையில் இருந்து பார்க்க முடியும்

    அதையும் ஒருவரே இரு வேறு நிலையில் இருந்து பார்க்க முடியும்..

    இன்னமும் விளக்கி சொல்ல
    இது பின் ஊட்ட பகுதி என்பதால் அமைதி கொள்கிறோம்..

    ///If you are a critic only, you are welcome to be one.But play that role in a methodical way. That is my request.///

    அன்று அப்படி ..
    அதன் பிறகு இப்படி..
    இன்று விமர்சகர்...

    நாம் நிறங்களோடு பழகலாம்
    நம் நிறம் மாறுமா..


    மாசில்லா அன்பினை
    தவழ விட்டு

    மனம் கரும் இந்த பாடலினை
    சுழல விட்டு..

    புள்ளிகளை வைத்து விட்டு
    புறப்படுகிறோம்..

    ஆறு மனமே ஆறு
    அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

    தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
    தெய்வத்தின் கட்டளை ஆறு

    ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
    உள்ளத்தில் உள்ளது அமைதி

    இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
    இறைவன் வகுத்த நியதி

    சொல்லுக்குச் செய்கை பொன்னாகும்
    வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்

    இந்த
    இரண்டு கட்டளை அறிந்த மனதில்
    எல்லா நன்மையும் உண்டாகும்

    உண்மையைச் சொல்லி நன்மையைச்
    செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் -

    நிலை
    உயரும் போது பணிவு கொண்டால்
    உயிர்கள் உன்னை வணங்கும்

    பணிவு என்பதும் பண்பாகும்
    உண்மை என்பது அன்பாகும்

    இந்த
    நான்கு கட்டளை அறிந்த மனதில்
    எல்லா நன்மையும் உண்டாகும்

    ஆசை கோபம் களவு கொள்பவன்
    பேசத் தெரிந்த மிருகம்

    அன்பு நன்றி கருணை கொண்டபவன்
    மனித வடிவில் தெய்வம் - இதில்

    இந்த
    ஆறு கட்டளை அறிந்த மனது
    ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com