மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

16.12.11

பள்ளியெழுந்து எப்போது வருவார்?

 பள்ளியெழுந்து எப்போது வருவார்?

நாளை மார்கழித் திங்கள் துவங்குகிறது. இறையுணர்வு மேலோங்குவதற்காக உள்ள மாதம். அனுதினமும் ஒரு ஐந்து மணித்துளிகளாவது  இறைவனைப் பிரார்த்தனை செய்து அவன் அருளைப் பெறுவோம். இறைப் பாடல்களை மனனம் செய்வோம்!

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அற்புதப் பாடல் ஒன்றை உங்களுக்காக இன்று வலை ஏற்றியிருக்கிறேன்.
இந்தப் பாடல் தஞ்சாவூர் பெரியவருக்கு சமர்ப்பணம்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------
சரி, பள்ளியெழுந்து எப்போது வருவார்?
நீங்கள் அழைத்தால் எப்போது வேண்டுமென்றாலும் வருவார்! மனம் உருக பக்தியோடு அழைக்க வேண்டும்!

மனம் உருகவா - அதெப்படி?

அதுதானே கஷ்டம்!
அனுஷ்கா சர்மாவிற்காக உருகுவோம்.
போயஸ் தோட்டத்து வீடுகள் என்றால் உருகுவோம்.
இன்னோவா வாகனத்திற்கு உருகுவோம்.
வேலைபார்க்கும் நிறுவனத்தில் மேலாளர் பதவி கிடைக்க உருகுவோம்.
ஆனால் இறைவனுக்காக உருகுவதா?
கஷ்டம்(டா) சாமி!
-----------------------------------------------------------------------------------------------


                                                       பாடலின் காணொளி வடிவம்
                                                               --------------------------------------------------------------------------------------------
பாடலின் வரி வடிவம்

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா

உலகினைப் பாய் போல் கொண்டவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா - அன்று
உரலுடன் நடந்த கண்ணனும் நீயே
ஸ்ரீமந் நாராயணா
இரணியன் அகந்தை அழித்தவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா - அன்று
இந்திர வில்லை முறித்தவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா

கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே
அறியாயோ நீயே? - அவள்
கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ?
ஸ்ரீமந் நாராயணா
தேவர்கள் உன்தன் குழந்தைகளன்றோ
மறந்தாயோ நீயே? - உன்
தெய்வ முனிவரைக் காப்பத்தற்கென்றே
வருவாயோ நீயே?

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா

தோளிலந்த சாரங்கம் எடுத்து வரவேண்டும் நீயே - கணை
தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை
அழித்திடுவாய் நீயே
அநந்த சயனத்தில் பள்ளியெழுந்து வாராய் திருமாலே உன்
அன்பரை யெல்லாம் துன்பத்திலிருந்து
காப்பாய் பெருமாளே

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா

சதங்கு படைகளென
எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள்
நாரயாணன் என் தலைவனின் துணையால்
போர்க்களம் வாருங்கள்
வானம் இடிபடவும் பூமி பொடி படவும்
வேல் கொண்டு வாருங்கள் - இனி
வருவது வரட்டும் முடிவினைப் பாரிப்போம்
தேவர்கள் வாருங்கள்
ஸ்ரீமந் நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா
வருவாய் திருமாலே துணை தருவாய் பெருமாளே!


பாடல்: திருப்பாற் கடலில்
திரைப்படம்: ஸ்வாமி ஐயப்பன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன்
இசை: தேவராஜன்
ஆண்டு: 1975

வாழ்க வளமுடன்!

29 comments:

kmr.krishnan said...

அருமையான பாடலைய்யா! நினைவூட்டியதற்கு நன்றி. மார்கழி முழுதும் மனதில் சுழலும்.

உலகினையே பாய் போல் சுருட்டியதாகக் கவிஞர் பாடியுள்ளார்.

ஆழ்வார்கள் 'பைந்நாகப்பாய் சுருட்டிக்கொள்' என்றும் 'பைந்நாகப்பாயை மீண்டும் விரித்துக்கொள்' என்றும் தான் பாடியுள்ளார்கள்.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
அருமையான பாடலைய்யா! நினைவூட்டியதற்கு நன்றி. மார்கழி முழுதும் மனதில் சுழலும்.
உலகினையே பாய் போல் சுருட்டியதாகக் கவிஞர் பாடியுள்ளார்.
ஆழ்வார்கள் 'பைந்நாகப்பாய் சுருட்டிக்கொள்' என்றும் 'பைந்நாகப்பாயை மீண்டும் விரித்துக்கொள்' என்றும் தான் பாடியுள்ளார்கள்.////

ஆழ்வார்கள் பாடல்களைப் படித்த உந்துதலில் கவியரசர் நிறையப் பாடல்களை எழுதியுள்ளார். அதை அவரே சொல்லியும் இருக்கிறார்.
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

Thanjavooraan said...

பாடலை எனக்கு அர்ப்பணம் செய்தமைக்கு என்ன கைமாறு செய்வேன்! நன்றி. பாடலைப் படிக்கும்போதே ஜேசுதாசின் இனிமையான குரலில் அந்தப் பாடல் காதில் ஒலிக்கிறது. மார்கழி பீடுடை மாதம். அதனை நம்மவர் சிலர் 'பீடை' மாதம் என்று சொல்வார்கள். பெண்கள் குறிப்பாக திருமணமாகாத பெண்கள் நோன்பிருந்து கண்ணனை வழிபடும் வழக்கம் நம் நாட்டில் இருந்து வருகிறது. கண்ணதாசனின் சொற்களில் ஆழ்வார்களின் எண்ணங்கள் சுவையோடு வெளிப் படுகின்றது. அருணகிரிநாதரின் ஆதிநாள் வாழ்க்கையில் மாசுபடிந்திருந்தது. முருகன் ஆட்கொண்டு அவரைத் தன்னைப் பாடவைத்தான். கண்ணதாசனும் 'வனவாசம்' முடிந்தபின் மனவாசத்துக்கு வந்து இறவா பாடல்களை நமக்காக ஆக்கித் தந்தார். காலத்தால் அழியாத அற்புதப் பாடல்கள். வாழ்க. மீண்டும் நன்றி.

Thanjavooraan said...

ஆனந்தக் கூத்தாடும் இந்த அற்புத ஆப்பிரிக்கக் குழந்தைகளின் புகைப்படம் மிக அருமை. பூமிப் பந்தில் எந்தப் பகுதியில் இருந்தால் என்ன. சுகபோக வாழ்வோ, கட்டாந்தரையில் புரளும் ஏழ்மை நிலையோ, பசிக்கு உணவின்றி தவிக்கும் பரிதாப நிலையோ எங்கும் மனித மனங்களின் ஆனந்தத்திற்குத் தடையே கிடையாது என்பது இந்த அரைகுறை ஆடை அணிந்த சிறார்களின் மகிழ்ச்சியில் தெரிகிறது அருமையான படம்.

SP.VR. SUBBAIYA said...

////Blogger Thanjavooraan said...
பாடலை எனக்கு அர்ப்பணம் செய்தமைக்கு என்ன கைமாறு செய்வேன்! நன்றி. பாடலைப் படிக்கும்போதே ஜேசுதாசின் இனிமையான குரலில் அந்தப் பாடல் காதில் ஒலிக்கிறது. மார்கழி பீடுடை மாதம். அதனை நம்மவர் சிலர் 'பீடை' மாதம் என்று சொல்வார்கள். பெண்கள் குறிப்பாக திருமணமாகாத பெண்கள் நோன்பிருந்து கண்ணனை வழிபடும் வழக்கம் நம் நாட்டில் இருந்து வருகிறது. கண்ணதாசனின் சொற்களில் ஆழ்வார்களின் எண்ணங்கள் சுவையோடு வெளிப் படுகின்றது. அருணகிரிநாதரின் ஆதிநாள் வாழ்க்கையில் மாசுபடிந்திருந்தது. முருகன் ஆட்கொண்டு அவரைத் தன்னைப் பாடவைத்தான். கண்ணதாசனும் 'வனவாசம்' முடிந்தபின் மனவாசத்துக்கு வந்து இறவா பாடல்களை நமக்காக ஆக்கித் தந்தார். காலத்தால் அழியாத அற்புதப் பாடல்கள். வாழ்க. மீண்டும் நன்றி./////

பாடல் கோபாலனைப் பற்றியது. உங்கள் பெயரும் கோபாலன். அதனால் அர்ப்பணம் செய்தேன் என்று சிலர் நினைத்துக் கொள்வார்கள். காரணம் அதுவல்ல. வகுப்பறையின் மூத்த மாணவர் நீங்கள். அத்துடன் எங்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர். அதனால்தான் அர்ப்பணித்தேன்.

SP.VR. SUBBAIYA said...

////Blogger Thanjavooraan said...
ஆனந்தக் கூத்தாடும் இந்த அற்புத ஆப்பிரிக்கக் குழந்தைகளின் புகைப்படம் மிக அருமை. பூமிப் பந்தில் எந்தப் பகுதியில் இருந்தால் என்ன. சுகபோக வாழ்வோ, கட்டாந்தரையில் புரளும் ஏழ்மை நிலையோ, பசிக்கு உணவின்றி தவிக்கும் பரிதாப நிலையோ எங்கும் மனித மனங்களின் ஆனந்தத்திற்குத் தடையே கிடையாது என்பது இந்த அரைகுறை ஆடை அணிந்த சிறார்களின் மகிழ்ச்சியில் தெரிகிறது அருமையான படம்.////

உண்மைதான். மனதை நெகிழச் செய்யும் படம். அதனால்தான் வலையில் ஏற்றினேன். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கோபாலன் சார்!

Sathish K said...

ஐயா காலை வணக்கம்.

பாடலுக்கு நன்றிகள் பல.

ஐயா ஒரு வேண்டுகோள்.! நாளை முதல் முப்பது நாட்களுக்கு தினமும் ஒரு திருப்பாவை பாடலை பதிவேற்றுமாறு வேண்டுகிறேன் ஐயா.
நன்றிகள் பல ஐயா.

ananth said...

முன்பு நோய்வாய்பட்டிருந்த போது சரியாக தூங்க முடியாது. தூங்க முடியாத காரணத்தால் வெறுத்துப் போய் அதிகாலையிலேயே எழுந்து, காலை கடன்களை முடித்து விட்டு, இறைவழிபாடு, ஜபம் என்று ஆரம்பித்து விடுவேன். இப்போது உடல் நலமான பிறகு காலை 7 மணிக்கு முன் எழுவதே சிரமமாக இருக்கிறது. நன்றாக இழுத்து போர்த்தி கொண்டு தூங்கதான் விருப்பமாக இருக்கிறது. இந்த மார்கழி மாதத்திலாவது மீண்டும் அதிகாலையில் எழும் பழக்கத்தை கொண்டு வர எண்ணியுள்ளேன். மனம் உண்டானால் மார்க்கமுண்டு.

தமிழ் விரும்பி said...

ஆனந்தமளிக்கும் ஆனந்தன் பாடல்
ஆனந்தக் கூத்தாடும் அந்த சிறு
குழந்தைகளில் நடுவில் நின்றாடும்
குழந்தையே அதிகம் கண்ணையும்
கருத்தையும் கவர்கிறது....

மாதங்களில் நான் மார்கழி என்றான் மகாபிரபு
அப்படி இருக்க அது ஏன்? 'பீடை மாதம்'
திறக்காத கோவில்கள் எல்லாம் திறந்திருக்கும்
சொர்க்கவாசல் திறப்பு என்ற வைபவமும் நடைபெறும்
இந்த மாதத்தை பீடுடைய மாதம் (பெருமை பொருந்திய மாதம்)
என்றால் தானே சிறப்பாக இருக்கும்...

கண்ணதாசனின் பாடல் ஜேசுதாசின் குரலில்
அமிழ்தினும் இனியதாக இதயம் இனித்தது.

பதிவிற்கு நன்றிகள் ஐயா!

தேமொழி said...

ஏசுகாவியம் வழங்கிய கண்ணதாசன் எழுதியதை
ஐயப்பதாசனான ஏசுதாசன் பாட முருகதாசனான
ஐயா பதிவேற்றியுள்ளீர்கள்.
இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன் ..என்றார் கவிஞர்.
கவிதைகள் வழங்கிய கவிதை இன்று பதிவில்
பாடலின் எளிய வரிகளும் பாடுபவரின் அமைதியான குரலும் இன்று நாள் முழுவதும் மனதில் ரீங்காரமிடப் போகிறது.
வணக்கமும், நன்றியும் ஐயா

தேமொழி said...

ஐயா எனக்கு எல்லா படங்களுமே பிடித்துள்ளன.
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் என்று பாடும் குழந்தைகளில், நடுவில் இருக்கும் கண்களில் சிரிப்பும் குறும்பும் கலந்து மின்னும் சிறுவனை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, ரோஹிணி நடச்சதிரத்தில் பிறந்திருப்பானோ? உழைத்துக்(?) கலைத்து தூங்கும் சிறுமியும், காலை/மாலைக் கதிரோனும் அழகு. கோவைக்காரர்கள் வடக்கில் நெடுஞ்சாலை பொதுப் பணித்துறையிலும் வேலையில் இருப்பார்கள் போலிருக்கிறது. என்ன ஒரு லொள்ளு :-)

sanjay said...

ஐயா,
இன்றேதான் புகைப்படம் 1ன் மூலம் ’நக்கல்’ என்ற வார்த்தையின் அர்த்தம் புரிந்துகொண்டேன். அதாவது,
அது வெறும் ‘கல்’ இல்லை நக்’கல்’ என்று !!

சஞ்சை ராமநாதன்
சேலம்

thanusu said...

கறுப்பின குழந்தைகளின் கும்மாளமும்
ஐரோப்பிய குழந்தையின் தூக்கமும்
உங்களால் வாய் விட்டு சிரிக்க முடியுமா?
நின்ற நிலையில் உறங்க முடியுமா?.
என்றே நம்மை ஏளனம் செய்கிறது.

முடியாமைக்கு மன்னிக்கவும் தெய்வங்களே
பணம் தேடும் வயதில்
பாழாகிக்கொண்டு இருக்கிறோம்.
உங்கள் வயதை ஏன் கடந்து வந்தோம்
என்கிற ஏக்கம் இருந்தாலும் ,

ஒரேஒரு ஆறுதல்
உங்களைப் போலவே
எங்கள் பிள்ளைகளும் கவலையின்றி
ஓடி விளையாடி உறங்குவார்கள்.
என்பதை தவிர வேறென்ன நான் சொல்ல.

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Sathish K said...
ஐயா காலை வணக்கம்.
பாடலுக்கு நன்றிகள் பல.
ஐயா ஒரு வேண்டுகோள்.! நாளை முதல் முப்பது நாட்களுக்கு தினமும் ஒரு திருப்பாவை பாடலை பதிவேற்றுமாறு வேண்டுகிறேன் ஐயா.
நன்றிகள் பல ஐயா.////

வலைப்பதிவில் சிலர் அதைச் செய்திருக்கிறார்கள். நாமும் ஏன் அவர்கள் வழியில் செல்ல வேண்டும்? உங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டுக்கள்.
உங்களுக்கு வேண்டுமென்றால் இணையத்தில் திருப்பாவையின் 30 பாடல்களும் ஒலி மற்றும் வரி வடிவங்களில் கிடைக்கிறது. தரவிரக்கம் செய்து படியுங்கள். நன்றி!

SP.VR. SUBBAIYA said...

Blogger ananth said...
முன்பு நோய்வாய்பட்டிருந்த போது சரியாக தூங்க முடியாது. தூங்க முடியாத காரணத்தால் வெறுத்துப் போய் அதிகாலையிலேயே எழுந்து, காலை கடன்களை முடித்து விட்டு, இறைவழிபாடு, ஜபம் என்று ஆரம்பித்து விடுவேன். இப்போது உடல் நலமான பிறகு காலை 7 மணிக்கு முன் எழுவதே சிரமமாக இருக்கிறது. நன்றாக இழுத்து போர்த்தி கொண்டு தூங்கதான் விருப்பமாக இருக்கிறது. இந்த மார்கழி மாதத்திலாவது மீண்டும் அதிகாலையில் எழும் பழக்கத்தை கொண்டு வர எண்ணியுள்ளேன். மனம் உண்டானால் மார்க்கமுண்டு.//////

முதலில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு சிரமமாக இருக்கும். பிறகு பழகிவிடும். முயற்சி செய்யுங்கள் ஆனந்த்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger தமிழ் விரும்பி said...
ஆனந்தமளிக்கும் ஆனந்தன் பாடல்.
ஆனந்தக் கூத்தாடும் அந்த சிறு குழந்தைகளில் நடுவில் நின்றாடும்
குழந்தையே அதிகம் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது....
மாதங்களில் நான் மார்கழி என்றான் மகாபிரபு. அப்படி இருக்க அது ஏன்? 'பீடை மாதம்' திறக்காத கோவில்கள் எல்லாம் திறந்திருக்கும்
சொர்க்கவாசல் திறப்பு என்ற வைபவமும் நடைபெறும் இந்த மாதத்தை பீடுடைய மாதம் (பெருமை பொருந்திய மாதம்)
என்றால் தானே சிறப்பாக இருக்கும்...////

உண்மைதான்! பீடுடைய பெம்மான் என்னும் பாடல் வரி உள்ளது!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/////கண்ணதாசனின் பாடல் ஜேசுதாசின் குரலில்
அமிழ்தினும் இனியதாக இதயம் இனித்தது.
பதிவிற்கு நன்றிகள் ஐயா!////

நல்லது. நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger தேமொழி said...
ஏசுகாவியம் வழங்கிய கண்ணதாசன் எழுதியதை ஐயப்பதாசனான ஏசுதாசன் பாட முருகதாசனான ஐயா பதிவேற்றியுள்ளீர்கள்.
இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன் ..என்றார் கவிஞர்.
கவிதைகள் வழங்கிய கவிதை இன்று பதிவில் பாடலின் எளிய வரிகளும் பாடுபவரின் அமைதியான குரலும் இன்று நாள் முழுவதும் மனதில் ரீங்காரமிடப் போகிறது.
வணக்கமும், நன்றியும் ஐயா/////

தாசர்களைப் பற்றிக் குறிப்பிட்டு அசத்திவிட்டீர்கள். நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger தேமொழி said...
ஐயா எனக்கு எல்லா படங்களுமே பிடித்துள்ளன.
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் என்று பாடும் குழந்தைகளில், நடுவில் இருக்கும் கண்களில் சிரிப்பும் குறும்பும் கலந்து மின்னும் சிறுவனை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, ரோஹிணி நடச்சதிரத்தில் பிறந்திருப்பானோ? உழைத்துக்(?) கலைத்து தூங்கும் சிறுமியும், காலை/மாலைக் கதிரோனும் அழகு. கோவைக்காரர்கள் வடக்கில் நெடுஞ்சாலை பொதுப் பணித்துறையிலும் வேலையில் இருப்பார்கள் போலிருக்கிறது. என்ன ஒரு லொள்ளு :-)//////

சொல்லுங்கள் உங்கள் ஊருக்கு வேண்டுமென்றால் இரண்டு கோவை வாசிகளை அனுப்பிவைக்கிறேன்!:-)))))

RAMADU Family said...

Guru Vanakkam,

Indha pattoda, summa"venn pongal" gnabamum varudhu. Aha enna rusi.

RAMADU.

NAGARAJAN said...

நல்ல பாடல்.
சுவாமி ஐயப்பன் படத்தில், நாரதர் ஸ்ரீமன் நாராயணனை அவதாரம் எடுக்கச்சொல்லி பாடுவதாக அமைந்திருக்கும் பாடல்.
ஆனால், படத்தில், ஐயப்பன் அவதரித்த பின்பு, இப்பாடல் படத்தில் வரும். இப்பிழையை, 1975ல் வெளிவந்த பல
பத்திரிகைகளில் சுட்டிக்காட்டியிருந்தனர்

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
மார்கழி மாத உற்சவம் வகுப்பறையில் துவங்கிவிட்டது...இனி பக்தி மலர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கலாம் தானே ஐயா...
நானும் அந்த குழந்தையைப் போலவே தூங்குவதில் "மன்னி" தான்...அருமையான படம்.யுத்த பூமியான ஆப்பிரிக்காவில் குழந்தைகள் இப்படி மகிழ்ச்சியுடனும்,புஷ்டியாகவும் இருப்பதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது...இது ஒரு அரிய புகைப்படமாய் தோன்றுகிறது எனக்கு...கூடவே எலும்புகள் மட்டுமேயிருக்கும் சோமாலியா,சுடான் நாடுகளின் குழந்தைகளின் பிம்பங்களும் மனதில் தோன்றாமல் இல்லை...நல்ல பதிவுக்கு நன்றிகள் ஐயா.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger RAMADU Family said...
Guru Vanakkam,
Indha pattoda, summa"venn pongal" gnabamum varudhu. Aha enna rusi.
RAMADU.//////

வெண்பொங்கல் + தேங்காய் / முந்திரிப்பருப்பு (பொ.கடலைக்குப் பதிலாக) சட்னி - இல்லையா?

SP.VR. SUBBAIYA said...

/////Blogger NAGARAJAN said...
நல்ல பாடல்.
சுவாமி ஐயப்பன் படத்தில், நாரதர் ஸ்ரீமன் நாராயணனை அவதாரம் எடுக்கச்சொல்லி பாடுவதாக அமைந்திருக்கும் பாடல்.
ஆனால், படத்தில், ஐயப்பன் அவதரித்த பின்பு, இப்பாடல் படத்தில் வரும். இப்பிழையை, 1975ல் வெளிவந்த பல
பத்திரிகைகளில் சுட்டிக்காட்டியிருந்தனர்/////

எடுத்துமுடித்து படம் வெளியான பிறகுதானே? திரும்பவும் கதையை மாற்றி, காட்சிகளை இணத்துக் கொடுக்க அவர்களுக்கு எங்கே மனமும் நேரமும் இருந்திருக்கப்போகிறது. இதெல்லாம் சகஜம்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger R.Srishobana said...
வணக்கம் ஐயா,
மார்கழி மாத உற்சவம் வகுப்பறையில் துவங்கிவிட்டது...இனி பக்தி மலர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கலாம் தானே ஐயா...
நானும் அந்த குழந்தையைப் போலவே தூங்குவதில் "மன்னி" தான்...அருமையான படம்.யுத்த பூமியான ஆப்பிரிக்காவில் குழந்தைகள் இப்படி மகிழ்ச்சியுடனும்,புஷ்டியாகவும் இருப்பதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது...இது ஒரு அரிய புகைப்படமாய் தோன்றுகிறது எனக்கு...கூடவே எலும்புகள் மட்டுமேயிருக்கும் சோமாலியா,சுடான் நாடுகளின் குழந்தைகளின் பிம்பங்களும் மனதில் தோன்றாமல் இல்லை...நல்ல பதிவுக்கு நன்றிகள் ஐயா./////

இரசித்துப் பின்னூட்டமிட்டமைக்கு நன்றி சகோதரி!

முருகராஜன் said...

ரசனையுடன் ரசிக்கும் விதமாகா படங்களை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!

அதில் ஆப்பிரிக்கக் குழந்தைகளின் புகைப்படம் சூப்பர்!!!

ஆனந்தத்தில் ஆனந்தம் இது தான்!

மேலும் நாளை மார்கழியை வரவேற்கும் விதமாக இன்றைய வெள்ளி பக்தி மலர் அமைந்துள்ளது!!

நன்றி.

sundari said...

சார் வணக்கம்,
இந்த வகுப்பறையில் கிடைதத மகிழ்ச்சி வேறேங்கும் எனக்கு கிடைக்கவில்லை ரொம்ப நல்லா ஜாதம் ஆன்மிகம் தத்துவம் அதோடு எல்லாரும் நல்லா ஞாயிறு மல்ர் த்ருகிறார்கள் எல்லா நல்லாயிருந்தது தவறாமல் ப்டிகிறேன் ஆனால் பின்னூட்டமிட இயலவில்லை ரொம்ப கலக்கல் தேமொழி சகோதரி
பாட்டு கேது ஜாதகத்தை நல்லா விளக்கியிருந்தீர்கள் மேலும் எல்லாத்தையும்
விள்க்கி சொல்லுங்கள் நேரமிருந்தால் நீங்க தமிழ் பட்டபடிப்பா ப்டிச்சியிருக்கிறிங்க‌
சுக்கிர,சந்திரன்,செவ்வாய் விளக்கி சொல்றிங்க்ளா.
சுந்தரி

kannan said...

Dear Guruji,

Iam a recent time student of vagupparai. iam very much interested in astrology. I accidentaly came across your blog and found it to be very informative and simply attractive. with your kind grace i have elevated my basic astrology knowledge by going through your four hundred and odd lessons.

But found that NAVAMSA lesson is
missing in the lesson which yourselves has stated to be very important to practice and predict.

Hence , I kindly seek your valuable help and support to provide me the NAVAMSA lesson vide
my email id ggnath23@gmail.com.

anticipate your kind grace in this regards.

yours truly
Gopinath
Tirupur

eswari sekar said...

sir vannkam ethanutan sani paerchi palangal ezthllma

தேமொழி said...

சுந்தரிக்கு வணக்கம், என் ஆக்கம் உங்களுக்கு பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் தமிழ் பட்டப் படிப்பு படிக்கவில்லை, ஆனால் பள்ளியில் படித்த பொழுது தமிழ்தான் பயிற்றுமொழி, எல்லாப் பாடங்களையும் தமிழில்தான் படித்தேன். ஊக்கமூட்டும் உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி தோழி, நன்றி, நன்றி....