மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.12.11

எட்டிற்குப் போகச் சொன்னது யார்?

 
----------------------------------------------------------------------------------
மாணவர் மலர்!

இன்றைய மாணவர் மலரை 4 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------------------------





ஏழிலேயே என்றும் நிற்பாய் என் மதியே!
--------------------------------------------------------------------
மூன்றாம் பிறையே - நீயென்ன
முக்காடு போட்ட பெண்ணா?
முகத்தைப் பாதி மறைத்து
முன் விழியால் பார்க்கிறாய்?

புதுப் பிறையே - நீயென்
காதலியின் தோழியா?
காட்ட மறுக்கிறாய் உன்முகத்தை
அவளைப் போலவே!

வளர் பிறையே - நீயென்ன
பள்ளிச் சிறுமியா?
மாலையில் மட்டும்
விளையாட வருகிறாய்?

இளம்  பிறையே - நீயென்ன
முதலிரவுக்கு போகும்  புதுபெண்ணா?
அவளைப் போலவே
மேகத்தின் ஊடே நழுவுகிறாய்.

பருவம் நிறைந்த பிறையே 
புருவம் உயர்த்துவது ஏன் ? 
அத்தான் எனைப் பார்த்தா - இல்லை
அடியேனின் மல்வேட்டியைப் பார்த்தா?

அடியே, அழகுப் பெண்ணே
இரவைப் பார்த்து பயம் எதற்கு?
அத்தான் உனக்குத் துணையாவேன்
அச்சத்தை உடனேநீ விரட்டு!

மனதை ஆளும் அம்புலியே - உன்னால்
எனக்கு ஒரேயொரு வலியே - ராசிக்கு
எட்டிற்குப் போகச் சொன்னது யார்?
ஏழிலேயே என்றும் நிற்க!

     - தனூர்ராசிக்காரன்.
--------------------------------------------------------------------------------
பேரனின் பிரார்த்தனை!
--------------------------------------------------
"மம்மி! நான் அமெரிக்கனா இல்லையா?"

"நீ அமெரிக்கனேதான்.யார் உன்னை அமெரிக்கன் இல்லை என்று சொன்னது?'

"அந்த புல்லி சார்லிதான் மம்மி".

"ஏன் அப்படி சொல்கிறான் என்று கேட்டாயா?"

"கேட்டேனே!அதற்கு அவன் சொல்கிறான் அமெரிக்கா வெள்ளையர்களுடைய சொந்தமான நாடாம். நீ கருப்பாக இருக்கிறாய். அதனால் நீ அமெரிக்கன் இல்லை என்கிறான்"

"ஷிட்!அதெல்லாம் கிடையாது. நீ அமெரிக்க மண்ணில் பிறந்தவன் அதனால நீயும் அமெரிக்கன்தான். சார்லியிடம் சொல்லு உனக்கு அமெரிக்கா மீது எவ்வளவு உரிமை உள்ளதோ அவ்வளவு உரிமை எனக்கும் இருக்கிறது என்று."

"நீ எங்கே பிறந்தாய் மம்மி? டாடி எங்கே பிறந்தார்?"

"இந்தியா"

"அப்போ நானும் இந்தியன்தானே!"

"அதுவும் சரிதான். ஆனால் உனக்கு இரண்டு நாட்டு பிரஜா உரிமையும் உண்டு"

"புரியலை மம்மி"

"இப்போ நாம விமானத்தில் பற‌ந்துண்டு இருக்கோம்.அப்போ விமானத்திலேயே ஒரு குழந்தை பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போ விமானம் எந்த நாட்டின் மேல் பறக்கிறதோ அந்த நாட்டின் பிரஜயாகவும் அந்தக் குழந்தை ஆகிவிடுகிறது."

"அப்படியா? குழந்தை எப்படி பிறக்கிறது மம்மி?"

'ம் ம்ம் ம்ம்ம் உனக்கு எப்படி சொல்றது? நம்ம சீஸர் எப்படிப் பிறந்தான்?"

"டாக்கி அவளுடைய 'பட்'டில் இருந்து வெளியே தள்ளினாள் சீஸரை"

"ஒரு மனிதக் குழந்தையும் அதே போலத்தான் பிறக்கிறது"

"ஓ!அப்போ நானும் அப்படித்தான் ஒரு மனித உடம்பிலிருந்துதான் வெளியில் வந்தேனா?'

'ஆமாம், அதேதான்!"

"யார் உடம்பு? உன் உடம்பா? டாடி உடம்பா?"

"ஹஹ்ஹா! டாடிக்கு அதெல்லாம் முடியாது. என் உடம்புலிருந்துதான் நீ வெளியில் வந்தாய்"

"அப்போ உனக்கு வலிக்காதா?"

"வலிக்கும்தான். பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்"

"நான் பிறக்கும் போது ரொம்ப வலித்ததா உனக்கு?"

"இல்லை. நீ ரொம்ப வலி கொடுக்காமதான் பிறந்தாய். உன்னைப் பார்த்தவுடன் என் வலியெலாம் மற‌ந்துபோச்சு"

"ஓ!கிரேட் மம்மி! ஐ லவ் யூ!"

"இப்போ எங்கிட்ட சொல்ற இதே வார்த்தையை இன்னும் பதினைந்து வருஷம் கழிச்சு வேற ஒருத்திக் கிட்ட சொல்லுவாய்"

"யாரிடம் சொல்வேன் என்கிறாய்?"

"உன் காதலி அல்லது மனைவியிடம்"

"நோ நோ!உன்னிடம் மட்டுமே சொல்வேன். மற்றவர்களிடம் சொல்லமாட்டேன்"

"சரி, அதை அப்ப பார்ப்போம்.ஆனா, நீ எப்பவுமே அப்பா, அம்மாவுடனேயே இருக்க முடியாது. நீ பெரியவனானவுடன் உன்னுடைய குடும்பம் என்று தனியாகத்தான் போக வேண்டும்"

"நோ, நோ! நான் உன்னை விட்டுப் போக மாட்டேன்"

"ஆனா, நான் உன்னை விட்டுப் போய் விடுவேனே?"

"எங்கே, இந்தியாவுக்கா?"

"இல்லை இந்த உலகைவிட்டே!"

"புரியலையே மம்மி!"

"ம்ம்ம்ம்.. மறுபடியும் எப்படி சொல்றது உனக்கு..சரி சீஸருடன் இன்னும் ரெண்டு குட்டியை டாக்கி போட்டுதே. அவை என்னாச்சு?"

"நீ அப்போ சொன்னாய் அதுங்க‌ ரெண்டும் செத்துப் போச்சுன்னு "

"அதேதான் மம்மிக்கும் ஏற்படும்"

"வாட்!அதுங்களை புதைச்ச மாதிரி உன்னையும் 'எர்த்து'க்குள்ள 'பர்ரி' பண்ணனுமா?"

"இல்லை. எரித்துவிடுவார்கள்"

"யார் எரிப்பார்கள்?"

"ம்ம்ம்.. நீதான்?"

"ஓ!வாட்! நோ, நோ நான் மாட்டேன் அப்படி செய்ய மாட்டேன்!"

"சரி அதை அப்போப் பார்க்கலாம். இப்போ நீ தோசை, சாம்பார், சட்டினி சாப்பிடு.என்ன காபியா? ஹார்லிக்ஸா?"

"மம்மி! மனிதர்கள் எவ்வளவு நாள் சாகாமல் இருக்கலாம்?"

"அதிக பட்சம் 100 வருஷம்"

"நானும் 100 வருஷம் இருப்பேன் இல்லை?"

"கட்டாயம் இருப்படா கண்ணா"

"அப்போ நீ 200 வருஷம் இருக்கணும், மம்மி."

"ஏண்டா?"

"ஏன்னா, நீ எனக்கு முன்னால செத்துட்டா எனக்கு யார் சாப்பிட தோசை,பூரி எல்லாம் கொடுப்பா?அதனால் நா செத்த அப்புறம் தான் நீ சாகணும்.சரியா?"

"ஹிஹிஹி... அது என் கையில இல்லைடா கண்ணா!"

"யார் கைல இருக்கு சொல்லு"

"உனக்குப் பிடிச்ச ஆஞ்சநேயர் சாமிகிட்ட இருக்கு"

"அப்படின்னா அவர்கிட்ட தினமும் 1000 டைம்ஸ் ப்ரேயர் பண்றேன் மம்மி.ஓ! ஆஞ்சநேய சுவாமி! மம்மிக்கு 200 வயசு கொடு!"

(என் மகளுக்கும், பேரனுக்கும் நடந்த உண்மை உரையாடல். கொஞ்சம் சுயபுராணம். என் ஆக்கங்களுக்கு நடுவே சற்றுத் தலை காட்டும். மைனர் மாதிரி பொறுமைசாலிகள் அனைவரும் பொறுத்துக் கொள்ளவும்!)

அன்புடன்,
கே.முத்துராமகிருஷ்ணன் (லால்குடி)
வாழ்க வளமுடன்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஆபீஸ் டைம்!

என்னதான் எடுத்துச் சொன்னாலுமே புரிந்துகொள்ளாத ரகம் இந்தாளு.. ராகவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது..இவனெல்லாம் எந்த சோப்பு டப்பாக் கம்பெனியிலே டைரெக்ட்டரா  இருந்தானோ தெரியலே..நமக்குன்னு வந்து வாய்ச்சானே..

"நம்பியார் என்ற பேருள்ள ஆட்களே வில்லனாத்தான் இருப்பாய்ங்களோ? ஒவ்வொரு கம்பெனிக்குமே இப்புடி ஒரு ஆளு இருக்கானுங்களே ..இவனுங்களை மீறி எதுவுமே செய்யமுடியாமே கையைக் கட்டிப் போட்டமாதிரி இருக்கவேண்டியதாயிருக்கே?" என்று தன்  சூழ்நிலையை நொந்தவாறு கான்டீன் பக்கமாய் நகர்ந்தான்.

ஒரு பில்ட்டர் வில்சைப் பத்தவெச்சு ரெண்டு இழுப்பு ஆழமா இழுத்தா கொஞ்சம் டென்ஷன் குறையும் என்று தோன்றியது. இதெல்லாம் ஒண்ணுமே புரியாமல் A1 சைஸ் டிராயிங் ஷீட்டை ரொம்பத் தீவிரமாய் உற்றுப் பார்த்து டைமென் ஷனை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த டிசைன் டீம் வெங்கட் கண்ணில் பட்டான்..”

“இவன் பொழப்பு எவ்வளவோ தேவலே....கொஞ்சம் சம்பளம் குறைச்சலா வாங்கினாலும் - வந்தானா டைம் கார்ட் ஸ்க்ராட்ச் பண்ணினானா..டிராஃப்டிங் வேலையை முடிச்சு காப்பி பண்ணிக் கொடுத்தானா.. ஃபிகருங்களுக்கு முன்னாலே கொஞ்சம் வெட்டி சீனைப் போட்டானா...அடிக்கடி பக்கத்து கேபின் பானுவோட கடலை போட்டானா.. ஒரு நாள் சம்பளம் பழுத்துச்சா.. கேர்ள் ஃபிரண்டைப் பார்க்கக்  கிளம்பினானா..” என்று .எளிதான அவனின் வாழ்க்கைமுறையைப் பார்த்து கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது

சிகரெட்டை ஆழமாய் ஒரு ‘பஃப்’ இழுத்து ஒரு தம் கட்டி நிறுத்தியபோது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.

டீ குடிக்கக் கான்டீன் வந்த மேனேஜர் அருகில் நெருங்கிவந்தார்..ஹால்ஃப்  செஞ்சுரி அடித்தவர் என்று அவர் தலையின் முன்பாகம் பளீரென்று கண்ணைக்கூசி கட்டியம் கூறியது..கொஞ்சம் ஸ்க்குயர் ஷேப்பாத்தான் இவர் முகவெட்டு..பூனைக்கண் கொண்டவர்..குரலும்..மீசையும் வேறு கனகச்சி தமாய்ப் பொருந்திப்போக தனஞ்செயன் என்ற அவரை அப்புடிக் கூப்பிடாமல் 'பூனை வருது..பூனை போகுது' என்றே ராகவனும் வெங்கட்டும் பேசிக் கொள்வது வழக்கம்..

ராகவனை அவர் நெருங்குவதை அங்கிருந்தே நோட்டம் விட்டுவிட்ட வெங்கட் 'மியாவ்' என்று மெல்லமா சத்தமிட்டுவிட்டு ரொம்ப சீரியஸா டிராயிங் ஷீட்டை உற்றுப் பார்த்து  வேலையில் மும்முரமாய்க் காட்டிக்கொண்டான்..சடார்ன்னு திரும்பி டிசைன் ஷாப் ஃப்ளோர் பக்கம் எட்டிப்பார்த்த மேனேஜர் சுதாரித்துக் கொண்டு அதைக் காட்டிக்கொள்ளாதவராக “என்னாப்பா ராகவ்? ஏதோ சீரியஸா யோசனை பண்ணிட்டுருக்கே..முகத்துலே எள்ளும் கொள்ளும் வெடிக்குதே? என்ன ஆச்சு? காலையிலே வூட்டுலே ஏதும் வைஃப் முணு முணுப்பா? என்கிட்டே சொல்றதுலே ஒண்ணும் பிரச்சினையில்லேயே?” என்றார்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்..அங்கேன்னா ஒரு லிமிட்டுக்கு மேல போனா 'பொளேர்'ன்னு ஒண்ணு விட்டுடுவேன்..நம்ம ஃபர்ஸ்ட் ப்ளோர் பார்ட்டியோடதான் டெய்லி ஒரே தலைவலியாருக்கு.. இப்புடியே போச்சுன்னா ஒரு நாள் இல்லே ஒருநாள் இங்கயும் கையை நீட்டுறாப்லேதான் இருக்கும் போலே..அதான்.." என்றான் ராகவன்..

"ஏம்ப்பா வேகப்படுறே? எதுவாயிருந்தாலும் விட்டுக் கொடுத்துப் போப்பா .நானும் எத்தினி தடவ சொல்லியிருக்கேன்..நீயும் விடாம எதிர்த்து எதிர்த்து பதில் பேசுவே..அந்தாளும் விடமாட்டாரு..உங்களுக்கு இதுவே பொழப்பாப் போச்சு..இன்னிக்கு என்னாப்பா ஆச்சு?" நைசாக வாயைக் கிளறினார் தனஞ்செயன்.

“ஆர்டர் எடுக்கப்போன இடத்துலேஎல்லாம் ஒண்ணும் வொர்க் அவுட் ஆகலே..இருக்குற டிராயிங் ஷீட் எல்லாமே ட்ராஃப்டிங் ஐட்டம்தான்.. ரொம்பப் போனாலுமே இந்த வாரம் வரைக்கும்தான் லோட் தாங்கும்..அடுத்த வாரத்துக்கு எடுத்துப் போட்டு வெச்சுருக்குற ஆளுங்களுக்கு வேலை கொடுத்தாகணுமே..அதுக்கு என்னைப் போட்டுப் பிராண்டறான் இந்த ஆளு.. நானா ஆளெடுக்கச் சொன்னேன்..இருக்குறவனுக்கே இங்க வேலை இல்லியாம்..இதுல இந்தவாரமும்  'ஹிண்டு'விலே விளம்பரம் வேற..அதான் கேட்டுட்டேன்.. இப்புடியே அந்தாளுகிட்டே கேட்டுட்டேன்.. என்னைக் கேட்டுட்டா ஆளெடுத்தீங்க..ன்னு" ராகவன் வேகத்தைக் கொட்டினான்.

ஷாக் ஆகிப் போன மேனேஜர் "ஏம்ப்பா இப்புடியேவாப்பா கேட்டே?" என்றார்.. போட்டுக் கொடுத்தே பெயர்வாங்கும் டைரெக்டரைக் கண்டாலே நடுங்கிப் போகும் அவருக்கு ஏக ஆச்சரியம். ராகவனும் இந்தக் கம்பெனிக்கு வந்து எட்டு மாசத்தில் இதுநாள் வரை இந்தளவு பேசியதில்லை..

"ஆமாம்..அதுதானே நடக்குது..பண்றதெல்லாம் முட்டாள்தனம். .டைரெக்டர்ன்னா என்ன கொம்பா முளைச்சுருக்கு? கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியலே..உடனே ஒரு மார்க்கர் penன்னோட போர்டுக்குப் போயி ப்ராசெஸ் ஃப்ளோ  சார்ட் ஒண்ணைப் போட்டு ஒரு ஆளு ஒரு A4 டிராயிங் ஷீட்டை ட்ராஃப்டிங் முடிச்சா 200 ரூபாய்..அதே ஓவர்சீஸ் மார்கெட்டுன்னா ஆயிரம் ரூபா. கணக்குப் போட்டுப் பாருங்க ராகவன்.. 25 பேர் இருந்தா என்ன ஆகும்..50 பேர் செஞ்சா என்னா ஆகும்ன்னு டீம் டர்ன்ஓவர் இல்லீன்னா எப்புடி கம்பெனி ப்ரோபைல்   பில்ட்-அப் ஆகும்? போன மாசம் கொடேஷன் கொடுத்தோமே..அந்த US கம்பெனிக்கு..அதுபடி இருபது பேர் கொண்ட டெடிகேட்டெட் டீம் இருந்தாத்தான் அந்த ஓவர்சீஸ் ஆர்டரை எடுக்கமுடியும். அந்த ஆர்டரை மட்டும் bag பண்ணியாச்சுன்னா MD குஜாலாயிடுவார்..MDகிட்டே நான் ப்ரொப்போசல் சப்மிட் பண்ணியாச்சு..அவரும் ஒகே சொல்லிட்டார்.

இப்பத்துலேருந்து இன்டர்வியூ ஸ்செட்யூல் பண்ணினாத்தான் முடியும்..என்ன பேசறீங்க ராகவன்? இதெல்லாத்தையும் உங்களைக் கேட்டுக் கிட்டுத்தான் செய்யணுமா நான்? என் ப்ரோஃபைல் என்னன்னு  உங்களுக்குத் தெரியாது. அஞ்சு ஜெனெரல் மானேஜர்..10 ஷாப் ப்ளோர் மானேஜர்ஸ்..எல்லோரையும் என் கம்ப்ளீட் கன்ட்ரோல்லே வெச்சுருந்தவன்..கம்பெனிக்கே பிராண்ட் எஸ்டாப்ளிஷ் பண்ணிக் கொடுத்தவன்..கிட்டத்தட்ட  பதினைஞ்சு வருஷம் சர்வீஸ்..எனக்கே பாடம் சொல்லித் தர்றீங்களா நீங்க?அதுனாலே அந்த இருபது பேரையும் என்கேஜ் பண்றமாதிரி லோக்கல்லே எதாவுது பெரிய ஆர்டரா சீக்கிரம் முடிக்கப் பாருங்க.."ன்னு அந்த தாண்டு தாண்டுறான் அந்த ஆளு..”
ராகவன் படபடவெனக் கொட்டித் தீர்த்துவிட்டான்.

"அதுக்கு நீ என்னதாம்ப்பா பண்ணுனே?" மேனேஜருக்கு அடுத்து நடந்ததைக் கேட்காவிட்டால் தலையே வெடித்துச் சிதறும் அளவு ஆர்வம் கூடியிருந்தது.. எதிர்த்துப் பேசிப் பழக்கமே இல்லாத ஆள்..டைரெக்டர் 'உஸ்' என்றால் 'ஸ்' என்று பெட்டிப் பாம்பாக அடங்கிப் போகிற ஆள்..அவரைவிட லெவல் கம்மியான ஆளிடம் ஏகத்துக்கும் எகிறுவார்.. அவர் ஆச்சரியப் பட்டுக் கேட்டதற்கு ராகவன் பதிலைத் தொடர்ந்தான்.

“ நாளைக்கு பிரியாணி விருந்துங்குறதுக்காக இன்னியிலேருந்து வயித்தைக் காயப் போடுற ஆளு நான் இல்லே.. யுஎஸ் கம்பெனி  பர்ச்சேஸ் ஆர்டர் வந்தப்புறமா இந்தக் கதையெல்லாம் என்கிட்டே சொல்லுங்க.. அந்த யுஎஸ் கம்பெனியிலேயே அட்வான்ஸ் பேமென்ட் கேக்குறதுதானே? அதுக்கு வக்கில்லே..என்கிட்டே சவுண்ட் விடுறீங்க? பழைய ஓவர்சீஸ் ஆர்டர் முடிச்சதுக்கு ரெய்ஸ் பண்ணின இன்வாய்சுக்கே  இன்னும் பதில் இல்லியாம்..இதுலே இன்னும் QC டிபார்ட்மென்ட்க்கு call போட்டு  வேலை கொடுத்துட்டே இருக்கானுங்க அந்த கிளையன்ட்.. பேமென்ட், பில்லிங் எல்லாம் ஒண்ணும் தெரியாம இங்கே நான் வேலை பார்க்கலே. ன்னும் சொல்லப்போனா என்னை வேலைக்கு எடுத்தப்போ நான் டிசைன் செக்ஷன் ஸ்டாஃப்தானே தவிர மார்க்கெட்டிங் ஆளு இல்லே..நானா வேலையில்லாம எல்லோருமே தூங்கி வழியுறது பத்தி உங்ககிட்டே பேசப் போயி என்னை கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்கு மார்கெட்டிங் ஆளா மாத்திட்டீங்க..என் ப்ரிவியஸ் கிளையன்ட்ட எல்லாம் உங்களுக்கு இன்ட்ரொடியூஸ் பண்ணிவெச்சு அதுலே கிடைச்ச கொஞ்ச ஆர்டர்லேதானே ஆறுமாசமா இப்போ டிசைன்செக்ஷனே ஓடிட்டுருக்கு.. ஒரு ஆர்டர் நீங்க சொந்தமா முடிச்சுருக்கீங்களா? இதுலே பேச்சு என்ன வேண்டியிருக்கு?’ ன்னு வுட்டு பதிலுக்குப் பதில் நானும் எகிறிட்டு ரூமை விட்டு வெளியிலே வந்துட்டேன்...” ராகவன் தொடர்ந்தான்.

“லோக்கல் மார்க்கெட் பத்தி இந்தாளுக்கு ஒரு மண்ணுமே தெரியாது.. ஃபினான்சியல் டைரெக்டரா வேணும்னா இருக்கலாம்.. எனக்கு என்னமோ அதுகூட இந்தாளுக்கு ஒத்து வருமான்னு தெரியலே..டெக்னிகல் விஷயம் ஒண்ணுமே தெரியாமே இந்தாளு என்னை கமான்ட் பண்ண நினைக்குறான்.. வெறும் 2D டு 3D மாடல் டெவெலப்மென்ட் தவிர கான்செப்சுவலா எந்த டிசைனுமே பண்றதில்லைன்னு முடிவே பண்ணிட்டா எனக்கு இங்க வேலையே இல்லே.. இந்த மார்க்கெட்டுலே எப்புடி ஆர்டர் எடுக்க முடியும்? டொமைன் ஸ்ட்டஃப் கொஞ்சம் கூட இல்லாத 2D டு 3D மாடல் கன்வர்ஷன், காப்பி  டிராஃப்டிங் பண்றவனெல்லாம்  டிசைனர்ன்னு சொல்லி ரெசூம் அடிச்சுட்டு வந்துடறான்.. அப்போ அக்சுவல் டிசைனரை என்னன்னு சொல்றது? இந்தாளும் ஒண்ணும் புரியாமே எல்லாத்துக்குமே 'தான்..தான்' ன்னு டெக்னிகலா ஒண்ணுமே தெரியாதவன் இன்டர்வியு பண்ணினா இப்புடித்தான் இருக்கும்..  ஒரு டிராயிங் இவன் சீட்லே உட்கார்ந்து போட்டுருப்பானா?டிசைன் பத்தி என்ன வெங்காயம் தெரியும் இந்தாளுக்கு? தெரிஞ்சவனா இருந்தா இப்புடி MLM மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் சார்ட் மாதிரி இத்தினி ஆள் சேர்த்தா இவ்வளோ டர்ன்ஓவர் ன்னு கிறுக்குத்தனமாக் கணக்குப் போட்டுக் காமிப்பானா? இதுலே வேற எனக்கு இவுரு கிளாஸ் எடுக்குறாராம்..உடனே மார்க்கர் pen ன்னோட வொயிட் போர்டு க்கு போயிட்டாரு..எனக்கு வாயிலே கெட்டகெட்ட வார்த்தையா வருது..உங்க வயசுக்காகப் பாக்குறேன்.."என்று ஆத்திரத்தைஎல்லாம் கொட்டித் தீர்த்தான் ராகவன்.

மானேஜருக்கு முகத்தில் ஈ ஆடவில்லை.. 'இந்த ஆட்டம் ஆடுகிறானே' என்று ராகவனைக்கண்டு  சிலசமயங்களில் பொறாமையாக இருந்தாலும் 'டைரெக்டரை எதிர்த்து நம்மால் முடியாததை எல்லாம் இவன் செய்து விட்டானே' என்று ஒருபக்கம் நெஞ்சு குளிர்ந்து போயிருந்ததால் "கொஞ்சம் இருப்பா..உனக்கும் டீ எடுத்துட்டு வாரேன்" என்று டீ வெண்டிங் மஷினை நோக்கி நகர்ந்தார் தனஞ்செயன்.

"இன்னிக்கு எப்படியும் மேட்டர் MD வரைக்கும் போயிடும்ன்னு நினைக்கிறேன்..எப்புடி சமாளிக்கப் போறே?" டீ எடுத்துக்கொண்டே ராகவனுக்கு எதிரில் இருந்த சேரை தன் பக்கமாக இழுத்துப் போட்டுக்கொண்டவாறே பேச்சைத் தொடர்ந்தார் தனஞ்செயன்.

“நானும் அதைத்தான் எதிர்பார்த்துட்டு இருக்கேன்..இவுங்க ரெண்டுபேருமா சேர்ந்து எதாவுது பிளான் பண்ணி பிசினஸ் பண்ணுவாங்க..அதுக்கு நான்தான் அல்லாடனுமா? ரியல் டைம் எக்ஸ்பீரியென்ஸ் உள்ள ஒரு நல்ல டிசைனர் இல்லே..எத்தினி தடவ சொன்னாலும் இந்த டைரெக்டர் சாம்பிராணிக்கு மண்டையிலே உறைக்கவே இல்லே.. வெறும் டிராஃப்டிங்கைத் தவிர வேற டிசைன் ஓரியென்டேட் ஐடியா கொஞ்சம் கூட மண்டையிலே கிடையாது.. கேட்டாக்க BPO கான்செப்ட்டே அதுதானே?ன்னு மொக்கையா ஒரு பதில்.  நிர்வாகம் தெரியாத ஆளுங்களை மேலே ஏத்திவுட்டா 'ஆடத்தெரியாதவளுக்கு முற்றம் கோணல்'ன்னு சொன்னாப்புலே மத்தவுங்க மேல பழியப் போடுறதுலே  மட்டும்தான் குறியா இருக்குறாங்களே தவிர நடத்துற துக்ளக் தர்பார்லே கொஞ்சம் கூட மாற்றமே இல்லே..ஸ்பெசிபிக் ஃபீல்ட் ஒரியன்டஷன் இல்லாமே மனுஃபாக்சரிங் டைஅப் இல்லாமே டிசைன் போர்ஷன் மட்டுமே டார்கெட் பண்ணி வேலைக்கே ஆகாதுன்னு டீடெய்லா ஆறு பக்கத்துக்கு ஒரு ப்ரோபோசல்  ரெடி  பண்ணி MDக்கு அனுப்பி வெச்சு ரெண்டு வாரம் ஆகுது..முன்னூறு பேரு இருக்க BPO சென்ட்டர் பெரிசாத் தெரியுற அளவுக்கு இந்த யூனிட் அவருக்கு கண்ணில படலை..அதுதான் இந்த அரைவேக்காடு டைரெக்டர் இந்த ஆட்டம் போடக் காரணம்..நானும் இன்னும் MDகிட்டே இந்த அளவுக்கு நேராப் பேசினதில்லே..இன்னிக்கு வச்சிக்கிறேன் கச்சேரியை..ரொம்பப்போனா  டெக்னிகல் டைரெக்ஷன் நான்தான் எடுப்பேன்.. இந்தாளு லீட்பண்ணி இனிமேல நான் வொர்க் பண்ணமாட்டேன்ன்னு சொல்லிட்டு அதுக்கும்மேலே டைரெக்டர் சம்பளத்த எனக்குக் குடுக்கச் சொல்லி கேட்கப் போறேன்... வேலைக்கு சேர்ந்தப்போ அஸ்யூர் பண்ணினதையே இன்னும் பண்ணின பாடில்லே..அதுலே மட்டும் சொல்லிவெச்சாப்புலே எப்பிடித்தான் எல்லா கம்பெனி MDக்களுமே ஒரே மாதிரி இருக்கானுங்களோ தெரியலே?"பேசிக்கொண்டே போன ராகவனை அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்து பார்த்துக் கொண்டிருந்தார் தனஞ்செயன்.

"என்னப்பா..என்னென்னவோ பேசிட்டே போற நீ..யோசனை பண்ணிப் பேசப்பா..ஏதும் ஏடாகூடமா ஆகிடப் போகுது.."என்றார் கொஞ்சம் கவலை தோய்ந்த முகத்துடன் தனஞ்செயன்.

"’எது நடக்குதோ நடக்கட்டும். எதுக்குமே  ஒரு லிமிட் இருக்கு. அத மீறினா நான் பொறுமையா இருந்து எனக்குப் பழக்கமில்லே’.. சரி சார்..எனக்குக் கொஞ்சம் நெக்ஸ்ட் வீக் ஆக்க்ஷன் பிளான், ரிபோர்டிங் சார்ட்ன்னு கொஞ்சம் வேலை பாக்கியிருக்கு..முடிச்சுட்டு வர்றேன்..”என்று விருட்டென்று சீட்டுக்குக் கிளம்பினவனை கொஞ்ச நேரம் கண்விலக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தார் தனஞ்செயன்.

"இவனுக்குன்னு ஒரு குடும்பம் இருக்குங்குற நினைப்பு கொஞ்சம் கூட இல்லாமல் எப்படி இதெல்லாம் தோணுது..பேசமுடியுது..ரிசல்ட் இல்லைன்னா இல்லைன்னு ரிபோர்ட் பண்ணிட்டுப் போறதுதானே? இந்தளவுக்கு வேலையிலே என்ன அப்புடி ஒரு பிடிப்பு? எதுதான் இவனுக்கு டிரைவ் ஆக இருக்கும்? இவ்வளோ ஸ்ப்பிரிட்டா இருந்தா எவ்வளோ நாளு தாக்குப் பிடிப்பான் இந்தக் கம்பெனியிலே? நானெல்லாம் பத்து வருஷத்துக்கும் மேலே குப்பை கொட்டுறேன்னா பட்ட, பட்டுக்கொண்டிருக்கிற அவஸ்தை கொஞ்சமா நஞ்சமா?  சரி.. என்ன நடக்குதோ பார்ப்போம்.."  என்று எண்ணமிட்டவாறே  அவர் கேபினை நோக்கி நகர்ந்தார் தனஞ்செயன்.

சிலருக்கு திறமை சோறு போடும்..சிலருக்கு விசுவாசம் சோறு போடும்...தனஞ்செயன் ரெண்டாவுது வகை.. கிட்டத்தட்ட பதினைந்து வருஷத்துக்கும் மேலாக MD கூடவே இருந்து பிசினெஸில் ஏற்ற இறக்கங்கள் பல இருந்தபோதும் எங்குமே எஸ்கேப் ஆகாமல் கூடவே இருந்தவர்.. (வேற யாரும்  சேர்த்துக்கிட்டாத்தானே?) சொச்ச காலத்தையும் அவருடனேயே கழித்துவிடுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.

காலை இண்டர்வெல் டைமில் நடந்த இந்தப்பேச்சு வேலை மும்முரம் மதியச் சாப்பாட்டு நேரம் எல்லாம் கடந்தும் தனஞ்செயனுக்கும் ராகவனுக்கும் மனதில் உறுத்தலாக ஓடிக்கொண்டே இருந்தது.

சாயங்காலம் 4 மணிக்கு ரிசெப்ஷனில் ஏதோ சலசலப்பு கேட்டுத் திரும்பினார் தனஞ்செயன்.. பார்க்கிங் லாட்டில் நின்ற MDயின் வோல்க்ஸ்வகன் ஆடி கார் கண்ணில் பட்டது.. முப்பது பேர்கள் கூடும் சின்னக் கம்பெனி கொஞ்சம் கொஞ்சமாக பில்ட்-அப் ஆகிக் கொண்டிருக்கும் யூனிட் என்பதாலும் மற்ற யூனிட்டுகளில் பத்து மடங்கு பிசினஸ் ப்ரெஷ்ஷர் அதிகம் என்பதாலும் எப்போதுமே MD  இந்த யூனிட்டுக்கு  ரெகுலராக வருவதில்லை. பிரைவேட் லிமிடெட் கம்பெனி என்றாலுமே மேஜர் ஷேர் அவருதுதான்..கொஞ்சம் நஞ்சம் பிரித்துக் கொடுத்திருப்பதுவும் அவர் நெருங்கிய சொந்தங்களுக் குள்ளேதான்..பத்து வருஷத்துக்கும் மேலாக கூடவே இருந்தாலும் எப்போது என்ன முடிவெடுப்பார் என்று தனஞ்செயனால் இதுவரை புரிந்துகொள்ள முடியாத புதிரானதொரு மனிதர்.. இன்று இங்கே திடீர் விசிட் என்றால் ஏதோ முக்கிய முடிவெடுக்கத்தான் என்றுதான் தனஞ்செயனுக்கு உரைத்தது.

கடந்த ஆறு மாசமாக ராகவனுக்கும் டைரெக்டருக்கும் நடுவிலான பனிப்போரில் குளிர்க்காயந்ததென்னவோ தனஞ்செயன்தான்  ஆமாம்..இல்லையென்றால் இவர் தலைதான் உருளும்..வெளியில் ஆர்டருக்காக அலைவதும்..உள்ளே ப்ராஜெக்ட் எக்ஸ்ஸிக்யுஷன் என்று ஆல்-இன்-ஆல் அழகுராஜாவாக இவர் பெண்டு கழண்டுவிடும்.. அறையும் குறையுமாக தெரிந்த இந்த டெக்னிகலி அப்டேட் ஆன மாடலிங் ஃபீல்ட் அறிவை வெச்சுக்கிட்டு ஆர்டர் எடுப்பது மார்க்கெட்டிங் பண்றதெல்லாம் பெரிய சமாச்சாரம்.

ராகவனின் சார்மிங்கான முகவெட்டிலும் சரி,  டீக்காக டிரஸ் பண்ணுவதிலும் சரி.. ‘டுமாரோ நெவெர் டைஸ்’ பியர்ஸ் பிராஸ்னன் போல பல்சரில் சென்னையின் ட்ராஃபிக்குகளில், சந்து பொந்துகளில் கூட கட் அடித்து ஒட்டி சாதனை பண்ணுவதிலும் சரி..இதில் எதுவுமே தனஞ்செயனுக்கு இந்த ஜென்மத்தில் வரப்போவது இல்லை..இதெல்லாமே கொஞ்சம் பொறாமையை வரவழைத்த விஷயங்கள்..

இதுபோன்ற சமயங்களில் கண்களில் பொங்கி வழியும் பொறாமையைக் கூட மறைத்துக் கொள்ளத் தெரியாது தனஞ்செயனுக்கு...மனிதர்களைப் படித்தே பழகிப்போன ராகவன் வெகுசுலபமாக தனஞ்செயனைப் படித்து விடுவான். இப்படிப் பொறாமைக் கணைகளைத் தவிர்க்க என்றே தான் டார்கெட் செய்து சாதித்த விஷயங்களைக் கூட பெருமையாக சொல்லிக்கொள்ளாமல் 'எல்லாம் இறைவன் செயல்' என்று எல்லா ஆட்களும் போட்டுத் தாக்கும் வசனத்தைப் போட்டு கவர் பண்ணிக் கொள்வான் ராகவன்....

கிளையன்ட் சைட்லே  ஆன் தி ஸ்பாட் டிராயிங் பார்த்து ப்ரோஜெக்ட் முடிக்க ‘எவ்வளோ நேரம் எடுக்கும்; வேறென்ன டீடைல்ஸ் எல்லாம் தேவை’ என்று முடிவெடுத்து மார்கெட்டைஅனுசரிச்சு காஸ்ட் கூட டிசைட் பண்ணி பேச்சளவிலே ஆர்டரை முடிச்சுவிட்டு ஆபிசுக்கு வந்து ஒரு ஃபார்மா லிட்டிக்காக கொடேஷன் அடிச்சுட்டுப் போகிற ராகவன்  வொர்க்கிங் ஸ்டைல் எல்லாம் அவருக்கு சுட்டுப் போட்டாலும் வராது..இப்படி எல்லா வேலையையும் ராகவனே முடிச்சுட்டு கடைசியிலே பர்சேஸ் ஆர்டர் வாங்குற நாள் மட்டும் தனஞ்செயனும் டைரெக்டருமாக சேர்ந்து போய் தாங்களே வேலையை முடித்ததாகப் பெருமை அடைவதைக் கண்டு கொள்ளாமல் போகும் ராகவனின் பெருந்தன்மையும் அவருக்குப் புரியாத விஷயங்கள்.

இன்று ராகவன் பேசிச் சென்ற இந்த விஷயம் இவ்வளவு பாதிப்பை ஏன் கொடுக்கிறது என்பதற்கு இதெல்லாம்தான் காரணம்.. கம்பெனியில் ராகவன் இருந்தாலும் பிரச்சினை..இல்லாட்டாலும் பிரச்சினை. இப்போ என்ன நடக்கப் போகிறதோ என்கிற பதைபதைப்பு போட்டு அவரை ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது. கையும் காலும் ஓடவில்லை.
                        
வேகவேகமாக ரிசெப்ஷனைக் கூப்பிட்டார்.. MD வந்திருக்கிறார் என்று கன்ஃபார்ம் பண்ணிய கையோடு அவருக்குப் பதட்டம் தொற்றிக் கொண்டது அவருக்கு..மன்த்லி ரிபோர்ட் எடுத்து ஒரு தரம் குய்க்கா வெரிஃபை பண்ணிடலாம்ன்னு எடுத்தார்..அதை அப்பிடியே டேபிளில் வெச்சுட்டு 'கிளையன்ட்  ஃபால்லோ -அப் ஆஃப்டர் வொர்க் எக்ஸிக்யுஷன்-க்குன்னு ஒரு ரிப்போர்ட் ஃபோர்மட் புதுசா டெவெலப் பண்ணி வையுங்க' ன்னு போன தடவை மீட்டிங்கிலே MDசொன்னது ஞாபகம் வந்ததால் அரைகுறையா செஞ்சு வெச்சிருந்த அந்த ஃபார்மட்டை ஷேப்அப் பண்ண முடியுமான்னு வேலையில் மூழ்கிப் போனார்

மணி  சரியாக 4.50 இண்டர்காம் அடித்தது..மீட்டிங் ரூம்க்கு MDவரச் சொல்லிதான் MD  செக்ரட்டரியிடமிருந்து கால். கூடவே பிசினஸ் டெவெலப்மென்ட் மானேஜர் ராகவன் சாரையும் கூட்டிட்டு வரச் சொன்னதாக சொன்னாள் செக்ரட்டரி. தனஞ்செயன் நினைத்தது போலவே நடந்துவிட்டது.

ரிப்போர்ட் எல்லாம் எடுத்துக் கொண்டு ராகவனைத் தேடி அவன் கேபினுக்குப் போய் சேதியைச் சொல்லி "எதுவாயிருந்தாலும் பொறுமையாப் பேசு"ன்னு அட்வைஸ் பண்ணியவர் அவனிடம் எந்த சலனமோ பதட்டமோ இல்லாதது கண்டு இன்னிக்கு இன்னும் என்னென்ன சீன் இருக்கோ பார்க்கலாம் என்று நினைத்தபடியே "ஏம்பா..ரிபோர்ட் எதுவும் எடுத்துக்கலே?" என்றார்.

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..எனக்கு இன்டிமேஷன் ஒண்ணும் இல்லியே..காஷுவல் விசிட் தானே..வாங்க போகலாம்" என்று நடந்தான் ராகவன். பூனையாகப் பின் தொடர்ந்தார் தனஞ்செயன்.

எதிரில்வந்த பியூன் கான்பாய் "என்னா சார்.. ரெண்டு பேரும் கிளம்பலியா? எல்லோருமே கிளம்பியாச்சே. ஆபீஸ் டைம் ஓவர்.." என்று சொல்ல.."இல்லேப்பா..MD வந்துருக்கார்.. மீட்டிங் இருக்கு" என்றார் தனஞ்செயன்.

"பெரியாளுங்களுக்கு ஏதும் ஸ்பெஷல் கவனிப்பா இருக்கும்.. என் விஷயத்தையும் கொஞ்சம் கவனிச்சுக்குங்க சார்." என்று நிலவரம் புரியாமல் பியூன் தொடர்ந்துபேச "நீ ஊருக்குப் போறேன்னு சொல்லியிருந்தி யேப்பா..போயிட்டு அடுத்த வாரம்தானே வருவே..மேலே என்ன நடந்துச்சுன்னு வந்தபிறகு சொல்றேன்.."  என்றபடியே  மாடிப்பக்கமாக நடையைக்கட்டினார் தனஞ்செயன்.

"ஆபீஸ்டைம் ஓவர்" என்று பியூன் சொன்ன அந்த வார்த்தை மட்டுமே ஏனோ ராகவனுக்குப் பலமாக  சிந்தனையை ஆக்கிரமித்தும் காதுகளில் தொடர்ந்தும் ஒலித்துக்கொண்டிருந்தது.

ஆக்கம்: நெப்போலியன் ஞானப்பிரகாசம் (மைனர்) ஜப்பான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


நகைச்சுவை

1
உருக்கப்பெற்ற தங்கம்தான் ஆபரணமாகிறது.
அடிக்கப்பெற்ற செப்புதான் நீண்டு கம்பியாகிறது
அழுத்தத்தீர்குள்ளான கற்கள்தான் வைரங்களாகின்றன!
அதுபோல உருக்கப்பெற்ற, மன அடிகளுக்கு ஆளான, மன அழுத்தங்களுக்கு ஆளான மனிதன்தான் நல்ல கணவனாகிறான்!
------------------------------------
2
Lecturer: Children in the dark make mistakes.
Convert this sentence to opposite.
Student: Mistakes in the dark make children.
-------------------------------------
3
Technology Update:
If any girl has full make-up even at home..
Dont get confused..
Its obvious that Her phone has "3G".. (Video Calling)
--------------------------------------
4
When a married man says-
'I'll think about it',
What he really means that,
He doesn't know his wife's opinion yet.
--------------------------------------
5
What is the difference between Guilt and Shame ??
Its GUILT to sleep with another woman...
But ...
Its a SHAME to miss the Opportunity...
- எஸ்.சபரி நாராயணன், சென்னை
----------------------------------------------------------------------------



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

33 comments:

  1. ஏழிலேயே நிலவு நிற்கக் கவிதை பாடிய தனுசு ராசிக்காரரே, முடியுமா உம்மால்?
    நில் என்று சொல்லுமேன். அல்லது உமது தனுசில் இருந்து சொல்லம்பை விட்டுப் பாருமேன். உஹும். ஒன்றும் பயனில்லை.கவிதை அருமை. பாராட்டுக்கள்.

    ஞானம் பிரகாசமாகத்தான் ஒளிவிட்டுள்ளது.அந்த நிர்வாகி பாத்திரம் புனைவே அல்ல. மானேஜர் அல்ல. டேமேஜர்களே நாட்டில் அதிகம்.இது புனைவு அல்ல.நிஜம் என்று நன்றாகவே தெரிகிறது. ஜப்பானியனுக்குத் தமிழ் தெரியாது என்ற தைரியம் தான்.பேசாமல் கதையைத் தமிழிலேயே எழுதியிருக்காலாம்.
    இது தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்ட ஆங்கிலக் கதை. நன்றாகவே உள்ளது மைனர்.பாராட்டுக்கள்.

    என் ஆக்கங்கள் பெரும்பாலானவை தன் வரலாறுதான். மைனர் அதற்குப் பழகிவிட்டார். அவரோடு ராசியாகப்போக முடிவு எடுத்து வெகு நாளாயிற்று. அதனால் திட்டுவதாக இருந்தாலும் தனி மின் அஞ்சல்தான். வகுப்பறையில் திட்ட மாட்டார்.(சந்தானம்:நண்பேண்டா!)

    ReplyDelete
  2. சபரியின் சிரிப்பு சேகரம் ஜோர்! அந்த இரண்டாவது, இருட்டில் செய்யும் பிழை!?
    அதனால்தான் ஐயா, நாட்டின் ஜனத்தொகை 120கோடி. ஹி ஹி ஹி ஹி!

    ஐயின்ஸ்டின் ஜோக்குகள் அருமை.படத்துக்கு காப்பி ரைட் இருக்கான்னு பார்த்துக்கொள்ளுங்க.
    பாராட்டுக்கள் சபரி.

    ReplyDelete
  3. ஷாருகான் எதுக்கு சம்பந்தமில்லாம?.மைனரை ஷாருகானோட ஒப்பீடா?

    ஷாருகான் மாதிரி மைனர் 'அக்ளி'யா இருக்கிறார் என்று சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்(அ)டிக்கிறேன்!!!

    ReplyDelete
  4. "மனதை ஆளும் அம்புலியே - உன்னால்
    எனக்கு ஒரேயொரு வலியே - ராசிக்கு
    எட்டிற்குப் போகச் சொன்னது யார்?
    ஏழிலேயே என்றும் நிற்க!"

    நல்ல கவிதை தனூர்ராசிக்காரரே, நீங்கள் நிலவையும் விட்டுவைக்கவில்லை கட்டளை இடுவதில். ஆனால் இந்தக் கட்டளை நீங்கள் ஆசிரியரின் மாணவர் என்று அடையாளம் காட்டுகிறது. சந்த்ராஷ்டமம் வாட்டுகிறதோ.

    அடுத்த கட்டளை யாருக்கு என்று ஆவலுடன் எதிபார்த்துக் கொண்டிருக்கிறேன். "தனுசு ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார் " என்று பாடலாம்.

    ReplyDelete
  5. நல்ல உரையாடல் தொகுப்பு KMRK ஐயா, உணர்ச்சிகரமான நிகழ்சிகளை குழந்தைகள் அணுகும்முறையே தனிதான்.

    மகன்: "ஓ!கிரேட் மம்மி! ஐ லவ் யூ!"
    அம்மா: "இப்போ எங்கிட்ட சொல்ற இதே வார்த்தையை இன்னும் பதினைந்து வருஷம் கழிச்சு வேற ஒருத்திக் கிட்ட சொல்லுவாய்"
    மகன்: "யாரிடம் சொல்வேன் என்கிறாய்?"
    அம்மா: "உன் காதலி அல்லது மனைவியிடம்"

    (இதை உங்கள் பாஸ்டன் மகள் சொல்லவில்லை....உங்கள் சுயபுராணம் எனக் கருதுகிறேன்)

    ReplyDelete
  6. ஒருமுறை அலுவலகத்தில் உள்ள பயிற்சிமுறை கலந்துரையாடலில் எங்களுக்கு போதிக்க வந்த தொகுப்புரையாளர் கேட்ட கேள்வி; "என் மேலதிகாரிக்கு என்னை விட திறமை குறைவு, என் முயற்சியை வைத்து, என் உழைப்பில் அவர்கள் எனக்கு வரவேண்டிய பெயரையும் புகழையும் தட்டிச் சென்று விடுகிறார்கள், என் கடின உழைப்புக்கு தகுந்த பாராட்டுகள் இல்லை". எங்கே இந்த கூற்றை ஒத்துக் கொள்பவர்கள் கையை உயர்த்துங்கள் என்றார். அறையில் இருந்த அனைவருமே கையை உயர்த்தினோம். அவர் சிரித்தவாரே, இதை எத்தனையோ முறை எவ்வளவோ இடங்களில் கேட்டுவிட்டேன், தவறாமல் இதே முடிவுதான் என்றார். மாண்புமிகு மைனர் உங்கள் ராகவன் ஒரு சராசரி மனிதன்தான் என்பது இதன் மூலம் தெரிகிறது.

    ஜோதிடர்கள் பொதுவாக "நீங்கள் உதவும் மனப்பான்மை உள்ளவர், ஆனால் நீங்கள் யாருக்கு உதவினீர்களோ அவர்களே உங்களுக்கு துரோகம் செய்வார்கள்" என்று சொன்னால் அனைவருமே அதை உண்மை என்று தலையாட்டும் மனவியலை காட்டும் செய்கை இது. ஆனால் ராகவனுக்கு என்ன ஆயிற்றோ என்று எங்களை மண்டை காயவைத்து கதையை முடித்தீர்கள் பாருங்கள், தெய்வமே... நீங்க எங்கேயோ போய்ட்டீங்க.

    தினசரி அலவலக வாழ்க்கையில் ஆங்கிலத்தின் தாக்கம் என்ன என்பதை நன்றாகவே படம் பிடித்து விட்டீர்கள். நல்ல கதை நன்றி.

    ReplyDelete
  7. "உருக்கப்பெற்ற, மன அடிகளுக்கு ஆளான, மன அழுத்தங்களுக்கு ஆளான மனிதன்தான் நல்ல கணவனாகிறான்!"

    ஆஹா ...நன்றி சபரி, இதை மனதில் கொண்டு குற்றவுணர்ச்சி இல்லாமல் நான் எவ்வளவோ தினசரி வாழ்க்கையில் சாதித்துக் கொள்ளலாமே. அடி எடுத்துக் கொடுதுதவியதற்கு நன்றி. வாழ்க வாழ்க :)

    ReplyDelete
  8. எனது கவிதையை வெளியிட்டமைக்கு நன்றி அய்யா.

    ReplyDelete
  9. KMRM அவர்களே தாய் மகன் உரையாடலில் இறுதியாக வரும் இந்த வரிகள் "யார் கைல இருக்கு" "உனக்கு பிடிச்ச சாமிகிட்ட கேளு" சின்ன வயதில் கற்று கொடுக்கும் இறை வணக்கம் மிகவும் பலம் வாய்ந்தது. அவனை இறுதி வரை இறை நினைப்புடனே வைத்திருக்கும். கதை தெளிவாக இருகிறது.

    ReplyDelete
  10. மைனர் சார், அலுவலக கதை கலக்கலாவே இருந்தது. ராகவன் கதாபாத்திரம் சராசரி ஊழியனின் பிரதி.

    "ஏம்ப்பா கோவப்படுகிறாய் விட்டு கொடுது போ", "அந்த ஆளும் விடமாட்டாரு "-யாரையும் மனதில் வைத்து எழுதப்பட்ட வரிகளாக தெரியவில்லை.ஆனால் நல்ல வசனங்கள்.

    சிலருக்கு திறமை சோறு போடும் சிலருக்கு விசுவாசம் சோறு போடும் = விசுவாசம் கண்டிப்பாக தேவையானது தானே சார் .

    ReplyDelete
  11. நன்றி தனுர்ராசிக்காரர், kmr.கிருஷ்ணன் மற்றும் மைனர் சார்.
    Cell phone-ல் இருந்து அனுப்புவதால் அதிகம் எழுத முடியவில்லை.:-D;-)

    ReplyDelete
  12. அம்புலிமாமா(அத்தான்) தனுசு ராசிக்காரரின் கவிதை அருமை..
    'சந்திரனைத் தொட்டது யார் நீதானே?' எனப் பாட்டும் படலாம்..
    சந்திரனைத் தொட்டதோ இல்லையோ என்னைத் தொட்டது..தனுசுவுக்கு எட்டுக்குப் போய் ஏக்கம் தந்த அதே சந்திரன்
    அவர் ஆசையைப் பூர்த்தி செய்து எனக்கு எழிலே உச்சமாகித் தங்கிவிட்டான்..
    ஆணையிடும்போது யாருக்கு நடக்கவேண்டும் என்று தெளிவாக ஆணையிடவேண்டும்..
    இல்லையென்றால் இப்படித்தான்..

    ReplyDelete
  13. KMRK பேரனுக்கும் மகளுக்குமான உரையாடலை எழுதியவிதம் அருமை..உரையாடல் விஷயங்களும் அருமை..தேமொழி சொல்லியிருப்பதைப் போலவே சுயபுராணமும் கலந்திருக்கலாம்..

    மற்றபடி உரையாடலிலே சொல்லப்பட்ட செய்திகளில் பிரஜா உரிமை பற்றி ஒரு தகவல்..ஜப்பான்,ஜெர்மனி என இந்த இரண்டு நாடுகளும் பிறப்பு அடிப்படையிலே தன் நாட்டில் பிறந்துவிட்டதாலேயே சிட்டிசன்ஷிப் பிறப்புரிமை என்று சட்டமியற்றவில்லை.மாறாக ரத்தக் கலப்பு அடிப்படையிலேயே அந்த நாட்டினருடன் திருமணபந்தத்தின் அடிப்படையிலேயே சிட்டிசன்ஷிப் தீர்மானிக்கப்படுகிறது..பெர்மனென்ட் ரெசிடென்ஸ் வாங்கவே ஜப்பானில் பத்து வருடங்களுக்குமேல் தங்கியிருந்திருக்கவேண்டும்..அதேபோல இரட்டைக் குடியுரிமையும் இங்கே இல்லை..நாட்டுக்கு நாடு கொள்கை வேறுபாடு இருக்கிறது....ஜப்பான்- இந்தியாவைப் பொறுத்தவரை இங்கா, அங்கா என்று தீர்மானிக்கவேண்டிய அவசியம் எழுந்துவிடும்..

    ReplyDelete
  14. இந்த படைப்பை வெளியிட்டு எழுதும் ஆர்வத்தை ஊக்கப்படுத்திய ஆசிரியருக்கு நன்றி..

    ReplyDelete
  15. //////////// kmr.krishnan said...
    \\\\\\\\\\\\\\ ஞானம் பிரகாசமாகத்தான் ஒளிவிட்டுள்ளது.\\\\\\\\\\\

    ஞானப்பிரகாசம் என் தந்தையாரின் பெயர்..எனது சர்டிபிகேட் பெயர் K.G.Napoleon என்பதே..இதுதான் வழக்கில் உள்ளது..எனினும் தங்கள் பாராட்டுக்கு நன்றி..

    \\\\\\\\\\\\\\\அந்த நிர்வாகி பாத்திரம் புனைவே அல்ல. மானேஜர் அல்ல. டேமேஜர்களே நாட்டில் அதிகம்.இது புனைவு அல்ல.நிஜம் என்று நன்றாகவே தெரிகிறது.\\\\\\\\\\\\\\\\\

    எந்த கேரக்டரையும் முழுக்க முழுக்கப் புனையவும் முடியாது..எங்காவது யாரிடமாவது ஏதாவது ஒரு சாயல் இருக்கும்..நிகழ்வுகள் எப்படி ப்ரெசென்ட் பண்ணப் பட்டிருக்கின்றன என்பது பற்றிய விமர்சனம்தான் படைப்பாளனுக்குப் போய்ச் சேரும்...நன்றி..


    \\\\\\\\\\\\\\\ஜப்பானியனுக்குத் தமிழ் தெரியாது என்ற தைரியம் தான்.பேசாமல் கதையைத் தமிழிலேயே எழுதியிருக்காலாம்.\\\\\\\\\\\\\\


    சென்னையில் நடந்ததாக கதையில் குறிப்பிட்டுள்ளேன்(ஆறேழு வருடங்களுக்கு முன்)..


    \\\\\\\\\\இது தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்ட ஆங்கிலக் கதை. \\\\\\\\\\\


    ஆங்கிலம் பிடிக்கவில்லை என்பதற்காக நடைமுறையில் தவிர்க்க முடிவதில்லை..இதுதான் பலருக்கும் எதார்த்தம்..கதையில் வந்திருக்கும் வேற்றுமாநிலத்தவரைத் தவிர எல்லோருமே தமிழர்கள்தான் என்பதால் தமிழிலேயே(ஆங்கிலம் கலந்த) பேசுவது இயல்புதான்..அதனால் அந்த டைரக்டருடனான பேச்சுக்கள் மட்டுமே முற்றிலும் ஆங்கிலத்தில் நடந்தவை என்று கொள்ளலாம்..


    \\\\\\\நன்றாகவே உள்ளது மைனர்.பாராட்டுக்கள்.\\\\\\\\\\\\\
    படித்துப் பாராட்டியதற்கு மீண்டும் நன்றி..



    \\\\\\என் ஆக்கங்கள் பெரும்பாலானவை தன் வரலாறுதான். மைனர் அதற்குப் பழகிவிட்டார். \\\\\\\\\\\\\\


    சுய சரிதை புத்தகத் தொகுப்புக்கு பின்னாளில் உதவும்..தொலைநோக்குப் பார்வையில் இது தவிர்க்கமுடியாதது..


    \\\\\\\\\\\\அவரோடு ராசியாகப்போக முடிவு எடுத்து வெகு நாளாயிற்று. அதனால் திட்டுவதாக இருந்தாலும் தனி மின் அஞ்சல்தான். வகுப்பறையில் திட்ட மாட்டார்.(சந்தானம்:நண்பேண்டா!)\\\\\\\\\\


    திட்டுகிற அளவிலே நீங்களும் இல்லை..நானும் இல்லை..

    ReplyDelete
  16. \\\\\\\\\\\\\\\\kmr.krishnan said... ஷாருகான் எதுக்கு சம்பந்தமில்லாம?.மைனரை ஷாருகானோட ஒப்பீடா?

    ஷாருகான் மாதிரி மைனர் 'அக்ளி'யா இருக்கிறார் என்று சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்(அ)டிக்கிறேன்!!!\\\\\\\\\

    கண்(அ)டிப்பா நீங்க கண்ணாடி போட்டே ஆகணும்..

    மைனர் கதை முடிஞ்சு அடுத்த ஆர்ட்டிகிளுக்குத்தான் வாத்தியார் அந்த 'அக்ளி'(உங்கள் பார்வையில்) ஆளின் படம் போடப்பட்டுள்ளது..

    ReplyDelete
  17. தேமொழி said...

    ///////////ஒருமுறை அலுவலகத்தில் உள்ள பயிற்சிமுறை கலந்துரையாடலில் எங்களுக்கு போதிக்க வந்த தொகுப்புரையாளர் கேட்ட கேள்வி; "என் மேலதிகாரிக்கு என்னை விட திறமை குறைவு, என் முயற்சியை வைத்து, என் உழைப்பில் அவர்கள் எனக்கு வரவேண்டிய பெயரையும் புகழையும் தட்டிச் சென்று விடுகிறார்கள், என் கடின உழைப்புக்கு தகுந்த பாராட்டுகள் இல்லை". எங்கே இந்த கூற்றை ஒத்துக் கொள்பவர்கள் கையை உயர்த்துங்கள் என்றார். அறையில் இருந்த அனைவருமே கையை உயர்த்தினோம். அவர் சிரித்தவாரே, இதை எத்தனையோ முறை எவ்வளவோ இடங்களில் கேட்டுவிட்டேன், தவறாமல் இதே முடிவுதான் என்றார். மாண்புமிகு மைனர் உங்கள் ராகவன் ஒரு சராசரி மனிதன்தான் என்பது இதன் மூலம் தெரிகிறது.//////////////


    எதார்த்த வாழ்க்கையில் சந்திக்கின்ற மனிதர்களின் ஹீரோயிசங்களை ஒத்துக் கொள்ள மறுக்கும்சராசரி மனிதனின் குணாதிசயங்களைப் பிரதிபலிக்கிறது உங்கள் விமர்சனம்..

    ஹீரோ யார்? வில்லன் யார்? காமெடியன் யார்?சராசரி யார்? என்பது கதையைப் படிப்பவர்களின் குணத்தைப் பொறுத்து மாறுபடும்..

    ஹீரோயின் இருந்தால்தான் ஹீரோ என்றால் கதையில் வெங்கட்தான் ஹீரோ?ஏனென்றால் அவனுக்குத்தான் ஹீரோயினை பிக்-அப் பண்ணும் வாய்ப்பு அதிகம்..எத்தனை பேர் இந்த சம்பவத்தில் வரும் வெங்கட்டை ஹீரோவாக ஏற்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை..

    நாம் பார்க்கும் திரையுலக,அரசியல் ஹீரோக்கள் எல்லாம் உண்மையில் நிஜவாழ்க்கையில் பலருக்குமே வில்லன்கள் என்பதை எந்த ரசிகனாலும்,தொண்டனாலும் ஒத்துக் கொள்ளவே முடியாது..இதுகுறித்த செய்திகளும் அவ்வப்போது செய்தியாக வந்துகொண்டேதான் இருக்கிறது..பார்ப்பவனின், எடுத்துக் கொள்பவனின் கோணத்தைப் பொறுத்தே மாறுகிறது..

    கதை ஏற்படுத்திய தாக்கத்தில் விளைந்த சிந்தனையில் வெளிவந்த உங்களின் இது போன்ற விமர்சனங்கள்தான் கதையை எழுதியவருக்கு மேலும் சிந்திக்க, எழுதத் தூண்டும்..

    அந்த வகையில் நன்றி..

    ///////////ஜோதிடர்கள் பொதுவாக "நீங்கள் உதவும் மனப்பான்மை உள்ளவர், ஆனால் நீங்கள் யாருக்கு உதவினீர்களோ அவர்களே உங்களுக்கு துரோகம் செய்வார்கள்" என்று சொன்னால் அனைவருமே அதை உண்மை என்று தலையாட்டும் மனவியலை காட்டும் செய்கை இது. ஆனால் ராகவனுக்கு என்ன ஆயிற்றோ என்று எங்களை மண்டை காயவைத்து கதையை முடித்தீர்கள் பாருங்கள், தெய்வமே... நீங்க எங்கேயோ போய்ட்டீங்க. ////////////

    ராகவனுக்கு என்ன ஆனதோ என்ற உணர்வு உங்களுக்குத் தோன்றியிருந்தால் அதுதான் கதைக்குக் கிடைத்த வெற்றி..இப்படி மனதைத் திறந்தால்தான் அது என்னை, எழுதிய எழுத்தாளனின் இதயத்தைத் தொடும்..மீண்டும் நன்றி..

    ///////தினசரி அலவலக வாழ்க்கையில் ஆங்கிலத்தின் தாக்கம் என்ன என்பதை நன்றாகவே படம் பிடித்து விட்டீர்கள். நல்ல கதை நன்றி.///////


    ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை, வார்த்தைகளை தமிழ்ப்படுத்தி எழுதி இதே கதையைப் படித்துப் பார்த்தால் கொஞ்சம் கூட 'லைவ்' ஆக இருக்காது..

    உணர்வுகளை வெளிப்படுத்த அவசியமான விஷயங்களில் மொழியும் ஒன்று..

    தினசரி அலவலக வாழ்க்கையில் ஆங்கிலத்தின் தாக்கம் இருக்கிறது என்று எதார்த்தத்தை பின்னூட்டமாக வெளியிட்டதற்கு நன்றி..

    ReplyDelete
  18. ////////////thanusu said...

    மைனர் சார், அலுவலக கதை கலக்கலாவே இருந்தது. ராகவன் கதாபாத்திரம் சராசரி ஊழியனின் பிரதி.

    "ஏம்ப்பா கோவப்படுகிறாய் விட்டு கொடுது போ", "அந்த ஆளும் விடமாட்டாரு "-யாரையும் மனதில் வைத்து எழுதப்பட்ட வரிகளாக தெரியவில்லை.ஆனால் நல்ல வசனங்கள்./////////////////


    நன்றி..நன்றி..நன்றி...
    ப்ருனைக் காரரே..மனதில் பதிந்த வசனங்களைக் கோடிட்டுக் காட்டி விமர்சித்ததற்கு நன்றி..

    //////////சிலருக்கு திறமை சோறு போடும் சிலருக்கு விசுவாசம் சோறு போடும் = விசுவாசம் கண்டிப்பாக தேவையானது தானே சார் .//////////


    எங்கே யாரிடம் அது தேவை என்பதிலேயே இதன் பதில் இருக்கிறது..கதையின் சம்பவத்தின் தொடர்ச்சியில் அதன் பதில் புரியலாம்..

    துரோகி என்பவன் புதிதாக, அந்தரத்திலிருந்து குதித்தவனாக இருக்க முடியாது..விசுவாசமாக, கூடவே இருந்த உற்ற துணைவனாக இருந்து ஆபத்தில் தவிக்கவிட்டு ஓடியவனுக்குத்தான் இந்தப் பெயர் கிடைக்கும்..
    அதனால் துரோகிதான் விசுவாசியாகியிருந்தான்..
    விசுவாசிதான் துரோகியாக மாறிப்போகிறான்..
    துரோகி என்று சொல்லப்படுகிறவனின் ஆதரவாளர்கள் அவனைப் புரட்சியாளன் என்பார்கள்..
    விசுவாசியை இளிச்சவாயன்,ஜால்ரா என்றெல்லாம் கூட விமர்சிப்பார்கள்..

    அவரவர் சூழ்நிலை..சந்தர்ப்பம்....என்று தீர்மானிக்கும் காரணிகள் அதிகம்..

    உறவுகளில் ஏதோ ஒருவகை எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்க முடியாது..அது பொய்க்கும்போது வெளிப்படும் தாக்கத்துக்கு அந்தந்த பார்ட்டியைச் சார்ந்தோர் வைக்கும் பெயரே விசுவாசம்..துரோகம்
    எல்லாம்..

    மனிதன் சூழ்நிலைக்கைதி..ஏதோ ஒரு முடிவை எடுத்துத்தான் ஆகவேண்டும்..

    தொடர்ந்து தத்துவப் பூர்வமாக சிந்திக்கத் தூண்டியமைக்கு நன்றி தனுசு அவர்களே..

    ReplyDelete
  19. //////Sathish K said...
    நன்றி தனுர்ராசிக்காரர், kmr.கிருஷ்ணன் மற்றும் மைனர் சார்.
    Cell phone-ல் இருந்து அனுப்புவதால் அதிகம் எழுத முடியவில்லை.:-D;-)///////
    படித்ததுக்கே நன்றி..

    நேரம் கிடைக்கும் போது மெதுவா எழுதுங்க..இந்த ஜென்மத்துலே எப்போ வேணும்னாலும் கமென்ட் அடிக்கலாம்..நெட் ப்ளாக் எல்லாம் எங்க போகப் போகுது?

    ReplyDelete
  20. சபரியின் ஜோக்குகளில் என்னைக் கவர்ந்தது செகண்ட் அண்ட் பிஃப்த்.. ரசிக்கத்தகுந்த ஐன்ஸ்டீனின் ரிலேடிவிட்டி விஷயங்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

    தற்போது அணுப்பிளவு கொள்கையை அடிப்படையாகக்கொண்டே
    அணு மின்சாரம் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது..
    இனிவரும் காலங்களுக்காக சூரியனிலும் இன்னபிற நட்சத்திரங்களிலும் நிகழ்வது போன்றே அணுக்களை இணைத்து உருக்கி அதனடிப்படையில் மின்சாரம் தயாரிக்க சோதனை முறையிலான முயற்சிகள் உலகநாடுகளின் கூட்டு முயற்சியாக நடந்து வருகின்றன..

    எல்லாத்துக்குமே தலைவர் ஐன்ஸ்டீன் அண்ணன்தான் காரணம்..
    அவர் போட்டுக்கொடுத்த E=mc² என்ற கணக்குதான் காரணம்..

    ReplyDelete
  21. பொருத்தமாக ஆபிஸ் படம் ஒன்றையும் சேர்த்து விட்டிருக்கும் ஆசிரியருக்கு மீண்டும் ஒரு நன்றி..

    ReplyDelete
  22. ///துரோகி என்பவன் புதிதாக, அந்தரத்திலிருந்து குதித்தவனாக இருக்க முடியாது..விசுவாசமாக, கூடவே இருந்த உற்ற துணைவனாக இருந்து ஆபத்தில் தவிக்கவிட்டு ஓடியவனுக்குத்தான் இந்தப் பெயர் கிடைக்கும்..
    அதனால் துரோகிதான் விசுவாசியாகியிருந்தான்..
    விசுவாசிதான் துரோகியாக மாறிப்போகிறான்..///

    துரோகியப் பத்தி இப்படி விலாவாரியா விளக்கமா ஆராய்ச்சி கட்டுரை எழுதுறீங்களே நீங்க நெப்போலியன்தானா.... இல்லே சீசரா? ஏகப்பட்ட தடவை அனுபவபூர்வமா அடிபட்டு "யு டூ ப்ருட்டஸ்னு " நொந்து வெம்பியிருப்பீங்க போல

    ReplyDelete
  23. kmr.krishnan said....கவிதை அருமை. பாராட்டுக்கள். நன்றி நன்றி.

    தேமொழி said... நீங்கள் நிலவையும் விட்டுவைக்கவில்லை கட்டளை இடுவதில். ஆனால் இந்தக் கட்டளை நீங்கள் ஆசிரியரின் மாணவர் என்று அடையாளம் காட்டுகிறது.
    உண்மைதான் பாராட்டுக்கு நன்றி தோழி அவர்களே.

    minorwall said... அம்புலிமாமா(அத்தான்) தனுசு ராசிக்காரரின் கவிதை அருமை.. நன்றி மைனர் அவர்களே.
    minorwall saidசந்திரன் அவர் ஆசையைப் பூர்த்தி செய்து எனக்கு எழிலே உச்சமாகித் தங்கிவிட்டான்..

    கலக்குங்க. என் உத்தரவை ஏற்ற சந்திரனுக்கு பவுர்ணமியாக பதவி உயர்வு அளிக்கிறேன்.

    Sathish K said...நன்றி தனுர்ராசிக்காரர்,நன்றி சதீஷ்

    ReplyDelete
  24. வணக்கம் ஐயா,
    தனூர்ராசிகாரன் அவர்கள் எழுதிய கவிதை அருமை...சந்திராஷ்டமம் ஒரே ஒரு நாள் தானே, அதை கூட பொறுத்துக் கொள்ளலாம்,ஆனால் 7 1/2 ஆண்டுகளைத் தான் தாங்கிக் கொள்ள முடியாது...
    kmrk அவர்களின் "பேரனின் பிரார்த்தனை" மிக யதார்த்தம்...எனக்கு என் அம்மாவை மிகவும் பிடிக்கும்...நானும் என் அம்மாவிடம் இப்படி தான் எதையாவது கேட்டுக் கொண்டே நச்சரித்துக் கொண்டேயிருப்பேன் என்று என் அம்மா அடிக்கடி சொல்லுவார்...

    ReplyDelete
  25. மைனர் அவர்களின் சிறுகதை "சூப்பர்"...உண்மையில் வகுப்பறை மாணவர்கள் அனைவரையும் அவரது ஆஃபிஸுக்கு "டூர்" கூட்டிச் சென்றுவிட்டார் என்று நினைக்கிறேன்...ஒரு கம்பெனியில் வேலை செய்யும் அனைவரும் இதே போன்ற அனுப‌வங்களை நிச்சயம் சந்தித்திருப்பார்கள்,அதை அழகான தன் "ultra modern style"எழுத்துநடையால் சொல்லிய மைனர் அவர்களுக்கு நன்றி
    //கடந்த ஆறு மாசமாக ராகவனுக்கும் டைரெக்டருக்கும் நடுவிலான பனிப்போரில் குளிர்க்காயந்ததென்னவோ தனஞ்செயன்தான்//
    எனக்கு இதில் வரும் சொல்(அ)பொருள் விளையாட்டு மிகவும் பிடித்திருந்தது...

    ReplyDelete
  26. //உருக்கப்பெற்ற,மன அடிகளுக்கு ஆளான, மன அழுத்தங்களுக்கு ஆளான மனிதன்தான் நல்ல கணவனாகிறான்!//
    எனக்கும் இது தான் மிகவும் பிடித்திருந்தது...இப்படி சிந்தித்து "உண்மையை" கண்டறிந்த‌‌ அந்த (விஞ்)"ஞானியை" பாராட்டாமல் இருக்க முடியவில்லை...

    ReplyDelete
  27. //////////தேமொழி said...
    ///துரோகி என்பவன் புதிதாக, அந்தரத்திலிருந்து குதித்தவனாக இருக்க முடியாது..விசுவாசமாக, கூடவே இருந்த உற்ற துணைவனாக இருந்து ஆபத்தில் தவிக்கவிட்டு ஓடியவனுக்குத்தான் இந்தப் பெயர் கிடைக்கும்..
    அதனால் துரோகிதான் விசுவாசியாகியிருந்தான்..
    விசுவாசிதான் துரோகியாக மாறிப்போகிறான்..///

    துரோகியப் பத்தி இப்படி விலாவாரியா விளக்கமா ஆராய்ச்சி கட்டுரை எழுதுறீங்களே நீங்க நெப்போலியன்தானா.... இல்லே சீசரா? ஏகப்பட்ட தடவை அனுபவபூர்வமா அடிபட்டு "யு டூ ப்ருட்டஸ்னு " நொந்து வெம்பியிருப்பீங்க போல/////////

    சுய அனுபவம் சொல்லித்தரும் பாடத்தை வேறெந்தப் புத்தகமும் சொல்லித்தந்துவிட முடியாது..

    அந்தவகை அனுபவங்களும் எல்லோருக்குமே கிடைத்தும்விடாது..

    அந்த வகையிலே ஆசீர்வதிக்கப்பட்டவன்.....

    ReplyDelete
  28. ////////////thanusu said... \\\\\\\\\minorwall saidசந்திரன் அவர் ஆசையைப் பூர்த்தி செய்து எனக்கு எழிலே உச்சமாகித் தங்கிவிட்டான்..\\\\\\
    கலக்குங்க. என் உத்தரவை ஏற்ற சந்திரனுக்கு பவுர்ணமியாக பதவி உயர்வு அளிக்கிறேன்.///////////

    திரும்பவும் கட்டளையா?

    ReplyDelete
  29. எனக்கு மட்டுமல்ல வேதியியல்,பொளதிகம் மற்றும் வானவியில் மாணவர்கள் அனைவருக்குமே "ஏய்ன்ஸ்டீன்" என்ற பெயரே வேதமந்திரம் என்றால் அது மிகையாகாது...அவரது கண்டுப்பிடிப்புகளைப் போன்றே அவரது பேச்சும் அருமையாக இருக்கும்...அன்று அவரே வெறுத்த தன் கண்டுப்பிடிப்பான "அணுகுண்டை",இன்று பலரும் அவரை மறந்துவிட்டு "அணுகுண்டை" மட்டும் கொண்டாடுகிறார்கள்...

    இன்றைய ஆக்கங்கள் எல்லாம் "சூப்பர்"ஆக "ஸ்டாரை" போன்று மின்னுவதால் தான் வாத்தியார் ஐயா,"சூப்பர்ஸ்டாரை" குறிப்பால் சொல்லியுள்ளார் என்று நினைக்கிறேன்!

    ReplyDelete
  30. //////// R.Srishobana said...
    மைனர் அவர்களின் சிறுகதை "சூப்பர்"...உண்மையில் வகுப்பறை மாணவர்கள் அனைவரையும் அவரது ஆஃபிஸுக்கு "டூர்" கூட்டிச் சென்றுவிட்டார் என்று நினைக்கிறேன்...ஒரு கம்பெனியில் வேலை செய்யும் அனைவரும் இதே போன்ற அனுப‌வங்களை நிச்சயம் சந்தித்திருப்பார்கள்,அதை அழகான தன் "ultra modern style"எழுத்துநடையால் சொல்லிய மைனர் அவர்களுக்கு நன்றி
    //கடந்த ஆறு மாசமாக ராகவனுக்கும் டைரெக்டருக்கும் நடுவிலான பனிப்போரில் குளிர்க்காயந்ததென்னவோ தனஞ்செயன்தான்//
    எனக்கு இதில் வரும் சொல்(அ)பொருள் விளையாட்டு மிகவும் பிடித்திருந்தது.../////


    ஆஹா.."ultra modern style"எழுத்துநடையா..?சரிதான்..
    நன்றி..நன்றி..நன்றி..

    எந்த நேரத்தில் KMRK கண்(அ)டித்துத் துவங்கி வைத்தார் என்று தெரியவில்லை.. சொல்(அ)பொருள், (விஞ்)"ஞானியை"என்று நீங்களும் வார்த்தை விளையாட்டிலே இறங்கிவிட்டிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்..

    சட்டில்லான விஷயங்களை புரிந்து,எழுதி, படித்து, ரசிப்பது என்பது ஒருவகையில் ரெகுலர் மீடியாக்களில் வரும் பொழுதுபோக்கு விஷயங்களைக் கடந்து

    சுய எண்ணங்களில், சுயமான கற்பனைகளில் உழன்று,
    எண்ணவோட்டங்களில் மிதந்து
    a kind of utopian world டிலே நடந்து

    படைப்பாளியாகப் பரிணமிக்கும் ஒரு நிலையிலேதான் சாத்தியமாகும் என்று நினைக்கிறேன்..

    அந்த இடத்துக்கு வந்துசேர்ந்த உங்களை வரவேற்கிறேன்..

    ReplyDelete
  31. மைனர் அவர்களே உண்மையில் எனக்கு வகுப்பறைக்கு வந்த பிறகு பிடித்த தமிழ் மொழியை ரசித்து எழுதும் எண்ணமே எனக்கு வந்தது...அதற்கு வாத்தியார் ஐயா அவர்களும் kmrk அவர்களும் எழுதிய ஆக்கங்கள் தான்,நாமும் முயற்சி செய்வோமே என்று என்னை "ஏதோ" கொஞ்சம் எழுத செய்தது.மற்றபடி என்னை விட மிக அழகாக எழுதுபவர்கள் நம் வகுப்பறையிலேயே பலரும் இருக்கிறார்களே...
    அதனால் நான் வெறும் "சப்‍‍ ‍ஜூனியர்"மாணவி மட்டும் தான்.உங்களைப் போன்ற சீனியர்களிடம் கிடைத்த இந்தப் பாராட்டை ஊக்கமாக எடுத்துக் கொள்கிறேன்...

    ReplyDelete
  32. Uma S umas1234@gmail.com
    to "SP.VR.SUBBIAH"
    date 5 December 2011 14:27
    subject comment on vaaramalar

    தனுர்ராசிக்காரரின் கவிதை வழக்கம்போல் நன்று. அது சரி, எட்டில இருக்கும்போதே இப்படி கவிதையா பொழிகிறீர்களே, ஏழில் இருந்தால் கேட்கவே வேண்டாம்.

    எனக்கு முன்னால செத்துட்டா எனக்கு யார் சாப்பிட தோசை, பூரி எல்லாம் கொடுப்பா?//

    so cute !

    மைனர் எழுதிய கதை சூப்பர்! வரிக்கு வரி முடிவு என்ன என்ற ஆர்வம் கூடிக்கொண்டே போனது. ஆனால் வாசகர்களே ஊகித்துக்கொள்ளட்டும் என்று முடித்துவிட்டீர்கள் (ஒருவேளை இது தொடர்கதையோ?). இருந்தாலும் ராகவன் அந்த டைரக்டர் மேல கையை நீட்டினாரா இல்லையா என்று சொல்லியிருக்கலாமில்ல?

    எல்லா அலுவலகத்திலும் இது போன்ற ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    சபரியின் ஜோக்கில் மூன்றாவது எனக்குப் பிடித்திருந்தது.

    S.உமா, தில்லி

    ReplyDelete
  33. /////Uma said,

    மைனர் எழுதிய கதை சூப்பர்! வரிக்கு வரி முடிவு என்ன என்ற ஆர்வம் கூடிக்கொண்டே போனது. ஆனால் வாசகர்களே ஊகித்துக்கொள்ளட்டும் என்று முடித்துவிட்டீர்கள் (ஒருவேளை இது தொடர்கதையோ?). இருந்தாலும் ராகவன் அந்த டைரக்டர் மேல கையை நீட்டினாரா இல்லையா என்று சொல்லியிருக்கலாமில்ல?//////////////// மைனர் எழுதிய கதை சூப்பர்! வரிக்கு வரி முடிவு என்ன என்ற ஆர்வம் கூடிக்கொண்டே போனது. ஆனால் வாசகர்களே ஊகித்துக்கொள்ளட்டும் என்று முடித்துவிட்டீர்கள் (ஒருவேளை இது தொடர்கதையோ?). இருந்தாலும் ராகவன் அந்த டைரக்டர் மேல கையை நீட்டினாரா இல்லையா என்று சொல்லியிருக்கலாமில்ல?////////////

    எங்க மேடத்தக் காணோமின்னு நினச்சேன்..வந்துட்டீக...கபடமில்லாது மனந்திறந்து பாராட்டியதற்கு நன்றி..

    ////////ஒருவேளை இது தொடர்கதையோ?///////

    அது பற்றியும் இதே கதையிலே லாஸ்ட் லே சொல்லியிருக்கேன்..படித்துப் பாருங்க..'புரிஞ்சவுங்களுக்குப் புரியட்டும்..புரியாதவுங்களுக்குப் புரியாமலே போகட்டும்' என்கிற ரீதியிலே சட்டில்லா எழுதுறதிலே ஆர்வம்...
    படிச்சுப் புரிஞ்சுக்குறவங்க நாலு பேர் இருந்தாலும் அந்த நாலு பேரும் புத்திசாலியா இருந்தாப்போதும்ன்னு நினைக்குற ரகம் நான்..நன்றி..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com