மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.12.11

Astrology திருமணத்தடை நீங்க எங்கே மனுக்கொடுக்க வேண்டும்?


 Astrology  திருமணத்தடை நீங்க எங்கே மனுக்கொடுக்க வேண்டும்?

அந்தக் காலத்தில் பெண்ணிற்கு 18 வயதிலும், ஆணிற்கு 21 வயதிலும் திருமணத்தை செய்து வைத்துவிடுவார்கள். இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. படிப்பு, மேற்படிப்பு வேலை, பொருளாதார மேம்பாடு என்று பல காரணங்களால் பலருக்கும் திருமணம் தள்ளிக்கொண்டே போகின்றது    .

அதிலும் பெண்களுக்குத் தள்ளிக்கொண்டே போவது வருந்தற்குரியது. ஒரு பெண் 12 வயதில் பூப்படைகிறாள் என்றால், அவளுடைய வசந்தகாலம் 36 ஆண்டுகள். 48 வயதுவரை அவள் இனிமையான மணவாழ்விற்கு உகந்தவள். 18 வயதில் மணமுடித்தால் 30 ஆண்டுகாலம் அவளுடைய உரிமம் (License) செல்லத்தக்கதாக இருக்கும். 32 வயதில் மணம் முடித்தால் 20 ஆண்டு காலம் வீணாகக் கழிந்து அவளுடைய உரிமக் கணக்கில் 16 ஆண்டுகள் மட்டுமே பாக்கி இருக்கும்.

இந்தக் கணக்கை எல்லாம் யாரும் யோசிப்பதாகத் தெரியவில்லை.

தங்கள் வருமானத்தை அதிகப்படுத்துவதிலும், வங்கி இருப்பை உயர்த்துவதிலும், சொந்த வீடு வாங்குவதிலும், வாகனம் வாங்குவதிலும், தினமும் சரவணபவனில் வடை, பொங்கல், நெய்ரோஸ்ட் என்று வெட்டுவதிலுமே எல்லோரும் குறியாக இருக்கிறார்கள். இரண்டொரு பெற்றோர்கள் தங்கள் பெண்ணின் மணவாழ்க்கை குறித்துக் கவலைப் பட்டாலும், பெண் அதற்கு இசைவதில்லை. சில இடங்களில் சொல்லமுடியாத தவிப்பில் பெண் இருந்தாலும், பெற்றோர் கண்களில் அது படுவதில்லை.

எது எப்படி இருந்தாலும். திருமணம் ஆக வேண்டிய சூழ்நிலையில் அல்லது விருப்பத்தில் இருப்பவர்கள், லால்குடி அருகே இடையாற்று மங்கலத்தில் இருக்கும் மாங்கல்யேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று, அங்கே உறையும் நாதரின் தாள் பணிந்து மனுக் கொடுத்துவிட்டு வந்தால் திருமணம் உடனே கூடிவரும்.

அத்துடன் திரும்பும் வழியில் லால்குடிக்குச் சென்று, வாத்தியார் பெயரைச் சொன்னால். கே முத்துராமகிருஷ்ணர் வீட்டில் உங்களுக்கு அமுது படைத்து, கையில் வெற்றிலை பாக்குக் கொடுத்து அனுப்பி வைப்பார்கள். மோர்க்குழம்பு, வாழைப்பூ உசிலி, உருளைக்கிழங்கு காரகறி என்று வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டுப் பேருந்தைப் பிடிக்கலாம்.

திருமண கோரிக்கை உள்ளவர்கள் மட்டும்தான் செல்ல வேண்டுமா?

யார் வேண்டுமென்றாலும் செல்லலாம். குறிப்பாக உத்திர நட்சத்திரக்காரர்கள் அவசியம் சென்று வணங்க வேண்டிய ஸ்தலம் அது. அந்த நட்சத்திரக்காரர் களுக்கான கோவில் அது! அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் என்பது அதன் பெயர்

எங்கே உள்ளது?

திருச்சி நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அத்திருத்தலம்.

மூலவரின் பெயர்: மாங்கல்யேஸ்வரர். (சுயம்பு மூர்த்தி என்பது சிறப்பு)
அம்பிகையின் பெயர்: மங்களாம்பிகை
கோவில் இருக்கும் கிராமத்தின் பெயர்:     இடையாற்று மங்கலம்
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட புராதணக் கோவில்! பங்குனி உத்திரத்தில் கோவில் களை கட்டி திருவிழாக் கோலத்தில் இருக்கும்

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் உங்களின் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும்.
கோவிலின் அஞ்சல் முகவரி: அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் இடையாற்று மங்கலம் - 621 218 வாளாடி வழி, லால்குடி தாலுக்கா, திருச்சி மாவட்டம்.
    
மாங்கல்ய மகரிஷி உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். பல ரிஷிகளின் திருமணத்தை அவர் முன்னின்று நடத்தியவர். தனது தவ வலிமையால் அவர் இன்றும் அக்கோவிலில் ஈசனின் தாள் பணிந்து அங்கேயே உறைகின்றார் என்று நம்பப்படுகின்றது. மாங்கல்ய தாரண பூஜை நிகழ்த்துபவர். தவவலிமை மிக்கவர். உத்திர நட்சத்திரத்திற்கு மாங்கல்ய மங்கள வரம் நிறைந்திருப்பதால், அனைத்து தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவங்கள் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் நிகழ்கின்றன என்பதை மனதில் கொள்க!          
    
உத்திரம் நட்சத்திரக்காரர்கள் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரிடமும் இனிமையாகப் பழகுவார்கள். நன்றி மறவாதவர்கள். வாக்கு நாணயம் மிக்கவர்கள். இறை நம்பிக்கை மிக்கவர்கள். உத்திர நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் மற்றும் கஷ்டங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்வது நன்மை பயக்கும்

ஒருமுறை சென்று வாருங்கள். பலனைக் கண்டு வாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

45 comments:

  1. நல்ல பதிவு.
    நல்ல, பயனுள்ள தகவலுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  2. அய்யா வணக்கம் ,
    திருமணம் வயதை அடைந்தவர்கள் , திருமணத்திற்காக காத்துகொண்டு இருப்பவர்களுக்கு அருமையான பதிவு . நன்றி

    ReplyDelete
  3. கஞ்சாநகரம் பற்றி நேற்றும், இடையாற்றுமங்கலம் குறித்து இன்றும் எழுதியுள்ள அதிலும் சுவையாக எழுதியுள்ள விவரங்கள் படித்து மகிழ்ந்தேன். அந்தத் தலத்தின் முக்கியத்துவம் பற்றியது மட்டுமல்ல, இவ்விரு ஊர்களிலும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள் என்பதும் ஒரு காரணம். முந்தையதில் என் சிறுவயது முதல் என் அண்ணன் போல இருக்கும் என்.வைத்தியநாதனும், பின்னதில் ஈ.என்.கிருஷ்ணமூர்த்தி எனும் பொறியாளர் நண்பரும் இருக்கிறார்கள். இந்த இடையாற்றுமங்கலத்தில் பிறந்த நடராஜ ஐயர் என்பவர் தொடங்கியதுதான் இன்று திருச்சியில் சிறந்து விளங்கும் ஈ.ஆர்.மேல் நிலைப் பள்ளி. இந்த ஊரில் பிறந்த பலர் இன்று மிக உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். தாங்கள் எழுதியுள்ளதுபோல லால்குடி சென்று நண்பர் வீட்டில் நீங்கள் சொன்ன மெனு படி சாப்பிட்டு வரலாம்.

    ReplyDelete
  4. மாற்ற வில்லை என்பதால்
    மாறி விட வேண்டுமா... இல்லை

    மாற்றி விட வேண்டும்..
    மாற்ற வைக்கப்படும் ..

    போற்றுவோர் சிலர் போல
    துற்றுவோரும் இருக்கவே செய்வர்

    சீற்றம் கொள்வதும்.. அதனால்
    ஏற்றம் கொள்வதும் வாடிக்கையே

    தேற்றுவதாக இருக்க வேண்டுமென
    நாற்றமுள்ளதை நாம் எடுப்பானேன்

    ஆற்றுப்படுத்த தரும் செய்திகளுக்கு
    ஏமாற்றிக் கொள்வது எதற்காக

    ஊற்றாய் பெருகும் அன்பிற்கு
    குற்றம் ஏற்படுத்துவது ஒரெழுத்து தான்

    பிறப்பதும் நாம் வாழ்ந்து
    இறப்பதும் இயல்பே என்றாலும்

    மறுபடியும் சொல்கிறோம்
    வேறுபாடின்றியே இதனை....

    மாற்ற வில்லை என்பதால்
    மாறி விட வேண்டுமா... இல்லை

    மாற்றி விட வேண்டும்..
    மாற்ற வைக்கப்படும் ..


    வணக்கமும் ...
    வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  5. அடுத்து வருவது முருகரின் "விசாக நட்சத்திரம்" கோயில் :D

    ReplyDelete
  6. பல ஊர்களின் விவரங்களை தெரிந்துகொள்வது பயன் உள்ள தகவல்களே.
    லால்குடி சார் என் போன்றோருக்கு மெனுவில் மாற்றம் இருக்குமா நான் கொஞ்சம் அசைவப் பிரியன். சிதம்பரம் பக்கம் வரும் வாத்தியார், தஞ்சாவூர் அய்யா. மற்றும் வகுப்பறை கண்மணிகள் யாவருக்கும்,என் வீடு எப்பொழுதும் வரவேற்க காத்திருகிறது.

    ReplyDelete
  7. Ayya Vannakkam,

    Utthiram Nachatthira Kovil mattrum thirumana thadai neekkum kovil patriya thagaval super.

    Iam waiting to my Natchathiram-SWATHY.

    ReplyDelete
  8. Ayya Vanakkam,

    Melum utthirm SABARI VASAN SRI IYAPPAN avargalin natchathiramum kooda.

    Athai pattri konjam thagavalgal irunthal parava illai,
    Ithu iyappa matham so please write about sri iyyappan.

    Thanks/Sengotaian.P.K,Tirupur.

    ReplyDelete
  9. வாத்தியார் அய்யா அவர்கட்கு வணக்கம்,

    நட்சத்திரங்களுகான ஆலயங்களை பற்றி எழுதத் தொட்ங்கியுள்ளீர்கள்.
    மிகவும் நல்ல விடயம்.ஆண்டவன் கருணை வைத்தால் அடுத்த வருடமாவது
    தாய்த்தமிழகம் வந்து ஒரு நீண்ட யாத்திரை ஆலயங்களுக்கு செல்ல எண்ணியுள்ளேன்.உங்களின் இந்த தொடரில் வரும் ஆலயங்கள் பற்றி குறிப்பு
    மிகவும் உதவியாக இருக்கும். மிக்க நன்றிகள்.

    தயவு செய்து எனது முன்னைய வேண்டுதலையும் [இரண்டு நாட்களுக்கு முன்னைய பின்னூட்டம்] உங்களால் இயன்றபொழுது கவனிக்கவும்.மிக்க நன்றிகள்.
    சுதன்,டொரொன்டொ
    கனடா.

    ReplyDelete
  10. நட்சத்திர கோயில்கள் பதிவிற்கு நன்றி.
    இதைப் பற்றி மேலும் தகவல்கள் அதாவது புராண அல்லது ஜோதிட சான்றுகள் இருந்தால் நன்றாக இருக்கும்.

    லால்குடி அருகில் ஒரு மலையுச்சியில் லலிதாம்பிகை கோயில் இருக்கிறது என்று நினைக்கிறேன். krishnan sir, is it right...?

    //மோர்க்குழம்பு, வாழைப்பூ உசிலி, உருளைக்கிழங்கு காரகறி //
    அருமையான காம்பினேஷன். கதை எழுத தெரிந்தால் இதையே ஒரு கதையாக எழுதுவேன். அத்தனை அருமையான காம்பினேஷன்.

    ReplyDelete
  11. நல்ல பதிவு ஐயா.
    தாங்கள் இத்தகைய பதிவு எழுதும் போது இலங்கையில் இருப்போர் வந்து போகக் கூடிய மார்க்கங்களையும் தங்குமிட வசதிகளையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்குமே. எங்களையும் மறந்திடாதங்க சார்.

    ReplyDelete
  12. ஏழுஸ்வரத்தில் எத்தனை பாடல் எப்படியோ
    பூவும் புஷ்பமும் எப்படியோ
    அப்படியே பிறத்தலும் உதித்தாலும்.

    பிறப்பை சொல்வது பிரசவம்.
    பகுத்தால் பிர-சவம்
    பொருளால் சவத்தை பிறக்க சொல்வதே.

    பிரசவம் பிழை இல்லை
    பிர-சவமும் குறை இல்லை

    ReplyDelete
  13. பயனுள்ள தகவலுக்கு நன்றி ஐயா.

    www.rishvan.com

    ReplyDelete
  14. வணக்கம் ஐயா,
    என்னுடைய நட்சத்திரமும் உத்திரம் தான்.இன்றைய பதிவு முழுக்க எனக்கும் என் போன்று உத்திர நட்சத்திரத்தில் பிறந்த அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தக‌வல்களை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா...
    நட்சத்திரங்களைப் பற்றியும் விளக்கங்கள் தந்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா...
    நான் பிறந்த‌ நட்சத்திரம் நல்ல நட்சத்திரம் என்பது மட்டுமே எனக்கு தெரியும் ஆனால் இவ்வளவு சிறப்புகளைக் கொண்டது என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன்...
    தேமொழி சகோதரியின் யூகம் தான் என்னுடையதும்,"விசாகம்" தான்,சரி தானே ஐயா...

    ReplyDelete
  15. Ayya,

    Supero super information for people who are waiting for marriage.

    Student,
    Trichy Ravi

    ReplyDelete
  16. ///ஏழுஸ்வரத்தில் எத்தனை பாடல் எப்படியோ
    பூவும் புஷ்பமும் எப்படியோ
    அப்படியே பிறத்தலும் உதித்தாலும்.///

    உங்கள் கருத்திற்கு
    நன்றி தனுசு அவர்களே..

    இருவேறு மொழிகளில் பூவும் புஷ்பமும்
    இனிதே ஒன்றாகும்..

    பிறத்தலும் உதித்தலும்
    சிறப்பால் வேறுபடுவதென்பதே சரி..

    இல்லாதது பிறக்கும்..
    இருந்த பின் இறக்கும்..

    ஏற்கனவே உள்ளது உதிக்கும்..
    எப்போதும் அதுவே சிறக்கும்..

    கனிஷ்டனாக பிறந்தவன் ராமன்
    கடவுளாக கும்பிடபட்டும் இறந்தான்

    கோபியரின் தலைவன் கிருட்டிணன்
    சோபிக்கவில்லை அவனும் இறந்தான்

    ஏசுவும் பிறந்தான்..
    ஏந்திய சிலுவையிலே இறந்தான்

    இவர்கள் எல்லோருக்கும் கர்ப்பவாசம்
    இவருக்கு அது போலில்லை வேஷம்..

    அம்மா என்ற உயிருக்கு சிரமம் தருவது
    அடுத்தடுத்து பிறப்பது..

    அருணகிரியார் வணங்கி போற்றிய
    அம்மான் முருகன் நம் சிரமங்களை

    போக்குபவன், எதிரிகளை அன்பால்
    நோக்குபவன் அவனை பிறத்தல் என்ற

    இழிசொல்லால் குறிக்கலாகது என்றே
    இதுவரையில் யாரும் அப்படி சொல்ல

    கூடாதென்றே அருணையார்
    கந்தர் அனுபூதியில்

    பெம்மான் முருகன்
    பிறவான் இறவான் என தெளிவுபடுத்தி உள்ளார்..

    எடுத்துச் சொல்லியும் செவி
    மடுக்க மறுக்கும் பெரியோரை எண்ணி

    மாற்றம் வரும் வரை
    மன்றாடுகிறேன் உங்களுடன் சேர்ந்தே

    ReplyDelete
  17. ///பிறப்பை சொல்வது பிரசவம்.
    பகுத்தால் பிர-சவம்
    பொருளால் சவத்தை பிறக்க சொல்வதே.

    பிரசவம் பிழை இல்லை
    பிர-சவமும் குறை இல்லை///


    கர்ப்பவாசம் தரிப்பதை பிறப்பென்றும்
    பிறப்பதெல்லாம் இறக்குமென்பதும்

    சொல்லித் தெரிவதில்லை யாருக்கும்
    சொல்லித்தான் ஆகவேண்டுமெனில்..?

    பிரசவத்தை பிரிக்கவேண்டும்
    பிரிக்க முடியாத சொல் உதித்தல்

    உயிரை விட்டு பிரியாத தலை என்றே
    உள்ளபடியே சித்தியாரும் சொல்லும்

    அய்யன் வள்ளுவனின் வாக்கிலுள்ளது
    அப்படியே உங்கள் சிந்தனைக்கு

    ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

    பிறத்தல் வேறு
    உதித்தல் வேறு

    வாய்வழியாக சாப்பிடுகிறோம் என்பதற்காக எங்கேயும் சாப்பிடுகிறோமா
    டைனிங்ஹாலில் தானே சாப்பிடுகிறோம்

    பெரியதட்டில் சாப்பிட உணவிட்டால் கொஞ்சமாக சாப்பிட்ட உணர்வும்

    சிறிய தட்டில் உணவருந்துதல்
    அதிகம் சாப்பிட் உணர்வினை தருவதும்

    கருத்தை பிழிந்து சொல்லை செதுக்கும்
    கவிஞரே நீர் அறியாத விஷயமா?

    டப்பாவில் உள்ள மாவு காலியாக
    டப்பாவிற்கு பெரிய ஸ்பூன் போடு

    என்ற எளிமையான அணுகுமுறை
    எண்ணத்தில் வந்தது தானே..

    இதை சொல்லாமல்
    படுத்துக் கொண்டு போர்த்துதலும்
    போர்த்துக் கொண்டு படுத்தலுமென்றால்

    உலகத்தை மாற்றவே விரும்புகின்றனர்
    தன்னை மாற்ற மறந்து விடுகின்றனர்..

    தரணி காக்கும்
    தமிழ்கடவுளே வருவான் ..

    மாற்றவான் திருத்துவான்..
    மனங்கலங்காமல் காத்திருக்கிறோம்..

    அன்பு கருத்துக்கு நன்றி
    தனுசு அவர்களே..

    ReplyDelete
  18. விவாதங்கள் என்பது புரிந்து கொள்ளப்படாத விஷயங்களைப்

    புரிந்து கொள்வதற்காகச் செய்யப்படும் கருத்துப் பறிமாற்றங்கள்தாம்.

    புரிந்து கொள்ளப்படாதவைகளைப்
    புரிய வைப்பதற்காகச் செய்யப்படும்

    கருத்துப் பறிமாற்றங்களும் புரியா விஷயங்களாக அமைந்தால் அவை

    எவ்வாறு விவாதங்களாக முடியும்?.

    உதித்தல் என்ற சொல்லை திருக்குர்ஆனின் 18வது அத்தியாயத்தை புரட்டுங்கள் 86 மற்றும் 89வது வசனங்களை தேடுங்கள்


    இந்த பாடலினை உங்களுக்கு பரிசாக
    இப்பவும் சுழல விடுகிறோம்..


    கண்போன போக்கிலே
    கால் போகலாமா..

    கால் போன போக்கிலே
    மனம் போகலாமா..

    மனம் போன போக்கிலே
    மனிதன் போகலாமா..

    மனிதன் போன பாதையை
    மறந்து போகலாமா..

    நீ.. பார்த்த பார்வைகள்
    கனவோடு போகும்..

    நீ.. சொன்ன வார்த்தைகள்
    காற்றோடு போகும்..

    ஊர்பார்த்த உண்மைகள்
    உனக்காக வாழும்...

    உணராமல் போவோருக்கு
    உதவாமல் போகும்..

    புரியாத சில பேருக்கு புது நாகரீகம்..
    புரியாத பல பேருக்கு இது நாகரீகம்..

    முறையாக வாழ்வோருக்கு
    எது நாகரீகம்..

    முன்னோர்கள் சொன்னார்கள்
    அது நாகரீகம்..

    திருந்தாத உள்ளங்கள்
    இருந்தென்ன லாபம்..

    வருந்தாத உருவங்கள்
    பிறந்தென்ன லாபம்..

    இருந்தாலும் மறைந்தாலும்
    பேர் சொல்ல வேண்டும்..

    இவர் போல யார் என்று
    ஊர் சொல்ல வேண்டும்..

    ReplyDelete
  19. வாத்தியாரே!

    பரவாயில்லையா. ஒமக்கு உண்மைலேயே பெரிய மனசுதான்யா. ஓமர்ட்ட பேசுறதுல பெருமையும் சந்தோசமும் படுறேன். ஓமர் சைட்டுல அடுத்த நபரை பற்றி சொல்லிருக்கிரீரே. அத சொன்னன். அதான் அந்த லால்குடி கிருஷ்ணனை பற்றி. அவருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகளை சொல்லிக்கிறேன். எதுக்குன்னா பக்தர்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு அவங்க மனசையும் நெரச்சிடுறாரே அந்த ஆன்மீக சேவைக்கு நான் தலைவணங்கித்தான் ஆகணும். அவருக்கும் நன்றி. அவர பத்தி சொன்ன ஒங்களுக்கும் என்னோட நன்றிகள்.

    ReplyDelete
  20. அய்யா வணக்கம்,அருமையான பதிவு. நன்றி!

    ReplyDelete
  21. இப்போதுதான் கட்டுரையை முழுதும் படிக்க வாய்த்தது.

    லால்குடி சப்த்ரிஷீஸ்வரர் கோவிலிலும் மாங்கலய மகரிஷியின் சிலா ரூபம் உள்ளது. இங்கு அம்பாள் ஸ்ரீமதி கிழக்கு நோக்கியும், சுவாமி மேற்கு நோக்கியும் இருப்பதால் இது மாலை மாற்றும் அமைப்பு என்பதால் லால்குடி சிவன் கோவிலும் திருமண ஸ்தலம் தான். மேலும் அமிர்த கடேஸ்வரருக்கு தனிச் சன்னிதி உள்ளதால் 60,80 திருமணங்களும் இங்கு செய்வது விசேஷம்.

    நமது வாத்தியாரைப் போலவே நானும் நல்ல சாப்பாட்டு ரசிகன். மோர்க்குழம்பு, உருளைக் காரக்கறி,வாழைப்பூ உசிலி நல்ல காம்பினேஷந்தான்.மாமியும் ருசியாகச் செய்வார்கள்.அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். வருக. வருக.வருக.அசைவ நண்பருக்கு நம் வீட்டு சாப்பாடு இல்லை. ஓட்ட‌லில் ஏற்பாடு செய்கிறேன்.ஆனால் ஸ்தல யாத்திரையின் போது அசைவம் தவிர்க்கலாம்தானே?

    நம் வகுப்பறை மாணவர்கள் விருப்பம் தெரிவித்தால் ஒரு மாணவர் சந்திப்பு லால்குடியில் நடத்தலாம். அப்போது திருச்சி மாவட்டப் புண்ணியத் தல யாத்திரை செய்யலாம். சனி, ஞாயிறு இரண்டு நாள் வேண்டும்.உணவுச் செலவு முழுவதும் என்னுடையது.தங்கும் இடமும் என் பொறுப்பு. வேன் செலவு பகிர்ந்து கொள்ள வேண்டும்.ஒரு 10,15 பேர் சேர்ந்தாலும் போதுமானது.

    குன்றின் மேல் லலிதாம்பிகை எனக்குத் தெரியவில்லை கேட்டுப் பார்க்கிறேன்.

    லால்குடியில் இருந்து 3 கி மி தூரத்தில் திருமங்கலம் என்ற ஊரில் அ/மி சாமவேதீஸ்வரர் ஆலயம் உள்ளது.2000 வருடத்துக் கோவில்.ஆநிரை நாயனார் என்று 63வரில் ஒருவர் அவதரித்த‌ ஊர்.வேதத்தின் பெயரால் எந்த ஸ்வாமியும் அழைக்கப்படவில்லை. யஜுர் வேதீஸ்வரர் என்றோ,ரிக் வேதீஸ்வரர், அதர்வ வேதீஸ்வரர் என்றோ திருநாமம் உள்ளதா? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும். வேதபுரீஸ்வரர் இருக்கலாம். ஆனால் சாமவேதீஸ்வரர் போல வேதப்பெயருடன் கோவில் உள்ள‌தா? இங்கேதான் அப்படி உள்ளது. அதிலும் பகவத் கீதையில் நான் வேதங்களில் சாமவேதம் என்று கிருஷ்ணனே சொல்லியுள்ளார்.பரம‌சிவனுக்குப் பிரியமானது சாம வேதம் அல்லவா?

    நான் சாம வேதி.எனக்கு அதனால் சாமவேதீஸ்வரர் மேல் ஒரு பற்று விழுந்துவிட்டது. கும்பாபிஷேகம் ஆகி 8 வருடங்கள் ஆகிறதாம் இன்னும் 4 வருடங்களில் மீண்டும் செய்யலாம். ஆகவே இப்போதில் இருந்தே அதற்கான பிரசாரத்தைத் துவங்கி விட்டேன்.

    முதல் வேலையாக சாமவேதம் எம் பி 3 ஆகவாவது அங்கு ஒலிக்கச்செய்ய வேண்டும்.யாராவது தர்மவான் ஒலிக்கருவிகள் வாங்கிக்கொடுக்க முன் வரலாமே!

    ReplyDelete
  22. ////Blogger Rathnavel said...
    நல்ல பதிவு.
    நல்ல, பயனுள்ள தகவலுக்கு நன்றி ஐயா.//////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. /////Blogger sekar said...
    அய்யா வணக்கம் ,
    திருமணம் வயதை அடைந்தவர்கள் , திருமணத்திற்காக காத்துகொண்டு இருப்பவர்களுக்கு அருமையான பதிவு . நன்றி//////

    நல்லது. நன்றி சேகர்!

    ReplyDelete
  24. ///////Blogger Thanjavooraan said...
    கஞ்சாநகரம் பற்றி நேற்றும், இடையாற்றுமங்கலம் குறித்து இன்றும் எழுதியுள்ள அதிலும் சுவையாக எழுதியுள்ள விவரங்கள் படித்து மகிழ்ந்தேன். அந்தத் தலத்தின் முக்கியத்துவம் பற்றியது மட்டுமல்ல, இவ்விரு ஊர்களிலும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள் என்பதும் ஒரு காரணம். முந்தையதில் என் சிறுவயது முதல் என் அண்ணன் போல இருக்கும் என்.வைத்தியநாதனும், பின்னதில் ஈ.என்.கிருஷ்ணமூர்த்தி எனும் பொறியாளர் நண்பரும் இருக்கிறார்கள். இந்த இடையாற்றுமங்கலத்தில் பிறந்த நடராஜ ஐயர் என்பவர் தொடங்கியதுதான் இன்று திருச்சியில் சிறந்து விளங்கும் ஈ.ஆர்.மேல் நிலைப் பள்ளி. இந்த ஊரில் பிறந்த பலர் இன்று மிக உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். தாங்கள் எழுதியுள்ளதுபோல லால்குடி சென்று நண்பர் வீட்டில் நீங்கள் சொன்ன மெனு படி சாப்பிட்டு வரலாம்.//////

    அந்த இரு ஊர்களுக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு பற்றிய மேலதிகத்தகவல்களுக்கு நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  25. ////Blogger iyer said...
    மாற்ற வில்லை என்பதால்
    மாறி விட வேண்டுமா... இல்லை
    மாற்றி விட வேண்டும்..
    மாற்ற வைக்கப்படும் ..
    போற்றுவோர் சிலர் போல
    துற்றுவோரும் இருக்கவே செய்வர்
    சீற்றம் கொள்வதும்.. அதனால்
    ஏற்றம் கொள்வதும் வாடிக்கையே
    தேற்றுவதாக இருக்க வேண்டுமென
    நாற்றமுள்ளதை நாம் எடுப்பானேன்
    ஆற்றுப்படுத்த தரும் செய்திகளுக்கு
    ஏமாற்றிக் கொள்வது எதற்காக
    ஊற்றாய் பெருகும் அன்பிற்கு
    குற்றம் ஏற்படுத்துவது ஒரெழுத்து தான்
    பிறப்பதும் நாம் வாழ்ந்து
    இறப்பதும் இயல்பே என்றாலும்
    மறுபடியும் சொல்கிறோம்
    வேறுபாடின்றியே இதனை....
    மாற்ற வில்லை என்பதால்
    மாறி விட வேண்டுமா... இல்லை
    மாற்றி விட வேண்டும்..
    மாற்ற வைக்கப்படும் ..
    வணக்கமும் ...
    வாழ்த்துக்களும்...//////

    நல்லது. நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  26. ////////Blogger தேமொழி said...
    அடுத்து வருவது முருகரின் "விசாக நட்சத்திரம்" கோயில்////

    இன்றைய (8.12.11) பதிவைப் பாருங்கள் சகோதரி!

    ReplyDelete
  27. ////////Blogger thanusu said...
    பல ஊர்களின் விவரங்களை தெரிந்துகொள்வது பயன் உள்ள தகவல்களே.
    லால்குடி சார் என் போன்றோருக்கு மெனுவில் மாற்றம் இருக்குமா நான் கொஞ்சம் அசைவப் பிரியன். சிதம்பரம் பக்கம் வரும் வாத்தியார், தஞ்சாவூர் அய்யா. மற்றும் வகுப்பறை கண்மணிகள் யாவருக்கும்,என் வீடு எப்பொழுதும் வரவேற்க காத்திருகிறது.///////

    அசைவம் எனக்கு எட்டாத தூரம். சிதம்பரம் வந்தால் வருகிறோம். தேநீர் கொடுங்கள் போதும். நன்றி!

    ReplyDelete
  28. /////Blogger redfort said...
    Ayya Vannakkam,
    Utthiram Nachatthira Kovil mattrum thirumana thadai neekkum kovil patriya thagaval super.
    Iam waiting to my Natchathiram-SWATHY./////

    நான் ஒரு கணக்கில் எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த வரிசையில் உங்கள் நட்சத்திரமும் ஒரு நாள் வரும்!

    ReplyDelete
  29. /////Blogger redfort said...
    Ayya Vanakkam,
    Melum utthirm SABARI VASAN SRI IYAPPAN avargalin natchathiramum kooda.
    Athai pattri konjam thagavalgal irunthal parava illai,
    Ithu iyappa matham so please write about sri iyyappan.
    Thanks/Sengotaian.P.K,Tirupur./////

    அதுபற்றிப் பிறகு எழுதுகிறேன். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  30. Blogger suthank said...
    வாத்தியார் அய்யா அவர்கட்கு வணக்கம்,
    நட்சத்திரங்களுகான ஆலயங்களை பற்றி எழுதத் தொட்ங்கியுள்ளீர்கள்.
    மிகவும் நல்ல விடயம்.ஆண்டவன் கருணை வைத்தால் அடுத்த வருடமாவது
    தாய்த்தமிழகம் வந்து ஒரு நீண்ட யாத்திரை ஆலயங்களுக்கு செல்ல எண்ணியுள்ளேன்.உங்களின் இந்த தொடரில் வரும் ஆலயங்கள் பற்றி குறிப்பு மிகவும் உதவியாக இருக்கும். மிக்க நன்றிகள்.
    தயவு செய்து எனது முன்னைய வேண்டுதலையும் [இரண்டு நாட்களுக்கு முன்னைய பின்னூட்டம்] உங்களால் இயன்றபொழுது கவனிக்கவும்.மிக்க நன்றிகள்.
    சுதன்,டொரொன்டொ
    கனடா.///////

    உங்களின் தனி மின்னஞ்சலுக்கான பதில் இரண்டொரு நாளில் வரும். நேரமின்மைதான் தாமதத்திற்குக் காரணம்!

    ReplyDelete
  31. Blogger sriganeshh said...
    நட்சத்திர கோயில்கள் பதிவிற்கு நன்றி.
    இதைப் பற்றி மேலும் தகவல்கள் அதாவது புராண அல்லது ஜோதிட சான்றுகள் இருந்தால் நன்றாக இருக்கும்.
    லால்குடி அருகில் ஒரு மலையுச்சியில் லலிதாம்பிகை கோயில் இருக்கிறது என்று நினைக்கிறேன். krishnan sir, is it right...?
    //மோர்க்குழம்பு, வாழைப்பூ உசிலி, உருளைக்கிழங்கு காரகறி //
    அருமையான காம்பினேஷன். கதை எழுத தெரிந்தால் இதையே ஒரு கதையாக எழுதுவேன். அத்தனை அருமையான காம்பினேஷன்./////

    சான்றுகள் இல்லை! அந்தக்காலத்தில் அதற்கான சாதனங்கள் இல்லாதிருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்! இல்லை என்றால், உங்களைப் போன்ற சான்றுப் பிரியர்கள் அவற்றைப் படமாக்கி வைத்திருப்பார்களே!

    ReplyDelete
  32. Blogger Raja said...
    நல்ல பதிவு ஐயா.
    தாங்கள் இத்தகைய பதிவு எழுதும் போது இலங்கையில் இருப்போர் வந்து போகக் கூடிய மார்க்கங்களையும் தங்குமிட வசதிகளையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்குமே. எங்களையும் மறந்திடாதங்க சார்./////

    கூகுள் தேடலில் நீங்கள் கேட்கும் மற்ற விவரங்கள் அனைத்தும் கிடைக்கும் நண்பரே!

    ReplyDelete
  33. /////Blogger thanusu said...
    ஏழுஸ்வரத்தில் எத்தனை பாடல் எப்படியோ
    பூவும் புஷ்பமும் எப்படியோ
    அப்படியே பிறத்தலும் உதித்தலும்.
    பிறப்பை சொல்வது பிரசவம்.
    பகுத்தால் பிர-சவம்
    பொருளால் சவத்தை பிறக்க சொல்வதே.
    பிரசவம் பிழை இல்லை
    பிர-சவமும் குறை இல்லை//////

    நல்லது. நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  34. /////Blogger Rishvan said...
    பயனுள்ள தகவலுக்கு நன்றி ஐயா.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  35. /////Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    என்னுடைய நட்சத்திரமும் உத்திரம் தான்.இன்றைய பதிவு முழுக்க எனக்கும் என் போன்று உத்திர நட்சத்திரத்தில் பிறந்த அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தக‌வல்களை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா...
    நட்சத்திரங்களைப் பற்றியும் விளக்கங்கள் தந்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா...
    நான் பிறந்த‌ நட்சத்திரம் நல்ல நட்சத்திரம் என்பது மட்டுமே எனக்கு தெரியும் ஆனால் இவ்வளவு சிறப்புகளைக் கொண்டது என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன்...
    தேமொழி சகோதரியின் யூகம் தான் என்னுடையதும்,"விசாகம்" தான்,சரி தானே ஐயா.../////

    இது உங்களுடைய நட்சத்திரம் என்று சொன்னமைக்கு நன்றி சகோதரி! அடுத்து என்ன நட்சத்திரம் என்ற உங்களின் ஆர்வத்திற்கும் நன்றி. இன்றைய (8.12.11) பதிவைப் பாருங்கள்

    ReplyDelete
  36. ////Blogger Ravichandran said...
    Ayya,
    Supero super information for people who are waiting for marriage.
    Student,
    Trichy Ravi/////

    நன்றியோ நன்றி!

    ReplyDelete
  37. //////Blogger iyer said...
    ///ஏழுஸ்வரத்தில் எத்தனை பாடல் எப்படியோ
    பூவும் புஷ்பமும் எப்படியோ
    அப்படியே பிறத்தலும் உதித்தாலும்.///
    உங்கள் கருத்திற்கு
    நன்றி தனுசு அவர்களே..
    இருவேறு மொழிகளில் பூவும் புஷ்பமும்
    இனிதே ஒன்றாகும்..
    பிறத்தலும் உதித்தலும்
    சிறப்பால் வேறுபடுவதென்பதே சரி..
    இல்லாதது பிறக்கும்..
    இருந்த பின் இறக்கும்..
    ஏற்கனவே உள்ளது உதிக்கும்..
    எப்போதும் அதுவே சிறக்கும்..
    கனிஷ்டனாக பிறந்தவன் ராமன்
    கடவுளாக கும்பிடபட்டும் இறந்தான்
    கோபியரின் தலைவன் கிருட்டிணன்
    சோபிக்கவில்லை அவனும் இறந்தான்
    ஏசுவும் பிறந்தான்..
    ஏந்திய சிலுவையிலே இறந்தான்
    இவர்கள் எல்லோருக்கும் கர்ப்பவாசம்
    இவருக்கு அது போலில்லை வேஷம்..
    அம்மா என்ற உயிருக்கு சிரமம் தருவது
    அடுத்தடுத்து பிறப்பது..
    அருணகிரியார் வணங்கி போற்றிய
    அம்மான் முருகன் நம் சிரமங்களை
    போக்குபவன், எதிரிகளை அன்பால்
    நோக்குபவன் அவனை பிறத்தல் என்ற
    இழிசொல்லால் குறிக்கலாகது என்றே
    இதுவரையில் யாரும் அப்படி சொல்ல
    கூடாதென்றே அருணையார்
    கந்தர் அனுபூதியில்
    பெம்மான் முருகன்
    பிறவான் இறவான் என தெளிவுபடுத்தி உள்ளார்..
    எடுத்துச் சொல்லியும் செவி
    மடுக்க மறுக்கும் பெரியோரை எண்ணி
    மாற்றம் வரும் வரை
    மன்றாடுகிறேன் உங்களுடன் சேர்ந்தே/////

    எடுத்துச் சொல்லியும் செவிமடுக்க மறுக்கும் பெரியோரை - என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நான் எல்லோருக்குமே செவி மடுப்பேன். செவியில் விழுந்ததைச் செயல்படுத்த சற்று நேரம் பிடிக்கும். அவ்வளவுதான். உங்கள் விருப்பத்தைப் பதிவில் இன்று செய்துவிட்டேன். நாள் ஒன்றிற்கு எனக்கு மட்டும் 48 மணி நேரம் கொடுக்கும்படி முருகப்பெருமானை பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறேன். அவர் மனது வைத்து அது சாத்தியப்பட்டால், அவ்வப்போது அனைத்தையும் செய்துமுடிப்பேன். வலைப் பதிவிற்கு என்று ஒரு 8 மணி நேரத்தைத் தனியாக ஒதுக்கிவிடுவேன்!

    ReplyDelete
  38. /////Blogger iyer said...
    விவாதங்கள் என்பது புரிந்து கொள்ளப்படாத விஷயங்களைப்
    புரிந்து கொள்வதற்காகச் செய்யப்படும் கருத்துப் பறிமாற்றங்கள்தாம்.
    புரிந்து கொள்ளப்படாதவைகளைப்
    புரிய வைப்பதற்காகச் செய்யப்படும்
    கருத்துப் பறிமாற்றங்களும் புரியா விஷயங்களாக அமைந்தால் அவை
    எவ்வாறு விவாதங்களாக முடியும்?.
    உதித்தல் என்ற சொல்லை திருக்குர்ஆனின் 18வது அத்தியாயத்தை புரட்டுங்கள் 86 மற்றும் 89வது வசனங்களை தேடுங்கள்/////

    நல்லது. மேலதிகத்தகவல்களுக்கு நன்றி விசுவநாதன்

    ReplyDelete
  39. Blogger சுதீப் said...
    வாத்தியாரே!
    பரவாயில்லையா. ஒமக்கு உண்மைலேயே பெரிய மனசுதான்யா. ஓமர்ட்ட பேசுறதுல பெருமையும் சந்தோசமும் படுறேன். ஓமர் சைட்டுல அடுத்த நபரை பற்றி சொல்லிருக்கிரீரே. அத சொன்னன். அதான் அந்த லால்குடி கிருஷ்ணனை பற்றி. அவருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகளை சொல்லிக்கிறேன். எதுக்குன்னா பக்தர்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு அவங்க மனசையும் நெரச்சிடுறாரே அந்த ஆன்மீக சேவைக்கு நான் தலைவணங்கித்தான் ஆகணும். அவருக்கும் நன்றி. அவர பத்தி சொன்ன ஒங்களுக்கும் என்னோட நன்றிகள்.//////

    உங்களின் தமிழ் நன்றாக (வித்தியாசமாக) இருக்கிறது. எந்த ஊர் தமிழ் சுவாமி?

    ReplyDelete
  40. /////Blogger Yoga.S.FR said...
    அய்யா வணக்கம்,அருமையான பதிவு. நன்றி!///////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  41. சொன்னவுடன் ஏற்கும்
    பண்பாளர் பாசமிகு லால்

    குடியாரின் விருந்து வரவேற்பிற்கு
    மடி நிறைந்த அன்புடன் நன்றிகள்...

    அவரின் அந்த முயற்சிகள்
    அவன் விரும்பியபடியே அமைய

    திருமுன் வேண்டி நிற்கிறோம்
    திருக்கருணை பெற்றிடவே..


    வணக்கமும்
    வாழ்த்துக்களும்..

    ReplyDelete
  42. வணக்கம் ஐயா,

    என்னுடைய நட்சத்திரமும் உத்திரம் தான்.
    எனக்கும் என் போன்று உத்திர நட்சத்திரத்தில் பிறந்த அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தக‌வல்களை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  43. " கே முத்துராமகிருஷ்ணர் வீட்டில் உங்களுக்கு அமுது படைத்து, கையில் வெற்றிலை பாக்குக் கொடுத்து அனுப்பி வைப்பார்கள். மோர்க்குழம்பு, வாழைப்பூ உசிலி, உருளைக்கிழங்கு காரகறி என்று வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டுப்"

    enakku innamum kalyanam aakavillai. athukka illai enrulum intha sappattukka nan virail lalkudi selven.

    ReplyDelete
  44. என் உறவினர்கள் ஒரிருவர்களின் பிள்ளைகள் திருமண தடையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தியை அவர்களுக்கு சொள்கிறேன் பயன் பெற வாழ்த்துங்கள்

    ReplyDelete
  45. அய்யா வணக்கம் நான் இடையாற்று மங்கலம் கோவிலுக்கு சென்றேன் அழகாக உள்ளது நல்ல தரிசனம் கிடைத்து.
    வாழை மரங்கள் மிகுதியாக உள்ள எழிள் மிகுந்த கிராமம். அனைத்து உத்திரம் நட்சத்திர அன்பர்கள் சென்று , இறைவன் இறைவி, கல்யாண மகரிஷி உள் அன்போடு வணங்கி வாருங்கள். ஜெயம் உண்டு.

    பாண்டியராஜன், சென்னை.
    நன்றி வணக்கம்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com