மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

20.3.08

சக்கையாகப் போவது எது?

சக்கையாகப் போவது எது?

ஒரு திரைப்படப் பாடலை இன்று பண்பலையில் கேட்க நேர்ந்தது.
கேட்டவுடன் அதிர்ச்சியாக இருந்ததது.

பாடலைப் பாருங்கள்:

நாயகன்:
சட்டை போட்ட சாத்துக்குடி
சரசம் பண்ண சேர்த்துக்கடி

நாயகி:
மச்சான் பேரு தூத்துக்குடி
முத்துக்குளிக்க சேர்த்துக்கடா

இப்பொதெல்லாம் 'டா' போட்டுத்தான் நாயகி
நாயகனைக் கொஞ்சுகிறாள் அல்லது கூப்பிடுகிறாள்
பாவம் அந்த நாயகர்கள்(?)

நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் - நமது இளைஞர்
களுக்கு என்ன கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது
தெரியவில்லை - புரியவில்லை!

வாழ்க்கை, வினைப் பகுதி (action period) எதிர்வினைப் பகுதி
(reaction period) என்ற இரண்டு பகுதிகளை உடையதாகும்

வினைப் பகுதியில் நீ என்னென்ன செய்கிறாயோ அதெல்லாம்
எதிர் வினைப் பகுதியில் உன்னை விடாது உன்னிடமே வந்து சேரும்.

வரவிற்கு மேல் செலவு செய்து கொண்டிருப்பவன்
எதிர்காலத்தில் கடனில் மூழ்கித் தத்தளிப்பானே அதுபோல!

இன்று கலக்கலாகத் திரிகின்றவன் வருங்காலத்தில்
கண் கலங்கித் திரிவான்.

நல்லது கெட்டதுகளை உணர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை!

சாத்துக்குடிகளைத் தேடி அலைபவனைக் காலன் பிழிந்து
ஜூசாக்கிக் குடித்துவிடுவான். பழத்தோல் குப்பைக் கூடைக்குப்
போவது போல அப்படி அலைந்தவனும் குப்பைக்
கூடைக்குதான் போக வேண்டியதாயிருக்கும்!

வாழ்க்கைத் தத்துவங்களைச் சொல்லிக் கொடுத்து - வகுப்பறை
மாணவர்கள் தங்களை நெறிப்படுத்திக் கொள்ள உதவலாம்
என்றுள்ளேன்

உங்கள் கருத்து என்ன?

ஜோதிடப் பாடங்களுக்கு மத்தியில் இனி தத்துவப் பாடங்களும்
நடத்தப்படும். அவை உரை வடிவாகவும் இருக்கும் அல்லது
உரையுடன் பாடல் வடிவாகவும் இருக்கும்.

சொந்த சரக்காகவும் இருக்கும், தேடிப் பிடித்து வந்த சரக்காகவும்
இருக்கும். ஆனால் மனதைத் தொடும்படியாக இருக்கும்.
ஆகவே அனைவரையும் படித்துக் கேட்டுப் பயனுற வேண்டுகிறேன்

தத்துவப்பாடம் - 1இசைஞானி இளையராஜா அவர்கள் பாடிய தத்துவப் பாடல்
உரை மற்றும் ஒலி வடிவத்துடன் இன்று பதிவு செய்யப்படுகிறது.

பாடல் எளிமையாக இருப்பதால் விளக்கம் தேவையில்லை
என்று விட்டு விட்டேன்
-------------------------------------------------------ஓஓஓஓஓஓஓ.................................

அப்ப னென்றும் அம்மை யென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!

அது புத்தனென்றும் சித்தனென்றும்
பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப் போகும் கரும்பு! - ஞானப்பெண்ணே
சக்கையாகப் போகும் கரும்பு

பந்த பாசச் சேற்றில்
வந்து விழுந்த தேகம்!
எந்த கங்கை யாற்றில்
இந்த அழுக்குப் போகும்?

அப்ப னென்றும் அம்மை யென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!

குத்தம் குறை ஏதுமற்ற
ஜீவன் இங்கு யாரடா?
குத்தம் என்று யாரும் இல்லை
பாவ மூட்டை தானடா!

சிவனைக்கூட பித்தன் என்று
பேசு கின்ற ஊரடா
புத்திகெட்ட மூடர்க் கென்றும்
ஞானப் பார்வை ஏதடா?

ஆதி முதல் அந்தம்
உன் சொந்தம் உன் பந்தம்
நீ உள்ளவரைதான்
வந்து வந்து கூடும்
கூத்தாடும் விட்டோடும்
ஒர் சந்தைக் கடைதான்

இதில் நீயென்ன, நானென்ன
வந்தாலும் சென்றாலும்
என்னாச்சு விட்டுத்தள்ளு!

அப்ப னென்றும் அம்மை யென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!

கையும் காலும் மூக்கும் கொண்டு
ஆட வந்த காரணம்
ஆடித்தானே சேர்த்து வச்ச
பாவம் யாவும் தீரனும்

ஆட ஆடப் பாவம் சேரும்
ஆடி ஓடும் மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று
ஓடிப் போன தாரடா?

தட்டுக்கெட்டு ஓடும் தள்ளாடும்
எந்நாளூம் உன் உள்ளக்குரங்கு
கட்டு படக்கூடும் எப்போதும்
நீ போடு மெய்ஞான விலங்கு
மனம் ஆடாமல் வாடாமல்
மெய்ஞானம் உண்டாக
அஞ்ஞானம் அற்றுவிழும்!

அப்பனென்றும் அம்மையென்றும்
ஆணும்பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!

அது புத்தனென்றும் சித்தனென்றும்
பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப்போகும் கரும்பு! - ஞானப்பெண்ணே
சக்கையாகப் போகும் கரும்பு

பந்தபாசச் சேற்றில் வந்து விழுந்த தேகம்!
எந்த கங்கையாற்றில் இந்த அழுக்குப் போகும்?

அப்பனென்றும் அம்மையென்றும்
ஆணும்பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!

அது புத்தனென்றும் சித்தனென்றும்
பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப்போகும் கரும்பு! - ஞானப்பெண்ணே
சக்கையாகப் போகும் கரும்பு
- படம்: குணா
------------------------------------------------------------------

Get this widget | Track details | eSnips Social DNA


========================================

24 comments:

தமிழ்நெஞ்சம் said...

wonderful thought.. great sir

தென்றல் said...

/வாழ்க்கைத் தத்துவங்களைச் சொல்லிக் கொடுத்து - வகுப்பறை
மாணவர்கள் தங்களை நெறிப்படுத்திக் கொள்ள உதவலாம்
என்றுள்ளேன்

உங்கள் கருத்து என்ன?
/

உள்ளேன், ஐயா!

பிரேம்ஜி said...

//வினைப் பகுதியில் நீ என்னென்ன செய்கிறாயோ அதெல்லாம்
எதிர் வினைப் பகுதியில் உன்னை விடாது உன்னிடமே வந்து சேரும்.//

சரியா சொன்னீங்க.

SP.VR. SUBBIAH said...

நன்றி மிஸ்டர் தமிழ்நெஞ்சம்

SP.VR. SUBBIAH said...

நன்றி மிஸ்டர் தென்றல்!

எந்த ஊரில் இருக்கிறீர்கள் சாமி
நாடோடி என்று போட்டிருக்கிறீர்களே?

பெயரைச் சொல்லாவிட்டலும் ஊரையாவது சொல்லலாமில்லையா?

SP.VR. SUBBIAH said...

//Premji Saidவினைப் பகுதியில் நீ என்னென்ன செய்கிறாயோ அதெல்லாம்
எதிர் வினைப் பகுதியில் உன்னை விடாது உன்னிடமே வந்து சேரும்.//

சரியா சொன்னீங்க.////

பின்னே இல்லையா!
நியூட்டனின் விதியும் அதுதானே!

துளசி கோபால் said...

வகுப்பறைக்குள்ளே நானும் வந்துருக்கேன் வாத்தியார் ஐயா.

'ஆஜர்' போட்டுக்குங்க.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஒரு திரைப்படப் பாடலை இன்று பண்பலையில் கேட்க நேர்ந்தது.
கேட்டவுடன் அதிர்ச்சியாக இருந்ததது.//

பண்பலை கேட்கிறீர்களா??
அண்ணா உங்களுக்குப் பொறுமை அதிகம்.
ராசா பாடல் அருமை

SP.VR. SUBBIAH said...

////துளசி கோபால் said...
வகுப்பறைக்குள்ளே நானும் வந்துருக்கேன் வாத்தியார் ஐயா.
'ஆஜர்' போட்டுக்குங்க./////

ஆகா, போட்டுக் கொண்டு விட்டேன்.

(நீங்கள் உள்ளே வந்தால்தான்
மற்ற மாணவர்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு பாடம் படிக்கிறார்கள்)

SP.VR. SUBBIAH said...

/////யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//ஒரு திரைப்படப் பாடலை இன்று பண்பலையில் கேட்க நேர்ந்தது.
கேட்டவுடன் அதிர்ச்சியாக இருந்ததது.//
பண்பலை கேட்கிறீர்களா??
அண்ணா உங்களுக்குப் பொறுமை அதிகம்.
ராசா பாடல் அருமை/////

ராசா குரல் கொடுத்துப் பாடும் பாடல் அத்தனையிலும் இசை தூளாக
இருக்கும். கவனித்துப் பார்த்து இருக்கிறீர்களா யோகன்?

nellai said...

நெறியாளர் (இதற்கும் மறுப்பு வேண்டாம்) திருமிகு சுப்பையா அவர்களின் இச் சேவைக்கு என் நெஞ்சுநிறை நன்றிகள்.எதுவெல்லாம் முன்பு பன்பு குறைந்ததாக கருதப்பட்டதோ அதுவெல்லாம் இன்று தலைவிரித்து சதிராடும் கொடுமையாய் உலாவருவதை எதிர்த்து தங்கள் தொடங்கும் ஆன்மீக/சமுதாய/மனிதநேய மறுமலர்ச்சிக்கு உங்கள் மாணவர்கள்/ஆதரவ்வாளைர்கள்/நலவிருபம்பிகள் அனைவரது 100 % ஆதரவு முழுமையாக கிடைக்கும் -நெல்லைகண்ணா/21-03-2008

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாத்தியாரே.. இந்தப் பாட்டைக் கேட்டு ரொம்ப நாளாச்சு.. ஞாபகப்படுத்திவிட்டுட்டீங்க.. பாட்டை முழுசா கேட்டுட்டேன்..

//சிவனைக்கூட பித்தன் என்று
பேசு கின்ற ஊரடா
புத்திகெட்ட மூடர்க் கென்றும்
ஞானப் பார்வை ஏதடா..//

இது பத்தாதா வாத்தியாரே..

SP.VR. SUBBIAH said...

////nellai said...
நெறியாளர் (இதற்கும் மறுப்பு வேண்டாம்) திருமிகு சுப்பையா அவர்களின் இச் சேவைக்கு என் நெஞ்சுநிறை நன்றிகள்.எதுவெல்லாம் முன்பு பன்பு குறைந்ததாக கருதப்பட்டதோ அதுவெல்லாம் இன்று தலைவிரித்து சதிராடும் கொடுமையாய் உலாவருவதை எதிர்த்து தங்கள் தொடங்கும் ஆன்மீக/சமுதாய/மனிதநேய மறுமலர்ச்சிக்கு உங்கள் மாணவர்கள்/ஆதரவாளைர்கள்/நல விருபம்பிகள் அனைவரது 100 % ஆதரவு முழுமையாக கிடைக்கும் -நெல்லைகண்ணா/21-03-2008//////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////////உண்மைத் தமிழன்(15270788164745573644) said.
வாத்தியாரே.. இந்தப் பாட்டைக் கேட்டு ரொம்ப நாளாச்சு.. ஞாபகப்படுத்திவிட்டுட்டீங்க.. பாட்டை முழுசா கேட்டுட்டேன்..
//சிவனைக்கூட பித்தன் என்று
பேசு கின்ற ஊரடா
புத்திகெட்ட மூடர்க் கென்றும்
ஞானப் பார்வை ஏதடா..//
இது பத்தாதா வாத்தியாரே../////

வழிதவறி இளமை உற்சாகத்தில் - மனப்போதையுடன் போய்க்கொண்டிருப்பவனுக்கு
எதுவுமே பத்தாது தமிழரே!

Anonymous said...

nice initiative....one simple request...if you can...plz write explanation about "Geethai" in simple tamil in this section.
Thx
R

தென்றல் said...

/எந்த ஊரில் இருக்கிறீர்கள் சாமி
நாடோடி என்று போட்டிருக்கிறீர்களே?
/

என்னங்க ஐயா... பண்ணறது.. நம்ம பொழப்பு பரதேசி பொழப்பாச்சி..

நீங்க கேட்டதால...
சொந்த ஊரு, சிவகாசி!

Covai Ravee said...

Vannakam Vaathiyar Ayya,

Arumaiyaana ViLakkam, aRputhamaana paadal. Yithe pol thanipathive neenga podalam. en anbaana vazhthukkal

Anonymous said...

வினைப் பகுதியில் நீ என்னென்ன செய்கிறாயோ அதெல்லாம்
எதிர் வினைப் பகுதியில் உன்னை விடாது உன்னிடமே வந்து சேரும். Hope the above ennenne refers to not only bad but also to good. Isn't Aiyya?
Regards,
Sara,
CMB

புருனோ Bruno said...

//வினைப் பகுதியில் நீ என்னென்ன செய்கிறாயோ அதெல்லாம்
எதிர் வினைப் பகுதியில் உன்னை விடாது உன்னிடமே வந்து சேரும்.//

அருமை. இதைத்தான் வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்று கூறுவார்கள்.
ராஜா சின்ன ரோஜா பாடல் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை

SP.VR. SUBBIAH said...

/////Anonymous said...
nice initiative....one simple request...if you can...plz write explanation about "Geethai" in simple tamil in this section.
Thx
R ////

எழுதும் எண்ணம் இருக்கிறது. நேரம் வரட்டும் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////தென்றல் said...
/எந்த ஊரில் இருக்கிறீர்கள் சாமி
நாடோடி என்று போட்டிருக்கிறீர்களே?
/ என்னங்க ஐயா... பண்ணறது.. நம்ம பொழப்பு பரதேசி பொழப்பாச்சி..
நீங்க கேட்டதால...
சொந்த ஊரு, சிவகாசி!////

சிவகாசிக்காரன் என்று போடுங்கள் சுவாமி!
அதுதான் உங்களுடைய ஜன்ம பூமிக்கு நீங்கள் செய்யும் மரியாதை!

SP.VR. SUBBIAH said...

/////Covai Ravee said...
Vannakam Vaathiyar Ayya,
Arumaiyaana ViLakkam, aRputhamaana paadal. Yithe pol thanipathive neenga podalam. en anbaana vazhthukkal////

வாருங்கள் எங்கள் (ஊர்த்) தங்கம்!
நீங்கள் சொல்லி விட்டீர்கள். செய்யாமல் போவேனா?

SP.VR. SUBBIAH said...

//////Anonymous said...
வினைப் பகுதியில் நீ என்னென்ன செய்கிறாயோ அதெல்லாம்
எதிர் வினைப் பகுதியில் உன்னை விடாது உன்னிடமே வந்து சேரும்.
Hope the above ennenne refers to not only bad but also to good. Isn't Aiyya?
Regards,
Sara,
CMB////

Yes, both of your good and bad deeds!

SP.VR. SUBBIAH said...

//////புருனோ Bruno said...
//வினைப் பகுதியில் நீ என்னென்ன செய்கிறாயோ அதெல்லாம்
எதிர் வினைப் பகுதியில் உன்னை விடாது உன்னிடமே வந்து சேரும்.//
அருமை. இதைத்தான் வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்று கூறுவார்கள்.
ராஜா சின்ன ரோஜா பாடல் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை/////

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி டாக்டர்!