மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.3.08

உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

மீண்டும் ஜோதிடம் - பகுதி 10

இந்தக் கேள்வியைக் கேட்டால் ஒரே மாதிரியான பதில் சர்வ நிச்சயமாக வராது. ஒவ்வொருவரிடம் இருந்து ஒவ்வொரு மாதிரியான பதில் வரும்.

அன்புமிக்க தாய், அறிவுமிக்க தந்தை, பாசமிக்க சகோதரர்கள், சகோதரிகள், பரிவுமிக்க மனைவி,
உள்ளத்தைக் கொடுக்கும் குழந்தைகள், உயிரைக்கூட கொடுக்கும் நண்பர்கள், இவற்றோடு
பாரதி பாடிய காணி நிலம், வற்றாத கேணி, பத்துப்பதினைந்து தென்னை மரங்கள், கத்தும்
குயிலோசை, அதோடு...!

என்ன அதோடு? இது போதாதா?

சற்றுப் பொறுங்கள் சொல்லி முடித்துவிடுகிறேன்.

அதோடு இணைப்பாக அசையா சொத்துக்கள், வற்றாத வங்கிக் கணக்கு இருப்பு, பிடித்தமான ஊரில்
வசிக்கும் வசதி, போட்டியில்லாத தொழில், இன்னோவா, டாட்டா சுமோக் கார்கள், பாரத ரத்னாவேண்டாம், அட்லீஸ்ட் பத்மபூஷன் பட்டம் கிடைக்கும் கெளரவம். ஒரு வட்டம் அல்லது மாவட்டச்
செயலாளர் பதவி, என்று பலரும் பலவற்றை ஏக்கத்துடன் அல்லது ஆசையுடன் சொல்வார்கள்.

அவ்வளவும் கிடைத்து விடுமா என்ன?

கிடைக்காது!

அதெல்லாம் எப்படிக் கிடைக்கும். அதற்கு உரிய தகுதி நமக்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா?

ஆசையிருக்குத் தாசில் பண்ண; அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க' என்று கிராமங்களில் சொல்வார்கள்
80% மக்களின் வாழ்க்கை அப்படித்தான் இருக்கும்! இருப்பதை வைத்துத் திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

சரி மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிடையாதா?

ஏன் இல்லை? முயற்சிக்குப் பலன் உண்டு.

நீ மாட்டை வைத்துதான் பிழைப்பு நடத்த வேண்டுமென்பதுதான் விதியென்றால் நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பை நடத்தியாக வேண்டும். ஆனால் மாட்டின் எண்ணிக்கையை இறைவன்
தீர்மானிப்பதில்லை.

அது உன் கையில்தான் உள்ளது. உன் முயற்சியில்தான் உள்ளது. 4 மாடுகளா அல்லது 40 மாடுகளா என்பது உன் முயற்சியால் நிர்ணயிக்கப்படும்.

ஒரு ஏழைப் பால் வியாபாரி இருந்தான். இரண்டு மாடுகளை வைத்துப் பால் வியாபாரம் செய்து
கொண்டிருந்தான். வருமானம் போதவில்லை. பற்றாக்குறை. வீட்டில் அவன் மனைவி, பிள்ளைகளைச்
சேர்த்து ஐந்து ஜீவன்கள்

வீட்டு வாசல் திண்ணையில் கவலையோடு அவன் அமர்ந்திருந்தபோது, அந்த வழியாகச் சென்ற
முனிவர் ஒருவர், அவனை நோக்கிக் கேட்டார், ”தம்பி, சற்றுக் களைப்பாக இருக்கிறது, பசியாற
ஏதாவது கிடைக்குமா?”

அவன் பதறிவிட்டான். பசியின் கொடுமை அறிந்தவனல்லவா? உடனே திண்ணையை விட்டுக் குதித்துக் கீழே வந்தவன், “அய்யா நல்ல மோர் இருக்கிறது, தரட்டுமா?” என்று கேட்டான்.

அவர் சம்மதம் சொல்ல, ஒரு செம்பு நிறைய மோரைக் கொண்டு வந்து கொடுத்தான்.

வாங்கி அமைதியாகக் குடித்தார் முனிவர். குடித்தபிறகுதான் அவனை உற்று நோக்கினார்.
அவன் முகத்தில் கவலை குடிகொண்டிருந்தது.

தன் ஞானக்கண்ணால் அவனுடைய நிலைமையை முழுதாக உணர்ந்தவர் சொன்னார்:

“நாளை அதிகாலை என்னை வந்துபார். உன் கவலைகளை ஓட்டும் வழியைச் சொல்லித் தருகிறேன்”

அவன் அவருடைய இருப்பிடத்தை அறிந்து கொண்டு, அடுத்த நாள் உதயத்தில், நம்பிக்கையுடன்,
அவரைச் சென்று பார்த்தான்.

அவர் அவனுடன் அதிகமாகப் பேசவில்லை. ஆனால் தீர்க்கமாக ஒன்றைச் சொன்னார் “உன்னிடம்
இருக்கும் இரண்டு மாடுகளையும் ஓட்டிக் கொண்டு போய் பக்கத்து ஊர்ச் சந்தையில் விற்று விட்டு
வந்து, விற்ற பணத்தை உன் வீட்டில் பத்திரமாக வை.”

அவன் அதிர்ந்து போய் விட்டான்.

மாடுகள் இரண்டையும் விற்று விட்டால் வயிற்றுப் பிழைப்பிற்கு என்ன செய்வது என்று அவரிடமே
கேட்டுத் தெரிந்து கொள்ளும் முனைப்பில், “அய்யா...” என்று இழுத்தான்.

அது தெரியாதா அவருக்கு? கையைக் உயர்த்திக் காட்டியதோடு, சொன்னார், “ சொன்னதைச் செய்,
மற்றது தானாக நடக்கும், மீண்டும் நீயே வந்து என்னைப் பார்ப்பாய், இப்போது போ!”

அவன் அவர் சொன்னபடியே செய்தான். இரண்டு மாடுகளும் நல்ல விலைக்குப் போயிற்று. விற்ற
பணத்தைக்கொண்டு வந்து, வீட்டுப் பரணின் மேலிருந்த பானைக்குள் வைத்து மூடினான். பிறகு
நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, பாயைப் போட்டு படுத்து உறங்கிவிட்டான்.

தூக்கம் என்றால் அப்படியொரு தூக்கம்.

மாலை ஆறு மணிக்குத்தான், ”அம்மா...” என்று தன் மாடுகள் கத்தும் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு
எழுந்தவன், ஓடிப்போய் தன் வீட்டிற்குப் பின் புறம் இருந்த தொழுவத்தில் பார்த்தான். அங்கே
அவனுடைய மாடுகள் இரண்டும் நின்று கொண்டிருந்தன. மயக்கம் வராத குறை அவனுக்கு.

அதோடு அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. விற்று விட்டு வந்த மாடுகள் எப்படித் திரும்பி வந்தன?

இருட்டி விட்டதால் வீட்டிலேயே தங்கி விட்டு, அடுத்த நாள் காலையில் ஒட்டமும் நடையுமாகச்
சென்று முனிவரைப் பார்த்தான்.

தியானத்தில் இருந்த அவர் இவன் உள்ளே வந்த ஒலி கேட்டு, கண்களைத் திறந்து பார்த்தார்.
பார்த்தவர் கேட்டார்,” என்ன உன்னுடைய மாடுகள் இரண்டும் திரும்பி வந்து விட்டனவா?”

அவன் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய் விட்டான்.

சலனமற்று காட்சியளித்த அவர் சொன்னார்,” நேற்றுச் செய்ததுபோல இன்றும் செய்; ஒன்றும்
கேட்காதே, பிறகு சொல்கிறென் இப்போது போய் வா”

வந்த வேகத்திலேயே திரும்பியவன், அவர் சொல்லியபடியே அன்றும் செய்தான். மறுபடியும்
கிட்டத்தட்ட அதே அளவு தொகை கிடைத்தது. வீட்டிற்குக் கொண்டு வந்து, பானைக்குள்
போட்டுப் பரணுக்குள் வைத்துவிட்டு, எப்போதும் போல சாப்பிட்டுவிட்டுக் கண் அயர்ந்தான்

நேற்று நடந்தது போலவே இன்றும் நடந்தது. அவன் அதிசயப்படும் விதமாக அவனுடைய
இரண்டு மாடுகளும் இன்றும் திரும்பி வந்து தொழுவத்தில் நின்று கொண்டிருந்தன!

இது தொடர்ந்தது. ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பத்து நாட்கள் தொடர்ந்தது. வழக்கப்
படி பதினோறாம் நாள் காலையில் முனிவரைச் சென்று பார்த்தான்

அவர் சொன்னார்,” இன்மேல் அந்த அதிசயம் தொடராது. உன்னிடம் இப்போது 20 மாடுகளுக்கான
தொகை இருக்கிறது. இன்று சந்தைக்குப்போ; நல்ல மாடுகளாகக் கிடைக்கும் 20 மாடுகளை
வாங்கி வந்து இன்று முதல் உன் பால் வியாபாரத்தை நல்லபடியாகச் செய்!”

அவன் நெகிழ்ந்து விட்டான். கண்கள் பனிக்கக் கேட்டான்,”அய்யா உங்களுக்கு நான் மிகுந்த
நன்றிக் கடன் பட்டவனாக இருப்பேன். இதுவரை அந்த அதியசம் எப்படி நடந்தது என்பதைச்
சொன்னீர்கள் என்றால் நான் சற்று மன நிம்மதியோடு போவேன்.”

“உன் தலையெழுத்து மாடுகளை வைத்து பிழைப்பதுதான். ஆனால் நீ முயற்சி எதுவும் செய்யாமல்,
இருப்பதை வைத்து இதுவரை உன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு
உதவும் பொருட்டே, எனது சித்து வேலையால் நான் அப்படிச் செய்தேன். எதற்கும் ஒரு அளவு
உண்டு. அது தெரிந்து நான் நேற்றோடு நிறுத்திவிட்டேன். இனிமேல் நான் நினைத்தால்கூட
உனக்கு உதவ முடியாது. இறைவனை வேண்டிக்கொள். உன் பிரச்சினைகள் எல்லாம் தீரும்
அதோடு இனிச் சோம்பியிருக்காமல் முயற்சி செய்து கடுமையாக உழைத்தாய் என்றால்
உன் மாடுகளின் எண்ணிக்கை கூடிய சீக்கிரம் 100 ஆகும், பிறகு 200 ஆகும். போய்ப்
பிழைத்துக் கொள்!” என்று முடித்தார்.

கதை அவ்வளவுதான். முயற்சி எப்படி வேலை செய்யும் என்பதற்குத்தான் இந்தக் கதை!
நமக்கும் ஒரு முனிவர் வருவாரா என்று யாரும் காத்துக் கொண்டிருக்க வேண்டாம். இது
கலியுகம். முனிவரெல்லாம் வரமாட்டார். முனி வேண்டும் என்றால் வரும்.

(முனி என்றால் என்னவா? அதுதான் நட்பு என்ற பெயரில் வரும் டாஸ்மார்க், சல்பேட்டா
பார்ட்டிகள்)
-----------------------------------------------------------------------------------------------------------
சரி துவக்கத்திற்கு வருகிறேன். நல்ல வாழ்க்கைக்கு ஜாதகம் எப்படியிருக்க வேண்டும்?

ஒன்று, ஒன்பது, பத்து, மற்றும் பதினோறாம் வீடுகளில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள்
இருக்க வேண்டும்.

அதவது First House (Lagna), Ninth House (House of gains), 10th House (House of Profession)
11th House (House of Profit) ஆகிய நான்கு இடங்களிலும் 30 பரல்களோ அல்லது 30ற்கு
மேற்பட்ட எண்ணிக்கையில் பரல்கள் இருக்க வேண்டும்.

மற்ற இடங்களெல்லாம் முக்கியமில்லையா? இல்லை!

அப்படியிருந்தால் வாழ்க்கை எப்படியிருக்கும்?

சூப்பராக இருக்கும்!

படிக்கும் வாசகர்கள் யாருக்காவது அப்படியிருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்

எனக்குத் தெரிந்து என்னுடைய உறவினர்கள் இரண்டு பேருக்கு இருக்கிறது. அவர்களது
வாழ்க்கையும் சூப்பராக இருக்கிறது. அவர்களுடைய ஜாதகத்தை நான் பர்த்திருக்கிறேன்.
அதனால்தான் அடித்துச் சொல்கிறேன்.

மற்றவை அடுத்த பதிவில்!

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்

(தொடரும்)

41 comments:

  1. வணக்கம் ஐயா,
    மேலும் ஐயா என்னுடையது (1)25,(9)29,(10)43,(11)38 இது எப்படி வேலை செய்யும்
    நன்றி
    சிவா

    ReplyDelete
  2. நான்கிலும் 30 அல்லது 30க்குமேல் இல்லை அல்லவா?

    இரண்டு இடங்களில் மட்டும்தனே அதிகப் பரல்கள் உள்ளன!

    அப்படியென்றால் ஸெமி டீலக்ஸ் பஸ் என்று வைத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  3. How to calculate "பரல்கள்" ?

    ReplyDelete
  4. (1)30(9)28(10)39(11)34, வாத்தியரே அப்போ எனக்கு சூப்பர் ஸெமி டீலக்ஸ் என்று வைத்து கொள்ளலாமா?

    ReplyDelete
  5. ///Anonymous Anonymous said...
    How to calculate "பரல்கள்" ?///

    முன் பதிவில் ஒரு Software பற்றி எழுதியுள்ளேன். - மீண்டும் ஜோதிடம் - பகுதி 1 படித்துப் பாருங்கள்!

    ReplyDelete
  6. ////Blogger vimal said...
    (1)30(9)28(10)39(11)34, வாத்தியரே அப்போ எனக்கு சூப்பர் ஸெமி டீலக்ஸ் என்று வைத்து கொள்ளலாமா?////

    என்னைப் பொறுத்தவரை - வண்டி ஓடும்நிலையில் இருக்கிறதா? அதுவே போதும்

    ReplyDelete
  7. Anbu Aiyya,
    Kannil neer panikka vaithathu kathai. 27, 19, 34, 43 en chart sollum paralgal. Profession and Profit only is more than 30. Gains seems to be very poor. Your guidance really helps to decide things on life. Mikka Nandri.

    Regards,
    Sara,
    Colombo

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா,
    தங்களுக்கு நேரமிருந்தால் என்னுடைய இந்த பதிவை பார்த்து சரி தானா என்று சொல்லவும். நன்றி.



    http://nejamanallavan.blogspot.com/2008/03/blog-post_7213.html

    ReplyDelete
  9. அன்பான ஆசிரியருக்கு வணக்கம்!
    அருமையான தரவுகள். புரிந்து கொள்வது என்பதைவிட விளங்கிக் கொள்வது கொஞ்சம் கடினம் தான். எனக்கு 1(30) 9(32) 10(36) 11(37)
    எனது வாழ்க்கை எப்படி இருக்கும்.
    நன்றி
    விஜய்

    ReplyDelete
  10. அன்பான ஆசிரியருக்கு வணக்கம்!
    அருமையான தரவுகள். புரிந்து கொள்வது என்பதைவிட விளங்கிக் கொள்வது கொஞ்சம் கடினம் தான். எனக்கு 1(30) 9(32) 10(36) 11(37)
    எனது வாழ்க்கை எப்படி இருக்கும்.
    நன்றி
    விஜய்

    ReplyDelete
  11. ஆசானுக்கு,

    ஐயா, என்னோட வண்டி ஓடுமா? இல்லை தள்ளாடுமா? அல்லது சமாளிக்க முடியுமா? என்று பார்த்துச் சொல்லுங்க. லக்னம் - 24 பரல்கள்
    9ம் வீடு - 29 பரல்கள்
    10ம் வீடு - 26 பரல்கள்
    11ம் வீடு - 34 பரல்கள்

    ReplyDelete
  12. ஜாதகம் இல்லாததால் ஒன்னும் சொல்ல முடியலை.

    ஆனால்...அந்தக் கதை நல்லாவே புரிஞ்சது. கிடைச்ச வாழ்க்கையை நம்ம முயற்சியால் நல்லபடி வளர்த்துக்கணும். முயற்சி திருவினையாக்குமுன்னுச் சும்மாவாச் சொல்லி வச்சுருப்பாங்க?

    நல்ல முயற்சியின்னா கடவுளின் அருள் கிடைக்கும் என்று வாழ்க்கைப்பாடம் சொல்லிக்குடுத்துருக்கு.

    ReplyDelete
  13. /////Anonymous said...
    Anbu Aiyya,
    Kannil neer panikka vaithathu kathai. 27, 19, 34, 43 en chart sollum paralgal. Profession and Profit only is more than 30. Gains seems to be very poor. Your guidance really helps to decide things on life. Mikka Nandri.
    Regards,
    Sara,
    Colombo////

    உழைப்பில்லாமல் வருவதுதான் gains:
    உழைத்து வருவதுதான் Profit

    கண்கள் பனிக்கின்ற உள்ளங்களில் கடவுள் குடியிருப்பார்.
    கவலை எதற்குக் சரவணன்?

    துன்பங்கள் வந்தால் வந்து விட்டுப்போகிறது!
    தாங்கிப் பிடிக்க 'அவன்' இருக்கும்போது என்ன கவலை?

    ReplyDelete
  14. /////நிஜமா நல்லவன் said...
    வணக்கம் ஐயா,
    தங்களுக்கு நேரமிருந்தால் என்னுடைய இந்த பதிவை பார்த்து சரி தானா என்று சொல்லவும். நன்றி./////

    பார்த்துப் பதில் சொல்லிவிட்டேன் சுவாமி!

    ReplyDelete
  15. ////Vijai said...
    அன்பான ஆசிரியருக்கு வணக்கம்!
    அருமையான தரவுகள். புரிந்து கொள்வது என்பதைவிட விளங்கிக் கொள்வது கொஞ்சம் கடினம் தான். எனக்கு 1(30) 9(32) 10(36) 11(37)
    எனது வாழ்க்கை எப்படி இருக்கும்.
    நன்றி
    விஜய்/////

    பரல்கள்தான் பதிவில் எழுதியபடி உள்ளதே!
    வாழ்க்கை செழிப்பாக இருக்கும்!
    அந்தச் செழிப்பை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

    ReplyDelete
  16. //////மணிவேல் said...
    ஆசானுக்கு,
    ஐயா, என்னோட வண்டி ஓடுமா? இல்லை தள்ளாடுமா? அல்லது சமாளிக்க முடியுமா?
    என்று பார்த்துச் சொல்லுங்க. லக்னம் - 24 பரல்கள்
    9ம் வீடு - 29 பரல்கள்
    10ம் வீடு - 26 பரல்கள்
    11ம் வீடு - 34 பரல்கள்////

    லக்கினத்தில் பரல்கள் குறைவாக இருந்தால் வண்டி நின்று நின்றுதான் பொகும். ஆனால் தள்ளிவிட
    ஆள் கூடவே வருவார். கவலைப்படாதீர்கள்!

    ஆள் யாரென்று கேட்கிறீர்களா? அவர்தான் சாமி கடவுள்.
    வேகமாகப் போகிற வண்டிகளுக்குப் பிரேக் இன்ஸ்பெக்டர் வருவார் (அவர் பெயர் சனீஸ்வரன்)

    ReplyDelete
  17. /////துளசி கோபால் said...
    ஜாதகம் இல்லாததால் ஒன்னும் சொல்ல முடியலை.
    ஆனால்...அந்தக் கதை நல்லாவே புரிஞ்சது. கிடைச்ச வாழ்க்கையை நம்ம முயற்சியால் நல்லபடி வளர்த்துக்கணும். முயற்சி திருவினையாக்குமுன்னுச் சும்மாவாச் சொல்லி வச்சுருப்பாங்க?
    நல்ல முயற்சியின்னா கடவுளின் அருள் கிடைக்கும் என்று வாழ்க்கைப்பாடம் சொல்லிக்குடுத்துருக்கு.////

    வாருங்கள் சகோதரி! கதை உங்களுக்குப் பிடித்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான். வெறும் பாடமென்றால் போரடிக்காதா?
    அதனால்தான் அவ்வப்போது கதைகள்!

    வருகின்றவர்களில் கதைகளுக்குச் சான்றிதழ் கொடுக்கின்றவர் நீங்கள் ஒருவர்தான் சகோதரி!
    அதேபோல ஜாதகம் இல்லாததால், கேள்விகள் கேட்டு என்னை மடக்காதவரும் நீங்கள்தான் சகோதரி:-))))))))))))))

    ReplyDelete
  18. (1)-28,(9)-20,(10)-32,(11)-30 என் நிலைமை எப்படி இருக்கிறது?தயவு செய்து கொஞ்சம் விரிவாக பதில் சொல்லுங்க... உங்கள் பதிலை எதிபார்த்து....
    ---குமார்

    ReplyDelete
  19. ஐயா,

    எனக்கு 1ல்28, 9ல்27, 10ல்29, ஆனால் லாபஸ்தானமான 11ல் 40பரல்களும் உள்ளது. இதற்கு எப்படி எனத்தெரியபடுத்துங்கள்.

    எனக்கு குரு 8ல் தனியாக உள்ளார் எனக்கு கடவுள் துணை இல்லையா?

    எனக்கு மகர லக்கினம் மிதுன ராசி, புதன் திசையில் செவ்வாய் புத்தி நடப்பு.
    இனியாவது என் சம்பாதனை என உள்ளாதா?

    ReplyDelete
  20. ///// 1
    (1)-28,(9)-20,(10)-32,(11)-30 என் நிலைமை எப்படி இருக்கிறது?தயவு செய்து கொஞ்சம் விரிவாக பதில் சொல்லுங்க... உங்கள் பதிலை எதிபார்த்து....
    ---குமார்

    2

    scssundar said...
    ஐயா,
    எனக்கு 1ல்28, 9ல்27, 10ல்29, ஆனால் லாபஸ்தானமான 11ல் 40பரல்களும் உள்ளது. இதற்கு எப்படி எனத்தெரியபடுத்துங்கள்.
    எனக்கு குரு 8ல் தனியாக உள்ளார் எனக்கு கடவுள் துணை இல்லையா?
    எனக்கு மகர லக்கினம் மிதுன ராசி, புதன் திசையில் செவ்வாய் புத்தி நடப்பு.
    இனியாவது என் சம்பாதனை என உள்ளாதா? ////

    பதிவு என்பது பொது இடம். உங்களுடைய தனிப்பட்ட கேள்விகளுக்குப் பதிவில் எப்படி பதில் சொல்வது
    சாமிகளா?

    மின்னஞ்சலில் கேளூங்கள்: email: classroom2007 at gmail.com

    ReplyDelete
  21. Sir,
    There is a difference in the jathagam calculated in the software you specified and the jathagam calculated by my family astrologer. I cross verified with one more astrologer and confirmed that of what our family astrologer wrote is right. I am bit confused now. Could you plz clarify?
    Thx for your help.
    Raja

    ReplyDelete
  22. >+++மின்னஞ்சலில் கேளூங்கள்: email: classroom2007 at gmail.com
    >+++

    Dear Vaathiyaar Aiya,

    I have sent a mail with my jatakam to this mail id with queries. Can you please respond whenever your time permits.

    thanks a lot
    Mahesh Kumar

    ReplyDelete
  23. //இது கலியுகம். முனிவரெல்லாம் வரமாட்டார். முனி வேண்டும் என்றால் வரும். (முனி என்றால் என்னவா? அதுதான் நட்பு என்ற பெயரில் வரும் டாஸ்மார்க், சல்பேட்டா பார்ட்டிகள்)//

    கூடிய சீக்கிரம் உங்களுக்கொரு 'மாத்து' உண்டு என்பது நிச்சயம்.

    ReplyDelete
  24. ஐயா,

    நான் உங்களுடைய பதிவின் வாசகன். தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன். காண்க.

    ReplyDelete
  25. ஜோதிடத்திரு சுப்பையா அவர்களுக்கு உங்கள் பதிவுகள் பிரமாதம்.வாழ்த்துகள்.மகர லக்ணம்,ரிஷபராசி காரர்களுக்கு 10ம் இடத்தில் 10th House (House of Profession)சனி இருந்து அவருக்கு சனிதிசையில் நீங்கள் சொன்னது யெல்லம் கிடைக்கும் யென்பது (all facilities and wealth)உண்மையா அருள்கூர்ந்து விளக்கக்வும்-nellaikanna

    ReplyDelete
  26. In Mrs Gandhi's Horoscope,
    First House has 24, Nineth House
    has 33, Tenth House has 31 and Eleventh House has 32 points
    according to Jaganatha Hora Lite.
    The birth data is from the Internet. Time mentioned - 11:17 P.M, day Nov. 19th and the year 1917. Lagna - Cancer.

    After reading your article I was curious to explore astakavarga further. Do you have birth times of
    famous people! Thank you!
    Regular reader.

    ReplyDelete
  27. In Mrs. Gandhi's Chart, first
    house had 24 points, nineth house had 33 points, tenth house had 31 points and eleventh house had 32
    points. Source - Jaganatha Hora Lite. Birth time 11:17 p.m, day Nov. 19th and year 1917. Her chart did not meet all the requirements in your article. May be the birth time I had was wrong. Can you please publish birth times of some famous people we know!
    Thank you!
    Regular reader.

    ReplyDelete
  28. /////Anonymous said...
    Sir,
    There is a difference in the jathagam calculated in the software you specified and the jathagam calculated by my family astrologer. I cross verified with one more astrologer and confirmed that of what our family astrologer wrote is right. I am bit confused now. Could you plz clarify?
    Thx for your help.
    Raja/////

    The computer horoscope is based on Indian ephemeris and it will be accurate since it takes 365.25 days per year
    whereas in manual calculation, the calculating people takes only 360 days per year as per Vaakkiya Panjangam
    Sometimes, the birth in the middle of two lagna (Kala sandhi births) the variation will come.
    Hence the lagna will differ! I suggest you to take the horoscope casted by the computer

    ReplyDelete
  29. ////Anonymous said...
    Dear Vaathiyaar Aiya,
    I have sent a mail with my jatakam to this mail id with queries. Can you please respond whenever your time permits.
    thanks a lot
    Mahesh Kumar///

    Please wait for a week

    ReplyDelete
  30. ////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    //இது கலியுகம். முனிவரெல்லாம் வரமாட்டார். முனி வேண்டும் என்றால் வரும். (முனி என்றால் என்னவா? அதுதான் நட்பு என்ற பெயரில் வரும் டாஸ்மார்க், சல்பேட்டா பார்ட்டிகள்)//
    கூடிய சீக்கிரம் உங்களுக்கொரு 'மாத்து' உண்டு என்பது நிச்சயம்.///

    தினமும், கண் எதிரில் அந்தக் கடை வாசல்களில் கூட்டமாக நிற்கும் இளைஞர்களைப் பார்க்கின்றதனால், வருந்தி அதைக் குறிப்பிட்டுள்ளேன். யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை.

    அதையும் மீறி மாத்து வந்தால், வரட்டும். பழநி ஆண்டவன் பார்த்துக் கொள்வான் நண்பரே!:-)))))

    ReplyDelete
  31. //////nellai said...
    ஜோதிடத்திரு சுப்பையா அவர்களுக்கு உங்கள் பதிவுகள் பிரமாதம்.வாழ்த்துகள்.மகர லக்ணம்,ரிஷபராசி காரர்களுக்கு 10ம் இடத்தில் 10th House (House of Profession)சனி இருந்து அவருக்கு சனிதிசையில் நீங்கள் சொன்னது யெல்லம் கிடைக்கும் யென்பது (all facilities and wealth)உண்மையா அருள்கூர்ந்து விளக்கக்வும்-nellaikanna////

    நான் ஜோதிடத்திருவெல்லாம் இல்லை! ஜோதிடத்தைப் புத்தகமாகப் படித்த பாமரன் அவ்வளவுதான்,
    எனது தொழில் வேறு!

    உங்கள் மின்னஞ்சல் வந்தது. இப்போது நேரமின்மை. ஒரு வாரம் பொறுத்திருங்கள் பதில் அனுப்புகிறேன்

    ReplyDelete
  32. Anonymous said...
    In Mrs. Gandhi's Chart, first
    house had 24 points, nineth house had 33 points, tenth house had 31 points and eleventh house had 32
    points. Source - Jaganatha Hora Lite. Birth time 11:17 p.m, day Nov. 19th and year 1917. Her chart did not meet all the requirements in your article. May be the birth time I had was wrong. Can you please publish birth times of some famous people we know!
    Thank you!
    Regular reader.////

    இந்தியாவிலேயே அதிகம் பேசப்பட்ட ஜாதகம் அவருடையது.
    அவருடைய ஜாதகத்தில் ஆறு கிரகங்கள் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளன.
    உன் வீட்டில் நான், என் வீட்டில் நீ என்று உள்ளன.
    அதையெல்லாம் பாருங்கள்
    பரல்களை மட்டும் பார்க்காதீர்கள். அதையும் பாருங்கள்.
    இது பற்றி பழைய பதிவொன்றில் எழுதியுள்ளேன்
    அதைத் தேடி (என் பதிவில்தான்) படியுங்கள்

    ReplyDelete
  33. வணக்கம் அய்யா,

    பில் கேட்ஸின் பரல்கள் 1(36), 9(24), 10(27), 11(27). ஆனால் அவருடைய வாழ்க்கை மிகவும் செழிப்பாகத்தான் உள்ளது. ச‌ந்தேக‌ம் தீர்க்க‌வும்.

    ந‌ன்றி.

    பார்த்தா.

    ReplyDelete
  34. If I remember right more than 36 paragal in 10th house make one so great in work...is it a simple unique prediction or we need to cheak for all the 4 house you mentioned?

    ReplyDelete
  35. ///பில் கேட்ஸின் பரல்கள் 1(36), 9(24), 10(27), 11(27). ஆனால் அவருடைய வாழ்க்கை மிகவும் செழிப்பாகத்தான் உள்ளது. ச‌ந்தேக‌ம் தீர்க்க‌வும்.
    ந‌ன்றி.
    பார்த்தா.////

    இதே படிவின் பின்னூட்டமொன்றில் அன்னை இந்திரா காந்தியின் ஜாதகத்தைப் ப்ற்றிச் சொல்லியிருக்கிறேன். அதைப்படியுங்கள்
    அதே நிலைப்பாடுதான் இவருக்கும்

    ReplyDelete
  36. ////If I remember right more than 36 paragal in 10th house make one so great in work...is it a simple unique prediction or we need to cheak for all the 4 house you mentioned?///

    Yes, it a simple unique prediction

    இதே பதிவின் பின்னூட்டமொன்றில் அன்னை இந்திரா காந்தியின் ஜாதகத்தைப் ப்ற்றிச் சொல்லியிருக்கிறேன். அதைப்படியுங்கள்
    அதே நிலைப்பாடுதான் அனைவருக்கும் - அதாவது இந்த நான்கு வீடுகளில் குறிப்பிட்டுள்ள அளவு பர்ல்கள் இல்லாதபோது!

    ஜாதகத்தின் மற்ற அம்சங்கள் உச்ச/பரிவர்த்தனை/கூட்டணி யோகங்கள் வேலை செய்யும்
    அது தனிக்கணக்கில் வரும்!
    விளக்கம் போதுமா நண்பரே?

    ReplyDelete
  37. Thx for explanation.
    I am seeing 36, 39 etc paragal for many of the frs (from the above comment)...
    I have 38 paralgal in my 10th house...just for a quick prediction... will all, in this case will become narayanmoorthy or sabir batiya ?????

    ReplyDelete
  38. ////will all, in this case will become narayanmoorthy or sabir batiya ?????///

    There are lot factors for one to become highly rich and world famous

    Don't jump to any conclusion only by seeing the ashtakavarga

    ReplyDelete
  39. Dear sir
    I just moved to new place, sorry for delayed comment.
    I have I(24),9(34), 10(38), 11(37)..

    -Shankar

    ReplyDelete
  40. super sir what about 1 (29) 9 (32) 10 (42) 11 (31)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com