மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

3.3.08

யாருக்கு மாப்பிள்ளை யாரோ!

யாருக்கு மாப்பிள்ளை யாரோ - அவர்
எங்கே பிறந்திருக்கின்றாரோ!

மீண்டும் ஜோதிடம் - பகுதி 9

நாட்டு மருந்துகளைத் தேனில் கலந்து கொடுப்பார்கள்
மருந்தின் கசப்புத் தெரியக்கூடாது என்பதற்காக!

அதுபோல நானும் பாடங்களை, சம்பந்தப்பட்ட
சுவாரசியமான விஷயங்களுடன் கலந்து கொடுத்துக்
கொண்டிருக்கிறேன்

சில சமயம் மருந்து தூக்கலாக இருக்கும், சில சமயம்
தேன் அதிகமாக இருக்கும். அது தற்செயலாக அமைந்து
விடுவது!

பாடங்கள் நிறைய உள்ளன. நேரமின்மை காரணமாக
தட்டச்சுவது செய்வது ஒன்றுதான் பிரச்சினையாக உள்ளது.
அதோடு எனது வியாபார அலுவல்களும் சேர்ந்து கொள்வதால்
தொடர்ந்து பதிவுகள் வெளியிட முடிவதில்லை. வருந்துகிறேன்

நீங்கள் கொண்டிருக்கும் அன்பின் காரணமாகவும், ஆர்வத்தின்
காரணமாகவும், வாரம் ஒரு பதிவாவது வெளியிடுவேன்.

இன்று அரட்டைக் கச்சேரி இல்லை; நேரடியாகப் பாடம்தான்!
-----------------------------------------------------------------------------------------
1. ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும்.
(Seventh house is called as house of marriage)

2. சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான்
(Venus is called as authority for marriage).

3. ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின்
Sub - periodல் திருமணம் நடக்கும்

4. ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள்
.
5. ஏழாம் வீட்டிற்கு உரியவன் (Owner) திரிகோண வீடுகளில்
அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள்.

6. ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி
கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல
கணவனாகக் கிடைப்பான் என்று பொருள் கொள்ளவும்.

7. சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் படித்த புத்திசாலியான
மனைவி கிடைப்பாள்

8. சுக்கிரனுடன், சந்திரனும், புதனும் கூடி இருந்தால் ஒரு
பெரிய செல்வந்தரின் மகள் மனைவியாகக் கிடைப்பாள்.

9. சுக்கிரனுடன், சனி சேர்ந்திருந்தால் மிகவும் கஷ்டப்படுகிற
- ஆனால் உழைப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண்
மனைவியாகக் கிடைப்பாள்.

10. ஏழாம் அதிபனுடன் எத்தனை கோள்கள் சேர்ந்திருக்கிறதோ
அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு உண்டாகும்.
ஆனால் ஏழாம் அதிபது சுபக் கிரகமாகவோ அல்லது சுபக்கிரகத்தின்
பார்வை பெற்றாலோ ஜாதகன் ஒழுக்கமுடையவனக இருப்பான்.

11. லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் சேர்ந்து ஜாதகத்தில்
ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் வீடுகளில் அமர்ந்திருந்தால்
ஜாதகனுக்குத் திருமணம் நடைபெறாது.

12. சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்து ஏழாம் வீட்டில் அமர்ந்
திருந்தால் ஜாதகன் ஒரு விதவையை மணந்து கொள்வான்

13. ஏழில் ஒன்றிற்கு மேற்பட்ட பாப கிரகங்கள் இருந்தால்
மனைவிக்கு நோய் உண்டாகும்

14. இரண்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருந்தாலும்,
அல்லது இரண்டாம் வீட்டைப் பாப கிரகங்கள் பார்த்தாலும்
அதனதன் திசா புக்திகளில் மனைவிக்கு நோய் உண்டாகும்.

15. ஏழிற்கு உடையவன் சர ராசியில் இருந்தால் ஜாதகனுக்கு
இரண்டு தாரம் உண்டு. ஸ்திர ராசி என்றால் ஒரு மனைவிதான்.
உபயராசியென்றால் அவன் பல பெண்களுக்கு நாயகன்.

16. லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன்
சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை
பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம்
உடையவனாக இருப்பான்.

17. ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி,
செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு
உரிய காலத்தில் திருமணம் நடக்காது!

18. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள்,
அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு,
எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி
நிலைக்க மாட்டாள்

19. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள்
கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி,.
அவர்கள் சுக்கிரனுடன் அல்லது பாப கிரகங்களுடன் கூடி ஆறு,
எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் பல
பெண்களிடம் தொடர்பு ஏற்படும்

20. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர,
திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி, அதோடு
அவன் பிற மாதரை விரும்ப மாட்டான்

21. சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு அதிபதி ஆறு, எட்டு,
பன்னிரெண்டில் மறைவுற்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது
.
22. ஏழாம் வீட்டிற்கு அதிபதி பாபிகள் வீட்டில் நின்றாலும், பாபிகளால்
பார்க்கப்பட்டாலும் ஜாதகனுக்குத் திருமணம் தூர தேசத்தில் நடக்கும்.

23. நவாம்ச சக்கரத்தில் ஏழாம் வீட்டு அதிபன் சுபர்களுடைய வீட்டில்
இருந்தால் உள்ளூர்ப் பெண்ணே மனைவியாக வருவாள்.

24. ஏழாம் அதிபது பாப கிரகமாகி , ஆறு, எட்டு, பன்னிரெண்டில்
மறைந்து நின்றால், எத்தனை கிரகங்களின் பார்வை அங்கே விழுகிறதோ
அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு ஏற்படும்

25. ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களுடன் சேர்ந்தால் மனைவி
நல்லவளாக இருப்பாள். அதுவே பாப கிரகங்களுடன் சேர்க்கை
என்றால் மனைவி பொல்லாதவளாக இருப்பாள்.

26. ஏழிற்குரியவன் ராகுவுடன் சேர்ந்து ஆறு, எட்டு,
பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் இழிவான பெண்ணை
மணக்க நேரிடும்.

27. சுக்கிரனோ அல்லது ஏழிற்குரியவனோ ஜாதகத்தில்
நீசமாகியிருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்வாக இருக்காது.

கொடுத்திருப்பது எல்லாம் பொதுவிதிதான். அவரவர் ஜாதகத்தைப்
பொறுத்து இந்த விதிகள் சிலருக்குச் செல்லுபடியாகாமல் போகலாம்.
ஆகவே ஒவ்வொருவரும் தங்கள் ஜாதகத்தின் மற்ற அமைப்பையும்
கொண்டு பலன் பார்த்துத் தெளிவது நல்லது!

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிவைத்தபடி,”மனைவி
அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!”

அதில் மாற்றுக் கருத்திற்கு இடம் இல்லை!

அடுத்த வகுப்பில் சந்திப்போம்
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

(தொடரும்)

18 comments:

Kicha said...

ஐயா,
சுக்கிரன் நீசமாக இருந்தாலும்,7ம் வீட்டிற்கு குரு பார்வை இருந்தால் அதனுடைய பலன் என்ன?

-கிச்சா.

Anonymous said...

Sir,
I dont have words to describe your patience and efforts in transferring the knowledge. Thank you very much.

As usual very good lesson. I feel it is lil bit complicated to understand becos there are so many rules. Is there any way to break this in to simpler way so that ppl like me can understand.

Thank you sir
Shankar

siv said...

வணக்கம்
ஐயா, யாருக்கு மாப்பிள்ளை யாரோ மிகவும் அருமை ஒருவருடைய விளக்கத்தையும் காணவில்லையே ஜயா பயந்துவிட்டார்கள் போல் (நகைசுவை)

நன்றி
சிவா

kalkithasan said...

வணக்கம் குருவே,
இந்தப்பதிவு மிகவும் சுவாரசியமாக இருக்கின்றது.ஆனால் சின்ன சந்தேகம். ஒன்றுக்கொன்று முரணான இரு கிரக அமைப்புக்கள் ஒரே ஜாதகத்தில் வரும்போது எந்த கிரக அமைப்பு வலுவானது என்று எப்படி தீர்மானிப்பது.(முந்தைய பதிவின் எனது கேள்விக்கு பதிலளித்தமைக்கு மிகவும் நன்றி).

யுக்தா கல்கிதாசன்.

Partha said...

வணக்கம் அய்யா,

பாடம் அருமை, சில ஜாதகஙளை பார்த்து புரிந்துகொள்ள சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது.

சூரியன், கேது ஆகிய கோள்களின் தாக்கம் தாரத்தின் மீது இல்லையோ ?.

நன்றி.

பார்த்தா.

Partha said...

வணக்கம் அய்யா,

பாடம் அருமை, சில ஜாதகஙளை பார்த்து புரிந்துகொள்ள சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது.

சூரியன், கேது ஆகிய கோள்களின் தாக்கம் தாரத்தின் மீது இல்லையோ ?.

நன்றி.

பார்த்தா.

மணிவேல் said...

ஆசானுக்கு,

பின்வரும் சந்தேகங்களுக்கு பதிலளிக்க வேண்டுகிறேன்.

1)ஒரு ஸ்தானத்தின் அதிபதி கிரகம் தன் சுயவர்க்கத்தில் 4க்கு குறைவான பரல்கள் பெற்று வலுவிழக்கும்போது
அதே ஸ்தானத்தில் நின்ற மற்றொரு கிரகம் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் பெற்றால் அந்த ஸ்தானம் வலுவடையுமா?

2)ஒரு ஸ்தானாதிபதி 4க்கு குறைவான பரல்கள் பெற்று வலுவிழக்கும்போது அந்த ஸ்தான காரகன் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் பெறும்போது அதன் நிலை என்ன?

3)மேலும் ஒரு ஸ்தானம் அஷ்டவர்க்கத்தில் 25க்கும் குறைவான பரல்கள் பெற்று கெடும்போது அந்த ஸ்தானாதிபதியோ அல்லது காரகனோ அல்லது அந்த ஸ்தானத்தில் நின்ற கிரகமோ தங்கள் சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் பெற்றால் அந்த ஸ்தானத்தின் நிலையென்ன?

4)இவ்வாறிருக்க, ஒரு ஸ்தானம் வலுவடைவதற்கு பின்வரும் நான்கு அமைப்புகளில் ஏதேனும் ஒன்று அமைந்தால் போதுமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு உங்கள்
விளக்கமென்ன? அவை பின்வருவன:

a)அந்த ஸ்தானம் தன்னுடைய அஷ்டவர்க்கத்தில் (நீங்கள் அளித்த குறிப்புகளின்படி) 25க்கு குறையாமல் பரல்கள் பெறுதல்.

b)அந்த ஸ்தானாதிபதி தன்னுடைய சுயவர்க்கத்தில் 5 (அ) அதற்கு மேற்பட்ட பரல்கள் பெறுதல்.

c)அந்த ஸ்தானத்தில் நின்ற கிரகம் தன் சுயவர்க்கத்தில் 5 (அ) அதற்கு மேற்பட்ட பரல்கள் பெறுதல்.

d)அந்த ஸ்தானத்தின் காரகன் தன் சுயவர்க்கத்தில் 5 (அ) அதற்கு மேற்பட்ட பரல்கல் பெறுதல்.

Anonymous said...

//ஏழிற்கு உடையவன் சர ராசியில் இருந்தால் ஜாதகனுக்கு
இரண்டு தாரம் உண்டு. ஸ்திர ராசி என்றால் ஒரு மனைவிதான்.
உபயராசியென்றால் அவன் பல பெண்களுக்கு நாயகன்//

அய்யா வணக்கம்,

சர ராசி, ஸ்திர ராசி, உபய ராசி என்றால் என்ன என்று விளக்கம் தர
வேண்டுகிறேன்

-பிரபு ஞானவேல்

SP.VR. SUBBIAH said...

/////Kicha said...
ஐயா,
சுக்கிரன் நீசமாக இருந்தாலும்,7ம் வீட்டிற்கு குரு பார்வை
இருந்தால் அதனுடைய பலன் என்ன?
-கிச்சா.//////
அததற்குத் தனித்தனிப் பலன்!

SP.VR. SUBBIAH said...

//////Anonymous said...
Sir,
I dont have words to describe your patience and efforts in transferring the knowledge.
Thank you very much.
As usual very good lesson. I feel it is lil bit complicated to understand becos there are so many rules. Is there any way to break this in to simpler way so that ppl like me can understand.
Thank you sir
Shankar

There is no express highway or short cut to the school of asrtrology

SP.VR. SUBBIAH said...

////siv said...
வணக்கம்
ஐயா, யாருக்கு மாப்பிள்ளை யாரோ மிகவும் அருமை
ஒருவருடைய விளக்கத்தையும் காணவில்லையே
ஜயா பயந்துவிட்டார்கள் போல் (நகைசுவை)
நன்றி
சிவா/////

எனக்கு 3ல் கேது. என்னை எதற்கும் பயப்படவிடாமல் கேது பார்த்துக்கொள்வார்
கேது = ஞானகாரகன்

SP.VR. SUBBIAH said...

/////kalkithasan said...
வணக்கம் குருவே,
இந்தப்பதிவு மிகவும் சுவாரசியமாக இருக்கின்றது.ஆனால் சின்ன சந்தேகம். ஒன்றுக்கொன்று முரணான இரு கிரக அமைப்புக்கள் ஒரே ஜாதகத்தில் வரும்போது எந்த கிரக அமைப்பு வலுவானது என்று எப்படி தீர்மானிப்பது.(முந்தைய பதிவின் எனது கேள்விக்கு பதிலளித்தமைக்கு மிகவும் நன்றி).
யுக்தா கல்கிதாசன்.

நன்றிக்கு நன்றி

SP.VR. SUBBIAH said...

//////Partha said...
வணக்கம் அய்யா,
பாடம் அருமை, சில ஜாதகஙளை பார்த்து புரிந்துகொள்ள சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது.
சூரியன், கேது ஆகிய கோள்களின் தாக்கம் தாரத்தின் மீது இல்லையோ ?
நன்றி.
பார்த்தா./////

ஏன் இல்லை? உண்டு. பின் பதிவுகளில் அதெல்லாம் வரும்!

SP.VR. SUBBIAH said...

//////மணிவேல் said...
ஆசானுக்கு,
பின்வரும் சந்தேகங்களுக்கு பதிலளிக்க வேண்டுகிறேன்.

மொத்தம் 7 கேள்விகள் கேட்டுள்ளீஈர்கள். நல்ல கேள்விகள். விடை இரண்டு பக்கம் எழுத வேண்டும். பொறுங்கள் தனிப் பதிவாகப் போடுகிறேன்

SP.VR. SUBBIAH said...

/////Anonymous said...
சர ராசி, ஸ்திர ராசி, உபய ராசி என்றால் என்ன என்று விளக்கம் தர
வேண்டுகிறேன்
-பிரபு ஞானவேல்

தனிப் பதிவு போடுவதற்குரிய மேட்டர் அது .பொறுங்கள். பின்னால் எழுதுகிறேன்

Anonymous said...

When you talk about the placement of Sukran, are you talking about the "Rasi chart" or the "Navamsa Chart" ?

Which one should be considered to deduce the character of one's wife ?

SP.VR. SUBBIAH said...

/////Anonymous said...
When you talk about the placement of Sukran, are you talking about the "Rasi chart" or the "Navamsa Chart" ?////

Both

/////Which one should be considered to deduce the character of one's wife ?////

Her Chart!

Hindu Marriages In India said...

மிகவும் அருமை