சக்கையாகப் போவது எது?ஒரு திரைப்படப் பாடலை இன்று பண்பலையில் கேட்க நேர்ந்தது.
கேட்டவுடன் அதிர்ச்சியாக இருந்ததது.
பாடலைப் பாருங்கள்:
நாயகன்:
சட்டை போட்ட சாத்துக்குடிசரசம் பண்ண சேர்த்துக்கடிநாயகி:
மச்சான் பேரு தூத்துக்குடிமுத்துக்குளிக்க சேர்த்துக்கடாஇப்பொதெல்லாம் 'டா' போட்டுத்தான் நாயகி
நாயகனைக் கொஞ்சுகிறாள் அல்லது கூப்பிடுகிறாள்
பாவம் அந்த நாயகர்கள்(?)
நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் - நமது இளைஞர்
களுக்கு என்ன கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது
தெரியவில்லை - புரியவில்லை!
வாழ்க்கை, வினைப் பகுதி (action period) எதிர்வினைப் பகுதி
(reaction period) என்ற இரண்டு பகுதிகளை உடையதாகும்
வினைப் பகுதியில் நீ என்னென்ன செய்கிறாயோ அதெல்லாம்
எதிர் வினைப் பகுதியில் உன்னை விடாது உன்னிடமே வந்து சேரும்.
வரவிற்கு மேல் செலவு செய்து கொண்டிருப்பவன்
எதிர்காலத்தில் கடனில் மூழ்கித் தத்தளிப்பானே அதுபோல!
இன்று கலக்கலாகத் திரிகின்றவன் வருங்காலத்தில்
கண் கலங்கித் திரிவான்.
நல்லது கெட்டதுகளை உணர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை!
சாத்துக்குடிகளைத் தேடி அலைபவனைக் காலன் பிழிந்து
ஜூசாக்கிக் குடித்துவிடுவான். பழத்தோல் குப்பைக் கூடைக்குப்
போவது போல அப்படி அலைந்தவனும் குப்பைக்
கூடைக்குதான் போக வேண்டியதாயிருக்கும்!
வாழ்க்கைத் தத்துவங்களைச் சொல்லிக் கொடுத்து - வகுப்பறை
மாணவர்கள் தங்களை நெறிப்படுத்திக் கொள்ள உதவலாம்
என்றுள்ளேன்
உங்கள் கருத்து என்ன?
ஜோதிடப் பாடங்களுக்கு மத்தியில் இனி தத்துவப் பாடங்களும்
நடத்தப்படும். அவை உரை வடிவாகவும் இருக்கும் அல்லது
உரையுடன் பாடல் வடிவாகவும் இருக்கும்.
சொந்த சரக்காகவும் இருக்கும், தேடிப் பிடித்து வந்த சரக்காகவும்
இருக்கும். ஆனால் மனதைத் தொடும்படியாக இருக்கும்.
ஆகவே அனைவரையும் படித்துக் கேட்டுப் பயனுற வேண்டுகிறேன்
தத்துவப்பாடம் - 1

இசைஞானி இளையராஜா அவர்கள் பாடிய தத்துவப் பாடல்
உரை மற்றும் ஒலி வடிவத்துடன் இன்று பதிவு செய்யப்படுகிறது.
பாடல் எளிமையாக இருப்பதால் விளக்கம் தேவையில்லை
என்று விட்டு விட்டேன்
-------------------------------------------------------
ஓஓஓஓஓஓஓ.................................அப்ப னென்றும் அம்மை யென்றும் ஆணும் பெண்ணும் கொட்டிவைச்ச குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணேகுப்பையாக வந்த உடம்பு!அது புத்தனென்றும் சித்தனென்றும் பித்தனென்றும் ஆவதென்ன சக்கையாகப் போகும் கரும்பு! - ஞானப்பெண்ணேசக்கையாகப் போகும் கரும்புபந்த பாசச் சேற்றில் வந்து விழுந்த தேகம்!எந்த கங்கை யாற்றில் இந்த அழுக்குப் போகும்?அப்ப னென்றும் அம்மை யென்றும் ஆணும் பெண்ணும் கொட்டிவைச்ச குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணேகுப்பையாக வந்த உடம்பு!குத்தம் குறை ஏதுமற்ற ஜீவன் இங்கு யாரடா?குத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தானடா!சிவனைக்கூட பித்தன் என்று பேசு கின்ற ஊரடாபுத்திகெட்ட மூடர்க் கென்றும் ஞானப் பார்வை ஏதடா?ஆதி முதல் அந்தம் உன் சொந்தம் உன் பந்தம் நீ உள்ளவரைதான்வந்து வந்து கூடும் கூத்தாடும் விட்டோடும் ஒர் சந்தைக் கடைதான்இதில் நீயென்ன, நானென்ன வந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டுத்தள்ளு!அப்ப னென்றும் அம்மை யென்றும் ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணேகுப்பையாக வந்த உடம்பு!கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்ஆடித்தானே சேர்த்து வச்ச பாவம் யாவும் தீரனும்ஆட ஆடப் பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடாஆட நானும் மாட்டேன் என்று ஓடிப் போன தாரடா?தட்டுக்கெட்டு ஓடும் தள்ளாடும் எந்நாளூம் உன் உள்ளக்குரங்குகட்டு படக்கூடும் எப்போதும் நீ போடு மெய்ஞான விலங்குமனம் ஆடாமல் வாடாமல்மெய்ஞானம் உண்டாகஅஞ்ஞானம் அற்றுவிழும்!அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும்பெண்ணும் கொட்டிவைச்ச குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணேகுப்பையாக வந்த உடம்பு!அது புத்தனென்றும் சித்தனென்றும் பித்தனென்றும் ஆவதென்ன சக்கையாகப்போகும் கரும்பு! - ஞானப்பெண்ணேசக்கையாகப் போகும் கரும்புபந்தபாசச் சேற்றில் வந்து விழுந்த தேகம்!எந்த கங்கையாற்றில் இந்த அழுக்குப் போகும்?அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும்பெண்ணும் கொட்டிவைச்ச குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணேகுப்பையாக வந்த உடம்பு!அது புத்தனென்றும் சித்தனென்றும் பித்தனென்றும் ஆவதென்ன சக்கையாகப்போகும் கரும்பு! - ஞானப்பெண்ணேசக்கையாகப் போகும் கரும்பு- படம்: குணா------------------------------------------------------------------
========================================