மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.6.12

Manavar Malar கைலாயத்தில் ஒரு கலக்கலான உரையாடல்

மாணவர் மலர்
இன்றைய மாணவர் மலரை மொத்தம் 11 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. அப்படியே தந்துள்ளேன். படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

Manavar Malar கைலாயத்தில் ஒரு கலக்கலான உரையாடல்
ஆக்கம்: எஸ். உமா, தில்லி

வா தேவி உட்கார்!  என்ன திடீரென்று இந்தப்பக்கம்?

ஒன்றுமில்லை சுவாமி, நீண்ட நாட்களாக என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு சந்தேகத்திற்கு விடை தெரியாமல் குழம்புகிறேன்.

(சிறிது நேரம் தனிமையில் இருக்கலாம் என்றால் முடியவில்லையே என்று நினைத்துக்கொண்டே)

சொல் தேவி!  என்ன சந்தேகம் உனக்கு?

பிரபோ!  உலகில் உங்களை மறுத்துப் பேசுபவர்கள் அநேகம் பேர் இருக்கின்றார்களே?  அதைப்பற்றிய ஒரு குழப்பம்தான்....

அது எப்போதும் இருக்கும் ஒன்றுதானே?  அதைப்பற்றி நானே கவலைப்படவில்லை, உனக்கு என்ன தேவி?

இல்லை பிரபோ!  எனக்கு இவர்கள் கடவுள் என்ற ஒன்றே இல்லை என்று சொல்லும்போது கேட்கும் ஒவ்வொரு முறையும் வருத்தம் உண்டாகிறது.  அவர்களுக்கு ஏன் தாங்கள் தங்கள் இருப்பை உணர்த்தக்கூடாது?

இதெல்லாம் நடக்கிற காரியமா தேவி?

ஏன் தாங்கள் நினைத்தால் நடக்காதது என்று ஏதாவது இருக்கிறதா?

முதலில் என் இருப்பை நான் ஏன் உணர்த்தவேண்டும், அதைச் சொல்.  ஒவ்வொரு உயிரிலும் நான் சூட்சும ரூபத்தில் இருக்கிறேன்.  அதை ஆறு அறிவு படைத்த மனிதர்கள் தாங்களே உணர்வதுதானே சரியாக இருக்கும்?  அதை விட்டுவிட்டு நான்தான் கடவுள் என்று தம்பட்டம் அடிக்கச் சொல்கிறாயா?

அப்படியில்லை, உங்களை மறுப்பவர்கள் உங்களை ஒருமுறை கூட நேரில் பார்க்காததாலோ அல்லது உணராததாலோதானே மறுக்கிறார்கள்?  அப்படியிருக்க தாங்கள் ஒருமுறை நிரூபித்துவிட்டால் அவர்கள் உங்களை இல்லை என்று சொல்லமாட்டார்கள்தானே?

சரி உன் வழியிலேயே சென்று உனக்குப் புரிய வைக்கிறேன்.  எப்படி நிரூபிக்கலாம் என்று நீயே சொல்!

உங்களிடம் அதீத பக்தி செலுத்தும் யார் கனவிலாவது சென்று..

அப்படிப்பட்ட ஒருவனைத் தேடுவது மிகவும் கடினம், அப்படியே தேடி நான் தரிசனம் தந்தாலும் அவன் அந்த அனுபவத்தில் மூழ்கித் திளைத்துவிடுவானே தவிர வெளியில் பெருமை அடித்துக்கொண்டு திரிய மாட்டான்.

சரி ஓரளவு பக்தி சிரத்தையுடன் உள்ள ஒருவரின் கனவில் வந்து உணர்த்தலாமே!

அதை அவன் மக்களுக்கு எடுத்துச் சொன்னாலும் பெரும்பாலோர் அதை நம்பமாட்டார்கள்.  சிலர் கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு அவன் பின்னால் ஒரு கூட்டமாகச் சேர்ந்துவிடுவார்கள்.  அந்த நபர் சுயநலவாதியாக இருக்கும் பட்சத்தில் அவன் அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பணம் சம்பாதிக்க முற்படுவான்.  நான் கனவில் வாரதபோதே இதெல்லாம் கலியுகத்தில் நடந்துகொண்டுதானே இருக்கிறது?  மேலும் கனவு என்பதே நமது தொடர்ச்சியான எண்ணங்களின் வெளிப்பாடுதான் என்று மனிதர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள்.  ஆகவே என்னைப்பற்றியே சிந்தனை வயப்பட்டிருந்ததால் அவன் கனவில் அதேபோன்ற பிம்பம் தோன்றியதாக பகுத்தறிவுவாதிகள் வாதிடுவார்கள்.

என்ன மெளனமாக இருக்கிறாய்?  வேறு ஏதாவது சொல்!

சரி நாத்திகம் பேசுபவனின் கனவில்?

அதை அவனே நம்பமாட்டானே?

யாருக்காவது நேரில் தரிசனம் கொடுத்துவிடுங்களேன்!

இதற்கும் முன்னர் சொன்ன பதிலே பொருந்தும்.  இது உண்மையா, பிரமையா என்று அவனே குழம்பக்கூடும்.  ஒருவர் சொல்வதை எல்லோரும் அப்படியே ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்தானே?

இல்லையென்றால் ஒன்று செய்யலாம் சுவாமி, ஏதாவது ஒரு பொது இடத்திற்கு உங்களை மறுப்பவர்களை வரவழைத்து அங்கே தரிசனம் கொடுக்கலாமே?

ஏன் தேவி, நான் இங்கே நிம்மதியாக இருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா?  நான் தரிசனம் கொடுத்தால் மட்டும் என்னை மறுப்பவன் எப்படி நம்புவான்?  என்னை முதலில் சோதனைகளுக்கு உட்படுத்த நினைப்பான்.  தனக்குத் திருப்தி வரும்வரை நம்பமாட்டான்.

மனிதகுல நன்மைக்காக தாங்கள் அந்த சோதனைகளுக்கு உட்பட்டால்தான் என்ன?

ஐயகோ தேவி!  அதற்கு அவன் சொல்லும்படிஎல்லாம் நான் ஆடவேண்டும்.  அவன் சோதனை முடிவுகளை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.  அது மிகவும் கடினம்.  ஒவ்வொருவரும் தன் பாணியில் சோதனைகளை நடத்துவார்கள்.  மனிதன் தன்னிடம் இருக்கும் அறிவியல் உபகரணங்களை வைத்து சோதனைகளை முடிக்க எத்தனை காலம் பிடிக்குமோ தெரியாது.  அதுவரை நான் அங்கேயே அடைபட்டிருக்க வேண்டும்.  நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை, என்னை விட்டுவிடு.

பின் என்னதான் இதற்கு முடிவு?

மனிதர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுவிடுவதுதான் தேவி!  எப்போது அவர்கள் உணருவார்களோ உணரட்டும், சிலருக்கு பத்து ஆண்டுகள் பிடிக்கலாம், சிலருக்கு நூறாண்டுகள், இன்னும் சிலருக்கு சில பிறவிகள் தேவைப்படலாம்.  எல்லோரும் என் குழந்தைகளே.  உணர்ந்து அவர்களே என்னைத் தேடிவரட்டும் என்றுதான் போற்றினாலும், தூற்றினாலும் பொறுமையுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

இதற்கு முந்தைய யுகங்களில் இருந்த மனிதர்கள் தங்கள் ஆன்ம சக்தியால் எந்த அறிவியல் உபகரணங்களும் இன்றி வானத்தில் கோள்களின் சுழற்சியையும் என்னையும் அறிந்து உலகிற்கு உரைக்கவில்லையா?  மனிதனால் முடியாதது எதுவுமில்லை.  அவன் தன் ஆன்மசக்தியைப் பெருக்கிக்கொண்டால் என்னை உணர்வதும் கடினமில்லை.  என்னை அறியும் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் இதற்கு கண்டிப்பாக முயல்வார்கள்.  எதையும் யாரிடமும் திணித்தால் அந்தப்பொருளின் மதிப்பு போய்விடும்.  அவரவர்களே போராடிப் பெறும்போதுதான் அவர்கள் அந்த மதிப்பை உணர்வார்கள்.  

என்ன இன்னமும் ஏதாவது கேள்வி இருக்கிறதா?

இப்போதைக்கு இல்லை, ஒருவேளை தோன்றினால் திரும்ப வருகிறேன், இப்போது செல்கிறேன் பிரபோ!

(விட்டால் போதுமென்று) சென்று வா!
ஆக்கம்: எஸ்.உமா, தில்லி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
கடவுள் வந்துவிட்டார்
ஆக்கம்: K.G. நெப்போலியன், ஜப்பான்

25 ஆம் தேதி அதிகாலை அதாவது  24 ஆம் தேதி பின்னிரவிலிருந்து கடவுளின் வரவை எதிர்பார்த்த கற்பனயில் சரியான உறக்கம் இல்லாமல் போன காரணத்தால் அதன் தாக்கம்  25 ஆம் தேதி பகலில் மதியம் வரைக்கும் தலைவலியாகப் மாறி விட்டிருந்தது..

கடவுள் விவகாரமே வேண்டாத தலைவலிதான் என்று நன்கு உணர்த்தியது..

ஒமேகா-3 EPA & DHA ஜெனரல் supplement அலுவலக நண்பரிடத்தில் ஆர்டர் பண்ணியிருந்தது US இம்போர்டேட் அயிட்டம்  இரண்டு பாட்டில் இன்று வந்து சேர்ந்திருந்தது.. மற்றபடி வழக்கம் போலே அலுவலக வேலைகள்  துவங்கியது..மணித்துளிகள் கடந்தன..

"இறைவன் யாரோ என்ன பாடம் சொல்லித் தந்தாரோ..?" என்ற பாடல் காலை 9 :30 மணிக்கு மனதிற்குள் ஒலிபரப்பானது..அனேகமாக கீழ்கண்ட பாடலின் வார்த்தைகளை மாற்றி ஆனால் அதே ட்யூனில் எனக்காக பாடப்பட்டதாக நினைக்கிறேன்..

"ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி "

காலை 10 :00 மணிக்கு "இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்” என்ற பாடல் மனதிற்குள் ஒலிபரப்பானது.. இது 24 ஆம் தேதி இரவு அய்யர் எனக்கு மெயிலில் அனுப்பி சுழல விட்டிருந்த பாடல்..

காலை 10 :00 மணிக்கு "தர்ம தேவன் கோவிலுக்கு ஒரு வழி" என்ற பாடல் மனதிற்குள் ஒலிபரப்பானது..இதற்கு காரணம் ஆனந்த் அவர்கள் சில நாட்களுக்கு முன்னாள் இந்தப் பாடலை ஒலிபரப்பியதாக இருக்கும்..

காலை 11 :20  மணிக்கு

"கடவுள் ஒருநாள் மனிதனைக் காணத் தனியே வந்தாராம்..
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா? என்றாராம்
ஒரு மனிதன் 'வாழ்வே இனிமை' என்றான்
ஒரு மனிதன் 'வாழ்வே புதுமை' என்றான்"
என்ற பாடல் மனதிற்குள் ஒலிபரப்பானது..

காலை 11 :55  மணிக்கு
சிவவாக்கியார் பாடல் என்று நினைக்கிறேன்..
'நட்ட கல்லும் பேசுமோ?' என்ற வரிகள் மனதிற்குள் ஒலிபரப்பானது..

மதியம் 01 :00  மணிக்கு
"கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று.."
என்ற பாடல் ஒலிபரப்பானது ..

இறுதியாக மாலை 04 :30  மணிக்கு
"இறைவன் இருக்கின்றானா?
மனிதன் கேட்கிறான்..
அவன் இல்லா உலகத்திலே இங்கே வாழ்கிறான்"
என்கிற வரிகள் ஒலிபரப்பப்பட
அலுவல் நேரம் இனிதே முடிவுற்றது..

அந்தந்த நேரங்களிலே குறிப்பெடுத்து வைத்துக் கொண்டதால் நேரவிவரங்களுடன் எழுதமுடிந்தது..அய்யர் பாடலைச் சுழலவிட்டு அமைதி கொள்பவர் ஆதலால் இப்படிப் பாடலகள் என் சிந்தனையிலே சுழன்றதோ என்னவோ? என்றும் இல்லாத வழக்கமாக கடவுள் பாடல்கள் தொகுப்பாக வந்தமைக்குக் காரணமாக ஒருவேளை அய்யர் தமது ப்ளேயரிலே இதே பாடல்களை இந்த வரிசையிலே சுழல விட்டிருக்கலாம்..

அப்படி இருந்தால் இந்தியாவிலிருந்து கடல் கடந்து ஜப்பானை வந்தடைந்த அய்யரின் டெலிபதி வேலை அதிசயம் என்று வழக்கத்துக்கு மாறான விஷயமாக எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் சமீப காலமாக எனக்கு பாடல்களை மனதினுள் ரீங்காரமிடும் பதினைந்து வருடங்களுக்கும் மேலாய் இருந்து வந்த பழக்கம் கூட மாறி விட்டிருக்கிறது..அதுவும் பெரும்பாலும் காதல் பாடல்களேதவிர தத்துவம்.கடவுள் வகையறாக்கள் அல்ல. ஆனால் இன்று அய்யரின் ஆசியுடன் இந்த சம்பவம் நடந்ததற்குக் காரணம் அய்யர் சொன்ன கடவுளை எதிர்பார்த்து எனக்குத் தெரியாமல் எனது உள்மனம் செய்த கற்பனைத் தொகுப்பாக இருக்கலாம்.

மற்றபடி அய்யர் சொன்னது போலே எந்த ரூபத்திலும் கடவுள் எனக்குக் காட்சி தரவில்லை..வழக்கத்துக்கு மாறாக நடந்ததென்னவோ தலைவலிதான்.லஞ்ச் முடித்து ஒரு பத்து நிமிடக் குட்டித் தூக்கம் போட்டதும் அதுவும் கலைந்து போனது..

மாலையும்  இரவும் நண்பர் நேற்று கொடுத்த DVD யான  'Shobo with a shotgun'' என்கிற ஒரு alliance films வழங்கிய  with the participation of telefilm canada & filmnovascotia produced by Rombhus media/whizbanc films என்ற ஒரு மொக்கைப் படத்தைப் பார்த்துக் கழிந்தது..அங்கேயும் கடவுள் காட்சியளிக்கவில்லை.

கடவுளைப் பார்த்ததாகச் சொல்லும் எல்லோரும் சொல்வது போல 'கடவுளைக் காணத் தகுதி வேண்டும்' என்கிற அடிப்படையில் 'நான் தகுதியிழந்து விட்டேன்' என்று கொள்ளவேண்டியதுதான்..

வேறு கோணங்களும் பார்வைகளிலும் பார்த்தால்

எது எப்படியோ சூரி என்கிற சுப்புரத்தினம் அவர்கள் பாணியிலே சொன்னால் இன்றுமுழுதும் பாடல் வாயிலாக கடவுள் எனது சிந்தனையை ஆக்கிரமித்திருந்தார், எனது சிந்தனைக்குள் கடவுள் வந்துவிட்டார் என்று சொல்லாம்..

அய்யர்  பாணியில் சொன்னால் உணர்தல்/அறிதல்/ தெரிதல்/ புரிதல் என்று எந்த வகையிலும் சேர்த்தியில்லாத ஒரு அனுபவம் இது..

'விடாமுயற்சி' என என் பாணியில் சொன்னால் அத்துடன் சூன் 9 மற்றும் 11ஆகிய தேதிகளில் நான் முயற்சியே செய்யாமல் வரப்போகும் கடவுள் மெயின் பிக்சருக்கு இது வெறும் ட்ரெயிலர் 'டைட்டில்  சாங்' ஆக இருக்குமோ? 

அன்புடன்,
K.G.Napoleon
+++++++++++++++++++++++++++++
மேலே உள்ள இரு ஆக்கங்களும் சென்ற வாரம், வார மலருக்காக வந்தவை. ஆனால் மலர் வலை ஏறிய பிறகு தாமதமாக வந்த காரணத்தால், இந்த வாரம் வலை ஏற்றப்பட்டுள்ளன!
- வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++

3


எங்கெங்கு காணினும் சக்தியடா
ஆக்கம்: பார்வதி இராமச்சந்திரன், பெங்களூரு

ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலம் எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே. 
(அபிராமி அந்தாதி)

 ஸ்ரீ ஆதிசங்கரர் தொகுப்பித்த ஷண்மதங்களில், காணபத்யம், சௌரம், கௌமாரம் ஆகியவற்றின் வரிசையில், உலகனைத்தும் இயங்கக் காரணமான சக்தி வழிபாட்டைப் போற்றும் 'சாக்தம்' பற்றிப் பார்க்கலாம்.

 பெண்மை போற்றுதலுக்குரியது. துதிக்கத் தகுந்தது. 'பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்று வள்ளுவப்பெருமான் போற்றிப் புகழ்கிறார். உலகில் உயிர்களின் தோற்றம் நிகழ்வது பெண்மையாலேயே.

 இவ்வுலகமனைத்தும் ஒரு ஒழுங்கில் இயங்குகிறது.  ஒவ்வொரு இயக்கமும், அணுவிலிருந்து அண்டம் வரை இயங்குவதற்குக் காரணமான‌ ஆற்றலின் பிரவாகத்தை, சக்தியின் சொரூபத்தை பெண்வடிவில் தொழுது போற்றும் மார்க்கமே சாக்தம் ஆகும்.

 நாம் வாழும் பூமி, அதில் ஓடும் நதிகள், பேசும் மொழி, உண்ணும் உணவு என எதையும் பெண்ணின் அம்சமாக, பூமாதா, கங்கையம்மன், காவிரித்தாய், அன்னைத் தமிழ், அன்னபூரணி, அன்னலட்சுமி என்று சிறப்பித்துக் கூறுவது நமது மரபு

 நமது மரபில் 'அன்னை' என்ற உறவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இடம் மிக உன்னதமானது. 'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்' நாம் மிக உயர்வாக வைத்து மதிக்க வேண்டியவை.

 உயிர்களின் தோற்றத்திற்குக் காரணம் அன்னை. 'கெட்டமகன் இருக்கலாம் ஆனால் ஒரு போதும் கெட்ட தாய் இல்லை' என்பது நிதர்சன உண்மை. குழந்தைகள் என்ன தவறு செய்தாலும் மன்னிக்கும் த‌கைமை தாய் ஒருத்திக்கே உண்டு. உலகிற்கு நம்மைத் தருவதிலிருந்து, உணவூட்டிப் பாதுகாத்து, நரைகூடி கிழப்பருவம் எய்தினாலும் தன் மக்கள் நலமே பெரிதென நினைத்துத் தியாகத்தின் மொத்த உருவமாய் வாழும் தாய்மார்களைப் பெரிதெனப் போற்றும் பாரம்பரியம் நம்முடையது.

 தாய்மையின் மிக உன்னத, உயரிய வடிவாக, கருணைமழை பொழியும் கற்பக விருட்சமாக, உலகனைத்தும் தோன்றக் காரணமான பரம்பொருளாக, ஜகன்மாதாவாக, உலகின் ஒவ்வொரு அணுவிலும் ஊடுருவி நின்று உலகை இயங்கச் செய்யும் ஆற்றலின் பெருவடிவாக, அம்பிகையை போற்றி வழிபடுகிறார்கள் சாக்தர்கள்.

 சக்தியில்லையேல் சிவமில்லை' என்பது சாக்தர்களின் துணிபு. ச‌லனமற்றிருக்கும் நிர்க்குண நிராகாரப் பரம்பொருள் சக்தி எனும் ஆற்றலின் முழுவடிவமாய் இவ்வுலகனைத்தையும் தோற்றுவித்து, காத்து, பின் முடிவில் உலகனைத்தும் ஒடுங்கும் இடமாய்த் திகழ்கிறது.

 பிரபஞ்சமுழுவதும் உள்ளும் புறமும் ஊடாடி நின்று உலகனைத்தையும் நன்றாய் இயங்கச் செய்து காத்து ரட்சிக்கும் சக்தியின்வழிபாடு, ஷண்மதங்கள் (காணபத்யம், சௌரம், கௌமாரம், சாக்தம், சைவம், ஸ்ரீ வைணவம் எனும் ஆறு பிரிவுகளே ஷண்மதங்கள்) அனைத்திலும் வியாபித்து நிற்பது கண்கூடு.

 சைவத்தில் சக்தி சிவனாரின் பத்தினி. திருமாலின் தங்கை. விநாயகர், முருகப்பெருமானின் தாய். ஸ்ரீ வைணவத்தில் ஸ்ரீ மஹால்க்ஷ்மி, 'தாயார்' என்றே போற்றப்படுகிறாள். மும்மூர்த்திகளும் சக்தி சொரூபமான தேவியரின் துணை கொண்டே, முத்தொழில்களைப் புரிகிறார்கள்.

தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்;  . (அபிராமி அந்தாதி)

என்று அபிராமி பட்டர், மும்மூர்த்திகளையும் படைத்த பரம்பொருளான ஆதிசக்தியின் வெவ்வேறு வடிவங்களே, முப்பெருந்தேவியர் என்று குறிப்பால் உணர்த்துகிறார்.

'த்ரயாணாம் தேவாநாம் ' எனத் தொடங்கும் சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தில் ஸ்ரீ ஆதிசங்கரபகவத் பாதர், "சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களின் வடிவமாகத் தோன்றிய மும்மூர்த்திகளும் உனது திருவடிகளுக்குப் பூஜை செய்த வண்ணம் இருக்கின்றனர். ஆகவே, உனது திருவடிகளைத் தொழுதால், மும்மூர்த்திகளையும் தொழுவதாக ஆகிவிடுமன்றோ" என்று அம்பிகையின் மும்மூர்த்திகளுக்கும் மேலான தன்மையைப் புகழ்கிறார்.

 அம்பிகையின் கருணை அளப்பரியது. அடியவர்களை அதிகம் சோதிக்காது, வேண்டுவனவற்றை அப்பொழுதே தரும் தன்மையுடையது. இதை சௌந்தர்ய லஹரியில்,  'பவாநி த்வம் தாஸே' எனத் தொடங்கும் ஸ்லோகத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர், "பவானி, உன் கருணையுடன் கூடிய கடைக்கண் பார்வையைத் தந்து அருள்வாயாக எனக் கேட்க நினைக்கும் ஒருவன், 'பவானி' எனத் தொடங்கும் முன்பே, மும்மூர்த்திகளின் கிரீடங்களால் மங்கள ஆரத்தி செய்யப்பட்ட உன் திருவடிகளை உடைய உனது மேலான சாயுஜ்ய பதவியையே அளித்து விடுகிறாய்" என்று புகழ்கிறார்.

"கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே." என எங்கும் நிறைப் பரம்பொருளாக அம்பிகையைப் போற்றித்துதிக்கிறார் அபிராமி பட்டர்.

அம்பிகையே 'ப்ரஹ்மாண்ட பாண்ட ஜனனி' யாக உலகனைத்தையும் படைக்கிறாள். தன் கடைக்கண் பார்வையாலேயே உயிரினங்களைக் காக்கிறாள்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் உள்ள  "உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவளீ" என்ற திருநாமம், தேவி இமை கொட்டாமல் உலகைக் காக்கும் தன்மையை வியந்து போற்றுகிறது. இமை கொட்டுகிற அந்த சிறு துளி நேரம் கூட அம்பிகையின் குழந்தைகளான நமக்கு அவள் பார்வையின் பாதுகாப்பு  கிடைக்காமல் போய்விடக் கூடாதே என்ற தாய்மையின் தவிப்போடு நம்மைக் காக்கிறாள் அம்பிகை.

உலகில் கொடுமைகள் கட்டுக்கடங்காமல் போகும் போது மஹாகாளியாக  அசுரர்களை சம்ஹரித்து அருளுகிறாள். மஹாமாயையாக, உலகனைத்தையும் வசப்படுத்தி, ஆள்கிறாள். அஞ்ஞான இருளில் மூழ்கி ஜீவர்கள் தவிக்கும் போது, தன் வற்றாத பெருங்கருணையால் முக்தியை அருள்கிறாள்

 சக்தி வழிபாட்டின் வேர் மிகப் பழமையானது. தாய் வழிபாடும் கன்னி வழிபாடும் மெல்ல மெல்ல ஒருங்கிணைந்தே சாக்தமாகத் தோற்றம் கொண்டது என்றொரு கூற்று உண்டு.ஆதிகாலத்தில், உயிர்களைத் தோற்றுவிக்கும் அதிசய சக்தியாகப் பெண்மையை மதித்த மனிதன், தன் கூட்டங்களுக்குப் பெண்ணின் தலைமையை ஏற்று நடந்தான். காலமாற்றத்தால், இந்நிலை மாறியபோது கூட, பெண்மையின் மகிமையை உணர்ந்து போற்றும் மார்க்கம் மனிதனால் சாக்தமாகப் பேணப்பட்டே வந்திருக்கிறது.

 சிறுமி, இளம்பெண், திருமணமான மங்கை, வயது முதிர்ந்த பெண் என பெண்மையின் அனைத்து வடிவங்களையும் பூஜிக்கிறது சாக்தம். பாலா, கன்யாபூஜை, சுமங்கலிபூஜை, ஸூவாஸினி பூஜை என அனைத்தும் சாக்தத்தில் முக்கிய இடம் பெறுகிறது. முக்கியமாக, அம்பிகைக்கு உகந்த தினங்களான 'நவராத்திரியில்' இப்பூஜைகள் செய்வது இகபர சுகங்களை அளிக்க வல்லது.

 கல்விக்கு அதிபதியாக சரஸ்வதியையும் செல்வத்தின் தலைவியாக, ஸ்ரீ லக்ஷ்மியையும் வீரத்தின் அதிதேவதையாக பார்வதியையும் போற்றும் சாக்தத்தில் நவராத்திரிப் பண்டிகை, அமைதியும் காருண்யமும் பொருந்திய அம்பிகை, அநீதி மேலோங்கும் போது துர்க்கையாக, மஹாசண்டியாக, மகிஷாசுரமர்த்தினியாக உருவெடுத்து மகிஷாசுரனை வென்றதைப் போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது. இது புரட்டாசி மாதத்தில் பத்து தினங்களாகக் கொண்டாடப்படுகிறது. இது தவிரவும், வசந்த நவராத்திரி, சியாமளநவராத்திரி, ஆஷாட நவராத்திரி ஆகியவையும் சாக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

 சிவனாரின் இருப்பிடமாக கயிலையும், திருமாலின் வசிப்பிடமாக ஸ்ரீவைகுண்டமும் சொல்லப்படுவது போல், தேவியின் வாசஸ்தலமாக, சாக்தத்தில் ஸ்ரீபுரம் சொல்லப் படுகிறது. 'ஸ்ரீ' என்னும் அற்புதச் சொல்லுக்குப் பொருள் கூற ஆரம்பித்தால் அது வானளவு விரியும்.

 அம்பிகையின் வழிபாட்டில் இருவகைகள் உள்ளன. அவை வாமாசாரம் அல்லது ஸமயாசாரம், தக்ஷிணாசாரம் ஆகியவை ஆகும். இதில் வாமாசாரம், உள்முகமாக தேவியை ஆராதிக்கும் முறை. 'குண்டலினி யோகம்' மூலம் அம்பிகையை ஆராதித்தலே இது. இதில் மந்திரசித்தி முதல் சமாதி வ‌ரை 30 நிலைகள் உள்ளன. யோகசாதனா மார்க்கத்தில், ஸ்ரீவித்யாமார்க்கமே, சிறந்ததும் பாதுகாப்பானதும் ஆகும். சாக்தத்தில் 'ஸ்ரீ வித்யா மார்க்கம்' உபாசனா முறைகளில் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது.

 தக்ஷிணாசாரம் என்பது மூன்று வகைப்படும். அவை, மந்திரங்களை உச்சரித்து தேவியைப் பூஜித்தல், ஸ்ரீசக்ரம்  ஸ்ரீ மேரு முதலிய யந்திரங்களைப் பூஜித்தல், தாந்திர அதாவது கை அசைவுகள் மூலமாகச் செய்யப்படும் முத்திரைகள் மூலம் ஆராதித்தல் ஆகியவை ஆகும்.

 ஆதிபராசக்தியின் வடிவான ஸ்ரீ லலிதா தேவி, பண்டாசுர வதத்தின் போது, தேவர்களின் பக்திக்கிரங்கி, சிதக்னி குண்டத்தில் தோன்றி, பண்டாசுரனை வெல்கிறாள். ஸ்ரீ காமேஸ்வரருடன், ஸ்ரீபுரத்தில் தேவி  வீற்றிருக்கும் போது, வசினி முதலிய வாக்தேவதைகளால் அம்பிகையைத் துதித்துச் சொல்லப் பட்ட ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், தேவியின் துதிகளில் தனிச்சிறப்பு வாய்ந்தது. இது அம்பிகையின் எங்கும் நிறைத் தன்மையைப் பலவாறு போற்றித் துதிக்கிறது.

முதல் 33 ஸ்லோகங்கள் அம்பிகையின் பண்டாசுர வதத்தை விவரித்தும் அதன் பின்  வரும் ஸ்லோகங்கள் அம்பிகையின் பரப்பிரம்மத் தத்துவத்தை விளக்குவதாகவும் ஸ்ரீ வித்யா உபாசனையின் விரிவாகவும் அமைந்துள்ளது. இந்த சஹஸ்ரநாமம் (ஆயிரம் நாமாவளிகள் கொண்ட துதி) இவ்வுல கனைத்தும் தோன்றக் காரணமான அம்பிகையை, அன்னையர்க்கெல்லாம் அன்னையை, 'ஸ்ரீ மாத்ரே நம:' என்று போற்றித் துவங்குகிறது..

 ஸ்ரீ லலிதா தேவியான அம்பிகையின் கையிலிருக்கும் ஐந்து புஷ்ப பாணங்கள், ஐம்பொறிகளுக்கும் கரும்பு வில், மனத்துக்கும் பாச அங்குசங்கள், மனத்தையும் ஐம்பொறிகளையும் அம்பிகையின் அருளால் வென்று அவள் தாள் பணிதலையும் குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ளப்படுகிறது.

ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ விவேகானந்தர் முதலிய எண்ணற்ற சாக்தர்கள் இந்தப் புண்ணியபூமியிலே. 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்று முழங்கிய மஹாகவி பாரதியும் சாக்தரே.

யாதுமாகி நின்றாய்– காளீ,
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை யெல்லாம் — காளீ
தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்து மானாய் — காளீ
பொறிக ளைந்து மானாய்
போத மாகி நின்றாய் — காளீ
பொறிகளைக் கடந்தாய்.
என்று அம்பிகையின் எங்கும் நிறைத் தன்மையைப் பாரதியார் போற்றுகிறார்.

நோக்குகிற இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் ஆற்றலின் திருவுருவாம் சக்தியின் அடிபணிந்து நலம் பெறுவோம்.

நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன்; அழியாத குணக்
குன்றே! அருட்கடலே! இமவான் பெற்ற கோமளமே!
(அபிராமி அந்தாதி)

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்
பெங்களூரு
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4


சுரண்டிப் பிழைக்கத் தெரியாத மனிதரின் கதை
ஆக்கம்: தேமொழி


கனடாவில் உள்ள டொராண்டோவில் வசிக்கும் மோகன் ஸ்ரீவாஸ்தவா ஒரு நிலவியல் புள்ளியியல் வல்லுநர்  (Mohan Srivastava, geological statistician).  இவர் அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற எம். ஐ.டி மற்றும் ஸ்டான்ஃபோர்ட் போன்ற பல்கலைக்கழகங்களிலும் படித்து பட்டம் பெற்றவர்.  ஆனால் என்ன படித்து என்ன பலன், வாழ்வில் ஒரு பிழைக்கத் தெரியாத மனிதராக இருந்தால் எப்படி அவரை மெச்சுவது?

2003 ஆம் ஆண்டு ஒரு நாள் வேலையில் இருந்தபொழுது ஒரு கோப்பை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொண்டிருந்தார்.  அது அதிக நேரம் எடுக்கவே, அதுவரை தனது மேஜையைக் குடைய ஆரம்பித்தார்.  அப்பொழுது என்றோ ஒருநாள் அவர் நண்பர் ஒருவர் அவருக்கு பரிசாக விட்டுச் சென்ற இரு பரிசுச்சீட்டுகள் அவர் கண்களில் பட்டது.  அது tic-tac-toe விளையாட்டு பரிசுச்சீட்டுகள்.  அதில் ஒரு பகுதியில் latex வண்ணம் பூசப்பட்டு சில எண்கள் மறைக்கப்பட்டிருக்கும். அவை விளையாடுபவருக்கென கொடுக்கப்பட்ட எண்கள். அவற்றை சுரண்டியபின்பு அதே பரிசுச்சீட்டின் மற்றொரு  பகுதியில் உள்ள மற்ற எண்களுடன் அவை ஒரே வரிசையில் அமையுமாறு பொருந்தினால் பரிசுச்சீட்டில் குறிப்பிட்டுள்ள பரிசுத் தொகையைப் பெறலாம் என்பது விளையாட்டின் விதி.

மோகன் ஒரு நாணயத்தை எடுத்து சுரண்டினார். முதல் சீட்டிற்கு எந்தப் பரிசும் இல்லை.  இந்த ஏமாற்று வேலைக்காகத்தான் நான் இது போன்ற விளையாட்டுகளில் பணத்தை இழக்க விரும்புவதில்லை என்று எண்ணிக் கொண்டு அடுத்த சீட்டையும்  சுரண்டினார்.  ஆனால் அந்த சீட்டிற்கு மூன்று டாலர் பரிசு கிடைத்தது.  இருப்பதிலேயே குறைந்த பரிசுத் தொகை.  அந்தப் பரிசுச்சீட்டின் விலையும் அதுதான்.  மதிய உணவின் பொழுது அருகில் உள்ள பரிசுச்சீட்டுகள் விற்கும்  பெட்ரோல் பங்க்கிற்கு சென்று பரிசைப் பெற்ற பின்பு மேலும் சில பரிசுச் சீட்டுகள் வாங்கினார்.

புள்ளியியல் படிதவராயிற்றே, அவர் மூளை இந்த சீட்டுகள் பரிசுதரும் சீட்டுகளா என எப்படி நிர்ணயிக்கப் பட்டிருக்கும் என யோசிக்க ஆரம்பித்தது.  எப்பொழுதும் இந்த பரிசுச் சீட்டுகள் மொத்தமாக அச்சிடப்படும்.  அத்துடன் எண்களும் சீராகவோ, ஒரு வரிசையாகவோ இல்லாமல் ஒழுங்கற்ற முறையில் (random order) கணினியின் துணைகொண்டு நிர்ணயிக்கப்படிருக்கும்.  ஆனாலும் பரிசுச் சீட்டு நிறுவனம் பரிசு பெறப்போகும்  சீட்டுகளை ஒரு சில எண்களில்  தொடங்கும், அல்லது முடியும், அல்லது ஏதாவது ஒரு ஒரு சில எண்கள் இணைந்து வரும் வரிசை எனப் பலப்பல உத்திகளில் ஏதாவது ஒன்றினைக் கையாண்டு பரிசு பெறப்போகும் ஒரு சில எண்களை  நிர்ணயித்திருப்பார்கள்.

பரிசுச் சீட்டு நிறுவனத்தின் இந்த முறை சுலபமாகத் தெரியாதவாறு, அதாவது விளையாடும் மக்களுக்கு எளிதில் புரியாதவாறு, ஒரு குறிப்பிட்ட பத்து அல்லது இருபது சீட்டுகளில் ஒன்றிக்கு பரிசு விழுமாறு ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கும்  வகையில் இந்த எண்கள் மற்ற சீட்டுகளின் வரிசையில் இடம் பிடிக்கும்.  ஒரு நிகழ்ச்சி நடக்க எத்தனை வாய்ப்புள்ளது (probability) என்ற புள்ளியியலின் துணைகொண்டு கணிக்கும் முறையை  தினசரி தன் தொழில் காரணமாக உபயோகிப்பவர் மோகன். ஒரு சில பரிசுச்சீட்டுகளை வாங்கி, பரிசு விழுந்த மற்றும் விழாத எண்களை ஒப்பிட்டு, எந்த வகையில் எண்கள் இணைந்திருந்தால் சீட்டுகள் பரிசு பெறக்கூடிய வாய்ப்புள்ளது என்பதை சுலபமாக புத்திசாலித்தனமாக  அனுமானித்து விட்டார்.  அவர்  கண்டுபிடித்த முறையினை உபயோகித்து   ஒருபுறம் கொடுக்கப்பட்டுள்ள எண்களை கணக்கில் கொண்டு சுரண்டாமலே 90% வரை சரியான பரிசுச்சீட்டுகளை அவரால் கண்டுபிடித்துவிட முடியும்.

இந்த ரகசியத்தை கண்டிபிடித்த நாம் என்ன செய்வோம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அவர் செய்ததது...பரிசுச் சீட்டு நிறுவனத்தைத் தொலைபேசியில் கூப்பிட்டு, அவர்கள் பரிசுகளை தரும் குறிப்பிட்ட விளையாட்டின் சீட்டுகளின் எண்களை நிர்ணயித்த முறை சுலபமாக உள்ளது என்று சொன்னார்.  நிறுவனத்தின் மேலதிகாரியைச்  சந்தித்து அதைப்பற்றி நேரில் விளக்க விரும்புவதாக சொல்லி சந்திக்க வாய்ப்பளிக்கும்படி கேட்டார்.  நிறுவனத்தினர் அவரது மனநிலையை சந்தேகித்தார்களோ என்னவோ தொடர்ந்து தட்டிக் கழித்து வந்தார்கள்.  வெறுப்பேறிய மோகன் மீண்டும் கத்தைகளாக கொஞ்சம் பரிசு சீட்டுகள் வாங்கி தான் அறிந்து கொண்ட முறையைப் பயன்படுத்தி பரிசு பெரும் சீட்டுகள் ஒரு கத்தை, பரிசு பெறாத சீட்டுகள் ஒருகத்தை எனப்பிரித்தார்.  பரிசு சீட்டு நிறுவனத்தின் மேலதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதினார்.

இந்த இரண்டு கத்தைகளையுமே நீங்களோ அல்லது உங்கள் உதவியாளர் உதவியுடனோ சுரண்டிப் பாருங்கள்.  பரிசு விழும், பரிசு விழாது என நான் யூகித்தது சரியாக இருக்கும் என்று கடிதம் எழுதி இரு கத்தைப் பரிசுச்சீட்டுகளையும் தபாலில் சேர்த்தார்.  அவரது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல பரிசோதித்துப் பார்த்து உண்மையைப் புரிந்து கொண்ட கனடாவின்  பரிசுச்சீட்டு நிறுவனம் இரண்டே மணிநேரத்திற்குள் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டது.  சில நாட்களுக்குள் நாடு முழுவதும் "டிக் டக் டோ" பரிசுச்சீட்டு விற்பனையும் நிறுத்தப்பட்டுவிட்டது. 

இதே போன்ற நிகழ்ச்சி அமெரிக்காவிலும் நடந்திருப்பதாக நம்பப் படுகிறது.  ஜோஅன் கின்த்தர்  (Joan Ginther) என்ற பெண்மணி ஒருவர் தொடர்ந்து ஒரு டெக்சாஸ் மாநில பரிசுச்சீட்டில் மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பரிசுகளைப் பெற்று வந்தார்.  அவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் புள்ளியியல் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பதும், பல்கலைகழகம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றியவர் எனவும் தெரிந்தது.  அவரும் மோகனைப் போல பரிசுவிழும் சீட்டினை அடையாளம் கண்டுகொள்வது எப்படி என்று புரிந்து கொண்டிருக்க வாய்ப்புள்ளது.  ஆனால் அவரே அதைத் தெரிவிக்காத காரணத்தினால் சந்தேகப் படுவதுடன் நிறுத்திக் கொள்வதைத் தவிர நிரூபிக்க வேறு வழியில்லாமல் போனது.  மோகன் பரிசுச்சீட்டினை சுரண்டிப் பணம் சேர்ப்பதை தன் முழு நேரத் தொழிலாக மாற்றததற்கு காரணம், அந்த முறையினால் பணம் ஈட்டுவதற்கு செலவழிக்கும் நேரத்துடன் ஒப்பிட்டால் வரும் வருமானம் சொற்பம் என்பது அவர் கருத்து.

[possible image locations: http://images.ctv.ca/archives/CTVNews/img2/20110204/800_lottery_man_110204.jpg and https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIFwd0yaT6Ph3N6OcNCF6C5toV5nUw7k6UtwQmY7BhJqhxBtCCt3fN_TuEhHnbvk0oRCUG9gNkaf07dplns1CHelzWphFMgwxk5HecxD_GMznG_p8MXxwnHIl2ss0m5yJuW9jpyTu2lovD/s320/Mohan+Srivastava+lottery+ticket.jpg]
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5


நெஞ்சை நிறைக்கும் தஞ்சை!
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி


சென்ற ஆக்கத்தில் தஞ்சைக்காரர்களைப் பற்றி எதிர்மறையாக சில நிகழ்ச்சிக‌ளைக் கூறிவிட்டேன்.திருமண சம்பந்தத்தின் போதும் 'தஞ்சாவூரா?'

என்று மற்ற மாவட்டத்துக்காரர்கள் சற்றே தயங்குவது இன்றும் உண்டு.

தஞ்சையின் சிறப்புக்களையும் நான் கூறாவிட்டால் நான் ஓரவஞ்ச‌னை செய்தவன் ஆகிவிடுவேன். 38 ஆண்டுகள் எனக்கு வாழ இடம் கொடுத்த தஞ்சை மண்(பூமித்தாய்) என்னை மன்னிக்க மாட்டாள்.

தஞ்சை நகரத்திலும், மாவட்டம் முழுமையும் நிறைந்துள்ள கோவில்கள்தான் தஞ்சைக்கு முதல் பெருமை.கோவில் என்றால் சிறு  கிராமத்தில் கூட  குறைந்தது 2 ஏக்கர் நிலப்பரப்பில் கோவில் நிறைவாக அமைந்திருக்கும்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் தினமும் 2 கோவில்கள் என்று வைத்துக் கொண்டு தரிசனம் செய்தாலும் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் பயணம் செய்தால்தான் முழுமையாக தரிசிக்க முடியும்.இந்த மாவட்டத்தில் கற்களுக்கு வழியில்லை. பெரும் பாறைகளோ ,மலைகளோ இல்லாத ஒரு பகுதி தஞ்சை.இங்கே உள்ள‌ அத்த‌னை கோவில்களுக்கும் புதுக்கோட்டைப் பகுதியில் இருந்துதான் கற்கள் கடத்தப்பட்டு இருக்க வேண்டும்.

சுமார் 60 கிமீ தூரத்திற்கு சரக்கு உந்து வசதிகள் இல்லாத காலத்தில், ஓடைகளுக்கும் , ஆறுகளுக்கும் உறுதியான‌ பாலங்கள் இல்லாத சமயத்தில் எப்படி அந்த கற்கள் கோவில் பணிக்கு வரவழைக்கப்பட்டன என்பதே ஒரு அதிசயம்தான்.

இன்றும் தஞ்சை மாவட்டத்தில் கோவில்கள் பலவும் நன்கு பராமரிக்கப்படுகின்றன.இதற்கு நாம் சைவ ஆதினங்களுக்கும், வருமானம் இல்லாவிட்டாலும் கோவிலைக் கைவிட்டுவிடாத குருக்கள் சமூகத்தையும்தான் பாராட்ட வேண்டும்.

தஞ்சையின் மற்றொரு சிறப்பு ஆண்டுதோறும் நடைபெறும் திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாதான்.தைமாதம் வரும் இந்த விழா சமயத்தில் திருவையாற்றில் பொழியும் சங்கீத மழைபோலவே, தஞ்சைவாசிகளின் விருந்தோம்பல் பண்பும் சிறப்புப் பெறும். ஆராதனை உற்சவத்திற்கு வந்தவர்கள் பசியுடன் திரும்பினார்கள் என்று இருக்கக்கூடாது என்று பல அன்னதான அறக்கட்டளைகள் சுறு சுறுப்பாக இயங்கும். ஒரு சில அறக்கட்டளைகளில் திருமண விருந்தே கிடைக்கும்.'சோழ நாடு சோறுடைத்து' என்பதை அங்கே காணலாம்.

கடந்த 15 ஆண்டுகளாக நம் தஞ்சாவூரார் கோபாலன் ஐயா முன்னின்று நடத்தும் நாட்டியாஞ்சலியும் நன்கு புகழ் பெற்று வருகிறது.வெளிநாட்டு கலைஞர்களும் அதில் இடம் பெற போட்டிப் போட ஆரம்பித்துவிட்டனர்.

சரஸ்வ‌திமஹால் நூலகம் தஞ்சைக்கு மணிமகுடம் போன்றது.பல மூல நூல்கள் ஓலைச்சுவடி வடிவத்தில் அங்கே பாதுகாக்கப்படுகின்றன.

அவையெல்லாம் இப்போது மைக்ரோ ஃபிலிம் எடுக்கப்பட்டு பாதுகாக்கப் படுகின்றன.மன்னர் சரபோஜி மைனராக இருந்தபோதே ஆங்கில அரசின் ஆளுமைக்குக் கீழ் வந்துவிட்டார். அவருடைய அதிகாரங்களும் செல்வாக்கும் குறைந்திருந்த போதும் சரஸ்வதி மஹாலை விரிவுபடுத்த அவர் செய்த முயற்சிகள் என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறத்தக்கது.

தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் வரப்பிரசாதி. சதாசிவப் பிரம்மேந்திரருடன் தொடர்புடைய இந்தக் கோவில் ஏழை எளிய மக்களின் புகலிடம்.இந்த அம்பாள் அணிந்த ஆடைகளே மற்ற வருமானம் இல்லாத‌ கோவில்களின் விக்ரகங்களுக்குச் செல்கின்றன.தஞ்சை மக்களின் பக்தியை நேரில் காண ஆவணி மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்தக் கோவிலுக்கு வந்தால் போதும்.

காஞ்சி காமாட்சியம்மனின் உற்சவ விக்ரஹமான தங்கக் காமாட்சி தஞ்சையில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.(நமது டெல்லிக்கார உமாஜியின் தாத்தா இங்கேதான் ஸ்தானிகராக‌ இருந்தார்.) பங்காரு காமாட்சி அம்பாளின் அனுக்கிரஹத்தால் தஞ்சை நாளொரு மாற்றங்களைக் கண்டு முன்னேறி வருகிறது.

இன்று தஞ்சை பட்ட மேல் படிப்புக்கு உகந்த ஓர் இடமாக மாறியுள்ளது.மருத்துவக் கல்லூரியும், பல தொழில் நுட்பக் கல்லூரிகளும் பிற மாநில மாணவர்களையும் கவர்ந்து இழுக்கின்றன.இன்று தஞ்சையில் நூற்றுக்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. நான் 1973ல் வந்தபோது மூன்றே மூன்று கல்லூரிகள் தான் இருந்தன.

18 கருட சேவை என்பது தஞ்சையின் ஒரு சிறப்பு. ஒரே நாளில் பல பெருமாள் கோவில் உற்சவர்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு வீதிகளிலும் உலாவருவது கண் கொள்ளாக் காடசி.

தஞ்சையில் தேர்திருவிழா கிடையாது.அதற்கு பதில் முத்துப் பல்லக்கு என்று நடைபெறும்.பல கோவிகளின் உற்சவ மூர்த்திகள் மல்லிகைப் பூவால் அலங்கரிக்கப்பட்ட பெரிய பல்லக்குகளில் பவனி வருவார்கள். இரவு முழுதும் வாண வேடிக்கை, மயிலாட்டம் ஒயிலாட்டம் என்று ஊரே அமர்களப்படும்.நாதஸ்வர இசைப் பிரியர்களுக்கு அன்று பெரிய இசை விருந்து கிடைக்கும்.பல ஸ்பெஷல் செட் நாதஸ்வரக் கலைஞர்கள் தெருவிலேயே அமர்ந்து வாசிப்பார்கள்.

பச்சைக்காளி பவ‌ளக்காளி என்பது ஒரு முக்கிய நிகழ்வு. பெரிய காளி உருவ பொம்மைகளுக்குள்(லாலி பொம்மைகள்) மனிதன் புகுந்து கொண்டு தெருமுழுதும் ஆடி வருவார்கள்.தீடீரென்று இரண்டு காளிகளுக்கும் சண்டையெல்லாம் நடக்கும். மக்களுடைய பக்தி சிரத்தையையும், மரபார்ந்த பழக்கங்களையும் வெளிப்படுத்தும் ஓர் எளிய நிகழ்ச்சி 

தஞ்சைப் பெரிய கோவிலைப் பற்றிச் சொல்லாமல் விடலாமா? இன்று உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெரியகோவிலின் பெருமை சொல்லி மாளாது.பல வலை தளங்கள் உள்ளன படித்து மகிழுங்கள்.

அறு படைவீட்டில் ஒன்றான சுவாமிமலை,கும்பகோணம் மஹாமக‌ம், திருவாரூர் தேரோட்டம், வல‌ங்கைமான் பாடைக்காவடி,மாயூரம் கடைமுகம், வேதாரண்யம் சமுத்திர ஸ்நானம், நவக்கிரக க்ஷேத்திரங்கள்,ஒப்பிலாஅப்பன் கோவில், அய்யாவாடி பிரத்யங்கரா, கோவிந்தபுரம் என்று முடிவில்லாமல் சொல்லலாம்.சொல்லிக் கொண்டே போகலாம்.

சுதந்திரப் போராட்டத்தில் தென்னகத்தில் ராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்பு சத்யாகிரஹத்தின் போது அந்த நடைப் பயணம் முழுவதும் பெரும்பாலும் தஞ்சை மாவட்டத்திலேயே நடந்தது.ஆங்கில அரசாங்கத்தின் கெடுபிடியையும் மீறித் துணிவுடன் அந்த சத்யாகிரஹிகளுக்கு உதவிசெய்த தஞ்சை மாவட்ட மக்களை எத்துணை போற்றினாலும் தகும்.


தஞ்சாவூர் கதம்பம், டிகிரி காப்பி, அசோகா அல்வா, முந்திரிப் பருப்பு, தலையாட்டி பொம்மை , தஞ்சாவூர் ஆர்ட் ப்ளேட், கட் கண்ணாடி ஆர்ட் வேலை,கும்பகோண‌ம் வெற்றிலை, வறுவல் சீவல், வெண்ணாத்தி புருஷன் கடை,இட்லிக்கு கடப்பா, கொத்சு....

அடடா முடிவில்லை தஞ்சையின் தனிச் சிறப்புக்களுக்கு...

இறுதியாக கடந்த 45 ஆண்டுகளாகத் தமிழகம் தஞ்சைக்கார‌ர்களாலேயே  ஆளப் பெறுகிறது. ஒருமுறை தியாகராஜசுவாமி ஊர்க்கார‌ர் ஆட்சியென்றால் மற்றொரு முறை  ராஜகோபால சுவாமி ஊர்க்காரர்களின் ஆட்சி.

பல செய்திகளையும் கட்டுரையின் நீளம் கருதி விட்டுவிட்டேன். பின்னூட்டத்தில் நீங்கள் விட்டுப்போன செய்திகளைக்கூறக் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்:கே.முத்துராமகிருஷ்ணன் (லால்குடி)

பின் குறிப்பு:இது என் 98வது ஆக்கம். இன்னும் இரண்டு வெளியானால் 100 என்ற இலக்கைத் தொட்டு விடுவேன்.என் ஆக்கங்களைத் தொடர்ந்து படித்துவரும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். 15 ஆகஸ்டு 2010 முதல் இதுவரை வெளிவந்த என் ஆக்கங்களில் உங்கள் மனதில் சட்டென்று நினைவுக்கு வருபவைகளை கூற வேண்டுகிறேன்.மறக்காமல் இருக்கும் அந்த ஆக்கங்களை மட்டும் புத்தக‌ வடிவாக்கி நண்பர்களுக்கும், நூலகங்களுக்கும் பரிசளிக்க ஆவல்.பின்னூட்டத்திலும் கூறலாம். என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கும் எழுதலாம்.
My mail ID: kmrk1949@gmail.com
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.



படைப்பின் ரகசியம்
ஆக்கம்: K.G.நெப்போலியன்


கிட்டத்தட்ட 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தததாக ஆராய்ச்சியாளர்களால் சான்றுகளுடன் அனுமானிக்கப்படும் புவியின் எரிமலை வெடிப்புக்களோ, அல்லது இடி போன்ற இயற்கையின் அதி உயர் வெப்ப மின் தாக்கமோ காரணமாக  அமைய அப்போதிருந்த புவிச் சூழலில் இருந்த எரிமலை வெடிப்பின் போது வெளிப்படும் வாயுக்களான  கார்பன் டை ஆக்சைடு,ஹைட்ரஜென் சல்பைடு,சல்பர் டை ஆக்சைடு,நைட்ரஜென், போன்றவை ஆர்கானிக் அமிலங்களாக உருமாற்றம் பெற்றிருக்கலாம் அல்லது ஆழ்கடல் பகுதிகளின் புவியின் ஆழத்திலிருந்து வெந்நீர் ஊற்றுக்களாய் வெளிப்படும் ஆர்கானிக் கெமிகல்களோதான் உயிர் என்கிற இயங்கும் செல்லைத் தோற்றுவித்த காரணமாக இருக்கமுடியும் என்று கொள்கை வடிவம் தந்தனர் ஆராய்ச்சியாளர்கள் அலெக்ஸ்ஸாந்தர் ஓபரின்ன்னும், J .B .S .ஹால்டேன் அவர்களும்.. 
அதை நிரூபணமாக்கும் முயற்சிகளில் 1950 களிலே ஸ்டான்லி மில்லர் -ஹெரால்ட் யுரே என்கிற ஆய்வாளர்கள் ஈடுபட்டு ஒரு மாதிரியை வடிவமைத்து புவியிலே உயர்வெப்பநிலைகளிலே 
மீதேன்,நீராவி,ஹைட்ரஜென்,அம்மோனியா போன்ற வாயுக்களை  கொள்கலனில் இட்டு வைத்து ஆங்கே உயர் மின்னோட்டத்தைப் பாய்ச்சி செயற்கையாக இப்படி ஒரு ஆய்வைச் செய்து பார்த்தனர்..விளைவு என்னவோ ஆச்சரியப் படும்படி அதே வகைக் கற்பிதக் கருத்தாக்கத்தையே ஒத்திருந்தது.. இந்த வகை இனார்கானிக் வாயுக்கள் உருமாற்றம் பெற்று செல் கட்டமைப்புக்கு அடிப்படையாய் விளங்கும் 20௦ வகை அமினோ அமிலங்களாக மாறிப் போயிருந்தன..

உயிரிகளின் அடிப்படை செல்களால் ஆனது என்று ராபர்ட் ஹூக் 1800௦௦ களிலே கண்டறிந்து அறிவித்துவிட்டாலும் காரணமாக அமைந்த இயற்கைச் சூழலையும் அதன் விளைவாக இணைந்த அமினோ அமிலங்களையும் சான்றாக்கி மனிதகுல வளர்ச்சியின் சூட்சுமங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்க்கத் துவங்கினர் அறிவியலாளர்கள்.

     இப்படி இயற்கையால், வேதிவினையால், விளைந்த அதிவெப்பத்திலே ஹைட்ரோஜென்,ஆக்ஸிஜன்,நைட்ரஜென்,கார்பன் என்று ஆதி வாயுக்கள் ஒன்றிணைந்து அமினோ அமிலமாக மாற்றமெடுக்க, ப்ரோட்டீன் உருவாகி,முதல் உயிரின் செல் கட்டமைப்பு உருவானது.. பல  படிநிலைகளில் மானுட இருபாலினத்து அணுக்களும் சேர்ந்து அடுத்த ஒரு கருவை உருவாக்கும் பொழுதிலும் இதே வகையில் செல் உருவாக்கமும் தொடர்ந்த செல் பிளவுமாக வளர்ச்சி துவங்குகிறது.. 
இப்படித்தான் பிரபஞ்சத்தின் அடுத்தடுத்த தொடர் வேதிவினைகளும் பரிணாம மாற்றங்களும் மனித குலத்தை கொணர்ந்திருக்கின்றன என்கிற வழியிலேதான் அறிவுப்பூர்வமாக இதுவரை படைப்பின் ரகசியம் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது..

கிட்டத்தட்ட மூன்று பில்லியன் DNA க்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட 46 குரோமோசோம்களைக் கொண்டு வடிவமைநததே  மனித ஜெனோம். இப்படி மனித உடல் பத்து ட்ரில்லியன் செல்களைக் கொண்டதாக அறியப்படுகிறது..
    
கம்ப்யூட்டர் இன்போர்மேஷன் மூலம் எழுதப்பட்ட ஜெனிடிக் codeடை ஆபெரேடிங் சிஸ்டம் ஆக, சாப்ட்வேர் ஆக கொண்டு, நான்கு பாட்டில் கெமிகலால்
தயாரிக்கப்பட்ட, ப்ரோடீன், அமினோ அசிட் மூலம் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட DNA க்களைக் கொண்டு  குரோமொசொம்களைத் தயாரித்து, ஜெனோம்களைத் தயாரித்து (ஹார்ட்வேர் போன்ற),ஒரு செயற்கையான உயிரான இயங்கும் செல்லை வடிவமைத்து உருவாக்கி சாதனை படைத்துவிட்டார் அமெரிக்க ஆராய்ச்சியாளர் கிரெய்க் வென்ட்டர். தொண்ணூறுகளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆராய்ச்சிகள் இரண்டு வருடங்களுக்கு முன்பே 2010லே இந்த வெற்றியை அடைந்துவிட்டது.. (ஏற்கனவே வகுப்பறையிலே இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்..)

உயிரணு முட்டையுடன் இணைந்து கருவாக்கம் துவங்குகிற நிலையிலே அமினோ அமிலங்களின் டை ஆக்சி ரிபோ ந்யூக்ளிக் அமிலமாக மாறி ஒரு செல்ஆக துவங்கும் இந்த இயக்கம்..தொடர்ந்து பல செல்லாக அரித்மெடிக் ப்ரோக்ரேஷன்லே பல்கிப் பெரிதான அளவிலான செல்களாக உருவாக்கம் அடைந்து மனித உடலின் பாகங்களுக்கான செல்களாக உருவாக்கம் அடைகிறது..இந்தத் தருணங்களிலான வேதியல் மாற்றங்களின் வளர்ச்சியின் போது இந்த இயங்குதலுக்குள்ளான உருவத்தின் பிசிகல் அமைப்பை உடலென்றும் இயக்கத்தை உயிரென்றும் நாம்தான் பெயர்கொடுத்து கொள்கிறோம்.. இவ்வித இயங்கும் தொகுப்புக்கு மனிதன் என்று நாம் பெயரிட்டு அழைத்து வந்துள்ளோம்..
இயற்கையின் ஒரு அங்கமாக நிகழும் இந்த வேதிவினைகளின் தொகுப்பிலே உருவாகும் இந்த தொகுப்புருவம் இயற்கையின் சுற்றத்திலிருந்து காற்றைச் சுவாசித்து,இன்னபிற விஷயங்களை கிரகித்தும் வேதிவினைகளைத் தொடர்கிறது..ஒலியைக் கிரகிக்கும் இந்த அமைப்பு காற்றினூடே நெருக்கத்திலிருக்கும் தன்னையொத்த இயங்குத் தொகுப்புக்களுடனான தொடர்புகளை கற்றுத் தெரிந்த மொழியின் மூலமாக தொடர்புகளை எற்படுத்திக் கொள்கிறது.. இந்தக் காலகட்டத்திலே சுற்றத்திலுள்ள ஏற்கனவே தோன்றியிருக்கிற இதே போன்ற மனித உருவங்களின் வழிகாட்டுதலில் பல விஷயங்களை தெரிந்துகொள்கிறது.. வேதிவினைஇயங்குதலை அடிப்படையாகக் கொண்டு மூளையின் அதிர்வுகளும் அதிர்வை அடிப்படையாகக் கொண்டு மின்சாரமும்,அதனை அடிப்படையாகக் கொண்ட காந்தப் புலமும் என்று இந்த இயங்கும் தொகுப்பு செயல் படுகிறது..
இப்படியாக மனித இயக்கத்தை அறிவார்ந்த உயிர், அறிவில்லா உடல் என்றெல்லாம் பிரித்துப் பார்க்க வழியில்லை..உடலில்லாமல் உயிரில்லை..உயிரில்லாமல் உடலும் இல்லை..

இந்தக் காலகட்டத்திலே கொஞ்சம் கொஞ்சமாக தேர்ச்சி அடைகிற தன்மையிலே இந்த இயங்கும் தொகுப்பு ஒரு காந்தப் புலனை தன்னகத்தே கொண்டதாக இருக்கிறது..இப்படியான இந்தக் காந்தப்புலம் பரந்த வெளியிலே கலந்திருக்கும் எண்ண அலைகளையும் கிரகிக்கிறது.. பரந்த வெளியை ஊடகமாக்கி  தன்னைப் போன்ற பிற இயங்கும் தொகுப்புகளுடன் காந்தப் புலத்தின் வாயிலாகவே தொடர்பு கொள்ளவும் கூட முடிகிறது.... சில சமயங்களில் நாம் மனதினுள்ளே நினைத்து ரீங்காரமிடும் பாடலை எதிரில் வருபவர் பாடக் கேட்டு ஆச்சரியத்தில் ஆழ்வதற்குக் காரணம் இப்படியாகத்தானிருக்க முடியும்.. எண்ண அலைகளின் மூலமே டெலிபதி போன்ற விஷயங்கள் சாத்தியப்படுவதும் இதனாலேதான்..

குறிப்பிட்ட காலம் தொடர்ந்து இயக்கத்துக்குள்ளான இந்த அமைப்பின் இயங்குதிறன் செயலிழக்கும்போது செல்கள் இயங்காமல் நின்று போகின்றன.. இந்த வகையிலே இதயத் துடிப்பு என்கிற இயக்கம் நின்று போன ஒரு இயங்குத் தொகுப்பை அறிவற்ற உடல் என்றும் அதனுள்ளான உயிர் எங்கோ பறந்துவிட்டது என்றும் அதற்கு அழிவில்லை, அதுதான் ஆன்மா என்றும் 'படைத்தானே' என்று பாடல் பாடிப் புலம்புவதெல்லாம் நமது கற்பனைதானோ என்றே தோன்றுகிறது....

 எந்தக் கற்பிதத்தையும்  சரியா தவறா என்பது நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தீர்மானமே தவிர வேறில்லை.. இந்த வகையிலே கற்பிதம் செய்து பார்த்தால் அறிவார்ந்த இயக்கங்களுக்கு பதில் கிடைக்கிறது.. மேலே சொல்லப்பட்ட நிகழ்வுகளை அறிவியல் பூர்வமாக எந்த நிலையையும் விளக்க முடியும்..ஏற்கனவே எல்லாமே விளக்கப்பட்டவையே..இந்த அடிப்படையில் இப்போதைய விஞ்ஞானம் கடந்திருக்கிற தூரம் அதிகம்..

கிரெய்க் வென்ட்டர் சொல்கிறபடி ஜெனிடிக் codeடை, அதாவது செல்களின் தலைஎழுத்தை,உயிரின் தலைஎழுத்தை எழுதி,இயக்கி, மனிதன் உண்மைப் படைப்பாளியாக மாறி அதிசயங்களைச் செய்துவிட்டான்.... இயற்கை செய்த புதிரிலே விளைந்துவிட்டிருக்கிற, பல்கிப் பெருகும் மனிதகுலத்துக்கு
இயற்கை விட்டுவைத்திருக்கும் எரிசக்தியோ,மருந்துப் பொருட்களோ ஏற்கனவே அளவில் இவ்வளவுதான் என்று தீர்மானிக்கப்பட்டுவிட்டிருக்கிறது..அவற்றின் தேவையைச் சமாளிக்க பிரயத்தனங்களைச் செய்து போராடவேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் மனிதகுலத்துக்கு கிரெய்க் வென்ட்டர் இப்படியாக சொல்லும் தீர்வுதான் ஆச்சரியத்தைத் தூண்டுகிறது..
“உலகை அச்சுறுத்தும்  கார்பன்டை ஆக்சைடை உண்டு டீசலாக,பெட்ரோலாக மாற்றும் பாக்டீரியாக்களை உருவாக்குதல் சாத்தியமே” என்பதுதான் அது..
 
இந்த கண்டுபிடிப்பான பாக்டீரியா சிறு துளிதான்..  'தன் கல்லா நிரம்பினால் சரி..ஏதாவது கொளுத்திப் போட்டுவிட்டுப் போவோம்' என்கிற ஆட்களைப் போலல்லாமல்  தன் வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்டு, உண்மைகளை உலகுக்கு உணர்த்தும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் தியாகத்துக்கும்,சமூகப் பொறுப்புணர்வுக்கும் மதிப்பளித்து வணங்கி,   மூட நம்பிக்கைகளைக் களைந்த, அறிவார்ந்த நாளைய சமுதாயமும் முயற்சித்தால்  பெரு வெள்ளமாவது சாத்தியமே....

K.G.Napoleon
நன்றி:
விக்கிப்பீடியா
http://www.guardian.co.uk/science/2010/may/20/craig-venter-synthetic-life-form
http://www.ted.com/talks/craig_venter_is_on_the_verge_of_creating_synthetic_life.html
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 7



ஆண் பாவம்
கவிதை ஆக்கம்: தனுசு


என் திருமணம் முடிந்தது
சுதந்திரம் பறிபோனது
தினம் ஒரு பொய்யை
பரிசாய் தருகிறேன்
என் திருமண வாழ்கைக்கு.

வாழ்கையின் வாழ்வாதாரம்
வாரியிறைத்த வள்ளுவனும்
வாழ்கையில் தாரம் வந்த பின்னே
"பொய்மையும் வாய்மையிடத்த" என்ற
வாக்கை எழுதியிருப்பானோ?

என் இல்லத்தரசியே
நீ
இம்சை அரசியாய் மாறுவதேன்?
அஹிம்சை ஆயுதம் ஏந்துவதேன்?.

உன் சேலையின் அழகை
சொல்லமறந்தால் சிடுசிடுப்பு.
உனக்கு மல்லிகைபூ
வாங்க மறந்தால் முறைப்பு.
உன் சமையலை
ருசிக்க மறந்தால் கடுகடுப்பு.
என் மூன்று நாள் தாடியை
பார்த்தால் வெடிப்பு.

ஒரு அம்மாஞ்சி மூஞ்சி
என்னைப் பார்த்தால் கோபம்-என்
அத்தை மகள் என்னோடு பேசினாலும் கோபம்.
வீடு வர தாமதமானால் கோபம்.
நீ தெரிவு செய்த சட்டையை
போட மறந்தாலும் கோபம்.

ம்.. என்றால் எழுகிறேன்.
ஏன்... என்றால் அமர்கிறேன்.
இன்னும் ஏன்
இரும்புக்கரம் கொண்டு அடக்குகிறாய்.

இல்லறம் துவங்கியதால்
இனிய நண்பர்களை
இழக்கவேண்டுமா?-இல்லை
நீ தான் எங்களை
பிரிக்கவேண்டுமா?

இரவு துவங்குமுன் வீடு வர வேண்டும்
வீடு வந்தால்
வெளிஉலகம் வெட்டப்பட வேண்டும்
இது என்ன நியாயம்?.

"உன் உலகம் நான்" என்பாய்.
பெண்ணுலகம் இதுவே என்பாய்.
தத்துவம் பேசும்
ராட்சசி நீ.

நான் நண்பர்களோடு இருக்கையில்
கை பேசியில் அழைப்பாய்;
"நீ விரும்பும் நீல ரோஜா வாங்க காத்திருக்கிறேன்".
"நீ விரும்பும் விகடன் வாங்க காத்திருக்கிறேன்".
என்றே பொய்யுரைப்பேன்.

என் சின்ன சின்ன பொய்களை
புரிந்துக்கொண்டு
நீ
சினுங்குகையில்
உன்னைவிட எனக்கு எதுவும் பெரிதில்லை
என்று
பெரிதாய் ஒரு பொய்யுரைப்பேன்..

ஓடிய கால்கள் நிற்காது!
பாடிய வாய் மூடாது!
ஆடிய கால்கள் ஆணுக்கு-ஆனால்
அது
அடங்கிடும் அன்பில் பெண்ணுக்கு
என்னை நீ அடக்கிவிட்டாய்!.

தூண்கள் இல்லாத கூறை நிற்காது!
பெண்கள் இல்லாத வாழ்கை நிமிராது!
புரிந்து கொள்கிறேன்,
உன் அதீத அன்போடு
ஒப்பிடுகையில்
நான் தூசிக்கு சமம்தான்.-ஆனால்

இந்த
கோபம்
தாபம்
கண்டிப்பு
அடக்குமுறை
கட்டுப்பாடு
கட்டிப்போடுதல்
இவைகளை அவிழ்த்துவிடு!
இல்லையேல் இந்த
ஆண்பாவம் உன்னை சும்மாவிடாது!.
-தனுசு_
------------------------------------------------------------
8


நீலக்கன்னி
கவிதை ஆக்கம்: தனுசு

வானமின்று
வகுப்புக்குள் நுழைந்ததோ!-அது
மேகங்களை விட்டு
தனியாக வந்ததோ!

நீல நட்சந்த்திரங்கள்
பெண்ணானதோ!-கோல
எழில் கொண்டு
கோடி கதை சொல்லுதோ!

பிரம்மனின்
மதி நுட்பத்தை தோற்கடித்து
தொழிட் நுட்பத்தால்
துளிர்த்த தாரகையே....

நீ
டிஜிட்டல் செதுக்கிய சிலுக்கா?
நாசா நட்ட லுக்கா?
ஸ்பேசில் சிரிக்கும் சிலையா?
ஃபேஷியல் செய்த சரக்கா?

ஏரோ நாடிக் ரோஜா!-நீ
ஜீரோ டிகிரி ஐசா?
எலி பேட் வந்திறங்கிய
சாம்சங் ஐ பேட் செல்லா?

நீ
கேலக்சில் மெயினா?
கிராஃபிக்ஸ் குயினா?
நாள்பட்ட ஒயினா?
ப்ளுகலர் அபினா?

புவியில் பிறந்து
ப்ளு டூத் மூலம்
புலம் பெயர்ந்த
லாஸ் ஏஞ்சல்சின்
ப்ளு ஏஞ்சலா?.

பித்தம் ஏறி பிதற்றுகிறேன்
ஆல் டைம்
மிஸ் யுனிவர்ஸ் நீதான் -உனை
பாடும் ஆல் தோட்ட பூபதியும் நான்தான்.
-தனுசு-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

9


சீதை என்னும் வீரமங்கை
ஆக்கம்: புவனேஷ்வர்


சீதை, உதாரண பெண்மணி, வீரமங்கை

நமது மக்களுக்கு வெறும் வாயை மெல்ல "அவல்" வேண்டும் அல்லது "அவள்" வேண்டும்... .

சமீபத்தில் ஒரு நீதிமன்றம் அழகிய ஒரு ஆலோசனையை வழங்கியது. பெண்கள் சீதையைப்போல இருக்க வேண்டும் என்பதே அந்த ஆலோசனை. உடனே பொங்கி எழுந்தனர் மங்கையர் திலகங்கள் (அதாங்க, பெண்ணிய வாதிகள், மற்றும் அவர்களுக்கு ஒத்து ஊதுவோர்). ஆஹாவென்றெழுந்தது காண் பெண்ணியக்கூச்சல்!

இவர்கள் எல்லாரும் சீதையை ஒரு ஆணாதிக்கத்தின் பலிகடாவாக பார்க்கிறார்கள். எங்கிருந்து தான் கண்டுபிடித்தார்களோ இந்த ஆணாதிக்கம் என்ற சொல்லை நான் அறியேன். சரி அதை விடுங்கள். விஷயத்துக்கு வருவோம். இந்தப்பதிவின் மூலம் நான் ஒன்றைத்தெளிவு படுத்த விரும்புகிறேன். சீதை ஒரு வீர மங்கை. இவர்கள் எல்லோரும் நினைப்பது போல வேறு வழி இல்லாமல் கணவனால் வற்புறுத்த பட்டோ அல்லது கடமைக்காகவோ காடு செல்லவில்லை. காலமெல்லாம் அழுது வடியவும் இல்லை.

ராமன் காடு சென்றது தகப்பனாருக்காக. ஆனால் சீதை காடு சென்றது ராமனுக்காக. ராமனுக்காக மட்டுமே. கடமைக்காக அல்ல. காதலுக்காக.

கடமைக்காக கணவனைப்பின் தொடர்ந்திருந்தால் அவள் "நீர் இன்றி ஒரு கணமும் நான் உயிர் தரித்திருக்க முடியாது" என சொல்லி இருக்க மாட்டாள். உண்மையில் ராமன் எவ்வளவோ சொல்லிப்ப்பார்த்தான் சீதையிடம். காடு துக்ககரமானது, நந்தவனம் இல்லை, கல்லும் முள்ளும் துஷ்ட விலங்குகளும் நிறைந்தது என்று சொல்லிப்பார்த்தான். ஒன்றும் சீதையின் காதலுக்கு முன்னால் எடுபடவில்லை. அவள் சொல்கிறாள் "கல்லும் முள்ளும் புலன்களை அடக்கும் திறன் இல்லாத மக்களுக்கு பயம் தரும். நீரும் நானும் அவ்வாறான்றே. உமக்கு முன்னால் நான் கல்லையும் முல்லையும் மிதித்துக்கொண்டு உமக்கு மென்மையாக்கிக்கொண்டு போவேன்" என்று. இது கடமைக்காக போகிற மனைவி பேசும் பேச்சா? தானே விரும்பி, கணவனார் தடுத்தும் கேளாது அவரைப்பின் தொடர்ந்தாள் மஹாபதிவ்ரதையான சீதை.

காட்டில் அவளை ராமன் தேடாமல் கால விளம்பம் பண்ணினான் என்று சிலர் குற்றம் கூறுவது வேடிக்கையாக தான் இருக்கிறது. அவர்கள் இருந்தது காட்டில். உயிரை விடப்பிரியமான மனைவி காணவில்லை என்றவுடன், எவன் முன்னால் யாரும் யுத்தத்தில் நின்று உயிருடன் திரும்ப முடியாதோ, அப்பேர்ப்பட்ட மஹா வீரனான ராகவன் உடைந்து தவித்து ஏங்கி கலங்கி கதறி கேவி அழுதான். அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா, விலங்கு தின்றதா, ராக்ஷசர் தின்று விட்டார்களா, ஒளிந்து விளையாட்டு காட்டுகிறாளா ஒன்றும் புரியாமல் அலை மோதி, தேடி திண்டாடி குற்றுயிராக இருந்த ஸ்ரீ ஜடாயு பெருமான் துப்பு சொல்லும் வரைக்கும் அவளுக்கு என்னாயிற்று என அறியாதவன் ஆகத்தானே இருந்தான் ராமன்?

அவன் காதலை கேள்விக்குறியாக்கும் பேதையர் பார்க்க வேண்டியது: யாராலும் ஜெயிக்க முடியாத மஹாவீரனை காதலியின் பிரிவு "மானே கண்டாயா?", "அசோக மரமே கண்டாயா?", "பனை மரமே கண்டாயா?"."யானையே கண்டாயா?", "ஏ புலியே,, உனக்கு தான் பயமே இல்லையே நீயாவது சொல்லேன் என் சீதையைக்கண்டாயா" என புலம்ப வைத்து.

காட்டையும் மேட்டையும் நதிகளையும் தாண்டி துக்கத்தோடு அவர்கள் சுக்ரீவனை அடைந்ததே பெரும் சாதனை. சாமான்ய மனுஷனானால் மரித்துப்போயிருப்பான். அதன் பின் மழைக்காலம் வந்தது. சீதையை தேட வானரர்களை அனுப்பி காலம் ஆனது. இதெல்லாம் கணக்கில் வராதா?

இத்தனையையும் தாண்டி அந்த பக்கம் பார்த்தால் சீதையும் கஷ்டம் தானே பட்டாள்?

ராவணன் பண்ணிய பெரிய தப்பு எதிரியை குறைத்து மதிப்பிட்டது. அதை விட பெரிய தப்பு மாற்றான் மனைவி மேல் காமுற்று கைவைத்தது. அவனைப்பொறுத்தவரை தன் தங்கையை மூக்கறுத்த மனிதனுக்கு பொறுக்க முடியாத தண்டனையை தர வேண்டும். அவன் மனைவியை மயக்குவதை விட என்ன தண்டனை பெரிது என நினைத்தான்.

அவன் அவ்வாறு நினைப்பதற்கு அவனுக்கு காரணங்களும் இருந்தன. அந்த நாள் வரை, ராவணன் மஹா பண்டிதன், மஹா வீரன், அழகன்...... அவனுக்கு மயங்கிய பெண்கள் பலர் பலர். அவன் அழகுக்கு சிலரும், வீரத்துக்கு சிலரும், செல்வத்துக்கு சிலரும், அதிகாரத்துக்கு பயந்து சிலரும் அவனுக்கு உடன்பட்டுக் கிடந்தனர். அவர்களைப்போலத்தான் சீதையும் இருப்பாள், தன்னைப்பார்த்ததும் மயங்கி உடன்படுவாள் என நினைத்தான் தசகண்டன். எந்தப்பெண் தான் தன்னைக்கண்டு மயங்க மாட்டாள் என இறுமாந்தான். ராமனும் அற்ப மனிதப்பூச்சி என எள்ளினான்.......

ஆஹா, எவ்வளவு தப்புக்கணக்கு போட்டு விட்டான்! ராமன் வீரத்தை மதிக்காதது கூட கிடக்கட்டும்.சீதையை சாமானியப்பட்ட பெண் என நினைத்தது அவன் பண்ணிய முதல் தவறு. அதனால் தான் அவளை மயக்கி விடலாம் என எண்ணி அபஹரித்தான். ஆனால் நடந்தது நேர்மாறானது. அவன் எவ்வளவுக்கெவ்வளவு சீதாதேவியை வற்புறுத்தினானோ அவ்வளவுக்கவ்வளவு அவள் ராமன் மேல் கொண்ட காதல் வளர்ந்தது. எவ்வளவுக்கெவ்வளவு அவளை பயமுறுத்த பார்த்தானோ அவ்வளவுக்கவ்வளவு அவள் உறுதி கூடியது. "உயிரை விட்டாலும் விடுவேன், உனக்கு உடன்படேன்" என்றாள்.

அது மட்டும் இல்லை, அவள் ராமன் மீது கொண்ட நம்பிக்கை ஒரு புறம் காதலியாக, மனைவியாக. அதே சமயம் ஒரு அரசியாக அவன் கடமையை அவன் செய்ய வேண்டும் என்ற நோக்கம்.

அவள் நினைத்திருந்தால் இரவோடு இரவாக ஹனுமான் முதுகில் தப்பி இருக்கலாம். வஞ்சகத்தால் கொண்டு வரப்பட்டவள் வஞ்சகத்தால் தப்பினால் தவறில்லை அவள்பால். ஆனால் ராமன் தன் கடமையை செய்ய வேண்டும் என உறுதியோடு அங்கேயே இருந்தாள். அழுது வடியும் பெண்ணாக இருந்திருந்தால் கோழையாக இருந்திருப்பாள். கோழை, தப்பிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் தப்பி இருப்பாள். சீதை வீர மங்கை. அதை செய்யவில்லை. மிகத்தெளிவாக இருந்தாள். அது மட்டும் இல்லை. ராவணன் பண்ணும் அட்டூழியங்களுக்கு, அங்கே ராமன் வந்தால் தானே முடிவு ஏற்படும் என ஒரு மக்கள் நன்மைக்காக  ஒரு அரசியாக யோசித்தாள்..... ராமன் அங்கு வந்தால் போர் புரிய நேரிடும். வஞ்சகர்களோடு போடும் போரில் அவனுக்கு ஆபத்தும் நேரலாம். ஒரு மாதம் தான் உயிர் தரிப்பேன் என்ற கெடு முடிந்தால் தான் இறக்க நேரிடலாம். ராவணன் பலாத்காரம் பண்ண முயன்றாலும் கற்புக்காக உயிர் விட நேரிடலாம். தப்பிக்க வழி கிடைத்தும் அங்கேயே இருந்தாள் இரும்பு இதயத்தோடு, உறைந்த உள்ளத்தோடு.... ஒரு அரசிக்கு உரிய கடமையாலும் கணவன் மீது கொண்ட நம்பிக்கையாலும். கோழையா அவள்? இல்லை...... அவள் வீர மங்கை!

பலரும் சொல்கிறார்கள் ராமன் அவளைக்காட்டுக்கு அனுப்பி விட்டான். அவள் வாழ்நாளெல்லாம் துயரம் தவிர வேறு இல்லை என்று அளப்பார்கள்.

ராமனுக்காகட்டும் சீதைக்காகட்டும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விட அவர்களின் அரசு கடமை தான் முக்கியம். இதில் அவர்கள் இருவருமே மிகத்தெளிவாக இருந்தார்கள். வண்ணான் ஒருவன் குறை சொன்னான் என்பதற்காக ராமன் சீதையை காட்டுக்கு அனுப்பினான் என்பதே குற்றச்சாட்டு. ஆனால் ராமன் ஒரு அரசனாக வேறு என்ன செய்திருக்க முடியும்?

"நீ சொல்வதை சொல்லு, நான் கண்டுகொள்ளப்போவதில்லை" என்று நாம் சொல்லலாம். நாடாளும் மன்னன் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் வதந்தி உண்மை என்றே பேசுவார்கள்.

வண்ணானை பிடித்து சிறையில் போடலாமா? இல்லை நாவை அறுக்கலாமா? இல்லை தலையையே வாங்கி விடலாமா? அப்படிப்பண்ணினால் வதந்தி உண்மையாகும், ராமனும் கொடுங்கோலன் என்று தூற்றப்படுவான்.

சரி, பரதனுக்கு ஆட்சியை தந்து விட்டு சீதையோடு காட்டுக்கு பொய் விடலாமா? அப்படியானால், உண்மை வெளிவந்ததால் அவமானப்பட்டு அரசன் ஆட்சி துறந்தான் என்று ஆகி, வதந்தி உண்மையாகும். நல்ல அரசனாக பெயர் எடுத்தாலும் சீதை மேல் கற்பிக்கப்பட்ட களங்கம் உண்மையானது போல தான் ஆகும்

மீதமுள்ள ஒரு வழி என்ன?

சீதையை காட்டுக்கு அனுப்புவது தான். சீதையும் ஒன்றும் அழுது வடிந்து கொண்டு செல்லவில்லை. தன்னிச்சையாக ராமன் எடுத்த ஆணாதிக்க முடிவும் அல்ல. தன்னிச்சையாக இந்த முடிவை ஒருவேளை யாராவது எடுத்திருக்க முடியும் என்றாள் அது சீதையும் முடிவாக தன் இருந்திருக்க முடியும். (என்னை சந்தேகப்பட்ட நாட்டில் இனி எனக்கு வேலை இல்லை, நீர் வேண்டுமானால் அரசராக கடமைக்காக இரும். நான் வனம் போகிறேன்.... என்று அவளே சொல்லி இருப்பாள்......)

அவர்கள் சொன்னது என்ன? அப்பா, உனக்கு ராணி மீது சந்தேகம் வந்து விட்டதா, அவள் இந்த நாட்டில் இனி இருக்க மாட்டாள். கடமைக்காக ராமன் இருப்பான் ஆட்சி செய்ய. கணவன் என்ற கடமையை விட காவலன் என்ற கடமை பெரிது. என்னை சந்தேகப்பட்ட மக்களுக்கு நானும் இனி ராணியாக இருக்க விரும்பவில்லை, இனி இந்த இடத்தில எனக்கு வேலை இல்லை என்று நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாக தான் சீதை காட்டுக்கு போயிருப்பாள்.

ராமனை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்? அவன் வாழ்க்கையில் சுகம் என்று எதையாவது அனுபவித்தானா? மொத்தம் பன்னிரண்டு ஆண்டுகள் தான் மனைவியோடு அதுவும் கலியாணம் ஆன புதிதில் இருந்தான். பின் பிதாவின் சொல்லைக்காக்க காட்டுக்கு போனான். அங்கும் மனைவியை ஒருத்தன் அபஹரித்தான். யுத்தம் வந்தது. உயிரைப்பணயம் வைத்து போராடி மீட்ட மனைவியை நாட்டுக்கு வந்தவுடன் வேறு வழி இல்லாமல் காட்டுக்கு அனுப்பினான். அவன் இதயம் எவ்வளவு நொறுங்கிப்போயிருக்கும்? அத்தனையையும் தாங்கி, கடமை வீரனாக நாட்டுக்கு வாழ்ந்தான்.

அவனைப்பற்றியோ, சீதாதேவியைப்பற்றியோ அவதூறு பேச நமக்கு யோக்யதை இல்லை.

தியாகிகள் அவர்கள். உலக நன்மைக்காக தங்கள் வாழ்வை தெரிந்தே தொலைத்தவர்கள். எந்த நிலையிலும் பிரஜைகலையே முன்னிறுத்தி, தங்கள் சுகங்களை உறவுகளை மறந்தவர்கள்.

ஒன்றை நினைவில் கொள்க: எந்த நேரத்திலும் ராமன் தன்னை சந்தேகப்பட்டுவிட்டதாக சீதை எண்ணவில்லை. கணவன் - மனைவி என்ற முறையில் ராமனும் சீதையை என்றுமே சந்தேகப்பட்டதில்லை. அவர்களுக்குள் நம்பிக்கை இருக்க வேண்டிய அளவுக்கு அதிகமாகவே இருந்தது.

அரசன் என்ற முறையில், கணவன் என்ற பொறுப்பையும் பின்னுக்கு தள்ளி ராமன் இதயத்தை இரும்பாக்கிக்கொண்டு கடமைக்காக காடு போக சொன்னான் என்றாள் அவன் கடமை இது என உணர்ந்து இவளும் தன மனதை கல்லாக்கிக்கொண்டு அரசனான அவன் கடமைக்கு அரசியாக (பிரஜையாக அல்ல, அரசியாக) ஒத்துழைத்தாள். அவள் சீரிய மனைவி. அதோடு நிகரில்லா அரசி. கற்பின் திண்மை உடைய வீர மங்கை. துன்பப்பட்டு அழுத கோழை அல்ல. எந்த நேரத்திலும் இரும்பு இதயத்தோடு நிமிர்ந்து நடந்த பெண்சிங்கம்.

நான் பெண்ணாக இருந்தால் நிச்சயம் சீதையைப்போல இருக்க விழைவேன். கணவனை பின்தொடர்வதில் மட்டும் அல்ல, அவள் கற்பில், அவள் திண்மையில், அவள் கடமை உணர்ச்சியில், "காதலன் ஒருவனை கைப்பிடித்து அவன் காரியம் யாவுக்கும் கை கொடுத்து" என்ற படி கணவனின் கடமைக்கு ஒத்துழைக்க நம்பிக்கையோடு எந்த அளவுக்கும் ஏகியது, எந்த நிலையலும் உயிரே போகும் என்றாலும் பெண் சிங்கம் போல நிமிர்ந்து நடந்த வீரம்.... இத்தனையிலும் சீதை ஒரு உதாரண பெண்மணி....... வீரமங்கை......நிச்சயமாக..
.....
Best Regards,
Bhuvaneshwar Dharmalingam
www.bhuvaneshwar.com
+++++++++++++++++++++++++++++++++++++++++++

10
நம்புங்கள்; வரைபடம்தான் இது
வரைந்தவரின் பெயர் தெரியவில்லை
அனுப்பியவர்: S. சபரி நாராயணன், சென்னை



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
11

சிரிப்பதற்கு மட்டுமே!
ஆக்கம்: ஜி.ஆனந்தமுருகன்



1) செய்... அல்லது செத்துமடி...  ---- நேதாஜி..
   படி.. அல்லது பன்னி மேய்...  --- எங்க ....பிதாஜி!


2)
போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது ?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில
இருந்தேன்

3)
மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி:  நான் ரொம்ப அழகு... இது என்ன காலம் ? (Tense)
கணவன்:  அது ஒரு இறந்த காலம்!

4)
நாட்டாமை: என்றா... பசுபதி...எக்ஸாம்க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற ?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை:  என்ற தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா.....!

5)
லவ் லட்டருக்கும் , எக்ஸாம்க்கும் என்ன வித்தியாசம் ?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்!


6) கணவன்: காலெண்டர்ல என்னப் பாக்குற ?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்கவிழுந்தது ?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...


7)
நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்...அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து

அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்கமுயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர்
படகிலிருந்து குதித்துநீந்தி சென்று படிக்கிறார்...
இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.

8)
நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால்
பன்ச்டயலாக்எப்படி இருக்கும் ?

* J to the A to the V to the A --- JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கிளாத்தான்
வரும்

9)
வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.( *Stages)
1. *படிப்பு *
2. *விளையாட்டு *
3. *பொழுது போக்கு *
4. *காதல் *
5.
6.
7. *
ஹலோ... என்ன தேடுறீங்க ? *காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப் போயிருமே...!
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

1.6.12

Short Story ஓட்டுநர்



-------------------------------------------------------------------------------------
 சிறுகதை: ஒட்டுநர்

அடியவன் எழுதி, மாத இதழ் ஒன்றில், சென்ற மாதம் வெளிவந்த சிறுகதை ஒன்றை நீங்கள் படித்து மகிழ இன்று வலை ஏற்றியுள்ளேன். அனைவரும் படித்து மகிழுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------
அசையும் சொத்துக்களில்
ஆத்தாளைத்தவிர
அனைத்தையும் பங்கு வைத்துக்கொண்டார்கள்
ஆத்தாளை
வைத்துக்கொள்ள
மாதங்களைப் பங்கு வைத்தார்கள்


என்ற கவிதை வரிகளைப் படித்தவுடன் சாமிநாதன் செட்டியாரின் மனதில் பெரிய தாக்கம் உண்டாயிற்று. அந்த வரிகளிடையே தொக்கி நிற்கும் உண்மையை முழுமையாக அறிந்தவர் அவர். அவருடைய பெரிய அண்ணன் வீட்டிலேயே அது நடந்திருக்கிறது.

நான்காண்டுகளுக்கு முன்பு, அதாவது 2008ஆம் ஆண்டு, சென்னை திருச்சி நெடுஞ்சாலையில், பெரம்பலூருக்கு அருகே ஒரு கனரக லாரிக்காரன் அவருடைய பெரிய அண்ணன் சென்று கொண்டிருந்த காரின் மீது அநியாயமாக மோதி, அவருடைய பெரிய அண்ணனுக்கு அந்த இடத்திலேயே சிவபதவியை வாங்கிக் கொடுத்திருந்தான்.

சிவபதவி அடைந்தவரின் மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க, அவருடைய பிள்ளைகள். அவர் பிறந்தசெட்டி நாட்டு கிராமத்தில் விரிவாகக் கேதத்தை நடத்தி முடித்தார்கள்  கேதம் முடியும் வரை அவருடைய பிள்ளைகள் ஒற்றுமையாக இருந்தார்கள். அதுதான் அதிசயம். அந்த அதிசயம் அதற்குப் பிறகு ஒருவாரம் கூட நீடிக்கவில்லை.

கேதம் முடிந்த அன்று, இறந்தவருடைய மகள்கள் மூவரும் தத்தம் வீடுகளுக்குச் சென்ற அடுத்த நாழிகையே, மகன்கள் மூவரும், தங்கள் தாயாரை ஓரம் கட்டிவிட்டு, அவர் கையில் இருந்த சாவிகளைப் பற்றிக்கவலைப் படாமல், தங்கள் அப்பச்சியின் அறையைத் திறந்து, பெட்டகம், பீரோக்கள் என அனைத்தையும் உடைத்துப் பார்த்த்தோடு, அங்கிருந்த அனைத்தையும் அள்ளிக்கொண்டுத் போய் தங்கள் பொறுப்பில் பத்திரப் படுத்தி வைத்துவிட்டார்கள். இடப் பத்திரங்கள், பங்குப் பத்திரங்கள், தங்க, வைர நகைகள், வெள்ளிச்சாமான்கள் என்று இருபது கோடி பெறுமானமுள்ள சொத்துக்களை எல்லாம் பெரிய ஆச்சியின் கண் எதிரிலேயே பறிபோயின. எடுத்துக்கொண்ட மகன்கள் அனைத்தையும் பதுக்கி வைத்துவிட்டார்கள்.

பெண்பிள்ளைகளுக்குப் பாத்தியப்பட்டதை எல்லாம் கொடுக்க வேண்டாமா? என்று கேட்டபோது, அவர்களுக்கெல்லாம் திருமணத்தின்போது நிறையக் கொட்டிக் கொடுத்து செய்தாகி விட்டது. இருந்தாலும் நாங்களாகப் பார்த்து ஏதாவது கொடுப்போம் - பொறுத்திருங்கள் என்று சொல்லி விட்டார்கள்.

தில்லை நகரில் இருந்த வீடு, கண்டோன்மென்ட் வில்லியம்ஸ் சாலையில் இருந்த வீடு, இப்ராஹிம் பூங்கா அருகே இருந்த வணிக வளாகம் என்று திருச்சி மாநகரில் இருந்த தங்கள் குடும்பச் சொத்துக்கள் மூன்றையும் தங்களுக்குள் பங்கு வைத்துக்கொண்டவர்கள், பேட்டவாய்த்தலை அருகில் இருந்த இருபது ஏக்கர் விவசாய பூமியை மட்டும் ஆத்தாளுக்கென்று சொல்லி - அதை விற்றுவரும் பணத்தை ஆத்தாளுக்கென்றே சொன்னவர்கள் - கடைசியில் அப்படி விற்று வந்த பணத்தை, அப்படியே தங்கள் தாயாரிடம் கொடுக்காமல், அதற்குரிய வருமானவரியைக் கட்டிவிட்டு, மீதத்தொகையை வங்கியொன்றில் வைப்பு நிதியாக, தங்கள் பெயரையும் கூட்டாகப் போட்டு வைத்ததோடு, வைப்பு நிதி ரசீதையும் தங்களிடமே வைத்துக்கொண்டு விட்டார்கள்.

பெண்பிள்ளைகளுக்கு ஆளுக்கு இரண்டு லட்ச ரூபாய் இவர்கள் கொடுக்க முன்வந்தபோது, அவர்கள் மூன்று பேரும் வாங்க மறுத்து, நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னதோடு, நீங்கள் பண்ணுகின்ற அக்கிரமத்திற்கு ராங்கியம் கருப்பர் உங்களுக்குக் கூலி கொடுப்பார் என்று சாபம் கொடுத்து விட்டுப் போய்விட்டார்கள். பேச்சு வார்த்தை இல்லாமல் போய்விட்டது.

முதலில் தங்கள் தாயாரை ஆளுக்கு நான்கு மாதம் வைத்துக்கொள்வது என்று முடிவெடுத்தவர்கள். அதைச் செயல் படுத்தவில்லை.செயல்படுத்த முடியவில்லை. வந்தவர்களில் - அதாவது மருமக்கள் மூவரில் இருவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

கடைசியில் ஊரில் உள்ள பெரிய வீட்டிலேயே ஆத்தாவைத் தங்க வைத்துவிட்டார்கள். சமையலுக்கு ஒரு வயதான சமையல்காரரையும், பகலில் துணைக்கு ஒரு அக்காவையும்  ஏற்பாடு செய்தவர்கள், அவர்கள் இருவரும் மாலையில் சென்று விடுவார்கள் என்பதால், இரவில் துணைக்கு உள்ளூர் ஆச்சி ஒருவரைச் சம்பளத்திற்கு ஏறபாடு செய்து உடன் தங்க வைத்தார்கள்.

நடப்பதை எல்லாம் பார்த்துப் பித்துப் பிடித்தது போன்ற நிலைக்கு வந்த தாயாரும், அதிக நாள் உயிர்வாழவில்லை. நோய்வாய்ப்பட்டு, அடுத்துவந்த இரண்டாண்டுகளிலேயே இறந்து போய்விட்டார்கள்!

ராங்கியம் கருப்பர் கூலி கொடுத்தாரா? அது தனிக்கதை - அதை இன்னொரு நாள் பார்ப்போம். இப்போது பிரதானக் கதைக்கு வருகிறேன்.

இதை எல்லாம் நன்கு அறிந்த நம் கதையின் நாயகர் சாமிநாதன் செட்டியார், படித்த கவிதையின் தாக்கத்தில் இருந்து  மீண்டு தன் மனைவி சாரதா ஆச்சியை அழைத்ததோடு, முழுக்கவிதையையும் கொடுத்துப் படி என்றார்.

சேயன்னா தானா
சிவலோகம் சென்றுவிட்டார்
குடும்ப ஒற்றுமையும்
கூடவே சென்றுவிட்டது”


என்று துவங்கும் கவிதையில் நடுவில் வரும் வரிகள் எல்லாம் அசத்தாலாக இருக்கும்.

அசையாத சொத்துக்களில்
நூற்பாலையை மட்டும்
ஏற்பாரில்லை
மற்ற சொத்துக்களுக்கு
மல்லுக் கட்டு”


என்றெல்லாம் வரும்

படித்துவிட்டு, ஒரு புன்னகையோடு, கவிதை வெளியாகியிருந்த புத்தகத்தைத் திருப்பிக்கொடுத்த ஆச்சியிடம், செட்டியார் கேட்டார்.

”என்ன ஒன்றும் சொல்லாமல் திருப்பிக் கொடுக்கிறாய்?”

ஆச்சி மதுரையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் உளவியல் துறை பேராசிரியையாக இருப்பவர். அதனால் வலுவாக ஏதாவது சொல்லுவார் என்று செட்டியார் எதிர்பார்த்தார்.

ஆனால் ஆச்சி அவர்கள், செட்டியார் எதிர்பார்த்திருந்த பதிலைச் சொல்லாமல் வேறு மாதிரியாகப் பதில் சொன்னார்.

“எல்லா வீடுகளுக்கும், எல்லாப் பிள்ளைகளுக்கும் இது பொருந்தும் என்று எடுத்துக் கொள்ள முடியாது! தர்மம் முழுவதுமாக கெட்டுவிட்டதாகச் சொல்ல முடியாது. இன்னும் நல்ல பிள்ளைகள் - தாய் தந்தைகளைப் போற்றும் பிள்ளைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். என் தம்பி மக்கள் இருவரும் அமெரிக்காவில் இருந்து தங்கள் பெற்றோர்களுக்கு எத்தனை பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போன்றோர்களை இந்தக் கணக்கில் எப்படிச் சேர்க்கமுடியும்?”

”அவர்கள் விதிவிலக்கு. விதிவிலக்குகளை எல்லாம் உதாரணமாகக் கொள்ள முடியாது. பொதுவாகத்தான் பார்க்க வேண்டும்!”

“சரி, பொதுவாகவே சொல்லுங்கள் - பெற்றோர்கள் வயதான காலத்தில் பிள்ளைகளை நம்பி இருக்கக்கூடாது என்கிறீர்களா?”

“வயதான காலத்தில் தங்கள் கையிருப்பை விட்டுவிடாமல், தங்கள் கட்டுப்பாடிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம். அதைத்தான் சொல்ல வந்தேன்”

“பணம் மட்டும் இருந்தால் போதுமா? வயதான காலத்தில் நோய் நொடி வந்தால் என்ன செய்வது? வாதம் வந்து படுத்தால் என்ன செய்வது? ஆதரவிற்கு இரண்டு பேராவது வேண்டாமா? பிள்ளகளைத் தவிர அந்த ஆதரவை நல்லபடியாக வேறு யார் தரமுடியும்?”

“அந்த அதரவைப் பிள்ளைகள் சலிப்பில்லாமல் தருவார்கள் என்பது என்ன நிச்சயம்?”

”சலிப்பு என்பது மனித மனத்தின் ஒரு நிலைப்பாடு. செலுத்தப்படுகின்ற அன்பை வைத்து சமயங்களில் அது தலை காட்டாமல் இருக்கும்.எதுவுமே நிச்சயமில்லாத வாழ்க்கை இது. படுத்தால் அடுத்த நாள் காலை எழுந்திருப்போம் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? நிச்சயம் எங்கே இருக்கிறது? தூங்கையிலே வாங்குகிற காத்து சுழிமாறிப் போனாலும் போச்சு என்பார்கள். ஊருக்கு ஆம்னி பஸ்ஸில் போகிறோம். ஒட்டுனர் யாரென்றே தெரியாது. நம்மைப் பத்திரமாகக் கொண்டுபோய் ஊரில் சேர்ப்பார் என்ற நம்பிக்கையில் தான் பயணிக்கிறோம். அதே நம்பிக்கையை இறைவன் மேல் வையுங்கள். வயதான காலத்தில் எந்தப் பிரச்சினையும் வராமல் அவர் பார்த்துக்கொள்வார். உங்களை நல்ல வழியில் கரை சேர்ப்பார். நமக்கு ஓட்டுனர் அவர்தான். அதாவது நம் வாழ்க்கை என்ற பயணத்திற்கு ஓட்டுனர் அவர்தான். அவரைப் பிரார்த்தனை செய்யுங்கள். தேவையில்லாமல் இது போன்ற நடப்புக்களை எல்லாம் பார்த்துவிட்டு உங்களை நீங்களே குழப்பிக்கொள்ளாதீர்கள். இருக்கிற கொஞ்ச நஞ்ச நிம்மதியும் இப்போதே இல்லாமல் போய்விடும்!”

ஆச்சியின் இந்த அதிரடியான வார்த்தைகளால், செட்டியார் இப்போது வேறு மாதிரியான தாக்கத்திற்கு உள்ளானார். ஆமாம், இவளுக்கு உள்ள தெளிவான சிந்தனை நமக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது என்பதுதான் அது!

செட்டியாரின் கண்கள் பனித்து விட்டன!

மெல்லிய குரலில் சொன்னார்: “எனக்கு ஓட்டுனர் நீ தான். உனக்குப் பிற்குதான் இறைவன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

Devotional மணியாக ஒரு பாடல்!


Devotional மணியாக ஒரு பாடல்!

திருமதி நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் பாடிய பாடல் ஒன்றை உங்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
----------------------------------
பக்திப் பாடல்
பாடிப் பரவசப் படுத்துபவர் திருமதி நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள்
பாடலுக்கான சுட்டி:
http://youtu.be/1NkmDU6no38
இந்தப் பாடலை இணையத்தில் வலையேற்றிய அந்த முகம் தெரியாத நண்பருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக



வாழ்க வளமுடன்!