Astrology - சனி எப்படிக் கொடுப்பான்?
சனியைப்போல் கொடுப்பாருமில்லை. கெடுப்பாருமில்லை. சனி முதல் நிலை தீய கிரகம். இயற்கையிலேயே தீய கிரகம்
அப்புறம் எப்படிக் கொடுப்பான்?
அவன்தான் ஆயுள்காரகன். அவன்தான் கர்மகாரகன் (authority for work/profession) அதை மறந்துவிடாதீர்கள்.
அந்த இரண்டு செயல்களைத் தவிர மற்ற இடங்களில், சனியின் நிலைமை என்ன?
உதாரணத்திற்கு சனி நான்காம் வீட்டில் இருந்தால், ஜாதகனுக்கு தன் தாயோடு நல்ல உற்வு இருக்காது. அல்லது அவனுடைய தாயால் அவனுக்கு எந்தவிதப் பயனும் இருக்காது. நான்காம் இடம் கல்விக்கான இடமும் கூட். அங்கே வந்து அமரும் சனி, ஜாகனின் கல்வியில் கையை வைத்துவிடுவான். ஜாதகனுக்குக் கல்வியில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். ஒரு பட்டப் படிப்பை முடிப்பத்ற்குள் தாவு தீர்ந்துவிடும். அத்துடன் அது சுகத்திற்கான இடமும் ஆகும். ஜாதகனுக்கு சுகக்கேடு. கையில் காசு இருந்தாலும், சொத்து இருந்தாலும், அவனால அவற்றை அனுபவித்து சுகமாக இருக்க முடியாது.
எல்லோருக்கும் அப்படியா?
இல்லை!
சனி ஜாதகத்தில் உச்சம் பெற்று இருந்தாலோ அல்லது சொந்த வீட்டில், ஆட்சி வீட்டில் இருந்தாலோ, நன்மைகளைச் செய்வான். மேற்சொன்ன கஷ்டங்கள் எல்லாம் இருக்காது. ஆனால் சனி, தான் உச்சம் பெற்றதற்கான முழுப்பலனையும் தருவதற்கு அல்லது ஆட்சி பலம் பெற்றதற்கான முழுப்பலனையும் தருவதற்கு, அவர் சுபக்கிரகங்களான சுக்கிரன் அல்லது குருவின் சேர்க்கையையோ அல்லது பார்வையையோ பெற்றிருக்க வேண்டும்.
4ஆம் வீடு மட்டுமல்ல, மற்ற எல்லா வீடுகளுக்கும் அதுதான் பலன்.
ஆகவே உங்கள் ஜாதகத்தைப் பார்க்கும்போது அதைப் பாருங்கள்.
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com