Star Lessons
Lesson No.1
அதுஇருந்தா இதுஇல்லே
இதுஇருந்தா அதுஇல்லே
அதுவும்இதுவும் சேர்ந்திருந்தா
அவனுக்கிங்கே இடமில்லே!
- கவியரசர்
கண்ணதாசன்
------------------------------------
ஜோதிடம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ
கவியரசர் எழுதிய இந்த வரிகள்தான் ஜோதிடத்தின் முதல் பாடம்.
ஒரு மனிதக்கு அல்லது மங்கைக்கு எல்லா பாக்கியங்களுமிருக்காது! அப்படியிருந்தால் ஆயுள் பாவம் அடிபட்டிருக்கும். சின்ன வயசிலோ அல்லது மத்திம வயசிலோ (32 to 50) போய்ச் சேர்ந்துவிடுவான்.
ஆகவே நமக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்காது!
எங்கே சொத்து இருக்கிறதோ அங்கே சுகம் (நிம்மதி) இருக்காது; எங்கே சொத்து இல்லையோ அங்கே பிரச்சினை இருக்காது!
எங்கே ஹெல்த் (Health) இருக்கிறதோ அங்கே வெல்த் இருக்காது: எங்கே வெல்த் (Wealth) இருக்கிறதோ அங்கே ஹெல்த் இருக்காது!
ஒரு கை வண்டி இழுக்கும் தொழிலாளி பத்து ஜிலேபி கொடுத்தாலும் ஒரு வெட்டு வெட்டுவான்: பெரிய செல்வந்தரால் இரண்டு ஜிலேபிகளைச் சேர்ந்தாற்போல விரும்பி உண்ண முடியாது.
இரத்த அழுத்தம் (Blood Pressure), சர்க்கரை (Sugar, Diabetic), உப்பு, கசப்பு என்று எந்த நோயும் கைவண்டிக் காரனுக்கு இருக்காது.
இறைவனின் படைப்பு அப்படி!
உங்களுக்கு ஒன்று இல்லையென்றால், வேறு ஒன்று இருக்கும்.இல்லாததற்குக் கவலைப் படாமல், இருப்பதற்குச் சந்தோஷப்படுங்கள்
அதற்கு உதாரணம்: ஆடு, மாடு, மான் போன்றவற்றிற்குக் கொம்பைக் கொடுத்த இறைவன், குதிரைக்குக் கொம்பைக் கொடுக்கவில்லை!
கொடுத்திருந்தால் என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்!
இதைக் கேட்ட நண்பர் ஒருவர் சொன்னார்,”கழுதைக்கும் கூடத்தான் கொம்பில்லை!”
நான் சொன்னேன், “கழுதையின் பலம் அதன் கால்களிலே உள்ளது. உதை வாங்கிப் பார் தெரியும்!”
பலம், பலவீனம் இரண்டும் கலந்துதான் இருக்கும்.
இரவு பகலைப் போல, இன்பம்,துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை!
9 கிரகங்கள், 12 ராசிகள் என்று ஜாதகங்களும், அவற்றின் அமைப்பும், அதானால் கிடைக்கும் பலன்களும் விதம்
விதமாக இருந்தாலும்,
மொத்த மதிப்பெண், உலகில் அத்தனை பேர்களுக்கும் 337 தான். அஷ்டகவர்க்கக் கட்டத்தில் உள்ள எண்களைக் கூட்டிப் பாருங்கள் தெரியவரும்.
மன்மோகன் சிங்கிற்கும் 337 தான். அவருடைய P.A விற்கும் 337 தான்
முகேஷ் அம்பானிக்கும் 337 தான். அவருடைய வாகன ஓட்டிக்கும் 337 தான்.
முகேஷ் அம்பானியின் பெண்ட்லி காரை
ஓட்டி அனுபவிப்பவன் அவருடைய வாகன ஓட்டிதான்!
பிரதமர் அலுவலகத்தில் உள்ள எல்லா வசதிகளையும் அனுபவிப்பவன் பிதமருடைய P.A தான்
இந்த இருவருக்குமே மரண பயம், தீவிரவாதிகளின் தாக்குதல் பயம் எதுவும்
இருக்காது. வேலை முடிந்தால் ஹாயாகத் தெருவில்
தனியாக நடந்து தங்கள் வீட்டிற்குப் போக அவர்களால் முடியும். ஆனால் அவர்களின் Boss களால் அப்படி செய்ய முடியாது.
பிரபலங்களுக்கு லக்கினம், ஒன்பது, பத்து, பதினொன்றாம் வீடுகள் நன்றாக இருக்கும்
அவர்களுடைய \
உ தவியாளர்களுக்கு நான்காம் வீடும் நன்றாக இருக்கும்.
உங்களைவிடத் தாழ்ந்தவர்கள் யாருமில்லை; உங்களைவிட உயர்ந்தவர்கள் யாருமில்லை!
அனைவரும் சமம்! அதை மனதில் வையுங்கள்!
-------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com