மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.6.23

ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன் என்ன செய்ய வேண்டும்?


ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

முக்கியமான விவரங்கள் அதில் உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.

ராசிச் சக்கரம், நவாம்ச சக்கரம், தசா/புத்தி விவரங்கள், கர்ப்பச்செல் இருப்பு (That is the balance dasa of the birth star at the time of the birth) அஷ்டகவர்க்கக் கட்டங்கள் ஆகியவை உள்ளனவா என்று பார்க்க வேண்டும்.

அவைகள் இருந்தால் மட்டுமே, கையில் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களிடம் காட்டியவரிடம் திருப்பிக் கொடுத்துவிடலாம். 

”கணினியில் கணித்துப் பிரதி ஒன்றைக் கொண்டு வாருங்கள்” என்று சொல்லிவிட வேண்டும்!
-------------------------------------------------------------------
சரி, எல்லாம் சரியாக இருக்கிறது என்றால் முதலில் என்ன செய்ய வேண்டும்?

கதாநாயகன் எப்படியிருக்கிறான் என்று பார்க்க வேண்டும்.

ஒரு திரைப்படத்திற்கு எப்படி நாயகன் பிரதானமோ, அப்படி ஒருவரின் சொந்த வாழ்க்கைப் படத்திற்கு, லக்கினாதிபதி எனும் கதாநாயகன் பிரதானம்!

அவன் சரியாக இல்லையென்றால், வாழ்க்கைப் படம் சரியாக ஓடாது! ரசிக்காது! நீண்ட நாட்கள் படம் ஓடினாலும் படத்தைப் பார்க்க ஆளிருக்காது.

பாதிப்பேர்களுடைய வாழ்க்கைப் படம் அப்படித்தான் இருக்கும்.

எல்லாம் வாங்கி வந்த வரம்! முன்வினைப் பலன்!
--------------------------------------------------------------------
லக்கினாதிபதி 12ஆம் வீட்டில் இருக்கக்கூடாது.

12ஆம் வீடு விரைய ஸ்தானம். 12th house is the house of loss! அங்கே இருந்தால் ஜாதகனுடைய வாழ்க்கை சோபிக்காது. சின்ன வயதில் பல கஷ்டங்களை அல்லது துன்பங்களை அனுபவிக்க நேரிடும். 21 வயதிற்கு மேலும், இறுதிவரை அந்நிலைமை தொடரும். அவன் வாழ்க்கை அவனுக்குப் பயன்படாது. ஜாதகத்தில் மற்ற வீடுகள் நன்றாக இருந்து, அவன் அதீதமாகப் பொருள் ஈட்டினாலும், அது அவனுக்குப் பயன்படாது. 

அவனைச் சுற்றியுள்ளவர்களுக்குப் பயன் படும். In short, his life will be useful to others; Not for him!

லக்கினாதிபதி 6ல் இருந்தாலும் அல்லது 8ல் இருந்தாலும் இதே பலன்தான்

6 8, 12 ஆகிய மூன்று வீடுகளும் மறைவிடங்கள் (Hidden Houses)

லக்கினாதிபதி நீசமடைந்திருந்து, சுப கிரங்களின் பார்வை அல்லது சேர்க்கை இன்றி இருந்தாலும் இதே பலன்தான்

லக்கினாதிபதி தனது சுயவர்க்கத்தில் 3 பரல்களையோ அல்லது அதற்குக் குறைவான பரல்களையோ பெற்றி ருந்தாலும்  இதே பலன்தான்

That is no use!
---------------------------------------------------------------------
சரி, எங்கே இருக்க வேண்டும்?

First Choice: 11ஆம் வீட்டில்!

Result: குறைந்த முயற்சி; அதிகப் பலன். Minimum efforts; Maximum benefits! அல்லது லாபாதிபதியுடன் (associated with 11th lord) சேர்ந்து இருக்க வேண்டும். இந்த சேர்க்கை கேந்திர வீடுகளில் அல்லது திரிகோண வீடுகளில் என்றால் உத்தமம். அந்த இருவருடைய திசைகளிலும் ஜாதகனின் வாழ்க்கை அசுர வளர்ச்சியைக்
காணும்

Second Choice: 9ஆம் வீட்டில்!

பாக்கியஸ்தானத்தில் இருக்க வேண்டும். (That is in the ninth house) He should be in the ninth house from his own house! அல்லது பாக்கியாதிபதியுடன் (associated with 9th lord) சேர்ந்து இருக்க வேண்டும். இந்த சேர்க்கை கேந்திர வீடுகளில் அல்லது திரிகோண வீடுகளில் என்றால் மிகவும் நன்மையளிக்கக்கூடியது.

Result: ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். எல்லா பாக்கியங்களும் அவனைத் தேடி வரும். சம்பந்தப்பட்ட இரண்டு கிரகங்களின் தசா/புத்திகளில் அவைகள் தேடி வரும். மகிழ்ச்சியான நிறைவான வாழ்க்கை உண்டு1

லக்கினாதிபதி 5ஆம் வீட்டில் இருந்தாலும் நல்ல பலன்கள் உண்டு. அது திரிகோண வீடாகும்

அதுபோல 4ல் அல்லது 7ல் இருந்தாலும் நல்லது. ஆனால் அந்த அமைப்பு மேற்சொன்ன பலன்களுக்கெல்லாம் அடுத்தபடிதான்

அதுபோல லக்கினாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் அல்லது தனது சுயவர்க்கத்தில் ஆறு பரல்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் பெற்றிருந்தாலும் நன்மையான பலன்களே கிடைக்கும்
-----------------------------------------------------------------------------
ஜோதிடம் கடல். கடலின் ஒரு பகுதியை, அதாவது மெரினாவிற்கு அல்லது சாந்தோம் பீச்சிற்கு எதிரில் உள்ள கடலைக் காட்டியிருக்கிறேன். அவ்வளவுதான்

மேற் சொன்ன பலன்கள் எல்லாம் பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு இந்தப் பலன்கள் மாறுபடும். கூடலாம் அல்லது குறையலாம். ஆகவே உங்கள் ஜாதகத்தை இந்த விதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சற்றுக் கவனமாக அலசவும். அது முக்கியம்!

நன்றாக இருந்தால் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளவும் வேண்டாம்; கெட்டுப்போயிருந்தால் தலையில் கைவைத்துச் சாய்ந்து கொள்ள வேண்டாம். வாழ்க்கையில் அனைவரும் சமம். ஜாதகமும் அப்படியே!

அதனால்தான் அனைவருக்குமே 337 பரல்கள். உங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். அது என்ன என்பதை முடிவில் நீங்களே தெரிந்து கொள்வீர்கள். பொறுமையாகவும், கவனமாகவும் பாடங்களைப் படித்து வாருங்கள். அது ஒன்றை மட்டும் நீங்கள் தொடர்ந்து செய்தால்தான் நான் இங்கே எழுதுவதன் நோக்கம் நிறைவேறும்!


அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com