மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.10.22

Lesson 59 and 60 Hamsa Yogam and Malvya Yogam

Star Lessons

Lesson no 59

New Lessons

பாடம் எண் 59 

யோகங்கள்

 பாடம்: ஹம்ஸ யோகம் 

குரு - குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.

குரு தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கடக ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.------------------------------------------------------

வகுப்பறை புத்திசிகாமணி!:

சார், குரு நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?”

இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!

-------------------------------------------------------

என்ன பலன்?

ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பான்.

வாழ்க்கையின் எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும்.

இறை நம்பிக்கை உள்ளவனாக இருப்பான். 

சுருக்கமாக ஆங்கிலத்தில்:

Hamsa yoga: Jupiter in its own sign or in exaltation, and in a kendra house, the native will be religious minded and very fortunate. 

அன்புடன்,

வாத்தியார்.

------------------------------------------------------

Star Lessons

Lesson no 50

New Lessons

பாடம் எண் 60

யோகங்கள்

பாடம்: மாளவ்ய யோகம் 

சுக்கிரன் - சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.

சுக்கிரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மீன ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின்

கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.

------------------------------------------------------

வகுப்பறை புத்திசிகாமணி!:

சார், சுக்கிரன் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?”

இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!

-------------------------------------------------------

என்ன பலன்?

ஜாதகன் வாழ்க்கையை மிகவும் ரசித்து வாழ்பவன்.

நல்ல மனைவி அமைவாள். பிரச்சினை இல்லாத மனைவி அமைவாள். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

தர்ம, நியாயங்களில் ஜாதகன் பற்றுடையவனாக இருப்பான்.

உங்கள் மொழியில் சொன்னால் அவற்றில் பிடிப்பு உடையவானாக இருப்பான்.

செல்வமுடையவனாக, வசதிகள் உடையவனாக இருப்பான். 

வேறு அமைப்புக்களால் நல்ல மனைவி அமையாவிட்டாலும், ஜாதகன் வாழ்க்கையை, ரசித்து வாழ்பவனாக இருப்பான்.

Marriage is only a part of the life. Not the whole life. Please keep that in your mind!

மொத்தத்தில் ஜாதகன் ரசனை உள்ளவன்.

அவனை எல்லோரும் விரும்புகிறார்களோ இல்லையோ, அவன் எல்லோரையும் விரும்புவான்! 

சுருக்கமாக ஆங்கிலத்தில்:

Malavaya yoga: Venus in its own sign or in exaltation, and in a kendra house, the native will be wealthy, loves life, sometimes self-indulgent, good marriage and will have a strong sense of justice. 

அன்புடன்,

வாத்தியார்.

-----------------------------------------------------------------

 

 

 

 

 


No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com