✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson no 53
Date 10-9-2022
New Lessons
பாடம் எண் 53
இயற்கையான சுபக்கிரகங்களும், இயற்கையான தீய கிரகங்களும்
நீங்கள் நல்லவரா அல்லது கெட்டவரா?
நமக்கு நாம் எப்போதும், எந்த நிலையிலும் நல்லவர்தான். நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் நமக்கு நியாயமாகவும், நன்மை உடையதாகவும்தான் தெரியும்!
ஆனால் நாம் நல்லவரா அல்லது கெட்டவரா என்பதை மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும். அல்லது மற்றவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!
நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்பது இரண்டு வகைப்படும். இயற்கையாகவே நல்லவர்கள் அல்லது இயற்கையாகவே கெட்டவர்கள் என்று இரண்டுவகைப் படுத்தலாம். அடிப்படைக் குணங்கள் எல்லாம் நல்லவையாக இருந்தால், இயற்கையாகவே நல்லவர் என்று எடுத்துக்கொள்ளலாம்.
ஜோதிடத்தில், கிரகங்களை அவ்வாறு வகைப்படுத்தியுள்ளார்கள்.
இயற்கையாகவே நல்ல கிரகங்கள். அதாவது சுபக்கிரகங்கள்.
குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், புதன் ஆகிய 4 கிரகங்களும் இயற்கையாகவே நல்ல கிரகங்கள். ஒருவருடைய ஜாதகத்தில் அவைகள் வலிமையாக இருக்க வேண்டும்
இயற்கையாகவே தீய கிரகங்கள்
சனி, செவ்வாய், ராகு & கேது ஆகிய 4 கிரகங்களும் இயற்கையாகவே தீய கிரகங்கள் ஆகும்! தீய கிரகத்துடன் சேரும் புதன் நன்மையைச் செய்வதில்லை.அதுவும் தீயதாகவே மாறிவிடும்!
12 லக்கினங்களுக்கும் உரிய நன்மை செய்யும் கிரகங்களையும், தீமையான கிரகங்களையும் வகைப் படுத்தியுள்ளார்கள்
அன்புடன்,
வாத்தியார்
===========================================
✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson no 54
New Lessons
பாடம் எண் 54
கோச்சார ராகுவின் பலன்கள்
ராகு சாயா கிரகம். சொந்த வீடு இல்லாத கிரகம். மற்ற ஏழு கிரகங்களுக்கும் ஒவ்வொரு நாள் ஆதிக்க நாளாக உள்ளது. அதனால்தான் தினமும் ராகுவிற்கு 90 நிமிடங்களும் (ராகு காலம்), கேதுவிற்குத் 90 நிமிடங்களும் (எம கண்டம்) அந்த நேரங்களில் முக்கியமான செய்ல்களை மக்கள் தவிர்ப்பார்கள். நாமும் தவிர்க்க வேண்டும்
சரி சொல்ல வந்த விஷ்யத்திற்கு வருகிறேன். சனி 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு சுற்று வருவதைப் போல, நாகுவும் கேதுவும் 18 ஆண்டுகளில் ஒரு சுற்றை முடிப்பார்கள். அதாவது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு ராசியில் த்ங்கிச் செல்வார். அங்கே தங்கி வழக்கப்படி அந்த இடத்திற்கான சோதனைகளையும், துன்பங்களையும், இழப்புக்களையும் ஜாதகனுக்குக் கொடுத்துவிட்டு, அடுத்த ராசிக்குத் தன் நடையைக் கட்டிவிடுவார். அடுத்த ராசிக்கு, கடிகாரச் சுற்றுக்கு எதிர் சுற்ரில் செல்வார். ராகுவும், கேதுவும் எதிர் சுற்றில்தான் சுற்றுவார்கள் என்பது பால பாடம். அது அனைவருக்கும் தெரியும். Rahu and ketu rotates in anti clock wise
அவ்வாறு ஒவ்வொரு ராசியிலும் ராகு
தங்கும்போது, தங்கிச் செல்லும்போது ஜாதகனுக்குக் கிடைக்கக்கூடிய முக்கியமான பலனைச்
சுருக்கமாகக் கீழே கொடுத்துள்ளேன்!
---------------------------------------------------------------------------------
தலைப்பு: ராகுவின் கோள்சாரப் பலன்:
1. ஒன்றாம் வீட்டில் ராகு இருக்கும்
காலத்தில் ஜாதகனுக்கு உடல் நலமின்மை உண்டாகும்.
2. இரண்டாம் வீட்டில் ராகு இருக்கும்
காலத்தில் ஜாதகனுக்கு சொத்து, செல்வம்
விரையமாகும்
3. நான்காம் வீட்டில் ராகு இருக்கும்
காலத்தில் ஜாதகனுக்கு விரோதங்கள் ஏற்படும். எதிரிகள் உண்டாவார்கள்
4. ஐந்தாம் வீட்டில் ராகு இருக்கும்
காலத்தில் ஜாதகனுக்கு கவலைகள் ஏற்படும். மகிழ்ச்சி இருக்காது.
5. ஏழாம் வீட்டில் ராகு இருக்கும்
காலத்தில் ஜாதகனுக்கு மனைவியால் உபத்திரவங்கள், சிரமங்கள், கஷ்டங்கள் ஏற்படும். ஜாதகியாக
இருந்தால் அவளுக்கு அவைகள் அவளுடைய கணவனால் ஏற்படும்.
6. எட்டில் ராகு இருக்கும் காலம் உடல்
நலத்திற்குக் கேடானது.
7. ஒன்பதில் ராகு இருக்கும் காலத்தில்
ஜாதகனுக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். சிலர் தூர
தேசங்களுக்குச் செல்ல நேரிடும்.
8. பத்தில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்குத் தொழிலில், வியாபாரத்தில், போட்டிகள், விரோதிகள் ஏற்படுவார்கள். அவர்களால் அல்லல் பட நேரிடும்.
3ஆம் வீடு, 6ஆம் வீடு, 11ஆம் வீடு, 12ஆம் வீடு ஆகிய நான்கு இடங்களிலும் ராகு சஞ்சாரம் செய்யும் காலத்தில், ஜாதகனுக்கு ஒரு சிரமமும் ஏற்படாது.
இந்தப் பலன்கள் யாவும் பொதுப்பலன்கள், தசாபுத்தி சிறப்பானதாக நடைபெற்றுக்கொண்டிருந்தால், இந்தப் பலன்கள் குறையும் அல்லது இல்லாமல்போய்விடும்!
----------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com