மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.10.20

Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு திருமணம் ஆகாது என்று ஜோதிடர்கள் சொன்னதற்குக் காரணம் என்ன?


Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு திருமணம் ஆகாது என்று ஜோதிடர்கள் சொன்னதற்குக் காரணம் என்ன?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது.உத்திராட நட்சத்திம். துலா லக்கினக்காரர். ஜாதகரின் ஜாதகத்தை அலசிய ஜோதிடர்கள் ஜாதகருக்கு திருமணம் ஆகாது என்று ஒரே மாதிரி சொன்னார்கள். அதன்படிதான் நடந்தது. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 25-10-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

--------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

  1. ஜகதீஸ்வரன் கானாடுகாத்தான்: 2 7 8 ஆம் இடங்கள் பாதிப்பு. 2 7 ஆம் அதிபதி செவ்வாய் அஸ்தங்கம். லக்னங்களுக்கு 5 ஆம் அதிபதி 6 ல் மறைந்து சூரியனுடன் பாபத்துவம். ராசிக்கு 5ல் செவ்வாய் அஸ்தங்கம்.3 12 ஆம் இடங்களுக்கு கடுமையான சனியின் பார்வை.

    ReplyDelete
  2. . . 23/10/20 புதிருக்கு பதில். ஜாதகர் உத்திராடம் நட்சத்திரம். விருச்சிக ராசி. துவா லக்னம். லக்னாதிபதியும் களத்திரகாரகன் சுக்கிரன் பாபகர்தாரி யோகத்தில் இருக்கிறார். ஆறுக்குடையவரான குருவின் பார்வை பெறுகிறார்.ஏழில் செவ்வாய் ஆட்சி பெற்று வர்கோத்தமம் ஆனதும் எட்டில் ராகு இருந்து சனி பார்வை பெற்றதும் செவ்வாய் ராகு கேது சுப பலம் பெறாமல் ராகு தசை வாலிப வயதில் இருந்து நாற்பது வயது வரை பின்னர் துலாம் லக்னத்திற்கு ஆகாதவரான குரு ஆறுக்குடையவராகி தசை நடத்தியதும் திருமண தடைக்கு காரணமாகும்

    ReplyDelete
  3. ஐயா கேள்விக்கான பதில்
    1 .லக்கினாதிபதி சுக்கிரன் ஐந்தில்
    2 .இரண்டில் கேது (குடும்பைஸ்தானம் )
    3 .இரண்டு ஏழுக்குரிய செவ்வாய் கேந்திரத்தில் மேலும் பாபா கர்ததாரி ல்
    கடுமையாக பாதிக்க பட்டுள்ளார்
    4 .லக்கினத்தின் மேல் ஆறாம் அதிபதி குருவின் பார்வை வேறு
    5 .மேலும் இரண்டு ஏழின் மேல் எந்த சுப கிரஹங்களின் பார்வையும் இல்லை
    நன்றி
    தங்களின் பதிலை ஆவலுடன்

    ReplyDelete
  4. ஐயா, வணக்கம்! ஜாதகருக்கு திருமணம் ஆகாது என்று ஜோதிடர்கள் சொன்னதற்குக் காரணம் என்ன? பதில்: 1. ஏழாம் வீடு பாப கர்த்தாரி யோகத்தில், 6ஆம் வீட்டில் சூரியனிடம் அஸ்தமமான நீச புதன் மற்றும் சனி 8ஆம் வீட்டில் ராகு 2. ஏழாம் வீட்டில் செவ்வாய் ஆட்சியில் அமர்ந்து லக்னத்தில் உள்ள மாந்தியுடன் கூட்டு சேர்ந்து ஜாதகனின் திருமணத்தை கெடுத்தார். 3. நவாம்சத்தில் வர்கொத்தமம் பெற்ற செவ்வாய் குருவின் பார்வையை ஏற்கவில்லை.

    ReplyDelete
  5. ஆசானே
    லக்னம், இரண்டாம் வீடு, மற்றும் ஏழாம் வீடு கெட்டிருக்கிறது.
    ஏழாம் வீட்டில் செவ்வாய் வர்கோத்தமம் பெற்று உச்சத்தில் உள்ளது. மேலும் பாபகர்த்தாரி யோகம். இரண்டாம் வீட்டு அதிபதியும் அவரே.
    லக்னத்தில் மாந்தி.
    மேலும் ஏழாம் வீட்டிற்கு பன்னிரண்டில் சனி.
    இவையெல்லாம் சேர்ந்து ஜாதகருக்கு திருமண வாழ்க்கைக்கு தடையை ஏற்படுத்தி உள்ளது.

    கெ.ரவி

    ReplyDelete
  6. ஜாதகர் 12 ஏப்ரல் 1966 அன்று காலை 8 மணி 22 நிமிடங்கள் 30 நொடி போலப் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.

    சென்ற புதிர் போலவே 7ம் அதிபதி கேந்திராதிபத்ய தோஷம் கொண்டார்.7ம் இடம் சூரியன் சனி ராகுவால் சூழப்பட்டு பாபகர்தாரியில் மாட்டிக்கொண்டது. லக்கினத்திலேயே மாந்தி.

    அஷ்ட வர்கத்தில் 7ம் இடத்திற்கு 23 பரல் மட்டுமே. 7ம் அதிபதிக்கு 2 பரல் மட்டுமே. படுக்கை சுகத்தைத்தரும் 12 இடத்திற்கு 20 பரல் மட்டுமே.
    இக்காரணங்களால் ஜாதகருக்குத் திருமண பாக்கியமே இல்லாமல் போனது.

    ReplyDelete
  7. வணக்கம்

    தாங்கள் கேட்டு இருந்த புதிருக்கான பதில்
    துலா லக்கினம், உத்திராட நக்ஷத்திர தனுசு ராசி ஜாதகருக்கு திருமணம் ஆகாத நிலைக்கான காரணங்கள்

    திருமணம் பற்றிய நிலை அறிய ஜாதகரின் இரண்டாம் இடம், ஏழாம் இடம், மற்றும் லக்கினம் , லக்கின அதிபதி நிலையை பார்க்க வேண்டும்.

    ஜாதகரின் லக்கினத்திலேயே மாந்தி அமர்ந்து உள்ளது . இது மன குழப்பத்தை குறிக்கும் நிலை ஆகும். மேலும் லக்கின அதிபதி சுக்கிரன் தனக்கு உகந்து சனியின் வீட்டில் இருந்தாலும் , எட்டாம் இடத்தில் உள்ள ராகு வின் சாரத்தில் அதாவது சுக்கிரன் சதய நக்ஷத்திரத்தில் கும்ப ராசியில் உள்ளது.

    பகை கிரகமும் இரண்டு மற்றும் ஏழாம் அதிபதியான செவ்வாய் எழில் சூரியனின் சாரத்தில் அதாவது பாதகாதிபதியும் ஆறாம் இடத்தில் உள்ள சூரியனின் சாரத்தில் அமர்ந்து திருமண நிகழ்வை தர இயலாத நிலையில் உள்ளார்.

    ஜாதகருக்கு திருமண வயதில் வந்த எட்டாம் இடத்தில் அமர்ந்த ராகு தசையில் திருமண அமைப்பை தர இயலவில்லை. பின்னர் வந்த மூன்று மற்றும் ஆறாம் இடத்து அதிபதியும் மற்றொரு பகை கிரகமான குருவும் ஜாதகருக்கு திருமணம் நடத்தி வைக்க இயலவில்லை

    நன்றி
    இப்படிக்கு
    ப. சந்திரசேகர ஆசாத்
    கைபேசி: 8879885399

    ReplyDelete
  8. வணக்கம்

    தாங்கள் கேட்டு இருந்த புதிருக்கான பதில்
    துலா லக்கினம், உத்திராட நக்ஷத்திர தனுசு ராசி ஜாதகருக்கு திருமணம் ஆகாத நிலைக்கான காரணங்கள்

    திருமணம் பற்றிய நிலை அறிய ஜாதகரின் இரண்டாம் இடம், ஏழாம் இடம், மற்றும் லக்கினம் , லக்கின அதிபதி நிலையை பார்க்க வேண்டும்.

    ஜாதகரின் லக்கினத்திலேயே மாந்தி அமர்ந்து உள்ளது . இது மன குழப்பத்தை குறிக்கும் நிலை ஆகும். மேலும் லக்கின அதிபதி சுக்கிரன் தனக்கு உகந்து சனியின் வீட்டில் இருந்தாலும் , எட்டாம் இடத்தில் உள்ள ராகு வின் சாரத்தில் அதாவது சுக்கிரன் சதய நக்ஷத்திரத்தில் கும்ப ராசியில் உள்ளது.

    பகை கிரகமும் இரண்டு மற்றும் ஏழாம் அதிபதியான செவ்வாய் எழில் சூரியனின் சாரத்தில் அதாவது பாதகாதிபதியும் ஆறாம் இடத்தில் உள்ள சூரியனின் சாரத்தில் அமர்ந்து திருமண நிகழ்வை தர இயலாத நிலையில் உள்ளார்.

    ஜாதகருக்கு திருமண வயதில் வந்த எட்டாம் இடத்தில் அமர்ந்த ராகு தசையில் திருமண அமைப்பை தர இயலவில்லை. பின்னர் வந்த மூன்று மற்றும் ஆறாம் இடத்து அதிபதியும் மற்றொரு பகை கிரகமான குருவும் ஜாதகருக்கு திருமணம் நடத்தி வைக்க இயலவில்லை

    நன்றி
    இப்படிக்கு
    ப. சந்திரசேகர ஆசாத்
    கைபேசி: 8879885399

    ReplyDelete
  9. வணக்கம்.
    துலா இலக்கினம், தனுசு ராசி ஜாதகர்.
    ஜாதகத்தை அலசிய ஜோதிடர்கள் அவருக்கு திருமணம் ஆகாது என்று ஒரே மாதிரி சொன்னார்கள். அதற்கு என்ன காரணம்?
    ஜாதகருக்கு கடுமையான களத்திர தோசம்.
    1) குடும்ப ஸ்தானம் மற்றும் களத்திராதிபதியுமான செவ்வாய் 7ல் அமர்வு மற்றும் வர்கோத்தமம். ஆனால் பாப கர்த்தாரியின் பிடியில் வலுவிழந்துள்ளார். செவ்வாயின் சுய பரல் 2 மற்றும் 7மிடத்தின் பரல் 23 மட்டும்.
    2) இரண்டாமிடத்தில் கேது பகவான் நங்கூரமிட்டுள்ளார். செவ்வாயின் 8ம் பார்வை மற்றும் 8மிட ராகுவின் பார்வையில் குடும்ப ஸ்தானமும் வலுவிழந்துள்ளது.
    3) சயன சுக ஸ்தானமான 12மிடமும் (பரல் 20) 6மிடத்தில் அமர்ந்துள்ள‌ சனி மற்றும் சூரியனின் நேரடி பார்வையில் கெட்டுள்ளது.
    4) சந்திர ராசியில் இருந்து 7மிடமான மிதுனத்தில் (பரல் 22) 6ம் அதிபதி குரு அமர்ந்துள்ளார். அவரின் 9ம் தனிப்பார்வையில் களத்திர காரகன் சுக்கிரன் உள்ளார்.
    5) ஜாதகருக்கு 23 வயதில் ஆரம்பித்த அஷ்டம ராகு தசை கிட்டத்தட்ட 40 வயது வரை நடந்துள்ளது.
    மேற்கண்ட காரணங்கள் மற்றும் இலக்கினம், ராசியில் இருந்து 7மிடமான களத்திரம் கடுமையாக பாதிக்கபட்ட காரணத்தால் ஜாதகருக்கு திருமணம் பாக்கியம் கிட்டவில்லை.

    ReplyDelete
  10. DOB 12/04/1966 20:17 hrs assumed at Chennai

    One of the strong reason could be Mars dosa. Mars being 2nd and 7th lord placed in Aries 7th house from lagna.

    Mars is in vargothamam as well in Aries amsam (Ashwini nakshatra 1st pada)

    Mars is the marakathipathi for Thula lagna looking 7th paarvai over lagna and 8th paarvai over second house

    Saturn who gave house to lagnathipahi also kalathira karagan sitting in 6th place with Mercury who is neesam in Meena lagna. 11th house owner also got spoiled in that house.

    ReplyDelete
  11. 7 ஆம் அதிபதி செவ்வாய், சொந்த வீட்டில். ஆனால் சனி மற்றும் ராகுவிற்கு நடுவில். பாபகர்தாரி யோகம்

    7இல் செவ்வாய், செவ்வாய் தோஷம்

    லக்னத்தில் maandhi. குடும்ப அமைப்பை கெடுக்கும்

    சுப கிரகங்கள் தீயவர் பார்வையில் (குரு செவ்வாய் பார்வை, சந்திரன் சனி பார்வை)

    குடும்ப ஸ்தானத்தில் கேது

    12இல் சனி பார்வை

    மேற்கூறிய காரணங்களால் திருமணம் நடக்கவில்லை

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com