மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.8.20

உலகத்தையே வியக்க வைத்த இந்தியர்!!!!!


உலகத்தையே வியக்க வைத்த இந்தியர்!!!!!

1991ம் ஆண்டு இந்தியாவின் சாதனையை கண்டு உலகமே வியந்தது.. என்ற தலைப்பிட்டு முதல் பக்க செய்திகள் வெளியிட்டு அமெரிக்க பத்திரிகைகள் இந்தியர்களை பெருமைப்படுத்தியது.

1980துகளில் உலகம் முழுவதும் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டு கணிப்பொறிகள் மனித பயன்பாட்டிற்கு வந்தது ..   இந்தியா அந்த காலகட்டத்தில் தனது ராக்கெட் திட்டத்தை பல தோல்விகளுக்கு பின் வெற்றிகரமாக செலுத்த ஆரம்பித்திருந்தது .. இந்தியாவின் பல செயற்கைகோள்கள் விண்ணில் அனுப்பப்பட்டது, ஆகையால் இந்தியாவிற்கு சூப்பர் கம்ப்யூட்டர்கள் தேவை பட்டது.

வளரும் நாடுகளுக்கு கையில் சூப்பர் கம்ப்யூட்டர்  கிடைத்தால் அதை வைத்து அணு ஆயுதங்கள், ஏவுகணைகள் தயாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று என்று காரணம் காட்டி அமெரிக்க திடீர் என்று சூப்பர் கம்ப்யூட்டர்களை தர மறுத்துவிட்டது.   ஐரோப்பிய நாடுகள் சூப்பர் கம்ப்யூட்டரை விற்பனை செய்ய முன்வந்தாலும் அவைகளின் விலை மிக அதிகம்.  சூப்பர் கம்ப்யூட்டர் இல்லாமல் இந்தியாவின் விண்வெளி  ஆராய்ச்சி, ராக்கெட் ஏவுதல், வானிலை ஆராய்ச்சி, தகவல் தொடர்பு என்று அணைத்து துறைகளும் பாதிக்கப்பட்டன.

1988ம் வருடம் அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி, விஜய் பாட்கர் என்னும் கணிப்பொறியாளரை சந்திக்கிறார்.  உலகநாடுகள் நமக்கு சூப்பர் கம்ப்யூட்டர் தர மறுக்கின்றனர், நம்மால் சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிக்க முடியுமா, எவ்வளவு காலம் ஆகும் என்று கேட்டார், அதற்கு பதிலளித்த பாட்கர் இதுவரை நான் சூப்பர் கம்ப்யூட்டரை புகைப்படத்தில் தான் பார்த்திருக்கிறேன் அனால் என்று நம்பிக்கையுள்ளது மூன்று வருடத்திற்குள் நாமும் குறைந்த விலையில்  சூப்பர் கம்ப்யூட்டர் தயாரித்துவிடலாம் என்றார்.

விஜய் பாட்கர் தலைமையில் 1988ம் ஆண்டு சி டாக், புனேவில் உதயமானது.  பொறியாளர்கள், விஞ்ஞானிகள் என அனைவரும் அரும்பாடுபட்டு உழைத்தார்கள்.  மூன்றே வருடங்களில் சூப்பர் கம்ப்யூட்டர் தயாரானது அந்த கணிப்பொறிக்கு பாரம் 8000 என்று பெயர் சூட்டினார்கள்.   இந்த சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்க அதன் தலைவர் பாட்கர் இரவு பகலாக உழைத்த உழைப்பிற்கு பலன் கிட்டியது.

இந்தியா சூப்பர் கம்ப்யூட்டர் தயாரித்துவிட்டோம் என்று அறிவித்தாலும் உலக நாடுகள் நம்ப தயாராகவில்லை, அதிலும் மேற்குலக மக்கள் அவர்கள் தயாரித்த கணிப்பொறி சூப்பர் கம்ப்யூட்டர் தரத்தில் இருக்காது என்றனர்.  இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய விஜய் பாட்கர் அமெரிக்காவில் நடக்கவிருந்த பன்னாட்டு சூப்பர் கம்ப்யூட்டர் கண்காட்சியில் தாங்கள் தயாரித்த சூப்பர் கம்ப்யூட்டரும் கலந்துகொள்ளும் என அறிவித்தார்.

உலகின் வளர்ந்த நாடுகள் தாங்கள் தயாரித்த சூப்பர் கம்ப்யூட்டர்களை கண்காட்சியில் வைத்திருந்தன. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, சீனா என பலநாடுகள் தங்களது சூப்பர் கம்ப்யூட்டர் வேகமானது என்று சொல்லிக்கொண்டிருந்தார்.  பல நாடுகளின் சூப்பர் கம்ப்யூட்டர்களை சோதித்து பார்த்து எந்த சூப்பர் கம்ப்யூட்டர் வேகமானது என அறிவிக்க ஒரு தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டது.

இந்தியாவின் பாரம் 8000 சூப்பர் கம்ப்யூட்டரை சோதித்து பார்த்த வல்லுனர்கள் சற்று அதிர்ந்துதான் போனார்கள் 5 ஜி பிலாப்ஸ் வேகம், இந்தியாவிற்கு கம்ப்யூட்டர் தர மறுத்த கிரே சூப்பர் கம்ப்யூட்டரை விட ஒரு மைக்ரோ வினாடி வேகம் கம்மியாக இருந்தது.  உலகின் இரண்டாவது அதிவேக கணிப்பொறி என்று இந்தியாவின் பாரம் 8000த்தை  அறிவித்தார்கள்.  அமெரிக்க, ஜப்பான் போன்ற நாடுகள் ஆச்சரியத்தில் உறைந்துபோனார்கள்,  மூன்றாம்  உலகநாடுகளில் வளரும் நாடக இருந்த இந்தியா சூப்பர் கம்ப்யூட்டர் தயாரித்து சாதனை படைத்தது. “Denied supercomputer, Angry India does it!” என்று அமெரிக்காவின் நாளிதழ் தலைப்பு செய்தி வெளியிட்டது.

இந்த சாதனைக்கு பின் கிரே நிறுவனம் தனது சூப்பர் கம்ப்யூட்டர்களின் விலையை குறைத்து.. அனால் உலகின் வளர்ந்த நாடுகள் இந்தியாவிடம் சூப்பர் கம்ப்யூட்டர் கேட்டு வரிசையில் நின்றனர்.  ஜெர்மனி, பிரிட்டன், ரஷ்யா போன்ற வல்லரசுகளுக்கு இந்தியா  தனது பாரம் சூப்பர் கம்ப்யூட்டர்களை ஏற்றுமதி செய்தது  செய்தது.

இன்று உலகில் உள்ள அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களில் 11 சூப்பர் கம்ப்யூட்டர் இந்தியாவினுடையது. நாம் இப்பொழுது Russia, Singapore, Germany and Canada. PARAMs have also been sold to Tanzania, Armenia, Saudi Arabia, Singapore, Ghana, Myanmar, Nepal, Kazakhstan, Uzbekistan,  Vietnam போன்ற நாடுகளுக்கு சூப்பர் கம்ப்யூட்டரை ஏற்றுமதி செய்கிறோம்.

இந்த சாதனைக்கெல்லாம் சொந்தக்காரர் விஜய் பாட்கருக்கு இந்திய அரசாங்கம் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் கொடுத்து கவுரவித்தது, மகாராஷ்டிரா அரசாங்கம் அவருக்கு மகாராஷ்டிரா பூஷன் விருதுகொடுத்து கவுரவித்தது.

இந்த சாதனை நாயகனை பற்றி நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.. இனி நாம் தெரிந்துகொண்டு வாழ்த்துவோம்.

மேலதிகத் தகவல்களுக்கு:
https://en.wikipedia.org/wiki/Vijay_P._Bhatkar
---------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

 1. வணக்கம் குருவே 👍!
  உலகம் வியக்க சுதேச கப்பல் ஒட்டியவருய் ஒரு இந்தியர். அதேபோல் உலக நாடுகள் வியக்க வைத்த சூப்பர் கம்ப்யூட்டர் தயாரித்துப் பெஉமைப் படுத்திய
  திரு. விஜய் பாட்கர் அவர்களைப் படுத்தியதில் இந்திய அரசு
  கௌரவம் தானே கொண்டது. சபாஷ்! மராட்டிய அரசும் பெருமைப் படுத்தியதில் மேலும் மகிழ்ச்சி
  கொள்கிறோம்.
  நல்ல பதிவைத் தந்த வாத்தியார்
  அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!🙏

  ReplyDelete
 2. அருமையான தகவல்

  ReplyDelete
 3. /////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே 👍!
  உலகம் வியக்க சுதேச கப்பல் ஒட்டியவருய் ஒரு இந்தியர். அதேபோல் உலக நாடுகள் வியக்க வைத்த சூப்பர் கம்ப்யூட்டர் தயாரித்துப் பெஉமைப் படுத்திய
  திரு. விஜய் பாட்கர் அவர்களைப் படுத்தியதில் இந்திய அரசு
  கௌரவம் தானே கொண்டது. சபாஷ்! மராட்டிய அரசும் பெருமைப் படுத்தியதில் மேலும் மகிழ்ச்சி
  கொள்கிறோம்.
  நல்ல பதிவைத் தந்த வாத்தியார்
  அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!🙏//////

  நல்லது. நன்றி வரதராஜன்!!!!

  ReplyDelete
 4. //////Blogger kmr.krishnan said...
  அருமையான தகவல்////

  நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com