மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.8.20

Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு கூட்டுத் தொழில் ஏன் ஒத்து வராது?


Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு கூட்டுத் தொழில் ஏன் ஒத்து வராது?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ஹஸ்த நட்சத்திரம் கன்னி. ராசி மேஷ லக்கினம். ஜாதகருக்கு நண்பருடன் சேர்ந்து கூட்டாகத் தொழில் செய்ய ஆசை. ஆனால் அவருடைய பெற்றோர்களுக்கு அதில் விருப்பமில்லை. குடும்ப ஜோதிடரிடம் ஆலோசனை செய்தார்கள். அவர் கூட்டுத் தொழில் கூடாது என்று சொல்லி விட்டார். ஜாதக ரீதியான காரணத்தையும் அவ்ர் சொல்லித் தேற்றி அனுப்பினார், ஜாஅதகப்படி கூட்டுத் தொழில் கூடாது என்று அவர் சொன்னதற்கான காரணம் என்ன? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 23-8-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9 comments:

 1. வணக்கம்

  தாங்கள் கேட்டு இருந்த ஜாதகரின் கூட்டு தொழில் இல்லாமையிற்கான காரணங்கள் :

  மேஷ லக்கின ஹஸ்த நக்ஷத்திர கன்னி ராசி ஜாதகரின் கூட்டு தொழில் பற்றிய நிலை அறிய ஜாதகரின் ஏழாம் வீட்டையும் பத்தாம் வீட்டையும் பார்க்க வேண்டும்.

  ஜாதகரின் ஏழாம் வீடு ராகுவினால் சூழ பட்டு இருக்கிறது.. ஜாதகரின் ஏழாம் வீட்டில் ராகு அவரின் சொந்த நக்ஷத்திரமான சுவாதி நக்ஷத்திரத்தில் லக்கின அதிபதி செவ்வாயோடு இணைந்து உள்ளார். இது கூட்டு தொழிலை கெடுக்கும் நிலை ஆகும். மேலும் லக்கின அதிபதி அதன் பகை வீட்டில் ஏழாம் வீட்டில் உள்ளதால் ராஹுவுடன் உள்ளதால் கூட்டு தொழில் செய்வது சரிவராது.

  மேலும் மேஷ லக்கினத்திற்கு தொழில் காரகனும் லாப அதிபதியும் மான சனி எட்டில் தனது எதிரி வீட்டில் எட்டாம் வீட்டில் மறைந்து இருப்பது தொழில் லாபத்தை தடை செய்யும் நிலை ஆகும்.

  ஆதலால் கூட்டு தொழில் செய்வது பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும்.

  நன்றி
  இப்படிக்கு
  ப. சந்திரசேகர ஆசாத்
  கைபேசி: 8879885399

  ReplyDelete
 2. ஜகதீஸ்வரன் கானாடுகாத்தான்: 7ஆம் இடம் பாதிப்பு. லக்னாதிபதி ராகுவுடன் கிரகணம்.ஜீவனாதிபதி சனி பாதிப்பு.

  ReplyDelete
 3. Dear Sir,

  The person's 7th place Rahu, and 8th lord placement in 7th is not good for companion and not good for the partnership business.

  Thanking you,

  ReplyDelete
 4. க. தமிழ்ச் செல்வன், மாச்சம்பட்டு, வேலுர் மாவட்டம்
  ஐயா, வணக்கம்!
  "Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு கூட்டுத் தொழில் ஏன் ஒத்து வராது?"
  பதில்: தொழில் காரகன், பத்தாம் வீட்டு அதிபதியுமான சனியும், வியாபரத்திற்கு காரகன், மூன்று மற்றும் ஆறாம் வீட்டதிபதியுமான புதனும் எட்டாம் வீட்டில் சூரியனுடன் அஸ்தமனம் ஆகி விட்டனர். தொழில் சேய்ய மறுக்கப் பெற்ற ஜாதகம். பத்தாம் வீட்டின் மேல் குருவின் பார்வை உள்ளது ஜீவனித்திற்கு குறைவில்லை. ஏதாவது பிழையிருந்தால் திருத்திக் கொள்கிறேன்.

  ReplyDelete
 5. Partner என்றாலே அது 7 ஆம் பவாகம் தான். அது life partner and business partner. இங்கு 7 இல் செவ்வாய் ராகு சேர்க்கை. செவ்வாய் 8 ஆம் அதிபதி வேறு. அம்சத்தில் செவ்வாய் சனி உடன் சேர்க்கை.7 ஆம் அதிபதி அம்சத்தில் நீசம் வேறு. அதனால் தொழில் கூட்டு ஆகாது.

  ReplyDelete
 6. ஐயா கேள்விக்கான பதில்
  1 .லக்கினாதிபதி செவ்வாய் லக்கினத்தை நேரடி பார்வையில் வைத்துள்ளார் ராகுவுடன் கூட்டு
  2 .பத்தாம் அதிபதி சனி ஆறாம் அதிபதி புதனுடன் ஆறாம் வீட்டில் (தொழிலில் ஏமாற வாய்ப்பு உள்ளது)
  3 .மேலும் ஆறாம் அதிபதி செவ்வாய் ,பனிரெண்டாம் அதிபதி குரு பார்வை பத்தாம் வீட்டின் மேல்
  4 .இரண்டாம் அதிபதி சுக்கிரன் தன வீட்டிற்கு எட்டில்
  இந்த காரணத்தால் ஜாதகருக்கு கூட்டு தொழில் கூடாது
  தங்களின் பதிலை ஆவலுடன் நன்றி

  ReplyDelete
 7. வணக்கம் ஐயா. 22/8/20 புதிருக்கு பதில் ஜாதகர் மேச லக்னம். கன்னி ராசி. ஏழுக்குடைய சுக்ரன் ராசியில் பகை வீட்டில் அமர்ந்து அம்சத்தில் குருவுடன் இணைந்து நீசம் பெற்றார்.ஏழில் எட்டுக்குடைய செவ்வாய் அமர்ந்து ராகு கேதுவும் இணைந்து ஏழாமிடம் பலம் இழந்தது.எனவே கூட்டு தொழில் ஒத்து வராது.

  ReplyDelete
 8. பெருமதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்.

  கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் கூட்டுத் தொழிலுக்கு ஆய்வு செய்யப்பட வேண்டிய இடமான ஏழாம் பாவகத்தில் இயற்கைப் பாவர்களான செவ்வாய் மற்றும் ராகு இருவரும் அமர்ந்துள்ளதோடு, பாவ கத்திரி தோசத்தாலும் 7ம் பாவகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஜாதகர் கூட்டுத் தொழிலில் ஈடுபடுவது சிறப்பாக அமையாது.

  நன்மதிப்புக்களுடன்
  இராம. சீனிவாசு, திருச்செங்கோடு.

  ReplyDelete
 9. Assumed DOB 18/11/1957 15/55 hrs Chennai.

  Agree with jadagar’s astrologer and parents.

  A connection between the 7th house and the 2nd or 11th houses indicates income from partnership.

  2nd house owner/ 7th house owner Venus is in 8th /3rd place from 2nd house and 7th house. Also in amsam Venus is debilitation in kanni house.

  Rahu is sitting in 7th house lead to conflict with partner always.

  Virayastanathpathy guru in 6th house looking 9th Drishti for 2nd house

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com