மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.8.19

கர்மவீரர் சொன்ன அற்புதமான யோசனை!!!!!


கர்மவீரர் சொன்ன அற்புதமான யோசனை!!!!!

முப்படைகளுக்கும் தனித்தனி தளபதி !

*தமிழ் நாட்டின் முதலமைச்சராயிருந்த  காமராஜர் ஒருமுறை டெல்லியில் பிரதமர் நேருவைச் சந்திக்கப் போகிறார்.

நேருவோ வழக்கமான உற்சாகத்தோடு காணப்படவில்லை ; மனத்தில்
ஏதோ சிந்தனை அலைப்பாயக் கவலையோடு இருந்தாராம்...

*பிரதமரைப் பார்த்துப் பல்வேறு செய்திகளைப் பேசுவதற்காக ஆர்வத்தோடு போன காமராஜர், " என்னடா இவர் இப்படி உட்கார்ந்திருக்கிறாரே.. இவரிடம் எப்படி தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளைத் கேட்டுப் பெறுவது...? என்னும்
தயக்கத்தோடு அவரே பிரதமரிடம் ஆரம்பித்திருக்கிறார் .

*"எப்பவுமே கலகலப்பா இருப்பிங்க...இன்னிக்கு என்ன ஆச்சு உங்களுக்கு..?

*நேரு விரக்தியோடு, " நம்ம இராணுவத் தளபதி திம்மையாவுக்கும், இராணுவ மந்திரி கிருஷ்ணமேனனுக்கும் எந்தநாளும் ஒரே தகராறா இருக்கு காமராஜ்!  திம்மையா கோப்புகளை மந்திரிக்கு அனுப்ப முடியாதுங்கிறார்.
கிருஷ்ணமேனனோ , திம்மையா தளபதியாய் இருக்கிறவரை தான் மந்திரியாக வேலை பார்க்க முடியாதுங்கிறார்.இராணுவ விஷயமா இருக்கிறதாலே எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. இந்த சிக்கல எப்படி தீர்க்கிறதுன்னே எனக்குப் புரியலே..." என்றாராம். 

* " இந்த ரெண்டு பேர்ல் யார வைச்சுக்கணும்...யாரைக் கழற்றி விட்டுவிடலாம் என்று நெனைக்கிறீங்க...? என்று கேட்டார் தலைவர்.

*"கிருஷ்ணமேனன் மூத்த அரசியல்வாதி; எனக்கு வாத்தியாராகவே இருந்தவர். அவரை நாம விட முடியாது. திம்மையாவைத்தான் ஏதாவது பண்ணியாகனும் ..." என்றார் நேரு.

*கொஞ்சம் கூடத் தயங்காமல், உடனே காமராஜர் சொன்னார். " நீங்க உடனே கேபினட் மீட்டிங்க போட்டு, திம்மையாவுகற்கும் கேபினட் அந்தஸ்து கொடுங்க அவர்கூட கெட்டிக்காரா அதிகாரிகள் 'டெபியூஸ்ட்' பண்ணி, பணத்தையும் கொடுத்து, ஆறு மாசத்துக்கு வெளிநாடுகள்ல சுத்திட்டு வரச் சொல்லுங்க. உலகம் பூரா புதுசா வந்திருக்கிற இராணுவ தளவாரங்கள் பத்தி அவங்க ' ஸ்டடி'பண்ண போறங்கன்னு கேபினட்ல தீர்மானம் போட்டு விட்டுடுங்க. அவங்க போய் ' ரவுண்ட்' அடிச்சுட்டு வரட்டும். அதுக்குள்ளே
நீங்க இங்கே பண்ண வேண்டிய மத்ததையெல்லாம் பண்ணிவிடலாம்!!!! ”

*வியப்போடு கேட்டுக் கொண்டிருந்த நேரு, " திம்மையா திரும்பி வந்ததும் அவரை எங்கே ' அக்காமடேட்' பண்றது.? என்று கேட்டார்...

*பளிச்சென்று அடித்தார் பெருந்தலைவர். " இப்பதிம்மையா இந்தியாவின் மொத்த இராணுவத்துக்கும் தளபதியா இருக்கார். இதுவே ரொம்ப டேஞ்ஜர். அவர் நினைச்சா ஒரே ராத்திரியிலே பிரைம் மினிஸ்டரையே '*ஹவுஸ்கஸ்டடியில வச்சுப்புடலாம். அவரு திரும்பி வர்துக்குள்ளே
மூணு படைகளுக்கும் மூணு தனித்தனி தளபதிய நியமிச்சுடுங்க. அவரு புல்லையும் புடுங்கிடலாம்; வந்து பார்த்துட்டு அவரால ஒண்ணும் முட்டும் முடியாது...

*ஏகத்துக்கு தளபதியா இருந்துநாட்டாமை பண்ணின ஒருத்தர்  ஒரே ஒரு படைக்குத் தளபதியா இருக்க சம்மதிக்கவும் மாட்டார் வெளியேறத்தான் நினைப்பாரு. அமைதியாய் ஓய்வு கொடுத்து வீட்லே ஒக்கார வச்சுப்பிடலாம் ! " என்று தலைவர்

பேசப்பேச நேரு தன் இருக்கையில் இருந்து எழுந்து, மகிழ்ச்சி தாள முடியாமல் காமராஜரைக் கட்டித் தழுவிக்கொண்டு...

" Kamaraj... Fantastic Kamaraj...! What a burte common sense ! "

*தலைவர் காமராஜர் சொன்னபடியே வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி வந்த திம்மையா தானே ஓய்வு பெற்று வெளியேறினார்.

*அரசியல் சதுரங்கத்தில் தனது அனுபவ அறிவை வைத்தே காய்களை நகர்த்திக் களம் கண்டவர் காமராஜர்.

*புத்தகத்தைக் படிப்பதைவிட பூமியைச் படித்தவர் அவர்.

சொன்னவர் :- திரு.S. செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர்.

*நன்றியுடன் ஆதார நூல்; "ஆகட்டும் -- பார்க்கலாம் "- திரு.வீரபாண்டியன்.
பக்கம் எண் : 111&112.
===========================================================
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Is there any reference book Mr. Veera pandian has suggedted in his book which you refer ? Sir, many stories of both Kamaraj and Kanchi Maha swamigal ate circulated , many of them convenient imaginations.

    ReplyDelete
  2. வணக்கம் குருவே,
    தமிழ்த் தாய் தநத தவப் புதல்வர்
    நாம் கண்ணாரக் கண்டறிந்து போற்றும் உத்தம தவச்சீலரதவச்சீலராம் கர்மவீரர் காமராஜர் அவர்கள் ஆற்றிய சொல்லொணா சீரிய செயல்களில்
    ஒன்றைத் தந்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய் வகுப்பறை வாத்தியாருக்கு உளம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறோம்!👍💐💐

    ReplyDelete
  3. அநுபவம் மிக்க அற்புத மாமனிதர் காமராஜர் ஐயா,

    அருமையான பகிர்வு ஐயா.........

    என்றும் மிக்க அன்பும் நன்றியும்.............

    அன்புடன்
    விக்னசாயி
    ========================

    ReplyDelete
  4. //////Blogger kmr.krishnan said...
    Is there any reference book Mr. Veera pandian has suggedted in his book which you refer ? Sir, many stories of both Kamaraj and Kanchi Maha swamigal ate circulated , many of them convenient imaginations.//////

    உண்மைதான். இணையத்தில் தேடிப்பார்த்தேன். சுப.வீரபாண்டியனின் நூல்களில், இந்த நூலைப் பற்றிக் குறிப்பிடவில்லை. தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete
  5. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே,
    தமிழ்த் தாய் தநத தவப் புதல்வர்
    நாம் கண்ணாரக் கண்டறிந்து போற்றும் உத்தம தவச்சீலரதவச்சீலராம் கர்மவீரர் காமராஜர் அவர்கள் ஆற்றிய சொல்லொணா சீரிய செயல்களில்
    ஒன்றைத் தந்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய் வகுப்பறை வாத்தியாருக்கு உளம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறோம்!👍💐💐//////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  6. ////Blogger vicknasai said...
    அநுபவம் மிக்க அற்புத மாமனிதர் காமராஜர் ஐயா,
    அருமையான பகிர்வு ஐயா.........
    என்றும் மிக்க அன்பும் நன்றியும்.............
    அன்புடன்
    விக்னசாயி/////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com