மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.1.17

நம் நாட்டின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா?


நம் நாட்டின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா?

365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில்தான் நம் நாட்டிலுள்ள கோயில்களில் மிகப் பெரிய கோயிலாகும்!

திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது.

இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர். திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு. கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க லிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.

அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த லிங்கம் வைக்கப்படும். அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும். மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும்.

திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.
நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது.

திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு. கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்). இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டு மானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.

தல வரலாறு :

ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “என்ன வேண்டும்?’ என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார். தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை. தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான்.

முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார். வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோயில்களில் உள்ளன. இவை “சப்தவிடங்கத்தலங்கள்’ எனப்படுகின்றன. “சப்தம்‘ என்றால் ஏழு. திருவாரூரில் “வீதி விடங்கர்’, திருநள்ளாறில் “நகர விடங்கர்’, நாகப்பட்டினத்தில் “சுந்தர விடங்கர்’, திருக்குவளையில் “அவனி விடங்கர்’, திருவாய்மூரில் “நீலவிடங்கர்’, வேதாரண்யத்தில் “புவனி விடங்கர்’, திருக்காரவாசலில் “ஆதி விடங்கர்’ என்ற பெயர்களில் விடங்க லிங்கங்கள் அழைக்கப்படுகின்றன. இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்கும். சப்தவிடங்கத்தலங்கள் உள்ள கோயில்களில் சுவாமியை “தியாகராஜர்’ என்பர்.

வழிபாடு நேரம் :
காலை 6 மணி - திருப்பள்ளி எழுச்சி ,பால் நிவேதனம்
காலை 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்
காலை 8 மணி - முதற் கால பூஜை
மதியம் 11.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்
பகல் 12 மணி - உச்சிக்கால பூஜை
பகல் 12.30 மணி - அன்னதானம்
மாலை 4 மணி - நடை திறப்பு
மாலை 6 மணி - சாயரட்சை பூஜை
இரவு 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்
இரவு 8.30 மணி - அர்த்தசாம பூஜை
பிரதான மூர்த்திகள் :
திருவாரூர் ஆலயத்தின் மூலவர் வன்மீகர். அவர் அருகே அன்னை சோமகுலாம்பிகை இருக்கிறாள். இறைவன் சூரிய குலம்; அம்பிகை சந்திர குலம். வன்மீகரின் வலப்பக்கத்தில் - தனிச் சந்நிதியில் ஸ்ரீதியாகராஜர்

365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில் திருவாரூர் தியாகராஜர் கோயில்!!!!!
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13 comments:

  1. வணக்கம் குருவே!
    கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி, 365 லிங்கங்கள், திருநாவுக்கரசர் வியந்து போற்றிய தொன்றுதொட்ட தலம், திருவாரூர் முக தரிசனம் விளமலில் பாத தரிசனம், இந்திரன் பூஜீத்த மரகதலிஙகம், சந்திரகுப்த சோமகுலாம்பிகை சமேத சூர்ய குல வன்மீகர் உறைதலம் போன்ற பல வியத்தகு சிறப்புகள் கொண்ட இப்பெருங்கோயிலுக்கு செல்ல இயலாது என்னால், என்பதனால் மானசீக தரிசனம் செய்து கொள்கிறேன் வாத்தியாரையா!
    பயனமிகு பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. டங்கம் என்றால் உளி என்பது பொருள். ஒரு சிலையைச்செதுக்க உளி தேவை. இந்த ஏழு மரகத லிங்கங்களும் உளியால் செதுக்கப்படாதவை.அதவாது விடங்க லிங்கங்கள்.எனவே அவை சப்த(ஏழு)விடங்க க்ஷேத்திரங்கள்.முசுகுந்த சக்கரவர்த்தி ஏழு முறை இந்திரலோகம் சென்று ஒவ்வொன்றாக வாங்கி வந்தார். ஆக புராண காலத்திலேயே 'டூப்ளிகேட்' செய்யும் வழக்கம் வந்துவிட்டது போலும்.

    பசுவிற்கு நீதி அளிக்கத் தன் மகனையே தேர் ஓட்டிக் கொன்ற மனுநீதிச்சோழன் வாழ்ந்தது திருவாரூர்தான்.

    ReplyDelete
  3. இந்தியாவின் மிக பெரிய கோயில் திருவாரூர் தியாகராஜர் கோயில் .

    இந்த அறிய நல்ல தகவலுக்கு நன்றி ஐயா.

    கண்டிப்பாக ஒருமுறை செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது ஐயா .

    நன்றி.

    ReplyDelete
  4. Sir I want to share my experience with this temple...1.sarva dosha parigara temple 2. The thiyagaraja idol attracts me..so beautiful kana kankodi vendum...3.utpragarathil yamadarma raja idol,big Shiva, Shiva durga,all r powerful gods...4.huge chariot...I visited 4 times this temple...thanks for sharing this...sir

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,பெரிய கோவில் என்று தெரியும்.ஆனால் மிகப்பெரிய கோவில் என்று பதிவைப் பார்த்துதான் உணர்ந்தேன்.நன்றி.

    ReplyDelete
  6. திருவாரூர் தியாகராஜர் சிறப்புகள் அறிந்து கொண்டோம்.

    ReplyDelete
  7. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி, 365 லிங்கங்கள், திருநாவுக்கரசர் வியந்து போற்றிய தொன்றுதொட்ட தலம், திருவாரூர் முக தரிசனம் விளமலில் பாத தரிசனம், இந்திரன் பூஜீத்த மரகதலிஙகம், சந்திரகுப்த சோமகுலாம்பிகை சமேத சூர்ய குல வன்மீகர் உறைதலம் போன்ற பல வியத்தகு சிறப்புகள் கொண்ட இப்பெருங்கோயிலுக்கு செல்ல இயலாது என்னால், என்பதனால் மானசீக தரிசனம் செய்து கொள்கிறேன் வாத்தியாரையா!
    பயனமிகு பகிர்வுக்கு நன்றி!///////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  8. /////Blogger kmr.krishnan said...
    டங்கம் என்றால் உளி என்பது பொருள். ஒரு சிலையைச்செதுக்க உளி தேவை. இந்த ஏழு மரகத லிங்கங்களும் உளியால் செதுக்கப்படாதவை.அதவாது விடங்க லிங்கங்கள்.எனவே அவை சப்த(ஏழு)விடங்க க்ஷேத்திரங்கள்.முசுகுந்த சக்கரவர்த்தி ஏழு முறை இந்திரலோகம் சென்று ஒவ்வொன்றாக வாங்கி வந்தார். ஆக புராண காலத்திலேயே 'டூப்ளிகேட்' செய்யும் வழக்கம் வந்துவிட்டது போலும்.
    பசுவிற்கு நீதி அளிக்கத் தன் மகனையே தேர் ஓட்டிக் கொன்ற மனுநீதிச்சோழன் வாழ்ந்தது திருவாரூர்தான்.//////

    மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  9. /////Blogger C Jeevanantham said...
    இந்தியாவின் மிக பெரிய கோயில் திருவாரூர் தியாகராஜர் கோயில் .
    இந்த அறிய நல்ல தகவலுக்கு நன்றி ஐயா.
    கண்டிப்பாக ஒருமுறை செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது ஐயா .
    நன்றி.//////

    நல்லது. எண்ணத்தைச் செயலாக்குங்கள். நன்றி ஜீவானந்தம்!!!!

    ReplyDelete
  10. ///Blogger Vasanth said...
    Sir I want to share my experience with this temple...1.sarva dosha parigara temple 2. The thiyagaraja idol attracts me..so beautiful kana kankodi vendum...3.utpragarathil yamadarma raja idol,big Shiva, Shiva durga,all r powerful gods...4.huge chariot...I visited 4 times this temple...thanks for sharing this...sir//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  11. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,பெரிய கோவில் என்று தெரியும்.ஆனால் மிகப்பெரிய கோவில் என்று பதிவைப் பார்த்துதான் உணர்ந்தேன்.நன்றி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  12. /////Blogger மாதேவி said...
    திருவாரூர் தியாகராஜர் சிறப்புகள் அறிந்து கொண்டோம்.////

    நல்லது. நன்றி சகோதரி!!!

    ReplyDelete
  13. How does it work when you do a horoscope for identical twins?


    by Baskar L , your follower

    lbaskii@gmail.com

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com