மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

11.1.17

நல்ல குடிநீர் என்பது எது?


நல்ல குடிநீர் என்பது எது?

நல்லகுடி நீர் என்பதற்கும், சுத்தமான குடி நீர் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணர வேண்டும்...அவசியமான பதிவு.
அவசியம் படியுங்கள்.

குடி தண்ணீரை RO பில்டர் செய்யக் கூடாது. ஏன்???.

நம் வீடுகளில் ஆர்.ஓ.சிஸ்டம் எனும் தண்ணீரைச் சுத்தம் செய்வதற்கு சாதனங்களை வைத்திருக்கிறோம்.

இந்த R.O சாதனத்தில் மூன்று மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை வெளியில் எடுத்துப் பார்த்தால் வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்.

அதை உதறி தட்டினால் அதிலிருந்து மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும்.

நாம் என்ன நினைப்போம்...அப்பப்பா நல்ல வேளை, இந்த வாட்டர் பில்டர் இருந்ததால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று.

ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த தாதுப் பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள மனிதர்களின் உடம்பில் செல்லவில்லையே...நிச்சயமாக அவர்கள் நோயோடு இருப்பார்கள் என்று நினைப்பேன்.

கண்ணுக்கே தெரியாத அந்தத் தூசுகளை பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கி அதிலுள்ள தாதுக்களை பிரித்து எடுத்துக் கீழே கொட்டுகிறோமே!.

அது தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய தாதுப் பொருட்கள் ஆகும்.

நீங்கள் தண்ணீரைப் பார்த்தால் அதில் அந்தத் தூசுகள் உங்கள் கண்ணுக்கே தெரியாது.

ஆர்.ஓ.சாதனத்தை பயன் படுத்தினால் மட்டுமே அந்தத் தூசுகள் கண்ணுக்குத் தெரியும்.

தண்ணீரில் கண்ணுக்கே தெரியாத தூசுகளைப் பார்த்து பயப்படுகிறோமே...ஆனால் கொத்து பரோட்டா, சிக்கன் 65, ஆனியன் ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச் சாப்பிடும் நாம் கண்ணுக்கே தெரியாத அந்த சின்னச் சின்ன தாதுப் பொருட்களை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு ஆர்.ஓ வில் ஊற்றி வடிக்கச் செய்ய வேண்டும்.

யாருடைய வீட்டில் தண்ணீரை சுத்தம் செய்வதற்கு R.O மெஷின் இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் இரத்தத்தில் உங்களுக்குத் தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில் சென்று இந்த தூசுகளை மருந்து என்ற பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே அசைக்க இயலாத உண்மை.

தண்ணீரில் இருக்கும் அந்தத் தாதுப் பொருட்களை R.O செய்யாமல் குடித்தால் நாம் மருந்து மாத்திரை என்ற தூசுக்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

எனவே தண்ணீரை ஆர்.ஓ (R.O) செய்யக் கூடாது.

தண்ணீரை R.O செய்து குடித்தால் மனிதனுக்கு நோய் வரும்.வாழ்நாள் முழுவதுமே தீராது.

சரி...

மினரல் பாட்டில் வாட்டர் -ஐ பயன்படுத்தலாமா?

மினரல் வாட்டர் பயன்படுத்தவே கூடாது.

மினரல் வாட்டர் கம்பெனிகளில் Anti Scale Dosing Machine என்று ஒரு மெஷின் இருக்கும். இந்த மெஷினின் வேலை தண்ணீரில் உள்ள அனைத்து தாதுப் பொருட்களையும் எடுத்து விட்டு சப்பைத் தண்ணீராக மாற்றுகிறது.

எனவே நல்ல தண்ணீரை ஒன்றுமில்லாத சப்பைத் தண்ணீராக மாற்றுவதற்கு நாம் பல வேலைகளை செய்து அதை பாட்டிலில் அடைத்துப்
பணம் கொடுத்து வாங்கி குடிக்கிறோம்.

எனவே தயவு செய்து பாட்டிலில் அடைக்கப் பட்ட மினரல் வாட்டர் என்று அழைக்கப்படும் தண்ணீரில் உள்ள இயற்கையான சத்துகளே இல்லாத Packaged Drinking Water ஐ யாருமே பயன்படுத்தக் கூடாது.

குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும் முறைதான் என்ன?...

தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது.
ஆர்.ஓ R.O செய்யக் கூடாது.
பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது.

வேறு எப்படித்தான் தண்ணீரை சுத்தப் படுத்துவது என்று கேட்டால், சாதாரணமாக குழாயில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம்.

அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச் சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே.

யார் ஒருவர் குழாய் தண்ணீரை நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க் கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே தயவு செய்து குழாயில் வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடுங்கள்.

குழாயில் வரும் தண்ணீரை எப்படிக் குடிப்பது?...

தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது.தாதுப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது.
சாக்கடை நீர் கலந்து வருகிறது என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றும்.
எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என TV, பேப்பர் மூலமாகத் தெரிந்துக் கொண்டோம் என்று பலர் கூறுகிறீர்கள்.

உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் தண்ணீர் கெட்டு விட்டதாக அந்தந்த ஊரில் உள்ள தண்ணீரைப் பாட்டிலில்
மூலமாக வியாபாரம் செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து பிரச்சாரம் செய்கிறது.

அப்பொழுதுதானே நீங்கள் குழாய் தண்ணீரைக் குடிக்காமல் பாட்டிலில் தண்ணீரை வாங்கிக் குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள்
பிரச்சாரம் செய்கிறார்கள்.

மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள் தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும் R.O பிளான்ட் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரைப் பருகுவதால் உலக மக்களுக்கு நோய் வருகிறது என்பதை புரிந்து கொண்டு நல்ல விஷயத்தைப் பிரச்சாரம் செய்வது போல கெட்ட விஷயத்தை பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு இருக்க வைத்து, அதன் மூலமாக மருந்து மாத்திரை வியாபாரம் செய்வதற்குத் திட்டமிட்டு உள்ளார்கள்.

உண்மையிலேயே குழாய் தண்ணீர் குடித்தால் ஒன்றும் ஆகாது.

இருந்தாலும் சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது,

தண்ணீர் கெட்டிருக்கிறது என்று ஒரு வேளை நாங்கள் நினைத்தால் உங்களது மன திருப்திக்காக சில காரியங்களை செய்யலாம். நான் கூறுவது போல உங்கள் தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில் இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி.

மண் பானையில் குடி தண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் இயற்கையாகவே சக்தியை அளிக்கிறது.

எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த Water Filter மண் பானை ஆகும்.

நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து உங்கள் வீட்டில் ஆர்.ஓ எனும் குப்பை மிஷினை வாங்கி வைத்து இருக்கிறீர்களே நாற்பதாயிரம்
ரூபாய்க்கு மண் பானை வாங்கினால் எவ்வளவு பானை கிடைக்கும். தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூட தீராது.

ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான இயற்கையான ஒரு Water Filter வாட்டர் பில்டரை யாரும் பயன்படுத்துவதே இல்லை.

எனவே தயவு செய்து தண்ணீரை மண் பானையில் வைத்து குடித்தால் கெட்ட பொருள்களும் அழியும். மண் சக்தியும் கிடைக்கும்,
பிராண சக்தி அதிகரிக்கும்.

வெள்ளை நிற பருத்தித் துணியால் தண்ணீரை வடி கட்டலாம்.

வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால்  தண்ணீரை வடி கட்டினால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து
நோயை உண்டு செய்யும் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது என்ற உண்மை, அறிவியல்
பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் அம்மை போன்ற நோய்கள் வரும் பொழுது நமது முன்னோர்கள் எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல்
மருத்துவமனைக்குச் செல்லாமல் வெள்ளைத் துணியில் வடி கட்டிய நீரில் குளிப்பாட்டி குணப் படுத்தி இருக்கிறார்கள்.

எனவே தேவைப் பட்டால் இந்த முறையில் தண்ணீரைச் சுத்தப் படுத்தலாம்.

செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலமாகவும் தண்ணீரை சுத்தப் படுத்தலாம்

செம்பு என்ற உலோக பாத்திரத்தின் மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான சக்தி கிடைக்கிறது.

அதில் உள்ள கெட்டப் பொருள் அழிக்கப் படுகிறது. தாமிரத்திற்கு அந்த சக்தி இயற்கையிலேயே உள்ளது.

எனவே செம்பு என்ற தாமிர உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க பயன் படுத்தலாம். அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை சுத்தப் படுத்திக் கொண்டே இருக்கும்.

பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு இருப்பார்கள் என்பதை அறவீர்களா?.

அவர்களிடம் சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால் அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக போவதைப் போல நாம் படங்களில் பார்த்திருப்போம்.

செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப் படுத்த முடியும்.

எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில் மண்பானை, வெள்ளை பருத்தித் துணி,செம்பு என்ற தாமிர உலோகம் மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை சுத்தப்படுத்துவதற்கு பல உத்திகள் இருக்கும் பொழுது நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு R.O. சிஸ்டத்தை உபயோகிக்க வேண்டும்?.

இதுவும் இல்லாமல் பூமியில் உள்ள மண்ணில் உள்ள அடுக்குக்கு எத்தகைய தண்ணீரையும் சுத்தப்படுத்தும் சக்தி உண்டு.

அதே போல் மண்ணை சுட்டு கேன்டில் முறையில் எவர்சில்வர் வாட்டர் பில்டர் பாத்திரக் கடைகளில் கிடைக்கும்.அதுவும் இயற்கையான எளிதான முறைதான்.அதில் மூன்று கேன்டில் உள்ள வாட்டர் பில்டர் அனைத்து குடும்பத்துக்கும் உகந்தது.

வடிந்த தண்ணீரை மண் பானையில் ஊற்றி மகிழ்வுடன் அருந்துங்கள்.

என் அருமை மக்களே!... நோய் தீர்க்கும் குடி தண்ணீரை உதாசீனம் செய்யாதீர்கள்.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்க்காதே எனும் முன்னோர் வாக்கை நம்புங்கள
R.O எனும் அமெரிக்க என்சைம் அரக்கனை தூக்கி எறியுங்கள்.

கழுத்தில் டை கட்டி விட்டு வந்தால் உடனே நம்பி மோசம் போகாதீர்கள்.

நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

படித்தேன்.பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
தங்களின் பதிவைப் படிக்கையில் மனம் அழுகிறது.எவ்வளவு முட்டாள்தனம் நாம் செய்யும் காரியம் என்று வருந்துகிறோம்
சமீபத்தில்தான் Big ஒBazaar போய்
RO filter வாங்கினோம்.
எங்கள் கிராமத்தில் எங்கள் குடும்பதீதார் இன்னமும் பானைத் தண்ணீர் தான் குடிக்கிறார்கள்! ஆகவே
அவர்கள் தான் உயர்ந்தவர்கள்!
அதை இனி நாங்களும் பின்பற்றுவோம்
நன்றி வாத்தியாரையா!

kmr.krishnan said...

Thanks for the information Sir.

adithan said...

வணக்கம் ஐயா,மிகவும் உபயோகமான கருத்துகள் நிறைந்த பதிவு.டைபாய்ட் போன்ற நோய் கிருமிகளை அழிக்க நீரை கொதிக்க வைத்து ஆறவிட்டு அருந்தலாம் என்பார்கள.எனக்கு அதிலும் உடன்பாடு கிடையாது.அப்படியே கிருமிகள் உள்ளே போனாலும் ஹோமியோபதி அல்லது ஆயுர்வேதிக் முறையில்(கெமிகல் ஆன்டிபயாடிக் மருந்துகளை தவிர்த்து)உடல் எதிர்ப்பு சக்திகளை உண்டு பண்ணினால்,நம் உடல் அதை எதிர்த்து குணமாக்கிவிடும்.உடலில் இம்யூன் சிஸ்டம் வளரும்போது மறுபடி கிருமி உள்ள நீரை அருந்தினாலும் நோய் வராது.கிருமி தொற்றுள்ள நீரை அருந்தும் அனைவருவருக்கும் அந்த நோய் வருவதில்லை என்பதிலிருந்தே இதில் உள்ள உண்மை விளங்கும்.எனவே பதிவில் உள்ள எளிமையான,மற்றும் நம் முன்னோர்கள் உபயோகித்த முறையே சாலச்சிறந்த்தது. நன்றி.

சங்கர் said...

Mr. Varadarajan,

Whatever you bought don't waste that. Filter the water until its indicate to change the Sand and Activated Carbon filter on the RO System itself. After filtration store the water in Soil Pot with a Small copper plate/spoon/sheet inside which will give you good effects of water back.

Drinking Natural water is always safe.

ஆற்று நீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும், சோற்று நீர் இரண்டையும் போக்கும்


Thanks.
Pradeeban Seetharaman.

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
தங்களின் பதிவைப் படிக்கையில் மனம் அழுகிறது.எவ்வளவு முட்டாள்தனம் நாம் செய்யும் காரியம் என்று வருந்துகிறோம்
சமீபத்தில்தான் Big ஒBazaar போய்
RO filter வாங்கினோம்.
எங்கள் கிராமத்தில் எங்கள் குடும்பதீதார் இன்னமும் பானைத் தண்ணீர் தான் குடிக்கிறார்கள்! ஆகவே
அவர்கள் தான் உயர்ந்தவர்கள்!
அதை இனி நாங்களும் பின்பற்றுவோம்
நன்றி வாத்தியாரையா!////

கீழே உள்ள நண்பர் சங்கர் அவர்களின் பின்னூட்டத்தைப் படியுங்கள். நன்றி வரதராஜன்!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
Thanks for the information Sir./////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

////Blogger adithan said...
வணக்கம் ஐயா,மிகவும் உபயோகமான கருத்துகள் நிறைந்த பதிவு.டைபாய்ட் போன்ற நோய் கிருமிகளை அழிக்க நீரை கொதிக்க வைத்து ஆறவிட்டு அருந்தலாம் என்பார்கள.எனக்கு அதிலும் உடன்பாடு கிடையாது.அப்படியே கிருமிகள் உள்ளே போனாலும் ஹோமியோபதி அல்லது ஆயுர்வேதிக் முறையில்(கெமிகல் ஆன்டிபயாடிக் மருந்துகளை தவிர்த்து)உடல் எதிர்ப்பு சக்திகளை உண்டு பண்ணினால்,நம் உடல் அதை எதிர்த்து குணமாக்கிவிடும்.உடலில் இம்யூன் சிஸ்டம் வளரும்போது மறுபடி கிருமி உள்ள நீரை அருந்தினாலும் நோய் வராது.கிருமி தொற்றுள்ள நீரை அருந்தும் அனைவருவருக்கும் அந்த நோய் வருவதில்லை என்பதிலிருந்தே இதில் உள்ள உண்மை விளங்கும்.எனவே பதிவில் உள்ள எளிமையான,மற்றும் நம் முன்னோர்கள் உபயோகித்த முறையே சாலச்சிறந்த்தது. நன்றி./////

உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆதித்தன்!

Subbiah Veerappan said...

/////Blogger சங்கர் said...
Mr. Varadarajan,
Whatever you bought don't waste that. Filter the water until its indicate to change the Sand and Activated Carbon filter on the RO System itself. After filtration store the water in Soil Pot with a Small copper plate/spoon/sheet inside which will give you good effects of water back.
Drinking Natural water is always safe.
ஆற்று நீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும், சோற்று நீர் இரண்டையும் போக்கும்
Thanks.
Pradeeban Seetharaman.//////

உங்களின் அனுபவப் பகிர்விற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே!!!!