மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.12.16

Health Tips: ஆறாவது விரல் எது?


Health Tips: ஆறாவது விரல் எது?

மகேஷ் அங்க பாரேன் முழு நிலா எவ்வளவு அழகா இருக்கு என்று மகேஷ் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டை பிடுங்கி எறிந்தவாறே கூறினாள் மகா...

"என் இந்த நிலாவ விடவா அந்த நிலா அழகு "என்று சொல்லிக்கொண்டே மகாவை கட்டியணைத்தான் மகேஷ்!

" விடு மகேஷ்... வயித்துல இருக்க உன் பிள்ளை உதைக்குறான் "

" ஏய் லூசு அவன் உதைக்கல டி... என் அப்பனுக்கு அம்மா மேல எவ்ளோ லவ் பாருனு சந்தோசத்துல துள்ளி குதிக்குறான் "என்று சொல்லிக்கொண்டே மகாவை மேலும் இருக்கமாய் அணைத்துக் கொண்டான் மகேஷ்!

மகேசும் மகாவும் காதலிச்சு பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க... அவங்க காதலோட சாட்சியா இப்போ மகா வயித்துல ஆறு மாத கரு...

மகேஷ் ஒரு பன்னாட்டு நிறுவனத்துல உயர் பதவியில இருக்கின்றான்!  கை நிறைய சம்பளம்!

****************************************************************/********************

மறுநாள் நீண்ட நேரமாகியும் மகேஷ் படுக்கையை விட்டு எழுந்திருக்காததால் மகா எழுப்பினால்...

"மகேஷ் எழுந்திருங்க டைம் ஆச்சி ஆபிஸ்க்கு போகலையா "

மகேஷ் எழுந்து...

" மகா என்னனு தெரியல தொண்டை ரொம்ப வலியாயிருக்கு... பேசக் கூட கஷ்டமா இருக்கு மகா... "திக்கி திணறி வலியோடு சொல்லி முடித்தான் மகேஷ்!

" அய்யோ என்னாச்சி மகேஷ்... கிளம்புங்க நாம டாக்டர்கிட்ட போய்ட்டு வந்துடலாம் "

" நான் ஜெய்க்கு போன் பண்ணி வர சொல்லி அவன்கூட போய்ட்டு வர்றேன் மகா... நீ எதுக்கு கஷ்டப்பட்டுகிட்டு "

" சரி மகேஷ் "

************, ******************************************************

" சொல்லுங்க மகேஷ் எத்தனை நாளா வலியிருக்கு "

" நைட்ல இருந்துதான் டாக்டர் "

" ஓகே... நான் ரெண்டு நாளைக்கு மெடிசின் தர்றேன் சாப்பிடுங்க... சரியாகலனா ரெண்டு நாள் கழிச்சி வாங்க "

" ஓகே டாக்டர் " மகேஷ் டாக்டர் எழுதிக் கொடுத்த மருத்துவ சீட்டை பெற்றுக்கொண்டு வெளியேறினான்!

*****************, ******************************************************

இரண்டு நாட்களாகியும் வலி குறையாததால் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றான் மகேஷ்!

" டாக்டர் இன்னும் வலி குறையல டாக்டர் "

" மகேஷ் உங்களுக்கு புகை பிடிக்குற பழக்கம் இருக்கா.... ஐ மீன் ஸ்மோக்கிங் ஹேபிட் "

" ஏ... ஏன் கேக்குறிங்க டாக்டர் " மேசை பயம் தொற்றிக்கொண்டது!

" பயப்படாதீங்க ஒரு சந்தேகத்துக்காக கேக்குறேன் "

" ம்ம்ம்... இருக்கு டாக்டர் "

" ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீங்க "

" மினிமம் இரண்டு பாக்கெட் "

" ஓகே பைன்.... பயப்படாதீங்க ஒரு சந்தேகத்துக்காக நாம ஒரு டெஸ்ட் எடுத்து பார்த்துடுவோம்... "

" என்ன டெஸ்ட் டாக்டர் "

" கேன்சர் டெஸ்ட்... இது ஒரு சந்தேகத்துக்காகதான்... நீங்க லேப்ல சேம்பல் கொடுத்துட்டு போங்க... ரிசல்ட் வர ஏழு நாளாகும்... நீங்க நெக்ஸ்ட் வீக் வாங்க "

" டாக்டர் எனக்கு கேன்சர்னு சொல்றீங்களா??? "

" ஹலோ மகேஷ் இது ஜஸ்ட் ஒரு கிளாரிபிகேஷன் அவ்வளவுதான்... நீங்க பயப்படாம போய்ட்டு வாங்க... "

************************************************************************************

இந்த ஏழு நாட்கள் மகேஷிற்கு நரகமாய் நகர்ந்தது...

மகா அவனை நெருங்கி வந்தாலும் இவன் விலகி செல்ல நிறைய மனக்கசப்புகள் இருவருக்குள்ளும்!

மகேஷ் மனதில் பயத்தை சுமந்து கொண்டு மருத்துவமனை சென்றான்!

"வாங்க மகேஷ்... "

" டாக்டர் ரிசல்ட் வந்துடுச்சா "

" ம்ம்ம்.... மகேஷ் உங்களுக்கு கல்யாணமாகிடுச்சா??? "

டாக்டர் கேட்ட கேள்வி மகேசின் பயத்தை மேலும் கூட்டியது!

" ம்ம்ம்...."என்று தலையாட்டினான் மகேஷ்!

"சாரி மகேஷ் உங்களுக்கு கேன்சர்னு ரிப்போர்ட் வந்திருக்கு "

மகேசும் மனதிற்குள் அவ்வார்த்தை பேரிடியாய் இறங்கியது!

" ஐய்யோ டாக்டர் என்ன சொல்றீங்க.... டாக்டர் நான் இப்போதான் வாழ்க்கைய வாழ ஆரம்பிச்சிருக்கேன் இதுக்குள்ள அது முடிஞ்சி போச்சினு சொன்னா எப்படி டாக்டர்.... என் குழந்தை... என் குழந்தை முகத்த கூட நான் இன்னும் பார்க்கல... அய்யோ மகாவுக்கு நான் என்ன பதில் சொல்வேன்.... டாக்டர் இது சரி பண்ண முடியாதா?  ஏதாச்சும் வழி இருக்கா டாக்டர்... நான் வாழனும் டாக்டர்... என் மகா கூட நான் வாழணும் "என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதான் மகேஷ்!

" மகேஷ் நோய் வரதுக்கு முன்னாடி நாம இதெல்லாம் யோசிக்கறதில்லை... கேன்சரை குணப்படுத்த முடியாது... மரணத்தை வேணும்னா கொஞ்ச காலம் தள்ளிப்போடலாம்...அதுவும் வலியோட"

" ஐய்யோ டாக்டர் நான் வாழனும் டாக்டர் "

" மகேஷ் உங்க வாழ்க்கை யாரால போச்சினு இப்போ தெரியுதா "

" என் அற்ப சுகத்துக்காக சிகரெட் பிடிச்சி என் வாழ்க்கையோட சேர்த்து மகா வாழ்க்கையையும் அழிச்சது சிகரெட்தான் டாக்டர் "

" சிகரெட் பிடிக்காதீங்கனு எத்தனையோ வழிமுறைல நம்ம அரசாங்கம் சொல்லுது எவன் கேக்குறிங்க.... நோய் வந்ததுக்கப்புறம் தெரிஞ்சிருந்தா நான் தொட்டிருக்க மாட்டேன்னு அழறீங்க...

இப்போ நான் சொல்றேன் நீங்க இந்த பழக்கத்த விட்டுட்டு போய் குடும்பத்தோட சந்தோசமா வாழுங்க..."

"டாக்டர் என்ன சொல்றீங்க "

" யெஸ் உங்களுக்கு கேன்சர் இல்ல... ட்ரோட் இன்பெக்சன் ஆகியிருக்கு... இது தொடர்ந்தா கேன்சர் வர வாய்ப்பிருக்கு... இதை நான் முதலே சொல்லியிருந்தா நீங்க ஆஸ்பிடட்டல்ல இருந்து வெளிய போனதும் இந்த ஏழுநாள் டென்சனை போக்க சிகரெட்ட பத்த வெச்சிருப்பீங்க... இப்போ சொல்லுங்க சிகரெட் பிடிப்பீங்களா? "

" அய்யோ டாக்டர் இனிமே மனசால கூட அந்த சனியனை நினைக்க மாட்டேன்... இது கடவுள் எனக்கு கொடுத்த இன்னொரு வாழ்க்கை "
என்று கண்களில் கண்ணீரோடு டாக்டரை கையெடுத்து கும்பிட்டான் மகேஷ்!
-----------------------------------------------------
உதட்டோடு உறவாடி உயிரை பறிக்கும்...ஆறாவது விரல் சிகரெட்! வெளியேறுவது புகை மட்டுமல்ல உங்கள் புன்னகையும்தான்!
-----------------------------------------
படித்ததைப் பகிர்ந்தேன்!

அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. Thank God, I have no such habits.Thank you Sir.

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Very important message.

    Thanks for sharing...

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. புகைப் பிடிக்கும் இளந்தாாி பசங்களுக்கு ஒரு நல்ல பாடம். எல்லோரும் தொிந்தேதான் புகைப் பிடிக்கிறாா்கள். முதலில் ஸ்டைலுக்கு என ஆரம்பித்து பிறகு பழக்கமாகி அதுவே கால ஓட்டத்தில் வழக்கமாகி விடுகிற கொடிய பழக்கமிது. தன் பிள்ளைகள் புகைப் பிடிப்பதை பாா்க்கும் போதுதான் ஒவ்வொரு தகப்பனும் நெஞ்சம் வெடிக்க வேதனைப்படுவான். புகைப்பிடிக்கும் தண்ணியடிக்கும் ஆணைத்தான் இக்காலத்திய பெண்கள் விரும்புகிறாா்கள் என வறட்டு வேதாந்தம் பேசும் மட்டமான தமிழ் சினிமாக்கள். பெண்களையும் குடிகாரா்களாக புகைப்பிடிப்பவராக காட்டும் முற்போக்குத்தனமான சினிமாக்கள்(?). எதை நொந்து கொள்வது. யாரை நொந்து கொள்வது. கட்டி கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த பாடமும் எத்தனை நாளைக்கு என்பது எனக்கு பிடித்த பழமொழிகளுள் ஒன்று.

    நன்றி
    பாபு, கோயம்புத்தூா்

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,சூப்பர் ட்விஸ்ட்.கதையா,கற்பனையா,நிஜமா என்று தெரியவில்லை.இதை படித்தால் சிகரட் பிடிப்பவர்கள் கண்டிப்பாக சிகரட்டை தொடமாட்டார்கள்.சிகரட் பிடிக்கும் மற்றும் பிடிக்காத அனைத்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  5. /////Blogger kmr.krishnan said...
    Thank God, I have no such habits.Thank you Sir.////

    வாழ்க உங்களின் நல்ல பழக்க வழக்கங்கள். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Very important message.
    Thanks for sharing...
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  7. ////Blogger நிழற்குடை said...
    புகைப் பிடிக்கும் இளந்தாாி பசங்களுக்கு ஒரு நல்ல பாடம். எல்லோரும் தொிந்தேதான் புகைப் பிடிக்கிறாா்கள். முதலில் ஸ்டைலுக்கு என ஆரம்பித்து பிறகு பழக்கமாகி அதுவே கால ஓட்டத்தில் வழக்கமாகி விடுகிற கொடிய பழக்கமிது. தன் பிள்ளைகள் புகைப் பிடிப்பதை பாா்க்கும் போதுதான் ஒவ்வொரு தகப்பனும் நெஞ்சம் வெடிக்க வேதனைப்படுவான். புகைப்பிடிக்கும் தண்ணியடிக்கும் ஆணைத்தான் இக்காலத்திய பெண்கள் விரும்புகிறாா்கள் என வறட்டு வேதாந்தம் பேசும் மட்டமான தமிழ் சினிமாக்கள். பெண்களையும் குடிகாரா்களாக புகைப்பிடிப்பவராக காட்டும் முற்போக்குத்தனமான சினிமாக்கள்(?). எதை நொந்து கொள்வது. யாரை நொந்து கொள்வது. கட்டி கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த பாடமும் எத்தனை நாளைக்கு என்பது எனக்கு பிடித்த பழமொழிகளுள் ஒன்று.
    நன்றி
    பாபு, கோயம்புத்தூா்/////

    அந்தப் பழமொழி உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,சூப்பர் ட்விஸ்ட்.கதையா,கற்பனையா,நிஜமா என்று தெரியவில்லை.இதை படித்தால் சிகரட் பிடிப்பவர்கள் கண்டிப்பாக சிகரட்டை தொடமாட்டார்கள்.சிகரட் பிடிக்கும் மற்றும் பிடிக்காத அனைத்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.நன்றி.////

    அப்படியே செய்யுங்கள். நன்றி ஆதித்தன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com