மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

23.12.16

Astrology: Jothidam: அலசல் பாடம்: நீசமான கிரகத்தின் திசை நன்மை செய்யுமா? அல்லது செய்யாதா?

Astrology: Jothidam: அலசல் பாடம்: நீசமான கிரகத்தின் திசை நன்மை செய்யுமா? அல்லது செய்யாதா?

ஜோதிடம் கற்றுக்கொள்ளும் அனைவருக்கும் ஏற்படும் ஒரு சந்தேகம்., ஒரு கிரகம் ஜாதகத்தில் நீசமடைந்திருந்தால், அதனால் பயன் இல்லை என்கிறார்களே, அதே கிரகத்தின் மகா திசை எப்படி இருக்கும்?

அதி ஒரு உதாரண ஜாதகத்துடன் இன்று பார்ப்போம்!
-------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்

ஜாதகர் 1969 ஆம் ஆண்டு பிறந்தவர். சிம்ம லக்கின ஜாதகம். அவிட்ட நட்சத்திரம்.
1. லக்கினாதிபதி சூரியன் 11ல் (லாப ஸ்தானத்தில்)
2. இரண்டில் குரு. ஆனால் உடன் கேதுவும் உள்ளார்.
3. சிம்ம லக்கினத்திற்கு யோக காரகனான செவ்வாய் கேந்திரத்தில் (4ல்) உள்ளார்
4. விரையாதிபதி சந்திரன் ஏழில் அமர்ந்து லக்கினத்தின் மேல் தன் பார்வையைச் செலுத்துகிறார்.
5. ஒன்பதாம் இடத்தில் (பாக்கியஸ்தானத்தில்) சனீஷ்வரன். ஆனால் அவர் நீசமாகியுள்ளார்
6. பத்தில் சுக்கிரனும், புதனும்.

ஜாதகனின் 36ஆவது வயதில் சனி மகா திசை ஆரம்பம். கேள்வி இதுதான். அந்தத் திசை ஜாதகனுக்கு நன்மை செய்யுமா? அல்லது கேடு செய்யுமா?
கேள்வி இரண்டு: ஜாதகனுக்கு அந்தத் திசையில் வீடு வாங்கும் பாக்கியம் உள்ளதா?

சனி நீசமானாலும் திரிகோண ஸ்தானத்தில் (9ல்) உள்ளார். அத்துடன் வேறு தீய கிரகங்களின் கூட்டணியோ பார்வையோ இல்லாமல் இருக்கிறார். ஆகவே அவர் நன்மையைச் செய்வார். ஒன்பதாம் இடத்தின் வலிமை அப்படி.

ஜாதகனுக்கு (அவிட்ட நட்சத்திரம்) முதல் திசை செவ்வாய் திசை. இரண்டாவதாக ராகு திசை. மூன்றாவதாக குரு மகா திசை. சனி திசை 4ஆவது திசையாகும். ஜோதிடத்தை வகுத்த முனிவர்களின் கணக்குப்படி நான்காவதாக வரும் சனி திசை நன்மையைச் செய்யாது.

இரண்டு ஜோதிட விதிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், பெரிய அளவில் நன்மைகள் இல்லாவிட்டாலும், கெடுதல் இருக்கது. அதாவது சராசரியாக இருக்கும். பயப்படத்தேவையில்லாத நிலைமை!

சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய், இடம் வீடுகளுக்கு உரிய நான்காம் வீட்டில் இருப்பதால், ஜாதகனுக்கு வீடு வாங்கும் பாக்கியம் உண்டு.

செவ்வாய் சுக்கிரனின் வலுவான பார்வையுடன் இருப்பதால், சனி திசை சுக்கிரபுத்தியில் ஜாதகனின் அந்த ஆசை நிறைவேறும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20 comments:

C Jeevanantham said...

அருமையான விளக்கம் ஐயா

எளிதில் புரிந்து கொண்டேன்.

மிக்க நன்றி ஐயா.

VM. Soosai Antony said...

வணக்கம் ஐயா,
பாடம் அருமை ஒரு சின்ன சந்தேகம். சனீஸ்வரரும் சுக்ரனும் 1/12 ஆக அல்லவா இருக்கிறார்கள். நன்றி

moorthy krishnan said...

வணக்கம் ஐயா நான் கடந்த சில மாதங்களாக படித்து கொண்டிருக்கிறேன் மிகவும் எளிமையாகவும் புரியும்Uடியும் உள்ளது
தங்களின் வழிகாட்டழுக்கும்
மிக்க நன்றியுடன்
மூர்த்தி

Shivamurugan S said...

Neecha Graha desai should not be good,even if its in good placement too. But here it is neecha banga. he will face many trouble in life at desai starting period. after wards he relieve from those problems one by one.we can say more about what type of troubles,if would know natchatira saaram of Saturn.

Thanks
S.Shivamurugan

jaichandhran kapali said...

ஐயா இந்த பாதிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . அஸ்தங்கம் ஆன கிரகத்தின் திசை எப்படி இருக்கும் ?

adithan said...

வணக்கம் ஐயா,ஜாதக விளக்கம் சிறப்பாக இருந்தது.நீசமான கிரகம்,நல்ல நிலையில் இருந்தால்,அதன் தசாவில் பாதிப்பு அதிகம் இருக்காது என புரிந்தது. நன்றி.

Subbiah Veerappan said...

/////Blogger C Jeevanantham said...
அருமையான விளக்கம் ஐயா
எளிதில் புரிந்து கொண்டேன்.
மிக்க நன்றி ஐயா./////

நல்லது. நன்றி ஜீவானந்தம்!

Subbiah Veerappan said...

/////Blogger VM. Soosai Antony said...
வணக்கம் ஐயா,
பாடம் அருமை ஒரு சின்ன சந்தேகம். சனீஸ்வரரும் சுக்ரனும் 1/12 ஆக அல்லவா இருக்கிறார்கள். நன்றி////

அப்படி இருந்தாலும் சிம்ம லக்கினத்திற்கு யோகாகாரகனான செவ்வாயின் நேரடிப்பார்வையில் சுக்கிரன் இருப்பதைக் கவனீத்தீர்களா?

Subbiah Veerappan said...

/////Blogger moorthy krishnan said...
வணக்கம் ஐயா நான் கடந்த சில மாதங்களாக படித்து கொண்டிருக்கிறேன் மிகவும் எளிமையாகவும் புரியும்Uடியும் உள்ளது
தங்களின் வழிகாட்டலுக்கும்
மிக்க நன்றியுடன்
மூர்த்தி////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger Shivamurugan S said...
Neecha Graha desai should not be good,even if its in good placement too. But here it is neecha banga. he will face many trouble in life at desai starting period. after wards he relieve from those problems one by one.we can say more about what type of troubles,if would know natchatira saaram of Saturn.
Thanks
S.Shivamurugan/////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger jaichandhran kapali said...
ஐயா இந்த பாதிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . அஸ்தங்கம் ஆன கிரகத்தின் திசை எப்படி இருக்கும் ?////

அதை இன்னொரு நாள் - நேரம் கிடைக்கும்போது அலசுவோம்!

Subbiah Veerappan said...

Blogger adithan said...
வணக்கம் ஐயா,ஜாதக விளக்கம் சிறப்பாக இருந்தது.நீசமான கிரகம்,நல்ல நிலையில் இருந்தால்,அதன் தசாவில் பாதிப்பு அதிகம் இருக்காது என புரிந்தது. நன்றி.

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!

Vasanth said...

Sir what happens when the first beneficiary planet is occupied in 3,6,8,12 position along with the good planet.(ex.Venus in mithunam along with the house lord mercury...) Does the planet have good effects sir...thanks

aarthi arunachalam said...

iyya! good lesson.

I have a doubt iyya , is it posiible to find jenma raasi and nakshatra from birth chart?

jayakumar M said...

செவ்வாய், சுக்ரன் வலுவாக இருப்பதால் வீடு யோகம் இருக்கலாம். ஆனால் நீச்ச சனி எந்த பலனையும் தர முடியாது என்றே தோன்றுகிறது. பாசத்துடன் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.
புத்தி நாதர்களின் ஆதிக்கமே அதிகம் இருக்க முடியும். சனி பார்வை சூரியன் மேல். தந்தை மகன் உறவு...??
சனி திசை சனி புத்தி....?? சிம்ம லக்னத்திற்கு சனி உச்சமாக இருந்து 9ம் வீட்டை பாத்தாலே சனி திசையில் நீச்ச கிரக புத்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். 14 வருடமாக பல்வேறு அனுபவங்களை சனி திசையில் அனுபவதித்து கொண்டிருக்கிறேன். 18 வயதில் ஆரம்பித்த சனி திசை உடல்நலத்தை பாதித்து 1 மாதத்தில் சரி செய்தது. அரசு கல்லூரயில் சேர வாய்ப்பு இருந்தும் தனியார் கல்லூரியில் சேர நேர்ந்தது. கஷ்ட்டத்தை கொடுத்து வெற்றியும் கொடுத்தது. ஒருதலை காதலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தோல்வியை கொடுத்தது. 2வருடம் சுமாரான கம்பனியில் கஷ்ட்டப்பட்டு வேலையில் விருப்ப பட்டு வேலை செய்ய வேண்டியிருந்தது. அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைத்தது தந்தை வழி உறவினர் மூலம். மென்பொருள் துறை வேலை கிடைத்தும் ஏற்க்க மனம் இல்லை. பிறகு நீண்ட முயர்ச்சிக்கு பின் நல்ல வேலை வீட்டிற்க்கு அருகில் 20km கிடைத்தது.திருமணத்திற்கு ஒப்புதல் தந்த 3 மாதத்தில் அப்பா அம்மாவின் முயற்ச்சியில் திருமணம் நடந்த்து. சுருக்கமாக சொன்னால் படிப்பு,வேலை,திருமணம், வீடு, குழந்தை கிடத்தது. பல்வேறு அனுபவங்களை கொடுத்த பின்பே நன்மைகளை தந்தது. கடந்த இரண்டுவருடத்தில் நிறைய கோவிலுக்கு அப்பாவுடன் செல்ல முடிந்தது. குல தெய்வம்,பெருமாள்,பழனி,திருப்பதி etc. கடைசியாக ஆவணி மாதம் ராமேஸ்வரம் ,திருச்சந்தூர் சென்று வீடு திரும்பினோம்.
வீடு திரும்பிய இரண்டு நாளில் பணி ஓய்வு பெற ஒரு நாள் மட்டுமே இருந்த நேரத்தில் சஷ்டி திதியில் திடீரென முருகனடி சேர்ந்தார். இதுவரை எனது அனைத்து வெற்றியிலும் 85% பங்களிப்பை தந்து 32 வருடம் மிக மிக உறுதுணையாக இருந்த தந்தையை எனக்கு நடந்த சனி திசையில் நீச்ச ராகு புத்தி ஆரம்பித்த 12 நாளில் இழந்தேன். 18 வருடங்களாக பெருமாள் மற்றும் அனுமனுக்கு சேவை செய்த அப்பாவிற்க்கு நடந்த அஷ்டம சனி எதுவும் செய்யாது என்று நம்பினோம். இறப்பதற்கு ஒரு மாதம் முன்பிருந்தே 15 ற்க்கும் மேற்ப்பட்ட குரங்குகள் வீட்டிற்க்கு வந்து இருந்தன எவ்வளவு துறத்தியும் போகவே இல்லை. அப்பாவிற்க்கு நடந்த புதன் திசை புத்தியில் ராகு புத்தியில் இந்த நீங்காத துயரம் நடந்தது.
8 வருடங்களுக்கு முன்பே ஜோதிடர்கள் சொன்னார்கள் 58 வயதில் பெரிய கண்டம் இருக்கிறது என்று. கடைசி ஒருமாத்த்தில் ஏதோ நடக்க போகிறது என்பதை உணர முடிந்தது. ராகு கவசம், கேது,சனி கவசம் etc எல்லாம் துதித்தும் எதையும் தடுக்க முடியவில்லை. ராமேஷ்வர தீர்த்தம் எடுத்துக்கொண்டு அக்கா வீட்டிற்கு சென்றவர், மாரடைப்பு வர சாத்தியமே இல்லாதவருக்கு வந்தது. 1 மணி நேரத்தில் எந்த வாய்ப்பையும் தராமல் காலன் கடுமையாக தண்டித்துவிட்டான்.
(அப்பா 12.08.1958, 10.30pm, salem)
எனது 04.08.1984, 04.08.1984,8am, Salem)

Subbiah Veerappan said...

/////Blogger Vasanth said...
Sir what happens when the first beneficiary planet is occupied in 3,6,8,12 position along with the good planet.(ex.Venus in mithunam along with the house lord mercury...) Does the planet have good effects sir...thanks//////

12ல் இருந்தாலும் யோககாரகனின் பார்வை பெறும்போது நல்லதை அது செய்யும் சுவாமி!

Subbiah Veerappan said...

////Blogger aarthi arunachalam said...
iyya! good lesson.
I have a doubt iyya , is it posiible to find jenma raasi and nakshatra from birth chart?////

முடியும்! உங்கள் பிறப்பு விபரத்தை அனுப்புங்கள். ஜன்ம லக்கினம், நட்சத்திரம், ராசி ஆகிய மூன்றையும் நான் சொல்கிறேன்!

Subbiah Veerappan said...

/////Blogger jayakumar M said...
செவ்வாய், சுக்ரன் வலுவாக இருப்பதால் வீடு யோகம் இருக்கலாம். ஆனால் நீச்ச சனி எந்த பலனையும் தர முடியாது என்றே தோன்றுகிறது. பாசத்துடன் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.
புத்தி நாதர்களின் ஆதிக்கமே அதிகம் இருக்க முடியும். சனி பார்வை சூரியன் மேல். தந்தை மகன் உறவு...??
சனி திசை சனி புத்தி....?? சிம்ம லக்னத்திற்கு சனி உச்சமாக இருந்து 9ம் வீட்டை பாத்தாலே சனி திசையில் நீச்ச கிரக புத்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். 14 வருடமாக பல்வேறு அனுபவங்களை சனி திசையில் அனுபவதித்து கொண்டிருக்கிறேன். 18 வயதில் ஆரம்பித்த சனி திசை உடல்நலத்தை பாதித்து 1 மாதத்தில் சரி செய்தது. அரசு கல்லூரயில் சேர வாய்ப்பு இருந்தும் தனியார் கல்லூரியில் சேர நேர்ந்தது. கஷ்ட்டத்தை கொடுத்து வெற்றியும் கொடுத்தது. ஒருதலை காதலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தோல்வியை கொடுத்தது. 2வருடம் சுமாரான கம்பனியில் கஷ்ட்டப்பட்டு வேலையில் விருப்ப பட்டு வேலை செய்ய வேண்டியிருந்தது. அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைத்தது தந்தை வழி உறவினர் மூலம். மென்பொருள் துறை வேலை கிடைத்தும் ஏற்க்க மனம் இல்லை. பிறகு நீண்ட முயர்ச்சிக்கு பின் நல்ல வேலை வீட்டிற்கு அருகில் 20km கிடைத்தது.திருமணத்திற்கு ஒப்புதல் தந்த 3 மாதத்தில் அப்பா அம்மாவின் முயற்ச்சியில் திருமணம் நடந்த்து. சுருக்கமாக சொன்னால் படிப்பு,வேலை,திருமணம், வீடு, குழந்தை கிடத்தது. பல்வேறு அனுபவங்களை கொடுத்த பின்பே நன்மைகளை தந்தது. கடந்த இரண்டுவருடத்தில் நிறைய கோவிலுக்கு அப்பாவுடன் செல்ல முடிந்தது. குல தெய்வம்,பெருமாள்,பழனி,திருப்பதி etc. கடைசியாக ஆவணி மாதம் ராமேஸ்வரம் ,திருச்சந்தூர் சென்று வீடு திரும்பினோம்.
வீடு திரும்பிய இரண்டு நாளில் பணி ஓய்வு பெற ஒரு நாள் மட்டுமே இருந்த நேரத்தில் சஷ்டி திதியில் திடீரென முருகனடி சேர்ந்தார். இதுவரை எனது அனைத்து வெற்றியிலும் 85% பங்களிப்பை தந்து 32 வருடம் மிக மிக உறுதுணையாக இருந்த தந்தையை எனக்கு நடந்த சனி திசையில் நீச்ச ராகு புத்தி ஆரம்பித்த 12 நாளில் இழந்தேன். 18 வருடங்களாக பெருமாள் மற்றும் அனுமனுக்கு சேவை செய்த அப்பாவிற்க்கு நடந்த அஷ்டம சனி எதுவும் செய்யாது என்று நம்பினோம். இறப்பதற்கு ஒரு மாதம் முன்பிருந்தே 15 ற்க்கும் மேற்ப்பட்ட குரங்குகள் வீட்டிற்க்கு வந்து இருந்தன எவ்வளவு துறத்தியும் போகவே இல்லை. அப்பாவிற்க்கு நடந்த புதன் திசை புத்தியில் ராகு புத்தியில் இந்த நீங்காத துயரம் நடந்தது.
8 வருடங்களுக்கு முன்பே ஜோதிடர்கள் சொன்னார்கள் 58 வயதில் பெரிய கண்டம் இருக்கிறது என்று. கடைசி ஒருமாத்த்தில் ஏதோ நடக்க போகிறது என்பதை உணர முடிந்தது. ராகு கவசம், கேது,சனி கவசம் etc எல்லாம் துதித்தும் எதையும் தடுக்க முடியவில்லை. ராமேஷ்வர தீர்த்தம் எடுத்துக்கொண்டு அக்கா வீட்டிற்கு சென்றவர், மாரடைப்பு வர சாத்தியமே இல்லாதவருக்கு வந்தது. 1 மணி நேரத்தில் எந்த வாய்ப்பையும் தராமல் காலன் கடுமையாக தண்டித்துவிட்டான்.
(அப்பா 12.08.1958, 10.30pm, salem)
எனது 04.08.1984, 04.08.1984,8am, Salem)//////

உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே!

selvaspk said...

Sir,

1)
9th House lord (Mars) in Kendra & own house make Saturn debilitation to neechabanga thus nullify debilitation.

How will this be a true example of fully debilitated planetary example horoscope?

2. Is it true:
Any planets situated in trikona or trikona lord dasa will always do good to normal and never damage.

Subbiah Veerappan said...

///Blogger selvaspk said...
Sir,
1)
9th House lord (Mars) in Kendra & own house make Saturn debilitation to neechabanga thus nullify debilitation.
How will this be a true example of fully debilitated planetary example horoscope?
2. Is it true:
Any planets situated in trikona or trikona lord dasa will always do good to normal and never damage./////

சனி நீசமானாலும் திரிகோண ஸ்தானத்தில் (9ல்) உள்ளார். அத்துடன் வேறு தீய கிரகங்களின் கூட்டணியோ பார்வையோ இல்லாமல் இருக்கிறார். ஆகவே அவர் நன்மையைச் செய்வார். ஒன்பதாம் இடத்தின் வலிமை அப்படி.”
என்று எழுதியுள்ளேனே சுவாமி!