மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.11.16

எது உலக அதிசயம் ?


எது உலக அதிசயம் ?

நான் தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தேன். பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் என்னுடன் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள். தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்?

தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா. ஏன்? இல்லை. நிறையவே இருக்கிறது.

சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.

நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம்.

திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான Positions ல இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம்.

அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட. இந்த அதிசய சிற்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை.

இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும்.  எவ்வளவு துல்லியமாக Measure செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். வட சென்னையில் உள்ள வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிற்ப்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால். அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.

ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம். யாழி என்கிற மிருகத்தின் சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழம்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.

இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் உருவ முடியாது. இந்த வித்தையை இன்று எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை. அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்குவது. இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது.

அது போல் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.அன்றைய ராணிகளுக்காகவே கட்டப்பட்ட கிணறு அது.

அது போல் அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்களில் மரகதகற்கள் பதித்துள்ளனர். அதனால் வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிரும். வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்கும்.

அது போல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும் படைவீரர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர். மறத்தமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம்.
தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம்.

முன்னோா்களின் திறமையையும், கலைநயத்தையும் போற்றித் தலை வணங்குவோம்

இம்மண்ணில் பிறந்தமைக்கு பெருமிதம் கொள்வோம்.
------------------------------------------------
படித்ததைப் பகிர்ந்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. Respected sir,

    Good morning sir. Thank you for your great message on our fore fathers' civil techniques and related activities. No Developed countries can do this wonder even now. Great Great. Once again thank you for your unknown messages.


    with kind regards,

    Visvanathan N

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Good article...

    I came to know many information while reading this article.

    Have a great day.

    Thanks & regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. /////Blogger kmr.krishnan said...
    Very much true Sir./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  4. /////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Good morning sir. Thank you for your great message on our fore fathers' civil techniques and related activities. No Developed countries can do this wonder even now. Great Great. Once again thank you for your unknown messages.
    with kind regards,
    Visvanathan N/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்!!

    ReplyDelete
  5. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Good article...
    I came to know many information while reading this article.
    Have a great day.
    Thanks & regards,
    Ravi-avn/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!


    ReplyDelete
  6. வணக்கம் குருவே!
    கலைநயத்துக்கும், கட்டிடக்கலைக்கும் மட்டுமல்ல, அதற்கும் அப்பாற்பட்டு எத்தனையோ விந்தைகளை தன்னகத்தே கொண்டிருந்தாரே நம் முன்னோர்கள், அவையெல்லாமே வெளியிடப்படாத உலக அதிசயங்கள் தான் என உணரப்படுகிறது!

    ReplyDelete
  7. அன்புள்ள வாத்தியார் அய்யா, இதே கருத்தை நான் எனது பல நண்பர்களிடம் கூறியிருக்கிறேன். நெல்லையப்பர் கோவில் எங்கள் வீட்டில் இருந்து நடந்தால் 5 நிமிடங்களில் வந்து விடும். சிறு வயது முதல் அந்த பிரம்மாண்டத்தை பார்த்து வியந்திருக்கிறேன். இப்போது என் மகளும் அதை பார்த்து வியக்கிறார். திருப்பூர் ஆலயம் மற்றும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மேல் மாலை போல் விழுவது நான் அறியாதது. அந்த தகவலை தந்ததற்கு நன்றி.

    நான் தாஜ்மகாலை நேரில் கண்டதில்லை. கண்டவர்கள் சொல்ல கேள்வியுற்றிருக்கிறேன். அது உலக அதிசயமானதற்கு வேறு யாரும் காரணமல்ல, நமது ஆட்சியாளர்களே காரணம். தமிழனின் மாண்பை இருட்டடிப்பு செய்து முகலாயர்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்ற நடந்த திட்டமிட்ட சதி. இன்றும் நமது ஆட்சியாளர்கள் தமிழனின் பெருமையை மறைக்கும் வேலையையே செய்கின்றனர்.

    சரி, தாஜ்மகால் சிறந்த கட்டிடமாகவே இருக்கட்டும். அது அன்பின் சின்னம் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. தனது காதலிக்காக அதை எழுப்பிய ஷாஜஹான் பிறகு செய்தது என்ன? அதை கட்டியவர்களின் விரல்களை பிடுங்கியதே. அந்த பாவத்திற்குதான், தனது மகன் கொடுங்கோலன் அவுரங்கசீபினால் சிறை வைக்கப்பட்டு சிறையிலேயே வாடி வதங்கி இறந்து போனான். தாஜ்மகால் ஒரு கல்லறை அவ்வளவே.

    நமது கட்டிடங்கள் போற்றத்தக்கவை மட்டுமல்ல, வணங்கத்தக்கவை.

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா,நமக்குத்தான் வெளிநாட்டுக்காரனை பார்த்தால் மரியாதை,வேற்று மொழி பேசுபவனிடம் மரியாதை,வெள்ளை தோலிடமும் மரியாதை.இவ்வளவு பாரம்பரியம் மிக்க தமிழன் ஏன்தான் இப்படி பெருமையிழந்து போனானோ?.நல்லவேளை இதுபோன்ற பதிவுகளைப் படித்தாவது உணர்வு பெறட்டும்.நன்றி.

    ReplyDelete
  9. பள்ளி குழந்தைகளுக்கு இவ்வித தகவல்கள் சென்று சேர வேண்டும்...நம் பாரம்பரியத்தை வென்றது எதுவுமில்லை என்பதை சிறுவயதிலேயே புகுத்த வேண்டும். நல்லதொரு முயற்சி..பகிர்ந்தமைக்கு நன்றி..

    ReplyDelete
  10. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    கலைநயத்துக்கும், கட்டிடக்கலைக்கும் மட்டுமல்ல, அதற்கும் அப்பாற்பட்டு எத்தனையோ விந்தைகளை தன்னகத்தே கொண்டிருந்தாரே நம் முன்னோர்கள், அவையெல்லாமே வெளியிடப்படாத உலக அதிசயங்கள் தான் என உணரப்படுகிறது!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  11. ////Blogger thozhar pandian said...
    அன்புள்ள வாத்தியார் அய்யா, இதே கருத்தை நான் எனது பல நண்பர்களிடம் கூறியிருக்கிறேன். நெல்லையப்பர் கோவில் எங்கள் வீட்டில் இருந்து நடந்தால் 5 நிமிடங்களில் வந்து விடும். சிறு வயது முதல் அந்த பிரம்மாண்டத்தை பார்த்து வியந்திருக்கிறேன். இப்போது என் மகளும் அதை பார்த்து வியக்கிறார். திருப்பூர் ஆலயம் மற்றும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மேல் மாலை போல் விழுவது நான் அறியாதது. அந்த தகவலை தந்ததற்கு நன்றி.
    நான் தாஜ்மகாலை நேரில் கண்டதில்லை. கண்டவர்கள் சொல்ல கேள்வியுற்றிருக்கிறேன். அது உலக அதிசயமானதற்கு வேறு யாரும் காரணமல்ல, நமது ஆட்சியாளர்களே காரணம். தமிழனின் மாண்பை இருட்டடிப்பு செய்து முகலாயர்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்ற நடந்த திட்டமிட்ட சதி. இன்றும் நமது ஆட்சியாளர்கள் தமிழனின் பெருமையை மறைக்கும் வேலையையே செய்கின்றனர்.
    சரி, தாஜ்மகால் சிறந்த கட்டிடமாகவே இருக்கட்டும். அது அன்பின் சின்னம் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. தனது காதலிக்காக அதை எழுப்பிய ஷாஜஹான் பிறகு செய்தது என்ன? அதை கட்டியவர்களின் விரல்களை பிடுங்கியதே. அந்த பாவத்திற்குதான், தனது மகன் கொடுங்கோலன் அவுரங்கசீபினால் சிறை வைக்கப்பட்டு சிறையிலேயே வாடி வதங்கி இறந்து போனான். தாஜ்மகால் ஒரு கல்லறை அவ்வளவே.
    நமது கட்டிடங்கள் போற்றத்தக்கவை மட்டுமல்ல, வணங்கத்தக்கவை.//////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி பாண்டியன்!

    ReplyDelete
  12. ///////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,நமக்குத்தான் வெளிநாட்டுக்காரனை பார்த்தால் மரியாதை,வேற்று மொழி பேசுபவனிடம் மரியாதை,வெள்ளை தோலிடமும் மரியாதை.இவ்வளவு பாரம்பரியம் மிக்க தமிழன் ஏன்தான் இப்படி பெருமையிழந்து போனானோ?.நல்லவேளை இதுபோன்ற பதிவுகளைப் படித்தாவது உணர்வு பெறட்டும்.நன்றி.////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  13. ////Blogger dearsreeni said...
    பள்ளி குழந்தைகளுக்கு இவ்வித தகவல்கள் சென்று சேர வேண்டும்...நம் பாரம்பரியத்தை வென்றது எதுவுமில்லை என்பதை சிறுவயதிலேயே புகுத்த வேண்டும். நல்லதொரு முயற்சி..பகிர்ந்தமைக்கு நன்றி../////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com