மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

21.11.16

Humour: நகைச்சுவை: பணத் தட்டுப்பாட்டை மறந்துவிட்டு சிரித்து வைப்போம் வாங்க!

 
Humour: நகைச்சுவை: பணத் தட்டுப்பாட்டை மறந்துவிட்டு சிரித்து வைப்போம் வாங்க!
பதிவிட்டுள்ளவை எல்லாம் சிரிக்க மட்டுமே: வேறு விவகாரம் வேண்டாம்!
-----------------------------------------------------------------------
1
ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்:

"ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை."

இதற்கு மனைவி சொன்ன பதில்:

"அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?"
--------------------------------------------------
2
தாய் - ஜோசியரே, எவ்வளவு பரிகாரம் செய்தும், என் பையன் வெளிநாடு செல்வது தடைபட்டே வருதே..?

ஜோசியர் - பெயரை மோடின்னு மாத்திப் பாருங்களேன்..
--------------------------------------------------
3
 ( தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்...)  

"டேய் மச்சான்... எங்கடா இருக்க?"  

"வீட்லதான்டா இருக்கேன்..."  

"அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!"  

"ஏன்டா? என்ன விஷயம்??"

"அதில்லடா..... காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்-காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தோ போயிட்டேன்....."
--------------------------------------------
4
அம்மா: என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே
நல்லாவா இருக்கு

மகள் : தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!
-------------------------------------------------------
5
நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்…
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்…. பாப்பா நடந்து வருவியாம்.

வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்…
------------------------------------------
6
“ஏன் ஸ்கூட்டரை திருடினே…?”

“டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!”
------------------------------------------------
7
 பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?”

“தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?”

“இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்.!”
--------------------------------------------------
8
 முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ கடையைப் பார்த்துக்க…

முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே!
----------------------------------------------------
9
"என் ஒய்ஃபு என்னைய ₹2000/- நோட்டு மாதிரி பாத்துக்கறா..!"

"அவ்ளோ மரியாதையாவா?"

"ம்க்கும்... 'உங்கள மாத்தவும் முடில...தூக்கிப் போடவும் முடில'ன்னு திட்றாய்யா!"
----------------------------------------------------
10
மனைவி :- நான் ஷாப்பிங் போறேன், உங்களுக்கு எதாவது வேணுமா?

கணவன் :- எனக்கு அறிவுக்கான விளக்கமும் என் வாழ்வில் அதற்கான தேவையைப் பற்றியும் தெரியவேண்டும். என் மனம் நிறைவடைந்திருப்பதை உணரவேண்டும், கடவுளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு என்னைச்சுற்றியுள்ள தெய்வீக சக்தியை உணரவேண்டும்

மனைவி_:- குவாட்டரா, ஆப்பா ரெண்டுல எதுவேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க...!!!
---------------------------------------------------------------
இந்தப் பத்தில் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்

==========================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7 comments:

ravichandran said...

Respected Sir,

Happy morning... 2 and 4 are excellent.

Have great day.

Thanks & Regards,
Ravi-avn

adithan said...

வணக்கம் ஐயா,ஒன்று முதல் பத்துவரை எல்லாமே புதியவையாகவும் நல்ல நகைச்சுவையாகவும் இருந்தன.நன்றி.

வரதராஜன் said...

அன்புள்ள குருவே!
வணக்கம் 4,5 நகைச்சுவை நல்ல டாப் கிளாஸ்!

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... 2 and 4 are excellent.
Have great day.
Thanks & Regards,
Ravi-avn/////

நல்லது. நன்றி அவனாசி ரவி!

Subbiah Veerappan said...

//////Blogger adithan said...
வணக்கம் ஐயா,ஒன்று முதல் பத்துவரை எல்லாமே புதியவையாகவும் நல்ல நகைச்சுவையாகவும் இருந்தன.நன்றி.////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
அன்புள்ள குருவே!
வணக்கம் 4,5 நகைச்சுவை நல்ல டாப் கிளாஸ்!/////

நல்லது. நன்றி வரதராஜன்!

வேப்பிலை said...

யாத்திரை.. அதனால் குழுவில் பதில் பதிய முடியவில்லை..