மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.11.16

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: இருதய நோயால் (Heart Disease) அவதிப்பட்ட ஜாதகர், என்ன செய்தார்?


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: இருதய நோயால் (Heart Disease) அவதிப்பட்ட ஜாதகர், என்ன செய்தார்?

ஜாதகருக்கு இருதய நோய். ஆயுளைப் பற்றிக் கவலை. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள்
பரிந்துரைக்க, ஜாதகருக்கு அதில் விருப்பம் இல்லை. என்ன நடந்தது?

ஜாதகர் 1939ஆம் ஆண்டில் பிறந்தவர். 62 வயதில் கடுமையான இருதய நோய் ஏற்பட்டது. குரு திசை முடியும் தருவாயில் இது நடந்தது.

Chart

கன்னி லக்கின ஜாதகர். லக்கினாதிபதி புதன் 12ல். ஆறாம் வீட்டுக்காரன் சனி நீசம் பெற்றுள்ளான். குருவின் நேரடிப் பார்வையில் லக்கினம். சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய 4ல்வரும் சேர்ந்துள்ளார்கள்

இருதயத்திற்கு உரிய வீடு நான்காம் வீடு. இந்த ஜாதகத்தில் தனுசு நான்காம் வீடு. அதன் அதிபதி குரு வக்கிரம் பெற்றிருந்தாலும் தனது சொந்த வீட்டில் ஆச்சி பலத்துடன் இருக்கிறார். அத்துடன் லக்கினத்தைத் தன் நேரடிப்பார்வையில் வைத்துள்ளார்.

முதல் நிலை சுபக்கிரகமான் குருவின் லக்கினப் பார்வையால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. இந்த அமைப்பு உள்ளவர்கள் கவலைப் படத்தேவையில்லை.

சந்திரனில் இருந்து (சந்திர ராசியில் இருந்து) நான்காம் வீடு விருச்சிகம். அதன் அதிபதி செவ்வாய் மகர வீட்டில். மகர வீட்டின் நாதன் சனீஸ்வரனின் பார்வை (பத்தாம் பார்வை) அவரின் மேல் அழுத்தமாகப் பதிகின்றது. சனி லக்கினத்தில் இருந்து ஐந்து மற்றும் ஆறுக்குரியவன்

உடல்காரகன் சூரியன் 12ல். ஆனால் அது அவருக்கு சொந்தவீடாகையால் ஆட்சி பலத்துடன் உள்ளார். ஆனால் சூரியனின் மீது செவ்வாயின் பார்வை உள்ளது (8ஆம் பார்வை) ஆகவே ஜாதகர் சர்ஜெரி செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். ஜாதகத்தில் சனி திசை சனி புத்தியில் (சுய புத்தியில்) இந்தப் பிரச்சினை ஏற்பட்டது. சனியின் மீது செவ்வாயின் பார்வை விழுகிறது (4ஆம் பார்வை)

மருத்துவர்கள் சர்ஜெரி’க்குப் பரிந்துரைத்தார்கள். ஆனால் அவர் துணிச்சலுடன் செய்துகொள்ளவில்லை. (செய்து கொள்ளாமல் இருப்பதற்கும் துணிச்சல் வேண்டும்)

ஆனால் அந்தக் குறிப்பிட்ட தசா புத்தி முடிந்ததும், அவர் சற்று உடல் நலம் தேறினார். மருந்துகளின் உதவியினால் காலத்தை ஓட்டினார். நீண்ட நாட்கள் வாழ்ந்தார். எல்லாம் குரு பகவானின் கருணை!

நீண்ட ஆயுள் கொண்டவர்கள் அறுவை சிகிச்சை செய்துகொண்டாலும் சரிதான். அறுவை சிகிச்சை செய்து கொள்ளா விட்டாலும் சரிதான். ஆயுள் காலத்தில் மாற்றம் ஏற்படாது.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. வணக்கம். நல்ல அலசல்.
    இந்த ஜாகத்தில் செவ்வாய், சனி பரிவர்த்தனை. செவ்வாய் மகர ராசியில் உச்சம் சனி மேஷ ராசியில் நீசம். ஆகையினால் நீச பங்க யோகம் காரணமாக கூட தைரியமாக முடிவு எடுத்து இருக்கலாம் இல்லையா.
    சந்திர ராசியிலிருந்து 4 ம் வீட்டு அதிபதி செவ்வாய் உச்சம். செவ்வாய் தைரியத்தை கொடுப்பவர்.
    என்னுடைய சந்தேகம் :
    சனியின் 7ம் பார்வை 4 ம் வீட்டின் மீது இருந்து, 4 ம் வீட்டு அதிபதி குருவின் 5 ம் பார்வை சனியின் மீது இருந்தால் சனி தசையில் ஜர்சரியில்லாமல் இருக்குமா. தனுர் லக்கினம். குரு லக்கனாதிபதி.குரு 6ம் வீட்டில் அமர்ந்துள்ளார்.
    என் நன்பருக்கு 2 மாதத்தில் சனி தசை ஆரம்பம்.


    ReplyDelete
  2. ஐயா வணக்கம்,
    கன்னி லக்ன ஜாதகருக்கு குரு 9ல் பகை பெற்று லக்கனத்தை பார்த்தாலும் தீர்க்க ஆயுளா ஐயா

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,சந்திர ராசியில் இருந்தும் பலன் சொல்லப்பட்டதால் புரிந்து கொள்ள கொஞ்சம் கடினமாக உள்ளது.திரும்ப படித்து புரிந்து கொள்ள முயற்ச்சிக்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  4. கன்னி இலக்கினத்திற்கு, 3 மற்றும் 8ம் வீட்டுக்கு அதிபதி செவ்வாய் உச்சம் பெற்றதோடு, 8ம் வீட்டில் சனியும் இருப்பதால் பூரண ஆயுள் அல்லவா? கேது எட்டாம் வீட்டில் இருந்தாலும், செவ்வாய் மற்றும் சனியின் பலத்தால் ஆயுள் பலம் கூடுகிறதா? சனி நீசம் பெற்றதையும் பார்க்க வேண்டி உள்ளது.

    ReplyDelete
  5. வணக்கம் குருவே!
    அழுத்தம் திருத்தமான அலசல்!Gradually learning and am able to understand!
    நன்றி வாத்தியாரையா!

    ReplyDelete
  6. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    வணக்கம். நல்ல அலசல்.
    இந்த ஜாகத்தில் செவ்வாய், சனி பரிவர்த்தனை. செவ்வாய் மகர ராசியில் உச்சம் சனி மேஷ ராசியில் நீசம். ஆகையினால் நீச பங்க யோகம் காரணமாக கூட தைரியமாக முடிவு எடுத்து இருக்கலாம் இல்லையா.
    சந்திர ராசியிலிருந்து 4 ம் வீட்டு அதிபதி செவ்வாய் உச்சம். செவ்வாய் தைரியத்தை கொடுப்பவர்.
    என்னுடைய சந்தேகம் :
    சனியின் 7ம் பார்வை 4 ம் வீட்டின் மீது இருந்து, 4 ம் வீட்டு அதிபதி குருவின் 5 ம் பார்வை சனியின் மீது இருந்தால் சனி தசையில் ஜர்சரியில்லாமல் இருக்குமா. தனுர் லக்கினம். குரு லக்கனாதிபதி.குரு 6ம் வீட்டில் அமர்ந்துள்ளார்.
    என் நண்பருக்கு 2 மாதத்தில் சனி தசை ஆரம்பம். //////

    முதல்நிலை சுபக்கிரகமான குருவின் பார்வை லக்கினத்தின் மீதோ அல்லது 4ம் வீட்டின் மீதோ இருந்தால் நீங்கள் நினைப்பதுபோல சர்ஜரியில்லாமல் இருக்கும். அத்துடன் குரு 6ம் வீட்டில் போய் அமர்ந்து கொண்டு விட்டார். வைத்தீஸ்வரன் கோயிலி உறையும் ஈசனைப் பிரார்த்தனை செய்யச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  7. /////Blogger Maripandian Gani said...
    ஐயா வணக்கம்,
    கன்னி லக்ன ஜாதகருக்கு குரு 9ல் பகை பெற்று லக்கனத்தை பார்த்தாலும் தீர்க்க ஆயுளா ஐயா//////

    எந்த நிலைப் பாட்டுடன் இருந்தாலும் குரு முதல்நிலை சுபக்கிரகம் அவர் நன்மையையே செய்யக்கூடியவர். யாருடைய ஜாதகத்தில் அப்படி இருக்கிறது. உங்களுடைய ஜாதகத்திலா?

    ReplyDelete
  8. /////Blogger பரிவை சே.குமார் said...
    நல்ல அலசல் ஐயா...////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,சந்திர ராசியில் இருந்தும் பலன் சொல்லப்பட்டதால் புரிந்து கொள்ள கொஞ்சம் கடினமாக உள்ளது.திரும்ப படித்து புரிந்து கொள்ள முயற்ச்சிக்கிறேன்.நன்றி.//////

    அவ்வாறேஏ செய்யுங்கள் நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  10. //////Blogger thozhar pandian said...
    கன்னி இலக்கினத்திற்கு, 3 மற்றும் 8ம் வீட்டுக்கு அதிபதி செவ்வாய் உச்சம் பெற்றதோடு, 8ம் வீட்டில் சனியும் இருப்பதால் பூரண ஆயுள் அல்லவா? கேது எட்டாம் வீட்டில் இருந்தாலும், செவ்வாய் மற்றும் சனியின் பலத்தால் ஆயுள் பலம் கூடுகிறதா? சனி நீசம் பெற்றதையும் பார்க்க வேண்டி உள்ளது.//////

    சனி நீசம் பெற்றாலும், எட்டாம் வீட்டின் அதிபதி செவ்வாய் உச்ச பலத்துடன் இருக்கிறார். அதையும் பாருங்கள் தோழரே!

    ReplyDelete
  11. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    அழுத்தம் திருத்தமான அலசல்!Gradually learning and am able to understand!
    நன்றி வாத்தியாரையா!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  12. /////Blogger kmr.krishnan said...
    Very good analysis.Thank you, Sir./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com