மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.6.13

Astrology: பணம் எதை எதைக் கொடுக்கும்?

 

Astrology: பணம் எதை எதைக் கொடுக்கும்?

’பணம் எதை எதைக் கொடுக்கும்?’ என்று கேட்டால் சாமானியனின் பதில், அதாவது சராசரி மனிதனின் பதில் ஒன்றாகத்தான் இருக்கும். ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

”அம்மாவைத்தவிர, பெற்ற தாயைத் தவிர, விலைமதிப்பில்லாத தாயன்பைத் தவிர எல்லாவற்றையும் கொடுக்கும்” என்பான்

உண்மையான பதில் அதுவல்ல!

’பணம் எதை எதைக் கொடுக்காது?’ என்று கேட்டால் பலவிதமான பதில்கள் கிடைக்கும்.

பணம் நல்ல, அன்பான மனைவியைக் கொடுக்குமா? அல்லது நல்ல, புரிந்து நடக்கக்கூடிய கணவனைக் கொடுக்குமா? கொடுக்காது. தவறிக் கிடைத்தால் அது பணத்தால் வந்ததாக இருக்காது. ஜாதகப் பலனால் வந்ததாக மட்டுமே இருக்கும்!

இரண்டாம் வீடும், ஏழாம் வீடும், அதன் அதிபதிகளும், காரகர்களும் நன்றாக இருந்தால் மட்டுமே அது கிடைக்கும்!

பணம் நல்ல பிள்ளைகளைக் கொடுக்குமா? நல்ல பெயரை வாங்கிக்கொடுக்ககூடிய, பெற்றோர் சொன்னால் கேட்கக்கூடிய, பெற்றோரை மதித்து நடக்கக்கூடிய பிள்ளைகளைக் கொடுக்குமா? கொடுக்காது. ஒருவனின் ஜாதகத்தில் ஐந்தாம் வீடு அம்சமாக இருந்தால் மட்டுமே அது நடக்கும்.
பணத்தால் மட்டுமே அது நடக்காது.

பணம் கல்வியைக் கொடுக்குமா? ப்ளஸ் டூவில் 98% கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெறும் வாய்ப்பைக் கொடுக்குமா?
பணம் அறிவைக்கொடுக்குமா?
பணம் புத்திசாலித்தனத்தைக் கொடுக்குமா?
பணம் நகைச்சுவை உணர்வை, எப்போதும் கலகலப்பாக இருக்கும் உணர்வைக் கொடுக்குமா?
பணம் நம் மீது பாசத்தோடு, பரிவோடு இருக்கும் உறவினர்களைக்கொடுக்குமா?
பணம் நல்ல தொழிலை, நமக்கு வசப்படும் தொழிலைக் கொடுக்குமா?
பணம் விசுவாசமுள்ள நல்ல வேலைக்காரர்களைக் கொடுக்குமா?
பணம் அடுத்தவரை சரிபண்ணிக்கொண்டு செல்லும் நல்ல குணத்தைக் கொடுக்குமா?
பணம் முழு மகிழ்ச்சியைக் கொடுக்குமா?
பணம் எப்போதும் நிம்மதியாக இருக்கும் நிலையைக் கொடுக்குமா?
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்

மேலே குறிபிட்டுள்ள எதையும் பணம் கொடுக்காது!
---------------------------------------------------------------------
இன்றைய பொருள் சார்ந்த உலகில் அநேக மக்கள், பொருள் இருந்தால், அதாவது பணம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

ஆனால் உலக அனுபவம் அதை வேறு விதமாகச் சொல்கிறது. மாற்றிச் சொல்கிறது.

மகான்கள் மற்றும் வாழ்வியல் நிபுணர்கள், பணத்தைத் தேடி ஓடாதே என்று சொல்கிறார்கள். உனது சக்தி, முயற்சி, செயல், மற்றும் நேரம் முழுவதையும் பணத்தைத் தேடுவதில் செலவழிக்காதே என்று சொல்கிறார்கள்.

மற்ற எல்லா செயல்களையும்விட பணத்தேடல், பணத்தைச் சம்பாதிப்பதற்கான அல்லது பணத்தைக் கைப்பற்றுவதற்கான  வழிமுறைகள் உங்களை அதிகமான அதர்மங்களை, பாவங்களைச் செய்யத் தூண்டுகிறது, செய்ய வைக்கிறது என்கிறார்கள்.

உங்களுடைய மென்மையான/மேன்மையான குணங்களையும், நல்ல கொள்கைகளையும் அது அழித்துவிடக்கூடும்.

எத்தனை சொத்துச் சண்டைகள்? குவித்து வைத்த அல்லது இம்மி இம்மியாகச் சேர்த்துவைத்த சொத்துக்களுக்காக எத்தனை விதமான சண்டை சச்சரவுகள். எத்தனை விரோதங்கள்? எத்தனை மனப் போராட்டங்கள்?

அப்பன் மகனுக்குள், அண்ணன் தம்பிகளுக்குள், அல்லது உடன் பிறந்த சகோதரிகளுடன், சுருக்கமாகச் சொன்னால் குடும்பத்திற்குள் எத்தனை சண்டைகள்? எத்தனை சதிகள்? வெட்டு, குத்துக்கள்?

கட்டித்தழுவ வேண்டிய உறவுகள் எல்லாம் வெட்டி வீசப்படும் நிலைமை. கொட்டி கவிழ்க்கப்படும் நிலைமை!

அனுதினமும் செய்திதாள்களில் எத்தனை செய்திகள் வருகின்றன!

வயல் வரப்பை ஒரு அடி அகலப்படுத்தியதற்காக அண்ணனின் கையை வெட்டிய தம்பியை நாம் பார்க்கவில்லையா?

சொத்துத் தகறாரில் அப்பனைப் போட்டுத் தள்ளிய மகனைப் பற்றி நாம் கேள்விப்படவில்லையா?

பணத்திற்காக உயிர் நண்பனுக்குத் துரோகம் செய்யும் ஆசாமிகளை நாம் பார்க்கவில்லையா?

பணத்தால் சந்தோஷம் என்ற குழந்தை மட்டும் உருவாகாது. துன்பம் என்ற தீராத கஷ்டம் என்ற பிணியுள்ள, முடமான குழந்தையும் பிறக்கும். அதை மனதில் வையுங்கள்.

மற்ற செயல்களால், மற்ற விஷயங்களால் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பணத்தால் கிடைக்கும் மகிழ்ச்சி குறைவானதே என்று ஒரு ஆய்வு சொல்கின்றது.

நமது அத்தியாவசியத் தேவைகளுக்குப் போதுமான அளவில் கிடைக்கின்ற பணமே நமக்குப் போதுமானதாகும். அதுவே நமக்கு மகிழ்ச்சியையும் கொடுக்கும். அந்த அளவைத் தாண்டிக் கிடைக்கின்ற பணம் மகிழ்ச்சியைக் கொடுக்காது!

ஓரளவு பணம் இருந்தால் அது உன்னைக் காப்பாற்றும். அதிகமான பணம் இருந்தால் அதை நீ காப்பாற்ற வேண்டும்!
அதீதமான பணம் கிடைக்கும்போது, அதைப் பாதுகாப்பது, தகுந்த இடத்தில் அதை முதலீடு செய்வது போன்ற பிரச்சினைகள் தலை தூக்கும்.

சாதாரண மக்கள் தங்கள் தேவைக்கு உரிய பணம் கிடைக்காததால் மகிழ்ச்சியாக இல்லை.

பணம் இருப்பவனும் மகிழ்ச்சியாக இல்லை. இல்லாதவனும் மகிழ்ச்சியாக இல்லை!

மொத்தத்தில் இரண்டுவிதமான மனிதர்கள்தான் உலகில் உள்ளார்கள். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாதவர்கள் ஒருவகை. பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாதவர்கள் இன்னொருவகை!

தர்ம சிந்தனையும், நியாய உணர்வும், இறையுணர்வும்தான் உண்மையான மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதுதான் நிதர்சனமான உண்மை!

அதைத்தான் நமது வேதங்களும், புராணங்களும் சொல்கின்றன!

அதை உணருங்கள். அது மட்டும் போதும், நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்!
-----------------------------------------
A successful person is one who can lay a firm foundation with the bricks that others throw at him or her. - David Brinkley

பிருஹத் பாரசாரா ஹோரா என்னும் பழமையான ஜோதிட நூல் என்ன சொல்கிறது?

1. பதினொன்றாம் வீடு மிகவும் நன்றாக இருந்தால் நீ எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.(an auspicious 11th house makes a person happy at all times)
2. அதேபோல 11ஆம் வீட்டுடன் 9ஆம் வீடும் நன்றாக இருந்தால் எல்லாமே மகிழ்ச்சியுடையதாக அமையும். மனைவி, மக்கள், வாழ்க்கை என்று எதை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். எல்லாமுமே சூப்பராக இருக்கும். 9ஆம் வீடு என்பது 11ஆம் வீட்டிற்குப் பதினொன்றாம் வீடாகும். அதையும் மனதில் வையுங்கள்!  9th house (11th from 11th house).

இது மேலநிலை வகுப்புப் பாடம் (http://classroom2013.com) அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

35 comments:

  1. வணக்கம் பணத்தை பற்றி மிக அழகாக விளக்கம் கொடுத்து இவ்வாரத்தை இனிதே ஆரம்பித்து இருக்கிறீர்கள்
    நன்றி

    ReplyDelete
  2. தர்ம சிந்தனையும், நியாய உணர்வும், இறையுணர்வும்தான் உண்மையான மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதுதான் நிதர்சனமான உண்மை!

    மனதில் பதியும்படி சிறப்பான ஆக்கம் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள் ஐயா..

    ReplyDelete
  3. என் ஜாதகத்தில் 11ல் வில்லன் கேதுவும், உப வில்லன் மாந்தியும் இருக்கிறார்கள். சரி போகிறது 9ம் இடமாவது தேறுமா என்று பார்த்தால் அங்கே 2 வில்லன்கள் tent அடித்து தங்கியிருக்கிறார்கள். பரலாவது காப்பாற்றுமா என்று பார்த்தால் 17 தான் இருக்கிறது. இருப்பினும் வேறு சில அம்சங்களால் பணக் கஷ்டம் இல்லை. ஏதோ என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றும் அளவுக்கு இருக்கிறது. அது போதும்.

    ReplyDelete
  4. உண்மைதான் ஐயா இந்தப் பணத்தைப் பற்றியப் பார்வை என்னுள் தோன்றியதும் இங்கே சில...

    பணமென்பது வாழ்வை பயமாக்குவது
    பணமென்பது வாழ்வை சுயநலமாக்குவது
    பணமென்பது பண்பில்லாதவரையும் பகட்டாக்குவது
    பணமென்பது அன்பையும் விலைபேசுவது
    பணமென்பது பாசமென்னும் வேசதாரியாக்குவது
    பணமென்பது பிசாசாய் ஆட்டிவைப்பது
    பணமென்பது இரக்கத்தை கெடுப்பது
    பணமென்பது குறுக்கு வழியின் கதவு திறப்பது
    பணமென்பது பாதாளம் வரைப் பாயக்கூடியது
    பணமென்பது பாதாளத்திற்கு அழைத்தும் செல்லக் கூடியது
    பணமென்பது நியாயத்திற்கும் பிறப்பது
    பணமென்பது தர்மத்தை மணந்தால் நிம்மதி தருவது
    பணமென்பது வாழ்வை எளிதாக்க உதவுவது
    பணமென்பது சாதனைக்கு உதவுவது
    பணமென்பது கருணையாய் வெளிப்படுவது
    பணமென்பது தன்னம்பிக்கைக்கு தோழனாவது
    பணமென்பது பந்தங்களை பெருக்குவது
    பணமென்பது வாழ்வுப் பயணம் சிறக்க உதவுவது
    பணமென்பது அத்தனையும் செய்யவல்லது ஆயினும்
    பணமென்பது வாழ்விற்கு விளக்கா? கொல்லியா?
    பணமென்பது தான் உண்மையில் என்ன?
    பணமென்பது கையாளும் மனித மனத்தைப் பொறுத்ததே.

    பணத்தைப் பற்றிப் பேசும் போது அதற்கு தொடர்பில்லாத அன்பைப் பற்றியும் பேசுவது மனித வழக்காகவே உள்ளது அதனால் அதைப் பற்றியும் சில...

    அன்பென்பது விலையில்லாதது
    அன்பென்பது அளவிலாதது
    அன்பென்பது அகத்தினில் பிறப்பது
    அன்பென்பது பிரதிபலன் பாராதது
    அன்பென்பது நிபந்தனை அற்றது
    அன்பென்பது தாய்மையானது
    அன்பென்பது அனைத்திற்கும் மேலானது
    அன்பென்பது தெய்வீகமானது அந்த
    அன்பே சிவமும் ஆனது அதனால்
    அன்பென்பது எதனோடும் ஒப்பிட முடியாதது.

    நல்லப் பதிவு பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  5. அருமையான கட்டுரை.

    "பணம் என்னடா பணம்...பணம்....
    குணம்தானடா நிரந்தரம்.."

    அப்பாடா... இப்போது தலைப்புகளில் "டா" போடுவது குறைந்துள்ளது..
    இல்லாவிட்டால் தலைப்பு, "பணம் எதை எதைக் கொடுக்கும்டா ?" என்று ஆகி இருக்கும்.

    வாழ்த்துகளும், நன்றிகளும்..

    ReplyDelete
  6. பணம் எதை கொடுக்காது என
    பட்டியலிட்டது போல்

    ஒவ்வொன்றும்
    ஒரு சில தரும் சில தராது

    இனிப்பு அது தராது
    கசப்பு சிலருக்கு

    விருப்பம் கசப்பில்
    திருப்பம் வந்தால் விருப்பம்இனிப்பில்

    அவரவர்களுக்கு எது தேவையோ
    அதை எடுத்துக் கொள்கிறார்கள்

    பசியாய் இருப்பவர்கள் சோத்துக்கு
    பறப்பார்கள்.. அது போல்

    பணமில்லாதவர்கள்
    பணம் சம்பாதிக்க துடிப்பார்கள்..

    எது எது யார் யாருக்கு இல்லையோ
    அது அது தேடி அலைவது இயல்பே

    பணம் சம்பாதிப்பவர்கள் ஏழைகளே
    பட்டியலிட்டா இதை சொல்ல வேண்டும்

    ReplyDelete
  7. Good Morning Sir.

    Absolutely right. I see in my relatives how they become more and more selfish when they got richer and richer. Take Our nation itself!!! When people was not making lot of money, we were happy and lived with integrity. Now we all make lot of money and see how many people are happy and see where our culture and youths are going!!!

    ReplyDelete
  8. ///பணம் கல்வியைக் கொடுக்குமா?
    பணம் அறிவைக்கொடுக்குமா?///

    என பட்டியலிட்ட அத்தனையும்
    எதற்கு பணம் சம்பாதிப்பதற்காகதானே

    அதை அத்தனையையும்
    அந்த பணம் கொடுத்தே வாங்கலாமே

    ஒரே அலுவலகத்தில்
    ஒன்றாக பணிபுரியும் இருவர்

    ஒருவர் புகை பழக்கமுள்ளவர் மற்ற
    ஒருவர் அப்படி பழக்கமில்லாதவர்

    ஒரு சமயம்

    பழக்கமில்லாதவர் புகை
    பழக்கமுள்ளவரிடம் கணக்கு போட்டு

    "நீ சிகரெட்டுக்கு செலவு செய்த காசில்
    இன்னொவா கார் வாங்கியிருக்கலாம்" என

    கணக்கு சொன்னதும் புகைகாரர்
    கரெக்ட்.. அது சரி..

    உனக்குத்தான் புகை பழக்கமில்லையே
    உன்னிடம் மாருதி கார் கூட இல்லையே

    என கிண்டலடிக்கின்றார்
    எனவே பணம் செலவு வரவு

    என்பதற்கான பொருளும் செயலும்
    எளிதாக புரிந்து கொண்டால் மட்டுமே

    விரும்பியதை பெற முடியும்
    விருப்பமில்லாதவர்களை என்ன செய்யமுடியும்


    ReplyDelete
  9. வாத்தியார் அய்யா, மாற்றுக் கருத்துக்கு மன்னிக்கவும். ஆனால் அதீதமான பணத்தால் துன்பமே அதிகம் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. பணத்தால் நல்ல உறவுகளையோ, நண்பர்களையோ வாங்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் பணத்தால் சுதந்திரத்தை வாங்க முடியும். தினமும் எழுந்து வேலைக்கு போவதற்கு பதிலாக நமக்கு பிடித்த உபயோகமான விஷயங்களை கற்றுக் கொள்ள உதவும். பணம் தேவைப்படுகின்றது என்ற காரணத்தினால் தானே அலுவலகத்தில் பல சிரமங்களுக்கு இடையிலும் ஏச்சு பேச்சுகளுக்கு இடையிலும் சகித்து கொண்டு வாழ வேண்டியிருக்கிறது. அதீத பணம் இருந்து வேலைக்கு சென்றுதான் வாழ வேண்டும் என்ற நிலை இல்லாது இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்! அது போல பணம் இருந்தால் வாழ்க்கையில் சில தைரியமான முடிவுகளை எடுக்க முடியும். உதாரணத்திற்கு இருக்கும் வேலையை விட்டு விட்டு நமக்கு பிடித்த, வருமானம் குறைவென்றாலும், மற்றவர்களுக்கு உபயோகமான வேலையை செய்ய இயலும். பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க முடியும். அளவான பணம் நம்மை காப்பாற்றும், அதிகமான பணத்தை நாம் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிற பெரிய மனிதர்கள் கூட தனது பணத்தை விட்டுவிடவில்லையே. தனது ஊதியத்தை குறைத்துக் கொள்ளவும் இல்லையே:‍‍) அதிக பணம் இருந்தால் மனம் நிம்மதியாக இருக்கும் என்பது என் கருத்து. எவ்வளவு அதிகம்? அது ஒவ்வொருவரை பொருத்தது. என்னை பொருத்தவரை வேலைக்கு சென்றுதான் எனது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிலை இல்லாத அளவிற்கு பணம் சேர்ந்தால் நிம்மதி. அதற்காக வேலை செய்யாமல் வீட்டில் சும்மா இருக்க முடியாது. நமக்கு பிடித்த வேலைகளை செய்யலாம்.

    ReplyDelete
  10. பணம் வைத்து பாடம். அது நல்லதொரு மனவளர் கட்டுரையாகவும் தெரிகிறது.அத்துடன் இன்று பதிவாகியிருக்கும் ஆலாசியம், ஐயர், பாண்டியன்,ஆகியோரின் கருத்துகளும்
    பாடத்தோடு ஒற்றி வருகிறது.

    ReplyDelete
  11. இக்கட்டுரையைப்படிப்பதற்கு முன்னால் 'ஹிந்து வாய்ஸ்' என்ற மாத இதழில் ஒரு செய்தியைப் படித்துக்கொண்டு இருந்தேன். குஜராத்தில் ஒரு ரிக்ஷா தொழிலாளி. அங்கே நேனோ கார் தொழிற்சாலைக்கு நிலம் கையக‌ப்படுத்தும் போது ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு ஒரு செக் தயாரிக்கப்பட்டு
    அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.அதனை அவர் பணமாக்கிக் கொள்ள வங்கி செல்ல வில்லை.அந்த நிலம் தன் தந்தையால் ஏற்கனவே வேறு ஒருவருக்கு விற்கப்பட்டு விட்டதாகவும்,ஆனால் வாங்கியவர் அதனை பதிவு செய்து கொள்ளாமல் இருந்ததால், இப்போது நிலம் தன் பெயரில் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், அந்தப் பணம் தனக்கு உரியதல்ல எனவும் தான் அந்த காசோலையைத் திருப்பி அளிப்பதாகவும் கூறி அதன் படி திருப்பியும் கொடுத்து விட்டார்.அதோடு நில்லாமல் நிலத்தை வாங்கியவரின் வாரிசுகளைக் கண்டு பிடித்து அவர்கள் பெயருக்கு நிலத்தை மாற்றிக் கொடுத்து, அந்த ஈட்டுத் தொகையை அவர்கள் பெற்றுக் கொள்ளூம் படியும் செய்துள்ளார்.ஆகவே எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அதனை துச்சமாக மதித்து நேர்மையாக வாழும் ஏழைகளும் இவ்வுலகில் இருக்கிறார்கள்.

    எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவ‌ருள்ளும்
    செல்வர்க்கே செல்வம் தகைத்து

    என்பது வள்ளுவம். செல்வந்தர்கள் பணிவோடும் பண்போடும் நடந்து கொண்டால் பணம் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

    காந்திஜி கூறும் அறங்காவலர் மனநிலையில் செல்வந்தர்கள் செல்வத்தினைக் காத்து, வளர்த்து பொது நன்மைக்கு செலவிட்டால் பணம் அவர்களிடம் மேலும் சேரும்.

    நகரத்தாரில் பலரும் இந்த மன‌நிலை உடையவர்களே! எத்தனை கல்லுரிகள், பள்ளிகள், கோவில்கள், அறக்கட்டளைகள் அவர்களால் நிறுவப்பட்டுள்ளன.!

    ReplyDelete
  12. செய்க பொருள் என்றான் வள்ளுவன்
    செய்தோமா பொருளை...

    அன்பெனும் குழவிக்கு
    அந்த பொருளே செவிலி என்றதும் அவனே

    சாவுக்கு மணியடிப்பதும் கோவிலில்
    சாமிக்கு மணியடிப்பதும் இங்கே

    பணத்திற்கு தானே

    50 லட்சம் கொடுத்து படிக்கும் டாக்டர்
    அறியாத கிராமத்தில் பணியாற்றவா

    பணத்திற்கு தானே

    பிள்ளைகளை படிக்க வைத்து
    பட்டிணத்துக்கு அனுப்புவதும்

    பணத்திற்கு தானே

    பிள்ளைகள் மீது முதலீடு செய்யும்
    பெற்றோர்கள் எதிர் பார்ப்பும் இந்த

    பணத்திற்கு தானே..

    மாடு ஆடுகளை வெட்டி
    மனிதன் திங்க தருவதும்

    பணத்திற்கு தானே..

    காந்தி படம் போட்ட
    கரன்சி நோட்டானாலும்

    அந்த படம் போட்ட
    அமெரிக்க டாலாரானாலும் எல்லாம்

    பணத்திற்கு தானே..

    ஆளுக்கொரு வீடு என்ற நிலை மாறி
    ஆண்டுக்கு ஒரு வீடு என்ற நிலை வந்த

    தனுசுவிடம் கேளுங்கள்
    த(ப)னத்தின் சிறப்பினை..

    அய்யாரப்பன் கோவிலில்
    ஆண்டுதோறும் விழா எடுக்கும்

    தஞ்சை தோழரை கேளுங்கள்
    தனத்தின் மதிப்பினை

    அசராமல் அள்ளித் தரும் சிங்கைராசா
    ஆலாசியத்தை கேளுங்கள்..

    பணம் எத்தனை அவசியமென
    பதிலுக்கு பதில் தருவார்

    பணம் இல்லையேல் வாழ்க்கேயே இல்லை ஆனால்
    பணமே வாழ்க்கையில்லை..

    ReplyDelete
  13. Ayya
    panam. Patriya pathivu arumai. Nam tholarkalin comments arumai

    ReplyDelete
  14. vanakkam sir,

    very good post!

    i am makra lagna,i have seevai in vrischika and bhuthan and lagnathipathi sani in kani.I haven't suffered of money and i ran a normal life.

    ReplyDelete
  15. /////Blogger சர்மா said...
    வணக்கம் பணத்தை பற்றி மிக அழகாக விளக்கம் கொடுத்து இவ்வாரத்தை இனிதே ஆரம்பித்து இருக்கிறீர்கள்
    நன்றி/////

    ஆக்கம் உங்களுக்குப் பிடித்திருப்பதை அறிந்து, எழுதிப் பதிவிட்ட எனக்கும் மகிழ்ச்சிதான் சர்மா!

    ReplyDelete
  16. ////Blogger இராஜராஜேஸ்வரி said...
    தர்ம சிந்தனையும், நியாய உணர்வும், இறையுணர்வும்தான் உண்மையான மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதுதான் நிதர்சனமான உண்மை!
    மனதில் பதியும்படி சிறப்பான ஆக்கம் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள் ஐயா..////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete
  17. ////Blogger Ak Ananth said...
    என் ஜாதகத்தில் 11ல் வில்லன் கேதுவும், உப வில்லன் மாந்தியும் இருக்கிறார்கள். சரி போகிறது 9ம் இடமாவது தேறுமா என்று பார்த்தால் அங்கே 2 வில்லன்கள் tent அடித்து தங்கியிருக்கிறார்கள். பரலாவது காப்பாற்றுமா என்று பார்த்தால் 17 தான் இருக்கிறது. இருப்பினும் வேறு சில அம்சங்களால் பணக் கஷ்டம் இல்லை. ஏதோ என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றும் அளவுக்கு இருக்கிறது. அது போதும்.////

    போதும் என்ற நல்ல மனமே ஜாதக அமைப்பினால்தான்! உங்கள் ஜாதகத்தில் பல சிறப்புக்களும் இருக்கும். அதையும் பாருங்கள்! ஜாதகம் 337க்கு balance செய்யப்பட்டிருக்கும் அல்லவா?

    ReplyDelete
  18. ////Blogger eswari sekar said...
    vanakam..sir////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  19. Blogger ஜி ஆலாசியம் said...
    உண்மைதான் ஐயா இந்தப் பணத்தைப் பற்றியப் பார்வை என்னுள் தோன்றியதும் இங்கே சில...
    பணமென்பது வாழ்வை பயமாக்குவது
    பணமென்பது வாழ்வை சுயநலமாக்குவது
    பணமென்பது பண்பில்லாதவரையும் பகட்டாக்குவது
    பணமென்பது அன்பையும் விலைபேசுவது
    பணமென்பது பாசமென்னும் வேசதாரியாக்குவது
    பணமென்பது பிசாசாய் ஆட்டிவைப்பது
    பணமென்பது இரக்கத்தை கெடுப்பது
    பணமென்பது குறுக்கு வழியின் கதவு திறப்பது
    பணமென்பது பாதாளம் வரைப் பாயக்கூடியது
    பணமென்பது பாதாளத்திற்கு அழைத்தும் செல்லக் கூடியது
    பணமென்பது நியாயத்திற்கும் பிறப்பது
    பணமென்பது தர்மத்தை மணந்தால் நிம்மதி தருவது
    பணமென்பது வாழ்வை எளிதாக்க உதவுவது
    பணமென்பது சாதனைக்கு உதவுவது
    பணமென்பது கருணையாய் வெளிப்படுவது
    பணமென்பது தன்னம்பிக்கைக்கு தோழனாவது
    பணமென்பது பந்தங்களை பெருக்குவது
    பணமென்பது வாழ்வுப் பயணம் சிறக்க உதவுவது
    பணமென்பது அத்தனையும் செய்யவல்லது ஆயினும்
    பணமென்பது வாழ்விற்கு விளக்கா? கொல்லியா?
    பணமென்பது தான் உண்மையில் என்ன?
    பணமென்பது கையாளும் மனித மனத்தைப் பொறுத்ததே.
    பணத்தைப் பற்றிப் பேசும் போது அதற்கு தொடர்பில்லாத அன்பைப் பற்றியும் பேசுவது மனித வழக்காகவே உள்ளது அதனால் அதைப் பற்றியும் சில...
    அன்பென்பது விலையில்லாதது
    அன்பென்பது அளவிலாதது
    அன்பென்பது அகத்தினில் பிறப்பது
    அன்பென்பது பிரதிபலன் பாராதது
    அன்பென்பது நிபந்தனை அற்றது
    அன்பென்பது தாய்மையானது
    அன்பென்பது அனைத்திற்கும் மேலானது
    அன்பென்பது தெய்வீகமானது அந்த
    அன்பே சிவமும் ஆனது அதனால்
    அன்பென்பது எதனோடும் ஒப்பிட முடியாதது.
    நல்லப் பதிவு பகிர்விற்கு நன்றிகள் ஐயா!/////

    உங்களின் சிந்தனைச் செதுக்கல்களுக்கும் அதை வடித்துப் பின்னூட்டத்தில் அருமையாகக் கொடுத்தமைக்கும் நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  20. ////Blogger Advocate P.R.Jayarajan said...
    அருமையான கட்டுரை.
    "பணம் என்னடா பணம்...பணம்....
    குணம்தானடா நிரந்தரம்.."
    அப்பாடா... இப்போது தலைப்புகளில் "டா" போடுவது குறைந்துள்ளது..
    இல்லாவிட்டால் தலைப்பு, "பணம் எதை எதைக் கொடுக்கும்டா ?" என்று ஆகி இருக்கும்.
    வாழ்த்துகளும், நன்றிகளும்..///

    ஒரு வாசக அன்பர் கேட்டுக்கொண்டதன் பேரில் ‘டா’ வை விலக்கி வைத்திருக்கிறேன். உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி வழக்குரைஞர் சார்!

    ReplyDelete
  21. ////Blogger வேப்பிலை said...
    பணம் எதை கொடுக்காது என
    பட்டியலிட்டது போல்
    ஒவ்வொன்றும்
    ஒரு சில தரும் சில தராது
    இனிப்பு அது தராது
    கசப்பு சிலருக்கு
    விருப்பம் கசப்பில்
    திருப்பம் வந்தால் விருப்பம்இனிப்பில்
    அவரவர்களுக்கு எது தேவையோ
    அதை எடுத்துக் கொள்கிறார்கள்
    பசியாய் இருப்பவர்கள் சோத்துக்கு
    பறப்பார்கள்.. அது போல்
    பணமில்லாதவர்கள்
    பணம் சம்பாதிக்க துடிப்பார்கள்..
    எது எது யார் யாருக்கு இல்லையோ
    அது அது தேடி அலைவது இயல்பே
    பணம் சம்பாதிப்பவர்கள் ஏழைகளே
    பட்டியலிட்டா இதை சொல்ல வேண்டும்/////

    நல்லது. நன்றி வேப்பமரத்தாரே!

    ReplyDelete
  22. ////Blogger Dallas Kannan said...
    Good Morning Sir.
    Absolutely right. I see in my relatives how they become more and more selfish when they got richer and richer. Take Our nation itself!!! When people was not making lot of money, we were happy and lived with integrity. Now we all make lot of money and see how many people are happy and see where our culture and youths are going!!!/////

    பணத்தால் உள்ள கேடுகளில் இந்தக் கலாச்சாரச் சீரழிவும் ஒன்று. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி டல்லாஸ் கண்ணன்

    ReplyDelete
  23. ////Blogger வேப்பிலை said...
    ///பணம் கல்வியைக் கொடுக்குமா?
    பணம் அறிவைக்கொடுக்குமா?///
    என பட்டியலிட்ட அத்தனையும்
    எதற்கு பணம் சம்பாதிப்பதற்காகதானே
    அதை அத்தனையையும்
    அந்த பணம் கொடுத்தே வாங்கலாமே
    ஒரே அலுவலகத்தில்
    ஒன்றாக பணிபுரியும் இருவர்
    ஒருவர் புகை பழக்கமுள்ளவர் மற்ற
    ஒருவர் அப்படி பழக்கமில்லாதவர்
    ஒரு சமயம்
    பழக்கமில்லாதவர் புகை
    பழக்கமுள்ளவரிடம் கணக்கு போட்டு
    "நீ சிகரெட்டுக்கு செலவு செய்த காசில்
    இன்னொவா கார் வாங்கியிருக்கலாம்" என
    கணக்கு சொன்னதும் புகைகாரர்
    கரெக்ட்.. அது சரி..
    உனக்குத்தான் புகை பழக்கமில்லையே
    உன்னிடம் மாருதி கார் கூட இல்லையே
    என கிண்டலடிக்கின்றார்
    எனவே பணம் செலவு வரவு
    என்பதற்கான பொருளும் செயலும்
    எளிதாக புரிந்து கொண்டால் மட்டுமே
    விரும்பியதை பெற முடியும்
    விருப்பமில்லாதவர்களை என்ன செய்யமுடியும்/////

    நல்லது. நன்றி வேப்பமரத்தாரே!

    ReplyDelete
  24. ////Blogger thozhar pandian said...
    வாத்தியார் அய்யா, மாற்றுக் கருத்துக்கு மன்னிக்கவும். ஆனால் அதீதமான பணத்தால் துன்பமே அதிகம் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. பணத்தால் நல்ல உறவுகளையோ, நண்பர்களையோ வாங்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் பணத்தால் சுதந்திரத்தை வாங்க முடியும். தினமும் எழுந்து வேலைக்கு போவதற்கு பதிலாக நமக்கு பிடித்த உபயோகமான விஷயங்களை கற்றுக் கொள்ள உதவும். பணம் தேவைப்படுகின்றது என்ற காரணத்தினால் தானே அலுவலகத்தில் பல சிரமங்களுக்கு இடையிலும் ஏச்சு பேச்சுகளுக்கு இடையிலும் சகித்து கொண்டு வாழ வேண்டியிருக்கிறது. அதீத பணம் இருந்து வேலைக்கு சென்றுதான் வாழ வேண்டும் என்ற நிலை இல்லாது இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்! அது போல பணம் இருந்தால் வாழ்க்கையில் சில தைரியமான முடிவுகளை எடுக்க முடியும். உதாரணத்திற்கு இருக்கும் வேலையை விட்டு விட்டு நமக்கு பிடித்த, வருமானம் குறைவென்றாலும், மற்றவர்களுக்கு உபயோகமான வேலையை செய்ய இயலும். பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க முடியும். அளவான பணம் நம்மை காப்பாற்றும், அதிகமான பணத்தை நாம் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிற பெரிய மனிதர்கள் கூட தனது பணத்தை விட்டுவிடவில்லையே. தனது ஊதியத்தை குறைத்துக் கொள்ளவும் இல்லையே:‍‍) அதிக பணம் இருந்தால் மனம் நிம்மதியாக இருக்கும் என்பது என் கருத்து. எவ்வளவு அதிகம்? அது ஒவ்வொருவரை பொருத்தது. என்னை பொருத்தவரை வேலைக்கு சென்றுதான் எனது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிலை இல்லாத அளவிற்கு பணம் சேர்ந்தால் நிம்மதி. அதற்காக வேலை செய்யாமல் வீட்டில் சும்மா இருக்க முடியாது. நமக்கு பிடித்த வேலைகளை செய்யலாம்.////

    மாறுக்கருத்துக்களுக்கும் வகுப்பறையில் மதிப்பு உண்டு! வரவேற்பு உண்டு! உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி பாண்டியரே!!!

    ReplyDelete
  25. ////Blogger வேப்பிலை said...
    சபாஷ் பாண்டியா////

    பாண்டியரை ஊக்கப்ப்டுத்திய மேன்மைக்கு நன்றி வேப்பமரத்தாரே!

    ReplyDelete
  26. //////Blogger thanusu said...
    பணம் வைத்து பாடம். அது நல்லதொரு மனவளர் கட்டுரையாகவும் தெரிகிறது.அத்துடன் இன்று பதிவாகியிருக்கும் ஆலாசியம், ஐயர், பாண்டியன்,ஆகியோரின் கருத்துகளும்
    பாடத்தோடு ஒற்றி வருகிறது./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தனுசு!

    ReplyDelete
  27. /////Blogger arul said...
    arumayana pathivu////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  28. ////Blogger kmr.krishnan said...
    இக்கட்டுரையைப்படிப்பதற்கு முன்னால் 'ஹிந்து வாய்ஸ்' என்ற மாத இதழில் ஒரு செய்தியைப் படித்துக்கொண்டு இருந்தேன். குஜராத்தில் ஒரு ரிக்ஷா தொழிலாளி. அங்கே நேனோ கார் தொழிற்சாலைக்கு நிலம் கையக‌ப்படுத்தும் போது ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு ஒரு செக் தயாரிக்கப்பட்டு
    அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.அதனை அவர் பணமாக்கிக் கொள்ள வங்கி செல்ல வில்லை.அந்த நிலம் தன் தந்தையால் ஏற்கனவே வேறு ஒருவருக்கு விற்கப்பட்டு விட்டதாகவும்,ஆனால் வாங்கியவர் அதனை பதிவு செய்து கொள்ளாமல் இருந்ததால், இப்போது நிலம் தன் பெயரில் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், அந்தப் பணம் தனக்கு உரியதல்ல எனவும் தான் அந்த காசோலையைத் திருப்பி அளிப்பதாகவும் கூறி அதன் படி திருப்பியும் கொடுத்து விட்டார்.அதோடு நில்லாமல் நிலத்தை வாங்கியவரின் வாரிசுகளைக் கண்டு பிடித்து அவர்கள் பெயருக்கு நிலத்தை மாற்றிக் கொடுத்து, அந்த ஈட்டுத் தொகையை அவர்கள் பெற்றுக் கொள்ளூம் படியும் செய்துள்ளார்.ஆகவே எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அதனை துச்சமாக மதித்து நேர்மையாக வாழும் ஏழைகளும் இவ்வுலகில் இருக்கிறார்கள்.
    எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவ‌ருள்ளும்
    செல்வர்க்கே செல்வம் தகைத்து
    என்பது வள்ளுவம். செல்வந்தர்கள் பணிவோடும் பண்போடும் நடந்து கொண்டால் பணம் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
    காந்திஜி கூறும் அறங்காவலர் மனநிலையில் செல்வந்தர்கள் செல்வத்தினைக் காத்து, வளர்த்து பொது நன்மைக்கு செலவிட்டால் பணம் அவர்களிடம் மேலும் சேரும்.
    நகரத்தாரில் பலரும் இந்த மன‌நிலை உடையவர்களே! எத்தனை கல்லுரிகள், பள்ளிகள், கோவில்கள், அறக்கட்டளைகள் அவர்களால் நிறுவப்பட்டுள்ளன.!/////

    உங்களின் மேன்மையான அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  29. Blogger வேப்பிலை said...
    செய்க பொருள் என்றான் வள்ளுவன்
    செய்தோமா பொருளை...
    அன்பெனும் குழவிக்கு
    அந்த பொருளே செவிலி என்றதும் அவனே
    சாவுக்கு மணியடிப்பதும் கோவிலில்
    சாமிக்கு மணியடிப்பதும் இங்கே
    பணத்திற்கு தானே
    50 லட்சம் கொடுத்து படிக்கும் டாக்டர்
    அறியாத கிராமத்தில் பணியாற்றவா
    பணத்திற்கு தானே
    பிள்ளைகளை படிக்க வைத்து
    பட்டிணத்துக்கு அனுப்புவதும்
    பணத்திற்கு தானே
    பிள்ளைகள் மீது முதலீடு செய்யும்
    பெற்றோர்கள் எதிர் பார்ப்பும் இந்த
    பணத்திற்கு தானே..
    மாடு ஆடுகளை வெட்டி
    மனிதன் திங்க தருவதும்
    பணத்திற்கு தானே..
    காந்தி படம் போட்ட
    கரன்சி நோட்டானாலும்
    அந்த படம் போட்ட
    அமெரிக்க டாலாரானாலும் எல்லாம்
    பணத்திற்கு தானே..
    ஆளுக்கொரு வீடு என்ற நிலை மாறி
    ஆண்டுக்கு ஒரு வீடு என்ற நிலை வந்த
    தனுசுவிடம் கேளுங்கள்
    த(ப)னத்தின் சிறப்பினை..
    அய்யாரப்பன் கோவிலில்
    ஆண்டுதோறும் விழா எடுக்கும்
    தஞ்சை தோழரை கேளுங்கள்
    தனத்தின் மதிப்பினை
    அசராமல் அள்ளித் தரும் சிங்கைராசா
    ஆலாசியத்தை கேளுங்கள்..
    பணம் எத்தனை அவசியமென
    பதிலுக்கு பதில் தருவார்
    பணம் இல்லையேல் வாழ்க்கேயே இல்லை ஆனால்
    பணமே வாழ்க்கையில்லை../////

    நாம் செத்துபோகும்போது, சேர்த்துவைத்த பணமும் நம்முடன் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அது ஏன் மறுக்கப்பெற்றிருக்கிறது? வேப்பமரத்தை உலுக்கி ஒரு நல்ல பதிலைச் சொல்லுங்கள்

    ReplyDelete
  30. /////Blogger Kalai Rajan said...
    Ayya
    panam. Patriya pathivu arumai. Nam tholarkalin comments arumai////

    நல்லது. நன்றி காளைராஜன்!

    ReplyDelete
  31. ////Blogger saravanan said...
    vanakkam sir,
    very good post!
    i am makra lagna,i have sevvai in vrischika and bhuthan and lagnathipathi sani in kani.I haven't suffered of money and i ran a normal life./////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. ///நாம் செத்துபோகும்போது, சேர்த்துவைத்த பணமும் நம்முடன் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அது ஏன் மறுக்கப்பெற்றிருக்கிறது? ///

    வெளிநாட்டிற்கு போகும் போது
    இந்திய ருபாயை டாலராக தான்
    மாற்றி எடுத்து செல்ல வேண்டும்

    அது போல
    காந்தி படம் போட்ட
    கரன்சி அங்கே (செத்த பிறகு போகும் இடத்தில்) செல்லாது
    அதனால்
    அதனை சத்காரியங்களாகத் தான்
    மாற்றி செல்ல வேண்டும்..

    இந்திய உருபாயை டாலராக மாற்றுவதுபோல்
    செத்த பிறகு எடுத்து செல்ல விரும்பினால்
    உங்கள் சொத்துக்களை சத்காரியங்களுக்காக மாற்றுங்கள்..

    அப்படியே உங்கள் சொத்துக்களை எடுத்துச் செல்லுங்கள்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com