மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.6.13

Astrology: மனம்போல் மாங்கல்யம்

 
Astrology: மனம்போல் மாங்கல்யம்

அலசல் பாடம்
--------------------------
காதல் உணர்வு என்பது எல்லோருக்கும் பொதுவானது. அந்த உணர்வு, இளம் வயதில், சிறிதளவாவது எலோருக்கும் இருக்கும். சிலருக்கு மட்டும் அதீதமாக இருக்கும். அவர்கள் ஒருவரையோ அல்லது ஒருத்தியையோ காதலிக்கத் துவங்கிவிடுவார்கள்.

எந்தக் காதலிலும் துவக்கம் முக்கியமில்லை. முடிவுதான் முக்கியம். காதல் நிறைவேறித் திருமணத்தில் முடிவதுதான் முக்கியம். காதலிக்கும் எல்லோருக்கும் அப்படி அமையாது. பலருக்கும் தத்தம் பெற்றோர்களிடமிருந்து எதிர்ப்பு இருக்கும். அந்த எதிர்ப்பைச் சமாளித்துத் திருமணம் செய்து கொள்வது என்பது கடினமான செயலாகும். மன உளைச்சளைத் தரக்கூடியதாகும்.

அதை விடுங்கள். ஜாதகத்தில் காதல் திருமணத்திற்கான அமைப்பு இருந்தால்தான் முடிவு மகிழ்ச்சியாக இருக்கும். அதாவது காதலர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இல்லை என்றால் ஊற்றிக்கொண்டு விடும்! தீராத துன்பத்தில் முடிந்துவிடும். மறக்கமுடியாத நிகழ்வுகளில் முடிந்துவிடும்

சுக்கிரன்தான் காதலுக்கான காரகன். Authority for Love

சுக்கிரன்தான் மெல்லிய உணர்வுகளுக்கும், மோகத்திற்கும், காதல் மயக்கங்களுக்கும் அதிபதி. ஜாதகத்தில் அவன் நன்றாக இருக்க வேண்டும். அவன் நன்றாக இல்லை என்றால்,  காதல் காட்சிகளைத் திரைப்படங்களில் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். காதலுக்கோ அல்லது காதல் திருமணத்திற்கோ ஆசைப்படக்கூடாது.

ஜாதகத்தில் சுக்கிரனின் பார்வை லக்கினம், அல்லது ஐந்தாம் வீடு அல்லது ஏழாம் வீட்டின் மீது அழுத்தமாகப் பதியும் போது, ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்குக் காதல் உணர்வுகள் (மெல்லிய உணர்வுகள்) மிகுந்திருக்கும். ஆனால் காதல் நிறைவேறுவது ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களைப் பொறுத்ததாகும்

1. சுக்கிரன் ஐந்தாம் வீட்டின் அதிபதியாக இருப்பதுடன், அவன் ஏழாம் வீட்டில் அமர்ந்திருக்கும் அமைப்புள்ள பெண்ணிற்கு அல்லது இளைஞனுக்குக் காதல், திருமணத்தில் முடிவதுடன் மகிழ்ச்சியான இல்லற வாழ்வையும் கொடுக்கும்

2. சந்திரனுடன் சேர்ந்திருக்கும் சுக்கிரனும், சந்திரன் இருக்கும் ராசியில் இருந்து அதற்கு ஐந்தாம் வீட்டில் இருக்கும் சுக்கிரனும் அதே பலனைத் தருவார்

3. ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு, மற்றும் ஒன்பதாம் வீடு ஆகிய மூன்று வீடுகளுமே மனம்போல் மாங்கல்யத்தை தரும் வீடுகளாகும்

4. ஏழாம் வீட்டுக்காரன் ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருந்தால் அந்த அமைப்பு மனம்போல் மாங்கல்யத்தை தரும்.

5. ராசிச் சக்கரத்தில் மேற்கண்ட அமைப்பு இல்லாவிட்டாலும், நவாம்சத்தில் ஏழாம் அதிபதியும், ஒன்பதாம் அதிபதியும் சேர்ந்திருந்தாலும், அல்லது ஐந்தாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் சேர்ந்திருந்தாலும் அந்த அமைப்பு மனம்போல் மாங்கல்யத்தை தரும்.

6. லக்கின அதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்து, இருவரும் லக்கினத்திலேயே குடியிருந்தால், அந்த ஜாதகன் தன்னுடைய இளம்வயதிலேயே காதலில் புரண்டு எழுந்து விடுவான். கண்ணில் தெரிந்த வண்ணப் பறவை, அவன் கையில் கிடைத்துவிடும். அதை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியான இல்லறத்தில் ஈடுபடுவான்!

7. உனக்கென நான், எனக்கென நீ என்னும் தூய காதலுக்கு, உங்கள் மொழியில் சொன்னால், Made for each other என்னும் காதலுக்கு ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருக்க வேண்டும். சந்திரன் மனகாரகன் அதை நினைவில் வையுங்கள். உறுதியான காதலுக்கு மன உறுதி வேண்டும். மன உறுதிக்கு ஜாதகத்தில் சந்திரன் உறுதியாக இருக்க வேண்டாமா?
-----------------------------------------------------------------------
8. சுக்கிரன் நீசமானதுடன் லக்கினத்தில் அமர்ந்திருக்கும் அமைப்பு, திருமண வாழ்வில் திருப்தியின்மையை உண்டாக்கும். அதே ஜாதகத்தில் நவாம்சத்தில் சுக்கிரன் உச்சமாக இருந்தால், அந்த பாதிப்பு இருக்காது

9. ஏழாம் அதிபதியும் கெட்டுப்போய், சுக்கிரனும் நீசம் பெற்றிருந்தால் சொல்லவே வேண்டாம். ஜாதகனுக்குத் திருமணமாகாது. திருமணமானாலும் மனைவியுடன் அல்லது கணவனுடன் மகிழ்ச்சியான உறவு இருக்காது. சிலர் சகித்துக்கொண்டு திருமண வாழ்வைத் தொடர்வார்கள். சிலரின் திருமண வாழ்வு குடும்ப நல நீதி மன்றத்தில் முடிவிற்கு வந்து விடும். அதாவது விவாகரத்தில் முடிந்துவிடும்!

10. செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்திருக்கும் அமைப்பு காதலுக்கு எதிரானது. காதல் தோல்வியில் முடிந்துவிடும். ஆகவே அந்த மாதிரி அமைப்பு உள்ளவர்கள் காதலைத் தவிர்த்துவிடுங்கள். காதலியை அல்லது காதலனைப் பிரிந்த துக்கம் இல்லாமல், அவஸ்தை இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.

11. ஏழாம் வீட்டுக்காரன் தீய வீடுகளில் அமர்ந்திருக்கும் அமைப்பு காதலுக்கு எதிரானது. அதாவது ஏழாம் வீட்டுக்காரன், 6ஆம் வீடு அல்லது 8ஆம் வீடு அல்லது 12ஆம் வீடு ஆகிய ஒன்றில் அமர்ந்திருக்கும் அமைப்பு காதலுக்கு எதிரானது, அந்த அமைப்பில் உங்கள் காதல் நிறைவேறாது. அதையும் மனதில் வையுங்கள்

இது மேல்நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடம். வகுப்பறைக்கு நிறைய இளைஞர்கள், இளைஞிகள் வந்து செல்வதால் அனைவருக்கும் பயன்படட்டும் என்று இங்கே பதிவிட்டுள்ளேன்

அன்புடன்
வாத்தியார்


அடிக்குறிப்பு: வாத்தியார் வெளியூர்ப் பயணம். வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. அடுத்த வகுப்பு 13.6.2013 வியாழனன்று நடைபெறும். அன்றும் ஜோதிடப்பாடம்தான். விடுமுறையில் பழைய பாடங்களை எல்லாம் ஒருமுறை புரட்டிப் படியுங்கள். மறந்து போனவை எல்லாம் திரும்பவும் நினைவில் வந்து நிற்கும்!
---------------------------------------------------------------------
இந்தமுறை காரைக்குடி பயணம். காரைக்குடி பயணங்களில், அங்கே நடக்கும் விஷேசங்களில் வழங்கப்பெறும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். சில செல்வந்தர்களின் வீடுகளின் மெனு இப்படியிருக்கும்:

மாம்பழ சாம்பார்
ஆப்பிள் மோர்க்குழம்பு
பைனாப்பிள் ரசம்
மாதுளம் பழம் + தயிர் பச்சடி
கெட்டித் தயிர்
புடலங்காய் கூட்டு
பச்சை பட்டாணி + பால் கட்டி பொரியல்
மிளகாய் பச்சடி
உருளைக்கிழங்கு காரகறி
சேப்பங்கிழங்கு வருவல்
வெஜிடபிள் கட்லெட்
பாதம்கீர் பாயாசம்
அப்பளம்
மினி ஜிலேபி
மினி புலவு சாதம் (ஒரு கையளவு)
மினி கறிவேப்பிலை சாதம் (ஒரு கையளவு)
துவக்கத்தில் ஒரு கப் பேபி கார்ன் சூப்
முடிவில் பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம்
---------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

34 comments:

  1. I am first Today...:-)

    சுக்கிரன் ஐந்தாம் வீட்டின் அதிபதியாக இருப்பதுடன், அவன் ஏழாம் வீட்டில் அமர்ந்திருக்கும் அமைப்புள்ள பெண்ணிற்கு அல்லது இளைஞனுக்குக் காதல், திருமணத்தில் முடிவதுடன் மகிழ்ச்சியான இல்லற வாழ்வையும் கொடுக்கும்

    Sukran in 7th house is not good, right (kalathira karahan kalathira sthanatil)? Is this an exception?

    ReplyDelete
  2. கடைசியாக சொன்னது. ஒரே மெனுவில் இத்தனை அயிட்டம் இருக்குமா. ஒரு திரைப் படத்தில் நடிகர் திலகம், நிறைய உணவு வகைகள் இருப்பதைப் பார்த்து விட்டு இவையெல்லாம் உண்டு களிப்பதற்கா, கண்டு களிப்பதற்கா என்று கேட்பார். எனக்கு அது ஞாபகம் வந்து விட்டது.

    ReplyDelete
  3. Guru Vanakkam,

    Aammam pogumpodhu ippadi or menu pottu engalai verupethina eppadi.

    Just kidding. Enjoy

    Ramadu

    ReplyDelete
  4. ஒரு சிறு விளக்கம். சுக்கிரனுடன் செவ்வாய் சேர்ந்தால் அது care free காதல் என்ற வகையில் சேர்ந்து விடும். (சிலர் இதற்கு இன்னொரு வார்த்தையும் பயன் படுத்துவார்கள். With no string attached.) சந்திரன், மாதுர்காரகனும் கூட. தாய்மை உணர்வைத் தூண்டுபவர். காதல் திருமண பந்தத்தில் முடிய வேண்டும் என்ற பொறுப்புணர்வை கொடுப்பார். அதனால்தான் சுக்கிரன் செவ்வாயுடன் சம்பந்தப்படக் கூடாது என்றும் சந்திரனுடன் இருப்பது நல்லது என்றும் கூறப்படுகிறது.

    ReplyDelete
  5. Dallas Kannan கேட்ட கேள்வியை ஒட்டி ஒரு தொடர் கேள்வி. காரகன் அந்த காரகத்துவம் இருக்கும் ஸ்தானத்தில் இருந்தால் நல்லதல்ல என்று படித்த ஞாபகம். சனி கர்மகாரகன். அவர் பத்தாம் வீட்டில் இருப்பது நல்லதே என்றும் படித்ததாகவும் ஞாபகம். சந்தேகத்தை தெளிவு படுத்துவீர்களா?

    மேலே சொன்ன அமைப்பில் ஒன்று எனக்கு உள்ளது. 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் சமீப காலமாக வாழ்க்கையில் அவ்வளவு மகிழ்ச்சியில்லை. வேறு அமைப்புகள் காரணமாக இருக்கலாம்.

    உங்கள் பயனம் இனிதே அமைய வாழ்த்துகள். விடுமுறையில் பழைய பாடங்களை படிக்க வேண்டும்.

    ReplyDelete
  6. வாத்தியார் அய்யா, உங்கள் சேவை மகத்தானது. திருச்செந்தூர் முருகன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லா வளங்களையும் மகிழ்ச்சியையும் அளிக்க வேண்டுமென்று மனமார பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  7. ayya
    menuvai padikum poluthe naavil echil vuruthaiya.

    ReplyDelete
  8. ஐயா , வணக்கம்.
    ஒரு சந்தேகம். நண்பர் ஒருவருக்கு கடக​ லக்நம். 7ஆம் அதிபதி சநி 7இல்.
    சுக்ரன் கன்ன்Iயில் நீசம்.
    5இல் ( விருச்சிகம்) செவ்வாய் , ஸூர்யன் , புத்ன். சுக்கிரன்Uக்கு நீச பங்கம் இல்லை.
    Sir , could you please explain the consequences of the above. Thanks in advance

    ReplyDelete
  9. மனம் போல் மாங்கல்யம். தலைப்போடு உண்மைக் காதல் எது என்பதை முகப்பு பழமொழியாகவும், காதலின் அலசலை பாடத்திலும், காரைக்குடி மெனுவையும் சேர்த்து நல்ல பதிவு இன்று.

    மெனுவில் உள்ள முதல் 4 ஐடத்திற்கும் ரெசிபி கொடுத்தால் செய்து பார்க்க சொல்லலாம் வீட்டில். நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா,இந்த காலத்து இளைஞர்கள் கண்டதும் காதலில் விழுந்து அவசர அவசரமாக திருமணம் செய்து வாழ்க்கையையும் கோர்ட்டு வழக்கு என்று சென்று சீக்கிர‌மே முடித்துக்கொள்கிறார்கள் கண்டிப்பாக அவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமைகிற்து.
    5ம் அதிபதி சுக்கிரனும் 7ம் அதிபதி குருவும் பரிவர்த்தனையில் இருந்தால் ஜாதகனுக்கு காதல் திருமணம் நடை பெறுமா? அல்லது மனைவி,மக்களால் யோகம் உண்டாகுமா? நன்றி ஐயா.

    ReplyDelete
  11. குருவிற்கு வணக்கம்,
    நல்ல ஓர் பாடம்,
    நன்றி

    ReplyDelete
  12. பதிவில் வந்த
    புகைப்படம் பற்றி கருத்து சொல்லவா?

    காதல் ஜோடி தான் என்றால் இவர்
    காதல் வெற்றியடையாது

    முப்பது டிகிரிக்கு மேல் விலகிஉள்ள
    முழுமையான பெருவிரல் அமைப்பு

    சுக்கிர மேட்டின் தன்மையை சொல்லும்
    சுத்தமாக சொல்லும் கைரேகை சாத்திரம்

    ஒவ்வொரு இது போன்ற பதிவிலும்
    ஒரு கைரேகை ஆய்வினை சேர்த்தால்

    அற்புதம் அற்புதம்
    அது அற்புதம் தானே...

    ReplyDelete
  13. கவியரசரின் இந்த
    கானத்தை கேளுங்கள்..

    காதலிக்க நேரமில்லை
    காதலிப்பார் யாருமில்லை

    வாலிபத்தில் காதலிக்க
    ஜாதகத்தில் வழியுமில்லை

    பஞ்சணையும் கண்டதில்லை
    பால் பழம் குடித்ததில்லை

    வஞ்சி உன்னைக் காணும்வரை மனதும் துடித்ததில்லை

    பஞ்சுபோல நரைவிழுந்து
    பார்வையும் குழிவிழுந்து

    இரண்டு கெட்ட வேளையிலே கண்டேனே உன்னையடி

    காயிலே சுவைப்பதில்லை
    கனிந்ததும் கசப்பதில்லை

    நோயில்லா உடலிருந்தால்
    100 வரை காதல் வரும்

    மாமியார் கொடுமையில்லை மாமனார் யாருமில்லை இந்த

    சாமியை மணம் முடித்தால் சந்தோசம் குறைவதில்லை

    ReplyDelete
  14. மெனு பட்டியலை
    மேன்மை தகு லால்குடிக்கு அனுப்புங்கள்

    பட்டியலில் உள்ள
    பல சாப்பிட்டத்தான் என்றால்

    பந்திக்கு நான் வரவில்லை
    பதிவு செய்கிறேன் இன்னொருதகவலை

    அறுசுவையின்றி உண்டவந்த அய்யர்
    அரிசி சாப்பிடுவதை முழுதும் நிறுத்தி விட்டார் இப்போது

    கடந்த ஒரு வருடமாக
    நடக்கும் வாழ்வு கடக்கும் வரை

    தொடரும், படத்தில் சொன்ன
    செய்தி போல சண்டையிட தயாராக

    ReplyDelete
  15. /////Blogger Dallas Kannan said...
    I am first Today...:-)
    சுக்கிரன் ஐந்தாம் வீட்டின் அதிபதியாக இருப்பதுடன், அவன் ஏழாம் வீட்டில் அமர்ந்திருக்கும் அமைப்புள்ள பெண்ணிற்கு அல்லது இளைஞனுக்குக் காதல், திருமணத்தில் முடிவதுடன் மகிழ்ச்சியான இல்லற வாழ்வையும் கொடுக்கும்
    Sukran in 7th house is not good, right (kalathira karahan kalathira sthanatil)? Is this an exception?////

    சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய 3 கிரகங்களும் சுபக்கிரகங்கள். தங்கள் காரகத்துவத்தையும் மீறி நன்மை செய்யக்கூடியவை!

    ReplyDelete
  16. ////Blogger Ak Ananth said...
    கடைசியாக சொன்னது. ஒரே மெனுவில் இத்தனை அயிட்டம் இருக்குமா. ஒரு திரைப் படத்தில் நடிகர் திலகம், நிறைய உணவு வகைகள் இருப்பதைப் பார்த்து விட்டு இவையெல்லாம் உண்டு களிப்பதற்கா, கண்டு களிப்பதற்கா என்று கேட்பார். எனக்கு அது ஞாபகம் வந்து விட்டது./////

    உண்டு களிப்பதற்குத்தான். பறிமாறும்போது, வேண்டியதை மட்டும் கேட்டு வாங்கிக்கொள்ளலாமே!!

    ReplyDelete
  17. ////Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    Aammam pogumpodhu ippadi or menu pottu engalai verupethina eppadi.
    Just kidding. Enjoy
    Ramadu/////

    நல்லது. நன்றி ராமுடு. நமக்குப் பதிலாக/நமது சார்பாக வாத்தியார் சாப்பிடுவார் என்று மகிழ்ச்சி கொள்ளுங்களேன் - வருத்தம் வராது!

    ReplyDelete
  18. /////Blogger Ak Ananth said...
    ஒரு சிறு விளக்கம். சுக்கிரனுடன் செவ்வாய் சேர்ந்தால் அது care free காதல் என்ற வகையில் சேர்ந்து விடும். (சிலர் இதற்கு இன்னொரு வார்த்தையும் பயன் படுத்துவார்கள். With no string attached.) சந்திரன், மாதுர்காரகனும் கூட. தாய்மை உணர்வைத் தூண்டுபவர். காதல் திருமண பந்தத்தில் முடிய வேண்டும் என்ற பொறுப்புணர்வை கொடுப்பார். அதனால்தான் சுக்கிரன் செவ்வாயுடன் சம்பந்தப்படக் கூடாது என்றும் சந்திரனுடன் இருப்பது நல்லது என்றும் கூறப்படுகிறது./////

    திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழும் மனப்பான்மை வந்துவிடும். அதைத்தானே சொல்ல வருகிறீர்கள்?

    ReplyDelete
  19. /////Blogger thozhar pandian said...
    Dallas Kannan கேட்ட கேள்வியை ஒட்டி ஒரு தொடர் கேள்வி. காரகன் அந்த காரகத்துவம் இருக்கும் ஸ்தானத்தில் இருந்தால் நல்லதல்ல என்று படித்த ஞாபகம். சனி கர்மகாரகன். அவர் பத்தாம் வீட்டில் இருப்பது நல்லதே என்றும் படித்ததாகவும் ஞாபகம். சந்தேகத்தை தெளிவு படுத்துவீர்களா?
    மேலே சொன்ன அமைப்பில் ஒன்று எனக்கு உள்ளது. 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் சமீப காலமாக வாழ்க்கையில் அவ்வளவு மகிழ்ச்சியில்லை. வேறு அமைப்புகள் காரணமாக இருக்கலாம்.
    உங்கள் பயனம் இனிதே அமைய வாழ்த்துகள். விடுமுறையில் பழைய பாடங்களை படிக்க வேண்டும்.//////

    ஜோதிடத்தில் சில விதிகளுக்கு விதிவிலக்குகளும் உண்டு. No fixed rules. அதில் சனியின் பத்தாம் வீட்டு ஆதிபத்தியமும் அடங்கும்!

    ReplyDelete
  20. ////Blogger thozhar pandian said...
    வாத்தியார் அய்யா, உங்கள் சேவை மகத்தானது. திருச்செந்தூர் முருகன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லா வளங்களையும் மகிழ்ச்சியையும் அளிக்க வேண்டுமென்று மனமார பிரார்த்திக்கிறேன்./////

    உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. Blogger Kalai Rajan said...
    ayya
    menuvai padikum poluthe naavil echil vuruthaiya./////

    இதுபோல இன்னும் பல மெனுக்கள் உள்ளன. கீழே ஒன்றைக் கொடுத்துள்ளேன். அது சிம்பிள் மெனு.

    அவரைக்காய் சாம்பார். சுண்டைவற்றல் கெட்டிக் குழம்பு, மிளகு ரசம், பலகாய் கூட்டு, கருணக்கிழங்கு மசியல், முருங்கைக்கீரை + வாழைப்பூ துவட்டல், பலாக்காய் பிரட்டல் (காரகறி) உருளைக்கிழங்கு சிப்ஸ், தயிர், கோதுமைப் பாயாசம், அப்பளம்

    போதுமா?

    ReplyDelete
  22. //////Blogger arul said...
    good lesson/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  23. /////Blogger DevikaArul said...
    ஐயா , வணக்கம்.
    ஒரு சந்தேகம். நண்பர் ஒருவருக்கு கடக​ லக்கினம். 7ஆம் அதிபதி சனி 7இல்.
    சுக்ரன் கன்னியில் நீசம். 5இல் ( விருச்சிகம்) செவ்வாய் , ஸூர்யன் , புதன். சுக்கிரனுக்கு நீச பங்கம் இல்லை.
    Sir , could you please explain the consequences of the above. Thanks in advance////

    சுக்கிரன் நீசமானாலேயே திருமணவாழ்வு சுகப்படாது சகோதரி!

    ReplyDelete
  24. ////Blogger thanusu said...
    மனம் போல் மாங்கல்யம். தலைப்போடு உண்மைக் காதல் எது என்பதை முகப்பு பழமொழியாகவும், காதலின் அலசலை பாடத்திலும், காரைக்குடி மெனுவையும் சேர்த்து நல்ல பதிவு இன்று.
    மெனுவில் உள்ள முதல் 4 ஐடத்திற்கும் ரெசிபி கொடுத்தால் செய்து பார்க்க சொல்லலாம் வீட்டில். நன்றிகள் ஐயா./////

    காய்கறிகளுக்குப் பதில் பழங்கள் அவ்வளவுதான். பழங்களை அரை வேக்காட்டில் தனியாக எடுத்துவைத்துக்கொண்டு சேர்க்க வேண்டும். ரசத்தில் எழுமிச்சம் பழச்சாற்றிற்குப் பதில் அன்னாசிப் பழச்சாறு அவ்வளவுதான். முயன்று பாருங்கள்!

    ReplyDelete
  25. ////Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா,இந்த காலத்து இளைஞர்கள் கண்டதும் காதலில் விழுந்து அவசர அவசரமாக திருமணம் செய்து வாழ்க்கையையும் கோர்ட்டு வழக்கு என்று சென்று சீக்கிர‌மே முடித்துக்கொள்கிறார்கள் கண்டிப்பாக அவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமைகிற்து.
    5ம் அதிபதி சுக்கிரனும் 7ம் அதிபதி குருவும் பரிவர்த்தனையில் இருந்தால் ஜாதகனுக்கு காதல் திருமணம் நடை பெறுமா? அல்லது மனைவி,மக்களால் யோகம் உண்டாகுமா? நன்றி ஐயா.//////

    பரிவர்த்தனையால் நீங்கள் சொன்ன இரண்டுமே இருக்கும். அத்துடன் லக்கினாதிபதியின் வலிமையும் முக்கியம்!

    ReplyDelete
  26. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்,
    நல்ல ஓர் பாடம்,
    நன்றி/////

    நல்லது. நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  27. ////Blogger வேப்பிலை said...
    பதிவில் வந்த
    புகைப்படம் பற்றி கருத்து சொல்லவா?
    காதல் ஜோடி தான் என்றால் இவர்
    காதல் வெற்றியடையாது
    முப்பது டிகிரிக்கு மேல் விலகிஉள்ள
    முழுமையான பெருவிரல் அமைப்பு
    சுக்கிர மேட்டின் தன்மையை சொல்லும்
    சுத்தமாக சொல்லும் கைரேகை சாத்திரம்
    ஒவ்வொரு இது போன்ற பதிவிலும்
    ஒரு கைரேகை ஆய்வினை சேர்த்தால்
    அற்புதம் அற்புதம்
    அது அற்புதம் தானே../////.

    எனக்குத் தெரியாததைச் செய்யச்சொல்கிறீர்களே சுவாமி?

    ReplyDelete
  28. ////Blogger வேப்பிலை said...
    கவியரசரின் இந்த
    கானத்தை கேளுங்கள்..
    காதலிக்க நேரமில்லை
    காதலிப்பார் யாருமில்லை
    வாலிபத்தில் காதலிக்க
    ஜாதகத்தில் வழியுமில்லை
    பஞ்சணையும் கண்டதில்லை
    பால் பழம் குடித்ததில்லை
    வஞ்சி உன்னைக் காணும்வரை மனதும் துடித்ததில்லை
    பஞ்சுபோல நரைவிழுந்து
    பார்வையும் குழிவிழுந்து
    இரண்டு கெட்ட வேளையிலே கண்டேனே உன்னையடி
    காயிலே சுவைப்பதில்லை
    கனிந்ததும் கசப்பதில்லை
    நோயில்லா உடலிருந்தால்
    100 வரை காதல் வரும்
    மாமியார் கொடுமையில்லை மாமனார் யாருமில்லை இந்த
    சாமியை மணம் முடித்தால் சந்தோசம் குறைவதில்லை/////

    பாட்டின் பின்பகுதி, தலைகீழாக மாறியிருக்குமே! அதைக் கவனித்தீர்களா?

    ReplyDelete
  29. //////Blogger வேப்பிலை said...
    மெனு பட்டியலை
    மேன்மைதகு லால்குடிக்கு அனுப்புங்கள்
    பட்டியலில் உள்ள
    பல சாப்பிட்டத்தான் என்றால்
    பந்திக்கு நான் வரவில்லை
    பதிவு செய்கிறேன் இன்னொருதகவலை
    அறுசுவையின்றி உண்டவந்த அய்யர்
    அரிசி சாப்பிடுவதை முழுதும் நிறுத்தி விட்டார் இப்போது
    கடந்த ஒரு வருடமாக
    நடக்கும் வாழ்வு கடக்கும் வரை
    தொடரும், படத்தில் சொன்ன
    செய்தி போல சண்டையிட தயாராக///////

    நாங்கள் அரிசியைத் துறக்கவும் தயாராக இல்லை! அத்துடன் சண்டையிடவும் தயாராக இல்லை!

    ReplyDelete
  30. //திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழும் மனப்பான்மை வந்துவிடும். அதைத்தானே சொல்ல வருகிறீர்கள்?//

    ஆமாம். இந்த combinationல் வேறு கிரக பார்வை அல்லது சேர்க்க மாற்றம் ஏற்படுத்தலாம். இவர்கள் திருமணம் செய்துக் கொண்டாலும் தன் வாழ்க்கைத் துணைக்கு ஒரு பொறுப்புள்ள கணவன்/மனைவியாக இருக்க வேண்டும் என்றோ தன் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தாய்/தந்தையாக இருக்க வேண்டும் என்ற மனப்பான்மை இருக்காது.

    ReplyDelete
  31. சந்திரன், சுக்கிரன் ஏழாம் விட்டில் கும்பத்தில், சனியோ கடகத்தில் இதற்க்கு என்ன பலன்? சனியை, செவ்வாய் தனது 8ம் பார்வையாக பார்க்கிறார்.......

    ReplyDelete
  32. /////Blogger Ak Ananth said...
    //திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழும் மனப்பான்மை வந்துவிடும். அதைத்தானே சொல்ல வருகிறீர்கள்?//
    ஆமாம். இந்த combinationல் வேறு கிரக பார்வை அல்லது சேர்க்க மாற்றம் ஏற்படுத்தலாம். இவர்கள் திருமணம் செய்துக் கொண்டாலும் தன் வாழ்க்கைத் துணைக்கு ஒரு பொறுப்புள்ள கணவன்/மனைவியாக இருக்க வேண்டும் என்றோ தன் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தாய்/தந்தையாக இருக்க வேண்டும் என்ற மனப்பான்மை இருக்காது./////

    உண்மை. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!!

    ReplyDelete
  33. /////Blogger Remanthi said...
    சந்திரன், சுக்கிரன் ஏழாம் விட்டில் கும்பத்தில், சனியோ கடகத்தில் இதற்கு என்ன பலன்? சனியை, செவ்வாய் தனது 8ம் பார்வையாக பார்க்கிறார்......./////

    உதிரியான கிரகநிலைகளை வைத்துக்கொண்டு, நீங்கள் எதிர்பார்க்கும் பலன்களைச் சொல்ல முடியாது. சொன்னால் தவறாகிவிடும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com