மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.6.13

Astrology: கைக்கு எட்டியது ஏன் வாய்க்கு எட்டவில்லை?

 

Astrology: கைக்கு எட்டியது ஏன் வாய்க்கு எட்டவில்லை?

பயிற்சிப்பாடம்

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்றால் வருத்தம் அதிகமாகும். இரண்டு மடங்காகும். கைக்கு எட்டவில்லை என்றால் சும்மா இருப்போம். கைக்கு எட்டிவிட்டு, கையில் கிடைத்துவிட்டு, அது வாய்க்குள் சேரவில்லை என்றால் வருத்தம் அதிகமாகுமா இல்லையா?

சிலருக்கு ஜாதகப்படி அப்படியாகிவிடும்.

பதினொன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கும் கிரகத்தின் மகாதிசை மிகவும் நன்மையானதாக இருக்கும் என்பது முக்கியவிதி. ஆனால் ஒரு ஜாதகனுக்கு, பதினொன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கும் கிர்கத்தின் மகாதிசை நடந்தும் அது பயனளிக்கவில்லை.

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.




1. சிம்ம லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சூரியன் 4ல். கேந்திரத்தில். நல்லபடியாக உள்ளார்
2. சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனாகிய செவ்வாய் திரிகோணத்தில் (9ல்) ஆட்சி பலத்துடன் உள்ளார்.
3. அத்துடன் அவருடைய பார்வை கல்விகாரகன் புதனின் மேல் விழுகிறது.

ஜாதகன் பூரட்டாதி நட்சத்திரக்காரர். ஆரம்பதிசையான குரு திசையில் இருப்பு 9 ஆண்டுகள். அதற்குப் பிறகு 19ஆண்டுகாலம் சனி மகாதிசை. அது 28 வயதுவரை நீடித்தது. சனி திசை ஜாதகனுக்குச் சரியான பலனைக் கொடுக்கவில்லை. இளம் வயதில் தொடங்கிய சனி திசை ஜாதகனை அலைக்கழித்து, ஜாதகனின் படிப்பைக் கெடுத்துவிட்டது.

காரணம் என்ன?

1. சனி கேதுவின் கூட்டணியால் கெட்டிருக்கிறது.
2. அத்துடன் சனியின் மேல் எந்த சுபக்கிரகத்தின் பார்வையும் விழவில்லை.
3. தசாநாதனாகிய சனி 4ஆம் வீட்டையோ அல்லது அதன் அதிபதியையோ பார்க்காமல் விலகி/ஒதுங்கி இருக்கிறது.
4. கல்வி ஸ்தானமாகிய 4ஆம் வீட்டின் அதிபதி செவ்வாய், அந்த வீட்டிற்கு ஆறில் அமர்ந்துள்ளார்

இந்த 4 காரணங்களால் ஜாதகனால் படிக்க முடியாமல் போய்விட்டது.

ஆகவே நல்ல தசாபுத்தி நடந்து பயன் இல்லை. பயன் அளிக்கும்  வகையில் தசாநாதன் இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++

22 comments:

  1. வருகை பதிவுடன்
    வணக்கம்

    ReplyDelete
  2. சனி பகவான் வக்கிரம் என்ற முக்கிய தகவல் விடுபட்டு விட்டது. நன்மையான பலன் கிடக்காததற்கு அதுவும் காரணமாக இருக்கலாம். உடன் மாந்தியும் வேறு இருக்கிறாரே.

    ReplyDelete
  3. Vanakkam ayya ! Function nalla padiyaga mudinthatha ?

    ReplyDelete
  4. நல்ல பாடம். மேலும், இந்த அமைப்புக்கு, சனி வக்கிரத்தில் அமைந்துள்ளது (4, டிசம்பர், 1974); அவர் ராஹுவின் நட்சத்திரக் காலில் அமர்ந்த்ள்ளார். அதோடு ராஹு அமர்ந்துள்ள வீட்டின் அதிபதி குரு (அவரும் படிப்புக்குத் துணை நிற்பவர்தானே) நீச்சமாகியுள்ளார். காரகன் புதன் நிற்பதுவும் குருவின் நட்சத்திர காலில்தான். நாலில் விரைய ஸ்தானாதிபதி அமர்ந்துள்ளார். மூன்றில் அமர்ந்த புதனுக்கு, பகைவன் செவ்வாயின் பார்வை நல்லதல்ல - ஒரு நல்ல பதிவிற்கு ஆசிரியருக்கு நன்றி - ராஜுலு

    ReplyDelete
  5. வணக்கம்
    தங்கள் ஊரில் நடந்த திருவிழா பற்றிய் பகிர்வுகள் எப்போது பதிவாகும் ஐயா.
    குரு நீசமானாலும் அவர் தனக்கே உரிய நற்குணத்தால் நேசமாக் இருப்பார் என தங்கள் பதிவில் பார்த்திருக்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  6. ayya
    vanakkam, function ellam nallapadiyaka mudinthatha.to day lesson one small doubt, if saniand mercury have good paral in BAV

    ReplyDelete
  7. சரி ராசியாவது உதவி செய்யுமா என்று பார்த்தால் ராசிக்கு 4க்கு உடைய சுக்ரன் 12ல் மறைவு! படிப்பு சம்பந்தமாக எல்லாமே அவருக்கு ஊற்றிக் கொண்டது போல!

    ReplyDelete
  8. Respected Sir
    since laknathipathi and Bakyathipathi is good, is his life good even though he is not educated? there are lot of college/school drop outs are owners of big companies and some scientists there too.

    ReplyDelete
  9. ////Blogger arul said...
    very good lesson/////

    நல்லது. நன்றி அருள்!

    ReplyDelete
  10. ////Blogger வேப்பிலை said...
    வருகை பதிவுடன்
    வணக்கம்/////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  11. ////Blogger Ak Ananth said...
    சனி பகவான் வக்கிரம் என்ற முக்கிய தகவல் விடுபட்டு விட்டது. நன்மையான பலன் கிடைக்காததற்கு அதுவும் காரணமாக இருக்கலாம். உடன் மாந்தியும் வேறு இருக்கிறாரே./////

    ஆமாம் மாந்தியின் சேர்க்கையும் ஒரு முக்கிய காரணம். உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!!

    ReplyDelete
  12. /////Blogger Sattur Karthi said...
    Vanakkam ayya ! Function nalla padiyaga mudinthatha ?//////

    ஆஹா, நல்லபடியாக முடிந்தது. அது பற்றிய தகவல்களை அடுத்த வாரம் பதிவிடுகிறேன். நன்றி!

    ReplyDelete
  13. ////Blogger Srinivasa Rajulu.M said...
    நல்ல பாடம். மேலும், இந்த அமைப்புக்கு, சனி வக்கிரத்தில் அமைந்துள்ளது (4, டிசம்பர், 1974); அவர் ராஹுவின் நட்சத்திரக் காலில் அமர்ந்த்ள்ளார். அதோடு ராஹு அமர்ந்துள்ள வீட்டின் அதிபதி குரு (அவரும் படிப்புக்குத் துணை நிற்பவர்தானே) நீச்சமாகியுள்ளார். காரகன் புதன் நிற்பதுவும் குருவின் நட்சத்திர காலில்தான். நாலில் விரைய ஸ்தானாதிபதி அமர்ந்துள்ளார். மூன்றில் அமர்ந்த புதனுக்கு, பகைவன் செவ்வாயின் பார்வை நல்லதல்ல - ஒரு நல்ல பதிவிற்கு ஆசிரியருக்கு நன்றி - ராஜுலு/////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  14. /////Blogger சர்மா said...
    வணக்கம்
    தங்கள் ஊரில் நடந்த திருவிழா பற்றிய் பகிர்வுகள் எப்போது பதிவாகும் ஐயா.
    குரு நீசமானாலும் அவர் தனக்கே உரிய நற்குணத்தால் நேசமாக் இருப்பார் என தங்கள் பதிவில் பார்த்திருக்கிறேன்.
    நன்றி//////

    பொறுத்திருங்கள். அடுத்த வாரம் பதிவிடுகிறேன். நன்றி!

    ReplyDelete
  15. ////Blogger Kalai Rajan said...
    ayya
    vanakkam, function ellam nallapadiyaka mudinthatha.to day lesson one small doubt, if sani and mercury have good paral in BAV//////

    அப்படியிருக்க வாய்ப்பில்லை. இருந்தால் பலன் வேறு மாதிரி இருக்கும்!

    ReplyDelete
  16. ////Blogger kmr.krishnan said...
    சரி ராசியாவது உதவி செய்யுமா என்று பார்த்தால் ராசிக்கு 4க்கு உடைய சுக்ரன் 12ல் மறைவு! படிப்பு சம்பந்தமாக எல்லாமே அவருக்கு ஊற்றிக் கொண்டது போல!////

    உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  17. //////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    since laknathipathi and Bakyathipathi is good, is his life good even though he is not educated? there are lot of college/school drop outs are owners of big companies and some scientists there too.///////

    பில் கேட்ஸ்கூட படிப்பை பாதியில் விட்டவர்தான்! லக்கினாதிபதியும் பாக்கியாதிபதியும் நன்றாக இருந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்!

    ReplyDelete
  18. மதிப்பிற்குரிய அய்யா, வணக்கம். உங்கள் பாடங்களை வெகு நாட்களாக படித்து வருகிறேன். நன்றி.

    லக்கினாதிபதி எட்டில் மறையக்கூடாது என்று கூறியிருக்கிறீர்கள். சுக்கிரன் எட்டில் இருந்தால் நல்லது என்றும் கூறியிருக்கிறீர்கள். துலா லக்கினத்திற்கு சுக்கிரன் இடபத்தில் (எட்டாம் இடத்தில்) இருந்தால் நல்லதா?

    அது போல் பத்தாம் வீட்டிற்கு ஆறில் கோச்சார சனி சஞ்சாரம் செய்வது நல்லதல்ல என்று கூறியிருந்தீர்கள். பத்தாம் வீட்டில் சந்திரன் ஆட்சி பலத்தோடு இருந்தாலும் அதே விதிதானா? ஏனென்றால், சந்திர இராசிக்கு ஆறில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலம் நல்லது என்றும் எழுதியிருக்கிறீர்கள். என் சந்தேகங்களுக்கு பதில் எழுதுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    நண்பன்

    ReplyDelete
  19. ayya enakku lagnathil 38 paral ullathu ....ithu nalla amaippu thane ayya

    ReplyDelete
  20. /////Blogger thozhar pandian said...
    மதிப்பிற்குரிய அய்யா, வணக்கம். உங்கள் பாடங்களை வெகு நாட்களாக படித்து வருகிறேன். நன்றி.
    லக்கினாதிபதி எட்டில் மறையக்கூடாது என்று கூறியிருக்கிறீர்கள். சுக்கிரன் எட்டில் இருந்தால் நல்லது என்றும் கூறியிருக்கிறீர்கள். துலா லக்கினத்திற்கு சுக்கிரன் இடபத்தில் (எட்டாம் இடத்தில்) இருந்தால் நல்லதா?//////

    நல்லது! நல்லது! நல்லது சுவாமி!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ////அது போல் பத்தாம் வீட்டிற்கு ஆறில் கோச்சார சனி சஞ்சாரம் செய்வது நல்லதல்ல என்று கூறியிருந்தீர்கள். பத்தாம் வீட்டில் சந்திரன் ஆட்சி பலத்தோடு இருந்தாலும் அதே விதிதானா? ஏனென்றால், சந்திர இராசிக்கு ஆறில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலம் நல்லது என்றும் எழுதியிருக்கிறீர்கள். என் சந்தேகங்களுக்கு பதில் எழுதுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
    நண்பன்////

    கோள்சாரச் சனியை வைத்து ஏன் குழப்பிக்கொள்கிறீர்கள்? கோள்சாரச் சனி சஞ்சாரம் செய்யும் இடங்களில், முப்பதும் முப்பதிற்கு மேற்பட்ட பரல்களும் இருந்தால் எந்த பாதிப்பும் இருக்காது!

    ReplyDelete
  21. ////Blogger karthik kumar said...
    ayya enakku lagnathil 38 paral ullathu ....ithu nalla amaippu thane ayya/////

    லக்கினாதிபதி என்ன ஆனார்? பலனை அனுபவிப்பதற்கு அவர் முக்கியமில்லையா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com