மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.1.21

நமக்கு வரவேண்டியது வந்தே தீரும்


நமக்கு வரவேண்டியது வந்தே தீரும் 

#புருசன் செத்துட்டான் 

பொட்டப்புள்ளையை காப்பாற்ற புளியமரத்தடியில் நைட்டு டிபன்கடை போட்டாள் இளவயது ப்ரியா

கடைபோட்ட அன்னிக்கே ஒரு போலீஸ்காரன் வந்தான் பர்மிசன் யார்கிட்ட கேட்ட மிட்நைட் ஆச்சு கடையைச்சாத்துன்னு

எதையாவது சொல்லிதினமும் ஓசியில வயிறுமுட்ட தின்பான்

பணம் குடுத்து சாப்பிடுபவர்கள் இன்னும் ஒரு தோசை எக்ஸ்ட்ரா சாப்பிடமாட்டார்களா என ஏக்கமாயிருக்கும். அவர்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறுவாள் ப்ரியா

ஆனால் இந்த ஓசிபோலீஸ் ஒருதோசை குறைவாக சாப்பிடமாட்டானா என நினைத்தால்  அவன் தான் ஆறஅமர உட்கார்ந்து நிறைய தின்னுட்டு பார்சலும் வாங்கிட்டு போவான்.

 என்ன செய்ய? புளியமரத்தடியில் கடைபோட்டால் இப்படித்தான் வருவார்கள்...

நம்ம தலைவிதி அப்படின்னு போலீசுக்கு வேண்டாவெறுப்பாக பரிமாறுவாள்

என்ன சுவையா சமைத்தாலும் டவுனுக்குள் நாலுகடை சாத்தினபிறகுதான் நாலுசனம் வரும் ப்ரியாவின் கடைக்கு...நாலு வருசம் ஆகியும் நயாபைசா மிச்சம் பண்ணமுடியலை

தனது கைப்பக்குவத்தின் மீது நம்பிக்கைவைத்து வாரக்கந்துக்கு பணம் வாங்கி டவுனுக்குள் கடையை பிடித்தாள்

ஒரே வாரத்தில் ப்ரியாவுக்கு நம்பிக்கை வந்திடுச்சு அப்பாடா இனி ஓரளவுக்கு தப்பிச்சிடலாம்ப்பா கடை வாடகை, கந்துவட்டி போக நாலுகாசை கண்ணுல பார்த்திடலாம்னு நினைச்சநேரம் மறுபடியும் அதே ஓசி போலீஸ் உள்ளே வர்றான்

வாடி வா, இன்னைக்கு உன்னை நாலுவார்த்தை நல்லா கேட்கனும். இனி உனக்கு நான் பயப்படத்தேவையில்லை

இன்னிக்கு சாப்பிட்டதுக்கு  இப்பவே காசைக்குடுடான்னு சட்டமா கேட்கனும்னு நினைச்சவேளையில்இந்தாம்மா ப்ரியா இதுல ஒரு லட்சரூபாய் இருக்கு, நாலு வருசம் நான் உன் புளியமரக்கடையில் சாப்பிட்டதுக்கான பில்.

உன்புருசன் என்னோட படிச்சவன்தான்புருசன் இல்லாம அந்த நைட்டுநேரம் நீ அந்தஇடத்தில் வியாபாரம் பண்றது எவ்வளவு ரிஸ்க் எனத்தெரிஞ்சதால் உன்னோட பாதுகாப்புக்காகத்தான் நான் தினமும் அங்கே வந்தேன்.

நான் கொடுக்கும் இந்தப்பணம்தான் புளியமரத்தடிக்கடையின் லாப பணம்.வச்சிக்கோ....கையில் கொடுத்தான் 

ப்ரியாவுக்கு ஒரு நிமிடம் என்னசொல்வதென்றே தெரியவில்லைகடைசியாகச்சொன்னாள்... 

வாங்க  சாப்பிடுங்க

வாழ்க்கையில நமக்கு வரவேண்டியது வந்தே தீரும்

#உழைப்பை மட்டும் விட்டு விட கூடாது ....😊😊

 படித்ததில் பிடித்தது!

அன்புடன்

வாத்தியார்

=======================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.1.21

சினத்தைத் தவிர்த்து சிறப்பாக வாழ்வோம்!!!


சினத்தைத் தவிர்த்து சிறப்பாக வாழ்வோம்!!! 

'' சினத்தை தவிர்ப்போம்..''

.................................. 

நாம் ஒரு செயலை சரி என்று தீர்மானித்துக் கொண்டு வைத்து இருப்போம். அந்த செயலை மற்றொருவர் மீறும் போது நம்மை அறியாமலே நமக்கு மற்றவர் மீது சினம் வருவதற்கான முதல் படி ஆகும்

உலகத்தில் உள்ள அனைவரையும் நம்மால் சரியான நேர்கோட்டில் கொண்டு செல்ல முடியாது. இதனால், நமது வேலையும் செய்யமுடியாமல் தேவையில்லாத பிரச்சனைகளில் நாம் செல்ல நேர்ந்திடும்

ஓர் அரசன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடிய வில்லை

ஒரு நாள் அறிஞர் ஒருவர் அந்த நாட்டுக்கு வந்து இருந்தார்.அவரை சந்தித்து தன் குறையை சொன்னான் அந்த மன்னன்.. 

அவர் மன்னனிடம்,' 

' என்னிடம் அதியமான பொன்னால் செய்த ஒரு குவலை ஒன்று இருக்கிறது..அதில் தண்ணீரை நிரப்பி குடித்து வந்தால் நாளடைவில் உன் சினம் இல்லாமல் போய்விடும் என்று சொல்லி அந்த குவளையை அவனிடம் கொடுத்தார்

"உனக்குச் சினம் எப்போது எல்லாம் வருகிறதோ, அப்போது இதில் மூன்று முறை தண்ணீர் நிரப்பிக் குடி; பிறகு சினமே வராது" என்று கூறிவிட்டு சென்றார்

அன்றில் இருந்து அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான். சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது

பல வருடங்கள் சென்றன.அந்த குவளையை கொடுத்த அந்த அறிஞர் மீண்டும் அந்த நாட்டுக்கு வந்தார்

அரசன் அந்த அறிஞரை சந்தித்து குவலை கொடுத்ததற்காக பலமுறை நன்றி கூறித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் மன்னன்

"மன்னனே உன்னை ஏமாற்ற நான் விரும்ப வில்லை. அது அதிசயமான குவளை அல்ல,. சாதாரணமான. குவளைதான்... 

''சினம்'' வரும்போது சிந்திக்க நேரம் இருக்காது. சிந்தனை வந்தால் சினம்தானே குறையும்.. 

தண்ணீரை மூன்று முறை ஊற்றிக் குடிக்கும் போது நேரம் கிடைக்கிறது. அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன

ஆத்திரம் நியாயத்திற்குத் தன் இடத்தைக் கொடுக்கிறது" என்று கூறினார்

ஆம்.,நண்பர்களே.., 

மற்றவர்கள் நம்மிடத்தில் கோபப்பட்டாலும்அதை சகித்துக் கொண்டு பேசாமல் அமைதியாக உட்கார வேண்டும். இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது

நாம் கோபப்படும் போது மற்றவர்கள் நம்மீது கோபப்படும் போதும், நாம் அமைதியாகவும், பக்குவமாகவும் இருப்பது நல்லது

எல்லா நேரங்களிலும் நாம் நிதானத்தோடு இருந்தால் நிம்மதியாக வாழலாம்

எனவே, சினத்தை தணித்து அனைவரிடத்திலும்,அன்பு செலுத்தி, நற்புகழ் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வோம்.🙏🏻🌺💐

 படித்ததில் பிடித்தது

அன்புடன்

வாத்தியார்

==========================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.1.21

2028 வரை மோடி தான் பிரதமர்!!!!!!


2028 வரை மோடி தான் பிரதமர்!!!! 

*ஜோதிடம் அறியப்பட்ட சுமார் 2000 வருடகாலத்திற்கு முன், இந்தியாவில் வாழ்ந்த ஞானிகள் ஒரு பேரரசனின் ஜாதகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று போதித்த அனைத்து விதிகளையும் நம் காலத்தில் முழுமையாக ஒருவரின் ஜாதகத்தில் இருக்கிறது என்றால் அது மோடியோட ஜாதகம் தான்

மோடியோட ஜாதகம் மகாராஜ யோக ஜாதகம் இல்லையென்றால் குஜராத்தில் ஒரு சாமாண்ய குடும்பத்தில் எந்த ஒரு அரசியல் பின்புலமும் இன்றி பிறந்தவரால் இன்று இந்தியாவையே ஆளும் பிரதமர் பதவியில் இருக்கிறார் என்றால் அதற்கு உழைப்பு மட்டும் போதாது யோகமும் வேண்டும்

லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், சரன்சிங், விபி சிங், சந்திரசேகர், நரசிம்மராவ், தேவகவுடா .கே. குஜ்ரால் ஏன் நேரு குடும்பத்தில் இருந்து ராஜிவ்காந்தி கூட  அதிர்ஸ்டவசமாக பிரதமராக வந்துள்ளார்கள்

ஆனால் அடுத்து அவர்களால் ஏன் பிரதமர் பதவியில் நீடிக்க முடியவில்லை. பிரதமர் பதவிக்கு அவர்களை கொண்டு வந்த அதிர்ஷ்டம் ஏன் கடைசிவரை துணை நிற்கவில்லை

பொதுவாக ஒரு நபர், நாட்டின் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ மிக உயர்ந்த பதவிக்கு வர வேண்டுமானால், அந்த நபரின் ஜாதகத்தில் உள்ள 10ம் இடத்தின் ராசியும், லக்னமும் அவருக்கு உதவி செய்யும் வகையில் இருக்க வேண்டும். 10 ம் இடம் பதவியைக் கொடுத்தாலும், அந்த பதவியை நிர்வகிக்கும் ஆற்றலும் தக்க வைக்கும் திறமையும், இருந்தால் தான் அவரால்  இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்

அந்த ஆற்றல் மோடியிடம் இருக்கிறது

இதை அவருக்கு அளிப்பதும் அவருடைய யோக ஜாதகம் தான் நேற்று பல பத்திரிக்கை களில் இன்னும் 9 ஆண்டுகளுக்கு அதாவது 2028 ம் ஆண்டு வரை மோடியே தொடர்ந்து பிரதமராக இருப்பார் என்றும் அவரது ஜாதகத்தில் அதற்கான அமைப்புகள் உள்ளது என்றும் இப்பொழுது பல ஜோதிடர்கள் கூறுகிறார்கள் 

அதாவது வருகின்ற லோக்சபா தேர்தல் மட்டுமின்றிஅடுத்து வரும் 2024 தேர்தலிலும் பிஜேபியே வெற்றி பெறும் மோடியே பிரதமராவார் என்று நிறைய ஜோதிடர்கள் கூறி  மோடியோட எதிரிகளுக்கு பயத்தை உருவாக்கி விட்டார்கள்..

உடனே உங்களுக்கு ஜோசியக்காரன் கூறி விட்டால் போதுமா? மக்கள் வாக்களிக்க வேண்டாமா? என்று கேள்வி வரலாம். இதற்கு விடை தேடி 2014 தேர்தல் களம் நோக்கி செல்வோம்

2014 ல் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே 2014 ஜனவரியில் நம்முடைய தமிழகத்தில் உள்ள பார்த்தசாரதி என்கிற ஜோதிடர் வரும் தேர்தலில் மோடி அமோக வெற்றிபெற்று பிரதமராவார் என்றும் அதுமட்டுமின்றி 2028 வரை மோடியே பிரதமராக இருப்பார் என்றும் கூறியுள்ளதை உங்களுக்கு இப்பொழுது நினைவு படுத்துகிறேன்

ஆக ஜோதிடங்கள் பொய்யில்லை அது மோடி விசயத்தில் மெய்யாகவே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.. 

மோடியின் ஜாதகத்தில் எண்ணற்ற யோகங்கள் அமைந்துள்ளனவாம் . சந்திர மங்கள யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், மாளவிகா யோகம், புதஆதித்ய யோகம், நீச்ச பங்க ராஜயோகம், ரூசக யோகம், கஜகேசரி யோகம் என்று ஏகப்பட்ட யோகங்கள் மோடியின் ஜாதகத்தில் வரிசை கட்டி வருகிறது

அதனால் மோடியை 2028 ம்ஆண்டு வரை பிரதமர் பதவியில் இருந்து அசைக்க முடியாது என்று அவருடைய ஜாதகம் கூறுகிறது

அதனால் ராகுல்,மம்தா பானர்ஜி, மாயாவதி போன்றவர்கள் பிரதமர் கனவை மூட்டை கட்டி வைத்து விட்டு இருக்கிற வேலையை ஒழுங்காக பாருங்கள் என்று நான் கூறவில்லை மோடியோட ஜாதகம் கூறுகிறது

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் ஒருவருக்கு வெற்றியை பெற்றுத்தருகின்றன. அதிலும்  ராஜயோக ஜாதகம் இருந்தால் ஒருவருக்கு அரசாளும் யோகம் தேடி வரும்.. என்பதற்கு மோடியையே உதாரணமாக கூறலாம்

1950 ம்ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ம் தேதி பகல் 11 மணிக்கு பிறந்த மோடியோட ராசி மற்றும் லக்கினம் விருச்சகம். நட்சத்திரம் அனுசம் இதை வைத்து எழுதப்பட்ட மோடியோட ஜாதகம் அவருக்கு 35 வயது வரை நாடோடி வாழ்க்கையையே தரும் என்று கூறி இருந்தது

இதற்கு பிறகு தான் கட்சி பதவிகளின் மூலம் வெளியே தெரிய ஆரம்பித்தார்.

மோடி 1985க்கு பிறகு தீவிர அரசியலில் இருந்தாலும் 15 ஆண்டுகள் வரை அரசியல் மூலமாக ஒரு கவுன்சிலராக கூட மோடி இருந்தது இல்லை. ஆனால் 2001 ல் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பூகம்பத்தினால் அப்பொழுது குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் படேலுக்கு மக்களிடம் எதிர்ப்பு கிளம்ப இந்த எதிர்ப்பை குறைக்கவே மோடி முதல்வராக்கப்பட்டார்.

மோடி அரசியலில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாது கட்சி பணிஆற்றிக்கொண்டு இருந்த வேளையில் முதல்வர் பதவி தேடி வந்துள்ளது. இது இது தான் ராஜயோகம் என்பது

மோடியின் ஜாதகத்தில் மகாராஜா யோகம் இருந்ததால் தான் அப்பொழுது குஜராத்தில் கேசுபாய் படேலுக்கு அடுத்து பல தலைவர்கள் பிஜேபியில் இருந்து மோடி குஜராத் முதல்வராக வருகிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய ஜாதகத்தில் உள்ள மகாராஜா யோகம் தான்

இந்த மகாராஜா யோகம் இருந்தால் ஒருத்தர் என்ன நினைத்தாலும் சாதிக்க முடியுமாம். இந்த யோகத்தைப் பெற்றவர்கள் என்ன செய்தாலும், அது வெற்றியாகவே முடியும். அவர்களை யாராலும் எந்த விதத்திலும் அசைக்க முடியாது 

அடுத்து முதல்வராகஇருந்தால் மட்டும் போதுமா? அதை தக்கவைக்க ஆற்றலும் புகழும் வேண்டும் அல்லவா. அதை அளிக்க மோடி ஜாதகத்தில் சந்திர மங்கள யோகம்சந்திர யோகம், குரு மங்கள யோகம், மாளவிகா யோகம்  புதஆதித்ய யோக ம், நீச்சபங்க ராஜயோகம், ரூசக யோகம், கஜகேசரி யோகம் என்று பல யோகங்கள் அணி வகுத்து நிற்கின்றன.. 

அதோடு மோடி ஜாதகத்தில் தற்போது சுக்கிரனும், சனியும் சேர்ந்து வலுவாக உள்ளன. சந்திரன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்களும் மோடிக்கு சாதகமான நிலையில் உள்ளன. இந்த 5 கிரகங்களும் சேர்ந்து நிச்சயம் அவரை மீண்டும் பிரதமர் பதவியில் உட்கார வைக்க 100 சதவிகித வாய்ப்புள்ளது என்கிறார்கள் ஜோதிடர்கள்

தற்போது மோடிக்கு சந்திர திசை நடக்கிறது. 2021ம் ஆண்டு வரை மோடிக்கு சந்திர திசை நடைபெறும் சந்திரனுடன் செவ்வாயும் சேர்ந்துள்ளது.  2021ம் ஆண்டு மோடிக்கு சந்திர திசை முடிந்து செவ்வாய் திசை பிறக்கும். செவ்வாய் திசை 7 ஆண்டுகள் அதாவது 2028ஆம் ஆண்டு வரை நீடிக்கும். இந்த 7 ஆண்டுகளும் மோடியின் வாழ்க்கையில் பொற்காலமாக இருக்கும். நாட்டில் நிறைய மாற்றங்களை செய்வார் 

அவர் நினைத்தது எல்லாமே வளர்ச்சித் திட்டங்களாகி, சாதனைகளாக மாறும். இந்த 7 வருடமும் அவர் ஓய்வே இல்லாமல் உழைப்பார். இதனால் இந்தியா உலகின் வல்லரசாக உலகில் இருக்கும் என்கிறார்கள். இதை தான் மோடியும் 2029 ல் இந்தியா உலகின் 2 வது பொருளாதார நாடாக இருக்கும் என்கிறார்

இப்பொழுதே மோடி பேச்சை கவனியுங்கள் என்னுடைய ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் 10 ட்ரில்லியன் டாலரை எட்டும் என்று சவாலாக கூறுகிறார். இப்பொழுது 3 ட்ரில்லியன் டாலரை கொண்டுள்ள  இந்திய பொருளாதாரம் இன்னும் 10 வருடங்களில் 10 ட்ரில்லியன் டாலரை நிச்சயமாக எட்டி விடும்

இதைத்தான் சுமார் 460 ஆண்டுகளுக்கு முன் பிரான்சில் வாழ்ந்த  நாஸ்டர் தாம் என்கிற ஜோதிடர். இந்தியா2029 ம் ஆண்டு காலத்தில் உலக வல்லரசாக இருக்கும் என்று கூறியுள்ளார் இதில் ஆச்சரியம் என்னவென்றால் நாஸ்டர் தாமஸ் இந்தியா வல்லரசாக உருவாகும் காலத்தில் இந்தியாவில் தொன்மையான மதத்தை பின்பற்றி அரசியல் நடத்தும் ஒரு கட்சியின் சக்திவாய்ந்த தலைவரின் காலத்தில் இந்தியா வல்லரசாக உருவாகும் என்று எழுதி வைத்துள்ளார்

எனவே மோடியின் ஜாதகம் இந்தியாவுக்கு சாதக மாக இருப்பதால் இந்தியாவையும் யாரும் இனிஅசைக்க முடியாது. இந்தியாவை ஆளும் மோடியையும் இன்னும் பத்து வருசத்துக்கு அசைக்கவே முடியாது என்று உள்ளூரில் உள்ள ஜோதிடர்  மட்டுமல்ல உலக புகழ் பெற்ற ஜோதிடர் முதற் கொண்டு கூறுவதால் இன்னும் 10 வருசத்துக்கு மோடி தான் பிரதமர்.. 

பதிவு: Vijayakumar Arunagiri

படித்ததில் பிடித்தது

உங்களுக்காக பகிர்ந்தது!

அன்புடன்

வாத்தியார்

================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!