மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.12.14

Humour: நகைச்சுவை: நகைச்சுவை மட்டுமே!


Humour: நகைச்சுவை: நகைச்சுவை மட்டுமே!

இந்தப் பதிவு நகைச்சுவைக்காக மட்டுமே பதிவிடப்பெறுகிறது.
நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் மட்டும் தொடரவும். உம்மண்ணா
மூஞ்சி அன்பர்கள் வெளியேறிவிடலாம்.

அதுபோல யாரும் படித்த பிறகு சீரியசாகிவிடாமல், புன்சிரிப்போடு
மட்டும் செல்லவும். வேறு விவகாரம் எதுவும் வேண்டாம்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------
1.கொஞ்சம் சிரிங்க கண்ணுங்களா,ஆப்படியே கொஞ்சம் யோசிங்க
சாமிகளா!

1 ... ஆண்களுக்கு ....
உங்க மனைவியை ஒரு அறையிலும், உங்கள் வீட்டு நாயை ஒரு அறையிலும் 2-3 மணி நேரத்துக்கு பூட்டி வையுங்கள்...
கதவைத் திறந்ததும் யார் உங்களைப் பார்த்து சந்தோஷப்படுறாங்க,
யார் கடிக்குறாங்கனு தெரியும்...

2 ... பெண்களுக்கு...
உங்க கணவனை ஒரு அறையிலும், உங்கள் வீட்டு நாயை ஒரு
அறையிலும் 2-3 மணி நேரம் பூட்டி வையுங்கள்...
கதவைத் திறந்தால், நாய் சந்தோஷத்தில் ஓடி வரும். ஆனா உங்கள்
கணவர், நிம்மதியாக உறங்கிக்கொண்டிருப்பார்.

3 ... வாழ்க்கையின் மிக முக்கியமான ஊக்கம்...
உங்கள் மனைவியின் படத்தை ஸ்க்ரீன் சேவராக வையுங்கள்...
உங்களுக்கு பிரச்சனை வரும் போது அதைப் பார்த்து கூறுங்கள்...
"இதை நான் கையாளும் போது, என்னால் எதையும் கையாள
முடியும்"...மனதுக்கு புது உற்சாகம் கிடைக்கும்...

4 ... மனைவியின் மீது கணவன் கவனம் செலுத்த வேண்டுமென்றால்,
அவள் சோகமாக இருந்தால் போதும்...
கணவன் மீது மனைவி கவனம் செலுத்த வேண்டுமென்றால், அவன் சந்தோஷமாக இருந்தாலே போதும்...

5 ... எந்த ஒரு மனிதனும் தன்னை ஒரு முறை ஏமாற்றிய இடத்துக்கு
மீண்டும் போக மாட்டான்...ஆனால் இன்னும் பல மனிதர்கள், தங்கள்
மாமியார் வீட்டுக்குச் செல்கின்றனர்...

6 ... மகன் : அப்பா, நான் மாறுவேட போட்டியில் கலந்து கொண்டேன்...
அப்பா : என்ன வேடம்?
மகன் : கணவன் வேடம்...
அப்பா : முட்டாள், வசனங்கள் பேசக்கூடிய வேடத்தை தேர்ந்தெடு..
.
பின்குறிப்பு : இது நிபுனர்களால் மட்டுமே செய்யக்கூடியது.
வகுப்பறைக் கண்மணிகள் இதை வீட்டில் செய்துபார்க்க வேண்டாம்
என்று எச்சரிக்கப்படுகிறார்கள்... விபரீதங்களுக்கு வாத்தியார்
பொறுப்பேற்கமாட்டார்!
--------------------------------------------------------
2
If you follow the right woman, you become... Robert Vadra
If you follow the wrong woman, you become... Vijay Mallya
If you follow many woman, you remain... Salmaan Khan (Bachelor)
If you don't follow woman, you become... Narendra Modi
Choose your type...
Hang on..
Do not follow woman blindly.. Else you become... Manmohan Singh !!
*Issued in men's interest*
Note: if you keep thinking who to follow then you remain a kid like Rahul Gandhi
-------------------------------------------------------------------------
3
ஒருவரிடம்  தெருவில்  சென்ற  பிச்சைக்காரன்  சாப்பிட , இரண்டு ரூபாய் கேட்டான்.அவர் அவனை விசாரித்தார்,
''குடிப்பாயா?''
'இல்லை,சார்,'
''சிகரெட் பிடிப்பாயா?''
'இல்லை,சார்.'
''ரேசுக்கு போவாயா?''
'இல்லை,சார்.'
''சூதாட்டம்?''
'கிடையாது,சார்.'
''பெண் சிநேகிதம்?''
'சத்தியமா இல்லை,சார்.'
''உனக்கு இருபது ரூபாய் தருகிறேன்.என் வீட்டுக்கு வா.என்
மனைவியிடம் உன்னைக் காட்ட வேண்டும். எந்த கெட்டபழக்கமும்
இல்லாத ஒரு மனிதனின் நிலைமையை பார்த்தாயா என்று காட்ட
 வேண்டும்.''
---------------------------------------------------
எல்லாம் வாட்ஸப்ப்'பில் வந்தவை. நன்றாக இருந்ததால் உங்களுக்கு
அறியத் தந்துள்ளேன்!

இந்த 3ல் எது மிகவும் நன்றாக உள்ளது?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

2.12.14

ஆத்தாப் பொண்ணும் சீத்தாப் பழமும்!


ஆத்தாப் பொண்ணும் சீத்தாப் பழமும்!

எங்கள் பகுதியில் அம்மாவை ஆத்தாள் என்று அழைப்பார்கள். அகத்தில் (வீட்டில், உள்ளத்தில்) இருக்கும் அன்னையை ஆத்தாள் என்பார்கள்.
வீட்டில் இருக்கும் குட்டிப் பெண்களை ஆத்தாப் பொண்ணு என்று
செல்லமாக அழைப்பார்கள்,

ஆத்தாப் பெண்ணே சீத்தாப் பழமே என்று ரைமிங்கோடு சொல்லி அழைப்பார்கள். அத்துடன் குட்டிப் பெண்களுக்கு, அதாவது மழலை
மாறாத குட்டிப் பெண்களுக்கு 4 வரிப் பாடல் ஒன்றைச் சொல்லிக்
கொடுத்து திரும்ப அவர்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டு
மகிழ்வார்கள். அந்த மழலைகளும் பாடலின் பொருள் தெரியாமல்
குரல் கொடுத்துப் பாடலாகத் திரும்பச் சொல்வார்கள்.

அந்த 4 வரிப் பாடல் கீழே உள்ளது. நீங்களும் பாருங்கள்:

"ஆத்தாப் பொண்ணுக்குக் கல்யாணமாம்
அவுக அவுக வீட்டில சாப்பாடாம்
கொட்டு மேளம் கோயில்லையாம்
வெத்தலை பாக்கு கடையிலையாம்!"

எப்படி உள்ளது பாட்டு? அர்த்தமானதா?
-----------------------------------------------
சரி சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன்:

சீத்தாபழத்தின் பெருமையை அறிவீர்களா...?

இது இந்தியாவை சேர்ந்த பழம் இல்லை. அமெரிக்காவில் கண்டு
பிடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு வந்ததாக
மொகாலய அரசர் அக்பர் தனது ஆவணங்களில் குறித்து
வைத்துள்ளார்.

சீத்தாபழம் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின்சி'யைக்
கொண்டிருக்கிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு போதுமான
கால்சியம் ஒரு பழம் உண்பதாலேயே கிடைக்கும்.

அல்சர் உள்ளவர்கள் அல்லது வயிற்றில் அதிகபடியான அமிலத்
தன்மை உடையவர்களுக்கு இப்பழம் சிறந்தது. இதன் விதை பூச்சி
கொல்லி மருந்தாகவும், இதன் பொடியானது தலை முடியில் உள்ள
பேன் பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகும்.

இதில் 16.5 சதவிகிதம் சர்க்கரை உள்ளது. கொழுத்த சதை உள்ளவர்கள்
இதை சாப்பிடுவதை தவிர்க்கலாம். எடைகுறைவாக உள்ளவர்கள்
எடையை அதிகப்படுத்த இப்பழத்தை தினமும் சாப்பிடலாம்.

இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் கொண்டுள்ளதால் நமது இதயத்தை இதய நோயிலிருந்து இப்பழம் பாதுகாக்கிறது. உங்களுக்கு மாறிகொண்டே இருக்கும் இரத்தஅழுத்தம் இருந்தால் தினமும்
இப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் இரத்தஅழுத்தத்தை கட்டுபாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

நோய்க்கு மருந்தாவதோடு மட்டுமல்லாமல் அழகுக்கும் உதவுகிறது.
இதை தொடர்ந்து சாப்பிட்டால் முகம் மற்றம் தோல் பளபளப்பாக மாறும்.

இதில் மெக்னீசியத்தின் அளவை அதிகம் கொண்டிருப்பதால் உடலில்
நீர் இருப்பு நிலையை பராமரிக்கிறது. சீத்தாபழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கு மருந்தாகும்.

இணையத்தில் படித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்
--------------------------------------------------------------------------------------
2

ஒரே நாளில் சிறுநீரகக்கற்களைக் கரைக்கும் பீன்ஸ் வைத்தியம்....

ஆஃபரேசன் செய்து கொண்டால் இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு
ஏற்படும் என்று நமது உடலில் தோன்றும் பல பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் அதைப் பரிந்துரை செய்கிறார்கள். இதற்கு சிறு
நீரகத்தில் உருவாகும் கற்களும் விதிவிலக்கல்ல. அவ்வாறு
ஆஃபரேசன் செய்து நீக்கிவிட்டாலும் இதுவரை ஆப்பரேசன் செய்து கொண்டவர்களுக்கும் திரும்ப கற்கள் உருவாவதும் மீண்டும் அதற்கு
சிகிச்சை எடுத்துக்கொள்வதும் வழக்கமாக நடந்து கொண்டுதான்
இருக்கிறது.

எனக்கு மூன்று முறை சிறுநீரகக் கற்கள் நீக்கப்பட்டுள்ளது. நான்கு
முறை சிறுநீரகக் கற்கள் நீக்கப்பட்டன என்று கணக்குச் சொல்பவர்கள்
தான் அதிகம்.

ஏன் இத்தனை முறை ஆஃபரேசன் செய்ய வேண்டி வந்தது? என்ற
கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.

முதல்முறை கற்கள் உருவான பொழுதே அதற்குக் காரணம் என்ன
வென்று கண்டுபிடித்து அதை சரிசெய்திருந்தால் இரண்டாவது முறை
கற்கள் உருவாகி இருக்காது. அதைவிட்டுவிட்டு அப்ரேசன் செய்து
கற்களை அகற்றுவதனால் அந்த மனிதன் செய்யும் தவறுகளால்
மீண்டும் கற்கள் உருவாகிறது. பிறகு மீண்டும் ஆஃபரேசன் செய்வதே தொடர்கதையாகிப் போய்க் கொண்டே எனவே நிரந்தரமாக சிறுநீரகக் கற்களை நீ ஆஃபரேசன் இன்றிக் கரைப்பதற்கு ஒரு வழி இருக்கிறது.
அது மிக எளிமையான வழியும் கூட. அதற்கு பீன்ஸ் வைத்தியம்
என்று பெயர். பீன்ஸ் என்றால் சோயா பீன்ஸ் என்று புரிந்து கொள்ள வேண்டாம். ஆங்கிலக் காய்கறி என்று சொல்லக்கூடிய பீன்ஸ்.

சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதாக கூறுபவர்கள் கீழ்கண்டவாறு நாம் சொல்வதைக் கடைபிடித்தால் ஓரே நாளில் கற்கள் கரைந்து குண
மடைந்து விடுவார்கள். பின்னர் ஸ்கேன் செய்து பார்த்தால் கூட
அங்கு கற்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

என்ன செய்ய வேண்டும்?

அரைக்கிலோ பீன்சை எடுத்துக் கொண்டு அதில் உள்ள விதைகளை
எல்லாம் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொண்டு நறுக்கிய
பீன்சை அதில் போட்டு அடுப்பில் வைக்கவேண்டும். இளம் தீயாக
எரிய விடவேண்டும். கேஸ் அடுப்பு எனில் சிம்மில் வைத்து அதை
வேக வைக்க வேண்டும். அதாவது தீ கொஞ்சம் தான் எரிய வேண்டும்.
விறகு அடுப்பாக இருந்தாலும் நெருப்பு மிதமாக அதிலிருந்து
வெளிப்படுமாறு வைத்துக்கொண்டு பீன்சை வேகவைக்க வேண்டும். சீக்கிரமாக அதுவேகாமல் இவ்வாறு இரண்டு மணிநேரம் கழித்து வெந்திருக்கக் கூடிய பீன்ஸையும், நீரையும் சேர்த்து மிக்சியில்
போட்டு நன்கு கூல்போல் அரைத்துக் கொண்டு ஆறியபின் குடித்துவிடவேண்டும். இந்த பீன்ஸ் கூலைக் குடித்தவுடன் அந்தக் கணத்திலிருந்து மூன்று மணி நேரத்திற்குள் மூன்று லிட்டர்
தண்ணீரைக் குடித்துவிடவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு
லிட்டர் என்கிற அளவில் சிறிதளவு அதக் குடித்து விடவேண்டும்.
இவ்வாறு 3 மணிநேரத்திற்குள்ளாக 3 லிட்டர் தண்ணீரைக் குடித்து முடிக்கவேண்டும்.

அதன் பின்னர் சிறுநீர் கழிக்கும் பொழுதெல்லாம் அதை ஒரு
டப்பாவில் சேகரித்து வைத்துக் கொண்டு கற்கள் அதில்
வந்திருக்கிறதா? எனப் பார்க்கவேண்டும். எப்படியும் அன்று
இரவுக்குள் சிறுநீரக கற்கள் வெளியேவந்துவிடும். அதுவரை
வேறு எந்த உணவுகளும் எடுத்துக்கொள்ள கூடாது. அதன் பிறகு
மூன்று மணி நேரத்திற்குப் பின் சாதரணமாய் குடிக்கும் நீரைவிட
சற்று அதிகமாகக் குடித்துக் கொண்டே இருக்கவேண்டும். இந்த
சிகிச்சையை மேற்கொள்ளும் பொழுது அன்று முழுவதும் ஓய்வாக இருக்கவேண்டும். வேறு எந்த வேலையும் பார்க்கக் கூடாது.
கண்களை மூடிப்படுத்துக் கொண்டு நன்கு ஓய்வாகவும் உடலும்,
மனதும் தளர்வாக இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளவேண்டும்.

இப்படிப்பட்ட வழிமுறைகளுடன் செய்தால் சிறுநீரகக்கற்கள்
கண்டிப்பாக கரையும். இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி
நிறையப்பேர் குணமடைந்திருக்கிறார்கள். ஒரே நாளில் சிறுநீரகக்
கற்கள் கரைந்துவிட்டது என பலரும் என்னைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கிறார்கள். ஸ்கேன் ரிப்போர்ட் படி கிட்னி கற்கள் கரைந்து
விட்டது என்றும் அவை இருப்பதற்கான அறிகுறியே இல்லை
என்றும் தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டு உள்ளனர்.

எனவே சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கு இந்த வழிமுறையைக்
கையாண்டு ஆரோக்கியம் பெறலாம். சிறுநீரகக்கற்களைக்
கரைப்பதற்கான வழிமுறைகளைப் பார்த்தோம். ஆனால் இதை
விடவும் சிறந்த வைத்தியம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால்
சிறுநீரகக் கற்கள் ஏன் உருவாகிறது. அது உருவாகாமல் தடுப்பதற்கு
என்ன வழி என்பது தான் அது.

நமது அனாடமிக் செவிவழித் தொடுசிகிச்சை என்ற புத்தகத்திலும், டிவிடியிலும் இதுகுறித்து விளக்கமாகக் கூறி இருக்கிறோம்.
இருப்பினும் அதுபற்றி இங்கு சுருக்கமாக பார்த்துவிடலாம்.

சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்.
1. உப்பு அதிகம் சாப்பிட்டால் வரும்.
2. உப்பு குறைவாக சாப்பிட்டாலும் வரும்.
3. தண்ணீர் அதிகமாகக் குடித்தால் வரும்.
4. தண்ணீர் குறைவாக குடித்தால் வரும்.
5. மனதில் பயம் இருந்தால் வரும்.
6. காற்றோட்டம் இல்லாத இடத்தில் உறங்கினால் வரும்.
7. கொசுவர்த்திச் சுருள், மேட், லிக்யூடு போன்றவை பயன்படுத்தினால்
வரும்.
8. ஏசி, ரூமில் இருப்பவர்களுக்கு வரும்.

மேற்சொன்ன காரணங்களைக் கவனமாக படித்துகொண்டு அதன்படி
நடந்து வரவேண்டும். ஏசியைப் பயன்படுத்தவே கூடாது. கொசுவர்த்திச் சுருளில் உள்ள இரசாயான நச்சுக்கள் சுவாசத்தின் வழியே உள்ளே நுரையீரலுக்கு சென்று சிறுநீரகத்தில் கல்லாய் மாறுகிறது. எனவே கொசுவர்த்தியைப் பயன்படுத்தவே கூடாது.

மனதில் பயம் இருந்தால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும். எனவே
மனதில் உள்ள பயத்தைப் போக்கி சிறுநீரகக் கற்களைக் கரைத்துவிட
முடியும். அது எப்படி என்பதை இந்த இதழில் வெளியாகி கட்டுரையைப் படிக்கும் பொழுது புரிந்துகொள்வீர்கள்.

அடுத்ததாக நம் நாவிற்கு எந்தளவிற்கு உப்புச் சுவை தேவைப்
படுகிறதோ அந்த அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
உப்பினைக் குறைவாகவும் எடுத்துக்கொள்ள கூடாது. கூடுதலாகவும்
எடுத்துக் கொள்ளக் கூடாது. உப்பில் தற்பொழுது பாக்கெட்டுகளில்
வரும் போடி உப்பினைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதில்
கல் உப்பினைப் பொடி செய்து பயன்படுத்தலாம். கல் உப்பினை பயன்படுத்துவதே முன்னர் சட்டியில் போட்டு வறுத்துப் பயன்
படுத்துவது மிகமிக சிறந்தது.

தண்ணீரின் தேவை நமது தாகத்தைப் பொறுத்து மாறுபடும். நாம்
செய்யும் வேலை, தட்ப வெப்பநிலை போன்றவற்றைப் பொறுத்து
தண்ணீரின் தாகம் நமக்கு இருக்கும். எனவே தண்ணீரை தினசரி
இவ்வளவு லிட்டர் தான் குடிக்கவேண்டும். என்று கணக்கு வைத்துக்
கொண்டு தாகம் எடுக்காமல் தண்ணீர் குறைவாகவும் குடிக்கக் கூடாது? அதிகமாகவும் குடிக்கக் கூடாது. ஆடு, மாடு போன்ற விலங்கினங்கள் எப்பொழுது குடிக்கின்றன. எவ்வளவு தேவையோ அவ்வளவு
குடிக்கின்றன. நாமும் அதைக் கடைப்பிடிப்போம்.

பொதுவாக சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவதற்கு இந்த எட்டு
காரணங்கள் இல்லாமல் இன்னொரு முக்கியமான விசயமும்
இருக்கிறது. அது என்ன தெரியுமா?

அதிகமாக பேசினால் சிறுநீரகத்தில் கற்கள் வரும். ஆசிரியர்கள்,
பேச்சாளர்கள், சொற்பொழிவாளர்கள், தொலைபேசி அழைப்பாளர்கள் போன்றோருக்கு சிறுநீரகத்தில் கற்கள் தோன்றும் வாய்ப்புகள்
அதிகம். எவ்வளவு நேரம் அதிகளவு பேசிக்கொண்டு இருக்கிறோமோ சிறுநீரகத்தில் அவ்வளவு விரைவில் கற்கள் தோன்றும்.

அதிகநேரம் பேசிக் கொண்டிருப்பதை தொழிலாகச் செய்பவர்கள்
இனிமேல் பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள் இந்தக் கட்டுரையின்
மூலம் இரண்டு விசயங்களை நாம் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.

1. சிறுநீரகக் கற்களை எவ்வாறு கரைப்பது?
2. சிறுநீரகக் கற்கள் வராமல் தடுப்பது எப்படி?

எனவே சிறுநீரகக் கற்கள் இனிவராமல் எப்படி பார்த்துக் கொள்வது
என்பதும், இருக்கும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பது எப்படி என்பதையும் பார்த்திருக்கிறோம். இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு என்றும் ஆரோக்கியமாக வாழ்வோம்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !!
இந்தக் கட்டுரையை எழுதியவர்:
www.amaidhiyumaarokiyamum.com 
Contact: (+91) 8883805456.

அடியவன் இணையத்தில் படித்தேன். உங்களூக்குப் பயன்படும் 
என்று தோன்றியதால் அறியத் தந்திருக்கிறேன்
=====================================
3
நீரழிவு உபாதைக்கு வெண்டைக்காய் வைத்தியம் 



இதையும் அடியவன் இணையத்தில் படித்தேன். உங்களூக்குப் 
பயன்படும் என்று தோன்றியதால் அறியத் தந்திருக்கிறேன்
=====================================
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

1.12.14

Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை!

அருள்மிகு சனீஷ்வரர்

Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை!

சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும்
இல்லை என்பார்கள்.

சனி என்ன நம் மாமனாரா? பெண்ணைக் கொடுத்தவரா? அவராக
வந்து கொடுப்பதற்கு?

நம் ஜாதகத்தின் படி என்னென்ன பலாபலன்கள் உள்ளதோ - அதாவது
நம் கர்மவினைப்படி என்ன பலன்கள் store ஆகியுள்ளதோ - அதைக்
கொடுப்பவர் அவர். அவர் store keeper. அவ்வளவுதான்.
அவரைக் கண்டு பயப்பட வேண்டாம்.

அவரில்லாமல் யாருடைய வாழ்க்கையும் இங்கே நடக்காது. ஆமாம், அவர்தான் ஆயுள்காரகர். அயுள் முடிந்துவிட்டால், ஜாதகனை ஒரு விநாடிகூட, இங்கே இருக்க அவர் அனுமதிக்க மாட்டார்.
வலுக்கட்டாயமாக போர்டிங் பாஸ் கொடுத்து அனுப்பி விடுவார்.

எங்கே?

எங்கே அனுப்பிவைப்பார் என்பது தெரியாது. இந்த உலகத்தைவிட்டு
அனுப்பி வைத்து விடுவார். அது மட்டும் தெரியும்.

”வந்தது தெரியும், போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது!”
என்று கவியரசர் பாடி வைத்துள்ளார்.

அதோடு, தொடர்ந்து சொல்லியுள்ளார்:

”உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...!”

கவியரசர் சொன்ன அந்தக் கோட்டைதான் எங்கே உள்ளது என்பது தெரியவில்லை:-)))

ஆகவே சனீஷ்வரன் நமக்கு முக்கியமானவர். அவருக்கு இன்னொரு இலாக்காவும் இருக்கிறது. அவர்தான் தொழில்காரகன், ஜீவனகாரகன்.
ஒரு ஜாதகன் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு உரிய தொழிலை
அல்லது வேலையைக் கொடுப்பவர் அவர்தான்.

ஆகவே, அவர் அங்கேயும் நமக்கு முக்கியமானவர்
=====================================================
2014, டிசம்பர் 16ஆ‌ம் தே‌தி செவ்வாய்க்கிழமை, சனீஷ்வரன் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் நுழைகிறார்.

இ‌ந்த சனிப் பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிதாரரின் வாழ்விலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள், பாதிப்புகள் ஆகியவற்றை ராசி
வாரியாகத் தொகுத்துக் கீழே கொடுத்துள்ளேன்.
----------------------------------------------------
இந்தப் பொதுப்பலன்களைப் பற்றி ஒரு விஷயம். அவைகள்
பொதுவானவை அவ்வளவுதான். பத்திரிக்கை விற்பதற்காகவும்,
சிலர் புத்தகங்கள் விற்பதற்காகவும் பொதுப் பலன்களை
எழுதுகிறார்கள். நாமும் காசு கொடுத்து வாங்கி, மாய்ந்து மாய்ந்து படிக்கிறோம். அது எப்படி நமக்குப் பொருந்தும்?

அம்பானிக்கும், அனுஷ்கா சர்மாவிற்கும், அஜீத்திற்கும், அய்யம்பேட்டை கலிவரதனுக்கும், அம்மா மண்டபம் ரங்கராஜனுக்கும், ஒரே ராசி என்று வைத்துக் கொள்ளூங்கள், இந்தப் பொதுப் பலன்களின் படியா, அவர்கள் அனைவருக்கும் இன்ப, துன்பங்கள் வரப்போகின்றன. இல்லை!

120 கோடி மக்கள் வகுத்தல் 12 ராசிகள் = 10 கோடி மக்கள் இந்த 10 கோடி மக்களுக்கும் எப்படிப் பலன் ஒருவிதமாகப் பொருந்தும்?

++++++அவரவர்களின் ஜாதகப்படிதான் பலன்கள் அமையும்.

1. உங்கள் ஜாதகத்தில் ஏகப்பட்ட யோகங்கள் இருந்து, அதற்கான
தசாபுத்தி நடந்து கொண்டிருந்தால், இந்தக் கோச்சாரங்கள் வழிவிட்டு
விடும்.

2. நல்ல தசை அல்லது புத்தி நடந்து கொண்டிருந்தாலும் கோள்சாரங்கள் பாதிப்பை ஏற்படுத்தாது.

சுருங்கச் சொன்னால், கோள்சாரத்தைவிட, தசை/புத்தி முக்கியம்.

ஒரு சாலையில் முதலமைச்சர் வருகிறார். அவருக்கு முன், அவருடைய பைலட் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வருகின்றன என்றால் மொத்த சாலையும் துடைக்கப்பட்டு, வழி ஏற்படுத்தப் பட்டிருக்கும் இல்லையா?
ஏன் தப்பித்தவறி நீங்கள் சென்றாலும், வழி விட்டு ஒதுங்கி நிற்ப்பீர்கள் இல்லையா? அதுபோலத்தான் இதுவும்.
------------------------------------------------------------------
பெயர்ச்சி என்றவுடன், சனீஷ்வரன் மூட்டை முடிச்சுகளைக் கட்டி
எடுத்துக் கொண்டு வீடு மாறுகிறார் என்று நினைக்க வேண்டாம்.

அவருக்கு எதற்கு மூட்டை, முடிச்சு?

வானவெளியில், 181 பாகையில் இருந்து 210 பாகைகள் வரை, துலாம்
ராசியில் இதுவரை சஞ்சாரம் செய்தவர், இப்போது 211 பாகைக்குள்,
தன் சுழற்சியின் மூலம் நுழைகிறார். அது விருச்சிக ராசி. அங்கே அவர் இன்னும் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு வாசம் செய்வார்.

அவர் ஒரு பாகையைக் கடக்க எடுத்துக் கொள்ளூம் காலம் ஒரு
மாதமாகும். விருச்சிகராசியின் 30 பாகைகளையும் அவர் கடப்பதற்கு
30 மாதங்களாகும்.

அதுவரை அங்கே இருப்பார். அங்கே மடக்கு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து கொண்டு செய்ய வேண்டிய பணிகளைச் செவ்வனே செய்வார்.
--------------------------------------------------------
சனிப்பெயர்ச்சிப் பலன்கள்              

வாசகர்கள் சிலரின் வேண்டுகோளிற்காகவும், வகுப்பறைக் கண்மணிகளின் அறிந்து கொள்ள வேண்டியதற்காகவும் சனிப்பெயர்ச்சிப் பலன்களை
எழுதியுள்ளேன்.

கீழே கொடுக்கப்பெற்றுள்ளவை அனைத்தும் பொதுப்பலன்கள்,
இந்திய மக்கள் 121 கோடிப் பேர்களுக்குமான பொதுப்பலன்கள்.
உங்களுடைய  ஜாதகத்தில் சனீஸ்வரன் நல்ல ஆதிக்கப் பலனுடன்
இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால், நல்ல தொழிலையும்
அல்லது வேலையையும் கொடுத்து, வருமானத்திற்கு எந்தக் குறையும் இல்லாமல்  பார்த்துக் கொள்வார். நீண்ட ஆயுளையும் கொடுப்பார்.

தனிப்பட்ட ஜாதகர்களுக்கு, கோள்சாரத்தில் சனீஷ்வரன் கடந்து
செல்லும் ராசிகளில் சர்வாஷ்டகவர்க்கப்படி, 30 அல்லது அதற்கு
மேற்பட்ட பரல்கள் இருந்தால், அவர்களுக்கு எந்த பாதிப்பு இருக்காது.
இதை முக்கியமாக மனதில் கொள்ளவும்.

இறைவழிபாடும், சனீஷ்வர வழிபாடும் நன்மையளிக்கும். இந்தத்
துன்பங்கள் இருக்காதா என்றால், இருக்கும். வருவதை, விதிக்கப்
பட்டதை நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஆனால்
வழிபாடுகள் தாக்குப் பிடிக்கும் சக்தியை உங்களுக்கு வழங்கும்
(It will give you standing power in miserable or unwanted situation).

எந்த சூழ்நிலையிலும், தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம். அதை
மனதில் கொள்ள வேண்டுகிறேன்.
=================================================================================================
ஏழரை ஆண்டுகளாக ஏழரைச் சனியின் பிடியில் சிரமப் பட்டுக்
கொண்டிருந்த கன்னி ராசிக்காரகளும், சென்ற இரண்டரை
ஆண்டுகளாக அஷ்டமச் சனியால் (8ஆம் இடத்துச் சனியால்) சிரமப்பட்டுக்கொண்டிருந்த மீன ராசிக்காரர்களும் மகிழ்ச்சி
கொள்ளலாம். அவர்களுக்குப்  பூரண நிம்மதி கிடைக்கும்.

அந்தச் சிரமங்களை இனி தனுசு ராசிக்காரர்களும் (ஏழரைச் சனியில்
விரயச் சனி - 12ஆம் இடம்), மேஷ ராசிக்காரர்களும்
(அஷ்டமச் சனி - 8ஆம் இடச் சனி) சந்திக்க நேரிடும்.

மிதுன ராசிக்கார்கள் (ஆறாம் இடம்), கடக ராசிக்காரர்கள்
(ஐந்தாம் இடம்), கன்னி ராசிக்காரர்கள் (3ஆம் இடம்) மகர
ராசிக்கார்கள் (11ஆம் இடம்), மீன ராசிக்காரகள் (9ஆம் இடம்)
ஆகியோர்கள் இந்தப் பெயர்ச்சியால் நன்மையடைவார்கள்
அவர்கள் மகிழ்ச்சி கொள்ளலாம்.

சிம்ம ராசிக்காரர்கள் (4ல் சனி), துலா ராசிக்கார்கள் (பாதச் சனி
 - 2ஆம் இடம்), கும்ப ராசிக்காரர்கள் (ஜீவன ஸ்தானம் -
10ஆம் இடம்), ரிஷப ராசிக்காரர்கள் (கண்டச் சனி - 7ஆம் இடம்)
விருச்சிக ராசிக்காரர்கள் (ஜென்மச்சனி - ஒன்றாம் இடம்)
ஆகியோர்கள் சிறிதளவு  பாதிக்கப்பெறுவார்கள்.

12 ராசிகளுக்கும் உரிய பொதுப்பலன்கள்:

1. மேஷம்: சென்ற இரண்டரை ஆண்டுகளாக அனுபவித்த சிரமங்களை
விடக் கூடுதலான சிரமங்களை அனுபவிக்க நேரிடும். காரணம் 8ஆம்
இடத்துச் சனி. சோதனைகள் அதிகரிக்கும். எது இருந்தாலும் தாக்குப்
பிடித்து, இரண்டரை ஆண்டுகால முடிவில் நீங்கள் மனத்திடம் உள்ள  மனிதராக மாறிவிடுவீர்கள்.

2. ரிஷபம்: மனதில் கலக்கம் ஏற்படும். எடுத்துச் செய்யும் செயல்களில்
தாமதம் உண்டாகும். பல வேலைகள் இழுத்துதடிக்கும். சட்டென்று
முடியாது. நண்பர்கள், உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள்
ஏற்படும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

3. மிதுனம்: சாதகமான ஆறாம் இடத்தில் சனி. முன்பிருந்த சிரமங்கள்
எல்லாம் நீங்கிவிடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.  உறவினர்களும், நண்பர்களும் உங்களைப் போற்றத்துவங்குவார்கள். விரும்பிய செயல்களைச் செய்யும் அளவிற்குப் பணவரவும்
உண்டாகும்.

4. கடகம்: புதிய, விரும்பத் தகுந்த மாற்றங்கள் உண்டாகும். இடம்,
பொருள் சேர்க்கை உண்டாகும். சிலருக்குப் புதிய வீடு கட்டும்
யோகம்  உண்டாகும். இரண்டரை ஆண்டு காலத்தில் சிக்கனமாக
இருந்து, வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்வது புத்திசாலித்
தனமாகும்.

5. சிம்மம்: சுகக்கேடு, அலைச்சல் உண்டாகும். சிலருக்கு உடல்
நலம் பாதிக்கும். செயல்களில் உங்களை அறியாமல் தவறுகள்
ஏற்படலாம்.  கவனத்துடன் செயல்படுவது நல்லது. சிலருக்கு
அவர்களது அன்னையின் உடல் நலம் பாதிக்கப்படலாம்.

6. கன்னி: இதுவரை உங்களை ஒருகை பார்த்துக்கொண்டிருந்த,
வாட்டி, வதக்கிக்கொண்டிருந்த ஏழரைச் சனி முற்றிலுமாக
விலகுகிறது. இனி எல்லாம் நன்மையே. உற்சாகம் பொங்கி
வழியும். முனைப்புடன் செயல் பட்டு வெற்றிக் கனிகளைப்
பறிப்பீர்கள். செய்யும் வேலைகளுக்கான பலன்கள் அதிகரிக்கும்

7. துலாம்: ஏழரைச்சனியின் கடைசிக் கட்டத்திற்கு வந்துள்ளீர்கள்.
அடை மழை இல்லை என்றாலும் தூறல் நிற்கவில்லை. பேச்சில்,
வாக்குக் கொடுப்பதில்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சிலருக்கு வழக்குகள் ஏற்படலாம். பணம் அதுவாக வராது.
அலைந்து திரிந்துதான் பெற வேண்டியதாக இருக்கும். அத்துடன் எதிர்பார்க்காத செலவுகளும் ஏற்படும்.

8. விருச்சிகம்: ஏழரைச் சனிக்கு உரிய மூன்று கட்டங்களில்
சனீஷ்வரன் இரண்டாவது கட்டத்திற்கு வந்துள்ளார். ஜென்மச் சனி
என்று அதற்குப் பெயர். வேலை செய்வதற்கே சலிப்பாக இருக்கும்.
மனதில் மந்தமான சூழ்நிலை நிலவும். சம்பந்தமில்லாத
காரியங்களில் தலையிடாதீர்கள். அவப்பெயர் உண்டாகலாம். குடும்பஸ்தர்களுக்கு மனைவியுடன் கருத்து வேறு பாடுகள்
உண்டாகலாம். அன்பு மனைவியை அனுசரித்துப்  போவது
நல்லது.

9. தனுசு: ஏழரைச் சனி துவக்கம். ராசிக்குப் 12ல் சனி. பணத்
தட்டுப்பாடு ஏற்படும். வரவுக்கு மேல் செலவு ஏற்படும்.
ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செலவு செய்வது நல்லது.
புதிய முயற்சிகள், புதிய முதலீடுகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது
நல்லது. நீங்கள் விரும்பும்  பலன்கள் கிடைக்காது. இறைவழிபாடு
அவசியம். நன்மை பயக்கும்.

10. மகரம்: முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். எந்தச் செயலிலும் முன்பிருந்த தாமதம், தடை இருக்காது. பணவரவு அதிகரிக்கும்.
சமூக  அந்தஸ்து அதிகரிக்கும். உத்தியோகத்தில், தொழிலில்
மேன்மை உண்டாகும். புகழ், செல்வாக்கு என்று எல்லாவிதமான நன்மைகளும் ஏற்படும்

11. கும்பம்: வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும்.
சனீஸ்வரன் ராசிநாதன். அத்துடன் விருச்சிக வீட்டில் இருப்பதால்.  இடமாற்றம் என்பது சிலருக்குப் பதவி உயர்வுடன் கூடிய
இடமாற்றமாக இருக்கும்.

12. மீனம்: அஷ்டமச் சனியால் இதுவரை நீங்கள் அனுபவித்த
துன்பங்கள் எல்லாம் நீங்கி, வாழ்க்கை வளம் பெறும். மகிழ்ச்சி
நிலவும். வீட்டில்  சுப காரியங்களைச் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

செய்திச் சுருக்கம் (News in brief)

பலனடையப்போகின்றவர்கள்: மிதுனம், கன்னி, மகரம்
ஆகிய 3 ராசிக்காரர்கள்

நன்மையும் தீமையும் கலந்த சம பலன்கள்:
கடகம்,கும்பம், மீன ராசிக்காரர்கள்.

பரிகாரம் தேட வேண்டியவர்கள்: கஷ்டங்கள் வாராமலிருக்க
சனீஷ்வரனை வணங்க வேண்டிய ராசிக்காரர்கள்:
மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, ஆகிய
 6 ராசிக்காரர்களுக்குக் கெடுதலான பலன்களும் நடைபெறலாம்.

ஏழரைச் சனி: துலா ராசிக்காரர்கள் (கடைசி இரண்டரை ஆண்டுகள்
- பாதச் சனி என்பார்கள்.அல்லது கழிவுச்சனி என்று கொள்ளுங்கள்)
விருச்சிக ராசிக்காரர்கள்: இரண்டாம் இடம் ஜென்மச்சனி. தனுசு ராசிக்காரர்கள்: ஏழரைச் சனி ஆரம்பம்.

அஷ்டமச் சனி ( எட்டாம் இடத்துச் சனி): ஏழரைச் சனிக்கு நிகரான கஷடங்களையும் துன்பங்களையும் தரக்கூடிய அமைப்பு.
அது மேஷ ராசிக்காரர்களுக்கு ஏற்படும்!
----------------------------------------------------------
மேலே கொடுக்கப்பெற்றுள்ளவை அனைத்தும் பொதுப்பலன்கள்,
இந்திய மக்கள் 121 கோடிப் பேர்களுக்குமான பொதுப்பலன்கள்.
உங்களுடைய ஜாதகத்தில் சனீஸ்வரன் நல்ல ஆதிக்கப் பலனுடன்
இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால், நல்ல தொழிலையும்
அல்லது வேலையையும் கொடுத்து, வருமானத்திற்கு எந்தக்
குறையும் இல்லாமல்  பார்த்துக் கொள்வார். நீண்ட ஆயுளையும்
கொடுப்பார்.

தனிப்பட்ட ஜாதகர்களுக்கு, கோள்சாரத்தில் சனீஷ்வரன் கடந்து
செல்லும் ராசிகளில் சர்வாஷ்டகவர்க்கப்படி, 30 அல்லது அதற்கு
மேற்பட்ட பரல்கள் இருந்தால், அவர்களுக்கு எந்த பாதிப்பு இருக்காது.
இதை முக்கியமாக மனதில் கொள்ளவும்.

++++++இருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் எந்தந்த இடங்களில் 30ம்
அதற்கு மேற்பட்ட பரல்களும் உள்ளன என்பதைக் குறித்து வைத்துக்
கொள்ளுங்கள். அந்த இடங்களில் சஞ்சார சனியால் எந்தவிதமான உபத்திரவங்களும் இருக்காது.

ஏழரைச் சனியின் இடங்களான 12, 1, 2ஆம் வீடு ஆகிய மூன்று
இடங்களிலும், 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் இருந்தால்,
ஏழரைச் சனி, ஜாதகனை ஒன்றும் செய்யாது. அந்த ஏழரை
ஆண்டுகளும் ஜாதகன் செளக்கியமாக இருப்பான்.

அதற்கு மாறாக சனி சஞ்சாரம் செய்யும் இடம் 25 பரல்களூம்,
அல்லது அதற்குக் குறைவான பரல்களைக் கொண்டிருந்தால்
கோள்சாரச் சனி, ஜாதகனைப் படுத்தி எடுக்கும்.

++++++ ஒரு ஜாதகனுக்கு அவன் பார்க்கும் தொழிலில் அல்லது
வேலையில் பிரச்சினை என்றால். அது ஏன்? எப்போது அந்த நிலை
மாறும் என்பதைப் பார்க்க ஒரு ஃபார்முலா உள்ளது.

10ஆம் வீட்டை, லக்கினமாக எடுத்துக் கொண்டு, அன்றையத்
தேதியில் கோச்சார சனீஷ்வரன் அந்த வீட்டிலிருந்து எங்கே
இருக்கிறான் என்று பாருங்கள். அந்த வீட்டிற்கு 6, 8,12ஆம் வீடுகளில்
அவன் சஞ்சாரம் செய்தால், பிரச்சினைதான். அந்த வீட்டை விட்டு
நகரும் வரை பிரச்சினை தீராது. பதவி நீக்கம், பதவி பறிமுதல், பதவியிலிருந்து கீழ் நிலைக்குத் தள்ளப்படுதல், தண்ணீர் இல்லாக்
காட்டிற்கு மாற்றப்படுதல் என்று எது வேண்டுமென்றாலும் நடக்கும்.
அந்த வீட்டிற்கு 11ல் சனி சஞ்சாரம் செய்தால், பதவி உயர்வு, பதவியில் மேன்மை, பெருமை எல்லாம் கிடைக்கும்
----------------------------------------------------
அதுபோல எப்போது டிக்கெட் கிடைக்கும் என்பதைச் சொல்ல முடியுமா? அதற்கு ஏதாவது சூத்திரம் இருக்கிறதா?

++++++இருக்கிறது. அது ஒருவரிச் சூத்திரம்.
அதை இங்கே சொல்ல முடியாது. வாசகர்கள் என்னைப் பிறாண்டி எடுப்பதோடு. எனக்கு டிக்கெட் கொடுத்து விடுவார்கள். ஆகவே, சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டிய நேரத்தில் அதைச் சொல்லி உங்களுக்கு அறியத் தருகிறேன். பொறுத்திருங்கள்
--------------------------------------------------------
சரி விஷயத்திற்கு வருகிறேன்.

இறைவழிபாடும், சனீஷ்வர வழிபாடும் நன்மையளிக்கும். இந்தத்
துன்பங்கள் இருக்காதா என்றால், இருக்கும். வருவதை, விதிக்கப்
பட்டதை நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஆனால்
வழிபாடுகள் தாக்குப் பிடிக்கும் சக்தியை உங்களுக்கு வழங்கும்
(It will give you standing power in miserable or unwanted situation).

எந்த சூழ்நிலையிலும், தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம். அதை
மனதில் கொள்ள வேண்டுகிறேன்.

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!