மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.7.13

Astrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் - பகுதி 2

 
---------------------------------------------------------------------------------------------
Astrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் - பகுதி 2

ஜோதிடத் தொடர் - பகுதி 2

பணமா? குணமா?

பணம் இல்லை என்றால், இந்தக் காலத்தில் எந்த வேலையும் நடக்காது! ஒரு சின்னக்குழந்தையைத் துவக்கப் பள்ளியில் சேர்ப்பதில் இருந்தே பணம் தன் வேலையை, ஆட்டத்தைத் துவங்கி விடுகிறது.

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!”

என்றான் சிந்தனையாளன் ஒருவன்.

உண்மைதான். அதை யாரும் மறுக்க முடியாது.

பணம் அவசியமானதுதான். ஆனால் பணம் மட்டும்தான் வாழ்க்கையா?

இல்லை!

பணம் என்னும் தலைப்பில், தத்துவஞானி ஓஷோ அவர்கள் எழுதிய நூல் கிடைத்தால் வாங்கிப் படியுங்கள். பணத்தால் என்னென்ன முடியாது என்பதை அவர் அழகாக விவரித்திருப்பார். பணத்தால் நீங்கள் ஒரு வீட்டை வாங்கலாம். ஏன், ஒரு அரண்மனையைக் கூட வாங்கலாம். ஆனால் தூக்கத்தைக் காசு கொடுத்து வாங்க முடியுமா? உணவை வாங்கலாம். பசியை வாங்க முடியுமா? பெண்ணை வாங்கலாம். தாயை வாங்க முடியுமா? பொழுது போக்கை வாங்கலாம். உண்மையான மகிழ்ச்சியை வாங்க முடியுமா?  நிம்மதியை வாங்க முடியுமா? இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

Osho சுருக்கமாக இப்படிச் சொல்வார்: With money you can buy a house; But with money you can't buy love!

பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்"

என்று கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகளுக்கு இணங்க குணம்தான் நிரந்தமானது!
----------------------------------------------------------------------------------
எப்படி ஒவ்வொருவருக்கும் முகத் தோற்றம் மாறுபடுகிறதோ, அப்படி குணமும் மாறுபடும்.

அவன் ரொம்ப நல்லவனப்பா’ என்று ஒருவனைப் பற்றிச் சொல்லும் நாம், ‘அவனா, அவன் அயோக்கியன், கிராதகன் என்று வேறு ஒருவனைப் பற்றி சிலாக்கியமாகச் சொல்கிறோம். நமக்கு எப்படித் தெரிந்தது. பழக்கத்தின் மூலம், அனுபவத்தின் மூலம் தெரியும் அது

ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகளே தோற்றத்திலும், குணத்திலும் ஒன்று போல இருப்பதில்லை. படைப்பின் வினோதம் அது.

உடன் பிறப்புக்களைப் பற்றிக் கிராமங்களில் சொல்வார்கள்: ”ஐந்து வயதில் அண்ணன் தம்பி, பதினைந்து வயதில் பங்காளி நாற்பது வயதில் வாதி, பிரதிவாதி”

ஆனால் ஒரு வேடிக்கை பாருங்கள். இன்று பல குடும்பங்களில் உள்ள சண்டை சச்சரவுகளுக்கே காரணம் பணம். பணம் இருப்பதால், சொத்துக்களை வைத்து அதைப் பங்கு வைத்துக் கொள்வதை வைத்து சண்டைகள். வம்புகள், விரோதங்கள், வழக்குகள்.

அதே பணத்தை வைத்து நீங்களும் நானும் வாழுகின்ற இந்த சமூகத்தில் அந்தஸ்து (Status) பிரச்சினை. வீடு, வாகனம் வைத்திருப்பவன் அதேபோன்று வீடு வாகனம் உள்ளவனைத்தான் மதிப்பான். மரியாதை கொடுப்பான். அன்றாடம் காய்ச்சியை, ஏழைய அவன் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

திருமணச் சந்தையிலும் இந்த ஸ்டேட்டஸ் (அந்தஸ்து) மட்டையோடு ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. காதலில் தோல்வி அடைந்தவர்களைக் கேளுங்கள், தங்கள் பெற்றோர்களின் சம்மதம் அவர்களுக்கு ஏன் கிடைக்கவில்லை என்று கேளுங்கள். அந்தஸ்து வித்தியாசம் அடித்து நொறுக்கியதைக் கூறுவார்கள். ஜாதிப் பிரச்சினை கூட இரண்டாவது (அது ரன்னராக) கூட்டு ஆட்டக்காரராக வரும்.

ஒரு பெரிய செல்வந்தன், தன் மகளின் காதலுக்காக ஒரு குடிசை வீட்டுக்காரனை, அல்லது ஒரு ஓட்டு வீட்டுக்காரனை தன் சம்பந்தியாக ஏற்றுக்கொள்ள மாட்டான். பெரும்பாலும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

ஒருவனின் செல்வ நிலைமை ஜாதகத்தின் ஒன்று, இரண்டு, ஒன்பது, பத்து, பதினொன்றாம் வீட்டை வைத்து மாறுபடுவதைப் போல குணமும் ஜாதகத்தை வைத்து ஆளாளுக்கு மாறுபடும்.

லக்கினம், லக்கின அதிபதி, நட்சத்திரம், சந்திர ராசி (அதாவது நட்சத்திரம் அமர்ந்திருக்கும் ராசி) சுப கிரகங்கள் என்று  ஜாதத்தின் பல அமைப்புக்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் குணத்தைக் கொடுக்கின்றன.

மனிதனின் வளர்ச்சிக்கு எதிரிகளான சோம்பேறித்தனம், ஆர்வமின்மை, கஞ்சத்தனம், இடக்கான போக்கு (Negative aspect) போன்ற பல கெடுதல்கள் அல்லது கேடுகளுக்குக் காரணம் கிரகக்கோளா! ஜாதக அமைப்பே!

உலக மக்களின் இயக்கமும், மனமும் ஒரு ஒழுங்கில் இல்லை (They are not in one order) ஒரு பக்கம் உலக நன்மைக்காக பாடுபடும், உழைக்கும் மக்கள். இன்னொரு பக்கம் தீவிரவாதிகள்.

ஆனால் வானத்தில் உள்ள கிரகங்கள், ஒரு ஒழுங்கு முறையில் செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன. (The cosmic process is absolutely scientific and intelligible.) நிலையான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அவைகள் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன. எந்த உத்தரவும் அவைகளைக் கட்டுப்படுத்தாது. ஒவ்வொரு கிரகமும் தனது பணியைத் துல்லியமாகச் செய்து, ஆக்கல், நிலைத்தல், அழித்தல் வேலைகளைச் செவ்வனே செய்து கொடிருக்கின்றன

அவைகளின் கட்டுப் பாட்டில்தான் மனித வாழ்க்கையும், மனிதனின் குணங்களும், செயல்பாடுகளும் உள்ளன.

உங்களின் லக்கினத்தை வைத்தும் உங்களின் நட்சத்திரத்தை வைத்தும்தான் உங்களின் குண நலன்கள்

அதுபோல  ஒன்பது கிரகங்களை, 12 லக்கினங்களை, 27 நட்சத்திரங்களை வைத்துத்தான் உங்கள் அனைவரின் குண நலன்கள்

சரி, ஒன்பது கிரகம் 12 லக்கினத்திற்கு எத்தனை விதமான வாழ்க்கை கிடைக்கும்?

Permutations and Combinations Basics தெரியுமா உங்களுக்கு? இல்லை என்றால் கூகுள் ஆண்டவரிடம் கேளுங்கள்: Nine to the power of Twelve

விடை கிடைக்கும். உங்களுக்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன்

9 to the 12th power would be 9 * 9 * 9 * 9 * 9 * 9 * 9 * 9 * 9  
which would equal 282 429 536 481

அம்மாடியோவ்...................!!!!

மற்றவை அடுத்த பதிவில்

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

8.7.13

Astrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும்!

 

Astrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும்!

ஜோதிடத் தொடர் பாடம் - பகுதி ஒன்று

நம்ம சூப்பர் ஸ்டார் படங்களில், ஒவ்வொரு படத்திலும் ஒரு முத்தான வசனம் இருக்கும். உங்கள் மொழியில் சொன்னால் ஒரு பஞ்ச் டயலாக் இருக்கும். அது போன்று அவர் உதிர்த்த முத்தான் வசனம் ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன். படத்தின் பெயர் நினைவில் இல்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

”கிடைக்கிறது கிடைக்காம இருக்காது: கிடைக்காம இருக்கிறது கிடைக்காது!”

உண்மைதான். நமக்குக் கிடைக்க வேண்டியது உரிய நேரத்தில் தானாகவே கிடைக்கும். அதுபோல நமக்கு மறுக்கப்பட்டதை எத்தனை முயன்றாலும் பெறமுடியாது. அதாவது அது கிடைக்காது. ஒவ்வொரு மனிதனும் தன் அனுபவங்களின் மூலம்தான் அதை உணர முடியும்.

நல்ல பெற்றோர்கள், நல்ல கல்வி, நல்ல வேலை, நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள், நல்ல வீடு, நல்ல வாகனம் என்று வாழ்க்கையின் ஒவ்வொரு நல்ல அம்சமும் நமக்கு, நம் விருப்பப்படி கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அது தானாகவே அமைய வேண்டும். தேடிப் பிடித்தெல்லாம் பெற முடியாது.

ஜோதிடத்தில் அதை ஜாதக அமைப்பு என்று சொல்வோம். எளிமையாகச் சொன்னால் வாங்கி வந்த வரம் என்போம்.

இன்று மனைவி அமைவது எப்படி என்று பார்ப்போம். அதை மட்டும் பார்ப்போம். அதற்கான அம்சங்களைப் பார்ப்போம். திருமணம் ஆகி குப்பை  கொட்டிக்கொண்டிருப்பவர்கள் ’இனிப் பார்த்து என்ன ஆகப்போகிறது?’ என்று கேட்கலாம். அது உங்களுக்கு உதவிகரமாக இல்லாவிட்டாலும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கு உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு அல்லது உங்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கு உதவும் அல்லவா? ஆகவே முகத்தைச் சுளிக்காமல் மேலே படியுங்கள்!
------------------------------------------------------------------------------------------------------
திருமணத்தை எதிர் நோக்கி இருக்கும் இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் நிலை என்ன?

முன்பு வந்த பத்திரிக்கைச் செய்தி ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன்.


(நன்றி: தினமலர் நாளிதழ்)

ஆய்வு ஒன்றின் மூலம், இன்றையப் பெண்கள், அதிக சம்பளம் பெறும் ஆண்களையும், ஆண்கள் அழகான பெண்களையும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் என்று தெரிய வருகிறது. நாட்டு நடப்பும் அதுதான்.

முன்பெல்லாம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் என்பது பெரிய தொகை. இன்று நகரங்களில் உள்ள வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவு, உணவுப் பொருட்களின் விலைவாசி என்று பார்த்தால், முப்பதாயிரத்திற்குக் குறையாமல் சம்பளம் கிடைக்க வேண்டும். அப்போதுதான் சமாளிக்க முடியும். ஐம்பதாயிரம் என்பது ஓரளவிற்குக் கவர்ச்சியான சம்பளம்.

சரி, வருமானத்தை மட்டும் பார்த்தால் போதுமா? ஆசாமியின் தோற்றம், அறிவு (Smartness) குடும்பச் சூழ்நிலை, தனித்தன்மை (குணம்) எல்லாம் முக்கியமில்லையா?

நல்ல குணம் என்பதுதான் அதிக முக்கியமானது. தீய பழக்கங்கள் எதுவும் இல்லாததுதான் முக்கியமானது. ‘கட்டிங்’ அடிக்கிற பையனாக, ஸ்த்ரீ லோலனாக இருந்தால் என்ன செய்வார்களாம்?

அதுபோல பெண்கள் சிவந்த நிறத்துடன் அழகாக இருந்தால் மட்டும் போதுமா? குணம் முக்கியமில்லையா?

மண் வளர்த்த பொறுமை எல்லாம் மனதில் வளர்த்தவளாய் 
கண் வளர்ந்த பெண்மயிலை நான் அடைந்தேன்’ 
என்ற திரைப்படப் பாடல் வரிகளுக்கேற்ப பெண் இருக்க வேண்டாமா?

எப்போதும் உற்சாகமாக, புன்னகையுடன், யாரையும் எதிர்கொள்ளும் தைரியமும், எல்லோரையும் அனுசரித்துக்கொண்டு போகின்ற மனவலிமை யும் உள்ள பெண் வேண்டாமா? அத்தான் என்று அன்புடன், பாசத்துடன் கட்டியனைக்கின்ற பெண் வேண்டாமா?

சிவப்பு என்று கட்டிக்கொண்டுவந்து தினமும் அவளிடம் செருப்படி பட்டுக்கொண்டிருக்கிறான்’ என்று மற்றவர்கள் ஏளனம் செய்யும்படியான வாழ்க்கை அமைந்தால் எப்படி இருக்கும்?

சற்று யோசித்துப் பாருங்கள்

ஆணாகட்டும், பெண்ணாகட்டும் குணம்தான் அதிக முக்கியமானதாகும்!

ஹீரோ அல்லது ஹீரோயினாக இருக்க வேண்டும். வில்லன் அல்லது வில்லியாக இருந்தால், அவதி இல்லையா?

திருமணம் என்பது மகிழ்ச்சிக்கா? அல்லது அவதிக்கா?

சரி குணத்தை எப்படித் தெரிந்து கொள்வது?

ஜாதகத்தில் லக்கினத்தை வைத்தும், சந்திர ராசியை வைத்தும், சுபக்கிரகங்களை வைத்தும் குண நலன்கள் தெரியவரும்

அதை வைத்து ஒரு தொடர் எழுதலாம் என்று உள்ளேன்.

முதல் அத்தியாயம் நாளை!

பொறுத்திருங்கள்

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

5.7.13

வேலுண்டு வினையில்லை முருகா!

 

’முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்”

             - நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படைப் பாடல்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
வேலுண்டு வினையில்லை முருகா!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை  “வேலுண்டு வினையில்லை முருகா!”  என்னும் பாடல் அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------- 
பாடலின் காணொளி வடிவம்!
 http://youtu.be/Bmf2jGVhgaM
Our sincere thanks to the person who uploaded this video clipping in the net


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++=====