--------------------------------------------------------------------------------------
Astrology ஒப்பற்ற துறவி ஒருவரின் ஜாதகம்!
ஒப்பற்ற என்றால் ஒப்பு உவமை சொல்ல முடியாத என்று பொருள். No chance for any comparison என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
அப்படிப்பட்ட துறவி யார்? சுவாமி விவேகானந்தரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் அது!!!!
இன்று சுவாமி விவேகானந்தாரின் ஜாதகத்தின் மேன்மையைப் பார்ப்போம். நன்றாகக் கவனிக்கவும்...அலசுவோம் என்ற சொல்லை நான் பயன்படுத்த வில்லை. மேன்மையை மட்டும் பார்ப்போம் என்றுதான் சொல்லியிருக்கிறேன். ஆகவே அதை மட்டுமே பாருங்கள். தேவையில்லாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்!
சுவாமிஜியைப் பற்றி முழுமையாகத் தெரியாதவர்களுக்காக, அவரைப் பற்றிய செய்திகளுக்கான வலைப் பக்கத்தின் சுட்டியைக் கொடுத்துள்ளேன். முதலில் அதைப் படித்துவிட்டு, பிறகு இங்கே வாருங்கள். அதுதான் நம் இருவருக்கும் நல்லது.
செய்திகளுக்கான சுட்டி: http://en.wikipedia.org/wiki/Swami_Vivekananda
இந்தப் பதிவு நமது வகுப்பறை மாணவமணி விசுவநாதன் (விசு அய்யர்) அவர்களுக்கு சமர்ப்பணம். அவர்தான் தொடர்ந்து கேட்டுக்
கொண்டிருந்தார்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சுவாமிஜி 12.01.1863ஆம் தேதியன்று காலை 6:33 மணிக்கு கல்கத்தா நகரில் பிறந்தார்.
4.7.1902ஆம் தேதியன்று இறைவனடி சேர்ந்தார்.
வாழ்ந்த காலம் 39 ஆண்டுகள் 5 மாதங்கள் 22 நாட்கள் மட்டுமே!
நட்சத்திரம்: ஹஸ்தம், கன்னி ராசி
லக்கினம்: தனுசு
கர்ப்பச்செல் இருப்பு சந்திர திசையில் 3 ஆண்டுகள் 3 மாதங்கள் 22 நாட்கள்
ஜாதகத்தின் சிறப்பு அம்சங்கள்:
முதன்மைக் கிரகமான சூரியன் லக்கினத்தில்
அவர் இந்த ஜாதகத்தின் பாக்கியாதிபதி. இங்கே வந்து அமர்ந்ததால் ராஜயோகங்களைக் கொடுத்தார்.
லக்கினாதிபதியான குரு பகவான் பதினொன்றில், லாபஸ்தானத்தில் (குறைந்த முயற்சி, அதிகப் பலன் தரும் அமைப்பு அது)
கர்மகாரகன் சனி முக்கியமான கேந்திரத்தில் (பத்தாம் வீட்டில்)
அத்துடன் அந்த வீட்டுக்குரிய புதனுடன் சனீஷ்வரன் பரிவர்த்தனை செய்துகொண்டு பலத்த யோகத்துடன் அமர்ந்துள்ளார்.
புதனும் சுக்கிரனும் ஒன்று சேர்ந்து நிபுனா யோகம்
குருவும், செவ்வாயும் (இருவரும் திரிகோண அதிபதிகள்) ஒருவருக்கொருவர் நேரடிப்பார்வையில்
பன்னிரெண்டாம் இடத்து ராகு தொடர் பயண அனுபவங்களைக் கொடுத்தான்.
கிரகங்களின் சுயவர்க்கப்பரல்கள்:
சூரியன் - 5 பரல்கள்
சந்திரன் - 5 பரல்கள்
குரு - 7 பரல்கள்
சனி - 5 பரல்கள்
புதன் - 4 பரல்கள்
சுக்கிரன் - 4 பரல்கள்
செவ்வாய் - 3 பரல்கள்
நான்கு கிரகங்கள் அதீத வலிமையுடன் இருப்பதைப் பாருங்கள். சுக்கிரனும், புதனும் சராசரியான பரல்களுடன் உள்ளன. செவ்வாய்க்கு மட்டும்தான் பரல்கள் குறைவு. ஆனால் அதை செவ்வாய் கோணத்தில் அமர்ந்து சரிகட்டிவிட்டது. ஆக மொத்தம் அனைத்துக்கிரகங்களுமே வலிமையாக உள்ளன.
மேன்மைகள்:
1. திரிகோணம் ஏறிய சூரியன் அவருக்கு நல்ல உடல் வலிமையையும், தாக்குப் பிடிக்கும் சக்தியையும் கொடுத்தான் He also confered will power
2. லக்கினத்தில் வந்தமர்ந்த பாக்கியதிபதி சூரியன் அவருக்கு மக்களிடையே மதிப்பு, மரியாதை, பெயர், புகழ் என்று எல்லாவற்றையும் வழங்கினான். ஆத்மகாரகனும், பாக்கியாதிபதியுமான சூரியன் லக்கினத்தில் அமர்ந்து ராஜ யோகத்தைக் கொடுத்தான். துறவிகளில் அவர் ராஜாவாக இருந்தார். மைசூர் மகாராஜா, ராமநாதபுரம் அரசர் சேதுபதி ராஜா போன்ற பல ராஜாக்கள் அவருக்கு சீடர்களாக இருந்தார்கள்!
3. தனுசுராசி நெருப்பு ராசியாகும். உலகறிந்த ஆன்மீகத் தலைவராக்கியது அந்த லக்கினத்தின் விஷேசமாகும். இன்னொரு நெருப்பு ராசியான சிம்மத்தின் அதிபதி சூரியன் இங்கே வந்து அமர்ந்திருப்பதைப் பாருங்கள். அதுவும் இந்த மேன்மைக்குக் காரணம்
4. லக்கினாதிபதி 11ல் அமர்ந்ததால், அவர் எடுத்துச் செய்த பணிகளில் அவருக்கு முழு வெற்றி கிடைத்தது.
5. பத்தாம் அதிபதி புதன் இரண்டில், பரிவர்த்தனை யோகத்துடன் அமர்ந்தது, அவரை ஒரு தலை சிறந்த பேச்சாளர் ஆக்கியது. இரண்டாம் வீடு வாக்கு ஸ்தானம் என்பதை நினைவிற்குக் கொண்டு வாருங்கள். கேட்பவர்களைக் கிறங்க வைக்கும் பேச்சுத் திறமை அவரிடம் இருந்தது.
6. செவ்வாய் 5ல் திரிகோணம் மற்றும் சொந்த வீட்டில் இருந்ததால், அவருக்கு அதீத செயல் திறனும், துரிதமாக முடிவெடுக்கும் திறனும் இருந்தது.
7. சூரியனும், சந்திரனும் வலிமையாக, கோணம் & கேந்திர பலத்துடனும், சுயவர்க்கத்தில் தலா 5 பரல்களுடனும் இருந்ததால், ஜாதகருக்கு நல்ல தந்தையும், தாயும் கிடைத்தார்கள். இளம் வயது வாழ்க்கை மெச்சும்படியாக அமைந்தது.
8. வித்தைகளுக்கும் கல்விக்கும் காரகனான புதன் பரிவர்த்தனை யோகத்தில். அத்துடன் மனகாரகனும் சுபகிரகமுமான சந்திரனின் பார்வையில் 4ஆம் வீடு. ஜாதகரை இளங்கலை பட்டப் படிப்பு வரை படிக்க வைத்தன அவை. அந்தக் காலத்தில் பட்டப்படிப்பு என்றால் சும்மாவா? பேப்பரை திருத்தினவனெல்லாம் வெள்ளைக்காரன். அதை மனதில் வையுங்கள்.
9. பத்தாம் இடத்துச் சனி ஜாதகரை (அவர் `நுழையும் துறையின் மூலம்) வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வலிமை உடையது.
தலைமைப் பொறுப்பில் இருந்த அனைவருக்கும் இது நடந்துள்ளது. விவேகானந்தருக்கும் அப்படியே நடந்தது. ஆன்மீக உலகத்தின் நம்பர் ஒன்
ஆக ஆனார்! உலகம் முழுவதும் அறியப்பட்டார். மக்கள் கூட்டத்தை வசியப்படுத்துவதில் அவருக்கு நிகரானவர் எவருமில்லை.
10. மறைவிடங்கள் வலிமையாக இருந்தால்தான் துறவியாக முடியும் (3, 6, 8 &12th Houses) அவற்றின் பரல்களைக் கூட்டிப் பாருங்கள்
30 + 35 + 32 + 31 = மொத்தம் 128. 337 வகுத்தல் 3 = 112 மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு இருந்தது 128 (16 பரல்கள் அதிகம்) அதனால்தான் முழுத்துறவியானார்
11. இரண்டாம் இடத்ததிபதி சனீஷ்வரன் 10ல் அமர்ந்து அவருக்கு ராஜயோகத்தைக் கொடுத்ததோடு, லட்சக் கணக்கான மக்களை பக்தி
மார்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் வலிமையையும் கொடுத்தான். அவரைப் புனிதராக்கினான். மனித நேயத்திற்குப் பாடுபட வைத்தான்.
12. இரண்டில் அமர்ந்த ஏழாம் இடத்துப் புதன், அவருக்கு உலகளாவிய புகழையும், மதிப்பையும் பெற்றுத் தந்தான்.
13. பன்னிரெண்டில் இருக்கும் ராகு அவரை நாடு முழுமைக்கும், ஏன் உலகில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களுக்குப் பயணிக்க வைத்தான்.
14. சரி, தசா கணக்கைப் பார்ப்போம்:
அவர் பிறந்தது. 12.1.1863ல். பிறப்பில் சந்திர திசை இருப்பு. சுமார் 3 ஆண்டுகள், மூன்று மாதங்கள் + செவ்வாய் மகா திசை 7 ஆண்டுகள் + ராகு மகா திசை 18 ஆண்டுகள். ஆக மொத்தம் 28 ஆண்டுகள். அதற்குப் பிறகு மே’ 1891ல் துவங்கிய லக்கினாதிபதி குருவின் திசையில் எல்லாம் அரங்கேறியது. வெறும் 11 ஆண்டுகளில் அவர் உலகப் புகழ் பெற்றார்
15. அதே குரு திசையில், சந்திர புத்தி துவங்கியவுடன் அவர் முக்தியடைந்தார். உங்கள் மொழியில் சொன்னால் அவர் காலமானார். சந்திரன் எட்டாம் இடத்துக்காரன். அதை நினைவில் வையுங்கள். அத்துடன் அவன் ஆயுள்காரகன் சனியுடன் கூட்டாக உள்ளான்.
Death (4 July 1902)
His tours, hectic lecturing engagements, private discussions and correspondence had taken their toll on his health. He was suffering from asthma, diabetes and other physical ailments. A few days prior to his demise, he was seen intently studying the almanac. Three days before his death he pointed out the spot for this cremation - the one at which a temple in his memory stands today. He had remarked to several persons that he would not live to be forty.
On the day of his death, he taught Shukla-Yajur-Veda to some pupils in the morning at Belur Math. He had a walk with Swami Premananda, a brother-disciple, and gave him instructions concerning the future of the Ramakrishna Math. Vivekananda died at ten minutes past nine P.M. on July 4, 1902 while he was meditating. According to his disciples, this was Mahasamadhi.
Afterward, his disciples recorded that they had noticed "a little blood" in the Swami's nostrils, about his mouth and in his eyes. The doctors remarked that it was due to the rupture of a blood-vessel in the brain, but they could not find the real cause of the death. According to his disciples, Brahmarandhra - the aperture in the crown of the head - must have been pierced when he attained Mahasamadhi. Vivekananda had
fulfilled his own prophecy of not living to be forty years old.
சாதனைகள் செய்வதற்கும், மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடிப்பதற்கும், வயதும், வாழும் காலத்தின் அளவும் முக்கியமல்ல என்பதுதான் உண்மை. அதை அதிரடியாக நமக்கு உணர்த்திவிட்டுப்போனவர் சுவாமி விவேகானந்தா! அதை மனதில் வையுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------
அடிக்குறிப்பு:
இது unofficial பதிவிற்கு அப்பாற்பட்டது. உங்களுக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதுகிறேன்.
1. விவேகானந்தரின் அன்னை புவனேஷ்வரி அம்மையார் காசி விஸ்வநாதரின் தீவிர பக்தை. ஆண் மகவு வேண்டி அந்த அம்மையார் கடும் பிரார்த்தனைகள் செய்த காலத்தில், காசி விசுவநாதரே அந்த அம்மையாரின் கனவில் வந்து, நான் உனக்கு மகனாகப் பிறப்பேன் என்று சொன்னாராம். விவேகானந்தர் பிறக்கும் முன்பாக அந்த அம்மையார் அதை அடிக்கடி நினைவு கூர்ந்து சொல்வாராம்.
2. நான் நாற்பது வயதிற்கு மேல் உயிர்வாழ மாட்டேன் என்று விவேகானந்தர் அடிக்கடி சொல்வாராம். அதன்படியே நடந்தது. அதாவது அவரே தான் முக்தியடையும் நாளைத் தேடி, முக்தியடைந்ததாக ஒரு செய்தியும் உண்டு. அவருடைய தீவிர பக்தர்கள் (சீடர்கள்) அவர் முக்தியடைந்ததாக மட்டுமே சொல்வார்கள்.
3. ஏழாம் அதிபதி புதன் ஆறாம் வீட்டுக்காரன் (வில்லன்) சுக்கிரனுடன் கூட்டணி போட்டு அந்த வீட்டிற்கு (அதாவது ஏழாம் வீட்டிற்கு) எட்டில் அமர்ந்ததாலும், குடும்ப ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், குழந்தைகள் ஸ்தானம் ஆகியவற்றில் முறையே 25, 21, 21 என்று பரல்கள் குறைந்து அந்த வீடுகள் வீக்காக இருப்ப தாலும் சுவாமி விவேகானந்தருக்கு (அவருடைய குருநாதரைப்போல அல்லாமல்) ஒரு பெண் துணைகூட இல்லாமல் போயிற்று. அத்துடன் ஜாதகத்தில் சந்திரனும் சனியும் ஒன்றாகச் சேர்ந்து கடுமையான புனர்பூ தோஷம். மனைவியைப் பிரிந்து வாழ வேண்டிய தோஷம். அவர் மகான் அல்லவா? அதனால் காலதேவன், அவருக்கு இந்த சங்கடங்கள் எதுவும் ஏற்படமால் பார்த்துக்கொண்டான். பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை ஆகிய மூன்று ஆசைகளும் அறவே இல்லாமல் வாழ்ந்த மகான் அவர்!
இவைகள் எல்லாம் ஜோதிடத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்கள். இதை நான் நம்புகிறேனா அல்லது நீங்கள் நம்புகிறீர்களா என்பது முக்கியமில்லை. இதைப் பதிவில் சொன்னால் சில ‘அரை டிக்கெட்டுகள்’ உள்ளே வந்து சான்று கேட்டு என் கழுத்தை அறுக்கும் அபாயம் உண்டு. ஆகவே அடிக்குறிப்பில் (unofficialலாக)அவற்றைச் சொல்லியுள்ளேன்.
நன்றி, வணக்கத்துடன்
வாத்தி (யார்)
++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!