மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.6.09

நேர்மைக்கு ஏற்பட்ட சோதனை!

நேர்மைக்கு ஏற்பட்ட சோதனை!

ஒரு விவசாயி தன் வீட்டின் அருகில் இருந்த பேக்கரிக்குத்
(ரொட்டிக் கடைக்காரனுக்கு) தினமும் இரண்டு கிலோ வெண்ணெயை விலைக்குக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் கடைக்காரன் வெண்ணெயை எடை போட்டுப் பார்க்க,
வந்தது பிரச்சினை.

வெண்ணெய் 100 கிராம் அளவு எடை குறைவாக இருந்தது.

கோபமடைந்த பேக்கரிக்காரன், அன்றே பிரச்சினையை நீதி மன்றத்திற்குக் கொண்டு சென்று விட்டான்.

விசாரனை நடந்தது.

விவசாயி, தன் பதிலை நீதிபதியிடம் இப்படிச் சொன்னான்.

“சாமி, என்னிடம் முறையான படிக்கற்கள் இல்லை. தராசு மட்டுமே உண்டு. ஆரம்பகாலம் முதல் நான் கடைப் பிடிக்கும் வழக்கம் இதுதான். பேக்கரிடம் இருந்து இரண்டு கிலோ ப்ரெட் வாங்கிக் கொண்டுவருவேன். அதைப் பயன்படுத்தி, அதற்குச் சமமான அளவு வெண்ணேயை, அவருக்குக்
கொடுத்து வருகிறேன். இதில் தில்லிமுல்லுவிற்கெல்லாம் எந்த இடமும் இல்லை”

அதிரடியாக, பேக்கரிடமிருந்து இரண்டு கிலோ ப்ரெட் பாக்கெட் எடுத்துக்
கொண்டு வரப்பட்டு நீதி மன்றத்தில் எடை போட்டுப் பார்க்கப் பெற்றது.

அதன் அளவில் 100 கிராம் எடை குறைவாக இருந்தது.

நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்ததோடு, பேக்கருக்கு ஆயிரம் டாலர்
அபராதம் விதித்து அனுப்பினார்
--------------------------------------------------
ஆகவே யாரையும், குறைகூறும் முன்பு நம் பக்கம் எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது அவசியம்.

வாழ்க வளமுடன்!

13.6.09

நீயா? நானா?

நீயா? நானா?

பழைய திரைப்படம். நாயகி அழகாக இருப்பார். பிடரியை மறைக்கும்
நீண்ட முடி. அதற்குத் துணை நிற்கும் மல்லிகைச் சரம்.

எவரையும் ஈர்க்கும் புன்னகை சிந்தும் முகம்.

அங்கே வரும் பெரியவர் ஒருவர், அந்தப் பெண்ணின் அழகில் மகிழ்ந்து
அவள்தான் தன் மகனுக்கு ஏற்ற பெண் என்ற முடிவிற்கு வந்து,
அவளுடன் பேசத்துவங்குவார். அவர் அவளுடைய உறவினர்.ஆகவே
அந்த மங்கை நல்லாளும் தயக்கமின்றி அவர் கேள்விகளுக்குப் பதில்
சொல்வாள்.

தன் சட்டைப் பையில் இருந்து ஒரு ஒற்றை ரூபாய் நாணயத்தைத் தன்
விரல்களால் சுண்டி விட்டுப் பிடித்து உள்ளங் கைகளிக்கிடையே
மறைத்து வைத்துக் கொண்டு கேட்பார்:

“பூவா? தலையா? சொல்லம்மா பார்க்கலாம்?”

பெண் முகம் மலர்ந்து சொல்வாள்:

“பூ!”

அவர் தனது கைகளைத் திறந்து காட்டுவார். என்ன ஆச்சரியம்?

வந்தது பூ தான்.

உடனே பெரியவர் சொல்வார்.” வந்தது பூ; நீ தான் என்னுடைய மருமகள்!”

அந்தப் பெண் அவரை மடக்கும் விதமாகக் கேள்வி கேட்பாள்

“தலை விழுந்திருந்தால் என்ன சொல்வீர்கள்?”

“நான்தான் உனக்கு மாமனார்!”

அவருடைய சாமர்த்தியத்தைப் பாருங்கள்.

பூ விழுந்ததால் அவள்தான் மருமகள் என்றவர், தலை விழுந்திருந்தால்
நான்தான் உன்னுடைய மாமனார் என்றிருப்பாராம். எது விழுந்தாலும்
தான் தான் ஜெயிக்க வேண்டும் என்னும் தன்முனைப்பின் வெளிப்பாடு அது!
====================================================
இப்படித்தான் எல்லா மனித மனமும் வெற்றி கொள்ள விழையும்

அதை இயற்கை என்று சொல்லிவிட முடியாது.

அது சுயநலம்!

மனிதனுடைய முதல் விரோதியே இந்தச் சுயநல மனப்பானைதான்

இரண்டாவது விரோதி சோம்பல்; மூன்றாவது விரோதி பய உணர்வு!

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

சரி, ஒவ்வொன்றாக வருவோம்!
++++++++++++++++++++++++++++
சுயநலத்தை மூன்றாகப் பிரிக்கலாம்.

1. ஏதாவது வேலை என்றால், அதில் தன் பங்கு என்ன என்று தெரிந்து
கொண்டு, (what is stored in it for me?) அதைச் செய்ய ஒப்புக்
கொள்வது முதல் வகைச் சுயநலம்!

2. இரண்டாவது வகை சற்றுக் கிறுத்துருவமானது. கிறுக்குத்தனமானது!
நீ அவல் கொண்டு வா. நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும்
கலந்து வைத்துக் கொண்டு ஊதி ஊதித் தின்போம். என்னுடைய ஈடுபாடு
குறைவாக இருக்கும். உன்னுடைய ஈடுபாடு அதிகமாக இருக்க வேண்டும்
என்னும் அழிச்சாட்டியம்

3. மூன்றாவது வகை இருப்பதிலேயே மோசமானது. தலை விழுந்தால்
நான் ஜெயிப்பேன். பூ விழுந்தால் நீ தோற்பாய். அதாவது எப்படியும்
நான்தான் ஜெயிக்க வேண்டும்

இந்த மூன்று வகை ஆசாமிகளையும் நான் பார்த்திருக்கிறேன். நீங்கள்
பார்த்திருக்கிறீர்களா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நீங்கள் யாருடன் வேண்டுமானாலும் இணைந்து செயல்படலாம்.
ஆனால் இந்தச் சுயநலம் அதிகம் உடையவர்களுடன் இணைந்து
சில காலத்திற்கு மேற் செயல்பட முடியாது.”சீ” என்றாகி விடும்.
அவர்களைக் கண்டாலே வெறுத்து ஒதுங்கும் நிலை ஏற்பட்டுவிடும்

ஜாதகத்தைவைத்து ஒருவன் சுயநலம் மிக்கவனா அல்லது சுயநலம்
இல்லாதவனா என்று சொல்ல முடியுமா?

முடியாது!

மனித குணங்களான அன்பு, பாசம், நேசம், கோபம், தாபம், விரக்தி
காதல், மென்மை, சீற்றம், நட்பு, துரோகம், சுறுசுறுப்பு, சோம்பல்,
வீரம், பய உணர்வு, சுய நலம், சேவை மனப்பான்மை, பெருந்தன்மை
கருமித்தனம், பொறுமை, பொறாமை என்னும் பல நிலைப் பாடுகளுக்கு,
பல விதமான கிரகங்களும், லக்கினமும் காரணமாகும். லக்கினம்,
லக்கினநாதன், ஐந்தாம் வீடு, மனகாரகன், மற்றும் உள்ள ஏழு
கிரகங்களின் கூட்டு அமைப்பு காரணமாகும் Permutation combination;
Four to the power of seven. கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆனால் லக்கினத்திற்கென்று சில பொதுவான குணங்கள் உண்டு
குறிப்பிட்ட லக்கினத்தின் அதிபதியை வைத்து அந்தக் குணம்
மேம்பட்டு நிற்கும்

1. மகரம் மற்றும் கும்ப லக்கினக்காரர்கள் கடும் உழைப்பாளிகள்
சனி அதிபதி அதனால் கடும் உழைப்பு அவர்களிடம் இருக்கும்.
அதில் மகர லக்கினக்காரர்கள் கிடைத்தை மட்டும் கடுமையாக
உழைத்து செயல் படுத்துவார்கள். ஆனால் கும்ப லக்கினக்காரர்கள்
ஒருபடி மேலே சென்று, தேடிப் பிடித்தும் செய்வார்கள்.

2.ரிஷப லக்கினக்காரர்களை ஈஸியாக வளைத்துவிட முடியும்.
மென்மையானவர்கள். மெல்லிய உணர்வு படைத்தவர்கள். எதையும்
அனுபவிக்கத் தயாராக இருப்பவர்கள்.(சுக்கிரன் அதிபதி)
“டேய் மாப்ளே, வாடா ரெண்டு பெக் அடித்துவிட்டு வரலாம்” என்றால்
வந்து விடுவார்கள். அதிலும் சிலர்,”டேய் நீ கூப்பிட்டதற்காக
வந்தேன்.ஜஸ்ட் ஃபார் கிவிங் யூ கம்பெனி. நீ என்ன கருமத்தை
வேண்டுமென்றாலும் குடி. எனக்கு பெப்ஸி மட்டும் போதும்” என்று
சொன்னாலும் சொல்வர்களேயன்றி மறுக்காமல் வந்து விடுவார்கள்
அதிலும் ஒரு வித்தியாசம். துலா லக்கினத்திற்கும் அதே சுக்கிரன்
அதிபதி என்றாலும், அவர்கள் இடம், கெளரவம் என்று யோசித்து
விட்டுத்தான் வருவார்கள்.

3. கன்னி & மிதுன லக்கினக்காரர்கள் இயற்கையிலே புத்திசாலிகள்
எல்லோருடனும் நெருங்கிப் பழகக்கூடியவர்கள். எவருடனும் ஜோடி
சேரக்கூடியவர்கள். சீட்டாட்டத்தில் ஜோக்கரைப் போல! இந்த
இரண்டில் கன்னி தராதரம் பார்க்காது. மிதுனம் பார்க்கும்

4.மேஷ லக்கினம் & விருச்சிக லக்கினம்
பொதுவாக குடும்பத்தில் மூத்தவராக இருப்பார் அல்லது குடும்பத்தில்
தலைமை தங்கும் வல்லமை பெற்றிருப்பார். சுறுசுறுப்பானவர்.
தற்பெருமை உடையவர். நாயகனுக்குள்ள தன்மைகளைப் பெற்றிருப்பார்.
நியாயமான காரணங்களுக்குச் சண்டைபோடும் மனப்பான்மை உடையவர்.
ஒரு இடத்தில் இருக்கும் தன்மை இல்லாதவர். பெண்களின் மேல்
தனி விருப்பம் உடையவர். இந்த லக்கினக்காரகளின் வளர்ச்சி சீராக
இருக்காது. உணர்ச்சிகளுக்கு வயப்பட்டவர்கள். முன் கோபக்காரர்கள்.
அதேபோல எளிதில் சமாதானமாகிவிடக் கூடியவர்கள்.
வேலை பார்க்கும் இடங்களில் நல்ல பெயரை எடுக்ககூடியவர்கள்

5. கடகம்:
intelligent, fond of astrology ; has many family friends and
is attached to them; owns houses; his fortunes wax and wane
ike the Moon; he can be brought round by persuasion.
He is under the considerable influence of his wife or of women.

6. சிம்மம்:
The native has a sacrificing spirit, is of fixed determination,
but gets unjustifiably into a temper at the slightest provocation
and the anger is not quickly pacified; does not get on well
with women; is fond of forests and mountains; is a favourite
of his mother. The native is courageous, heroic and capable
of prevailing upon others. Suffers from mental and dental ailments.

7, தனுசு & மீனம்:
active and engaged in work; eloquent in speech; religious and
prepared to sacrifice for others; inimical to relations; overpowers
enemies; cannot be brought round by force, but can be prevailed
upon by persuasion only.

நீயா? நானா? என்னும் மனிதனின் குணம் ஆளுக்கு ஆள், இடத்துக்கு
இடம் மாறுபடும். ஜாதகத்தை வைத்து ஒரளவிற்கே அது தெரியும்.
உதாரணம். கருமியா என்று! முழுமையாக எந்தப் புத்தகத்திலும்,
யாரும் எழுதி வைத்து விட்டுப் போகவில்லை. நெருங்கிப் பழகினால்
மட்டுமே நன்கு தெரியும் அல்லது தெரிந்து கொள்ள முடியும்!

(அலசல் தொடரும்)

வாழ்க வளமுடன்!

2.6.09

வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்!

வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்!

வெற்றி என்ற சொல்லிற்கு ஒரு வசீகரம் உண்டு.
வெற்றியை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
எல்லோராலும் விரும்பப்படுவதால் மட்டுமல்ல, வெற்றிக்கு ஒரு
உள்ளடங்கிய பயன் இருப்பதால் அதற்கு ஒரு வசீகரிக்கும்
தன்மை வந்துவிடுகிறது.

அது என்ன உள்ளடங்கிய பயன்?

எடுத்து செய்யும் செயல்களுக்குக் கிடைக்கும் சாதகமான
முடிவுதான் உள்ளடங்கிய பயன்!

எடுத்த செயல் எல்லாமே 'வெற்றி பெறுமா?' என்றால் அது
யோசிக்க வேண்டிய விஷயம்!

ஆனால் யோசிப்பதற்கே இடமில்லாமல் எடுத்த செயலைத்
தன்முனைப்போடு செய்து வெற்றி பெற்றால், ஒரு உத்வேகம்
ஏற்பட்டு அடுத்தடுத்து நாம் பல வெற்றிகளைக் காண முடியும்.
ஆகவே ஒரு வெற்றி, அடுத்த வெற்றிக்கு வழி வகுக்கும்

சிலர் தொடர்ந்து வெற்றி பெறுகிறார்கள்.
சிலர் பெறுவதில்லை! என்ன காரணம்?

முன் பத்தியில் சொன்ன அந்த உத்வேகம்தான் காரணம்.
ஆங்கிலத்தில் அதைக் killing instinct என்பார்கள்.

வெற்றி பல வடிவங்களைக் கொண்டது.
பல அர்த்தங்களைக் கொண்டது. வாழ்க்கையில் தேடுவது
ஒருவகை வெற்றி. வியாபாரத்தில் தேடுவது ஒருவகை வெற்றி.
விளையாட்டு வீரனின் வெற்றி ஒரு வகை என்றால்,
இசைக்கலைஞன் தேடுவது ஒருவகை வெற்றி.

ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர் தேடுவது தினசரி வெற்றி.
ஆமாம் அவர் தினசரி செய்யும் அறுவை சிகிச்சை வெற்றி
பெற்றால் தானே சிகிச்சைக்கு வந்தவன் மீண்டும் நடமாட முடியும்?

ஆகவே எப்படிப்பட்ட வெற்றி என்பது அவரவர் தேடலைப் பொறுத்தது!

அதுபோல வெற்றியின் தன்மையும் வித்தியாசப்படும்.

பள்ளி இறுதியாண்டு படிக்கும் மாணவன் தேர்வு பெற்றால்
அது செயல்.

அவனே நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறினால்
அது வெற்றி (success)

மாநில அளவில் முதல்மாணவனாக அவன் தேறினால்
அது உண்மையான வெற்றி! (True Success)

'கரையை விட்டுப் பயணிக்காமல் நீங்கள் சமுத்திரங்களைப்
பார்த்து வரமுடியாது' என்ற சொல்லடை உண்டு.
அதுபோல இருக்கும் இடத்தைவிட்டு எழுந்து சிரமம் பார்க்காமல்
செயல் பட்டால்தான் வெற்றியை அடைய முடியும்.
எதுவும் நம்மைத் தேடி வராது. நாம் தான் தேடிப்போகவேண்டும்

நம்மைத் தேடி எதுவுமே வராதா? சோம்பி இருந்தால் நம்மைத்
தேடி ஒன்றல்ல இரண்டு வரும்.

அவற்றின் பெயர்: நோய் மற்றும் கடன்

வெற்றியைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?
வெகு இயல்பாகச் சொன்னால், சரியான நேரத்தில், சரியான வழியில்,
சரியான செயலைச் செய்வதுதான் வெற்றி!

Success is simple. Do what's right, the right way,
at the right time.- Arnold H. Glasow

உட்கார்ந்து யோசித்தோமென்றால், சரியான நேரத்தில்
சரியான செயலைச் செய்யாததால் வாழ்க்கையில் எத்தனை வெற்றி
வாய்ப்பை இழந்திருக்கிறோம் என்ற எண்ணிக்கை தெரியவரும்.

வெற்றி என்பது போய்ச் சேர வேண்டிய இடமல்ல:
வெற்றி என்பது பயணம் ஆகும்.
(Success is not a destination it is a journey)

இன்றைய மனிதர்களின் தேவைகளும், ஆசைகளும் நாளுக்கு
நாள் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

ஆசைப்படுவதை விட்டு விட்டு, தேவைப்படும் அளவிற்கு
வாழ்க்கையில் வளமாக இருக்க வேண்டும் என்றால் எடுத்துச்
செய்யும் செயல்களின் வெற்றி முக்கியம்.

தொடர் வெற்றியைப் பெறுவதற்கு நமக்கு என்னென்ன
தகுதிகள் வேண்டும்.

1. எதையும் விடாது செய்து முடிக்கும் ஆர்வமுள்ள மனது
2. ஆரோக்கியமான உடல் நிலை
3. அலையக்கூடிய தெம்பு
4. எவரிடமும் அன்பு பாராட்டக்கூடிய மனப்பான்மை
5. தட்டுப்பாடு இன்றி தேவைக்குச் செலவழிக்கும்
அளவிற்குக் கையில் காசு
6. அவன் செய்கிறான், நம்மால் ஏன் செய்யமுடியாது,
என்று நம்மையே நாம் ஊக்குவிக்கக்கூடிய உணர்வு
அல்லது தன்னம்பிக்கை.

இந்த ஆறு தகுதிகளையும் ஏற்படுத்திக் கொண்டு நீங்கள்
செயல் பட்டால். நிச்சயம் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும்
வெற்றிதான்.

பிறகு வெற்றி மீது வெற்றி வந்து உங்களை மட்டுமல்ல,
நம் எல்லோரையும் வந்து சேரும்
==========================================================
”வாத்தியார்...?”

“என்ன ராசா?”

”என்ன இது...?”

“இதுவும் பாடம்தான் ராசா!”

“ஜோதிடப் பாடம் என்ன ஆயிற்று?”

“தொடர்ந்து பணிச்சுமை. அதோடு ஒரு புத்தகம் தயாரிக்கும்
பணியில் ஈடுபட்டிருக்கிறேன். ஜோதிடப் பாடத்தின் அடுத்த பகுதியை
எழுதித் தட்டச்ச வேண்டும். அதற்கு நேரமில்லை. வரும் ஞாயிறன்று
தட்டச்சி திங்கட்கிழமையன்று வலையேற்ற உள்ளேன்.
பொறுத்துக் கொள்ளவும். இந்த ‘வெற்றி’ கட்டுரை ஒரு மாத
இதழுக்காக எழுதியது.அதை அப்படியே cut & pasteல் உங்களுக்குக்
கொடுத்துள்ளேன்”

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!