Astrology: ஒரு ஜாதகத்தில் முக்கியமான அம்சங்கள்.
முக்கிய விதிகள்!
பாடங்களில் அடியேன் அடிக்கடி உபயோகிக்கும் சொற்கள்:
வலிமையாக இருக்க வேண்டும்
கெட்டுப் போயிருக்ககூடாது.
பாடங்களைப் படித்துப் படித்து, உங்களுக்கும் அச்சொற்களின் அர்த்தம் முழுமையாகப் பிடிபட்டிருக்கும்.
ஒரு ஜாதகத்தில் முக்கியமான அம்சங்கள்.
1. லக்கினமும், லக்கினாதிபதியும் நன்றாக இருக்க வேண்டும்.
2. சுபக்கிரகங்களான குரு, சந்திரன், சுக்கிரன் ஆகியவை கெட்டுப்போயிருக்கக்கூடாது.
3. லக்கினம், கேந்திர வீடுகள், திரிகோண வீட்டு அதிபதிகள் 6, 8 அல்லது 12ல் மறைந்துவிடக்கூடாது.
4. ஆறாம் இடத்து அதிபதியும், எட்டாம் இடத்து அதிபதியும், 12ஆம் இடத்து அதிபதியும் முக்கியமான இடங்களில் அமர்ந்து ஆதிக்கம்
செய்யக்கூடாது.
5. வீடுகள் (Houses) பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கிக்கொண்டிருக்கக்கூடாது.
6. ஆயுள் ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும்.
இவை அனைத்துமே நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே கிடைத்தவரை லாபம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.
கெட்டுப்போயிருக்கும் அமைப்புக்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். அதைப் பாருங்கள்.
அனைவருடைய ஜாதகமும் சமம்தான்.
அம்பானியின் ஜாதகமும், உங்களுடைய ஜாதகமும் ஒன்றுதான்.
பிரணாப் முகர்ஜியின் ஜாதகமும் உங்களுடைய ஜாதகமும் ஒன்றுதான்.
ஷாருக்கானின் ஜாதகமும் உங்களுடைய ஜாதகமும் ஒன்றுதான்.
அவர்களுக்கும் அஷ்டகவர்க்கப்பரல் 337 தான்
உங்களுக்கும் அஷ்டகவர்க்கப்பரல் 337 தான்
அதை என்றும் நினைவில் வையுங்கள்!
----------------------------------------
அன்புடன்,
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com