மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

15,655,787

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.4.25

Astrology: கிரகங்கள் நீச வீட்டில் இருக்கும்போது கிடைக்கும் பலன்கள்!

Astrology: கிரகங்கள் நீச வீட்டில் இருக்கும்போது கிடைக்கும் பலன்கள்!
Results of neecha planets

எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

1. சூரியன் நீசம் அடைந்திருந்தால் ஜாதகர் தன்னைச் சார்ந்தவர்களாலேயே தாழ்ந்த நிலை பெறுவார்.

2. சந்திரன் நீசம் அடைந்திருந்தால் உடல் நலம் பாதிக்கும். ரோகம் உடையவராக இருப்பார்.

3. செவ்வாய் நீசம் அடைந்திருந்தால், மனம் பாதிக்கப்படும். மற்றும் பல தொல்லைகளை சமாளிக்க வேண்டியதிருக்கும்.

4. புதன் நீசம் பெற்றிருந்தால், உறவினரால் பகை ஏற்படும்.

5. குரு நீசமடைந்திருந்தால், புகழ் இல்லாதவராக இருப்பார். ஏழ்மை உடையவராக இருப்பார்.

6. சுக்கிரன் நீசம் பெற்றிருந்தால், கெட்ட எண்ணங்கள் உண்டாகும். மற்றவர்களிடம் பணியாற்றும் நிலை ஏற்படும். மனைவியிடமிருந்து பிரிந்து
இருக்கும் நிலை ஏற்படும்.

7.சனி நீசமடைந்திருந்தால் ஒழுக்கக்குறைபாடு ஏற்படும். தாழ்நிலை ஏற்படும். வறுமையால் வாடும் நிலையும் ஏற்படும்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.4.25

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

அன்புடையீர்,
வகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.4.25

Astrology: கிரகங்கள் சொந்த வீட்டில் இருக்கும்போது,

Astrology: கிரகங்கள் சொந்த வீட்டில் இருக்கும்போது, 
Results of planets in their own house

எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

1. சூரியன் தனது ஆட்சி வீட்டில் இருந்தால், ஜாதகர் அறிவாற்றலும், அழகான, கவர்ச்சியான தோற்றம் உடையவராகவும் இருப்பார்.

2. சந்திரன் சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் தெளிவான மனநிலை உடையவராக இருப்பார்.

3. செவ்வாய் தனது சொந்த வீட்டில் இருந்தால்,  ஜாதகர் செயல் வீரராக இருப்பார். கொள்கைவாதியாக இருப்பார்.

4. புதன் தனது சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் பல கலைகளை அறிந்தவராக இருப்பார். பேச்சற்றல் உடையவராக இருப்பார்.

5. குரு தனது சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் கல்வியாளராக இருப்பார். வேதங்களை, புராணங்களை அறிந்தவராக இருப்பார்.

6. சுக்கிரன் தனது சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் செல்வந்தரகவும், நல்ல செயல்களைச் செய்பவராகவும் இருப்பார்.

7.சனி தனது சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் மகிழ்ச்சி உடையவராகவும், புகழ் உடையவராகவும் இருப்பார்.

அன்புடன்
வாத்தியார்
========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.4.25

Astrology: கிரகங்கள் நட்பு வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்!

Astrology: கிரகங்கள் நட்பு வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்!

எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

1.சூரியன் நட்பு வீடுகளில் இருந்தால் ஜாதகருக்கு நல்ல நண்பர்களைக் கொடுப்பார். ஜாதகர் தர்ம குணம் உடையவராக இருப்பார்.

2. சந்திரன் நட்பு ராசிகளில் இருந்தால், ஜாதகர் மகிழ்ச்சியானவராகவும், புகழ் பெறுபவராகவும் இருப்பார்.

3. செவ்வாய் நட்பு ராசிகளில் இருந்தால், ஜாதகர் தனக்கு விருப்பமான நபர்களை ஆதரிப்பவராக இருப்பார்.

4. புதன் நட்பு ராசிகளில் இருந்தால், ஜாதகர், நகைச்சுவை உணர்வு உடையவராக, செயல் வீரராக, செல்வந்தராக இருப்பார்.

5. குரு நட்பு வீடுகளில் இருந்தால், ஜாதகர் பல நல்ல காரியங்களை செய்பவராக இருப்பார்.

6. சுக்கிரன் நட்பு வீடுகளில் இருந்தால், ஜாதகர் நல்ல நண்பர்களை உடையவராக இருப்பார். செல்வம் உடையவராக இருப்பார்.

7. சனி நட்பு வீடுகளில் இருந்தால், ஜாதகர் மற்றவர்களை நம்பி வாழ்வார்.

அன்புடன்,
வாத்தியார்
================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.4.25

Astrology: கிரகங்கள் பகை வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்


Astrology: கிரகங்கள் பகை வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்!

Results of planets in their enemy house


கிரகங்கள் பகை வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்

எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

1.சூரியன் பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் ஏழ்மை நிலையிலும், பெண் ஆசை உடையவராகவும் இருக்க நேரிடும்.

2. சந்திரன் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர் அழகற்றவராகவும், இருதய நோய் உடையவராகவும் இருப்பார்.

3. செவ்வாய் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர் ஏழ்மையில் வாழ நேரிடும். பகைவர்களால் துன்பமும், அதிர்ஷ்டமற்ற நிலையும் உண்டாகும்.

4. புதன் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர், அறிவாற்றல் இல்லாதவராக, பகைவரால் தொல்லை அடைபவராக  இருப்பார்.

5. குரு பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் நியாயம் இல்லாதவராக, ஏழ்மை உடையவராக, அரக்க குணம் கொண்டவராக இருப்பார்.

6. சுக்கிரன் பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் துன்பம் அனுபவிப்பவராக, கீழான பணி செய்பவராக, பல கெடுதலான காரியங்களைச் செய்பவராக  இருப்பார்.

7. சனி பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் தூய்மையற்றவராக, தொல்லைகள் உடையவராக, பல வியாதிகளால் துன்பம் அடைபவராக இருப்பார்.

அன்புடன்,
வாத்தியார்
================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.4.25

Astrology: நீங்களும் உங்கள் அணியும்

Astrology: நீங்களும் உங்கள் அணியும் 

எதையும் உதாரணத்துடன் எழுதினால் அனைவருக்கும் சட்டென்று புரியும்.

அதுவும் சினிமாவை வைத்து அல்லது நமக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் ஆட்டத்தைவைத்து உதாரணங்களைச் சொன்னால் நன்றாகப் புரியும்.

முன்பொரு முறை, சந்தேகங்கள் பகுதியில் முதல் கேள்வியாக நமது மாணவக் கண்மணி ஒருவர் இப்படி கேட்டிருந்தார்:

////Sir, this is my first question. if suryan and chandran (difference in o degree) are placed in 11 nth house is it good or no use and also join with mercury and ragu/////

ஜீரோ டிகிரி என்றால் விக்கெட் போய்விட்டது என்று அர்த்தம். பதினொன்றாம் வீடு என்பதற்காக கிரவுண்டில் நிற்க முடியாது. டிரஸ்ஸிங் ரூமிற்குத்

திரும்ப வேண்டியதுதான். கூடவே ராகுவும், இருந்தால், அவுட்டாகிவிட்டு வரும்போது, பெளலரையும், அம்ப்பயரையும் தகாத வார்த்தையால்

திட்டிவிட்டு வந்தால் என்ன ஆகுமோ அது ஆகும்!

என்று நான் பதில் சொல்லியிருந்தேன். அனைவருக்கும் அது நன்றாகப் பிடிபட்டிருக்கும், அதாவது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

ஜாதகத்தைக் கிரிக்கெட்டோடு இணைத்து இன்று எழுதியுள்ளேன். படித்துப்பாருங்கள்;

உங்கள் அணி (அதாவது உங்கள் ஜாதகம்)

லக்கினாதிபதிதான் கேப்டன்.

திரிகோண வீடுகளின் அதிபதிகள் மூன்று பேர்களும் பேட்ஸ்மேன்கள் (That is the First House Lord, Fifth House Lord and Ninth House Lord are

batsmen). கேப்டன் பேட்டிங் பண்ணக்கூடாதா? அவரும் பண்ணுவார்.

கேந்திர அதிபதிகள் ஆல் ரவுண்டர்கள் (That is the Fourth House Lord, Seventh House Lord and Tenth House Lord are all rounders - Batting,
Bowling and Fielding)

இரண்டாம் வீட்டுக்காரன் விக்கெட் கீப்பர் (That is the Second Lord is the Wicket Keepper)

பதினொன்றாம் வீட்டுக்காரர் 12த் மேன் (வேண்டும்போது உதவிக்கு வருவார்)

இதுதான் உங்கள் அணி. இவர்களை வைத்துத்தான் உங்களின் ஆட்டம். உங்களது வெற்றி தோல்விகள்

வெற்றி தோல்விகளை அவ்வப்போது நடக்கும் மேட்சுகள் (தசா, புத்திகள்) மூலம் தெரியும். டெஸ்ட் மாட்ச், ஒன் டே மாட்ச், Twenty X Twenty என்று

அவற்றின் கால அளவும் வேறுபடும்.

கோள்சாரங்கள் வெற்றி தோல்விகளால் கிடைக்கும் பரிசுப் பணத்தை (Prize Money) நமக்குக் கொடுப்பவையாகும்
-------------------------------------------------------------------------
எதிர் அணி

கேப்டன் = காலதேவன் (விதி, Destiny, பூர்வ புண்ணியம், வாங்கிவந்த வரம் என்று எப்படி வேண்டுமென்றாலும் அவரை அழைத்துக்கொள்ளுங்கள்)

அதிரடி பேட்ஸ்மேன்: ஆறாம் வீட்டுக்காரர் (6th House Lord)

அதிவேகப் பந்து வீச்சாளர்:பன்னிரெண்டாம் வீட்டுக்காரர் (12th House Lord)

ஆல்ரவுண்டர்: எட்டாம் வீட்டுக்காரர் (Eighth House Lord)

விக்கெட் கீப்பர்: மூன்றாம் வீட்டுக்காரர் (Third House Lord)

எதிர் அணியில் ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம். ஒவ்வொருத்தரும் எக்ஸ்பர்ட் ப்ளேயர்ஸ்.

சச்சினைப்போல. வீரேந்திர சேவாக்கைப்போல, ஆண்ட்டி ராபர்ட்ஸைப்போல. மைக்கேல் ஹோல்டிங்கைப்போல.

சரி, இதில் எங்கள் பங்கு என்ன என்கிறீர்களா? இந்த அணிக்கு நீங்கள்தான் உரிமையாளர். சென்னை சூப்பர் கிங்ஸிற்கு இந்தியா சிமெண்ட்டின்

சீனிவாசன் உரிமையாளராக இருக்கிறார் அல்லவா? அதைபோல என்று வைத்துக்கொள்ளுங்கள்.

விளக்கம் போதுமா?
------------------------------------------------------------
இடைசெருகல்:

மாணவக் கண்மணி G,முருகன் கேட்ட கேள்வி: Sir, Superb. But who is the umpire.

வாத்தியாரின் பதில்:
கடவுள்தான் அம்ப்பயர். வேறு யார் சரியான அம்ப்பயராக இருக்க முடியும்? Stump Umpire, Line Umpire, Third Umpire என்று எல்லாவற்றிற்கும் அவர்

ஒருவரேதான். அவரால் முடியாதது என்ன இருக்கிறது?

அடுத்த கேள்வி இப்படி வரலாம் - பார்வையாளர்கள் யார்?
நமது குடும்பத்தாரும், உறவினர்களும், நண்பர்களும்தான் பார்வையாளர்கள். டிக்கெட் இல்லை! அனைவருக்கும் இலவச அனுமதி!

டி.வி, செய்தித்தாள்கள் போன்ற மீடியாக்கள் உண்டா?
அவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!

விளக்கம் போதுமா ?
அன்புடன்
வாத்தியார்
============================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.4.25

Astrology: வீடுகளுக்கென்று உள்ள பணிகள்/வேலைகள்.

Astrology: வீடுகளுக்கென்று உள்ள பணிகள்/வேலைகள். 
Portfolio of 12 houses


புதிதாக வந்த மாணவக் கண்மணி ஒருவர் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார். 12 வீடுகளுக்கான வேலைகளை எழுதுங்கள் என்கிறார்.

அவருக்காக அதை இன்று கொடுத்துள்ளேன். அனைவருக்கும் பயன் படட்டும் என்று பதிவில் ஏற்றியுள்ளேன்.

Astrological Charts - The portfolio of 12 houses:

லக்கினம்தான் முதல் வீடு. மற்றவீடுகள் அதில் இருந்து எண்ணப்பட வேண்டும். கணக்கிடப் பட வேண்டும்.
Lagna is the first house and other houses are to be counted only from lagna.
-------------------------------------------------------
1. முதல் வீடு (லக்கினம்)

அ) தோற்றம். உடல் வாகு, நிறம், உயரம், தோற்றத்தால் உண்டாகும் வசீகரம் போன்றவை.
ஆ) குணம். குண நலன்கள். மற்றவர்களை அனுசரித்துப்போகும் குணம். வக்கிர குணம். நல்லவற்றையே செய்யும் குணம். எதிலும் ஆதாயத்தை

எதிர்பார்க்கும் குணம், பொறுமை, சகிப்புத்தன்மை, கோபம், இரக்கம், தாபம், காமம், சுயநலம், கஞ்சத்தனம் போன்ற அத்தனை குணங்களும் இதில்

அடங்கும்.
இ) சந்திக்க இருக்கும் வெற்றிகள், புகழ், பெருமை, சிறுமை போன்றவை

1.Complexion & Physical appearance
2.Mental Characteristics
3.Success,fame & defame
--------------------------------------------------------------
2. இரண்டாம் வீடு
அ) குடும்ப நிலைமை, குடும்ப வாழ்க்கை.
ஆ) நிதி நிலமை. பணம். வரவு. செலவு போன்ற பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்.
இ) வாக்கு. பேச்சு, வாக்கைக் காப்பாற்றும் தன்மை. பேச்சுத் திறமை போன்றவை

1.Family Life
2.Financial Prosperity
3.Speech
--------------------------------------------------------------
3. மூன்றாம் வீடு
அ) உடன் பிறப்புக்கள். சகோதரன் சகோதரிகள். அவர்களூடன் ஆன உறவுகள். அவர்களுடன் கூடிய மேன்மையான உறவு. அல்லது சண்டை,

சச்சரவுகள் நிறைந்த தன்மை. விசுவாசமில்லாத உறவுகள் போன்றவை.
ஆ) உறவினர்கள். பங்காளிகள். போன்றவை
இ) தைரியம். துணிச்சல்.நல்லது. கெட்டது என்று எதையும் எதிர்கொள்ளும் தன்மைகள் போன்றவை

1.Brothers & Sisters
2.Relatives
3.Governance over courage
-------------------------------------------------------------
4. நான்காம் வீடு.

அ) தாய்.
ஆ) கல்வி.
இ) சொத்து. சுகங்கள், நிலபுலன்கள். வீடு. வாகனங்கள் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான எல்லோரும் ஆசைப்படும் மேட்டர்கள்.

1.Mother
2.Education
3.Immmovable property & vehicle
-------------------------------------------------------------
5. ஐந்தாம் வீடு.

அ) இறைநம்பிக்கை, இறையுணர்வு, பூர்வ புண்ணியம், வாங்கி வந்த வரம் முதலியவை.
ஆ) அறிவு, புத்திசாலித்தனம், புத்திக்கூர்மை, உணர்வுகள், உணர்ச்சிகள், உயர்நிலைக் கல்வி போன்றவை.
இ) குழந்தை. குழந்தை பாக்கியம், குழந்தையால் ஏற்படவுள்ள மேன்மைகள்.

1.Faith in God & Poorva Punya
2.Keen Intelligence, emotions & feelings
3.Children
------------------------------------------------------------
6. ஆறாம் வீடு

அ) நோய்கள், பிணிகள், தீராத வியாதிகள் முதலியன.
ஆ) எதிரிகள்.
இ) கடன்கள். துரதிர்ஷ்டங்கள்.

1.Diseases
2.Enimies
3.Debts & misfortunes
----------------------------------------------------------------
7. ஏழாம் வீடு
அ) திருமணம்
ஆ) மனைவி அல்லது கணவன்
இ) திருமணத்தால் ஏற்படும் சந்தோஷங்கள் அல்லது துக்கங்கள்

1.Marriage
2.Spouse
3.Marital happiness
-----------------------------------------------------------------
8. எட்டாம் வீடு.

அ) ஆயுள்.
ஆ) மரணம். மரணம் ஏற்படும் காலம், ஏற்படும் விதம் முதலியன.
இ) கஷ்டங்கள். சிக்கல்கள். ஏற்றத்தாழ்வுகள். மதிப்பின்மை, அதாவது மதிப்பு, மரியாதை இல்லாத நிலமைகள் போன்றவை

1.Longevity
2.Nature of death
3.Difficulties, disgrace  & degradation
----------------------------------------------------------------
9. ஒன்பதாம் வீடு

அ) தந்தை. பூர்வீகச் சொத்துக்கள்
ஆ) அறம், கொடை, தர்மச் செயல்கள் போன்ற நிகழ்வுகள். அவற்றைச் செய்யும் பாக்கியங்கள்.
இ) தலைமை. தலைமை ஏற்கும் வாய்ப்பு, புகழ், சமூக அந்தஸ்து போன்றவை.

1.Father & ancestral properties
2.Righteousness & charity
3.Leadership & fame
-------------------------------------------------------------------
10. பத்தாம் வீடு.

அ) தொழில், வேலை, வணிகம் போன்ற செய் தொழில்கள்.
ஆ) வாழ்க்கை, அதில் வாழ்கின்ற விதம் முதலியன.
இ) அடைய இருக்கும் பெருமைகள். விருதுகள் முதலியன.

1.Occupation or profession
2.Means of livelihood
3.Temporal Honours
-------------------------------------------------------------------
11) பதினொன்றாம் வீடு.

அ) லாபங்கள்.
ஆ) தேடிப் பிடிக்கும், தேடிக் கைவசமாக்கும் செல்வங்கள். பாக்கியங்கள் (Something acquired or gained)
இ) துன்பங்கள், துயரங்கள் இல்லாத நிலைமை. சுதந்திரமான வாழ்க்கை.

1.Gains
2.Acquisitions
3.Freedom from misery
------------------------------------------------------------------
12) பன்னிரெண்டாம் வீடு.

அ) இழப்புக்கள். விரையங்கள்
ஆ) செலவுகள். முக்கியமாக பணத்தை வைத்து ஏற்படும் செலவுகள். நேரத்தை வீணாக்கிச் செலவழிப்பதும் செலவுதான்.
இ) உணவு, உடை, உறக்கம் போன்றவை. அத்துடன் பெண் சுகம்.பெண்ணிற்கு ஆணின் பரிசம். உடல் உறவுகள் போன்றவை.

1.Losses
2.Expenditures
3.Ayana,Sayana,Boga Bagyankal (conjugal pleasures)
----------------------------------------------------------------------
இது முக்கியமான பாடம். இதை நன்றாக மனதில் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.4.25

Astrology: களத்திரகாரகன். திருமணத்தை செய்வதற்கு அதிகாரம் உள்ளவன்.

Astrology: களத்திரகாரகன். திருமணத்தை செய்வதற்கு அதிகாரம் உள்ளவன்.

The authority for Marriage


எல்லோருக்கும் ஒரு குழப்பம் உண்டு. களத்திரகாரகன் , அதாவது Authority for marriage யார்? ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான களத்திரகாரகனா? அதாவது ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்கு செவ்வாயையும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

அதெல்லாம் ஒன்றும் இல்லை!

Authority என்பவர் ஒருவர்தான் இருக்க முடியும். தந்தைக்கு அத்தாரிட்டி சூரியன். தாய்க்கு அத்தாரிட்டி சந்திரன் என்று இருப்பதுபோல களத்திரத்திற்கு, அதாவது திருமணத்திற்கு அத்தாரிட்டி சுக்கிரன் மட்டும்தான்!

வாழ்க்கையில் உள்ள எல்லா சுகங்களுக்கும், படுக்கை சுகம் உட்பட (அதாவது ஆணுக்கு பெண் சுகமும், பெண்ணிற்கு ஆண் பரிசமும்) எல்லா சுகங்களுக்கும் உரியவன் சுக்கிரன்தான். ஆகவே அவன்தான் திருமணம் செய்து வைக்கும் அதிகாரமும் கொணடவனாவான்.

பெண்களுக்கு மட்டும் ஒரு துணைக் காவடியும் உண்டு. மெயின் காவடியை சுக்கிரன் தூக்குவான். துணைக் காவடியை குரு பகவான் தூக்குவார். அதனால்தான் பெண்களுக்கு மஞ்சள் கயிற்றைத் தாலிக் கயிறாக அணிவிக்கிறோம். மஞ்சள் நிறமுடைய தங்கத்தில் திருமாங்கல்யத்தைச் செய்கிறோம். பெண்களைத் தினமும் மஞ்சள் பூசிக் குளி என்கிறோம்.தங்கம் வாங்க முடியாத ஏழைப் பெண்களுக்கு விரளி மஞ்சளை, மஞ்சக் கயிற்றில் கட்டி அணிவிக்கின்றோம். இவை எல்லாம் குருபகவானை மகிழ்விப்பதற்கும், அவரின் ஆசீகளைப் பெறுவதற்கும்தான்.

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை இருந்தால் மட்டும் செவ்வாயைக் கூப்பிட்டுப் பார்ப்போம். அதுபோல செவ்வாய் தோஷத்திற்கும் அவர் வந்து நிற்பார். அவரின் பங்களிப்பு அவ்வளவுதான்

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்
===============================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.4.25

Astrology: ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்

Astrology: ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் 

பருவம்வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்துவாழ்ந்த அனைவருமே சேர்ந்து போவதில்லை!
- கவியரசர் கண்ணதாசன்

பல சிக்கல்கள் நிறைந்தது வாழ்க்கை. சிக்கல் இல்லாத வாழ்க்கையே இருக்காது. இருந்தால் காட்டுங்கள். சந்தோசமடைவேன்!

மற்ற சிக்கல்கள் நாம் மட்டுமே சம்பந்தப்பட்டதாக இருக்கும். அதனால் மனத் துணிச்சலையும், ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வைத்து, சிக்கலுக்கான முடிவை அல்லது தீர்வை எப்படி வேண்டுமென்றாலும் நாம் எடுக்கலாம்

ஆனால், திருமண வாழ்வில் ஏற்படும் சிக்கல், இன்னொருவர் (கணவன் அல்லது மனைவி) சம்பந்தப்படுவதால்
அப்படி எடுக்க முடியாது.

அத்துடன் நாம் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும், விதி ஒரு பக்கம் வேலை செய்து கொண்டிருக்கும்.

நம் வாழ்க்கை, அல்லது நம் குழந்தைகளின் வாழ்க்கை அல்லது நம் உடன் பிறப்புக்கள் மற்றும் நண்பர்களின் வாழ்க்கையில் திருமணத்தை வைத்து ஏதாவது சிக்கல் உண்டாகுமா என்று பார்ப்பதற்கான பயிற்சியை இன்று உங்களுக்கு அளிக்கிறேன்.  பொறுமையாகப் படித்து, அத்தனை விதிகளையும் மனதில் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்
----------------------------------------------------------------------------
Chances of Multiple marriages: ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்

ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் எப்போது நடைபெறும்?

முதல் திருமணம் கெட்டுவிட்டால், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள நேரிடும்.

மனைவி அல்லது கணவன் இறந்துவிட்டால், அல்லது கருத்துவேற்றுமையால் தம்பதிகள் விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிட்டால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள நேரிடும்

உயர்கல்வி, அதீத வருமானம், பொருளாதார சுதந்திரம், பொறுமையின்மை, சகிப்புத்தன்மையின்மை போன்ற காரணங்களால், இப்போது அதிக அளவில் விவாகரத்துக்கள் ஏற்படுகின்றன. அதையும் மனதில் கொள்க!

In this lesson an attempt has been made to discuss a few planetary combinations indicating re marriage due to divorce, separation or death of wife

The rules are based on Brihat Parashar Hora Shastra:

1. ஏழாம் வீட்டு அதிபதி நீசமடைந்திருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

2. ஏழாம் வீட்டு அதிபதி ஒரு தீய கிரகத்தின் வீட்டில், ஒரு தீய கிரகத்துடன் அமர்ந்திருக்கும் நிலைமை! அத்துடன் ராசிச்சக்கரத்தில் ஏழாம் வீடு அல்லது நவாம்சச்சக்கரத்தில் ஏழாம் வீடு ஒரு தீய கிரகத்தின் வீடாக இருக்கும் நிலைமை.

3. செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருந்தால், அல்லது சனி 12ஆம் வீட்டில் இருந்தால், அத்துடன் லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

4. சுக்கிரன் இரட்டை ராசியில் இருந்தால் (if Venus is in a dual sign), அத்துடன் சுக்கிரன் அமர்ந்த வீட்டின் அதிபதி உச்சமாகி இருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் (சர்வார்த்த சிந்தாமணி)

5. ஏழாம் அதிபதி, உச்சமாகி இருப்பதுடன், வக்கிரகதியும் பெற்றிருக்கும் நிலைமை.

6. லக்கினாதிபதி எட்டாம் வீட்டில், ஏழாம் வீட்டில் ஒரு தீயகிரகம், இரண்டாம் அதிபதி ஒரு தீயகிரகத்துடன் சேர்க்கை - ஆகிய அமைப்பு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணத்தைக் கொடுக்கும்.

7. ஏழாம் அதிபதி 3, 6, 8, &12 போன்ற மறைவிடங்களில் இருந்தாலும், அல்லது நீசமாகி ஒரு சுபக்கிரகத்துடன் சேர்ந்திருந்தாலும், அத்துடன் ஏழாம் வீட்டில் ஒரு தீயகிரகம் இருந்தாலும், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

8. சுக்கிரன் கன்னிராசியில் நீசமடைந்திருப்பதோடு, ஒரு தீயகிரகத்தின் கூட்டணியோடு இருந்தாலும் அல்லது நவாம்சத்தில் நீசமடைந்திருந்தாலும் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

9. ஏழாம் வீட்டிலும், இரண்டாம் வீட்டிலும் தீய கிரகங்கள் அமர்ந்திருந்து, அதன் அதிபதிகள் கெட்டிருந்தால், ஜாதகனின் முதல் மனைவி இறப்பதுடன், ஜாதகனுக்கு இரண்டாம் திருமணமும் நடைபெறும்.

10. ஏழாம் வீட்டிலும், எட்டாம் வீட்டிலும் தீயகிரகங்கள் இருப்பதுடன், செவ்வாய் 12ஆம் வீட்டில் இருப்பதுடன், ஏழாம் அதிபதியின் பார்வை ஏழில் விழுகவில்லை என்றால், ஜாதகன் தன் முதல் மனைவியை இழந்துவிட்டு, மறுமணம் செய்துகொள்ள நேரிடும்.

11. லக்கினத்தில், 2 மற்றும் 7ஆம் வீடு, ஆகிய மூன்று இடங்களிலும் தீய கிரகங்கள் இருந்து, ஏழாம் அதிபதி அஸ்தமனம் பெற்றிருந்தாலும் அல்லது நீசமாகி இருந்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

12 ஏழாம் அதிபனும், பதினொன்றாம் அதிபனும் ஒன்றாக இருந்தாலும் அல்லது இருவரும் திரிகோணம்பெற்று, ஒருவரை ஒருவர் பார்த்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

13. ஒன்பதாம் வீட்டதிபதி ஏழிலும், ஏழாம் அதிபதி நாலிலும் இருந்தால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம். அதுபோல 7 & 11 ஆம் அதிபதிகள் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

14. இரண்டு மற்றும் ஏழாம் வீடுகளில் தீயகிரகங்கள் இருப்பதுடன், ஏழாம் அதிபதி ஒரு தீய கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

15. இரண்டு மற்றும் பன்னிரெண்டாம் இட அதிபதிகள் மூன்றாம் வீட்டில் இருந்து, குரு அல்லது ஒன்பதாம் இட அதிபதியின் பார்வை பெற்றால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

இது எல்லாம் பொதுவிதிகள்.

திருமண விஷயமாக அல்லது முதல் திருமணத்தில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் ஒரு ஜாதகத்தை அலசும்போது, இந்த விதிகளை மனதிற்கொண்டு அலசினால் ஒரு தெளிவும் கிடைக்கும்!

அன்புடன்
வாத்தியார்!
---------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.4.25

Astrology: பல கிரகங்கள் உச்சம் பெற்றால் தரும் பலன்கள்!

Astrology: பல கிரகங்கள் உச்சம் பெற்றால் தரும் பலன்கள்!

சிலருக்கு ஜாதகத்தில் ஒரு கிரகம் உச்சம் பெற்றிருக்கும். அதுவும் லக்கினாதிபதி உச்சம் பெற்றிருந்தால் நல்லது. அதுவும் உச்சம் பெற்ற லக்கினாதிபதி திரிகோண இடங்களில்
இருந்தால் மிகவும் நல்லது. சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஜாதகத்தில் உச்சமாக இருக்கும். உச்சம் பெற்ற கிரகங்கள் தங்களுடைய மகா திசைகளில் அல்லது
புத்திகளில் உரிய பலன்களை வாரி வழங்கும். அப்போது கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டியதுதான்!

இப்போது கிரகங்கள் உச்சம் பெற்றதற்கான பலன்களைப் பார்ப்போம்!

இரண்டு கிரகங்கள் உச்சம் பெற்றால் புகழ் பெறுவார்

மூன்று கிரகங்கள் உச்சம் பெற்றால் நகரத்தின் தலைவராகவும், செல்வந்தராகவும் இருப்பார். பதவியில் இருந்தால், உயர் பதவி பெறுவார்.

நான்கு கிரகம் உச்சம் பெற்றால், செல்வந்தராகவும், அரசாங்க கெளரவம் பெறுபவராகவும் இருப்பார்.

ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் உச்சம் பெற்றால், அமைச்சராக, தர்மவானாக , புகழ் உடையவராக இருப்பார். பல வீடுகள், வாகனங்கள் உடையவராகவும் இருப்பார்.

ஏழு கிரகங்கள் உச்சம் பெற்றால், உலகாளூம் திறமை உடையவர்!

உங்களுக்கு ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் உச்சமாக உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.4.25

Astrology: திருமண வாழ்க்கை! முக்கிய விதிகள்.

Astrology: திருமண வாழ்க்கை! முக்கிய விதிகள். 

திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் முக்கியமான நிகழ்வு. அதி முக்கியமான நிகழ்வு என்றுகூடச் சொல்லலாம்.

கிரேக்க மேதை சாக்ரடீஸ் சொன்னாராம் “எப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள். ஒன்று உங்களுக்கு நல்ல மனைவி கிடைப்பாள். அல்லது நாட்டிற்கு ஒரு நல்ல தத்துவஞானி கிடைப்பான்.”

தத்துவஞானியாக யாரும் விரும்புவதில்லை. நல்ல இல்வாழ்க்கை அமைவதையே எல்லோரும் விரும்புவார்கள். நல்ல இல்வாழ்க்கை அமைவதற்கான ஜாதக அமைப்புக்கள் என்ன?  சில அமைப்புக்கள் உள்ளன. அதைவைத்து திருமணம் ஆக வேண்டியவர்கள் தங்களுக்கு நல்ல இல்வாழ்க்கை அமையுமா என்று பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். நடுத்தரவயதினர், தங்கள் உடன் பிறப்புக்களுக்கு அமையுமா என்று தெரிந்துகொள்ளலாம். வயதானவர்கள், தங்கள் மகன் அல்லது மகளுக்கு அமையவிருக்கும் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளலாம்.ஆகவே பொதுவாகவே அது அனைவரும் தெரிந்து கொள்ள விரும்பும் பாடமாகும். அதை இன்று பதிவு செய்துள்ளேன். அனைவரும் படித்துப்
பயன் பெறுக!
--------------------------------------------
1
ஏழாம் வீட்டுக்காரன் ஆட்சி பலத்துடன் இருந்தாலும் அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

2,
ஏழாம் வீட்டுக்காரன், 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில் இருப்பதுடன், அது அவருடைய சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ  இல்லாத நிலைமையில் ஜாதகனின் மனைவி நோயாளியாக இருப்பாள். அவனைப் படுத்தி எடுப்பாள்.

3.
சுக்கிரன் எந்த வீட்டில் இருந்தாலும் சரி, உடன் பாபக் கிரகங்களின் கூட்டு இல்லாமல் இருக்க வேண்டும். தவறிக் கூட்டாக இருந்தால், ஜாதகனின் மனைவிக்கு அந்தக் கூட்டு மரணத்தை ஏற்படுத்தும்.

4.
ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை (association or aspect) பெற்று வலுவாக இருந்தால், ஜாதகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

5.
அதற்கு மாறாக ஏழாம் அதிபதி தீய கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்றிருந்தால், அல்லது பகை வீட்டில் இருந்தால் அல்லது நீசமடைந்திருந்தால், அல்லது அஸ்தமணம் பெற்று வலுவிழந்திருந்தால், ஜாதகனின் மனைவி நோயுற்றவளாக இருப்பாள். அல்லது பலவீனமாக இருப்பாள். அத்துடன் இந்த அமைப்புள்ள ஜாதகன் பல பெண்களுடன் தகாத உறவை ஏற்படுத்திக்கொள்வான்.

6.
ஏழாம் வீட்டுக்காரன் அமர்ந்திருக்கும் வீட்டின் இருபக்க வீடுகளிலும் சுபக்கிரகங்கள் இருந்தால், ஜாதகனுக்கு இனிய மணவாழ்வு அமையும்.

7.
ஏழாம் வீட்டுக்காரன் நவாம்சத்தில் சுபக்கிரகத்தின் வீட்டில் அமர்ந்திருந்தால், நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

8.
ஏழாம் வீட்டுக்காரன், 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில், தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையுடன் இருக்கும் நிலைமை, நல்ல மணவாழ்க்கையைத் தராது. ஜாதகனின் திருமண வாழ்க்கை அவதி நிறைந்ததாக இருக்கும்!

9
ஏழாம் வீட்டுக்காரன் எந்த விதத்திலாவது பாதிக்கப்பெற்றிருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இராது. சண்டை சச்சரவுகள் நிறைந்ததாக இருக்கும்.

10.
ஏழாம் வீட்டில் ஒரு தீய கிரகம் அமர்ந்து, அது ஏழாம் அதிபதிக்கோ அல்லது லக்கினாதிபதிக்கோ பகைவன் என்னும் நிலைமையில், திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இராது.

11.
செவ்வாயும், சுக்கிரனும் எந்தவிதத்திலாவது ஜாதகத்தில் பாதிக்கப்பெற்றிருந்தால், திருமண வழ்க்கை அமைதி நிறைந்ததாக இருக்காது,

12.
ஏழில் சனீஷ்வரன் இருந்து, அது அவருடைய சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இல்லாமலிருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது!

எல்லாம் பொதுவிதிகள். ஜாதகத்தில் ஏழாம் வீட்டின் அமைப்பை வைத்தும், குடும்பஸ்தானத்தின் அமைப்பை வைத்தும்,  அஷ்டகவர்க்கப் பரல்கள், ஏழாம் அதிபதியின் சுயவர்க்கப்பரல்களை வைத்தும் இந்த விதிகளின் பலன்கள் மாறுபடும். அதாவது கூடலாம்  அல்லது குறையலாம் அல்லது இல்லாது போகலாம். அதையும் மனதில் வையுங்கள்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.4.25

Astrology: யோககாரகன் முக்கிய விதிகள் Yogakarakan Lord for Luck

Astrology: யோககாரகன் முக்கிய விதிகள் Yogakarakan Lord for Luck

யாருக்கு யார் யோககாரகன்?

யோகம் என்றால் அதிர்ஷ்டம் (Good Luck) என்று பொருள்படும். யோககாரகன் என்பதற்கு அதிர்ஷ்டத்தைக் கொடுப்பவன் என்று பொருள்
கொள்ளுங்கள். ஜாதகத்தில் கிரகங்கள் உச்சமாக இருப்பதைவிட, யோகத்தைக் கொடுக்ககூடிய கிரகம் உச்சமாக இருந்தால் பல நன்மைகள்
ஏற்படும். அதுபோல யோககாரகன், ஆட்சி, கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும் பல்வித நன்மைகள் உண்டாகும்

1. ரிஷப லக்கினத்திற்கு சனி யோககாரகன் (9 & 10ஆம் இடங்களுக்கு உரியவன்)
2. துலா லக்கினத்திற்கு சனி யோககாரகன் (4 & 5ஆம் இடங்களுக்கு உரியவன்)
3. கடக லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன் (5 & 10ஆம் இடங்களுக்கு உரியவன்)
4. சிம்ம லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன் (4 & 9ஆம் இடங்களுக்கு உரியவன்)
5. மகர லக்கினத்திற்கு சுக்கிரன் யோககாரகன் (5 & 10ஆம் இடங்களுக்கு உரியவன்)
6. கும்ப லக்கினத்திற்கு சுக்கிரன் யோககாரகன் (4 & 9ஆம் இடங்களுக்கு உரியவன்)
7. மேஷ லக்கினக்காரகளுக்கு சூரியனும், சந்திரனும் சேர்ந்திருந்தால் பலத்த யோகத்தைக் கொடுக்கக்கூடியவர்கள். அவர்கள் 4ஆம் வீடு & 5  
  ஆம் வீடுகளுக்கு அதிபதிகள். அதை நினைவில் வையுங்கள்.
8. விருச்சிக லக்கினக்காரர்களுக்கு சூரியனும், சந்திரனும் சேர்ந்திருந்தால் பலத்த யோகத்தைக் கொடுக்கக்கூடியவர்கள். அவர்கள் 9ஆம் வீடு &
   10 ஆம் வீடுகளுக்கு அதிபதிகள். அதை நினைவில் வையுங்கள்.
9. தனுசு & விருச்சிக லக்கினத்திற்கு யோககாரகன் என்று தனியாக யாரும் கிடையாது. லக்கினாதிபதி குருவே யோககாரகன் வேலையையும்
செய்வார். அவர் முதல் நிலை சுபக்கிரகம் அதை மனதில் வையுங்கள். அவர் ஜாதகத்தில் அம்சமாக இருந்தால் போதும். ஜாதகன்
யோகங்களுடன் இருப்பான்.
10. மிதுன & கன்னி லக்கினங்களுக்கு தனியாக யோககாரகன் கிடையாது.லக்கினாதிபதி புதனே யோககாரகன் வேலையையும் செய்வார். அவர்
வித்யாகாரகன். வித்தைகளுக்கு அதிபதி. அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் போதும். ஜாதகன் யோகங்களுடன் இருப்பான்.

பாடம் எப்படியிருந்தது என்பதை ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.4.25

Astrology: சந்திரனின் முக்கியத்துவம்!

Astrology: சந்திரனின் முக்கியத்துவம்!

மனிதனுக்கு உடல் நிலை எத்தனை முக்கியமோ,  மன நிலையும் அத்தனை முக்கியமானது!

மனம் உற்சாகமாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது களத்தில் இறங்கினால் எதை வேண்டுமென்றாலும் சாதிக்கலாம்.

சிலர் எப்போதும் உற்சாகமாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சிலர் எப்போதும் உற்சாகமில்லாது டல்லடித்து உட்கார்ந்திருப்பார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் ஜாதகக் கோளாறுகள்.

இன்றைய பாடத்தில் அதைப் பார்ப்போம்.

12 ராசிகளில் சந்திரன் அமர்ந்திருக்கும் ராசிக்கான பலனை முதலில் பார்ப்போம். எல்லாம் பொதுப்பலன்கள்

1. மேஷத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன் மன உறுதி கொண்டவன். சிந்தனை வயப்படுபவன். உணர்ச்சி வேகம் உள்ளவன். உணர்ச்சிகள் தூண்டும்போது அதற்குத் தகுந்தாற்போல செயல் படக்கூடியவன். கள்ளம் கபடு இல்லாதவன். வெளிப்படையாகப் பேசுபவன்.

2. ரிஷபத்தில் சந்திரன் இருந்தால், நிலையான மனதை உடையவன். எந்த சூநிலையிலும் தன்னை, தனக்கு விருப்பமில்லாவிட்டால், மாற்றிக்கொள்ளாதவன். அதனால் வீண் பிடிவாதக்காரன் போன்ற தோற்றத்தை அளிக்கக்கூடியவன்.

3. மிதுனத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகன் அதிபுத்திசாலியாக இருப்பான். சிலர் வஞ்சனை உள்ளவர்களாக, இரட்டை வேடம் போடுபவர்களாக இருப்பார்கள். அதையும் அடுத்தவர்கள் கண்டுபிடிக்க முடியாதபடி தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பார்கள். எப்போதும் பாதுகாப்பாக இருப்பார்கள்.

4. கடகத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன் மிகவும் உணர்ச்சி வசப்படுபவனாக இருப்பான். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மேல் அக்கறை உள்ளவனாக இருப்பான்.

5. சிம்மத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன் தன்முனைப்பு உள்ளவனாக, ஈகோ உள்ளவனாக இருப்பான். சிலரிடம் தான் என்னும் மனப்பாங்கு மிகுந்து இருக்கும். அகம்பாவம் இருக்கும். தற்பெருமைக்காரனாகவும் இருப்பான். அதே நேரத்தில் மகிழ்ச்சி உடையனாகவும்,
பலருடைய கண்களில் படுபவனாகவும் இருப்பான்.

6. கன்னியில் சந்திரன் இருந்தால், ஜாதகன் யதார்த்தமாக இருப்பான். உலக இயல்புகளோடு ஒத்துப்போகும் தன்மையுடையவனாக இருப்பான். குறிப்பிட்டுச்சொன்னால், He will be practical. எல்லா விஷயங்களிலும் ஒரு கண்ணோட்டத்துடன் இருப்பான்.
அத்துடன் extremely sensitive ஆக இருப்பான்.

7. துலாம் ராசியில் சந்திரன் இருந்தால், ஜாதகன் அலைபாயும் மனதை உடையவன்.  swaying from one side to the other.
swinging indecisively from one course of action or opinion to another. சட்டென்று முடிவு எடுக்க மாட்டார்கள். சிலர் சலன புத்திக்காரர்களாக இருப்பார்கள். ஆனாலும் அன்பு மற்றும் கருணை மிக்கவர்களாக இருப்பார்கள்.

8. விருச்சிகத்தில் சந்திரன் உள்ளவர்கள், மற்றவர்களை நேசிக்கும் மனதை உடையவர்கள். பக்தி, விசுவாசம் மிக்கவர்கள். மென்மையானவர்கள். அவர்களுடைய மனதைத் தொடும்படி பேசினால், மயங்கி விடக்கூடியவர்கள்.

9. தனுசில் ச்ந்திரன் இருக்கப்பிறந்தவர்கள், இறைவனின் ஆசி உள்ளவர்கள் (blessed people). பெருந்தன்மை மிக்கவர்கள். அதாவது பெரிய மனது உடையவர்கள். மற்றவர்களின் உணர்வை மதிக்கக்கூடியவர்கள்.

10. மகரத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன், யாரிடமும் நட்புக் கொள்ளும் மனதை உடையவன். எதையும் சாதிகக்ககூடிய மன வலுவை உடையவன். அட்சரசுத்தமாகச் செய்து முடிக்கக்கூடியவன்.செய்வதைத் திருந்தச் செய்யக்கூடியவன். முழுமையாகச் செய்யக்கூடியவன்.

11. கும்பத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகன் reserved  மற்றும் serious nature உடையவனாக இருப்பான். ஆனாலும் மனிதநேயம் மிக்கவனாக இருப்பான்.

12. மீனத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன் நல்ல உள்ளம் கொண்டவனாக இருப்பான். அடுத்தவர்களை நேசிப்பவனாக இருப்பான்.
அத்துடன் மாற்றங்களை விரும்புபவனாக இருப்பான்.

இவைகள் எல்லாமுமே பொது விதிகள். சந்திரனுடன் கூட்டாக உள்ள மற்ற கிரகங்களை வைத்து இவைகள் மாறுபடும். சுபக்கிரகங்களின் கூட்டு என்றால் யதார்த்தம் மற்றும் நற்பலன்கள் அதிகமாகும்.  தீய கிரகங்களின் கூட்டு என்றால் இந்தக் குணங்கள் மைனசாகி விடும். அதாவது குறைந்துவிடும்

சந்திரன், சுக்கிரனோடு சேர்ந்திருந்தால், எந்த இடத்தில் இருந்தாலும், ஜாதகன் நட்பு பாராட்டக்கூடியவனாக இருப்பான். அத்துடன் இறைபக்தியுடையவனாகவும், ரசனை உணர்வு மிக்கவனாகவும் இருப்பான். தனது மகிழ்ச்சியான தருணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வான். உலகத்தாரோடு ஒத்து வாழ்பவனாக இருப்பான்.

சந்திரன் குருவோடு சேர்ந்திருந்தால், அது மேன்மையான அமைப்பாகும். ஜாதகன் நல்ல உள்ளம் கொண்டவனாகவும்,  பெருந்தன்மை மிக்கவனாகவும், மற்றவர்களின் தவறுகளை எளிதில் மன்னிக்கக்கூடியவனாகவும் இருப்பான். இந்த இரு கிரகங்களும் எந்த ராசியில் சேர்ந்திருந்தாலும் இந்தப் பலன்கள் மாறாது. ஆனால் லக்கினத்திற்கு 6ஆம், 8ஆம், 12ஆம் இடங்களில் இந்த அமைப்பு இருந்தால் பலன்கள் மாறுபடும்.

சந்திரன் லக்கினத்திற்கு 6ஆம், 8ஆம், 12ஆம் இடங்களில் இருந்தால் ஏற்படும் பாதகங்கள்.
6ல் (House of diseases)
8ல் (House of sins)
12ல் (House of losses & weakness)
ஆகிய இடங்களில் இருக்கும் சந்திரன் பலவீனமாகி ஜாதகனின் மனநிலையிலும், எண்ணங்களிலும் பாதகமான மாற்றங்களை உண்டாக்கும்.
அதே நேரத்தில் இந்த இடத்தில் இருக்கும் சந்திரன் சுபக்கிரகங்களான குரு அல்லது சுக்கிரனின் பார்வையைப் பெற்றிருந்தால், அந்தக் குறைகள் இருக்காது. அந்த இடங்களில் இருக்கும் சந்திரன் பலமாகி ஜாதகனுக்கு நன்மைகளையே செய்வார். அதை மனதில் கொள்க!

கீழ்க்கண்ட அமைப்பு ஜாதகனின் மனநிலையில் பாதகங்களை உண்டாக்கும்:

1. குரு லக்கினத்திலும் செவ்வாய் ஏழாம் வீட்டிலும் இருக்கும் அமைப்பு: உதாரணத்திற்கு மேஷ லக்கினம். ஜாதகனுக்கு கொடூரத்தன்மை இருக்கும். தன்னைச் சுற்றி இருப்பவர்களை எல்லாம் ஆட்டி வைப்பான்.

2. சனி லக்கினத்திலும், செவ்வாய் சனிக்கு 6, 8 அல்லது 12ல் இருக்கும் நிலைமையும் மோசமான மனநிலையைக் கொடுக்கும்.

3. சனி லக்கினத்திலும், சூரியன் 12லும், செவ்வாய் கோணங்களிலும் இருக்கும் அமைப்பும் மோசமான மனநிலையைக் கொடுக்கும்.

4. மூன்றாம் அதிபதி ராகு அல்லது கேதுவுடன் இருக்கும் நிலைமை ஜாதகனுக்கு பெரும் மன அழுத்தத்தைக் கொடுக்கும்

5. ஆறாம் வீடு ஒரு தீய கிரகத்தின் பார்வையுடன் இருந்தாலும் மன அழுத்தங்கள் உண்டாகும். மன அழுத்தம் (Depression) என்றால் என்ன வென்று தெரியுமல்லவா?

6. தேய்பிறைச சந்திரனும், சனியும் கூட்டாக 12ல் இருந்தாலும் மன அழுத்தங்கள் உண்டாகும், ஜாதகனின் நடத்தையும் மாறுபடும்.

எல்லாம் பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதத்திற்கு, ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும். ஆகவே கவலை கொள்ளாமல், ஜாதகத்தை அலசுங்கள். அப்படியே ஒரு அவுன்ஸ் 337 டானிக்கை ஒரு குவளை தண்ணீரில் கலந்து அவ்வப்போது குடியுங்கள்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++=

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.4.25

Astrology: ஒரு ஜாதகத்தில் முக்கியமான அம்சங்கள்.

Astrology: ஒரு ஜாதகத்தில் முக்கியமான அம்சங்கள்.

முக்கிய விதிகள்! 

பாடங்களில் அடியேன் அடிக்கடி உபயோகிக்கும் சொற்கள்:
வலிமையாக இருக்க வேண்டும்
கெட்டுப் போயிருக்ககூடாது.
பாடங்களைப் படித்துப் படித்து, உங்களுக்கும் அச்சொற்களின் அர்த்தம் முழுமையாகப் பிடிபட்டிருக்கும்.

ஒரு ஜாதகத்தில் முக்கியமான அம்சங்கள்.

1.   லக்கினமும், லக்கினாதிபதியும் நன்றாக இருக்க வேண்டும்.
2.  சுபக்கிரகங்களான குரு, சந்திரன், சுக்கிரன் ஆகியவை கெட்டுப்போயிருக்கக்கூடாது.
3.  லக்கினம், கேந்திர வீடுகள், திரிகோண வீட்டு அதிபதிகள் 6, 8 அல்லது 12ல் மறைந்துவிடக்கூடாது.
4.  ஆறாம் இடத்து அதிபதியும், எட்டாம் இடத்து அதிபதியும், 12ஆம் இடத்து அதிபதியும் முக்கியமான இடங்களில் அமர்ந்து ஆதிக்கம்      
செய்யக்கூடாது.
5.  வீடுகள் (Houses) பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கிக்கொண்டிருக்கக்கூடாது.
6.  ஆயுள் ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும்.

இவை அனைத்துமே நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே கிடைத்தவரை லாபம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

கெட்டுப்போயிருக்கும் அமைப்புக்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். அதைப் பாருங்கள்.

அனைவருடைய ஜாதகமும் சமம்தான்.

அம்பானியின் ஜாதகமும், உங்களுடைய ஜாதகமும் ஒன்றுதான்.
பிரணாப் முகர்ஜியின் ஜாதகமும் உங்களுடைய ஜாதகமும் ஒன்றுதான்.
ஷாருக்கானின் ஜாதகமும் உங்களுடைய ஜாதகமும் ஒன்றுதான்.
அவர்களுக்கும் அஷ்டகவர்க்கப்பரல் 337 தான்
உங்களுக்கும் அஷ்டகவர்க்கப்பரல் 337 தான்

அதை என்றும் நினைவில் வையுங்கள்!
----------------------------------------
அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!