துலா லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:
இந்த லக்கினத்திற்கு சனீஷ்வரன் யோககாரகன். ஒரு கேந்திரத்திற்கும் (4ஆம் இடம்) ஒரு திரிகோணத்திற்கும் (5ஆம் இடம்) உரியவன். பலவிதமான நன்மைகளைச் செய்யக்கூடியவன்.
அதேபோல குருபகவானும் நன்மைகளைச் செய்யக்கூடியவர். இந்த லக்கினத்திற்கு அவர் 3 மற்றும் 6ஆம் இடங்களுக்கு உரியவர் என்றாலும் நன்மைகளைச் செய்வார்.
இந்த லக்கினத்திற்கு 2 மற்றும் 7ஆம் இடங்களுக்கு உரிய செவ்வாய் மாரகத்தைச் செய்ய மாட்டார்
குருவும் சுக்கிரனும் கூட்டாக இருப்பதோடு, சனி மற்றும் செவ்வாயின் பார்வையைப் பெற்றிருந்தால், அவர்களின் (சனி மற்றும் செவ்வாயின்) தசாபுத்திகளில் ஜாதகனுக்குத் தோல் வியாதிகள் ஏற்படலாம். மற்றும் உடற்காயங்கள் ஏற்படலாம்.
சூரியனும், புதனும் கன்னி ராசியில் இருப்பதோடு, அவர்களின் மேல் சனியின் பார்வையும் இருந்தால், அது ஜாதகனின் தந்தைக்கு மேன்மையை அளிக்கும். பல நன்மைகள் ஜாதகன் மூலம் அவருக்குக் கிடைக்கும்.
இந்த லக்கினத்திற்கு செவ்வாய், சூரியன், சனி, மற்றும் புதனுடன் கூட்டாக இருந்தால், அந்த செவ்வாய் அதீதமான நன்மைகளைச் செய்வார்
சூரியன், புதன் மற்றும் சனி ஆகிய மூவரும் சந்திரன் அல்லது செவ்வாயுடன் சேர்ந்திருப்பது இந்த லக்கினத்திற்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்
இந்தலக்கினத்திற்கு, லக்கினத்தில் சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய மூவரும் கூட்டாக இருக்கும் அமைப்பு ஜாதகனுக்கு செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.
இந்த லக்கினத்திற்கு புதன் சுக்கிரன், சனி ஆகிய மூவரும் கூட்டாக லக்கினத்தில் இருப்பதோடு மேஷத்தில் செவ்வாய் இருக்கும் அமைப்பு, புதன் திசையில் நல்ல பலன் கிடைக்கும்.
இந்த லக்கினத்திற்கு சிம்ம ராசியில் செவ்வாயும் புதனும் இருக்க, ரிஷபத்தில் குரு இருக்க, சனி மிதுனத்தில் இருக்க அமையும் அமைப்பு ஜாதகனுக்கு ராஜ யோகத்தைக் கொடுக்கும்
லக்கினத்தில் சந்திரன் இருப்பதோடு, குரு பகவான் கன்னி அல்லது மிதுனத்தில் இருக்கும் அமைப்பில், சனி திசை ஜாதகனுக்கு செல்வத்தைக் கொடுக்கும். பல நன்மைகளைச் செய்யும்
லக்கினத்தில் சுக்கிரன் இருந்தால், அவன் மாரக அதிபதியாகவும் இருப்பான்
லக்கினத்தில் சனி இருப்பதோடு, கடகத்தில் சந்திரன் இருக்கும் அமைப்பு ராஜ யோகத்தைக் கொடுக்கும்
இந்த லக்கினத்திற்கு, மகரத்தில் சனி, புதன், குரு, செவ்வாய் ஆகிய நால்வரும் இருப்பதோடு, கடகத்தில் ராகுவும் இருந்தால், ஜாதகன் ராகு திசையில் பல புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவான். பல புனித நதிகளில் நீராடி வருவான்.
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com