மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.12.24

New Year Greetings


Dear Readers
My best wishes for all of you for a Prosperous and Happy New Year
With Kind Regards

SP VR Subbiah



வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

Astrology: யோகங்கள் ஒரு விளக்கம்!

யோகங்கள் ஒரு விளக்கம்!

யோகா எனும் சொல் யுஜ் என்னும் வடமொழிச் சொல்லின் விரிவாக்கம். யுஜ் என்பதற்கு கூட்டு (unite) - கூட்டாக என்னும் பொருள் வரும்.ராஜா என்பதற்கு அரசன் என்று பொருள். ராஜயோகம் என்றால் அரசனுக்கு நிகரான யோகம் என்று பொருள்

ராஜயோகம் என்பதற்கு, ஜாதகனுக்கு அந்தஸ்தைத் தரக்கூடிய கிரகங்களின் கூட்டணி என்று எடுத்துக் கொள்ளலாம்.

அதற்கு எதிர் மாறாக அவ யோகம், அரிஷ்ட யோகம், தரித்திர யோகம் என்று மூன்று விதமான - ஜாதகனுக்குத் தீமையைச் செய்யக்கூடிய யோகங்களும் உண்டு!

அவ என்பது கெட்டது (Ava means bad) அரிஷ்டம் என்பது நோயைக் குறிப்பது (Arishta means one causing diseases) தரித்திரம் என்பது வறுமையைக் குறிப்பது (Daridra means poverty)

ராஜயோகங்களிலும் மூன்று பிரிவுகள் உள்ளன
1.  தன ராஜயோகம் (yogas for wealth)
2. கீர்த்தி ராஜயோகம் (yogas for name and fame)
3. சன்யாச ராஜயோகம் (reigning as a religious head)

சன்யாசத்தில் ராஜயோகமா...ஹி.ஹி என்று சிரிக்க வேண்டாம். அரசர்கள் வந்து வணங்கி விட்டுப் போகும் அளவிற்கு சித்தியை பெற்ற சன்யாசிகள் உண்டு. இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ரமண மஹரிஷியைச் சொல்லலாம். அவரை, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் பலமுறை தமிழகத்திற்கு வந்து வணங்கிவிட்டுப்போயிருக்கிறார். அதை நினைவில் வையுங்கள்
------------------------------------------------------
1. தன ராஜயோகம் (yogas for wealth) 2,6,10, மற்றும் 11ம் வீட்டதிபதிகளின் சேர்க்கை அல்லது பரிவர்த்தனையால் இந்த யோகம் ஏற்படும்

2. கீர்த்தி ராஜயோகம் (yogas for name and fame) இது திரிகோண அதிபதிகளூம், கேந்திர அதிபதிகளும் சேர்வதால் உண்டாகும்

3. சன்யாச ராஜயோகம் (reigning as a religious head) 9, 12, 10 and 5ஆம் அதிபதிகள் சேர்க்கை அல்லது பார்வைகளால் இந்த யோகத்தைக் கொடுப்பார்கள்

பணம், புகழ், மதிப்பு, மரியாதை மற்றும் செல்வாக்கு போன்றவைகள் தடையில்லாமல் ஜாதகனுக்குக் கிடைக்க இந்த யோகங்கள் அவசியம்.

இந்த யோகம், ராசியிலும், நவாம்சத்திலும் இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த யோகங்கள் உரிய பலனைத் தராது. அதை நினைவில் வையுங்கள்.

Navamsa is 1/9 th division of a Rasi Chart. In short it is the magnified version of the Rasi Chart!

அவை எல்லாவற்றையும் விட முக்கியம். ஜாதகத்தில் லக்கின அதிபதி வலுவாக இருக்க வேண்டும். வலு என்பது சூப்பர் சுப்பராயன் போன்ற உடல் வலு அல்ல!

லக்கின அதிபதி லக்கினத்தில் இருக்க வேண்டும். அல்லது தனது பார்வையால் லக்கினத்தைத் தன் கையில் வைத்திருக்க வேண்டும்.

குரு அல்லது புதன் லக்கினத்தில் இருக்க வேண்டும். அல்லது லக்கினம் அவர்களின் பார்வையைப் பெற்றிருக்க வேண்டும்.

Lagna is deemed to be strong only when it is aspected or occupied by its own lord, Jupiter or Mercury and not by other planets
--------------------------------------------------------------
பாடங்கள் தகவல் நிறைந்ததாகவும், படிப்பதற்கு சுவாரசியம் மிக்கதாகவும் இருக்கும். அதற்கு நான் உத்திரவாதம் அளிக்கிறேன்!

தொடர்ந்து படியுங்கள். மேன்மையுறுங்கள்! வாழ்த்துக்கள்

அன்புடன்
வாத்தியார்
======================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.12.24

Astrology: எங்கே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

Astrology: எங்கே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

ராகுவும், கேதுவும் சொந்த வீடில்லாத கிரகங்கள். சாயா கிரகங்கள்.அவைகளுக்கு சில வினோதமான குணம் உண்டு.

ஜாதகனின் வாழ்க்கையில் பெரும்பாலும் கேடு (தீங்கு) விளைவிக்கக்கூடிய கிரகங்கள் அவைகள். சாபக் கேடான கிரகங்கள். இயற்கையான தீயகிரகங்கள் (Natural malefic planets) ஜாதகத்தில் இரண்டு விதமான தீய யோகங்களை  (Harmful yogas) கொடுக்கக்கூடியவைகள் அவைகள்.

1, காலசர்ப்ப யோகம்.
2. சண்டாள யோகம்.

சண்டாளன் என்பது சமூகத்தில் மதிப்பில்லாத மனிதனைக் குறிக்கும் சொல்லாகும்.

ராகு அல்லது கேதுவுடன் வேறு ஒரு கிரகம் சேரும்போது, அந்தக் கிரகம் இருக்கும் வீட்டின் பலாபலன்கள் கெட்டுப்போகும். உடன் சேரும் கிரகம்

தன்னுடைய உண்மையான தன்மையை இழந்து விடும். அதுபோல ராகுவும், கேதுவும் தாங்கள் குடியிருக்கும் வீட்டின் தன்மையையும்

கெடுத்துவிடக்கூடிய வல்லமை பெற்றவை.

ஆகவே அவர்களின் இருப்பு (presence)  வரவேற்கக்கூடியதல்ல. அது எந்த வீடாக இருந்தாலும் சரி! அதுதான் பலன்.

மேலும் அவைகள் தங்கள் சேர்க்கையாலும், பார்வையாலும் அழிவை ஏற்படுத்தக்கூடியவை. அதுபோல தாங்கள் குடியிருக்கும் வீட்டையும், தாக்கி அழிக்கக்கூடியவை.

சமயங்களில் அவைகள் சேரும் கிரகங்களின் இயற்கைத் தன்மையைப் பொறுத்து அது நன்மையாகவும் அல்லது தீமையாகவும் முடியலாம்.

மாறுபடலாம். வேறு படலாம். எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

In short, these 2 planets (nodes) exhibit their own qualities modified  for good or bad depending upon the planets which they associate.

இந்த இரண்டு கிரகங்களும், ஜாதகத்தில் 6ம் வீடு, 8ம் வீடு அல்லது 12ம் வீடு போன்ற தீய இடங்களில் (மறைவு ஸ்தானங்களில்) இருக்கும் என்றால் தீய பலன்கள் அதிகரித்தே காணப்படும்.

அன்புடன்,
வாத்தியார்.

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.12.24

Astrology: நீசம் பெற்ற கிரகங்களால் என்ன நேரும்?


நீசம் பெற்ற கிரகங்களால் என்ன நேரும்?

1. சூரியன் நீசம் பெற்றிருந்தால் தன்னைச் சேர்ந்தவர்களாலேயே தாழ்மை நிலையை அடைவார்.
2. சந்திரன் நீசம் அடைந்தால் உடல் நலம் பாதிக்கும். மேலும் ரோகம் உடையவராக இருப்பார்.
3. செவ்வாய் நீசமடைந்தால் மனம் பாதிக்கப்படும். மற்றும் பல தொல்லைகளை சமாளிக்க வேண்டியது வரும்.
4. புதன் நீசமடைந்தால் உறவினரால் பகை ஏற்படும்.
5.குரு நீசமடைந்தால் புகழ் செல்வாக்கு இல்லாமல் இருப்பதோடு, ஏழ்மை, உடையவராகவும் இருப்பார்.
6. சுக்கிரன் நீசமடைந்திருந்தால் கெட்ட எண்ணங்கள் உடையவராக இருப்பார். மற்றவர்களிடம் பணியாற்றும் நிலைமை உண்டாகும்.
7. சனி நீசமடைந்திருந்தால், ஒழுக்கக்குறைவும், வறுமையால் வாடும் நிலையும் உண்டாகும்!
----------------------------------------
அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.12.24

Astrology: மீன லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:


மீன லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:

எல்லா ஜாதகங்களிலும், 12ல் அமர்ந்திருக்கும் சுக்கிரன் நன்மை செய்யும் என்ற பொது விதி இருந்தாலும், மீன லக்கினத்திற்கு 12ல் சுக்கிரன் அமர்ந்திருந்தால் அது நன்மையளிக்காது.

இந்த லக்கினத்திற்கு சனி 12ல் இருப்பது நன்மையானது. ஆனால் சந்திரன் வந்து 12ல் அமரக்கூடாது. அது ஜாதகனை வறுமையில் தள்ளி விடும். அது குரு திசை சந்திரபுத்தியில் (in Jupiter dasa, Moon sub-period) ஏற்படும்

இந்த லக்கினத்திற்கு கடகத்தில் குரு இருந்தால் ஜாதகனுக்குப் பெண் குழந்தைகள் அதிகமாக இருக்கும்.

இந்த லக்கினத்திற்கு மேஷராசியில் சந்திரனும், கடக ராசியில் செவ்வாயும் பரிவர்த்தனையாகி அமர்ந்திருக்கும் அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு சந்திர திசை பெரும் செவத்தைக் கொடுக்கும்!

இந்த லக்கினத்திற்கு சந்திரனும், செவ்வாயும் மகரராசியில் அமர்ந்திருக்க, சிம்மத்தில் குரு இருக்க, துலா ராசியில் சுக்கிரன் இருக்க விருச்சிகத்தில் சனி இருக்கும் அமைப்பு ஜாதகனுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்!

சந்திரன், புதன், செவ்வாய் ஆகிய மூவரும் கூட்டாக மகரத்தில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்கு செல்வமும், வீடு வாகன வசதிகளும் உண்டாகும்

சந்திரனும், சனியும் ஒன்றாக லக்கினத்தில் இருக்க, செவ்வாய் மகரத்தில் இருக்க சுக்கிரன் சிம்மத்தில் இருக்கும் அமைப்பு, ஜாதகனுக்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்கும்

இந்த லக்கினத்திற்கு, லக்கினத்தில் புதன், குரு, சந்திரன், செவ்வாய் ஆகிய நால்வரும் இருந்தால், அந்த அமைப்பு ஜாதகனுக்கு, பணம், புகழ், செல்வாக்கு, அதிகாரம் என்று அனைத்தையும் கொடுக்கும். அது அந்த கிரகங்களின் தசா புத்திகளில் ஏற்படும்!

இந்த லக்கினத்திற்கு, தனுசு ராசியில் குரு இருந்தால், அது ஜாதகனுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்!

ரிஷபத்தில் சந்திரனும், சிம்மத்தில் சூரியனும், கன்னியில் புதனும், துலாமில் சுக்கிரனும், தனுசுவில் குருவும். கும்பத்தில் சனியும், மகரத்தில் செவ்வாயும் இருக்கும் அமைப்பு ஜாதகனுக்கு பெரும் யோகத்தைக் கொடுக்கும். ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். இதில் ஒன்று அல்லது இரண்டு அமைப்பு இல்லையென்றாலும், மற்றவற்றை வைத்து ஜாதகன் செல்வந்தனாக இருப்பான்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.12.24

Astrology: கும்ப லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்

கும்ப லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:

இந்த லக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதியும், பத்தாம் அதிபதியும் சேர்ந்திருப்பதால் மட்டுமே ராஜயோகத்தைக் கொடுக்க மாட்டார்கள்

அவர்களுடன் சுபக்கிரகங்கள் சேர்ந்திருந்தாலும் அல்லது பார்வையை வைத்திருந்தால் மட்டுமே அந்த யோகம் கிடைக்கும்

சுக்கிரனும், ராகுவும் லக்கினத்தில் இருப்பதுடன், விருச்சிகத்தில் சூரியனும் இருக்கும் அமைப்பு இருந்தால், ஜாதகனுக்கு ராகு திசையிலும், குரு திசையிலும் பலவிதமான நன்மைகள் கிடைக்கும்

இந்த லக்கினத்திற்கு, கன்னி ராசியில் சூரியனும், செவ்வாயும் இருக்கும் அமைப்பில், அவர்களுடைய திசைகளில் ஜாதகனுக்குப் பல உபத்திரவங்கள், துன்பங்கள் ஏற்படும் 

அதே அமைப்பில், புதனுடைய திசை நன்மை செய்யக்கூடியதாக இருக்கும்.

இந்த லக்கினத்திற்கு, குரு லக்கினத்தில்  இருப்பதோடு, சனி மீனத்தில் இருக்கும் அமைப்பு ஜாதகனுக்கு குரு திசையில் கலவையான பலன்களையும், சனிதிசையில் சாதாரணமான பலன்களையும் கொடுக்கும்

சனியும், சுக்கிரனும் தனுசு ராசியில் இருந்தால், சுக்கிரதிசை அதிர்ஷ்டகரமானதாக இருக்கும்!

இந்த லக்கினத்திற்கு மேஷராசியில் சூரியன், புதன் & சுக்கிரன் ஆகிய மூவரும் கூட்டாக அமர்ந்திந்தால், சூரிய திசை ஜாதகனுக்கு, அதிகாரமுள்ள பதவியைப் பெற்றுத்தரும்!

அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.12.24

Astrology மகர லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்

மகர லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:

இந்த லக்கினத்திற்கு லக்னத்தில் குரு இருப்பதோடு சுக்கிரனின் பார்வையையும் பெற்றால், அத்துடன் சிம்மத்தில் புதன் இருக்கும் அமைப்பு ஜாதகனுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும். ஆனால் வாழ்க்கை வறுமையானதாக இருக்கும்.
 
இந்த லக்கினத்திற்கு சுக்கிரன் ரிஷபத்தில் இருப்பது நன்மையானது. அதே சுக்கிரன் துலாமில் இருந்தால் நன்மையளிக்காது.


இந்த லக்கினத்திற்குப் புதனும் சுக்கிரனும் லக்கினத்தில் இருப்பதோடு, ரிஷபத்தில் சந்திரன் உச்சம்பெற்று குரு பார்வையுடன் இருக்கும் அமைப்பு ஜாதகனுக்கு பெரும் யோகத்தைக் கொடுக்கும். ஜாதகன் அரசனைப்போல வாழ்வான்.

குருவும் சுக்கிரனும் லக்கினத்தில் இருக்க, செவ்வாய் விருச்சிகத்தில் இருக்கும் அமைப்பு நன்மையானது. ஜாதகனுக்கு குரு மகாதிசை பெரும் செல்வத்தைக் கொடுக்கும்.

சூரியன், சந்திரன், புதன் ஆகிய மூவரும் லக்கினத்தில் இருப்பதோடு, செவ்வாயும் சுக்கிரனும் தனுசுவில் இருக்கும் அமைப்பு ஜாதகனுக்கு செல்வத்தை வாரி வழங்கும்.

கன்னிராசியில் புதனும் சனியும் இருக்கும் அமைப்பு இந்த லக்கினத்திற்கு அதிர்ஷ்டகரமானது.

இந்த லக்கினத்திற்கு ராகு. குருபகவானுடன் சேர்ந்து தனுசுவில் இருக்கும் அமைப்பில் ராகு யோககாரனாக மாறி தனது தசா புத்திகளில் பல யோகங்களைக் கொடுப்பான்.

இந்த லக்கினத்திற்கு கடகத்தில் சந்திரன் இருப்பதோடு, செவ்வாய் லக்கினத்தில் இருக்கும் அமைப்பு ராஜயோகத்தைக் கொடுக்கும்!

அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.12.24

Astrology: தனுசு லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்

தனுசு லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:

இந்த லக்கினத்திற்கு மேஷராசியில் சனி இருந்தால், சனி திசை ஜாதகனுக்கு வளம் மிகுந்ததாக இருக்கும்

இந்த லக்கினத்திற்கு சனீஷ்வரன் பதினொன்றில் இருந்தால், அது ஜாதகனுக்குப் பல யோகங்களைக் கொடுக்கும்

சூரியனும், சுக்கிரனும் சிம்மராசியில் இருப்பதோடு சனி கும்பராசியில் இருக்கும் அமைப்பில், சனி திசையில் ஜாதகனுக்கு செல்வங்கள் சேரும்!

இந்த லக்கினத்திற்கு சுபக்கிரகமான குரு அதிபதி. ஆகவே இயற்கையாகவே பல நல்ல பலன்கள் உண்டு. விஷேசமாகக் குறிப்பிட்டுச் சொல்ல மேலே உள்ள 3 பலன்கள் மட்டுமே. அதை மனதில் கொள்க!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.12.24

Astrology: விருச்சிக லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்

விருச்சிக லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:

இந்த லக்கினத்திற்கு குருவும், புதனும் சேர்ந்திருப்பது மிகுந்த நன்மைகளைக் கொடுக்கும். ஜாதகனுக்கு செல்வம் சேரும்.

மகரராசியில் குரு இருக்கும் அமைப்பு ஜாதகனை தர்மச் செயல்களில் ஈடு பட வைக்கும்

சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூவரும் ரிஷப ராசியில் இருக்கும் அமைப்பு, ஜாதகனுக்கு, அதிகாரங்களையும், புகழையும் கொடுக்கும்

குருவும், புதனும் மிதுனத்தில் இருப்பதோடு, கன்னி ராசியில் சந்திரனும் இருக்கும் அமைப்பு ஜாதகனுக்கு மிகுந்த அதிஷ்டத்தைக் கொடுக்கும்

குரு, சந்திரன், கேது ஆகிய மூவரும் கூட்டாக கடக ராசியில் இருந்தால், அந்த அமைப்பில் கேது திசையில் சாதாரணமான பலன்களே கிடைக்கும். ஆனால் அதே அமைப்பில் குரு திசையில் நல்ல பலன்கள் நடைபெறும்.

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.12.24

Astrology: துலா லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்

துலா லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:


இந்த லக்கினத்திற்கு சனீஷ்வரன் யோககாரகன். ஒரு கேந்திரத்திற்கும் (4ஆம் இடம்) ஒரு திரிகோணத்திற்கும் (5ஆம் இடம்) உரியவன். பலவிதமான நன்மைகளைச் செய்யக்கூடியவன்.

அதேபோல குருபகவானும் நன்மைகளைச் செய்யக்கூடியவர். இந்த லக்கினத்திற்கு அவர் 3 மற்றும் 6ஆம் இடங்களுக்கு உரியவர் என்றாலும் நன்மைகளைச் செய்வார்.

இந்த லக்கினத்திற்கு 2 மற்றும் 7ஆம் இடங்களுக்கு உரிய செவ்வாய் மாரகத்தைச் செய்ய மாட்டார்

குருவும் சுக்கிரனும் கூட்டாக இருப்பதோடு, சனி மற்றும் செவ்வாயின் பார்வையைப் பெற்றிருந்தால், அவர்களின் (சனி மற்றும் செவ்வாயின்) தசாபுத்திகளில் ஜாதகனுக்குத் தோல் வியாதிகள் ஏற்படலாம். மற்றும் உடற்காயங்கள் ஏற்படலாம்.

சூரியனும், புதனும் கன்னி ராசியில் இருப்பதோடு, அவர்களின் மேல் சனியின் பார்வையும் இருந்தால், அது ஜாதகனின் தந்தைக்கு மேன்மையை அளிக்கும். பல நன்மைகள் ஜாதகன் மூலம் அவருக்குக் கிடைக்கும்.

இந்த லக்கினத்திற்கு செவ்வாய், சூரியன், சனி, மற்றும் புதனுடன் கூட்டாக இருந்தால், அந்த செவ்வாய் அதீதமான நன்மைகளைச் செய்வார்

சூரியன், புதன் மற்றும் சனி ஆகிய மூவரும் சந்திரன் அல்லது செவ்வாயுடன் சேர்ந்திருப்பது இந்த லக்கினத்திற்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்

இந்தலக்கினத்திற்கு, லக்கினத்தில் சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய மூவரும் கூட்டாக இருக்கும் அமைப்பு ஜாதகனுக்கு செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.

இந்த லக்கினத்திற்கு புதன் சுக்கிரன், சனி ஆகிய மூவரும் கூட்டாக லக்கினத்தில் இருப்பதோடு மேஷத்தில் செவ்வாய் இருக்கும் அமைப்பு, புதன் திசையில் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த லக்கினத்திற்கு சிம்ம ராசியில் செவ்வாயும் புதனும் இருக்க, ரிஷபத்தில் குரு இருக்க, சனி மிதுனத்தில் இருக்க அமையும் அமைப்பு ஜாதகனுக்கு ராஜ யோகத்தைக் கொடுக்கும்

லக்கினத்தில் சந்திரன் இருப்பதோடு, குரு பகவான் கன்னி அல்லது மிதுனத்தில் இருக்கும் அமைப்பில், சனி திசை ஜாதகனுக்கு செல்வத்தைக் கொடுக்கும். பல நன்மைகளைச் செய்யும்

லக்கினத்தில் சுக்கிரன் இருந்தால், அவன் மாரக அதிபதியாகவும் இருப்பான்

லக்கினத்தில் சனி இருப்பதோடு, கடகத்தில் சந்திரன் இருக்கும் அமைப்பு ராஜ யோகத்தைக் கொடுக்கும்

இந்த லக்கினத்திற்கு, மகரத்தில் சனி, புதன், குரு, செவ்வாய் ஆகிய நால்வரும் இருப்பதோடு, கடகத்தில் ராகுவும் இருந்தால், ஜாதகன் ராகு திசையில் பல புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவான். பல புனித நதிகளில் நீராடி வருவான்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.12.24

Astrology: கன்னி லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:

கன்னி லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:

1
சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகிய மூவரின் கூட்டணி இந்த லக்கினத்திற்கு ஏராளமான செல்வங்களைச் சூரியனின் மகாதிசையில் கொடுக்கும்

2
அதே கூட்டணியில், சுக்கிர திசையில் செல்வங்களை இழக்க நேரிடும்.

3
அதே கூட்டணியில் சந்திரனின் திசை லாப நஷ்டங்கள் கலந்ததாக இருக்கும்.

4
சந்திரனும், சுக்கிரனும் மிதுன ராசியில் இருக்க, கடகத்தில் குருவும், மேஷத்தில் சூரியனும் இருக்க, குரு திசையிலும், சுக்கிர திசையிலும் ஜாதகனுக்கு சில பெண்களுடன் தொடர்பு உண்டாகும்.

5
இந்த லக்கினத்திற்குத் தனுசு ராசியில் குருவும் சுக்கிரனும் கூட்டாக இருந்தால், அந்த அமைப்பு, அந்த இருவரின் தசா புத்திகளிலும் மிகுந்த நன்மைகளைச் செய்யும். செல்வம் சேரும்.

6
இந்த லக்கினத்திற்கு கடகத்தில் சனி இருந்தால், சனி திசை நன்மை உடையதாக இருக்கும்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.12.24

சிம்ம லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்

சிம்ம லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்

1
இந்த லக்கினத்திற்கு சூரியன் லக்கினாதிபதி. செவ்வாய் யோககாரகன் (ஒரு கேந்திர வீட்டிற்கும், ஒரு திரிகோண் வீட்டிற்கும் உரியவன்) புதன் 2 & பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன். ஆகவே அவர்கள் மூவரும் ஜாதகத்தில் வலிமையுடன் இருப்பது முக்கியம்.

2
இந்த லக்கினத்திற்கு சூரியனும், புதனும், செவ்வாயும் சேர்ந்திருப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். ஜாதகனுக்கு செல்வங்கள் சேரும்.

3
அதே போல் சூரியன், புதன் குரு பகவான் ஆகிய மூவரும்  சேர்ந்திருப்பதும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். ஜாதகனுக்கு செல்வங்கள் சேரும்.

4
சூரியனும் புதனும் சேர்ந்திருப்பது ஓரளவிற்கு செல்வத்தைக் கொடுக்கும்

5
இந்த லக்கினத்திற்கு ராஜகுருவும் (குரு) அசுரகுருவும் (சுக்கிரன்) சேர்ந்திருப்பது நன்மையைத் தராது. மேற்கொண்டு இருக்கும் யோகங்களை அழித்து விடும். கிடைக்க வேண்டியது கூட கிடைக்காமல் போய்விடும்!

6
இந்த லக்கினத்திற்கு சுக்கிரன் பெரிய நன்மைகளைச் செய்ய மாட்டான். ஆனால் துலா ராசியில் இருக்கும் சுக்கிரன் நன்மைகளைச் செய்வான். அதே நேரத்தில் ரிஷப ராசியில் இருக்கும் சுக்கிரன் தீமைகளையே செய்வான்.

7
லக்கினத்தில் சூரியனும், புதனும், செவ்வாயும் சேர்ந்திருந்தால், புதன் திசை அல்லது புதன் புத்திகளில் செல்வம் சேரும்!

8
இந்த லக்கினத்திற்குக் கடக ராசியில், சனியும் செவ்வாயும் சேர்ந்திருந்தால், சனி திசை நன்மை உடையதாக இருக்கும்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.12.24

Astrology: கடக லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்

கடக லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்

1
இந்த லக்கினத்திற்கு புதன் சாதகமானவன். அதாவது பயனுள்ளவன். நன்மைகளைச் செய்யக்கூடியன்

2
ஆனால் அதே நேரத்தில் குரு இந்த லக்கினத்திற்கு எந்த வித யோகத்தையும் தரக்கூடியவன் அல்ல!

3
இந்த லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன். பலவிதமான நன்மைகளைச் செய்யக்கூடியவன். அதிலும் செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருந்தால் இன்னும் அதிகமான, பலவிதமான  நன்மைகளைச் செய்யக் கூடியவன்

4
இந்த லக்கினத்திற்கு சுக்கிரன் சிம்மத்தில் அல்லது மிதுனத்தில் இருந்தால் நன்மைகளைச் செய்வான்.

5
இந்த லக்கினத்திற்கு, செவ்வாய், சந்திரன், மற்றும் குரு ஆகிய மூவரும் சிம்மத்தில் இருந்தால் ஜாதகனுக்கு செல்வங்கள் சேரும். அதிர்ஷ்டகரமானவனாக ஜாதகன் இருப்பான். அதேபோல் சூரியனும், சுக்கிரனும் சேர்ந்து விருச்சிகத்தில் இருந்தாலும் ஜாதகனுக்கு செல்வங்கள் சேரும்.

6
புதனும், சுக்கிரனும் சேர்ந்து விருச்சிகத்தில் இருந்தால், புதன் திசை ஜாதகனுக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கும்.

7
இந்த லக்கினத்திற்கு, புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய மூவரும் மிதுனத்தில் இருப்பதோடு, கடகத்தில் குரு பகவானும், மேஷத்தில் சூரியன் உச்சம் பெற்றும் இருந்தால், அந்த அமைப்பு ஜாதகனுக்கு ராஜ யோகங்களைத் தரும். ஜாதகன் ஒரு அரசனைப் போல வாழ்வான்.

8
இந்த லக்கினத்திற்கு சூரியனும், செவ்வாயும் மேஷத்தில் இருந்தால் ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். 

9
இந்த லக்கினத்திற்கு ஆறாம் இடத்ததிபன் என்ற முறையில் குரு பகவான் தன்னுடைய திசையில் மாரகத்தைச் செய்யக்கூடும்! இது பொதுப்பலன்!

10
இந்த லக்கினத்திற்கு புதனும் சுக்கிரனும் மிதுனத்தில் இருந்தால் சுக்கிரதிசை பல நன்மைகளைச் செய்யும்!

11
இந்த லக்கினத்தைச் சேர்ந்தவர்களுக்கு லக்கினத்தில் குருவும் சந்திரனும் ஒன்றாக இருந்தால், ஜாதகர் புகழ் பெறுவார். அத்துடன் அதிர்ஷ்டமும் அவருக்குத் துணை நிற்கும்

12
இந்த லக்கினத்திற்கு சந்திரன் லக்கினத்தில் இருப்பதோடு, மகரத்தில் செவ்வாய் இருந்தாலும் அல்லது துலாமில் சனி இருந்தாலும் அல்லது மேஷத்தில் சூரியன் இருந்தாலும் அந்த அமைப்பு ஜாதகருக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்!

13
இந்த லக்கினத்திற்கு, சூரியனும் புதனும் லக்கினத்தில் இருப்பதோடு, துலாமில் சுக்கிரனும், சந்திரன் செவ்வாய் குரு ஆகிய மூவரும் ரிஷபத்தில் இருந்தால் சூரிய திசை மோசமானதாக் இருக்கும். அது ஜாதகனை திவாலாக்கிவிடும். மற்ற கிரகங்களின் திசைகள் நன்மையானதாக இருக்கும்

14
இந்த லக்கினத்திற்கு புதனும் குருவும் ரிஷபத்தில் இருக்க, சனியும் ராகுவும் விருச்சிகத்தில் இருக்க, அமையும் அந்த நிலைகளை உடைய ஜாதகன் பல புண்ணிய நதிகளில் நீராடும் பாக்கியத்தைப் பெறுவான்

அடுத்த பாடம்: சிம்ம லக்கினத்திகு உரிய முக்கிய பலன்கள். அவற்றை எழுதிப் பதிவிட உள்ளேன். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.12.24

Astrology: மிதுன லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்

மிதுன லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்

இந்த லக்கினத்திற்குப் புதன் அதிபதி. ஆகவே இந்த லக்கினக்காரர்கள் அழகான தோற்றத்துடன் இருப்பார்கள். அனைவரையும் கவரும்படியாக இருப்பார்கள். புத்திசாலிகளாக இருப்பார்கள். தாங்கள் நுழையும் துறையில் சிறப்பாகப் பணி செய்து மென்மையான நிலைக்கு உயர்வார்கள். இவை எல்லாம் பொதுப் பலன்.

1
இந்த லக்கினகாரர்களுக்கு லக்கினாதிபதி புதன் சூரிய்னுடன் சேர்ந்து சிம்ம ராசியில் இருக்குமென்றால், ஜாதகனுக்குப் புதன் திசை அதிர்ஷ்டகரமானதாக இருக்கும்

2
அதேபோல சுக்கிரன், செவ்வாய் ஆகிய இருவரும் சந்திரனுடன் கூட்டாக கடக ராசியில் இருந்தால், சுக்கிரதிசையில் ஜாதகனுக்கு செல்வம் சேரும். வாழ்க்கை வளமாக இருக்கும்

3
இந்த லக்கினகாரர்களுக்கு செவ்வாய் கடகத்தில் இருக்க, சந்திரனும் சனியும் கூட்டாக மகரத்தில் இருக்கும் அமைப்பு இருந்தால், சனி திசை கலவையாக இருக்கும். அதாவது நன்மையும், தீமையும் கலந்த திசையாக அது இருக்கும்

4
மேற்சொன்ன அதே அமைப்பில், செவ்வாய் தன்னுடைய திசையில் ஜாதகனுக்கு செல்வங்களை வாரி வழங்குவார்

5
இந்த லக்கினகாரர்களுக்கு செவ்வாயும், சனியும் கடகத்தில் இருப்பதோடு, மகரத்தில், சந்திரனும் இருந்தால், ஜாதகரின் கைகாசு மற்றும் சொத்துக்கள் எல்லாம் செவ்வாய் திசையிலும் சனி திசையிலும் கையை விட்டுப் போய்விடும்

6
இந்த லக்கினகாரர்களுக்கு சந்திரன் இரண்டாம் இடத்து அதிபதி என்ற போதிலும் அவன் மாரகத்தைச் செய்ய மாட்டான்!

7
இந்த லக்கினகாரர்களுக்கு சனி கும்பத்தில் இருப்பதோடு, செவ்வாயும் சந்திரனும் கூட்டாக மேஷத்தில் இருந்தால் மிகுந்த தன யோகம் உண்டாகும். அதாவது அதீதமான செல்வம் கிடைக்கும். பண வரவு இருக்கும்.

8
சனியும், குருவும் கும்பத்தில் இருந்தால், ஜாதகருக்குப் பல புண்ணிய நதிகளில் நீராடும் வாய்ப்புக் கிடைக்கும்

9
இந்த லக்கினகாரர்களுக்கு புதன் மேஷத்தில் இருந்தால், மூத்த சகோதரருடன் கருத்துவேறுபாடுகள் உண்டாகும்

10
இந்த லக்கினக்காரர்கள் இயற்கையாகவே நல்ல தோற்ரத்துடனும், புத்திசாலித்தனத்துடனும் இருப்பார்கள்

அடுத்த பாடம்: கடக லக்கினத்திகு உரிய முக்கிய பலன்கள். அவற்றை எழுதிப் பதிவிட உள்ளேன். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!