ஆன்மிகம்: சிக்கல் சிங்காரவேலன் கோவில்
இன்று செவ்வாய்க் கிழமை. முருகப்பெருமானுக்கு உகந்த நாள். இன்று ஒரு முருகன் ஸ்தலத்தைக் காண்போம். வாருங்கள்!!!
சிக்கல் சிங்காரவேலவர் கோவில் (Sikkal Singara Velar Temple) தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்ற கிராமத்தில் சிக்கல் நவநீதீீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து 18 கி.மீ கிழக்கேயும், நாகப்பட்டினத்திலிருந்து 5 கி.மீ மேற்கேயும் அமைந்துள்ளது.கோயிலின் ஒரு வளாகத்தில் நவநீதீஸ்வரர் சன்னதியும், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதியும், மற்றொரு வளாகத்தில் விஷ்ணுவின் சன்னதியும் அமைந்துள்ளது.
கோவிலின் சிறப்பு
சிக்கல் சிங்காரவேலர் சன்னதி மிகப்பழமை வாய்ந்த இந்துக்கோவில் ஆகும். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத முருகனின் ஏழாவது படைவீடாகும். சிவனும், விஷ்ணுவும் ஒரே இடத்தில் அமைந்துள்ள அரிய தொன்மையான இந்துக்கோவிலாகும். சிக்கலில் பார்வதியிடம் முருகன் வேல் பெற்றுத் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தார்.
கோவில் வளாகம்
முற்காலத்தில் இது மல்லிகை வனமாக இருந்ததால் காமதேனு குடி கொண்டிருந்ததாக ஐதீகம். புலால் உண்டதால் சிவனால் காமதேனு சபிக்கப்பட்டார். தன் தவற்றை உணர்ந்து இங்குள்ள பாற்குளத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டதால் சாபவிமோசனம் அடைந்ததாக வரலாறு உண்டு.
விழாக்கள்
சூரசம்ஹார விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகக்கடவுள் தன் தாயாரிடம் பெற்ற வேல் கொண்டு சூரபத்மனை வதைத்த நாளை சூரசம்ஹாரமாக கொண்டாடுகின்றனர்.
ஒருமுறை இத்தலத்திற்குச் சென்ரு அங்கே உறையும் முருகப் பெருமானை வணங்கி வாருங்கள். வாழ்வில் எல்லா நலன்களையும் பெறுவீர்கள்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com