Astrology: Jothidam: 25-10-2021 அலசுங்கள் புதிருக்கான விடை!!!!
அழகு, கல்வி செல்வம் என்று எல்லாம் இருந்தும் கொடுத்திருந்த பெண்ணின் திருமண வாழ்க்கை கவிழ்ந்ததற்கு ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!!!! என்று கேட்டிருந்தோம்.
லக்கினாதிபதி சந்திரன் நீசம். அத்துடன் ராகுவின் கூட்டணி வேறு. ஏழாம் வீட்டுக்காரன் சனீஷ்வரன் 12ல் உடன் 12ம் வீட்டுக்காரன் பதனுடன் கூட்டணி. களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல். மொத்தத்தில் திருமணம் சம்பந்தப்பட்ட மூவருமே விரைய ஸ்தானமான 12ல். ஆகவே திருமணம் நிலைக்கவில்லை. திருமண வாழ்வில் மகிழ்ச்சியைத் தருவதற்கான அமைப்பு இல்லை. அத்துடன் லக்கினம் பாபகர்த்தாரி என்னும் அவ யோகத்தில் சிக்கியுள்ளது. லக்கினத்திற்கு ஒரு பக்கம் சனீஷ்வரன். மறுபக்கம் செவ்வாய்
இவைதான் பிரச்சினைக்கான முக்கிய காரணம்
அடுத்த வாரம் மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com