மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.2.20

மாமனிதர்கள்!


மாமனிதர்கள்!

எனது அலுவல்கள் காரணமாக தொடர்ந்து 3 நாட்கள் பதிவுகள் எதையும் வலை ஏற்ற முடியாமற் போய் விட்டது. மன்னிக்கவும்
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------
மாமனிதர்கள்!

*மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்!*

*முதல் மாமனிதர் :*

150 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு குதிரை வண்டியில் ஒரு  சிறுவன் பள்ளிக்கு செல்வது வழக்கம். *ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம்
நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார்.* அதற்கு ஒவ்வொரு மாணவர்களும் வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என
சொல்லி கொண்டே வந்தனர், அப்போது *ஒரு மாணவன் கூறினான் “நான் குதிரை வண்டிக்காரனாவேன் ”.* சுற்றியிருந்த மாணவர்கள் எல்லாம் சிரித்தனர், ஆசிரியரும் அவனை கேலி செய்து உட்கார சொன்னார். அந்த சிறுவன் வீட்டிற்கு சோகமாக வந்ததை பார்த்து தாய் என்னவென்று கேட்க, நடந்ததை கூறினான் அந்த சிறுவன். அதை கேட்ட அந்த தாய்
மகன் மீது கோபம் கொள்ள வில்லை, அந்த தாய் கேட்டார் *“ நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம்”.*
அந்த சிறுவன் கூறினான் “தினமும் பள்ளிக்கு செல்லும் போது குதிரை வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன், அவர் குதிரை ஓட்டுவது அழகாக இருக்கும். *எனக்கும் அதுபோல் குதிரை வண்டி ஓட்ட
வேண்டும் என்று ஆசை, அதனால் தான் அப்படி கூறினேன்”.*
இதை கேட்ட தாய் வீட்டினுள் சென்று ஒரு மகாபாரத
படத்தை எடுத்து வந்தார், அதை மகனிடம் காட்டி *“ நீ குதிரை வண்டிக்காரனாக வேண்டும் என்று சொன்னது  தவறில்லை, ஆனால் நீ எப்படிப்பட்ட குதிரை வண்டி ஓட்டுபவனாக இருக்க வேண்டும் தெரியுமா – மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு தேர் ஓட்டினானே கிருஷ்ணன்,
அந்த கிருஷ்ண் போன்ற தேர் ஓட்டியாக இருக்க வேண்டும்”* என்றார்.

அந்த சிறுவன் தான், தற்போது உலகெங்கிலும் உள்ள *ஶ்ரீ இராமகிருஷ்ண மடத்தை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தர்.*

*இரண்டாம் மாமனிதர் :*

 ஒரு சிறுவன் வீட்டில் படித்து கொண்டு இருக்கிறான். அப்போது வேலைக்கு சென்ற அவன் தந்தை மற்றும் தாய் இரவில் வீடு திரும்பினர். *வீட்டிற்கு வந்த அவன் தாய் உணவு சமைத்தார். அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள். தந்தை சாப்பிட அமர்ந்த போது கருகிய ரொட்டியை பரிமாறினார் அவன் தாய். ஆனால்  அவன் தந்தை கருகியதை பொருட்படுத்தாமல் ரொட்டியை சாப்பிட்டார். ரொட்டி கருகி விட்டதை சொல்லி வருத்தப்பட்டார் அந்த தாய், அதற்கு அவன் தந்தை  “எனக்கு கருகிய ரொட்டி தான் ரொம்ப பிடிக்கும்”*  என்று கூறிவிட்டு சாப்பிட்டு முடித்தார். இரவு தூங்கும் முன்பு தந்தையிடம்
ஆசிர்வாதம் பெற்றுவிட்டு, தயக்கத்துடன் அச்சிறுவன் கேட்டான் *“அப்பா உங்களுக்கு உண்மையில் கருகிய ரொட்டிதான் பிடிக்குமா?”.* சற்று நேரம் மௌனமாக இருந்த தந்தை கூறினார் *“மகனே உன் அம்மா தினமும்
வேலைக்கும் சென்று கொண்டு, நமக்கு பணி விடையும் செய்கிறார். பாவம் களைத்து போயிருப்பாள். ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்த போவதில்லை ஆனால் கடும் வார்த்தைகள் ஒருவர் மனதை காயப்படுத்தும்.*

*நான் ஒன்றும் உயர்ந்த மனிதன் அல்ல -ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்”.* இந்த வரிகள் அச்சிறுவனின் மனதில் ஆழ பதிந்தது. அதை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த அச்சிறுவன் தான் *முன்னாள் குடியரசு தலைவர் மற்றும் இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிர செய்த விஞ்ஞானி Dr.APJ.அப்துல்கலாம் அவர்கள்.*

*மூன்றாம் மாமனிதர்:*

 ஒரு சிறுவன் பள்ளிக்கு சென்றபோது அவன் ஆசிரியர் அவனிடம் ஒரு கடிதத்தை கொடுத்து உன் தாயிடம் கொடு என்றார். அந்த சிறுவன் மாலை
வீடு சென்றதும் கடிதத்தை அவன் தாயிடம் கொடுத்தான். அந்த கடிதத்தில் *“ உங்கள் மகனின் அறிவு வளர்ச்சி குறைவு. அவன் பள்ளியில் தேர்ச்சி அடைய மாட்டான். அவன் தேர்வில் தோல்வி அடைந்தால் எங்கள் பள்ளியின் பெயர் கெட்டுவிடும். அதனால் உங்கள் மகனை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்”* என்று எழுதியிருந்தது. இதை படித்த தாயின் கண்களில் கண்ணீர் வந்தது. அதை பார்த்த சிறுவன் ஆசிரியர் என்ன எழுதியிருக்கிறார் என கேட்டார். கண்ணீரை துடைத்து விட்டு அந்த தாய் கூறினார், இந்த கடிதத்தில் உன் ஆசிரியர் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா *“நீ மிகுந்த அறிவு திறன் கொண்டவன். பள்ளி உனக்கு தேவை இல்லை. நீ வீட்டிலிருந்தே படிக்கும் அளவுக்கு தகுதி உடையவன்”* என்று எழுதியிருக்கிறார். அதன்பின் அந்த சிறுவன் வீட்டிலேயே அவர் தாயிடம் பாடம் கற்றார். *அந்த சிறுவன் தான்
1000 ம் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை இந்த உலகிற்கு தந்த தாமஸ்
ஆல்வா எடிசன்.*

*உயர்ந்த எண்ணங்களே உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது. ஆனால் பெரும்பான்மை மக்கள் என்ன நினைக்கிறார்கள் – உயர்ந்த எண்ணங்களால் என்ன பயன்? உயர்ந்த எண்ணங்களால் என்ன கிடைக்கும்? ஊரார் என்ன
நினைப்பார்கள்? இவற்றை எல்லாம் கருதி உயர்ந்த எண்ணங்களை (அறம்) சமரசம் செய்து கொள்கிறோம். ஆனால் நம் எண்ணங்கள் நம்மோடு முடிவதில்லை. நம் எண்ணங்கள் தான் நாளைய தலைமுறைக்கான விதைகள். நம் எண்ணங்கள் மீதான நம்முடைய நம்பிக்கையின் உயரம்
தான் - நாளை மரமாக வளரக்கூடிய தலைமுறையின் உயரம்.*

*புவனேஸ்வரி தேவியின் உயர்ந்த எண்ணம் விவேகானந்தர்* என்னும் ஞானமாய் மலர்ந்தது. *ஜைனுலாப்தீனின் உயர்ந்த எண்ணம் அப்துல்கலாம்* என்னும் விஞ்ஞானமாய் மலர்ந்தது. *நான்ஸியின் உயர்ந்த எண்ணம் தாமஸ் ஆல்வா எடிசன் என்னும் 1000 கண்டுபிடிப்புகளாக மலர்ந்தது.*

*இவர்கள் எல்லாம் மாமனிதர்கள், இவர்கள் போல் நம்மால் இருக்க முடியுமா என்று தோன்றலாம். இவர்கள் போல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மனிதர்போல் நம்மால் இருக்க முடியும்.*

ஒரு மனிதர் தன் 8 வயது மகனுடன் சர்க்கஸ் சென்றார். டிக்கெட் வழங்குபவர் கூறினார் *“7வயது மற்றும் 7வயதுக்கும் குறைவானவர்களுக்கு அரை டிக்கெட்”.* அந்த தந்தை இரண்டு முழு டிக்கெட் கேட்டார். டிக்கெட் வழங்குபவர் கேட்டார்

உங்கள் மகனுக்கு எத்தனை வயது, அதற்கு அந்த தந்தை கூறினார் 8 வயது. உடனே டிக்கெட் வழங்குபவர் கூறினார்

*“உங்கள் பையன் பார்க்க 8 வயது போல் தெரியவில்லை, நீங்கள் 7 வயது என்று சொல்லியிருந்தாலும் எனக்கு தெரிய போவதில்லை நான் அரை டிக்கெட் கொடுத்திருப்பேன்”.* அதற்கு அந்த தந்தை கூறினார் “நான்
7 வயது என்று பொய் சொன்னால் உங்களுக்கு தெரியாது, ஆனால் *ஒரு டிக்கெட்டுக்காக நான் பொய் சொல்கிறேன் என்று என் மகனுக்கு
தெரியும்”.*

*நம்மால் மாமனிதர்களாக இருக்க முடியுமா என்பது தெரியவில்லை - ஆனால் ஒரு டிக்கெட்டுக்காக பொய் சொல்லாத மனிதராக இருக்க
முடியும் அல்லவா.*

*உயர்ந்த எண்ணங்கள் தான் உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது.*

*நன்றி!*
-----------------------------------------------------------------
படித்தேன்: பகிந்தேன்
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

 1. அருமையான பதிவுகள் ஐயா

  முருகன் ஜெயராமன் புதுச்சேரி

  ReplyDelete
 2. Sir, Good morning

  Always you are writing ultimate stories. inspirational.........................

  ReplyDelete
 3. யார் பொய்யுரைத்தது, என்னவென்று பொய்யுரைத்தார்கள்?..

  சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஜோசியரை குரோம்பேட்டையில் சந்திக்க நேர்ந்தது... அவர் சொன்னபடித்தான் கடைசியில் என் வழ்க்கை நடக்கும் போல இருக்கின்றது :(

  துரதிஷ்டத்தைப் பார்தீர்களா, அப்பாவுக்கும் பிள்ளையை பிடிக்கவில்லை, அம்மாவுக்கும் பிடிக்கவில்லை...
  கைகழுவிவிட்டால் போதும் என்று உள்ளார்கள். இந்த சூழ்நிலையில் வகுப்பறையில் ஒரு மனதை திடப்படுத்தும் பதிவு...

  ReplyDelete
 4. /////Blogger வகுப்பறை said...
  அருமையான பதிவுகள் ஐயா
  முருகன் ஜெயராமன் புதுச்சேரி//////

  நல்லது. நன்றி நண்பரே!!!!!

  ReplyDelete
 5. /////Blogger Jayakumar said...
  Sir, Good morning
  Always you are writing ultimate stories. inspirational.........................///////

  நல்லது. நன்றி ஜெயகுமார்!!!!!

  ReplyDelete
 6. /////Blogger Th.Sabharinaathan said...
  யார் பொய்யுரைத்தது, என்னவென்று பொய்யுரைத்தார்கள்?..
  சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஜோசியரை குரோம்பேட்டையில் சந்திக்க நேர்ந்தது... அவர் சொன்னபடித்தான் கடைசியில் என் வாழ்க்கை நடக்கும் போல இருக்கின்றது :(
  துரதிஷ்டத்தைப் பார்தீர்களா, அப்பாவுக்கும் பிள்ளையை பிடிக்கவில்லை, அம்மாவுக்கும் பிடிக்கவில்லை...
  கைகழுவிவிட்டால் போதும் என்று உள்ளார்கள். இந்த சூழ்நிலையில் வகுப்பறையில் ஒரு மனதை திடப்படுத்தும் பதிவு...//////

  நல்லது. நன்றி நண்பரே!!!!!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com