மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.10.18

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை வழங்கியவர் கவியரசர் கண்ணதாசன்!!!!


நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை  வழங்கியவர் கவியரசர் கண்ணதாசன்!!!!

நமது தலைமுறையினர் ஒவ்வொருவருக்கும் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு பாடல்கள் புனைந்தவர் கவியரசர், 
கண்ணதாசன் ஆவார்

அரசியல் சூழ்நிலையால் மத்திய அமைச்சர் பதவியை இழந்து சென்னை வந்துசேர்ந்த டி. டி. கிருஷ்ணமாச்சாரியைத் தேற்றிய பாடல் கண்ணதாசனின், "போனால் போகட்டும் போடா".

மனம் வெறுத்துப்போய் ஊருக்குத் திரும்ப முடிவுசெய்த கவிஞர் வாலியை மீண்டும் கோடம்பாக்கம் வரச்செய்த கவியரசரின் பாடல்,
"மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா? உனக்கும் கீழே உள்ளவர் கோடி நனைத்துப் பார்த்து நிம்மதி நாடு".

கம்பரின் வரிகளை எடுத்தாண்ட பாடல், "தோள் கண்டேன் தோளே கண்டேன்".

பட்டினத்தாரின் பாடலான, "அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே" என்ற வரிகளின் சாரத்தை எளிதாக்கி, "வீடுவரை உறவு வீதிவரை
மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ" என்று பட்டிக்காட்டுப் பாமரனுக்கும் உலகியல் நடைமுறைத் தத்துவத்தைப் பிழிந்து வழங்கினார் கண்ணதாசன்.

"அண்ணன் என்னடா தம்பியென்னடா அவசரமான உலகத்திலே", தமது அண்ணன் பொருளுதவி  செய்ய மறுத்தபோது வந்த
பாடல்.

இசையமைப்பாளர் விஸ்வநாதனும் கண்ணதாசனும் விழியும் இமையும்போல, கண்ணும் கருத்தும்போல, உடலும் உயிரும்போல
பரஸ்பரம் வாழ்ந்தனர் என்றால் மிகையாகாது. அந்த விஸ்வநாதன் பிறந்தநாளும் கவியரசரின் பிறந்தநாளும் ஒன்றே! 24-06-1928.

என்னே இயற்கையின் விந்தை!

விஸ்வநாதன் கவிஞரைச் சாடியது வேறொருவர் மூலம் கேள்விப்பட்டு ஆவேசத்தில் உதித்த பாடல், "சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே".

"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை", என்று தான் இறப்பதற்கு ஏறத்தாழ இருபது
ஆண்டுகளுக்கு முன்பே எழுதிப் பாடி நடித்த சுயஆசிகவி கண்ணதாசன் என்றும் அமரத்துவம் பெற்று தமிழ் உள்ளவரை வாழுவார் என்பதில் ஐயம் சிறிதுமில்லை!

காமராசருக்குத் தூது: அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி". பாடலைக்கேட்ட
பெருந்தலைவர் கண்ணதாசனை நேரில் வந்து சந்திக்குமாறு சொன்னது வரலாறு.

பாரதப் பிரதமர் நேரு மறைந்தபோது, "சாவே உனக்கொருநாள் சாவுவந்து சேராதா", என்று உலகையே அழவைத்தார் மனிதநேயக்
கவிஞர்.

பகுத்தறிவு இயக்கம் என்று  சொல்லிக்கொண்டு  இருந்த கூடாரத்தில் இருந்து வெளியேறிக் காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர
சரஸ்வதி மகாசந்நிதானம் அவர்களை வணங்கியபோது பெரியவர், "இப்படியே சினிமாவுக்கே எழுதாதே கண்ணதாசா. உன்
மதப்பெருமையை உலகறிய உனது ஆற்றுப்பிரவாக் கவிதைநடை உதவட்டும்", என்று பணித்தார். அந்த விதையே "அர்த்தமுள்ள
இந்து மதம்" என்ற பத்து விழுதுகள் கொண்ட ஆலமரமாக விளைந்தது.

தனது மதத்தையும் தாண்டி இயேசு காவியம் இயற்றிய உண்மையான மதச் சார்பற்ற பெரியமனிதன் மகாகவிஞர் கண்ணதாசன் 

பாவமன்னிப்பு படத்தில் வரும் ரஹீம் என்ற இஸ்லாமியர் வேடத்தில் சிவாஜி பாடிய பாடல், "எல்லோரும் கொண்டாடுவோம்.
அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வையெண்ணி" என்ற பாடலில் வரிக்கு வரி பிரணவ மந்திரமான "ஓம்.....ஓம்",
என்ற சொல்லில் முடியுமாறு எழுதிய மதஒற்றுமையுணர்வு இன்று நினைத்தாலும் புல்லரிக்கின்றது.

இப்படி காலம், மதம், போன்ற இன்னும் என்னென்ன பரிமாணங்கள் உண்டோ அத்தனை இடங்களிலும் நிறைந்து அழியாது
நிலைத்து நிற்கும் கவியரசர் புகழ் என்றும் மாறா இளமையுடனும் புதுமையுடனும் என்றும் விளங்கும். இன்று கவியரசரின் அத்தனை இயல்களும் ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக் களமாக உள்ளது.

வாழ்க வளர்க கவியரசர் புகழ்.

வாழ்க வளர்க மெல்லிசை மன்னர் புகழ்.
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5 comments:

 1. Good morning sir very excellent thanks sir vazhga valamudan

  ReplyDelete
 2. கவியரசரைப் புகழ்ந்து சொல்ல ஒரு பதிவு போதுமோ? என் பங்குக்கு நான் ஒரு பாடல் சொல்கிறேன். திருக்குறள் வரிகளை ஒட்டி எழுதிய பாடல் "உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே.. விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே...

  ReplyDelete
 3. Sir,All kannadasan songs and his books are great asset to us. Whatever he said on those days are perfectly suits the current situation...He is god's big gift to this world.

  ReplyDelete
 4. Respected Sir,

  Happy morning... He is great poet...

  Thanks for sharing...

  Have a great day.

  With regards,
  Ravi-avn

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com