மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

Well said

Well said
Varahamihiram, The Great

Galaxy2007 Class

Galaxy2007 Class
Classroom for Advanced Lessons

Galaxy 2007 Class -Advanced Lessons

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

இரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன!

Galaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.

அந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

வந்தவர்களின் எண்ணிக்கை

15.9.17

Astrology: ஜோதிடம்: அமரக் யோகம்!


Astrology: ஜோதிடம்: அமரக் யோகம்!

யோகங்களைப் பற்றிய பாடம்!

அமரக் என்றால் பானி பூரி, பேல் பூரி போல ஏதோ தின்பொருள் - சாட் அயிட்டம் என்று நினைக்கவேண்டாம். அமரக் என்னும் வடமொழிச்சொல் ஒரு வித அணிகலனைக் குறிக்கும். மயில்பதக்கம் போன்ற தோற்றமுடைய அணிகலனாம்.

பதிவை முழுதாகப் படித்தால், அதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழாம் வீட்டதிபதி ஒன்பதாம் வீட்டிலும், ஒன்பதாம் வீட்டதிபதி ஏழாம் வீட்டிலும், இடம் மாறி அமர்ந்திக்கும் நிலைமையே இந்த அமரக் யோகத்தைக் குறிக்கும். மாறி அமர்ந்ததோடு அல்லாமல் வலுவாக வேறு இருக்க வேண்டுமாம். அதாவது ஆட்சி, அல்லது உச்சம் அல்லது அஷடகவர்க் கத்தில் 5ம் அல்லது மேற்பட்ட பரல்களையும் பெற்றிருக்க வேண்டும்

பலன்: ஏழாம் வீட்டோடும் பாக்கிய ஸ்தானத்தோடும் சம்பந்தப்பட்ட யோகம் இது. இந்த யோகம் உள்ள ஜாதகனுக்கு, டக்கராக மனைவி கிடைப்பாள். சினிமாவை வைத்து உதாரணம் சொல்ல விருப்பமில்லை. இதற்கு உதாரணம் சொன்னால், ராமனுக்கு ஒரு சீதை கிடைத்ததைப்போல அல்லது லெட்சுமணனுக்கு ஒரு ஊர்மிளா கிடைத்ததைப் போல அற்புதமான மனைவி கிடைப்பாள்.

அவளைப் பார்த்துப் பார்த்து ஜாதகன் மகிழலாம். வயதானா பிறகும் அருகில் வைத்துக் கொஞ்சலாம். ’உனக்காக நான், எனக்காக நீ’ என்று வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். Made for each other என்று போடுகிறார்களே அப்படியொரு அம்சம் வாழ்க்கையில் இருக்கும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சார், எனக்கு இந்த அமைப்பு இருக்கிறது. ஆனால் ஒரு கிரகம் ஊற்றிக்கொண்டு விட்டது அதாவது, நீசமாகிவிட்டது - வக்கிரமாகிவிட்டது - அஸ்தனமாகிவிட்டது - கிரகயுத்ததில் உள்ளது - ஆகவே இதில் பாதி அம்சத்தோடாவது ஒரு மனையாள் கிடைப்பாளா? என்று யாரும் கேட்க வேண்டாம். ஜோதிட விதிகளை நமக்காக நாம் மாற்றிக்கொள்ள முடியாது. அதை மனதில் வையுங்கள். இருந்தாலும் சந்தோஷம். இல்லையென்றாலும் சந்தோஷம். நம் முகத்தை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து மனதைத் தேர்த்திக்கொள்ள வேண்டியதுதான்.

அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

Shanmugasundaram said...

Good morning sir nice to hear amarak yoga,in this birth i don't have this yoga,what to do to get this yoga on next birth, thanks sir vazhga valamudan

Santhanam Salem said...

Dear Sir,
ஜோதிட புதிர் நிரம்ப நாளாகிவிட்டது.தங்களது மேலான கவனத்திற்கு
B. SANTHANAM
SALEM

KJ said...

Sir, Thanks. Yepperpata Azhagiya irunthalum, maximum Three Months than Sir. Piragu yepadi Vayathaana Kaalathil konjuvathu? Aasai 60 Mogam 30 allava.

SELVARAJ said...

தீபிகா படுகோன் உதாரணத்திற்கு வந்துவிடுவார் என படிக்க ஆரம்பித்தேன். இப்படி செய்துவிட்டீரே?

classroom2012 said...

Sir, Super Thank you

Unknown said...

நீச்சம் பெற்று வர்க்கபலம் பெற்றால் அந்த கிரகம் பலத்தை எவ்வாறு எடுத்து கொள்வது ஐயா ?
சுக்கிரன் கன்னியில் நீச்சம் பெற்று சுயவர்க்கம் 7 பலமா நீச்சமா?

kmr.krishnan said...

Thank you Sir.

Unknown said...

Good evening sir,
This Friday also, to know about good yogam it's nice sir. Thank you sir.

Subbiah Veerappan said...

////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir nice to hear amarak yoga,in this birth i don't have this yoga,what to do to get this yoga on next birth, thanks sir vazhga valamudan////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger B. SANTHANAM Umasankari said...
Dear Sir,
ஜோதிட புதிர் நிரம்ப நாளாகிவிட்டது.தங்களது மேலான கவனத்திற்கு
B. SANTHANAM
SALEM/////

புத்தகத் தொகுப்பில் முனைப்பாக இருக்கிறேன். அந்த வேலை முடிந்தவுடன் எழுதுகிறேன். பொறுத்துக்கொள்ளுங்கள். உங்களின் ஆர்வத்திற்கு நன்றி!!!!

Subbiah Veerappan said...

////Blogger KJ said...
Sir, Thanks. Yepperpata Azhagiya irunthalum, maximum Three Months than Sir. Piragu yepadi Vayathaana Kaalathil konjuvathu? Aasai 60 Mogam 30 allava./////

சீதையைபோல் மனைவி கிடைத்தால், நீங்கள் சொல்லும் கணக்கெல்லாம் செல்லாது!!! நன்றி!!!

Subbiah Veerappan said...

////Blogger SELVARAJ said...
தீபிகா படுகோன் உதாரணத்திற்கு வந்துவிடுவார் என படிக்க ஆரம்பித்தேன். இப்படி செய்துவிட்டீரே?////

ஒரே மாதிரி உதாரணம் கொடுத்தால் சுவாரசியமாக இருக்காதே! நன்றி!!!

Subbiah Veerappan said...

////Blogger classroom2012 said...
Sir, Super Thank you////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!
உங்களின் பெயர் என்ன? அதைச் சொல்லவில்லையே நீங்கள்!!!

Subbiah Veerappan said...

////Blogger karthi keyan said...
நீச்சம் பெற்று வர்க்கபலம் பெற்றால் அந்த கிரகம் பலத்தை எவ்வாறு எடுத்து கொள்வது ஐயா ?
சுக்கிரன் கன்னியில் நீச்சம் பெற்று சுயவர்க்கம் 7 பலமா நீச்சமா?////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கார்த்திகேயன்!!!!

Subbiah Veerappan said...

///Blogger kmr.krishnan said...
Thank you Sir.////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

Subbiah Veerappan said...

Blogger gokila srinivasan said...
Good evening sir,
This Friday also, to know about good yogam it's nice sir. Thank you sir.////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!

Unknown said...

sir..7,th lord 9th place...9thlord 2,nd place...,2nd lord 7thplace இந்த பரிவர்த்தனை யோகம் உண்டா?

Subbiah Veerappan said...

////Blogger Abarajitha Pandian said...
sir..7,th lord 9th place...9thlord 2,nd place...,2nd lord 7thplace இந்த பரிவர்த்தனை யோகம் உண்டா?//////

உண்டு.இதற்கு முக்கோணப் பரிவர்த்தனை என்று பெயர்!!! சம்பந்தப் பட்ட கிரகங்களின் தசாபுத்திக் காலங்களின் பலன்கள் கிடைக்கும்!!