மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.3.19

கோடைகாலக் குறிப்புக்கள்


கோடைகாலக்  குறிப்புக்கள்

காலை எழுந்தவுடன் சாப்பிட வேண்டியவைகள்

பழைய சாத தண்ணீர் ( வாரம் 2 நாட்கள் )

ஊற வைத்த வெந்தயம் ( வாரம் 2 நாட்கள் )

பழங்கள் ( மாதுளை, தர்ப்பூசணி, பன்னீர் திராட்சை, கொய்யா, பப்பாளி - இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது கலந்தும் சாப்பிடலாம் ) ( வாரம் 2 - 3 நாட்கள் )


காலை எழுந்தவுடன் தாக உணர்வை கவனித்து, அதற்கேற்ப தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். முக்கியமாக பெருங்குடலின் நேரமாகிய 5 மணி முதல் 7 மணி வரைஇருக்கும் தாக உணர்வு மிக முக்கியமானது. அப்போது நாம் குடிக்கக்கூடிய தண்ணீர் நமது குடல்களை சுத்தப்படுத்தி நல்ல பசி உணர்வை கொடுக்கும். நல்ல ஜீரணத்துக்கும் உதவிசெய்யும். இதனால் மலச்சிக்கல் நீங்குவதோடு உடல் உஷ்ணமும் கட்டுக்குள் இருக்கும்.

காலை உணவாக கம்மங்கூழ், பழைய சாதம், கேழ்வரகு கூழ் போன்றவற்றை வாரம் 2 நாட்கள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம். உடன் சிறிய வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம். மேலும்அதற்கு கொத்தமல்லி மற்றும் புதினா துவையல்களையும் தொட்டுக்கொள்ளலாம்.

பழைய சாதத்தை இரவு மண் பாத்திரத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்துவிட வேண்டும். பழைய சாத தண்ணீர் குடிக்கும் போதோ சாதமாக சாப்பிடும் போதோ, மண்பாத்திரத்தில் ஊற வைக்கப்பட்டிருந்தால் அது சுவையாகவும், குளிர்ச்சி தரும் வகையிலும் அமையும்.

முடிந்தவரை காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே தண்ணீரை தவிர ( முறையான தாகம் இருந்தால் மட்டும் ) எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

மதிய உணவு சாப்பிட போவதற்கு முன்னர் சிறிதளவு தண்ணீர் குடித்துவிட்டு அதன்பின்னர் 15 நிமிடங்கள் கழித்து சாப்பிடலாம். இதன் மூலம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதுஇடையில் தண்ணீர் தேவைப்படுவதை தவிர்க்க முடியும். இது நல்ல தரமான ஜீரணத்தை உறுதி செய்யும்.

மதிய உணவில் நீர்க்காய்கள் நிறைய சேர்த்துக்கொள்ளலாம். ( புடலங்காய், பூசணிக்காய், சுரைக்காய், வாழைத்தண்டு, பீர்க்கங்காய் முக்கியமானவை ). .

மதிய உணவில் வாரம் 3 - 4 நாட்களாவது மோர் சேர்த்துக்கொள்வது நல்லது. மோரை கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி போட்டு ஊறவைத்து பயன்படுத்தலாம். மோரை தாளித்துபயன்படுத்துவது அதன் புளிப்பு தன்மையை குறைப்பதாக அமையும்.

அசைவ உணவுகள் சாப்பிடுவதாக இருந்தால் மதிய வேளைகளில் எடுத்துக்கொள்ளுங்கள். இரவு எடுத்துக்கொள்வதாக இருந்தால் 8 மணிக்கு முன்னதாகவே சாப்பிட்டுமுடித்துவிடுங்கள். அசைவத்தில் காரமும் மசாலாக்களும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது மிக முக்கியம். அசைவ உணவுகளில் ஆட்டு இறைச்சியின் மார்பெலும்பில் சூப் வைத்துகுடிப்பது உடல் உஷ்ணத்தை குறைக்கும் ஒரு அற்புத உணவாகும்.

மாலை வேளைகளில் தேவைப்பட்டால் பழ ரசங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

நாள் முழுக்கவே தாக உணர்வை நன்கு கவனித்து அதற்கேற்ற வகையில் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான தண்ணீர் குடிக்க கூடாது என்பதையும்மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தான் இன்றைக்கு நாம் பெரும்பாலும் குடிக்கின்றோம். அந்த தண்ணீரை ஒரு மண் பானையில் ஊற்றி வைத்து அதனோடு வெட்டி வேர் சேர்த்து தண்ணீர்குடிக்கலாம். குறைவான நீரில் முழுமையாக தாகம் நீங்க இது பெரும் உதவியாக இருக்கும். ( 30 லிட்டர் தண்ணீருக்கு 3 வெட்டி வேர்கள் )

எப்போதுமே அமர்ந்த நிலையில் வாய் வைத்து தண்ணீர் குடிப்பதே நல்லது.

ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்துவிட்டு வந்த பின்னரும் சிறிதளவு நீர் குடிக்க வேண்டும். ( தாகம் இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை )

குளிர்சாதன அறைகளில் தூங்குபவர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். குளிர்சாதன வசதி என்பது நிச்சயமாக நமது உடல் நலனுக்கு உகந்தது அல்ல. அதேநேரத்தில் அதிக சூட்டில் இரவு தூக்கம் வராமலும் கஷ்டப்பட வேண்டாம். எனவே ஏசி யின் பயன்பாட்டு அளவை முடிந்த வரை குறைத்து கொள்ள திட்டமிட வேண்டும்.

உதாரணம்: அதிகாலை 3 மணிக்கு மேல் ஏசி-யை அனைத்து விட வேண்டும். 3 மணிக்கு மேல் நமது நுரையீரலின் பிரத்யேக நேரமாகும். இந்த நேரத்தில் தூய்மையான ஆக்சிஜன்காற்றில் பரவிக்கிடக்கும். எனவே 3 மணிக்கு மேல் ஜன்னல்களை திறந்து விட்டு காற்றோட்டமான சூழலில் உறங்குவது ஏசி யின் பாதிப்புகளில் இருந்து நம்மை ஓரளவு காக்கும்.

பழங்களை பொறுத்தவரை தர்பூசனியும், மாதுளையும், கிர்ணியும் கோடை காலத்தில் நமது உடலின் நீர் சமநிலையை பாதுகாக்க உதவும் முக்கிய பழங்களாகும். எனவே ஒருநாளைக்குஅவற்றில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக சாப்பிட்டு விட வேண்டும்.

தினமும் தலைக்கு குளிப்பதை கட்டாயமாக்க வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத பட்சத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட தலைக்கு குளித்து நல்லது. மேலும் அதிக நேரம்குளிப்பதும் உடல் உஷ்ணத்தை குறைக்கும் மற்றும் சமநிலையில் வைக்கும்.

அதேபோல, வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்து நல்லது. தலைக்கு தேய்ப்பது மட்டுமல்லாமல் உடல் முழுக்கவே தேய்த்து இளங்காலை வெயிலில் ( 6 முதல் 7.30மணி வரை ) ஒரு 30 முதல் 40 நிமிடங்கள் வரை கண்கள் மூடி அமர்ந்துவிட்டு பின்னர் இதமான நீரில் குளித்து விடுவது நமது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

அவ்வப்போது இளநீர் குடிப்பதும், எலுமிச்சை ஜூஸ் குடிப்பதும், வெள்ளரிக்காய் சாப்பிடுவதும் நமது நீர் சக்தியின் தரத்தை உறுதி செய்யும். ஒவ்வொரு முறை இளநீர் குடிக்கும் போதும்அதன் வழுக்கையையும் சாப்பிட வேண்டும்.

கோடை காலத்தில் இரவு உணவாக தோசை, பரோட்டா, பிரியாணி, ஃபிரைடு ரைஸ் போன்ற உணவுகளை தவிர்த்து விட்டு, ஆவியில் வேக வைத்த உணவுகளையும், களி உள்ளிட்டஉணவுகளையும் சாப்பிடுவதே நல்லது.

கோடை காலத்தில் இரண்டு முறை உள்ளாடைகளை மாற்றும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல இரவு உறங்க செல்லும் முன் நமது இடுப்பு பகுதிகள் உள்ளிட்டபிறப்புறுப்பு பகுதிகளை நன்கு கழுவிவிட்டு உறங்க செல்வது சுத்த தன்மையை ஏற்படுத்துவதோடு, நமது சிறுநீரக பகுதிகளை குளிர்ச்சிப்படுத்தும் விதமாகவும் அமையும்.

கோடைகாலங்களில் வியர்வை மூலமாக நடைபெறும் கழிவு நீக்கம் முழு அளவில் இருக்கும். எனவே நமது வியர்வை துவாரங்களில் தடையில்லா திறந்த நிலையை நாம் ஏற்படுத்தவேண்டும். எனவே சோப் உபயோகங்களை குறைத்துவிட்டு இயற்கையான குளியல் பொடிகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் சோப்களின் ரசாயனங்கள் நமது வியர்வைதுவாரங்களை அடைக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். பொதுவாகவே அனைத்து காலங்களிலுமே சோப் பயன்படுத்தாமல் குளியல் பொடியை பயன்படுத்துவதே நல்லது. அப்படியேசோப் பயன்படுத்தினாலும் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். சோப் தேய்த்து விட்டு, வெறும் கையாலோ அல்லது நார் போன்ற பொருட்களாலோ நமது வெறும்உடலை தேய்த்துவிடுவதன் மூலம் சோப்களின் ரசாயனங்கள் நமது வியர்வை துவாரங்களை அடிப்பதை தடுக்க முடியும்.

பொதுவாகவே கோடை காலங்களில் அதிகாலை நாம் சீக்கிரம் எழுந்து கொள்ள முடியும். எனவே இரவு உணவை சீக்கிரம் முடித்துவிட்டு சீக்கிரம் தூங்க சென்றுவிடுவது தான் நல்லது.அதுதான் போதுமான தூக்க நேரத்தை உறுதி செய்யும்.

கூடுமானவரை 9 மணிக்கு மேல் மொபைல், டிவி, கணிப்பொறி பயன்பாடுகளை நிறுத்திவிட்டு உறங்க சென்றுவிடுவது மிக மிக நல்ல பலன்களை நமக்கு ஏற்படுத்தும்.

கோடைகாலங்களில் மொட்டை மாடியில் படுக்கும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கும். இதில் எந்தவித பாதகங்களும் இல்லை. இருந்தாலும், உறங்க செல்வதற்கு 4 மணி நேரத்திற்குமுன்பாக அந்த இடத்தை தண்ணீர் ஊற்றி குளிர்ச்சிப்படுத்த வேண்டியது மிக முக்கியம்.

ஃபோம் மெத்தைகளில் படுத்து உறங்குவதை தவிர்த்துவிட்டு தரையில் பாய்விரித்து அதன் மீது ஜமுக்காளம் அலல்து போர்வை விரித்து உறங்குவது மிக நல்லது. வெறும் தரையில்படுக்க வேண்டாம்.

வீட்டில் முழுமையான காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதுவே நமது வீட்டினுள் உறையும் உஷ்ணத்தை வெளியேற்றிவிடும்.

ஜீன்ஸ் உள்ளிட்ட மிக இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்த்துக்கொள்வது நல்லது.

IT துறைகளில் பணியாற்றுபவர்கள் நாள் முழுக்கவே ஏசி அறையில் இருக்க வேண்டிய சூழல் இருப்பதால் அவர்கள் இரவு உணவாக பழங்கள் மட்டும் சாப்பிடுவது அவர்களின் உடல்உஷ்ணத்தை குறைக்கும். மேலும் அதுபோன்ற சூழலில் அவர்கள் மாலை சிற்றுண்டியை சற்றே அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது இரவு உணவாக பழங்களே போதுமானதாகஇருக்கும்.

தூய்மையான பசும்பால் கிடைத்தால் இரவு உணவாகவோ அல்லது இரவு உணவுக்கு பின்னரோ சிறிதளவு எடுத்துக்கொள்வது நல்லது. ஜீரண குறைபாடுகள் இருப்பவர்கள் பாலைதவிர்த்து விடுவது நல்லது.

மார்க்கெட்டிங் துறைகளில் பணிபுரிபவர்கள், வியாபாரம் காரணமாக வெயிலில் வெளியில் அலையக்கூடிய சூழலில் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை முகம் கழுவிக்கொள்ளுங்கள். முகம்கழுவும் போது பின் கழுத்தையும், காதுகளின் உட்புறத்தையும், கழுத்து பகுதிகளையும் தண்ணீரால் நனைப்பது மிகவும் முக்கியம்.

பெண்களுக்கு பொதுவாகவே நீரின் தேவை அதிகம் இருக்கும். எனவே குறிப்பாக பெண்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இல்லத்தரசிகளும், பணிபுரியும் பெண்களும்தங்களுக்கு அருகில் கண்டிப்பாக ஒரு தண்ணீர் குவளையை வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தாகம் எடுத்த மறுநொடி நீர் அருந்திவிட்டு தான் அடுத்த வேலையை பார்க்க வேண்டும்.

குழந்தைகள் பொதுவாகவே நீரின் தேவையை உணராதவர்களாகவும் அறியாதவர்களாகவுமே இருப்பார்கள். எனவே அவர்களை அவ்வப்போது தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும்.

இவைகளெல்லாம் போக நமது வீட்டில் உள்ள பெரியவர்களின் அனுபவங்கள் சொல்லும் கோடைகால குறிப்புகளையும் கவனத்தில் கொண்டு கடைபிடிக்கலாம்.

கோடை காலம் என்பது நமது இதயமும், சிறுகுடலும் அதிக வேளை பளுவுக்கு ஆளாகக்கூடிய காலமாகும். எனவே அந்த உறுப்புகளை சரியான சக்தி நிலையில் பராமரிக்கவேண்டுமானால் மேற்சொன்ன அனைத்து குறிப்புகளையும் கடைபிடிப்பது நன்மையான விளைவுகளை ஏற்படுத்தும்.

பல்வேறு பருவ காலங்களின் தன்மையை சரியாக அறிந்து கொண்டு அதற்கேற்ற சரியான உணவு மற்றும் வாழ்வியல் முறைகளை கடைபிடிக்கும் போது அக்காலமானது சுகமானஅனுபவங்களை தருவதாக அமையும். முக்கியமாக கோடை காலத்தில் நாம் செய்யக்கூடிய இந்த உணவு முறை ஒழுக்கங்கள் அடுத்தடுத்த பருவ காலங்களுக்கு உகந்த உடல் சூழலைஉருவாக்கி தந்து ஒரு முழுமையான ஆரோக்கிய வாழ்வை நாம் வாழ்வோம்
-----------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.3.19

Astrology: Jothidam: 8-3-2019 புதிருக்கான விடை!!!!


Astrology: Jothidam: 8-3-2019 புதிருக்கான விடை!!!!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அவருக்கு அவருடைய 55 வயதில் கஷ்டங்கள் காற்று மழையாக அடிக்கத்ட் துவங்கின.
தொடர்ந்து ஏழு ஆண்டுகள் அவருக்கு பலவிதமான அவதி. உடல் நிலை பாதிப்பு, நோய் நொடிகள், மன அழுத்தம், பணக் கஷ்டம்
என்று எல்லா வழிகளிலும் துயரம். 1. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.? 2. அவைகள் எப்போது நிவர்த்தியாகும்?
ஜாதகத்தை அலசி இந்த இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்!!!! என்று கேட்டிருந்தேன்.

சரியான பதில்: ஜாதகருக்கு அவருடைய 55 வது வயதில் கேது மகா திசை ஆரம்பம். கேது, லக்கினாதிபதி புதனுடன் கூட்டாக 12ம் இடத்தில் உள்ளார். அது விரைய ஸ்தானம். ஆறாம் அதிபதி செவ்வாயின் பார்வை அவர்கள் மேல் விழுகிறது. அத்துடன் எட்டாம்
இடத்துக்காரன் சனீஷ்வரனின் பார்வையும் அவர்கள் மேல் விழுகிறது. மேலும் மாரக அதிபதி குரு எட்டாம் இடத்தில் அமர்ந்தவாறு அவர்களைப் பார்க்கிறார். போதாதா? இத்தனையும் சேர்ந்து கேது திசை மொத்தமும் அவரைப் படாதபாடு படுத்தின!!!

அடுத்து வந்த சுக்கிர மகாதிசை எல்லாத் துயரங்களையும் அடித்து விரட்டி அவருக்கு நன்மை செய்யத் துவங்கின. ஆமாம். சுக்கிரன்
உச்சம் பெற்று முக்கியமான கேந்திரத்தில் இருப்பதோடு, இராசி நவாமசம் இரண்டிலும் ஒரே இடத்தில் இருந்து வர்கோத்தம
பலத்துடன் இருக்கிறார். அதையும் கவனியுங்கள்!!!!

புதிருக்கான பதிலை 9 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 15-3-2019 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
1
Blogger sundari said...
12 இல் இருக்கும் அதிபதி புதன் தசை முடியும் தருவாயில் கேது தசை ஆரம்ப தில் அவருக்கு ரொம்ப கஷ்டம் கேது 6 ஆம் அதிபதி

செவ்வாய் நேரடி பார்வை இல் இருக்கிறது மேலும் சனி பார்வை இதே கேது சந்தரனுக்கு அஷ்டமத்தில் இருக்குது பொதுவா 7
ஆண்டுகள் ஞான காரன் கேது அவருக்கு எல்லாத விஷயகளையும் அறியா வைத்து நல்ல துவைத்து காயவைத்து உச்ச சுக்காரன்
மகா தசை அவருக்கு நல்ல இருக்கும் அது மிதுன லகனத்துக்கு யோகா கிரகம்
Friday, March 08, 2019 7:14:00 AM
----------------------------------------------------
2
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 ..லக்கினாதிபதி பனிரெண்டில் விரயத்தில் நீச கேதுவுடன் கூட்டு
2 .55 ஆவது வயதில் நீச கேது திசை ஆரம்பித்தவுடன் ஆறாம் இடத்தை பார்த்து உடல் நல குறைவு
3.மேலும் நாலாம் அதிபதி புதனும் கேதுவுடன் சேர்க்கை நாலாம் இடத்தை பார்த்து பண பிரச்னை மன அழுத்தத்தை ஏற்படுத்தி
உள்ளார்
4 .பத்தாம் இடத்தில அமர்ந்துள்ள உச்ச சுக்ரனின் தசை ஆரம்பமானவுடன் நிலைமை சரியாகி இருக்கும்
கூடவே பாக்கியாதிபதி சனியும் உள்ளார்
நன்றி
தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, March 08, 2019 2:27:00 PM
------------------------------------------------------
3
Blogger Thanga Mouly said...
7 வருடங்கள் துன்பம் என குறிப்பிட்டு கேது தசாவை வாத்தியார் சுட்டிக்காட்டுகின்றார்.
விரயத்தில் லக்கினாதிபதியுடன்(உடல்) அமர்ந்த கேது நீச குருவின் பார்வை பெறுவதுடன், கேது அமர்ந்த வீட்டின் அதிபதி 10ம்
வீட்டில் உச்சம் பெற்று, சனியுடன் கூட்டுச் சேர்ந்தது மாத்த்திரமன்றி வர்க்கோத்தமம் பெற்றது உசித பலன்களை தரும் நிலையயில்
இருந்து விலக்களிப்பதாகவே கருதுகின்றேன்.
எனவே 55 வயதில், கேது தசையில் தொடங்கி 7 வருடங்கள் மிகப் பெரிய பாதிப்பு; (தொடர்ந்த சுக்கிர தசை மிகப்பெரிய சாதகம்
கொடுத்திருக்குமா??).
Friday, March 08, 2019 3:31:00 PM
-------------------------------------------------------
4
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
08-03-2019 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் மிதுன லக்ன ஜாதகம். லக்னாதிபதி புதன் 12ல் மறைவு. கேதுவுடன் சேர்க்கை.
55 வயதில் அவருக்கு கேது தசை நடைபெறும். ஏது தசை வந்தாலும் கேது தசை வரக்கூடாது அல்லவா? கேது மிதுன லக்ன
பாவரான செவ்வாய் சாரம் பெற்று, செவாயின் பார்வையும் பெறுகிறார். அதனால், கேது தசையின் ஏழு வருடங்களும் அவருக்கு
கஷ்டம் தான். அடுத்த சுக்கிர தசை பூர்வ புண்ணியாதிபதி தசையாவதால் அதில் எல்லா சுகமும் கிடைக்கும். சுக்கிரன் உச்ச
வர்கோத்தமம்.
அ.நடராஜன்
சிதம்பரம்.
Friday, March 08, 2019 6:56:00 PM
---------------------------------------------------------------------------
5
Blogger siva kumar said...
வணக்கம் சார்
55வயதில் தொடங்கிய செவ்வாயின் சாரம் பெற்ற கேதுதிசை தொடங்கியவுடன் ஜாதகருக்கு பதிப்பு நோய் கடன் மனஉளைச்சல்
வெறுப்பு பற்றற்ற நிலை போன்ற பல பிரச்சனை ஏற்பட்டன. இவை அனைத்திற்கும் கேதுதிசை தான் காரனம் சார். அடுத்ததாக
வந்த லக்க யோககார சுக்கிரனுக்குரிய திசை நடந்த பிறகு ஜாதகர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தார் சார். த மாணவன் தொட்டியம்
சிவக்குமார்.
Friday, March 08, 2019 10:30:00 PM
--------------------------------------------------
6
Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம்.
26 ஏப்ரல் மாதம் 1937, காலை 10.09 மணிக்கு, ஸ்வாதி நட்சத்திரம் துலா ராசி மிதுன லக்கினம் (இடம்: சென்னை) ஜாதகர்
பிறந்தார்.
ஜாதகருக்கு 55 வயதில் கேது மகா தசை (1991-1998)
1. கஷ்டங்களுக்கு ஜாதகபடி என்ன காரணம்.
மிதுன லக்கினம். லக்கினாதிபதி புதன் (4 பரல்) கேதுவுடன் சேர்ந்து 12ம் வீட்டில் மறைந்துள்ளார். கஷ்டங்கள் வரும் பொழுது
தாங்கும் சக்தி இல்லாமல் அவதி படுகிறார்.
6ம் வீட்டு அதிபதி செவ்வாய் 6ல் அமர்ந்து, மேலும் ராகுவுடன் சேர்ந்து 7ம் பார்வையால் 12ம் வீட்டில் உள்ள லக்கினாதிபதி புதனை
பார்க்கிறார்.
சனியின் 3ம் பார்வையும் 12ம் வீட்டின் மீது இருப்பதால் இழப்புக்கள். விரையங்கள், அயனம், சயனம், போகம் பாதிப்பு.
12ம் வீட்டு அதிபதி சுக்கிரன் சனியுடன் 10ம் வீட்டில் கூட்டு சேர்ந்து உள்ளார்.
குரு மகர ராசியில் நீசம். அவருடைய 5ம் பார்வை பலன் இல்லாமல் போய்விடுகிறது.
அப்பொழுது கோள்சாரத்த்தில் 1990-1993 வரை சனி 8ம் வீட்டில் அமர்ந்து ( அஷ்டமத்து சனி) 2ம் வீட்டை பார்ப்பதால் வருமானம்
பாதிப்பு, பண கஷ்டம்.
அதே சமயத்தில் லக்கினத்தில் கேது 7ம் வீட்டில் ராகு அமர்ந்து ராகு-கேது பெயர்ச்சி. ராகுவின் பார்வை லக்கினத்தை பார்ப்பதால்
நோயில் பாதிக்க பட்டார்.
கோள்சாரத்த்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து 8ம் வீட்டில் இருப்பதால் மனதினால் கஷ்டம், உடல் நிலை பாதிப்பு ஆகியவை.

2. கஷ்டங்கள் எப்பொழுது நிவர்த்தியாகும்
ஜாதகரின் 61 வயதில் சுக்கிர தசை ஆரம்பம் (1998-2018) . சுக்கிரன் (3 பரல்) மீன ராசியில் உச்சம். நவாம்சத்த்திலும் உச்சம்.
வர்க்கோத்தமம் அடைந்துள்ளார். எல்லா கஷ்டங்களிருந்தும் மீண்டு வருவார்.
11ம் வீட்டில் மேஷ ராசியில் சூரியன் உச்சம். சூரியனும், சந்திரனும், ஒருவருக்கு ஒருவர் 7ம் பார்வையில் உள்ளனர். இது ஒரு ராஜ
யோகம்.
சந்திரசேகரன் சூர்யநாராயணன்
Saturday, March 09, 2019 1:08:00 AM
--------------------------------------------------------
7
Blogger J Murugan said...
வணக்கம் ஐயா🙏
ஒருவருடைய வாழ்வில் நிகழும் இன்ப துன்பங்களுக்கு காரணமாக அமைவது தசாபுத்தி ஆகும். எனவே மிதுன இலக்கின
ஜாதகமான அவருக்கு 55 அகவையில் நடந்த துன்பங்களுக்கு காரணம், அந்த அகவையில் தொடங்கிய கேது மகா தசையாகும்.
இந்த ஜாதகத்தில் கேது பகவான், ஆறுக்குடையோன் சாரம் பெற்று, 12இல் அமர்ந்துள்ளார். மேலும் ஆறாம் இடத்தான் செவ்வாயின்
பார்வையிலும் உள்ளார் கேது பகவான்.
7 ஆண்டுகள் கேது தசை முடிந்து அடுத்து வரும் சுக்கிர தசையில் நலம் பெறுவார். ஜாதகப்படி சுக்கிர பகவான் பூர்வபுண்யாதிபதி
அல்லவா. அவர் உச்ச கேந்திரத்தில் உச்சம் பெற்று வர்க்கோத்தமமும் அடைந்துள்ளார். எனவே அவர் நற்பலன்கள் அருள்வார்.
முருகன் ஜெயராமன்
புதுச்சேரி.
Saturday, March 09, 2019 9:14:00 AM
--------------------------------------------------------------
8
Blogger venkatesh r said...
ஆசிரியருக்கு வணக்கம்.
ஜோதிடப் புதிர்: எந்தக் கடன் தீர்க்க என்னைப் படைத்தாய் கடவுளே?
மிதுன லக்கினம், துலா ராசி ஜாதகர்.
அவருடைய 55 வயதில் தொடங்கிய கஷ்ட காலம் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் அவருக்கு பலவிதமான அவதி. உடல் நிலை
பாதிப்பு, நோய் நொடிகள், மன அழுத்தம், பணக் கஷ்டம் என்று எல்லா வழிகளிலும் துயரத்தினை ஏற்படுத்தியது.
1. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?
2. அவைகள் எப்போது நிவர்த்தியாகும்?
அ) லக்கினாதிபதி புதன் 12ல் கேதுவுடன் கூட்டணி வைத்து வலுவிழந்துள்ளார். அவரின் மேல் 6ம் அதிபதி செவ்வாய் மற்றும்
ராகுவின் நேர் பார்வையுள்ளது. அட்டமாதி சனியின் மூன்றாம் தனிப்பார்வை வேறு அவரின் மேலுள்ளது.
ஆ) ஜாதகரின் 55 வயதில் வந்த கேது தசை தொடர்ந்து ஏழு வருடங்கள் அவருக்கு எண்ணொனாத் துயரங்களை
கொடுத்தது.ஆறாம் அதிபதி செவ்வாய் 6ல் ராகுவுடன் கை கோர்த்து (குஜ‍ ராகு சந்தி) ஜாதகருக்கு வியாதியை ஏற்படுத்தி எரியும்
நெருப்பில் எண்ணையை ஊற்றினார். உடல் காரகன் சூரியன் மேசத்தில் உச்சமாகியிருந்தாலும், இரு புறங்களிலும் கேது,
சனியினால் சூழப்பட்டு கத்திரியின் பிடியில் அகப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
இ) பிறகு வந்த வர்க்கோத்தம உச்ச சுக்கிரனின் தசை, ஜாதகரின் எல்லா கஷ்டங்களையும் நீக்கி, மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இரா.வெங்கடேஷ்.
Saturday, March 09, 2019 1:07:00 PM
---------------------------------------------------------------
9
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 26 ஏப்ரல் 1937ல் பிறந்தவர்.
இவரது 55வது வயதில் கேதுதசா துவங்கியது 12ல் மறைந்த லக்கினாதிபதியை கேதுவும் சேர்ந்து வலுவிழக்கச்செய்தது. கேதுதசா 7 ஆண்டுகளும் நரகம் போல வாழ்வு அமைந்தது.
அதன் பின்னர் 62 வயதில் துவங்கிய சுக்கிர தசா,ஜாதகத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் உதவி செய்து,அவரைக் கை தூக்கிவிட்டது.

கடமைகளை நன்கு ஆற்றியிருக்க வேண்டும்.
Saturday, March 09, 2019 3:25:00 PM
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.3.19

Astrology: ஜோதிடப் புதிர்: எந்தக் கடன் தீர்க்க என்னைப் படைத்தாய் கடவுளே?


Astrology: ஜோதிடப் புதிர்: எந்தக் கடன் தீர்க்க என்னைப் படைத்தாய் கடவுளே?

கீழே அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். மனிதருக்கு அவருடைய 55 வயதில் கஷ்டங்கள் காற்று மழையாக அடிக்கத் துவங்கின. தொடர்ந்து ஏழு ஆண்டுகள் அவருக்கு பலவிதமான அவதி. உடல் நிலை பாதிப்பு, நோய் நொடிகள், மன அழுத்தம், பணக் கஷ்டம் என்று எல்லா வழிகளிலும் துயரம்.

1. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?
2. அவைகள் எப்போது நிவர்த்தியாகும்?

ஜாதகத்தை அலசி இந்த இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 10-3-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:


========================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!