மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.11.16

Health Tips: அனைத்து நோய்களுக்கும் மாதுளை மருந்து!!

Health Tips: அனைத்து நோய்களுக்கும் மாதுளை மருந்து!!

எல்லா சீசனிலும் கிடைக்கிற மாதுளம்பழத்தில் இருப்பது அத்தனையும் சத்து! சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு.

புளிப்பு ரக மாதுளம்பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும். 3 டீஸ்பூன் வெந்தயம், 2 டீஸ்பூன் துவரம் பருப்பு இரண்டையும் முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விழுதை வைத்து தலையை அலச வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாட்கள் குளித்து வந்தால், முடி உதிர்வது நின்று வளர ஆரம்பிக்கும்.

வியர்வையால் உடல் துர்நாற்றம் வீசுகிறதா? மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து பவுடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகி விடும்.

ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும். சிலருக்கு திறக்கவே முடியாத அளவுக்கு கண் பொங்கிவிடும்.. இமைகளும் உதிர்ந்து விடும்.இதற்கு ஒரு மாதுளம்பழத்தை நான்காக வெட்டி, அதில் ஒரு துண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, ஆற வைத்துக் கிடைக்கிற தண்ணீரால் கண்களை கழுவினால், கண் பொங்குவது உடனே நிற்கும்.

சருமத்தின் சுருக்கத்தைப் போக்குவதிலும் மாதுளைக்கு முக்கிய பங்குண்டு! மாதுளம்பழ விழுதையும் வெண்ணெயையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகக் குழைக்க வேண்டும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டைத் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் தோல் சுருக்கம் நீங்கும்.

பருக்களை மறைய வைப்பதில் மாதுளைக்கு நிகர் மாதுளையேதான். மாதுளம்பழத்தை உதிர்த்து ப்ரீசரில் வைத்துவிடுங்கள். பத்து நாட்கள் கழித்து அதை எடுத்தால் நன்றாக விறைத்துப்போய் உடைக்க சுலபமாக இருக்கும். இதை பவுடராக்க வேண்டும். ஒரு டீஸ்பூன் இந்த பவுடருடன் ஒரு டீஸ்பூன் பயத்த மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும். குளிப்பதற்கு முன் இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

கடுமையான சீத பேதியால் அவதிப்படுகிறவர்களுக்கு அருமருந்து மாதுளைதான். மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு, இதில் ஏதாவது ஒன்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சை அளவுக்கு எடுத்து எருமை தயிரை மோராக்கி கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக்கு குளிர்ச்சியையும் தரும்.

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது.

மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.

இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும்குணமாக்குகிறது.

உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு மாதுளம் மரப்பட்டை 20 கிராம் சேர்த்துக் கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தைக் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். கொப்பளிப்பது தொண்டை வரை செல்ல வேண்டும். இவ்வாறு கொப்பளித்தால்தொண்டைப்புண், தொண்டைவலி, வாய்ப்புண் குணமாகும். அனைத்து நோய்களுக்கும் மாதுளை மருந்து!!

===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.11.16

தென்னிந்தியாவிலுள்ள முருகன் கோவில் ஸ்தலங்கள் ஓம் என்ற வடிவில் அமைந்திருக்கும் விந்தை!

தென்னிந்தியாவிலுள்ள முருகன் கோவில் ஸ்தலங்கள் ஓம் என்ற வடிவில் அமைந்திருக்கும் விந்தை!

அறுபடை வீடுகளும் மற்றுமுள்ள 11 முக்கியமான முருகன் கோவில்களும் அமைந்திருக்கும் ஊர்களை ஒன்று சேர்த்தால் ஓம் என்ற வடிவம் கிடைக்கும். படத்தைப் பாருங்கள்.

ஊர்கள்: முதலில் அறுபடை வீடுகள்: 1.திருப்பரங்குன்றம், 2.திருச்செந்தூர், 3.பழநி, 4.சுவாமிமலை, 5.திருத்தணி, 6.பழமுதிர்ச்சோலை.
7. மருதமலை, 8.குக்கே சுப்பிரமணியர் கோயில் (தக்‌ஷிண கர்நாடகா), 9.சென்னை வடபழநி முருகன் கோயில், 10.வைத்தீஸ்வரன் கோயில் - முத்துகுமாரசாமி, 11.சிக்கல் சிங்கார வேலன் கோயில், 12.கட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், தொட்டபல்லார்பூர் - பெங்களூருக்கு அருகில், 13.வயலூர் முருகன் கோயில், 14. சென்னிமலை முருகன் கோயில்,
15.பச்சை மலை முருகன் கோயில், 16.வெண்ணெய்மலை முருகன் கோயில், கரூர், 17.ஹரிபாடு முருகன் கோயில் ஆழப்புழா, கேரளா

வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா!
--------------------------------------
இணையத்தில் கிடைத்ததை மொழிமாற்றம் செய்து, பகிர்ந்துள்ளேன்



அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.11.16

எது உலக அதிசயம் ?


எது உலக அதிசயம் ?

நான் தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தேன். பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் என்னுடன் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள். தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்?

தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா. ஏன்? இல்லை. நிறையவே இருக்கிறது.

சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.

நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம்.

திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான Positions ல இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம்.

அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட. இந்த அதிசய சிற்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை.

இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும்.  எவ்வளவு துல்லியமாக Measure செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். வட சென்னையில் உள்ள வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிற்ப்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால். அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.

ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம். யாழி என்கிற மிருகத்தின் சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழம்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.

இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் உருவ முடியாது. இந்த வித்தையை இன்று எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை. அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்குவது. இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது.

அது போல் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.அன்றைய ராணிகளுக்காகவே கட்டப்பட்ட கிணறு அது.

அது போல் அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்களில் மரகதகற்கள் பதித்துள்ளனர். அதனால் வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிரும். வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்கும்.

அது போல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும் படைவீரர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர். மறத்தமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம்.
தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம்.

முன்னோா்களின் திறமையையும், கலைநயத்தையும் போற்றித் தலை வணங்குவோம்

இம்மண்ணில் பிறந்தமைக்கு பெருமிதம் கொள்வோம்.
------------------------------------------------
படித்ததைப் பகிர்ந்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!